பின்பற்றுபவர்கள்

6 ஏப்ரல், 2010

அபித குஜலாம்பாள் !

பொதுவாக பெயர்களை கொச்சைப் படுத்துவது எனக்கு பிடிக்காது, எந்த ஒரு நபரின் பெயரும், குறிப்பிட்ட சிலர்கள் தவிர்த்து அவரவர் தேர்ந்தெடுத்துக் கொள்வது கிடையாது. பெற்றோர்கள் வைக்கும் பெயரே அவரவர் பெயராக நிலைத்துவிடுகிறது என்பது உண்மை.

******

இப்போதெல்லாம் ஷ் ஸ் தஸ்ஸு புஸ்ஸுன்னு முடியும் வடமொழிப் பெயர்களை சூட்டுவதற்கு பலரும் விரும்புகிறார்கள் என்னும் தகவல்கள் பலர் சொல்லக் கேள்விப்படுகிறோம், இதற்கெல்லாம் எண் கனிதம் ஜோதிடம் என்னும் ஒரு இத்துப் போன ஜோதிடம் காரணம் என்றாலும் அடிப்படை மற்றும் உளவியல், மொழியியல் காரணங்கள் வேறு. கூப்பிட எது எளிமையாகவும் புதுமையாகவும் இருப்பதையே மக்கள் விரும்புகின்றனர். எந்த வகையில் பெயர் மாற்றங்களுக்கு உடனடியாக மாறிக் கொள்பவர்கள் கிராமத்தினர் தான். எம்சிஆர், சிவாசி, கார்திக், பாக்கியராசு என்ற பெயர்கள் அது போல் பெண்கள் பெயர்களில் நடிகைகளின் பெயர்களுக்கு உடனடியாக மாறிவிடுவார்கள், நடிக,நடிகர்களின் பெயர்கள் பொதுவாக நான்கு எழுத்துக்குள் இருப்பதும் அறியப்பட்டதாக இருப்பதும் அதை கிராமத்தினர் விரும்புவதற்குக் காரணம்.

இது ஒருபுறம் மற்றபடி படித்த நடுத்தர வர்கத்தினர்கள் சூட்டும் பெயர்களில் வடமொழிப் பெயர்களே மிகுதியாக இருக்கின்றன. அதுவும் சுறுக்கப்பட்ட ரமேஷ், சுரேஷ், ஸ்ரீனிவாஸ், சுப்ரமணி போன்ற பெயர்கள் மிகுதியானவை, தமிழ்நாட்டு தொலைபேசி பட்டியலில் மிகுதியாக இடம் பெற்றிருக்கும் பெயர்களில் எனக்கு தெரிந்து சுப்பரமணி(யன்) ஸ்ரீனிவாஸ்/சன் குறைந்தது 5 பக்கங்களுக்கான பட்டியலாக இருக்கும்.
நடுத்தரவர்கத்தின் பெயர் சூட்டும் உளவியல் பெயர் சுறுக்கமாகவும் எளிதாகவும், புதுமையாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான். அதிலும் ஒரு சிலர் எண்கனிதம் பார்த்து கொஞ்சம் திருத்தி அமைத்துக் கொள்வர். என் நண்பர் ஒருவர் அவரது முதல் மகனுக்கு எண் கனிதம் பார்த்து பெயர் வைத்தார். சிதார்த்....என்னடா இது பதார்த்தம் என்பது போல் சிதார்த் என்று கேட்டேன். குறிப்பிட்ட எழுத்து எண்ணிக்கைக்குள் வந்தால் அவன் எதிர்காலம் நல்லா இருக்கும் என்று ஜோதிடர் பரிந்துரைந்ததைத்தான் வைத்தேன் என்றான் அப்படியே பதிவும் செய்யப்பட்டு, கூப்பிடப்பட்டும் வருகிறது.

இப்ப அபித குஜலாம்பாளுக்கு வருவோம், ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண் பெயர்களில் எதோ ஒரு அம்பாள் என்று முடிவதாக பார்பன பெண்களின் பெயர்களும் நடுத்தரவர்கத்தினர் பெயரும் இருக்கும், என் அத்தை ஒருவர் தன் உண்மையான (மு/மினியம்மா) பெயர் கிராமத்து பெயர் போல் இருப்பதாக அவர்கள் தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்த பிறகு மீனாம்பாள் என்று மாற்றிக் கொண்டார். மீனாட்சி என்னும் சித்தியின் பெயர் மீனா என்று சுறுங்கியது, அதெல்லாம் அவர்கள் விரும்பியே மாற்றிக் கொண்டவை. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெயர் (கோவிந்தராஜுவுக்கு - பெருமாளுக்கு தங்கை முறை வரும் பெயர்) ஒத்துவராது என்று அம்மா பெயரை லஷ்மியுடன் தொடர்புடைய ஒரு பெயராக மாற்றிக் கொண்டாலும் அந்த பெயரில் அப்பா தவிர்த்து யாரும் கூப்பிடவில்லை. அம்மாவுக்கு அவருடைய அப்பா வைத்த பெயரே இன்றுவரை நிலைத்திருக்கிறது.

அபித குஜலாம்பாள், குஞ்சிதபாதம், ஆதிமூலம் ஆகியவை வடமொழிப் பெயர்களே என்றாலும் அவை பழைய பெயர்கள் என்று இன்றைக்கு பார்பனர்கள் உட்பட யாரும் விரும்பி வைப்பது இல்லை. அதே போன்று நல்ல தமிழ் பெயர்கள் சுறுக்கமாக இருந்தால் நிறைய பேர் தற்பொழுது தமிழ் பெயர் சூட்டுவதற்கும் தயங்குவதில்லை, அன்பு, அறிவு, பரிதி, வெற்றி, தேன்மொழி, கயல்விழி, பொன்னி, இனியா, அரசி, செல்வி போன்ற பெயர்களையும் சூட்டுவதற்கு பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

பெயருக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, தாத்தா பாட்டி பெயர்களையே பேரக் குழந்தைகளுக்கு சூட்டுவது தான் நம் வழக்கம், இடையில் சாதிப் பெயர்களை பின்னூட்டுகளாக சேர்த்துக் கொள்ளும் வழக்கம் வந்ததால் மூதாதையர்களின் பெயர் சூட்டிக் கொள்ளும் வழக்கம் குறைந்து போய் இருந்தது. தன் பெயரை உடையவன் பெயரன், பெயர்த்தி என்பதுவே பேரன் பேத்தி என்ற உறவுப் பெயராக இருப்பது தமிழகத்தின் தொன்று தொட்ட வழக்கம். பெற்றோர்களை நினைவு கூறும் கடமையாக பிள்ளைகளுக்கு அவர்கள் பெயரைச் சூட்டிப் பார்ப்பது தமிழர்களின் பண்பாடுகளில் ஒன்றாக இருந்தது.

மீண்டும் பெயரைக் கொச்சைப் படுத்துவதற்கு வருவோம், ஒருவர் என்ன பெயர் வைத்திருந்தாலும் பெயரை வைத்து பழிப்பது இயலாமையின் வெளிப்பாடே, அதைத் தவிர்க்கலாம். அது மட்டுமே இல்லை ஒரு பெயரை வைத்து குறிப்பாக பெண் பெயரை வைத்து ஒரு சொல்லாடல், கருத்தாக்கம் உருவாகிவிட்டால் அந்த பெயரை உடைய பெண்களுக்கெல்லாம் சங்கடமாகவே அமையும். சரோஜாதேவி ன்னு பெயர் உள்ள பெண்கள் படும் சங்கடம் இருக்கிறதே... அந்த பெயருக்கான பொருள் அவர்கள் புரிந்துகொண்டிருந்தால் மிகவும் நொந்து போவார்கள்.

முடிவாக சொல்ல வந்தது..... பெயர் சூட்டுவதற்கு வடமொழிப் பெயர்களைத்தான் சூட்டுவேன் என்று அடம்பிடிப்பவர்கள் குறைவு, ஆனால் ஜோதிடன் சொல்லும் எழுத்தில் தான் தொடங்குவேன் என்று அடம் பிடிப்பவர்கள் மிகுதி, அந்த எழுத்துக்களில் எளிமையான தமிழ் பெயர்களை பரிந்துரைத்தால் பலர் வைப்பதற்கே விரும்புகிறார்கள்.

30 கருத்துகள்:

பிரபாகர் சொன்னது…

ஒரு சிலர் ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள் அண்ணா. எனது நண்பரின் பெயர் பாவாடை, இங்கு சிங்கையில் தான் இருக்கிறார். அழைப்பதிலோ, அழைப்பதாலோ அவருக்கோ எங்களுக்கோ விகல்பமாக இருப்பதில்லை...

பிரபாகர்...

கோவி.கண்ணன் சொன்னது…

// பிரபாகர் said...

ஒரு சிலர் ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள் அண்ணா. எனது நண்பரின் பெயர் பாவாடை, இங்கு சிங்கையில் தான் இருக்கிறார். அழைப்பதிலோ, அழைப்பதாலோ அவருக்கோ எங்களுக்கோ விகல்பமாக இருப்பதில்லை...

பிரபாகர்...//

பா ஆடை > பாவாடை பாட்டுக்கு முன்னபான பல்லவி !

:)

நல்ல தகவல் உங்கள் நண்பர் பாவடைக்கு மிகுந்த பாராட்டுகள்

ராஜ நடராஜன் சொன்னது…

அபித குஜாலாம்பாள்!அந்த ரயிலில் முறுக்கு தின்னுகிட்டு துரு துருன்னு முழிக்குமே அந்தப் பெண்ணை பற்றித்தானே சொல்கிறீர்கள்?

பெயர் நீளமா வச்சாலும் முன்னாடியெல்லாம் அப்படியே கூப்பிடுவாங்க.இப்ப கூப்பிடறவங்க அப்படியே சுருக்கிடுவாங்க.

கிருஷ்ணமூர்த்தி நல்லாத்தானே இருக்குது.ஆனா கிச்சா.
சுப்பரமணி-சுப்பு

இங்க வந்து கோவாகார பசங்களும்,பிலிப்பைன்ஸ் பெண்களும் என்னை நட் ன்னு மாத்திட்டாங்க.அவ்வ்வ்வ்வ்வ்வ்.

இப்ப திரும்ப என் பெயரை முழுசா உச்சரிக்க வெச்சிட்டேன்ல.

ராஜ நடராஜன் சொன்னது…

சொல்ல மறந்து விட்டேன்.நம்ம சிம்ரான் பெயர் இப்ப ஒரு குழந்தைக்கு வச்சிருக்காங்க.கூப்பிடறதென்னவோ சிம்.

துளசி கோபால் சொன்னது…

நம்ம உறவினர் ஒருவரின் மனைவிக்கு ஜோதிலக்ஷ்மின்னு பெயர்.

நான் அவுங்க பெயரை முழுசாச் சொல்லிக் கூப்பிட்டால் மச்சினர் சொல்றார், ஜோதின்னு கூப்புடுங்க அண்ணின்னு.

அழகான பெயரை ஏன் சுருக்கணுமாம்?

முழுப்பெயர் சொன்னால் 'என்ன்னமோ மாதிரி' இருக்காம்!!!!!

தமிழ் சொன்னது…

சோதிடத்தை விட வடமொழியில் பெயர் வைப்பதில் நிறைய பேருக்கு விருப்பமாக இருக்கிறது.அதை விட நெடுப்பமாகப் பெயரை இட்டால் விருப்பம் போல் பெயரைச் சுருக்கி அழைக்க ஏதுவாக இருக்குமே என‌ நினைப்பவர்களே இன்னும் அதிகம்.இதை விட இன்னும் ஒரு கொடுமை என்ன என்றால்,
திவ்யாதர்சினி பெயர் சூடி விட்டால் தாயோ தந்தையோ டிடி என்றோ அல்லது அவளின் மனம் கவர்ந்தவன் தர்சினி அல்லது திவ் என்று அழைக்க தோதாக இருக்கும் என எண்ணும் பெற்றோர் பெருகிக் கொண்டு இருக்கிறார்கள்.


:)))))))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

// ராஜ நடராஜன் said...

அபித குஜாலாம்பாள்!அந்த ரயிலில் முறுக்கு தின்னுகிட்டு துரு துருன்னு முழிக்குமே அந்தப் பெண்ணை பற்றித்தானே சொல்கிறீர்கள்?//

சேது படத்தில் நாயகி பெயர்.

// பெயர் நீளமா வச்சாலும் முன்னாடியெல்லாம் அப்படியே கூப்பிடுவாங்க.இப்ப கூப்பிடறவங்க அப்படியே சுருக்கிடுவாங்க.//

பேரெல்லாம் சுறுங்கி சீனப் பெயர் போல கு, கா, தா, பா ன்னு ஆகிடும் போல

// கிருஷ்ணமூர்த்தி நல்லாத்தானே இருக்குது.ஆனா கிச்சா.
சுப்பரமணி-சுப்பு//

சிலர் கிருஷ்ணமூர்த்தியை கிமு , சுப்பரமணி- சுப்ரா ன்னு சொல்லுவாங்க

// இங்க வந்து கோவாகார பசங்களும்,பிலிப்பைன்ஸ் பெண்களும் என்னை நட் ன்னு மாத்திட்டாங்க.அவ்வ்வ்வ்வ்வ்வ்.

இப்ப திரும்ப என் பெயரை முழுசா உச்சரிக்க வெச்சிட்டேன்ல.//

கஷ்டம் தான் அவர்களுக்கு !

கோவி.கண்ணன் சொன்னது…

// ராஜ நடராஜன் said...

சொல்ல மறந்து விட்டேன்.நம்ம சிம்ரான் பெயர் இப்ப ஒரு குழந்தைக்கு வச்சிருக்காங்க.கூப்பிடறதென்னவோ சிம்.//

அதுவும் நல்லாதான் இருக்கு 3ஜிசிம்

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

நம்ம உறவினர் ஒருவரின் மனைவிக்கு ஜோதிலக்ஷ்மின்னு பெயர்.

நான் அவுங்க பெயரை முழுசாச் சொல்லிக் கூப்பிட்டால் மச்சினர் சொல்றார், ஜோதின்னு கூப்புடுங்க அண்ணின்னு.

அழகான பெயரை ஏன் சுருக்கணுமாம்?

முழுப்பெயர் சொன்னால் 'என்ன்னமோ மாதிரி' இருக்காம்!!!!!//

கவர்ச்சி நடிகைகளால் பல பெயர்கள் வழக்குகொழிந்துவிட்டது, அனுராதா ஆடிக் கொண்டி இருந்த சமயத்தில் ஜாதகப்படி மகளுக்கு பெயர் வைக்க நினைத்த உறவினர்கள் 'அனுரேகா' என்று மாற்றிக் கொண்டார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//திகழ் said...

சோதிடத்தை விட வடமொழியில் பெயர் வைப்பதில் நிறைய பேருக்கு விருப்பமாக இருக்கிறது.அதை விட நெடுப்பமாகப் பெயரை இட்டால் விருப்பம் போல் பெயரைச் சுருக்கி அழைக்க ஏதுவாக இருக்குமே என‌ நினைப்பவர்களே இன்னும் அதிகம்.இதை விட இன்னும் ஒரு கொடுமை என்ன என்றால்,
திவ்யாதர்சினி பெயர் சூடி விட்டால் தாயோ தந்தையோ டிடி என்றோ அல்லது அவளின் மனம் கவர்ந்தவன் தர்சினி அல்லது திவ் என்று அழைக்க தோதாக இருக்கும் என எண்ணும் பெற்றோர் பெருகிக் கொண்டு இருக்கிறார்கள்.


:)))))))))))))//

என் நண்பர் ஒருவர் பெயர் ராசி எல்லாம் பார்த்து மகளுக்கு தர்ஷினி வர்ஷினி என்று பெயர் வைத்து இப்ப சுருக்கமாக தர்ஷா, வர்ஷா ன்னு கூப்பிட்டு வருகிறார்.

பித்தனின் வாக்கு சொன்னது…

சுதாகர் என்ற என் பெயரை பலரும்,ஏன் நீங்கலும் சுதா என்றுதான் அழைக்கின்றீர்கள். ஆண்மகனான என்னை பெண் பெயரில் அழைக்கின்றார்கள். ஆனால் இது அவர்கள் வசதிக்கு என்று விட்டுவிட வேண்டியதுதான், ஸ்ரீ, லச்சு,கிச்சு, இராம்ஸ், சீமாச்சு,பிச்சு எல்லாம் வழக்கில் உள்ள சுருக்கிய பெயர்கள். இதில் என்ன இருக்கின்றது. உங்களையும் கோவி என்றே அல்லது கோவியார் என்றுதான் அழைக்கின்றேன். இதில் பேதம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

// //திகழ் said...

சோதிடத்தை விட வடமொழியில் பெயர் வைப்பதில் நிறைய பேருக்கு விருப்பமாக இருக்கிறது.அதை விட நெடுப்பமாகப் பெயரை இட்டால் விருப்பம் போல் பெயரைச் சுருக்கி அழைக்க ஏதுவாக இருக்குமே என‌ நினைப்பவர்களே இன்னும் அதிகம்.இதை விட இன்னும் ஒரு கொடுமை என்ன என்றால்,
திவ்யாதர்சினி பெயர் சூடி விட்டால் தாயோ தந்தையோ டிடி என்றோ அல்லது அவளின் மனம் கவர்ந்தவன் தர்சினி அல்லது திவ் என்று அழைக்க தோதாக இருக்கும் என எண்ணும் பெற்றோர் பெருகிக் கொண்டு இருக்கிறார்கள்.


:)))))))))))))//

என் நண்பர் ஒருவர் பெயர் ராசி எல்லாம் பார்த்து மகளுக்கு தர்ஷினி வர்ஷினி என்று பெயர் வைத்து இப்ப சுருக்கமாக தர்ஷா, வர்ஷா ன்னு கூப்பிட்டு வருகிறார்.

4:54 PM, April 06, 2010
Delete
Blogger பித்தனின் வாக்கு said...

சுதாகர் என்ற என் பெயரை பலரும்,ஏன் நீங்கலும் சுதா என்றுதான் அழைக்கின்றீர்கள். ஆண்மகனான என்னை பெண் பெயரில் அழைக்கின்றார்கள். ஆனால் இது அவர்கள் வசதிக்கு என்று விட்டுவிட வேண்டியதுதான், ஸ்ரீ, லச்சு,கிச்சு, இராம்ஸ், சீமாச்சு,பிச்சு எல்லாம் வழக்கில் உள்ள சுருக்கிய பெயர்கள். இதில் என்ன இருக்கின்றது. உங்களையும் கோவி என்றே அல்லது கோவியார் என்றுதான் அழைக்கின்றேன். இதில் பேதம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.//

பெயரை சுறுக்கி அழைப்பது பற்றி நான் சொல்லி இருப்பது மக்கள் அவ்வாறே அழைக்க விரும்புகிறார்கள் என்கிற தகவலைத்தான், நான் அதைத் தவறு என்று சொல்லவில்லை. இங்கு என் பரிந்துரை தாத்தா பாட்டி பெயரை வைப்பதும், அது பழைய பெயராக இருந்தால் தமிழ் பெயராக சுறுக்கமாக வைப்பது மட்டுமே. தமிழறிஞர் பரிதிமார் கலைஞர் தனது சூரிய நாரயண சாஸ்திரி என்கிற வடமொழிப் பெயரில் இருந்து தமிழுக்கு அதே பொருளில் மாற்றிக் கொண்டார். அவருக்கும் மறைமலையாருக்கும் தமிழ் பெயரே பின்னர் நிலைத்துவிட்டது

பெயரில்லா சொன்னது…

குறிப்பிட்ட சிலர்கள் தவிர்த்து //

சிலர்கள்?

அப்படியானால், ‘பலர்கள்’ உண்டோ?

தமிழறிஞரே தடுமாறினால்?

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்ல சிந்தனை.

கோவி.கண்ணன் சொன்னது…

// Jo Amalan Rayen Fernando said...
குறிப்பிட்ட சிலர்கள் தவிர்த்து //

சிலர்கள்?

அப்படியானால், ‘பலர்கள்’ உண்டோ?

தமிழறிஞரே தடுமாறினால்?
//

பதிவில் இன்னும் சில எழுத்துப் பிழைகளும் உள்ளன அவற்றையும் பார்த்துவிட்டு 'தமிழே உனக்கு எழுதத் தெரியவில்லை...' என்று புழுதிவாரித் தூற்றினால் கூட மகழ்வேன்.

சிலர்கள் என்ற சொல்லைப் போட்டு கூகுளில் தேடிய போது 1450 இடங்களில் இணைய தளங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Results 1 - 10 of about 1,450 for சிலர்கள். (0.18 seconds)

அன்றே அரன் அணுக்கள் பாசங்கள் ஐந்தொழில்கள்
நன்றே சிவனும் நடுவனே _ சென்று அருளில்
நிற்கச் சிலர் சிலர்கள் நீள் நரகில் பூதலத்தில்
சொற்கத்து இருப்பது என்னோ சொல்.

- என்ற பாடலும் உண்டு.

நான் இங்கே சில குழுக்கள் என்பதற்கு பதில் சிலர்கள் என்று குறிப்பிட்டேன். பொதுவாக எண்கனித விரும்பிகள், திருநங்கைகள் அவர்களுக்குரிய பெயர்கள் பெற்றோர் வைத்தப் பெயராகவே தொடராது.

********

வாங்க...! தலித் கிறித்துவம் மற்றும் கிறித்துவத்தில் தலித்துகள் விடுதலை பற்றி பேசுவோம்.

ப.கந்தசாமி சொன்னது…

ஆஜர் போட்டுக்கிறேன்,

cheena (சீனா) சொன்னது…

உண்மை கோவி - பெயர்கள் நண்பர்களாலும் நெருங்கிய உறவினர்களாலும் சுருக்கப்பட்டு விடுகின்றன. என்னுடைய அருமையான பெயர் கேசி என்றும் சீனா என்றும் சுருக்கப்பட்டு விட்டதே - என்ன செய்வது. ம்ம்ம்

எண்ணம் அருமை - செயல் படுத்துவது இக்கால கட்டத்தில் கடினம் கோவி

நல்வாழ்த்துகள் கோவி
நட்புடன் சீனா

priyamudanprabu சொன்னது…

பா ஆடை > பாவாடை பாட்டுக்கு முன்னபான பல்லவி !
////

அப்படியாஆஆஆஆஆஆ

அப்பாவி முரு சொன்னது…

முரு எ முருகேசன்.,

முருகேசன் எ முரு

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena (சீனா) said...

உண்மை கோவி - பெயர்கள் நண்பர்களாலும் நெருங்கிய உறவினர்களாலும் சுருக்கப்பட்டு விடுகின்றன. என்னுடைய அருமையான பெயர் கேசி என்றும் சீனா என்றும் சுருக்கப்பட்டு விட்டதே - என்ன செய்வது. ம்ம்ம்

எண்ணம் அருமை - செயல் படுத்துவது இக்கால கட்டத்தில் கடினம் கோவி

நல்வாழ்த்துகள் கோவி
நட்புடன் சீனா//

நீங்களே பதிவிலும் சுறுக்கி தானே வைத்திருக்கிறீர்கள். :)

கோவி.கண்ணன் சொன்னது…

// Dr.P.Kandaswamy said...

ஆஜர் போட்டுக்கிறேன்,//

நன்றிங்க பெரியவரே

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...

நல்ல சிந்தனை.//

நன்றி தம்பி

கோவி.கண்ணன் சொன்னது…

// அப்பாவி முரு said...

முரு எ முருகேசன்.,

முருகேசன் எ முரு//

'முரு என்கிற நான்'... உன் பதிவு தான் நினைவுக்கு வருது

மீனாட்சி சுந்தரம் சொன்னது…

என்னைய மீனாட்சி னு தான் கூப்பிடுவார்கள் அதுப்பற்றி நான் கவலை கொண்டது இல்லை,,,ஆனால் முதல் முறை கூப்பிடுபவர்ள் சிரித்து விட்டுதான் கூப்பிடுவார்கள்,,,பெயரில் என்ன இருக்கிறது,,,
அதுபோல பெயரில் வடமொழி தென் மொழி என்ன பெயர்ச்சொல் பெயர்ச்சொல் தானே,,,கிறித்துவ பெயர்களை அப்படியே தானே அழைக்கிறோம்

ரோஸ்விக் சொன்னது…

சுந்தரம், சுப்பிரமணி இந்த பெயர்களையெல்லாம் வேற மாதிரி சுருக்கி கூப்பிடுகிறார்கள்.

எங்க எம்.எல்.ஏ. பேரு சுந்தரம், நக்கலா "சூனா" வந்துட்டாகளான்னு கேக்குராணுக.
:-)

இதற்கு சம்பந்தமான என்னுடைய இடுகை

நக்கல் பேர்()வழியா நீங்கள்?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

சுவாரஸ்யமான பதிவு. உண்மைய சொல்லணும்னா வாய்ல நுழையாத மாதிரி பேரு வெச்சா தான் பேஷன் அப்படின்னு ஆகி போச்சு. எல்லாரும் அப்படின்னு சொல்லலை. பெரும்பான்மை அப்படி தான் இருக்குங்க
எனது அப்பா வழி தாத்தாவின் தம்பி (சின்ன தாத்தா) ஒருவர் எனது பெயர் பெரிதாக இருந்த போதும் என்னை முழு பெயர் வைத்து தான் அழைப்பார். அதற்கு அவர் சொன்ன காரணம் "பெயருக்கு மரியாதை". அவருக்கு பின் அப்படி யாரும் என்னை அழைப்பதில்லை என்ற வருத்தம் எனக்கு இன்றும் உண்டு

பெயரில்லா சொன்னது…

பதிவில் இன்னும் சில எழுத்துப் பிழைகளும் உள்ளன அவற்றையும் பார்த்துவிட்டு 'தமிழே உனக்கு எழுதத் தெரியவில்லை...' என்று புழுதிவாரித் தூற்றினால் கூட மகழ்வேன்.
//

எழுத்துப்பிழைகள், கருத்துப்பிழைகள் இருக்கலாம். இலக்கணப்பிழைகளும் இருக்கலாம். ஆனால் அடிப்படை இலக்கணப்பிழைகள் இருத்தலுக்கு சாக்கு சொல்லமுடியாது. எ.டு சந்திப்பிழைகள், ஒருமை, பன்மை விகுதிகள் போன்று.

நீங்கள் அப்படிப்பட்ட பிழைகளையும் போட்டுத்தான் எழுதிக்கொண்டு வருகிறீர்கள். சுட்டிக்காட்டினால், ஏதாவது ஒரு புலவர் அப்படியெழுதியிருக்கிறார் என்பீர்கள். உங்கள் மகிழ்ச்சியை நான் ஏன் கெடுக்கவேண்டும்?

சிலர்கள் -என்பது உங்கள் வழக்கு.அது சிலருக்குப் பிடிக்கும். எனக்கு ஒத்து வராது.

பலர்கள் - பலருக்கு பிடிக்கும். எனக்கு ஒத்து வராது.

சிலர், பலர் - போதும்.

சிலர்கள், பலர்கள் - தேவையில்லை.

சிலர் சிரிப்பார்; சிலர் அழுவார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்.

இது பாடல்.

சிலர்கள் என்று போட்டால்?

பாடலிலும் இலக்கணப்பிழை உண்டு.

சிலர் சிரிப்பார்கள். சிலர் அழுவார்கள்.

என்பதே பன்மை விகுதி. ஆயினும்,

சிலர் சிரிப்பார்கள் என்றால், பாடல் சுவையோடு அமையாது.

சொற்சுவைக்காக கவிஞர்களுக்கு இலக்கண மரபை மீற உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது எல்லா மொழிகளிலும். இதன் பெயர் poetic licence.

Who has given you the licence to violate Tamil grammar ?

கோவி.கண்ணன் சொன்னது…

//
Who has given you the licence to violate Tamil grammar ?//

விதண்டாவாதிகளுக்கு அவர்களுடைய கருத்துமட்டுமே திருப்தி அளிக்கும் என்பது தெரிந்தவையே.
நான் ஏற்கனவே இது பற்றி எடுத்துக்காட்டுடன் பதில் சொல்லிவிட்டேன். நீங்கள் மறுபடியும் நோண்டினாலும் நான் பதிலுரைக்கப் போவதில்லை

ஜோதிஜி சொன்னது…

உங்கள் மின் அஞ்சல் முகவரியை பக்கவாட்டில் வைக்கலாமே?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிஜி said...

உங்கள் மின் அஞ்சல் முகவரியை பக்கவாட்டில் வைக்கலாமே?//

வேண்டாத மின் அஞ்சல்கள் வரும், தவிர்ப்பதற்காக நான் பொதுவில் வைப்பது இல்லை

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்