பின்பற்றுபவர்கள்

3 ஜூன், 2010

புதுப் பதிவர்கள் தலைதெறிக்க ஓட்டம் !

ஒருவாரமாக பதிவுலகில் அவனை நீக்கு, இவனை புறக்கணி, வெட்டலாமா, குத்தலாமா என எழுத்து தீவிரவாதம், தன்னிச்சையான கட்டப்பஞ்சாயத்து தீர்ப்புகள்... நாட்டாமைகள், நசுங்கிய சொம்புகள் என ஒரு போர்களக் கோலம். புதிதாக பதிவு துவங்குவதாக இருந்த சில வாசகர்கள் முடிவை பரிசீலனை செய்கிறார்கள். பதிவுலக நண்பர்களில் சிலர் சிலருக்கும் நெருக்கம் காரணமாக சாதி உள்ளிட்ட பல தனிப்பட்ட தகவல்கள் தெரியும் என்பதால் இவையெல்லாம் என்று எப்போது நம்பிக்கை துரோகமாக மாறிவெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. மூத்தப் பதிவர் ஒருவர் எழுதுவதை நிறுத்துவதாக அறிவித்தார்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மிருகம் தூங்குவது போல் ரத்ததிற்கு பதிலாக கொஞ்சம் சாக்கடையும் ஓடும் போல, பிறருக்கு வெளிப்படும் போது முகம் சுளிக்கிறோம் அது நம் உடலின் சாக்கடை என்றால் வீரம் நிறைந்த ரத்தம் என நினைக்கிறோம்.

நடந்ததையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் குழு அரசியல், அந்த குழுக்குவுக்குள் அரசியல், தனி ஆளுமை, தனிமனித தாக்குதல் என்று துவங்கிய பிரச்சனை பெண்ணியம், சாதியமாக மறுவடிவெடுத்து நம்பிக்கை துரோகங்களில் நிற்கிறது. இதைத் தவிர்த்து இதில் தீவிரமாக இயங்கியவர்களின் அரசியல் முன்னெடுப்பு லாபம், தூபம்.

எனக்கு தெரிந்து நான்கு நாள் பிரச்சனைகளில் வெளியே தெரிந்த விசயம் இதில் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் ஆண் பதிவரின் சாதி. என்ன சாதியை சேர்ந்த பெண் என்று தெரியாத ஒன்று பிற்பட்ட சாதியாகச் சொல்லப்பட்டு பிறகு மிகவும் பிற்பட்ட சாதி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவரின் தவறுக்காக கைகால்களை எடுப்பதைவிட குரலை நசுக்குவது கொடுமையான தண்டனை, பிறகு அவனால் தனக்காகக் கூட வாதிட்டுக் கொள்ள முடியாது. புறக்கணிப்பின் வலி எத்தகையது என தலித்துகளின் துன்பம் அறிந்தோர், அதை எழுத்துத் தீவிரவாதத்தின் வழி பிறருக்குச் செய்யச் சொல்வதில் இன்னும் கூட பார்பனியமூம், வருணாசிரம தீர்ப்புகள் வாசனை அடிக்கத்தான் செய்கின்றன.

இத்தகைய கோசங்களின் நடுவே ஆண்கள் எழுதத் தயங்கும் போது பெண்கள் ?

நல்லவேளை இவனை நீக்கு அவனை நீக்கு என்று கட்டப்பஞ்சாயத்து தீர்ப்புகளை தமிழ்மணம் சட்டை செய்யவில்லை. சர்வாதீகரமாக, தன்னிச்சையாக தீர்ப்பு சொல்வோர் வசம் தமிழ்மணத் திரட்டி இல்லை என்பது ஒரு ஆறுதலானது. தன்னிச்சை தீர்ப்பு ஆசாமிகளால் திரட்டிகள் நடத்தப்பட்டால் அதன் செயல்பாடுகள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை நீக்குக விலக்குக கோசங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

நான் பொதுவாக குழு அரசியலுக்குள் சிக்கி கொள்வதில்லை, குழுவுக்குள் ஒருவர் செய்யும் தவறுக்கு சப்பைக்கட்ட நேரிடும் என்பதால் குழு அரசியல் தளங்களில் நான் இணைந்து கொள்வதில்லை. நட்புகள் அடிப்படைகளில் சில நிகழ்வுகளில், பதிவர் சந்திப்புகளில் இணைவதுடன் சரி. பொதுவெளியில் குழு அரசியல்கள் மிகவும் அச்சப்படக் கூடிய ஒன்று. குழு அரசியல் எதிலும் சிக்காமல் தமிழ்மணத்தை நம்பி புதுப்பதிவர்கள் எழுத வரலாம்.

திரட்டியை நானும் பயன்படுத்துகிறவன் என்பதால் தமிழ்மணத்தை பாராட்டுகிறேன்.

29 கருத்துகள்:

குழலி / Kuzhali சொன்னது…

போனவாரம் மணற்கேணி தொடர்பாக 4 விழா நடத்தினோம் சிங்கப்பூரில் 50 பேருக்காவது புதிதாக வலைப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டது, எல்லோருக்கும் தமிழ்மணம், தமிழ்வெளி, தமிலிஷ் அறிமுகப்படுத்தப்பட்டது ஆனா ஒரு வாரமா டேய் இதுக்குதானாடா என்று அவர்கள் நம்மை திட்டிக்கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன் :-(

நாம கடினப்பட்டு வாங்கிய நல்ல பெயரெல்லாம் நாசமா போகுது என்னமோ போங்க....

உடன்பிறப்பு சொன்னது…

நம்பிக்கை துரோகம் வலையுகிற்கு ஒன்றும் புதுசு இல்லையே

கோவி.கண்ணன் சொன்னது…

//நாம கடினப்பட்டு வாங்கிய நல்ல பெயரெல்லாம் நாசமா போகுது என்னமோ போங்க....//

அப்படி நான் நினைக்கவில்லை. வெற்றியாளர்கள் நிகழ்வுகளை பதிவிட்டு அனைத்து பதிவர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துவார்கள். திரு தேவன் மாயம் மற்றும் தருமி ஐயா எழுத்துகளை மிகுதியான வாசகர்கள் மற்றும் பதிவர்கள் படிக்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// உடன்பிறப்பு said...

நம்பிக்கை துரோகம் வலையுகிற்கு ஒன்றும் புதுசு இல்லையே//

அரசியல் சார்பு நிலைகளுக்கும் புதுசு இல்லைன்னு சொல்லுங்க சார்.

உடன்பிறப்பு சொன்னது…

அரசியல் சார்பில் என்ன நம்பிக்கை துரோகத்தை கண்டுவிட்டீர்கள் என்று விளக்குவீர்களா ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

// உடன்பிறப்பு said...

அரசியல் சார்பில் என்ன நம்பிக்கை துரோகத்தை கண்டுவிட்டீர்கள் என்று விளக்குவீர்களா ஐயா//

கருணாநிதியை விமர்சனம் செய்ததற்காக உங்கள் பதிவில் நண்பர்கள் விமர்சனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். நீங்களெல்லாம் இதுவரை எந்த பின்னூட்டங்களையும் நீக்கியதே இல்லையா ? நான் சொல்வது உண்மை இல்லை என்றால் மேலே இருப்பவரிடம் கேளுங்க. :)

ஓ உங்கள் கருணாநிதி சார்பு அரசியல் வலையுலக அரசியலுக்குள் வந்திடுமா ?
:)

உடன்பிறப்பு சொன்னது…

நீங்கள் சொல்வது உண்மைதான் கலைஞரை விமர்சித்த அத்தனை பேரும் எங்கள் தளத்தில் பதிலுக்கு விமர்சிக்கப்படவில்லை மாறாக கலைஞரை தனிப்பட்ட முறையிலே சேறு பூசியவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறோம். ஆனால் இன்று நடப்பது போல் நண்பர்களின் தனிப்பட்ட தகவல்களை எல்லாம் வெளியில் கொண்டு வந்தது கிடையாது. உங்களுடன் கூட விவாதித்தி இருக்கிறேன் ஆனால் தொடர்ந்து நண்பர் என்ற முறையிலே உங்கள் தளத்தை பார்வையிட்டே வந்து இருக்கிறேன்

உடன்பிறப்பு சொன்னது…

மேலே இருப்பவர் எந்த அடிப்படையிலே கலைஞரை விமர்சிப்பவர் என்று நான் உங்களுக்கு சொல்லியா தர வேண்டும் அவரையும் நான் நல்ல நண்பராகவே கருதிவருகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//உடன்பிறப்பு said...

மேலே இருப்பவர் எந்த அடிப்படையிலே கலைஞரை விமர்சிப்பவர் என்று நான் உங்களுக்கு சொல்லியா தர வேண்டும் அவரையும் நான் நல்ல நண்பராகவே கருதிவருகிறேன்//

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா ? அவ்வ்வ்வ்வ்

மேலே இருப்பவர் என்றால் கடவுள்னு சொல்லலாம் இல்லையா ?
:)

பொன் மாலை பொழுது சொன்னது…

தங்களின் வாசகங்கள் ஒரு ஆறுதலை தருகின்றது நண்பரே.
நான் இங்கு எழுத வந்து சரியாக ஒரு வருடம் ஆகிறது.
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தெரிந்ததை எழுதுகிறேன்.
ஆனால் கடந்த ஒரு வருட காலத்தில் இங்கு நடத்தப்பட்ட
சண்டைகளும்,அடாவடித்தனங்களும் "மூத்த பதிவர்கள்"
என்று சொல்லபடுகின்ற வர்கள்மீது மோசமான, கேவலமான
எண்ணகுவியல்களை என்னுள் சேர்க்க ஆரம்பித்தது.அதன் விளைவாக
எழுந்ததே என் சமீபத்திய பதிவு.

கோவி.கண்ணன் சொன்னது…

// கக்கு - மாணிக்கம் said...

தங்களின் வாசகங்கள் ஒரு ஆறுதலை தருகின்றது நண்பரே.
நான் இங்கு எழுத வந்து சரியாக ஒரு வருடம் ஆகிறது.
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தெரிந்ததை எழுதுகிறேன்.
ஆனால் கடந்த ஒரு வருட காலத்தில் இங்கு நடத்தப்பட்ட
சண்டைகளும்,அடாவடித்தனங்களும் "மூத்த பதிவர்கள்"
என்று சொல்லபடுகின்ற வர்கள்மீது மோசமான, கேவலமான
எண்ணகுவியல்களை என்னுள் சேர்க்க ஆரம்பித்தது.அதன் விளைவாக
எழுந்ததே என் சமீபத்திய பதிவு.//

கருத்து பகிர்தலுக்கு நன்றி மாணிக்கம்

தமிழ் உதயம் சொன்னது…

சரியாகத்தான் சொல்லி இருக்கிறிர்கள் கோவி.கண்ணன்.

hiuhiuw சொன்னது…

//அரசியல் சார்பில் என்ன நம்பிக்கை துரோகத்தை கண்டுவிட்டீர்கள் என்று விளக்குவீர்களா ஐயா//

உடன்பிறப்புன்னு நிரூபிச்சுட்டாரு!

Ahamed irshad சொன்னது…

இந்த ஜீஜிபி மேட்டருக்கெல்லாம் எழுதாம இருக்கிறது அவரவர் மனநிலையை பொறுத்தது. பிரச்சினை சம்பந்தமான இருவரும் அமைதியாக இருக்கையில் இடையில் குதிக்கும்' சிலருக்கு பயந்து? எழுதாம ஓடுவது முட்டாள்த்தனம்...

குடுகுடுப்பை சொன்னது…

பிரபல பதிவரான எனக்கே பீ வருதுங்கரேண்.நடக்கிற பாத்தா குழலி,கோவி கூடவெல்லாம் போன்ல ஓரிருமுறை பேசிருக்கேன். கவுத்துப்புடாதீங்க சாமியளா

பெயரில்லா சொன்னது…

பேசி தீர்க்க வேண்டிய பிரச்னையை பொதுவில் கொண்டு வந்து குழுக்கள் சேர்த்துக் கொண்டு வரையறை இல்லாமல் சாதிப் பிரச்னையாக்கி, சமூக நிகழ்வுகள் தெரிந்த படித்தவர்களே இப்படி அடித்துக் கொண்டால்,
நமக்கு என்ன தகுதி இருக்கிறது அரசியல்வாதிகளை நோக்கி கேள்விகள் எழுப்பி பதிவு எழுதுவதற்கு. அவர்களாவது பிழைப்புக்கு அடித்துக் கொள்கிறார்கள்.. நாம்?
விடை தெரியாத கேள்வி....

பொன் மாலை பொழுது சொன்னது…

// பேசி தீர்க்க வேண்டிய பிரச்னையை பொதுவில் கொண்டு வந்து குழுக்கள் சேர்த்துக் கொண்டு வரையறை இல்லாமல் சாதிப் பிரச்னையாக்கி, சமூக நிகழ்வுகள் தெரிந்த படித்தவர்களே இப்படி அடித்துக் கொண்டால்,
நமக்கு என்ன தகுதி இருக்கிறது அரசியல்வாதிகளை நோக்கி கேள்விகள் எழுப்பி பதிவு எழுதுவதற்கு. அவர்களாவது பிழைப்புக்கு அடித்துக் கொள்கிறார்கள்.. நாம்?
விடை தெரியாத கேள்வி..//

-------------பரிதிநிலவன்.

விடைதெரிந்த கேள்விதான்.
இல்லாத "மேதை" தன்மையை இருபதாக காட்டிகொள்ளும் வெறியும் ,தன்னை விட எவனுமில்லை என்ற இறுமாப்பும், குழுக்களாக "ஜால்ரா " அடிக்க தன்னையொத்த கூட்டங்களும் இருப்பதே இதற்க்கு காரணம்.
இந்த அல்ப புத்திகளை இவர்கள் தங்கள் "ஆதர்ஷ " so called "எழுத்தாளர்களிடமிருந்து வரமாக பெற்றுக்கொண்ட,
சுய அறிவற்ற "வலையுலக பயங்கரவாதிகள்" இவர்கள் கலைஎடுக்கபடவேண்டும்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

என்னத்த சொல்ல. எல்லாம் சீக்கிரம் சரியாகணும்.

பாசக்கார பயபுள்ள... சொன்னது…

கோவியார்,

நீங்க சொல்லுறது நூற்றுக்கு நூறு உண்மை.. இந்த பதிவுலக அரசியல் எனக்கு புடிக்காதனால தான் யாருக்கும் நான் அவ்வளவாக பின்னூட்டம் போடுவதில்லை. எல்லோரும் பின்னூட்டம் இடுவதை நிறுத்தி விட்டு அவங்கவங்க ஆணியை புடுங்குனாலே இந்த மாதிரி பிரச்சினை வர போறது இல்லை. சில பேரு பிரபல பதிவராயிட்டதாலே யார வேணாலும் காயப்படுத்தி எழுதலாம் நினைக்கிறது ரொம்ப தப்பு.

ராஜ நடராஜன் சொன்னது…

//குழு அரசியல் எதிலும் சிக்காமல் தமிழ்மணத்தை நம்பி புதுப்பதிவர்கள் எழுத வரலாம். //

நாங்கெல்லாம் சிக்ஸர் அடிக்காட்டியும் நின்னு ஆடுறவங்க:)

ARV Loshan சொன்னது…

இவ்வளவு சர்ச்சைகளுக்கும் அடிப்படைக் காரணம் எது?
சிந்தியுங்கள்..
ஒரு இடத்தில் ஆரம்பிப்பதில்லை.
சிறு சிறு விஷயங்கள் சேர்ந்து சேர்ந்து இப்போது வெடித்திருக்கின்றன..

சரி தீர்ந்து விடும் என்று நம்புவோம்..

ஆனால் இவ்வளவு பிரச்சினையிலும் புதிய பதிவர்கள் பற்றி சிந்தித்த ஒரே ஒருவர் நீங்கள் தான் அண்ணே.. ஆரம்ப காலத்தில் எங்களுக்கும் நல வழி காட்டியவர்களில் ஒருவர் நீங்களே.
எப்போதும் புதிய பதிவர்களை ஊக்குவிக்கும் உங்கள் நல்ல மனம் வாழ்க..

priyamudanprabu சொன்னது…

நடந்ததையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் குழு அரசியல், அந்த குழுக்குவுக்குள் அரசியல், தனி ஆளுமை, தனிமனித தாக்குதல் என்று துவங்கிய பிரச்சனை பெண்ணியம், சாதியமாக மறுவடிவெடுத்து நம்பிக்கை துரோகங்களில் நிற்கிறது.
///////

சரியா சொன்னீங்க

குடந்தை அன்புமணி சொன்னது…

நல்ல படைப்புகளை படைக்கும்- தேடிப் படிக்கும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை ஊக்குவித்தாலே போதும்... மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் நாம் நம்போக்கில் போய்க்கொண்டிருக்க வேண்டியதுதான்.

யாழ் Yazh சொன்னது…

"எனக்கு தெரிந்து நான்கு நாள் பிரச்சனைகளில் வெளியே தெரிந்த விசயம் இதில் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் ஆண் பதிவரின் சாதி. என்ன சாதியை சேர்ந்த பெண் என்று தெரியாத ஒன்று பிற்பட்ட சாதியாகச் சொல்லப்பட்டு பிறகு மிகவும் பிற்பட்ட சாதி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது."


ஐயா,
பிற்பட்ட என்பதற்கும் பிற்படுத்தப்பட்ட என்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.தயவு செய்து திருத்தவும்.

ப.கந்தசாமி சொன்னது…

//திரட்டியை நானும் பயன்படுத்துகிறவன் என்பதால் தமிழ்மணத்தை பாராட்டுகிறேன்.//

நான் வழிமொழிகிறேன்.

Radhakrishnan சொன்னது…

ஹா ஹா, தலைப்பைப் பார்த்து சிரிப்புதான் வந்தது. அவங்களை இழுத்துட்டு வாங்க கோவியார். :)

ரோஸ்விக் சொன்னது…

கொஞ்சம் பயமாத்தான் இருக்கு கோவியார். (
நல்லவேளை சிங்கையில் எனக்குத் தெரிந்து இது போன்ற குழு அரசியல் இல்லை.

bogan சொன்னது…

நான் இணையத்துக்கு புதுசு.அதுவும் ப்ளாக் எழுத வந்து ஒரு மாதம்தான்..ஆரம்பிக்கும்போதே நிறைய பேர் திகில் ஊட்டினார்கள் அது சம்பந்தமாக ஒரு பதிவும் இட்டேன் [www.arivaiaran.blogspot.com ] இப்போது இங்கு நடக்கிற வெட்டு குத்துகளைக் கண்டால் மிகுந்த தயக்கம் ஏற்படுகிறது.பேசாமல் ஆங்கிலத்தில் பா பா ப்ளாக் ஷீப் எழுதப் போய்விடலாமா என்று தோன்றுகிறது.இங்கு எந்த ஒரு சர்ச்சையிலும் கிராமங்களில் நடக்கும் சேவல் சண்டை போல் இரண்டு பக்கமும் கொம்பு சீவி வேடிக்கை பார்க்கும் ஆர்வம் மட்டுமே தெரிகிறது.நடுவில் சமாதானம் பேசப் போகிறவர்கள் சண்டை இடுகிறவர்களை அதிகம் அடி வாங்கி திரும்பும் காமடியும் நடக்கிறது.நல்லதொரு ஆக்சன் படத்தை பாதியில் நிறுத்த சொன்னால் கோபம் வராதா என்ன?இந்த voyeur மனப் பான்மை ஆரோக்கியமானதா தெரியவில்லை.இடுப்புக்கு கீழ் தாக்கும் இந்த இணைய கலாச்சாரத்தை யார் இங்கு முதலில் கொண்டு வந்தார் என தெரியவில்லை.ஆனால் வைரஸ் வளர்ந்து வியாதி முற்றி விட்டது நன்றாக தெரிகிறது.நல்ல்லதொரு படைப்பு வெளியாக இணையம் இருக்கும் என்று நினைத்தேன் .ஆனால் நான் எழுத நினைக்கும் விசயங்களுக்கு இது சரியான ஊடகம் தானா என்றே சந்தேகம் வந்து விட்டது.

கோவி.கண்ணன் சொன்னது…

திரு போகன்,

பிரச்சனைகள் சம்பந்தப்பட்டவர்களுக்கும், அதை வளர்த்து குளிர்காய்பவர்களுக்கும், நாட்டாமைகளுக்கும், சமதானமாகப் போகச் சொல்லி "அடிவருடி" பட்டம் வாங்குபவர்களுக்கும் தான். மற்றவர்கள் தொடர்ந்து இவற்றை கண்டு கொள்ளாமல் எழுதினாலே பிரச்சனைகள் அடங்கிவிடும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்