பின்பற்றுபவர்கள்

21 ஏப்ரல், 2010

தமிழக அரசு சின்னம் மாறுகிறுது (!?)

தமிழக அரசு சின்னம் கோபுரத்தில் இருந்து திருவள்ளுவராக மா(ற்)றுவதாக ஜூவியில் கிசு கிசுத்துள்ளதாக தமிழ் ஹிந்து என்கிற இணைய தளம் கட்டுரை வெளியிட்டு தனது (எதிர்) கருத்தை தெரிவித்திருந்தது. தமிழ் ஹிந்து இணையத்தளம் வருணாசிரம ஹிந்துத்துவ ஆதரவு நிலைப்பாடு கொண்ட இணையத்தளம் என்பது பரவலாக பலரும் அறிந்தவையே. ஹிந்து நலன் என்கிற அடிப்படையில் மக்களை பழமைவாதத்திற்குள் இழுத்துச் செல்லும் பல்வேறு மதக்கூட்டங்களில் இவர்களும் ஒருவர் என்பது தவிர்த்து இவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட காண்டு எதுவும் என்று கிடையாது. 'ஹிந்து' தமிழர்களின் தாய் மதம் என்று கட்டமைக்கிறார்கள். கிறித்துவம் இஸ்லாம் எல்லாம் மகன் மதம், மகள் மதம் என்று சொல்லலாமா ? தமிழகத்தின் முன்பிருந்த சமணமும் பவுத்தமும் பாட்டன் முப்பாட்டன், தந்தை மதம் என்று சொல்லலாமா ? தாய் மொழி என்று மொழிக்குச் சேர்க்கும் ஒரு சிறப்பு தாய மதம் என்று சொல்வதன் மூலம் ஒரு மதத்திற்கு சிறப்பு சேர்த்துவிட முடியாது. தாய்மொழியை தேர்ந்தெடுக்கும் உரிமை எவருக்குமே கிடையாது, அதுவாக அமைவது, ஆனால் மதம் அப்படி கிடையாது ஒருவர் விரும்பினால் தாயின் மதத்தைக் கூட மாற்றிவிடும் நிலை தான் மதமாற்றம் குறித்த மன(த் தடு)மாற்றம். எனவே தாய் மதம் நாய் மதம் இவை எல்லாம் உதவாத கதைகள்.

கருணாநிதியின் தமிழக அரசு அமைத்த கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை சரியான அமைப்பில் இல்லையாம், தமிழகத்தில் சுனாமி வந்ததற்கு அதுவும் காரணம் என்று நல்லவேளை எதுவும் கொளுத்திப் போடவில்லை. வள்ளுவர் சிலை எதோ ஒரு சங்கிலி பூதம் போல் இருப்பதாக இவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். திருவள்ளுவர் சிலை மீது பூணூல் இருந்திருந்தால் இது போல் விமர்சனம் வந்திருக்குமா அறியேன். மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்று சொன்ன திருவள்ளுவர் கொண்டை மற்றும் தாடியுடன் இருப்பாரா என்று கேட்கிறார்கள். ஆதிசங்கரர் போலவோ, இராமனுஜர் போலவோ முன் மொட்டை பின் குடுமியுடன் பூணூல் இல்லாமல் இருந்தால் கூட ஏற்றுக் கொள்வார்கள் போலும். திருவள்ளுவரை ஒரு பார்பனராக காட்ட முயற்சித்து அது எடுபடாமல் போகவே திருவள்ளுவர் உருவத்தையே புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்று தான் நான் அவர்களின் விமர்சனம் குறித்த உளவியலாகக் கொள்கிறேன். பார்பன புறக்கணிப்பு என்பது பார்பனர்களால் பார்பனர்களுக்கே நடந்தவை தான் அதற்கு இந்த நூற்றாண்டு சாட்சியாக பாரதியாரே உள்ளார். பாரதி வாழ்ந்த காலத்தில் பாரதியாரை பார்பனர்கள் எவரும் கொண்டாடவில்லை, தற்போது பாரதியை பார்பனர் சின்னமாக பார்பனர்களே மாற்றி இருக்கிறார்கள். பாரதி தற்போது பார்பனர்களால் பார்பனராக அடையாளப்படுத்தப்பட்டாலும் கூட பாரதியை பார்பனர் என்பதற்காக புறக்கணிப்பவர்கள் மிக மிகச் சிலரே. எனவே திருவள்ளுவரை ஒருவர் போற்றுவதற்கு அவர் பார்பனராகவோ, பார்பனர் அல்லாதவராகவோ இருக்க வேண்டிய தேவை எதுவுமில்லை. வள்ளுவர் சிலை பார்பன அடையாளத்தில் இல்லை என்கிற பார்பனர்களின் கவலை தேவை அற்றது, ஒருவேளை அப்படி செய்தால் திருவள்ளுவரை போற்றுபவர்களைவிட அதற்காகவே தூற்றுவர்கள் மிகுதியாகும் வாய்ப்பு உண்டு. திருவள்ளுவரை சாதி ரீதியில் அடையாளப்படுத்த முயற்சிப்பது தேவையற்ற செயல்.

தமிழக அரசு சின்னமாக வைக்க திருவள்ளுவர் உருவத்திற்கு முழுத்தகுதியும் உண்டு, ஏனெனில் திருவள்ளுவர் கிறித்துவர் என்றும் கிறித்துவர்களில் சிலர நம்பத் தொடங்குகிறார்கள், திருவள்ளுவர் கிறித்துவர் என்பதால் அவர் முகமதுவுக்கு முன் இருந்த இஸ்லாத்தை சேர்ந்தவர் என்பதாக இஸ்லாமியர்களுக்கும் பிரச்சனை இருக்காது. (இஸ்லாமைப் பொருத்த அளவில் கிறித்துவம் என்பது முகமதுவை ஏற்றுக் கொள்ளாத மற்றொரு இஸ்லாம், இந்த கூற்றை கிறித்துவர்கள் ஏற்று கொள்வதில்லை என்பது வேறு விசயம்), ஏற்கனவே திருவள்ளுவருக்கு சமணர், பவுத்தர், வைதீகர், சைவர், வைணவர் என்று பல்வேறு அடையாள முயற்சி நடை பெற்றிருக்கிறது என்பதால் மேலும் அவர் ஒரு கிறித்துவர், இஸ்லாமியர் என்பது பெரிய விசயமே இல்லை.

இருந்தாலும் தற்போது இருக்கும் கோபுர சின்னம் சமய சார்பாக பார்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அது ஒரு பழமையான தமிழக அடையாளத்தின் சின்னம், இஸ்லாமும் கிறித்துவமும் தமிழகத்தில் நுழையும் முன்னே தமிழகத்தில் கோபுரங்கள் எழுந்துவிட்டன. தமிழகத்தின் அடையாளமே கோபுரங்கள் தான், வேறெந்த இந்திய மாநிலத்திலும் இல்லாத அளவுக்கும், உயரத்திற்கும் கோபுரங்கள் தமிழகத்தின் தனி அடையாளமாகவே இருக்கின்றன.கூகுளில் ஆங்கிலத்தில் தமிழ் நாடு என்று தேடினாலும் எதோ ஒரு கோபுர படம் காணக் கிடைக்கிறது. இதுவரை இஸ்லாமியர்களோ, கிறித்துவர்களோ தமிழக அரசின் சின்னங்களை மாற்ற வேண்டும் என்று சொல்லாத போது பகுத்தறிவாதம் என்கிற பெயரில் சில சமயம் தவறாகவும் சிந்தனை செய்யும் ஒரு சிலரின் சிறுமூளையில் கோபுர சின்னம் மத அடையாளமாக தெரிந்திருக்கும் என்பதும் அவர்களின் பரிந்துரையினால் தான் சின்னம் மாற்ற மடைய பரிந்துரை செய்யப்பட்டு இருக்கும் என்று கருதுகிறேன். தமிழர்களின் அடையாளம் வேட்டி, புடவை கூட இந்து மத அடையாளம் என்றால் நாம கோவணத்தைத்தான் தமிழக அடையாளம் மதச் சார்பற்றது என்று சொல்ல முடியும்.

மதச்சார்பற்ற நிலை என்பதை மதவெறுப்பு என்பதாக பலர் புரிந்து கொண்டு நிலைப்பாடு கொண்டிருக்கிறார்கள். மதச்சார்பற்ற நிலை என்பது மதச் சகிப்பு தன்மை என்கிற நிலைப்பாட்டில் தான் முழுமையாக உள்ளது. கோபுரம் மதச் சார்பு என்றாலும் கூட ஒரு பெரும்பான்மை இஸ்லாமியர், கிறித்துவர் வசிக்கும் இஸ்லாமிய, கிறித்துவ நாடுகளில் 10 விழுக்காடு பிறமதத்தினர் வசிக்க நேரிட்டால் எங்களுக்காக நீங்கள் மதச்சார்பற்றவராக மாறுங்கள் அரசு சின்னங்களை மாற்றுங்கள் என்று சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது. தமிழக அரசின் சின்னமாக கோபுரச் சின்னம் வலிந்தோ பலவந்தமாகவோ நுழைக்கப்பட்டதாக வரலாறு இல்லாத போது அதை மாற்றுவது தேவை அற்றது என்பது என் கருத்து.

தமிழக அரசு சின்னம் கோபுரத்தில் இருந்து திருவள்ளுவராக மாறுவாதால் மதச்சார்பின்மை காக்கப்படும் என்பது ஒரு தவறான புரிதல். உலகில் இஸ்லாமியர் மிகுதியாக வசிக்கும் இந்தோனிசியாவில் அரசு சின்னம் கிருஷ்ண பருந்து தான். அதை இந்து அடையாளமாக அவர்கள் பார்க்கவில்லை, அந்த பகுதியின் பண்பாட்டு விழுமியங்களில் புழங்கிய பழமையான இலக்கிய வடிவத்தில் இருக்கும் ஒரு பாத்திரத்தின் சின்னமாகத்தான் அதை தற்போது வரை பார்க்கிறார்கள். அங்கும் வகாபி இசம் இறுகினால் நிலை மாறலாம். திருவள்ளுவரை புதிய சின்னமாக மாற்றுவது தவறு அல்ல, ஆனால் ஏற்கனவே இருக்கும் கோபுர சின்னத்தை மாற்றுவதற்கு கூறும் காரணம் சிறுபிள்ளைத்தனமானது. தமிழர் பண்பாடுகளில் எதையெலலம் காக்கவேண்டும், எதை அழிக்க வேண்டும் என்பதில் ஒரு தெளிவற்ற நிலையை கொண்ட் சிலரின் பரிந்துரையின் பேரில் இவ்வாறெல்லாம் நடைபெறுவதால் மதச் சார்பின்மை என்று எதுவும் ஏற்படப் போவதில்லை.

64 கருத்துகள்:

sultangulam@blogspot.com சொன்னது…

//(இஸ்லாமைப் பொருத்த அளவில் கிறித்துவம் என்பது முகமதுவை ஏற்றுக் கொள்ளாத மற்றொரு இஸ்லாம், இந்த கூற்றை கிறித்துவர்கள் ஏற்று கொள்வதில்லை என்பது வேறு விசயம்)//
ஒரு சிறு திருத்தம் ஜிகே.
'கிறித்துவம் என்று இப்போதிருக்கும் நிலையை ஈஸா நபி போதிக்கவில்லை. அவரும் இஸ்லாத்தையே போதித்தார்' என்றுதான் முஸ்லீம்கள் நம்புகிறார்கள். இந்த கூற்றை கிறித்துவர்கள் ஏற்று கொள்வதில்லை என்பது வேறு விசயம்

//மதச்சார்பற்ற நிலை என்பது மதச் சகிப்பு தன்மை என்கிற நிலைப்பாட்டில் தான் முழுமையாக உள்ளது.//
இது நல்லாருக்கே.

//கூகுளில் ஆங்கிலத்தில் தமிழ் நாடு என்று தேடினாலும் எதோ ஒரு கோபுர படம் கண்டிக்காக கிடைக்கிறது.//
கூகிளிலேயே கிடைக்குது என்றால் கண்டிப்பாக மாற்றக்கூடாது. விட்டு விடலாம். :))

//தமிழர்களின் அடையாளம் வேட்டி, புடவை கூட இந்து மத அடையாளம் என்றால் நாம கோவணத்தைத்தான் தமிழக அடையாளம்//
இதுவும் மதச்சார்பு நிலைதான்.
இன்னும்... இன்னும்....

//உலகில் இஸ்லாமியர் மிகுதியாக வசிக்கும் இந்தோனிசியாவில் அரசு சின்னம் கிருஷ்ண பருந்து தான்.......அங்கும் வகாபி இசம் இறுகினால் நிலை மாறலாம்.//
ஆமாம். அமீரகத்திலும் பருந்துதான்.
வகாபி இசம் அமீரகத்துக்குள் வந்து விட்டதோ? இல்லையோ?

//தமிழக அரசின் சின்னமாக கோபுரச் சின்னம் வலிந்தோ பலவந்தமாகவோ நுழைக்கப்பட்டதாக வரலாறு இல்லாத போது அதை மாற்றுவது தேவை அற்றது என்பது என் கருத்து.//
(மாறுபட்ட சிந்தனைகளை இதுவரை நான் படிக்கவில்லை)
இதிலே உடன்படுகிறேன்.என் கருத்தும் இதுதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆமாம். அமீரகத்திலும் பருந்துதான்.
வகாபி இசம் அமீரகத்துக்குள் வந்து விட்டதோ? இல்லையோ? //

இந்தோனேசியாவின் பருந்து சின்னத்திற்கு இருக்கும் விக்கி பீடியா விளக்கம் படித்தீர்களா ? அதுவும் அமீரக பருந்திற்கான விளக்கமும் ஒன்று அல்ல என்றே நினைக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரு சிறு திருத்தம் ஜிகே.
'கிறித்துவம் என்று இப்போதிருக்கும் நிலையை ஈஸா நபி போதிக்கவில்லை. அவரும் இஸ்லாத்தையே போதித்தார்' என்றுதான் முஸ்லீம்கள் நம்புகிறார்கள். இந்த கூற்றை கிறித்துவர்கள் ஏற்று கொள்வதில்லை என்பது வேறு விசயம்//

பெரியப்பாவிடம் 'எங்க தாத்தா' உங்களுக்கு இப்படித்தான் சொல்லிக் கொடுத்து இருப்பார் நம்புங்கள் பெரியப்பா' என்று தம்பி மகன் சொல்வது போன்றது.
:)

உங்கள் விளக்கம் ஏற்கனவே கேள்விப்பட்டு இருக்கிறேன்.

பின்னூட்டத்திற்கும் நன்றி.

priyamudanprabu சொன்னது…

ஹிந்து' தமிழர்களின் தாய் மதம் என்று கட்டமைக்கிறார்கள். கிறித்துவம் இஸ்லாம் எல்லாம் மகன் மதம், மகள் மதம் என்று சொல்லலாமா
////

சொன்னாலும் சொல்லலாம்

priyamudanprabu சொன்னது…

ஏற்கனவே திருவள்ளுவருக்கு சமணர், பவுத்தர், வைதீகர், சைவர், வைணவர் என்று பல்வேறு அடையாள முயற்சி நடை பெற்றிருக்கிறது என்பதால் மேலும் அவர் ஒரு கிறித்துவர், இஸ்லாமியர் என்பது பெரிய விசயமே இல்லை.
/////

இப்படியாக அவர் மதசார்பற்றவர் ஆகிறார்
அல்லது பொதுவானவர் ஆகிறார்

seeprabagaran சொன்னது…

பரிபோகும் தமிழ்நாட்டின், தமிழினத்தின் உரிமைகளை காப்பாற்ற எந்த முயற்சியும் செய்யாமல் இதுபோன்ற சில்லரைத்தனமான செயல்களை அதிமுக்கிய செயலாக கவனிக்கப்படுவது முட்டாள்தனம்.

மதங்களைப்பற்றியோ, சமயங்களைப்பற்றியோ, வழிபாடுமுறைகள் பற்றியோ,கோயில்களைப்பற்றியோ, கடவுளின் பெயரால் நடத்தப்படும் அரசியல் பற்றியோ எந்தவொரு புரிதலையும் மக்களிடம் ஏற்படுத்தாமல் அவைகளை வைத்து “மதச்சார்பின்மை” அரசியல் செய்வது அயோக்கியத்தனம்.

தாங்கள் சொல்வது போல் கோபுரங்கள் தமிழ்நாட்டின் தமிழினத்தின் அடையாளச்சின்னம் இதை மாற்றக்கூடாது என்பதே எனது கருத்துமாகும்.

பித்தனின் வாக்கு சொன்னது…

நான் கோபுரத்தைன் எடுத்துவிட்டு நமிதா உருவம் வைக்கச் சொல்லி உண்ணாவிரதம் இருக்கலாம் என்றியிருந்தேன். ஆனா எதிராளிகள் அதற்குள் இப்படி கிளப்பிவிட்டார்கள். எல்லாத் தமிழங்களையும் மச்சான்ஸ் என்று அன்புடன் அழைக்கும் எங்கள் இதயக் கன்னி நமிதா உருவம் வைக்க போராடுவேம்.

யாசவி சொன்னது…

//ருந்தாலும் தற்போது இருக்கும் கோபுர சின்னம் சமய சார்பாக பார்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அது ஒரு பழமையான தமிழக அடையாளத்தின் சின்னம், இஸ்லாமும் கிறித்துவமும் தமிழகத்தில் நுழையும் முன்னே தமிழகத்தில் கோபுரங்கள் எழுந்துவிட்டன. தமிழகத்தின் அடையாளமே கோபுரங்கள் தான், வேறெந்த இந்திய மாநிலத்திலும் இல்லாத அளவுக்கும், உயரத்திற்கும் கோபுரங்கள் தமிழகத்தின் தனி அடையாளமாகவே இருக்கின்றன//

agree with this :)

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...

நான் கோபுரத்தைன் எடுத்துவிட்டு நமிதா உருவம் வைக்கச் சொல்லி உண்ணாவிரதம் இருக்கலாம் என்றியிருந்தேன். ஆனா எதிராளிகள் அதற்குள் இப்படி கிளப்பிவிட்டார்கள். எல்லாத் தமிழங்களையும் மச்சான்ஸ் என்று அன்புடன் அழைக்கும் எங்கள் இதயக் கன்னி நமிதா உருவம் வைக்க போராடுவேம்.//

குஷ்புவுக்கு கோவில் கட்டியது உங்க வேலையாகத்தான் இருக்கும்

கோவி.கண்ணன் சொன்னது…

பிரபு
யாசவி
நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// seeprabagaran said...

//

நன்றி

Robin சொன்னது…

//கிறித்துவம் என்று இப்போதிருக்கும் நிலையை ஈஸா நபி போதிக்கவில்லை. அவரும் இஸ்லாத்தையே போதித்தார்' என்றுதான் முஸ்லீம்கள் நம்புகிறார்கள். // சீரியசான பதிவில் இப்படி ஒரு காமெடி பின்னூட்டம் :)

கோவி.கண்ணன் சொன்னது…

// Robin said...

//கிறித்துவம் என்று இப்போதிருக்கும் நிலையை ஈஸா நபி போதிக்கவில்லை. அவரும் இஸ்லாத்தையே போதித்தார்' என்றுதான் முஸ்லீம்கள் நம்புகிறார்கள். // சீரியசான பதிவில் இப்படி ஒரு காமெடி பின்னூட்டம் :)//

உங்களுக்கு காமடி...அவருக்கு இல்லிங்க ராபின், இஸ்லாமியர்கள் அனைவரும் அப்படித்தான் கருத்து கொண்டிருக்கிறார்கள், அவரும் அப்படித்தான் அதை சீரியசாகத்தான் தானும் நம்புவதாகத்தான் சொல்லுகிறார்.

Robin சொன்னது…

//உங்களுக்கு காமடி...அவருக்கு இல்லிங்க ராபின், இஸ்லாமியர்கள் அனைவரும் அப்படித்தான் கருத்து கொண்டிருக்கிறார்கள், அவரும் அப்படித்தான் அதை சீரியசாகத்தான் தானும் நம்புவதாகத்தான் சொல்லுகிறார்// நீங்கள் சொல்வது சரிதான். காமெடி செய்பவர்கள் சீரியசாக செய்தால்தான் மற்றவர்களுக்கு சிரிப்பு வரும்.

பித்தனின் வாக்கு சொன்னது…

/// குஷ்புவுக்கு கோவில் கட்டியது உங்க வேலையாகத்தான் இருக்கும் //
ஹா ஹா எப்படின்னே கண்டுபுடிச்சிங்க, இப்ப தமண்னாக்கு இடம் பார்த்துக் கொண்டு இருக்கின்றேம். நாள், நட்சத்திரம், அய்யரு எல்லாம் தேடிக்கிட்டு இருக்கின்றேம். நீங்களும் ஒரு டொனேசன் கொடுங்க அண்ணே.

http://settaikkaran.blogspot.com/2010/04/blog-post_07.html இந்த பதிவைப் படித்தால் உண்மை தெரியும்.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//சீரியசான பதிவில் இப்படி ஒரு காமெடி பின்னூட்டம் :)

//

உங்களுக்கு எப்படி இது காமெடியாகத் தெரிகின்றதோ அதேபோலவே நீங்கள் சொல்லும் விஷயங்கள் எங்களுக்குக் காமெடியாகவே தெரிகின்றது. இரண்டு தரப்பும் மறுதரப்பை காமெடியாக நினைத்து சிரித்துப்போவது அடித்துக்கொள்வதைவிட சாலச் சிறந்தது

:))

பித்தனின் வாக்கு சொன்னது…

// கிறித்துவம் இஸ்லாம் எல்லாம் மகன் மதம், மகள் மதம் என்று சொல்லலாமா //

ஏன்னே இப்படி நிறுத்திட்டிங்க, ஹிப்ரு, தாத்தா மதம், நாகா பாட்டி மதம், ஜைனம் அண்ணன் மதம், புத்தம் அக்கான்னு சொல்லாம் இல்லையா?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஏன்னே இப்படி நிறுத்திட்டிங்க, ஹிப்ரு, தாத்தா மதம், நாகா பாட்டி மதம், ஜைனம் அண்ணன் மதம், புத்தம் அக்கான்னு சொல்லாம் இல்லையா?//

ஏன்னே இப்படி நிறுத்திட்டிங்க சித்தி மதம், சின்ன வீட்டு மதம் ....என்று நீட்டிக் கொண்டே போகலாம் இல்லையா.....யோவ் யாருய்யா அது 'கள்ள புருஷன் மதம்!' னு சொல்றது ?

:)

பித்தனின் வாக்கு சொன்னது…

'கள்ள புருஷன் மதம்!'

தமிழ் நாட்டுல இப்படியும் ஒரு மதமும் கூட்டமும் இருக்குன்னே, மாசத்துக்கு ஒரு கட்சியில மாறி மாறி கும்மி அடிப்பாங்க, பதவிதான் தெய்வம், ஓட்டுதான் வழிபாடு, பணம்தான் நைவேத்தியம் அண்ணே.

Kesavan சொன்னது…

அதெப்படி அய்யன் திருவள்ளுவர் உருவத்தை வைக்கலாம் . நாங்கள் ஒத்து கொள்ள மாட்டோம் . அவர் என்ன தமிழனுக்காக போரடியவரா . மாவீரன் பிர....... உருவத்தை வைத்தால் நன்றாக இருக்கும்

கோவி.கண்ணன் சொன்னது…

// Kesavan said...

அதெப்படி அய்யன் திருவள்ளுவர் உருவத்தை வைக்கலாம் . நாங்கள் ஒத்து கொள்ள மாட்டோம் . அவர் என்ன தமிழனுக்காக போரடியவரா . மாவீரன் பிர....... உருவத்தை வைத்தால் நன்றாக இருக்கும்//

சந்துல சிந்து...உன்னைப் போன்றவர்களைத்தான் திருவாளர் **டு தேடுகிறார்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

கலைஞரின் உருவப்படத்தையே வெளியிடலாம் என்பது என் கருத்து.

ஹிஹிஹிஹி......

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger நிகழ்காலத்தில்... said...

கலைஞரின் உருவப்படத்தையே வெளியிடலாம் என்பது என் கருத்து.

ஹிஹிஹிஹி.....//

செத்துப் போனவங்க உருவம் தான் சின்னமாகும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்

நிகழ்காலத்தில்... சொன்னது…

அப்ப இன்னும் இருவத்தி அஞ்சு வருசத்திற்கு கோயில் படமே இருக்கட்டும்.

அவ்வ்வ்வ்...

பனித்துளி சங்கர் சொன்னது…

///////ருந்தாலும் தற்போது இருக்கும் கோபுர சின்னம் சமய சார்பாக பார்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அது ஒரு பழமையான தமிழக அடையாளத்தின் சின்னம், இஸ்லாமும் கிறித்துவமும் தமிழகத்தில் நுழையும் முன்னே தமிழகத்தில் கோபுரங்கள் எழுந்துவிட்டன. தமிழகத்தின் அடையாளமே கோபுரங்கள் தான், வேறெந்த இந்திய மாநிலத்திலும் இல்லாத அளவுக்கும், உயரத்திற்கும் கோபுரங்கள் தமிழகத்தின் தனி அடையாளமாகவே இருக்கின்றன/////


இதுவும் ஒருவகையில் சரிதான் .

Kesavan சொன்னது…

//சந்துல சிந்து...உன்னைப் போன்றவர்களைத்தான் திருவாளர் **டு தேடுகிறார்.//

கோவில் சின்னமே இருக்கலாம்னு சொன்னா எங்களை ஹிந்து மத வெறியனு சொல்லுவீங்க ( உங்களை சொல்லலை ) . பிர.... படத்தை வைக்கலாம்ன சந்துல சிந்துன்னு சொல்லுவீங்க. என்ன பண்றது

Kesavan சொன்னது…

இந்திய தேசிய விலங்கு "புலி"யாமே.

பித்தனின் வாக்கு சொன்னது…

கோவி அண்ணே, நீங்க என்னைத் தப்புத்தப்பா எடுக்கற மாதிரி, நானும் உங்களை தப்பா கணித்து பின்னூட்டம் ஒன்னு போடவா?

Kesavan சொன்னது…

// தாய் மொழி என்று மொழிக்குச் சேர்க்கும் ஒரு சிறப்பு தாய மதம் என்று சொல்வதன் மூலம் ஒரு மதத்திற்கு சிறப்பு சேர்த்துவிட முடியாது//

தந்தை மொழி , மகன் மொழி , சித்தி மொழி முப்பாட்டன் மொழி ஏறக் இதெல்லாம் இதுல கிடையாதா

Kesavan சொன்னது…

// தாய் மொழி என்று மொழிக்குச் சேர்க்கும் ஒரு சிறப்பு தாய மதம் என்று சொல்வதன் மூலம் ஒரு மதத்திற்கு சிறப்பு சேர்த்துவிட முடியாது//

தந்தை மொழி , மகன் மொழி , சித்தி மொழி முப்பாட்டன் மொழி etc இதெல்லாம் இதுல கிடையாதா

பித்தனின் வாக்கு சொன்னது…

என்ன கேசவன் நீங்க விட்டா சின்ன வீடு மொழி, கள்ளப் புருஷன் மொழி என்று மொழிப் பற்றாளர்களைக் கேப்பிர்கள் போல உள்ளதே?

பித்தனின் வாக்கு சொன்னது…

// அப்ப இன்னும் இருவத்தி அஞ்சு வருசத்திற்கு கோயில் படமே இருக்கட்டும்.

அவ்வ்வ்வ் //

என்ன நிகழ்காலத்தில் பகல் கனவா? அதுக்கு அப்புறம் மாவேயிஸ்ட்டுகள் ஆட்சியைப் பிடித்து எல்லாத்தையும் மாற்றி விடுவார்களா? கோவி அண்ணாவின் இந்த பதிவின் உள்குத்து போல, அதுவரை ஒரு முதிய பெண்ணை அனுமதிக்க மறுக்கும் மானம் கெட்ட அரசுக்கு கோபுரமே இருக்கட்டும் என்ற பெருந்தன்மையா?

இப்பவும் சரி, எப்பவும் சரி, இங்கனயும் சரி, ஈழத்திலும் சரி ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியாது,

Kesavan சொன்னது…

//என்ன நிகழ்காலத்தில் பகல் கனவா? அதுக்கு அப்புறம் மாவேயிஸ்ட்டுகள் ஆட்சியைப் பிடித்து எல்லாத்தையும் மாற்றி விடுவார்களா? //

அதெப்படி மாவோயிஸ்ட் ஆட்சியை பிடிப்பாங்க ? தமிழ்நாட்டு :) தமிழ் புத்தாண்டை மாற்றிய தலைவரின் பேரப்பிள்ளைங்க என்ன பண்ணுவாங்க ? ஆமாம் தமிழ் தலைவருக்கு யாரும் விழா எடுக்கலையா ? ரொம்ப நாள் ஆச்சு :)

Kesavan சொன்னது…

மத சார்பற்ற நாடான இந்தியாவின் சின்னமான நான்கு சிங்கங்களும் சரி, அசோகச் சக்கரமும் சரி, மதசார்பற்ற சின்னங்கள் அல்ல. அவை புத்த மதச்சின்னங்களே.

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger Kesavan said...

மத சார்பற்ற நாடான இந்தியாவின் சின்னமான நான்கு சிங்கங்களும் சரி, அசோகச் சக்கரமும் சரி, மதசார்பற்ற சின்னங்கள் அல்ல. அவை புத்த மதச்சின்னங்களே.//

தேசியக் கொடியே காவியை மேலே தூக்கி வைத்துக் கொண்டுள்ளது.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...

//என்ன நிகழ்காலத்தில் பகல் கனவா? அதுக்கு அப்புறம் மாவேயிஸ்ட்டுகள் ஆட்சியைப் பிடித்து எல்லாத்தையும் மாற்றி விடுவார்களா? //

அதெப்படி மாவோயிஸ்ட் ஆட்சியை பிடிப்பாங்க ? தமிழ்நாட்டு :) தமிழ் புத்தாண்டை மாற்றிய தலைவரின் பேரப்பிள்ளைங்க என்ன பண்ணுவாங்க ? ஆமாம் தமிழ் தலைவருக்கு யாரும் விழா எடுக்கலையா ? ரொம்ப நாள் ஆச்சு :)//

ம் ஒரு பார்பனருக்கு கருணாநிதி தலையில் தான் பாராட்டுவிழா நடக்கிறது. அந்த பார்பனர் பெயர் ஒய்.ஜி மகேந்திரன். சோ இராமசாமி போவார்னு நினைக்கிறேன்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ம் ஒரு பார்பனருக்கு கருணாநிதி தலையில் தான் பாராட்டுவிழா நடக்கிறது//

தலைமையில் என்று படிக்கவும்

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்பவும் சரி, எப்பவும் சரி, இங்கனயும் சரி, ஈழத்திலும் சரி ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியாது,//

என்னங்க இது ஆயுதத்தை காட்டி மிரட்டி பாகிஸ்தான் என்ற நாட்டையே இரண்டாக பிரிச்சு இருக்காங்க.

இப்படி நம்பிக்கை இல்லாமல் சொல்கிறீர்கள். மிலிட்டரியை வீட்டுக்கு அனுப்பிவிடுவோமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...

கோவி அண்ணே, நீங்க என்னைத் தப்புத்தப்பா எடுக்கற மாதிரி, நானும் உங்களை தப்பா கணித்து பின்னூட்டம் ஒன்னு போடவா?//

நீங்க ரைட்டா வேற எடுத்து போட்டு இருக்கிங்களா என்ன ?

கோவி.கண்ணன் சொன்னது…

//எம்.எம்.அப்துல்லா said...

//சீரியசான பதிவில் இப்படி ஒரு காமெடி பின்னூட்டம் :)

//

உங்களுக்கு எப்படி இது காமெடியாகத் தெரிகின்றதோ அதேபோலவே நீங்கள் சொல்லும் விஷயங்கள் எங்களுக்குக் காமெடியாகவே தெரிகின்றது. இரண்டு தரப்பும் மறுதரப்பை காமெடியாக நினைத்து சிரித்துப்போவது அடித்துக்கொள்வதைவிட சாலச் சிறந்தது

:))//

தம்பி அப்து,
அடித்துக் கொல்வதை என்று இருக்க வேண்டும்.

:)

Kesavan சொன்னது…

இந்தியாவின் தேசிய மலரான தாமரையை மாற்ற வேண்டாமா . தாமரை ஒரு மதவாத கட்சியின் சின்னம் ஆயிற்றே ?

Kesavan சொன்னது…

மத சார்பற்ற அரசு என்று கூறி கொள்பவர்கள் அனைத்து மத கோவில்களையும் தமிழக அற நிலதுரையின் கீழ் எடுத்து கொண்டு வரலாமே ? ஏன் செய்யவில்லை?

கோவி.கண்ணன் சொன்னது…

// Kesavan said...

மத சார்பற்ற அரசு என்று கூறி கொள்பவர்கள் அனைத்து மத கோவில்களையும் தமிழக அற நிலதுரையின் கீழ் எடுத்து கொண்டு வரலாமே ? ஏன் செய்யவில்லை?//

எந்த ஒரு சர்ச்சும், மசூதியும் தமிழக மன்னர்கள் கட்டியதாகத் தெரியவில்லை, அந்த மத மக்கள் பணத்திலோ, வெளிநாட்டு பணத்திலோ கட்டப்பட்டது, மேலும் சர்ச்சுகளில் வேளாங்கன்னி தவிர்த்து பிற சர்சுகளுக்கு பெரிய வருமானம் கிடையாது. வேளாங்கன்னி அளவுக்கு வருமானம் வரும் இந்து கோவில்கள் பக்தர்களுக்கு எந்த ஒரு வசதியையும் செய்து தருவது கிடையாது. கோவில்கள் அரசு வசம் செல்ல வேண்டும் என்பது நாத்திகனின் கோரிக்கை இல்லை, இந்துக்களின் கோரிக்கை, அதே போல் பிற மதத்தினரும் அவரவர் வழிபாட்டுத்தளங்களை அரசு எடுத்து நடத்த கோரிக்கை எதுவும் விடுத்திருக்காத போது உங்க ஆதங்கம் வருமானம் போகுதே என்று புலம்பும் ஒரு பூசாரியின் புலம்பல் மட்டுமே, மணி அடிக்காத நீங்க ஏன் இப்படி புலம்புறிங்கன்னு தெரியவில்லை

Kesavan சொன்னது…

//மணி அடிக்காத நீங்க ஏன் இப்படி புலம்புறிங்கன்னு தெரியவில்லை//

பார்பனர்களால் பாதிக்கபடாத நீங்க எப்படி புலம்பரீங்கலோ அப்படி தான் நானும் புலம்பறேன்

Kesavan சொன்னது…

//எந்த ஒரு சர்ச்சும், மசூதியும் தமிழக மன்னர்கள் கட்டியதாகத் தெரியவில்லை, அந்த மத மக்கள் பணத்திலோ, வெளிநாட்டு பணத்திலோ கட்டப்பட்டது //

மன்னர்கள் கட்டிய கோவில் மட்டும் தான் இதன் கீழ் வருமா புதிய செய்தியாக இருக்கிறது.

மத்த கோவிலை அரசு எடுத்துண்டா ஹவாலா பண்ண முடியாது இது தான் உண்மை . அதை விட்டுட்டு மன்னர்கள் கட்டியது சுல்தான்கள் கட்டியது என்று சொல்லாதீர்கள்.

கோவில்களை அரசுடமையாக்கி அதை குத்தகை காரர்களிடம் கொடுத்து காசு பார்க்கும் கூடம் தான் இன்று இருக்கிறது .

தெய்வமே கிடையது என்று சொல்பவர்கள் கோவிலை அரசுடமையாக்கி இருகிறார்கள் . மத்த சார்பற்றவன் என்ற பெயரில் ரம்ஜான் கஞ்சி குடிகிரார்கள் .

மத்த சார்பற்றவன் என்று சொல்பவன் எல்லாம் ஏமாற்றுவாதிகளே

Robin சொன்னது…

அப்துல்லா,
// இரண்டு தரப்பும் மறுதரப்பை காமெடியாக நினைத்து சிரித்துப்போவது அடித்துக்கொள்வதைவிட சாலச் சிறந்தது// நல்ல யோசனை.
இதையே ஒரு பதிவா போட்டீங்கன்னா நல்லா இருக்கும்.

Kesavan சொன்னது…

//எந்த ஒரு சர்ச்சும், மசூதியும் தமிழக மன்னர்கள் கட்டியதாகத் தெரியவில்லை, அந்த மத மக்கள் பணத்திலோ, வெளிநாட்டு பணத்திலோ கட்டப்பட்டது //

மன்னர்கள் கட்டிய கோவில் மட்டும் தான் இதன் கீழ் வருமா புதிய செய்தியாக இருக்கிறது.

மத்த கோவிலை அரசு எடுத்துண்டா ஹவாலா பண்ண முடியாது இது தான் உண்மை . அதை விட்டுட்டு மன்னர்கள் கட்டியது சுல்தான்கள் கட்டியது என்று சொல்லாதீர்கள்.

கோவில்களை அரசுடமையாக்கி அதை குத்தகை காரர்களிடம் கொடுத்து காசு பார்க்கும் கூட்டம் தான் இன்று இருக்கிறது .

தெய்வமே கிடையது என்று சொல்பவர்கள் கோவிலை அரசுடமையாக்கி இருகிறார்கள் . மத்த சார்பற்றவன் என்ற பெயரில் ரம்ஜான் கஞ்சி குடிகிரார்கள் .

மத்த சார்பற்றவன் என்று சொல்பவன் எல்லாம் ஏமாற்றுவாதிகளே

Robin சொன்னது…

//தம்பி அப்து,
அடித்துக் கொல்வதை என்று இருக்க வேண்டும்.//
இல்லை, வெடித்து கொல்வதை என்றுதான் இருக்கவேண்டும் :)

ELANGO T சொன்னது…

தாஜ்மஹாலை எப்படி எல்லோரும் பார்க்கிறோமோ அப்படித்தான் கோபுர சின்னத்தையும் பார்க்க வேண்டும்.தேர்தலில் தனித் தொகுதியில் போட்டியிடும்போது மட்டும் தங்களை இந்துவாக காட்டிக் கொள்பவர்கள் கொளுத்திப் போடும் விஷயம் இது.முதலில் அவர்கள் மாறட்டும்....தி.தமிழ் இளங்கோ.

ப.கந்தசாமி சொன்னது…

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே - நன்னூல்

மாற்றங்கள் காலத்தின் கட்டாயம்.

குறும்பன் சொன்னது…

கோபுரம் சின்னத்தை மாற்றும் எண்ணம் ஏதாவது இருந்தால் அதை தமிழக அரசு கைவிடவேண்டும் என்பதே என் கருத்து.

Unknown சொன்னது…

பொழப்புக் கெட்ட நாசுவன் பொண்டாட்டி தலையைச் சிரைச்சானாம்.
கோபுரங்கள் தான் தமிழ்நாட்டின் அடையாளமாக உள்ளன. தமிழர் கட்டடக் கலையின் அடையாளமும் அதுவே. ஆனால் பல நூறு கோடி செலவில் கட்டப் படும் தமிழக சட்டப் பேரவையில், கோபுரங்கள் கோயில்களில் இருக்கும் காரணத்தால் அவற்றின் தோற்றம் புறக்கணிக்கப் பட்டு, படு கேவலமாக கொருக்குப் பேட்டையில் இருக்கும் எண்ணெய் தொட்டிகள் வடிவில் கட்டி தமிழர் கட்டடக் கலையை அசிங்கப் படுத்தியுள்ளது தமிழக அரசு. இப்பல்லாம் பேரூந்தில் செல்லும் போது அண்ணா சாலையில் இருக்கிறோமா அல்லது கொருக்குப் பேட்டையில் இருக்கிறோமா என்றே தெரிவதில்லை. இந்தக் கட்டடங்களுக்கு பல நூறு கோடிகள் செலவழிப்பதற்கு மாற்றாக இந்திய எண்ணெய் கழகத்திடம் கேட்டிருந்தால் சில கோடிகளில் நான்கு எண்ணெய் தொட்டிகளை கொண்டு வந்து வைத்திருக்கலாம்.

புதிதாகக் கெடுத்தது போதாதென்று இருக்கதையும் கெடுக்க வேண்டாம். பொண்டாட்டி தலையையும் சிரைக்க வேண்டாம்.

Kesavan சொன்னது…

//ம் ஒரு பார்பனருக்கு கருணாநிதி தலையில் தான் பாராட்டுவிழா நடக்கிறது. அந்த பார்பனர் பெயர் ஒய்.ஜி மகேந்திரன். சோ இராமசாமி போவார்னு நினைக்கிறேன் //

பார்பனர் பாராட்டு விழாவில் கலந்து கொண்டதற்காக விரைவில் கலைஞருக்கு பாராட்டு விழா நடக்க போகிறது பாருங்கள். இதற்காக தான் அவர் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறாரோ என்னவோ :)

Kesavan சொன்னது…

//ம் ஒரு பார்பனருக்கு கருணாநிதி தலையில் தான் பாராட்டுவிழா நடக்கிறது. அந்த பார்பனர் பெயர் ஒய்.ஜி மகேந்திரன். சோ இராமசாமி போவார்னு நினைக்கிறேன் //

பார்பனர் பாராட்டு விழாவில் கலந்து கொண்டதற்காக விரைவில் கலைஞருக்கு பாராட்டு விழா நடக்க போகிறது பாருங்கள். இதற்காக தான் அவர் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறாரோ என்னவோ :) .என் உங்களுக்கு பிடிச்ச "டூ " வை விட்டுடீங்க

sekar சொன்னது…

//இந்தக் கட்டடங்களுக்கு பல நூறு கோடிகள் செலவழிப்பதற்கு மாற்றாக இந்திய எண்ணெய் கழகத்திடம் கேட்டிருந்தால் சில கோடிகளில் நான்கு எண்ணெய் தொட்டிகளை கொண்டு வந்து வைத்திருக்கலாம்.//

நல்ல ஐடியா... சிரிப்பை அடக்க முடியலை.

எனக்கு ஒரு கேள்வி.... திருவள்ளுவர் சிலைய வச்சது யாரு ? இப்போ அதயே சின்னமாக்கினா வீணாப் போற வரலாற்றில் இடம் பிடிக்க போறது யாரு ? அங்கே தான் நிக்குது அந்த வெண்ணை வெட்டி....

நல்ல வேலை... அந்த லூசு சிரிக்கிற மாதிரி சின்னம் வைக்காத அந்த @%^#%*@%*$& ன் பெருந்தன்மையை பாராட்டி உண்மையிலேயே பாராட்டு விழா நடத்தியே ஆகணும்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தமிழக ஜனங்களை, நீண்ட காலமாக மகிழ்வித்து வந்த ஸெல்வி ஸில்க் ஸ்மிதாவின் உருவத்தை அரசாங்க இலச்சினையாக வைத்தால் ஸேமமாக இருக்கும். இதனால் ஜனங்களுக்கும் மகிழ்ச்சி, காலஞ்சென்ற நடிகையின் நீண்ட நாள் அபிமானிகளும் சந்தோஸம் அடைவார்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

தேஸாபிமானிகளுக்கு ஒரு வேண்டுகோள்! நமது மாநில சர்க்காரின் இலச்சினையை மேற்கண்ட நமது கருத்தின் படியே (செல்வி ஸில்க் ஸ்மிதாவின் உருவத்தை வைத்து) மாற்ற வேண்டும் என்று அரசாங்கத்தாருக்கு தந்தி அல்லது கடிதம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தங்கப்பா சொன்னது…

தமிழ் ஹிந்து வலைதலத்திற்க்கு செருப்படி .. திருந்துவார்களா ...?

தமிழக அரசின் சின்னமான கோபுரச் சின்னம் தமிழர்களின் அடையாளம் என்பது என் கருத்து.மதச்சார்பற்ற நிலையே மதச் சகிப்பு தன்மை.

Kesavan சொன்னது…

http://www.tamilhindu.com/2010/04/thiruvalluvar-a-hindu-sage-in-tn-emblem/

கோவி.கண்ணன் சொன்னது…

// Kesavan said...

http://www.tamilhindu.com/2010/04/thiruvalluvar-a-hindu-sage-in-tn-emblem///

மாட்டின் கொம்பை அறுத்து இப்ப பாருங்க இது குதிரை என்று காட்டும் முயற்சி.

அது தான் அந்த கட்டுரையில் தெரிகிறது

Kesavan சொன்னது…

நீங்கள் சொல்வதே எப்பொழுதும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை MR .கோவி

Kesavan சொன்னது…

நீங்கள் திருவள்ளுவர் சமணராக இருந்திருக்கலாம் என்று எப்படி சொல்கிறீர்கள் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...

நீங்கள் திருவள்ளுவர் சமணராக இருந்திருக்கலாம் என்று எப்படி சொல்கிறீர்கள் ?//

நீ எப்படி அவர் சமணராக இருக்க் முடியாது என்று நம்புகிறாயோ அதே போல் தான் நானும் என்று மொட்டையாகச் சொல்ல மாட்டேன்.

விவரம் இங்கே இருக்கு


////

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

// Robin said...
//தம்பி அப்து,
அடித்துக் கொல்வதை என்று இருக்க வேண்டும்.//
இல்லை, வெடித்து கொல்வதை என்றுதான் இருக்கவேண்டும் :)

//

சரியாகச் சொன்னீர்கள் ராபின் அண்ணா,

அற்ப எண்ணெய்க்காக விலைமதிப்பற்ற மனித உயிர்களை கிருஸ்துவ மேலை நாடுகள் ஈராக் போன்ற நாடுகளில் போர் நடத்தி வெடித்துதான் கொல்கின்றன. உங்கள் நேர்மையைப் பாராட்டுகின்றேன் :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்