பின்பற்றுபவர்கள்

6 ஏப்ரல், 2010

நீங்கள் பிசியா ?

போனவாரம் இன்னேரம் என்ன செய்தோம் ? மாதக் கூலிக்கு வேலைப் பார்க்கும் நமக்கெல்லாம் இன்னேரம் அலுவலகத்தில் பொட்டி தட்டிக் கொண்டிருப்போம் இல்லை யாருடனாவது உரையாடியில் மொக்கைப் போட்டு இருப்போம் என்று உறுதியற்ற பதில் கண்டிப்பாக கைவசம் இருக்கும். சென்றவார இறுதி சனி / ஞாயிறு என்ன செய்தோம் என்று அதே நாளில் அடுத்தவாரம் நினைத்தால் என்ன செய்தோம் என்றே நினைக்க முடியவில்லை. அந்த அளவுக்கு நம்ம நேரம் என்பது நினைவிற்கே வர இயலாத அளவிற்கு பயனற்று போனதாக இருக்கிறது என்று தான் நினைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. நினைத்துக் கொள்வேன். நாம செலவிட்ட நேரம் எதற்காக என்று ஒருவாரத்திற்குள் நடந்த நிகழ்வில் கூட நினைத்துப் பார்க்க இயலவில்லை என்றால் நாம எவ்வளவு வெட்டியாக இருந்திருக்கிறோம் என்பதன் குறிப்பே அவை. அதற்காக நினைவு கூற தக்க அளவில் நம் மணித்துளிகள் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கில்லை என்றாலும், ஒருவர் சமூகத்திற்கோ, தம்மை சார்ந்தவர்களுக்கோ எந்த அளவு முதன்மையானவர் என்பதை அவர் செலவிடும் நேரங்கள் தான் முடிவு செய்கிறது. வேலை தவிர்த்து, குடும்பம் தவிர்த்து சனி / ஞாயிறில் ஒருவருக்கு நேரம் போதவில்லை என்றால் அவர் சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் தம்மை இணைத்துக் கொள்ளும் ஒருவராக இருக்கும்.

பொழுதுகளை முழுக்க முழுக்க வேலைசெய்வதற்கும் ஓய்விற்கும் பயன்படுத்துபவர்கள் ஒன்று தொழில் அதிபர்கள் மற்றவர்கள் எப்போதும் உழைத்துக் கொண்டே இருக்கும் தொழிலாளிகள். வேலை, உணவு, உறக்கம் இதைத் தவிர்த்து அவர்களுக்கான நேரம் என்பது அவர்களுக்கு இருக்கவே இருக்காது. மற்றவர்களுக்கு கிடைக்கும் நேரம் சில சமயம் எப்படி போக்குவது என்றே தெரியாத அளவிற்கு சென்று கொண்டிருக்கும்.
போனவாரம் இல்லை பத்து ஆண்டுகளுக்கு முன் இதே நாள் என்ன செய்து கொண்டிருதீர்கள் என்று உங்களால் சொல்ல முடிந்தால் நீங்கள் மிக பிசியான ஒருவராகவும் சமூகத்தால் நன்கு அறியப்பட்ட ஒருவராக (இருந்து) இருக்க வேண்டும், உங்கள் ஒவ்வொரு நாளும் செயலாளர் உதவியிடன் நாட்குறிப்பின் திட்டமிடலாக கழிந்து போன ஒன்றாக இருந்திருக்கும், அதிலிருந்து பத்தாண்டுக்கு முன் இதே நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை அறிவது கடினமே இல்லை. உதாரணத்திற்கு பில்கேட்ஸ் பத்தாண்டுக்கு முன் இதே நாள் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை அவர் தெரிந்து கொள்ள கடினமான ஒன்று அல்ல, ஆனா நமக்கு ?

கடந்த வாழ்க்கை, கழிந்த வாழ்க்கை, அனுபவம் என்பதைத் தவிர்த்து நாம் செலவிட்ட நேரங்கள் நினைவு கூறத்தக்கதாக இல்லை என்பதை நாம் நினைத்துக் கூடப் பார்பதில்லை என்பது உண்மை தான்.

தனக்கான நேரத்தை தனக்கு மட்டும் பயன்படுத்துவர்கள் தன்நலர்கள்
தனக்கான நேரத்தை பிறருக்காக செலவு செய்பவர்கள் சமூக ஆர்வலர்கள்
தனக்கான நேரத்துடன் பிறருக்கான நேரத்தையும் தனக்காகப் பயன்படுத்துபர்கள் தொழில் அதிபர்கள் (மார்கிசிய சிந்தாத்ததில் சொல்ல வேண்டுமென்றால் பிறர் உழைப்பை சுரண்டுபவர்கள், முதலாளிகள்)
தனக்கான நேரத்தையும் பிறருக்கான நேரத்தையும் வீனடிப்பவர்கள் வெட்டிப் பேச்சாளர்கள்

முதல் மூன்று நேரங்களின் பக்க விளைவுகளாக பலன்கள் உண்டு கடைசியில் செலவிடும் நேரம் பயனற்றவை.

நம் நேரங்கள் நிகழ்வுகளாகப் பதியப்பட்டு நினைவுக்கூறத்தக்க வகையில் சென்று கொண்டிருந்தால் அப்போது நாம் ரொம்ப பிசி என்று சொல்லிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நான் பிசி இல்லை.

7 கருத்துகள்:

Test சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

:))))

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

போன வாரம் இதே நாள்ல நீங்க என்ன பண்ணிகிட்டு இருந்தீங்கன்னு எனக்குத் தெரியும்!

சொல்லவா?


இன்னொரு இடுகையை எழுதிப் பதிவிட்டுக் கொண்டிருந்தீர்கள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

உதாரணத்திற்கு பில்கேட்ஸ் பத்தாண்டுக்கு முன் இதே நாள் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை அவர் தெரிந்து கொள்ள கடினமான ஒன்று அல்ல, ஆனா நமக்கு ?//

இதுக்கு எடுத்துக்காட்ட உங்களுக்கு உலகப் பணக்காரர் பில் கேட்ஸ்தான் கிடைச்சாரோ!

ஏன் கலாநிதி மாறனையெல்லாம் கண்ணுக்குத் தெரியலையோ!?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தனக்கான நேரத்தை தனக்கு மட்டும் பயன்படுத்துவர்கள் தன்நலர்கள்
தனக்கான நேரத்தை பிறருக்காக செலவு செய்பவர்கள் சமூக ஆர்வலர்கள்
தனக்கான நேரத்துடன் பிறருக்கான நேரத்தையும் தனக்காகப் பயன்படுத்துபர்கள் தொழில் அதிபர்கள் (மார்கிசிய சிந்தாத்ததில் சொல்ல வேண்டுமென்றால் பிறர் உழைப்பை சுரண்டுபவர்கள், முதலாளிகள்)
தனக்கான நேரத்தையும் பிறருக்கான நேரத்தையும் வீனடிப்பவர்கள் வெட்டிப் பேச்சாளர்கள்//

சித்தாந்த்தமுன்னா என்னா?

மேல் மருவத்தூர் சம்மந்தப் பட்ட யாவாரமா?

யாரும் முதலாளியா இல்லன்னா....!

எல்லோரும் உழைப்பாளியா இருந்தா...!

நமக்கு தேவையானதை செஞ்சு முடிக்கிறத்துக்குள்ள ஆயுசு போயிடும்(எவ்வளவு நாள் வீணாகும்?)!

மார்க்கெட்டிங் --> இந்த வேலையே கிடையாது!

டிவி எல்லாம் பாக்க ஆசைப்பட்டா! ஆயுசு முழுது மெனக்கெட்டாலும் செய்யமுடியாது!

சிந்த்தாந்தம், பொலிட்டு பீரோ எல்லாம் தோத்துப் போன யாவாரம்!

மசால் தோசையோட வெக்கப்பட்டுகிட்டு நிக்கும்!

கருத்த ஒட்டாம கருத்துக்கு உரை கொடுத்துட்டன்!

ப.கந்தசாமி சொன்னது…

அது யாருங்க அத்திவெட்டி ஜோதிபாரதி,
கமென்ட்டா எழுதித்தள்ளறாரு?

வடுவூர் குமார் சொன்னது…

நானும் பிசியில்லை ஆனால் 10 வருடங்களுக்கு முன்பு என்ன செய்துகொண்டிருந்தேன் என்று ஞாபகம் இருக்கு - பதிவில் பார்த்துக்கொள்ளலாம். :-)
அது யாருங்க அத்திவெட்டி ஜோதிபாரதி டாக்டர் ஐயா நீங்க புதுசா வந்திருக்கீங்க அதனால் தெரியலை...நாங்கள் எல்லாம் சிங்கை நண்பர்கள்.
அவருடைய கவிதைகளை படித்துப்பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்