உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்ததவன் இறைவன் என்பதாக அவ்வப்போது ஆன்மிகவாதிகளால் சொல்லப்படுகிறது, இதே கருத்து மதவாதிகளிடமும் பலமாகவே உள்ளது. மதவாதிகள் மதத்தை மார்கெட் செய்யும் உத்தியில் தங்களை முழுமனதாக ஊக்கப்படுத்திக் கொள்ளுவதற்கு 'தங்கள் இறைவனும், தங்கள் வேதபுத்தகமுமே' முழுக்க முழுக்க உண்மையானது மற்றவையெல்லாம் மனிதர்களே படைத்துக் கொண்டார்கள், போலியானவை என்று விளம்பரம் செய்வார்கள் அல்லது பிற மதங்களைப் பின்பற்றும் மனிதக் குழுக்களிடம் இருக்கும் குறைகளைக் குறிப்பிட்டு, அவை நீங்கள் பின்பற்றும் மதத்தின் காரணாமாக அமைந்தது என தூற்றுவார்கள்.
அனைத்தையும் படைக்கும், இயக்கும் இறைவன், நடைபெறும் மதவெறிச் செயல்களுக்கும், இயற்கைச் சீற்றங்களுக்கும் காரணமா ? என்றால், அது மனிதர்களின் தவறான செயல் என்றும், இயற்கைச் சீற்றங்கள் பற்றிய மழுப்பலான பதில்களே வருவதுண்டு. இதற்கெல்லாம் ஏற்றுக் கொள்ளும் வகையிலான சிறப்பான விளக்கம் எந்த ஒரு மதத்திலும் இல்லை என்பதே உண்மை. தனிமனித, இனக்குழு செயல்களுக்கும், இயற்கையின் போக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கெல்லாம் மதமோ, மதங்கள் காட்டும் இறைவனோ பொறுப்பு ஏற்றுக் கொள்ளமுடியுமா என்ன ? விட்டுத்தள்ளுவோம், அவை என்றுமே பதில் பெற முடியாத கேள்விகள். வேதப்புத்தகங்களிலும், மதப்பற்றாளிடமும் அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கும் என்று நினைப்பது ஞாயமற்றது
தன்மதம் மனிதர்களிடையே ஒற்றுமை போற்றும் என்பதாகவும், பிற மதங்கள் பிரிவினையை ஏற்படுத்தக் கூடியதாக அம்மதங்களிலேயே சொல்லப்பட்டுள்ள உண்மை என்றெல்லாம் வியாக்யானங்கள் வருவது உண்டு.
இந்துக்களின் வேதம் எனச் சொல்லப்படும் பகவத் கீதை பற்றிய சர்சைகள் ஒருபுறம் இருந்தாலும் (இதை பொதுவான இந்து வேதம் என்று சொல்லமுடியாது, பிற மதங்களுக்கு வேதப்புத்தகங்கள் இருக்கிறது, அவை நீதிமன்றங்களில் சத்தியவாக்குப் பெற பயன்படுத்தப்படுகிறது என்பதால் வைணவ தத்துவ நூல்களில் ஒன்றான பகவத்கீதை பாலகெங்காதாரா திலகர் போன்றோரால் முன்மொழியப்பட்டது, இந்திய சமயங்கள் அனைத்தையும் இந்து மதம் என்று சொல்வதால், பகவத் கீதை பொதுவானது என்று சொல்லப்படுவது நிராகரிக்கக் கூடியதும் ஆகும், குறிப்பாக சிவனை வழிபடுபவர்களுக்கு பகவத் கீதை சிவ நெறிகளைவிட உயர்ந்தது கிடையாது) , பகவத் கீதையின் கீழ்கண்ட செய்யுள் எப்போதும் பெரிதும் சர்சை செய்யப்படுகிறது, குறிப்பாக பகவத் கீதையின் தத்துவங்கள் சார்ந்த பிற செய்யுள்களை அறிந்திடாத பகுத்தறிவாளர்களும், பிறமதத்தினரும் தெரிந்துவைத்திருக்கும் ஒரே செய்யுள்,
"சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம்" - பகவத் கீதை
இதன் பொருளாகக் கூறப்படுவது யாதெனில்,
நான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. ஒருவனின் குணத்திற்கும் கர்மத்திற்கும் செயலுக்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். மனிதர்கள் தம்மை செம்மைப்படுத்தி மேன்மை அடைய நாம் அவற்றை படைத்தோம், மனிதர்களின் செயல்கள் குணம் அமைப்பு படி அவர்களுக்கான வருணம் அவர்களுக்கு கிடைக்கிறது அவற்றை நான் படைத்திருப்பினும், நான் செயலற்றவன், அழிவற்றவன் என்று உணர்.
அண்மையில் இஸ்லாம் தொடர்புடைய சில நூல்களைப் படிக்கும் போது கீழ்கண்ட குரான் வசனம் ஒன்றையும் அதன் பொருளையும் படிக்க நேர்ந்தது
“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்“. (குர்ஆன் 49:13)
மேற்கண்ட குரான் வசனங்களில் இன அமைப்பைக் குறிப்பிடும் 'உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம்' என்பதற்கும், பகவத் கீதைக் குறிப்பிடும் 'நான்கு வருணமாக அமைத்தோம்' என்பதற்கும் பெரிய வேறுபாடு இருப்பது போல் தெரியவில்லை, ஏனெனில் இவை கூறப்பட்ட காலங்களில் இனங்களை ('உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம்') இருந்ததை குரான் சுட்டி இருப்பதும், 'நான்கு வருணங்கள்' இருந்ததை பகவத்கீதை சுட்டுவதாகவும் தான் கொள்ள முடிகிறது. நான்கு வருண அமைப்புகள் அரேபியாவில் இருந்திருந்தாலும், இன அடிப்படை அமைப்புகள் இந்தியாவில் இருந்திருந்தால் பகவத்கீதை மற்றும் குரான் வசனங்களில் இடம் பெரும் சொற்கள் அதற்கேற்றவாறு மாறி இருந்திருக்கும் என்பதைத் தவிர்த்து வேறெதும் வேறுபாடு இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனெனில் நடப்பில் இருந்ததைத்தான் இரண்டுமே சொல்கின்றன.
வருண அமைப்பிற்கும், இன அமைப்பிற்கும் பொறுப்பேற்கும் இரு வேதங்களில் ஒன்று மட்டுமே எப்போதும் தூற்றப்படுகிறது. இனக்குழுக்குள் வருணம் வேற்றுமை போற்றுகிறது என்றால், உலக அளவில் மனிதருக்குள் இனவேறுபாடுகள் அதைச் செய்கின்றன. இந்தத் தூற்றலை பகுத்தறிவாளர்களும் ஒருபக்கச் சார்பாக செய்துவருவது தான் வேடிக்கை.
என்னைக் கேட்டால், இவைகள் முறையே பகவத் கீதை காட்டும் வருணம், குரான் குறிப்பிடும் இனம் ஆகியவை உண்மை என்று ஒப்புக் கொள்ளும் போது, "வருணங்களைப் படைத்தோம் என்பதும், உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் (இனம்) அமைத்தோம்" என்கிற இரண்டுமே நிராகரிக்கக் கூடியதே, ஏனெனில் மனிதர்கள் பிரிந்து கிடப்பதே இது போன்ற பேதங்களினால் தான்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
61 கருத்துகள்:
மொழியும் பேதத்தை உறுவாக்கக் கூடியது தானே? உலக சமத்துவத்துக்கு எந்த மொழி உகந்தது என நிர்ணயிக்க முடியுமா?
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
//
VIKNESHWARAN said...
மொழியும் பேதத்தை உறுவாக்கக் கூடியது தானே? உலக சமத்துவத்துக்கு எந்த மொழி உகந்தது என நிர்ணயிக்க முடியுமா?
//
என் மொழி சிறந்தது என்று சொல்லும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை.. உன் மொழி தாழ்ந்தது என்று சொல்லும்போது தான் பிரச்சனை...
"என் மொழி தான் உயர்ந்தது. என் மொழி தெய்வ மொழி. உன் மொழி நீச மொழி" என்று சொல்லாத எல்லா மொழியும் உகந்ததே..
//VIKNESHWARAN
மொழியும் பேதத்தை உறுவாக்கக் கூடியது தானே? உலக சமத்துவத்துக்கு எந்த மொழி உகந்தது என நிர்ணயிக்க முடியுமா?
//
:)
மொழி இனக்குழுவுக்குள் பேசிக் கொள்ளும் ஒரு தொடர்பு சாதனம் மற்றும் இன அடையாளம். நீங்கள் மறுத்தாலூம் நீங்க தமிழர் தானே.
//உலக சமத்துவத்துக்கு எந்த மொழி உகந்தது என நிர்ணயிக்க முடியுமா?
//
சமத்துவத்திற்கும் மொழிக்கும் தொடர்பே இல்லை, ஆங்கிலம் தெரிந்தாலும் கருப்பர்களை வெள்ளையர்கள் அரவணைத்துக் கொள்வது குறைவுதான்
//ஸ்வாமி ஓம்கார் said...
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்//
:) நான் சொல்வதெல்லாம் உண்மை !
//"என் மொழி தான் உயர்ந்தது. என் மொழி தெய்வ மொழி. உன் மொழி நீச மொழி" என்று சொல்லாத எல்லா மொழியும் உகந்ததே..//
மறுக்காச் சொல்லேய்......!
:)
வர்ணாஸிரமம் இருக்கட்டும்,
மளையாளி தமிழனுக்கும், கர்நாடகாவாசி தமிழனுக்கும், மராட்டி பிற மாநிலத்தினருக்கும் ஒத்துபோகாமல் சண்டை போடுகிறார்களே... இந்த பிரிவினை எந்த மத நூலில் கூறப்பட்டது?
வர்ணம் ஆவது 4 பிரிவுதான்.. ஜாதி எத்தனை பிரிவுகள்? இதை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் கட்சிகள் எவ்வளவு?
அரசு வேலையிலும், சான்றிதழ்களிலும் ஜாதி கேட்கபடுகிறதே இது எந்த மதம் உருவாக்கியது? மத நூல்கள் தான் காரணம் என்றால் ஜாதியை பற்றி தெரிந்து கொள்ள கெஸட்டை பார்க்காமல் புனித நூலை பார்த்தால் போதுமே..?
இறைவனையும், மத நூலையும் விட்டுவிட்டு மனிதனின் அறியாமையை பற்றி எழுதுங்கள்...!
உலகில் நடக்கும் பிரிவினைவாதம் மனிதனின் அறியாமையின் சுவடுகளே. மதங்களும், நூல்களும் அவனை செம்மைபடுத்தவே இருக்கிறது.
அறியாமையில் இருப்பவனிடம் எப்படிபட்ட புனிதரும், புனிதமும் சிக்கினால் அதை அவன் சீரழிக்கவே செய்வான், சீர்படுத்தமாட்டான்.
//"என் மொழி தான் உயர்ந்தது. என் மொழி தெய்வ மொழி. உன் மொழி நீச மொழி" என்று சொல்லாத எல்லா மொழியும் உகந்ததே..//
மறுக்காச் சொல்லேய்......!//
மறுக்கா சொல்லும் போது, மொழிக்கு பதிலா மதத்தை போட்டு சொல்லேய்....
கோ, பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட வேண்டியது தானே. அதை ஏன் பற்றி படித்துக் கொண்டிருக்கவேண்டும்?
//ஸ்வாமி ஓம்கார் said...
வர்ணாஸிரமம் இருக்கட்டும்,//
வருணாஸிரமம் ஏன் இருக்கனும் ?
:)
//மளையாளி தமிழனுக்கும், கர்நாடகாவாசி தமிழனுக்கும், மராட்டி பிற மாநிலத்தினருக்கும் ஒத்துபோகாமல் சண்டை போடுகிறார்களே... இந்த பிரிவினை எந்த மத நூலில் கூறப்பட்டது?//
பக்கத்துவீட்டில் வேற்று சாதி, வேற்று மொழி பேசினால் கூட அடிக்கடி பிரச்சனை ஆகும். :)
'வேறுபாடுகளால்' அமைத்திருப்பதாக மத நூல்கள் தான் ஒப்புதல் கொடுக்கிறது. நானாக சொல்லவில்லை. நீங்கள் மத நூல்களை ஒப்புக் கொள்ளவில்லையா ?
:)
//வர்ணம் ஆவது 4 பிரிவுதான்.. ஜாதி எத்தனை பிரிவுகள்? இதை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் கட்சிகள் எவ்வளவு?//
ஊருக்கு நாலு சாலைகள் தான் போகுது, அது தான் அனுமதிக்கப்பட்டது, ஊருக்குள் வீட்டுக்கு வீடு வேலியையும் தெருக்களை யாரும் அமைக்கச் சொல்லவில்லைன்னு சொல்றிங்களா ? புரியல :)
//அரசு வேலையிலும், சான்றிதழ்களிலும் ஜாதி கேட்கபடுகிறதே இது எந்த மதம் உருவாக்கியது? மத நூல்கள் தான் காரணம் என்றால் ஜாதியை பற்றி தெரிந்து கொள்ள கெஸட்டை பார்க்காமல் புனித நூலை பார்த்தால் போதுமே..?////
அந்தக் காலம் போல் 'இவன் தாழ்ந்தன், சூத்திரன் என்று காட்ட நெற்றியில் சூடு இருக்காதே ஸ்வாமி, அதனால் தான் சான்றிதழ் தேவைப்படுது.
//இறைவனையும், மத நூலையும் விட்டுவிட்டு மனிதனின் அறியாமையை பற்றி எழுதுங்கள்...!//
அறியாமை அறிந்தே செய்வது இவை அனைத்தும் அந்த இரண்டின் பெயரால் தான் நடைபெறுகிறது
//உலகில் நடக்கும் பிரிவினைவாதம் மனிதனின் அறியாமையின் சுவடுகளே. மதங்களும், நூல்களும் அவனை செம்மைபடுத்தவே இருக்கிறது.//
இதை எத்தனை விழுக்காடினர் புரிந்து கொண்டுள்ளனர் ?
//அறியாமையில் இருப்பவனிடம் எப்படிபட்ட புனிதரும், புனிதமும் சிக்கினால் அதை அவன் சீரழிக்கவே செய்வான், சீர்படுத்தமாட்டான்.
11:11 AM, November 06, 2009
//
இதை புரிந்து கொள்ளவேண்டியவர் யார் ? கோவியா ?
இன்றுதான் உங்கள் பதிவுக்கே வர முடிந்தது,கண்ணன்.மகிழ்ச்சி.
வந்தவுடன் பூங்கொத்துக்களை நீட்டாமல் கருத்துக்களை,நீட்டுவது நாகரிகமல்ல!
என்றாலும் பதிவரின் கடமை தனக்கென்று ஒரு கருத்து வைத்திருப்பது!பதிவுலகின் பாஸ்போர்ட் அது.
அதனால் சொல்கிறேன்.
எல்லோருக்குள்ளும் நான்கு வர்ணங்களும் இருக்கின்றன என்பதே நான் புரிந்து கொண்டது.அவை குறிப்பிட்ட மனோ நிலைகள்.ஒரு குறிப்பிட்ட மனோ நிலை யாருக்கும் சாஸ்வதமல்ல,சாத்தியமுமல்ல.அதைப் பிறப்பால் சாத்தியமாக்கிக் கொண்ட கிரிமினல் உத்திகள் ‘நமது வர்ணங்கள்,கிருஷ்ண பரமாத்மாவினுடையதல்ல’
மனதின் நான்கு நிலைகளும் (வர்ணங்களும்) அழிந்து மனமற்ற தருணத்திலேயே தான் இருப்பதாகத்தான் கண்ணன் சொல்கிறான்,கண்ணன்.
//கோ, பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட வேண்டியது தானே. அதை ஏன் பற்றி படித்துக் கொண்டிருக்கவேண்டும்?
11:26 AM, November 06, 2009
//
பீர்,
இதை உங்களுக்காக, உங்களின் பொருட்டோ எழுதவில்லை, நான் உங்களிடம் மதவிவாதம் செய்ய விரும்பவில்லை என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நான் எதைப் படிக்க வேண்டும், எதை எழுதவேண்டுமென்றெல்லாம் உங்களிடம் கேட்கவேண்டும் என்று நாம் ஒப்பந்தம் எதையும் போடவில்லை என்றே நினைக்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி கோ.
விவாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத போது இதுவே மிகச்சிறந்த வழி.
//பீர் | Peer said...
மிக்க மகிழ்ச்சி கோ.
விவாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத போது இதுவே மிகச்சிறந்த வழி.
//
அது உங்கள் புரிதல், 'முடியாத' அல்ல 'விரும்பாத' என்று பொருளில் தான் சொன்னேன்.
////
அந்தக் காலம் போல் 'இவன் தாழ்ந்தன், சூத்திரன் என்று காட்ட நெற்றியில் சூடு இருக்காதே ஸ்வாமி, அதனால் தான் சான்றிதழ் தேவைப்படுது.
/////
அப்படியானால் சூடும், சான்றிதழ் இரண்டும் ஒன்றா? அதை வழங்குபவர் பெறுபவர் என்ற இரு பிரிவினை எப்பொழுதும் இருக்குமா?
/ ஷண்முகப்ரியன் said...
இன்றுதான் உங்கள் பதிவுக்கே வர முடிந்தது,கண்ணன்.மகிழ்ச்சி.
வந்தவுடன் பூங்கொத்துக்களை நீட்டாமல் கருத்துக்களை,நீட்டுவது நாகரிகமல்ல!
என்றாலும் பதிவரின் கடமை தனக்கென்று ஒரு கருத்து வைத்திருப்பது!பதிவுலகின் பாஸ்போர்ட் அது.//
வருகைக்கு மிக்க நன்றி ஐயா.
அதனால் சொல்கிறேன்.
எல்லோருக்குள்ளும் நான்கு வர்ணங்களும் இருக்கின்றன என்பதே நான் புரிந்து கொண்டது.அவை குறிப்பிட்ட மனோ நிலைகள்.ஒரு குறிப்பிட்ட மனோ நிலை யாருக்கும் சாஸ்வதமல்ல,சாத்தியமுமல்ல.அதைப் பிறப்பால் சாத்தியமாக்கிக் கொண்ட கிரிமினல் உத்திகள் ‘நமது வர்ணங்கள்,கிருஷ்ண பரமாத்மாவினுடையதல்ல’
மனதின் நான்கு நிலைகளும் (வர்ணங்களும்) அழிந்து மனமற்ற தருணத்திலேயே தான் இருப்பதாகத்தான் கண்ணன் சொல்கிறான்,கண்ணன்.
//
மத நூல்களை தூற்றவேண்டும் என்கிற நோக்கில் இந்த இடுகையை எழுதவில்லை. மதவாதிகள் செய்யும் மார்கெட்டிங்க் உத்திகளில் இருக்கும் ஓட்டைகள் 'பிறர்' கண்களுக்கு தெரிவது போல் அவர்களுக்கு தெரியவில்லையா ? என்பதே பதிவின் சாரம்.
//ஸ்வாமி ஓம்கார் said...
////
அந்தக் காலம் போல் 'இவன் தாழ்ந்தன், சூத்திரன் என்று காட்ட நெற்றியில் சூடு இருக்காதே ஸ்வாமி, அதனால் தான் சான்றிதழ் தேவைப்படுது.
/////
அப்படியானால் சூடும், சான்றிதழ் இரண்டும் ஒன்றா? அதை வழங்குபவர் பெறுபவர் என்ற இரு பிரிவினை எப்பொழுதும் இருக்குமா?
12:00 PM, November 06, 2009
//
எப்பொழுதுவரை இருக்கனும், இப்போது அவற்றை எடுத்துவிடும் நிலைக்கு எல்லோரும் சமமாக கல்வி பொருளாதார நிலைக்கு வந்துவிட்டார்கள் என்கிற புள்ளிவிவர அறிக்கை வைத்திருந்தால் அதை நீங்களும் பரிந்துரைக்கலாம்.
:)
ஷண்முகபிரியன் ஒரு நல்ல கருத்தை முன் வைத்திருக்கிறார்.
நான்கு வர்ணங்கள் என்பது நன்கு வித மன நிலைகள் என்கிற அவரது கருத்து ஏற்புடையதே. ஏனெனில், this attitude will pose you in a different color என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். அது என்ன நான்கு வித மன நிலைகள் என்று யோசித்தேன்.
Child Ego Status (Inferior)
Adult Ego Status (Assertive)
Parent Ego Status (Superior)
No thought status (Godly)
வர்ணம் என்பதை தப்பாக interpret செய்தது மனிதர்களின் aberation.
http://kgjawarlal.wordpress.com
வணக்கம் கோவி. உங்கள் கருத்து மிகச்சரி எனக் கருதுகிறேன்.
கோவி,
//வேதப்புத்தகங்களிலும், மதப்பற்றாளிடமும் அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கும் என்று நினைப்பது ஞாயமற்றது//
நல்ல மனசுதான் உங்களுக்கு.
ஆனால் சொல்பவர்கள் எல்லா கேள்விகளுக்கும் எங்களிடம் பதில் இருக்கிறது என்பார்களே, அதைப்பற்றி என்ன சொல்ல?
//உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்“//
Fear of god is beginning of Wisdom !!!!!!!!!!!!!! -- Bible
//மத நூல்களை தூற்றவேண்டும் என்கிற நோக்கில் இந்த இடுகையை எழுதவில்லை.//
தூற்றாவிட்டாலும் கேள்வி கேட்பது தவறொன்றுமில்லையே!!??
பீர்,
//மறுக்கா சொல்லும் போது, மொழிக்கு பதிலா மதத்தை போட்டு சொல்லேய்.... //
இதைத்தானே நீங்க சொல்றீங்க; இல்லையா?
//விவாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத போது இதுவே மிகச்சிறந்த வழி.//
நல்லா இருக்கே. ஆனா இது எல்லோருக்கும் பொதுதானே. விவாதத்தின் போதே கதவைச் சாத்தினாலும் அப்படித்தானே??
ஓம்கார்,
//மளையாளி தமிழனுக்கும், கர்நாடகாவாசி தமிழனுக்கும், மராட்டி பிற மாநிலத்தினருக்கும் ஒத்துபோகாமல் சண்டை போடுகிறார்களே.//
அப்பா - பிள்ளை, அண்ணன் - தம்பி-- இவர்களுக்குள்ளும்தான் சண்டை.இதெல்லாம் மனுஷ குணம்.
//மதங்களும், நூல்களும் அவனை செம்மைபடுத்தவே இருக்கிறது.//
ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதுவும் இருக்கிறது; அவ்வளவே!
கோவி,
உங்கள் இரு ஒப்பீடுகளும் நன்றாக உள்ளன.
//இதைத்தானே நீங்க சொல்றீங்க; இல்லையா?//
என் மதம் சிறந்தது என்று சொல்லும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை.. உன் மதம் தாழ்ந்தது என்று சொல்லும்போது தான் பிரச்சனை...
நான் எங்காவது மற்ற மதங்களை தாழ்த்தி சொல்லியிருக்கிறேனா என்று காட்டுங்கள்.
//விவாதத்தின் போதே கதவைச் சாத்தினாலும் அப்படித்தானே??//
விவாதம் சரியான திசையில் பயணிக்கிற வரை கதவு திறந்திருக்கும். விவாதம், வாய்சவடால்களாகும் போதோ,
விவாதிக்க விருப்பம் இல்லையென்றாலோ கதவை சாத்திவிடுவதுதான் நல்லது. அது பதிலளிக்க முடியாததாக இருந்தாலும் விருப்பமில்லாத்தாக இருந்தாலும்.
//அப்பா - பிள்ளை, அண்ணன் - தம்பி-- இவர்களுக்குள்ளும்தான் சண்டை.இதெல்லாம் மனுஷ குணம். //
இது எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்று புரிந்துகொண்டால் சரி.
மதமாவது, மண்ணாங்கட்டியாவது!
எல்லாமே ஏமாத்த வந்த வியாபாரம் தான்!
மதம் இல்லாம ஒருத்தன் ஒழுக்கமா இருக்க முடியாதா என்ன!?
என்னமோ சீரியசா பேசிக்குறீங்க!
எட்டி நின்னு வேடிக்கை பாத்துட்டு போறேன்!
//இவைகள் முறையே பகவத் கீதை காட்டும் வருணம், குரான் குறிப்பிடும் இனம் ஆகியவை உண்மை என்று ஒப்புக் கொள்ளும் போது, "வருணங்களைப் படைத்தோம் என்பதும், உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் (இனம்) அமைத்தோம்" என்கிற இரண்டுமே நிராகரிக்கக் கூடியதே, ஏனெனில் மனிதர்கள் பிரிந்து கிடப்பதே இது போன்ற பேதங்களினால் தான்.//
அப்படிதான் என்றே தோன்றுகின்றது
//வால்பையன்
மதமாவது, மண்ணாங்கட்டியாவது!
எல்லாமே ஏமாத்த வந்த வியாபாரம் தான்!
மதம் இல்லாம ஒருத்தன் ஒழுக்கமா இருக்க முடியாதா என்ன!?//
உன்னை விட நான் ஒழுக்கமானவன் என்று சொல்வதே பார்பனீயத்தின் வெளிப்பாடு தான். வெளியே சமத்துவம் பேசும் வால் பையனும் இதற்கு விதி விலக்கல்ல.
***
என்னமோ சீரியசா பேசிக்குறீங்க!
எட்டி நின்னு வேடிக்கை பாத்துட்டு போறேன்!
****
@ஜோதிபாரதி - same pinch :)- உங்க ட்விட்டர்லேந்து ஸ்பாம் மெஸேஜ் வருது !
சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியா விவாதத்துக்கு அதிகமக்கள் ரெடியா இருக்கறது இதுல தான் :)- அதுவும் சேம் suspects.
பீர்,
//என் மதம் சிறந்தது என்று சொல்லும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை..//
ஆரம்பிச்சிருச்சே அங்கேயே ...
//அது பதிலளிக்க முடியாததாக இருந்தாலும் விருப்பமில்லாத்தாக இருந்தாலும்.//
நல்லது.
kooviyaar avarkale thanakludaiya ezhuthai padithu purinthu kolla unmaiyil oru genius than thevai athil ul arthankal pothintha karuthukal than nandru thankalin ezhuthu pani sirakka'
கோவி, இதை வெளியிடுவது உங்கள் விருப்பம்...
//அரசு வேலையிலும், சான்றிதழ்களிலும் ஜாதி கேட்கபடுகிறதே இது எந்த மதம் உருவாக்கியது? மத நூல்கள் தான் காரணம் என்றால் ஜாதியை பற்றி தெரிந்து கொள்ள கெஸட்டை பார்க்காமல் புனித நூலை பார்த்தால் போதுமே..?//
என்ன பேசிகிறோம் என்று தெரியாமல் ஆன்மீக ஜல்லி போன்று எதையாவது பேச வேண்டாம் ஓம்கார்.
1.பல ஆயிரம் ஆண்டுகளாக வர்ணத்தால் பிரித்து அடிப்படைக்கல்விகூட கிடைக்காமல் கொடுமைக்குள்ளான சமூகங்களை மீட்டெடுக்கவேண்டும் என்றால் அவை எந்த அடையாளத்தால் அமிழ்த்தப்பட்டதோ அதே அடையாளத்தை வைத்துத்தான் தேடவேண்டும்.
2.இந்தக் காரணத்திற்காகவே சாதி கேட்கபப்டுகிறது.
3.தெரிந்து கொள்ளுங்கள் சாதி /மதத்தை அரசு ஆவணங்களில்/பள்ளிச் சான்றிதழ்களில் தெரியப்படுத்துவது ஒவ்வொரு தனிநபரின் சுயவிருப்பம். கட்டாயம் அல்ல.
சாதி உங்கள் சாய்ஸ !
http://kalvetu.blogspot.com/2007/09/blog-post.html
4.சாதிய பூணூலாலுல் மதத்தை நெற்றியின் பட்டையாலும் வெளிப்படுத்தும் மனிதர்கள் மத்தியில், கொடுமைக்குள்ளான சமூகங்களை மீட்டெடுக்க எந்த அடையாளத்தால் அமிழ்த்தப்பட்டதோ அதே அடையாளத்தை வைத்துதேட சாதி கேதப்படுவதும் அப்படி தேவைப்படுபவர்கள் சொல்லிப்பயன்பெறுவதும் தவறு அல்ல.
5.பூர்வகுடிகள் என்று அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் அவர்களுக்கான சலுககைகள் ஒதுக்கீடு உண்டு.
***
சாதியை ஒழிக்க உங்களைப்போன்றவர்கள் அதன் ஊர்றுக்கண்ணான வேதத்தை சாக்கடையில் போடும் விழாவை நடத்துங்கள் முதலில்.
**
கண்ணன் அண்ணா உங்களை நான் தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் .
வருக கருத்துக்களை தருக
கண்ணன் அண்ணா உங்களை நான் தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் .
வருக கருத்துக்களை தருக
3.தெரிந்து கொள்ளுங்கள் சாதி /மதத்தை அரசு ஆவணங்களில்/பள்ளிச் சான்றிதழ்களில் தெரியப்படுத்துவது ஒவ்வொரு தனிநபரின் சுயவிருப்பம். கட்டாயம் அல்ல. //
அப்படியா?
கட்டாயம் கிடையாதா?
இது அட்மிசன் போடும், டி.சி கொடுக்கும் எல்லாத் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியுமா?
நாம் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?
//அப்படியா?
கட்டாயம் கிடையாதா?
இது அட்மிசன் போடும், டி.சி கொடுக்கும் எல்லாத் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியுமா?
நாம் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? //
நிச்சயமாக,
கட்டாயம் என கேட்டால் கேஷ் போடுவேன்னு சொல்லி வச்சிருக்கேன்!
//அப்படியா?
கட்டாயம் கிடையாதா?
இது அட்மிசன் போடும், டி.சி கொடுக்கும் எல்லாத் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியுமா?
நாம் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?//
ஜோதி,
இது அனைவருக்கும் தெரியாது என்பது இணையத்தில் புழங்கும் பலருக்கு தெரியாது என்பதில் இருந்தே புரிந்துகொள்ளமுடியும்.
எனது பதிவையும் வழக்குறைஞர் பிரபு இராஜதுரையின் பதிவுகளையும் நீதி மன்றத் தீர்ப்ப்புகளையும் பாருங்கள்.
ஆம் கட்டாயம் கிடையாது.
சாதி உங்கள் சாய்ஸ !
http://kalvetu.blogspot.com/2007/09/blog-post.html
1.எனது குழந்தைகளைச் சேர்க்கும்போது மதம்/சாதிக்கு N/A (Not Applicable)என்று போட்டேன்.
2.சகபதிவர் வால்பையன் அவரின் குழந்தைகளுக்கு சாதி/மதம் போடவில்லை.
3.கமலஹாசன் என்ற திரப்பட நடிகரும் அவ்வாறு செய்ததாக பழைய பேட்டிகளில் படித்ததாக ஞாபகம்.
***
கூமுட்டைகளை எதிர்த்துப்போராடுவது சுலபமானது அல்ல ஜோதி.
டி.சி கொடுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கு வேப்பிலை அடிக்க வேண்டியது சாதி/மதத்தை துறந்த அனைவருக்கும் உள்ள கடமை.
ஜோதி,
முக்கியம்:
பல இடங்களில் நீங்கள் சொல்லாவிட்டாலும் குழந்தைகளின் பெயரில் இருந்தே மதத்தை அவர்களாகவே நிரப்பிக்கொள்வார்கள். தொடர்ந்து போராட வேண்டியது சாதி/மத அடையாளம் அற்றவர்களின் கடமை.
1.நான் இந்து பட்டை போட்டுக்காட்டுவதும்
2.நான் முஸ்லீம் என்று குல்லா போட்டுக் காட்டுவதும்
3.நான் கிறித்துவன் என்று சிலுவை செயின் போட்டுக்காட்டுவதும்
4.நான் ஐயர் / அய்யங்கார் என்று பூணூல் போட்டு காட்டுவதும் .....
..... எந்த சட்டமும் சொல்லிச் செய்யும் விசயங்கள் அல்ல.
அவர்களாகவே விரும்பி வெளிப்படுத்தும் சாதி/மத அடையாளங்கள். இவர்களிடம் சாதி/மத உரையாடல்களைத் தவிர்ப்பதே நல்லது.
**
கல்வெட்டு, ஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா / கிடையாதா ?
//மணிகண்டன்...
ஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா / கிடையாதா ?//
1. ஊனமுற்றவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுக்கும்போது நல்ல நிலையில் உள்ளவர்களும் வரிசையில் நிற்கக்கூடாது. இது குறைந்த பட்ச ஒழுங்கு.
2. சாதியின் பெயரால் தாழத்தப்பட்டவர்கள் அந்த அதே சாதியின் பெயரால் அரசாங்கம் கொடுக்கும் உரிமைகளை அதே சாதியைக் காட்டித்தான் வாங்கமுடியும். எனவே இடஒதுக்கீடு தேவையானவர்கள் மட்டும் அதனை அவர்களின் விருப்பத்தின் பேரில் பயன்படுத்தலாம்.
3. மதத்தை அரசு ஆவணங்களில்/பள்ளிச் சான்றிதழ்களில் தெரியப்படுத்துவது ஒவ்வொரு தனிநபரின் சுயவிருப்பம். கட்டாயம் அல்ல .சாதி குறிப்பிடப்படாத பட்சத்தில் சாதிவழி இடஒதுக்கீடு இருக்காது.
****
அழுத்தமாக சொல்வது....
சாதியின் பேரால் இடஒதுக்கீடு ச்ய்வதால் யாருக்கும் வெற்றிதானக வருவது இல்லை. பந்தயகளத்தில் நுழையும் ஒரு வாய்ப்பே அது.
நீ எழுதப் போகும் தேர்வைத் தானடா அவனும் எழுதப் போறான் புண்ணாக்கு
http://kalvetu.blogspot.com/2008/04/blog-post.html
***
*
இடஒதுக்கீடு என்பது ஏதோ இந்தியாவில் மட்டும் உள்ளது அல்ல.
பூர்வகுடிகள் என்று அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் அவர்களுக்கான சலுககைகள் /ஒதுக்கீடு உண்டு. மற்ற் நாடுகளிலும் வேறு பயரில் வேறு காரணங்களுக்காக இருக்கலாம்.
அனைவருக்கும் சம வாய்ப்பு தருவதற்காக / வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களை பெங்கெடுக்கச் செய்யும் அரசியல் அமைப்புச்சட்டங்கள் இவை.
*
கல்வெட்டு, அந்த கேள்வியானது விவாதத்திற்கு கேட்கப்பட்டது அல்ல. ஆவணங்களில் ஜாதியை குறிப்பிடாமல் இடஒதுக்கீடு பெற வேறு ஏதாவது வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை தெரிந்துக்கொள்வதற்காக கேட்கப்பட்டது.
தங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு வால் பையன், திரு கல்வெட்டு ஐயா,
சலுகை,உபகாரச் சம்பளம் என்று வரும் போது தாங்கள் குறிப்பிட்ட N/A எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். பின்னாளில் இட ஒதுக்கீடு போன்ற நிலைகளில் அந்த பையன் கல்வி அல்லது வேலைக்கு வரிசை பிடிக்கும் போது தனித்து விடப்படும் அபாயம் இல்லையா? அவனுக்கு சலுகைகள் கிடைக்குமா கிடைக்காதா?
//மணிகண்டன்
கல்வெட்டு, அந்த கேள்வியானது விவாதத்திற்கு கேட்கப்பட்டது அல்ல. ஆவணங்களில் ஜாதியை குறிப்பிடாமல் இடஒதுக்கீடு பெற வேறு ஏதாவது வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை தெரிந்துக்கொள்வதற்காக கேட்கப்பட்டது.//
நன்றி. புரிந்து கொண்டேன்
//
அத்திவெட்டி ஜோதிபாரதி..
தங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு வால் பையன், திரு கல்வெட்டு ஐயா,
//
அய்யா வேண்டாமே ஜோதி. கல்வெட்டு என்பதே போதுமானதாய் உள்ளது.
***
//சலுகை,உபகாரச் சம்பளம் என்று வரும் போது தாங்கள் குறிப்பிட்ட N/A எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். பின்னாளில் இட ஒதுக்கீடு போன்ற நிலைகளில் அந்த பையன் கல்வி அல்லது வேலைக்கு வரிசை பிடிக்கும் போது தனித்து விடப்படும் அபாயம் இல்லையா? அவனுக்கு சலுகைகள் கிடைக்குமா கிடைக்காதா?//
1. சாதியை /மதத்தை நீங்கள் விரும்பியே தவிர்க்கும் பட்சத்தில் அதன் அடிப்படையொல் வரும் எந்தவிதமான உரிமையையும் நீங்கள் பெறமுடியாது.
2. அடிப்படையான சாதி/மதம் ஆரம்பத்தில் இருந்தே தவிர்க்கப்பட்டுவிட்டதால் ஒன்றும் செய்ய இயலாது.
3.ஒருவேளை ஒருவர் அப்படிசெய்து , பின்னாளில் அவரின் குழந்தைகள் தங்களை ஒரு சாதி/மதத்தில் இணைத்துக் கொள்ளும் பட்சத்தில் என்ன நடக்கும் எனபது எனக்குத் தெரியவில்லை. சட்டச்சிக்கல் மற்றும் போராட்டமாய் இருக்கும்.
**
4. சாதியை/மதத்தைவிடும்போது அதனால் அடையும் நன்மை /தீமைகளையும் சேர்த்தே விடுகிறோம்.
5. சாதியின் வழி /மதத்தின் வழி உரிமைகள்/சலுகைகளால் மட்டுமே ஒருவன் போட்டிக் களத்தில் பங்கெடுக்க முடியும் என்னும் நிலையில் (மனதார நினைக்கும் பட்சத்தில்) அதைப் பயன்படுத்துவது அவர்களின் உரிமை.
அப்படி இல்லை என்றால் அது தேவையானவருக்கு கிடைக்கட்டும் மற்றவர்கள் விலகி இருக்கலாம்.
**
மேலும் சட்ட விளக்கங்களை பிரபு இராஜதுரை போன்றவர்கள் விளக்கலாம்.
****
A::: சாதி மதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கே இந்த உரிமமைகள்.
B:::சலுகைகிடைக்கிறதே என்று சாதி/மதத்தை விடாமல் பிடித்துக்கொண்டு இருப்பது சரியானதல்ல என்பது எனது புரிதல்
கல்வெட்டு,
கடந்த வருடம் பத்தாவது பொது தேர்வு எழுதிவர்களில் ஜாதியை ஆவணத்தில் குறிப்பிடாமல் எழுதிய ஹிந்து மதத்தினரின் எண்ணிக்கை எவ்வளவு ? மதத்தை குறிப்பிடாமல் எழுதியவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ? மதம் குறிப்பிடாமல் ஜாதியை மட்டும் ஆவணத்தில் குறிப்பிட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
மூணு வாரம் கழிச்சி பதில் வந்தா நம்ப ஊருல யாராவது இதை செய்யராங்களா / தெரிஞ்சி இருக்கான்னு தெரியும்.
I am going to post a RTI for this. Let me know if the questions are framed in the right way. Or am i missing any subtopics ?
மணிகண்டன்,
டாக்டர் புருனோ இட ஒதுக்கீடு விசயத்தில் பல புள்ளி விவரங்களை பல முறை தெரியப்படுத்தி உள்ளார். எதற்கும் அவருக்கு ஒரு மயில் தட்டிவிடுங்கள்.
**
முக்கியம்:
சலுகை உரிமைகளைத் தாண்டி சாதி/மதத்தை ஒரு மானக்கேடாக கருதும் சமுதாயத்தை உருவாக்கினால்தவிர இந்த வருண ஆசிரமங்கள் தொலையாது.
//கல்வெட்டு, ஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா / கிடையாதா ? //
இடஒதுக்கீட்டுக்காக எதை சொன்னாலும் செய்விங்களா மணிகண்டன்!?
//கல்வெட்டு, ஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா / கிடையாதா ? //
அதற்கு ஜீவா என்ற ஒரு சட்டம் இருப்பதாக கேள்வி பட்டேன், எனக்கு இம்மாதிரியான சலுகைகளில் விருப்பமில்லாததால் ஆழ்ந்து நோக்கவில்லை!
****
//கல்வெட்டு, ஜாதிமத பெயர்களை போடாதவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டா / கிடையாதா ? //
இடஒதுக்கீட்டுக்காக எதை சொன்னாலும் செய்விங்களா மணிகண்டன்!?
****
உங்க கிட்ட வந்து யாராவது பேரு என்னான்னு கேட்டா என்ன பதில் சொல்வீங்க ? இந்த மாதிரி தான் ஏதாவது கிறுக்குத்தனமா பதில் கேள்வி கேப்பீங்களா ?
***
சலுகை உரிமைகளைத் தாண்டி சாதி/மதத்தை ஒரு மானக்கேடாக கருதும் சமுதாயத்தை உருவாக்கினால்தவிர இந்த வருண ஆசிரமங்கள் தொலையாது.
***
@கல்வெட்டு
நான் அதுக்காக எல்லாம் RTI போடலை. நடப்பில் இருக்கும் ஒரு முக்கியமான சட்டம் / முறை மக்களுக்கு தெரிந்திருக்கான்னு பார்க்க தான் RTI.
//உங்க கிட்ட வந்து யாராவது பேரு என்னான்னு கேட்டா என்ன பதில் சொல்வீங்க ? இந்த மாதிரி தான் ஏதாவது கிறுக்குத்தனமா பதில் கேள்வி கேப்பீங்களா ?//
இரண்டாவது உங்களது விளக்கத்திற்கு முன்னால் கொடுத்த பதில் இது!
எனக்கு இந்த வேலை ஆகனும்னா அதுக்கு எவ்ளோ சார் லஞ்சம் கொடுக்கனும்ங்கிறது ஒரு வகை!
லஞ்சம் கொடுக்க மாட்டேன், ஆனா வேலையாகனும், நேர்மையா போகமுடியாது லேட்டாகும், அதனால வேற வழியுண்டா என்பது ஒருவகை!
நீங்கள் கேட்டது தகவல் அறியத்தான்,
நான் புரிந்து கொண்டது இம்மாதிரி!
/ஜெகதீசன் said...
//
VIKNESHWARAN said...
மொழியும் பேதத்தை உறுவாக்கக் கூடியது தானே? உலக சமத்துவத்துக்கு எந்த மொழி உகந்தது என நிர்ணயிக்க முடியுமா?
//
என் மொழி சிறந்தது என்று சொல்லும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை.. உன் மொழி தாழ்ந்தது என்று சொல்லும்போது தான் பிரச்சனை...
"என் மொழி தான் உயர்ந்தது. என் மொழி தெய்வ மொழி. உன் மொழி நீச மொழி" என்று சொல்லாத எல்லா மொழியும் உகந்ததே../
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்...!
மெளனமே எந்நாளும் சிறந்த மொழி
வாழ்த்துக்கள் கோவியாரே
அருமையான சிந்தனை கோவி.கண்ணன்.
சுட்டெரிக்கும் சூரியன், கடித்தால் மனிதனை கொள்ளும் விஷம் பாம்பு, இப்படி மனிதன் பார்த்து பயந்தவை கடவுளாகின.
பின் தன்னை மீறிய ஒரு சக்தியை கடவுளாக்கினான் மனிதன்.
தன் கடைமை ஒழுங்காக செய்தவன் தன் மன அமைதிக்காக கடவுளை நம்பினான்.
இவற்றில் அவரவர் வசிக்கும் பகுதியில் பேச்சு வழக்கில் இருந்தது மொழியாகியது.
அவரவர் வழிபாடு முறைகள் மதங்களாகின, இவை அனைத்தும் மனிதனாய் தன் சிறு புத்தியை கொண்டு அமைத்து கொண்டது.
எங்கும் எதிலும் எல்லோருக்கும் பொதுவாய் இருக்கும் கடவுளை இதில் சம்மந்த படுத்தியதும் மனிதனே.
இப்படி செய்வது எல்லாம் நமாகிவிட்டு பழியை கடவுள் மீது போடுபவனும் மனிதனே.
சுத்தமாக பெய்யும் மழையை போல சுவாசிக்கும் காற்றை போல களங்கமில்லாத கடவுள் அவரவர் நம்பிகையின் அடிப்படை.
இந்த உண்மையை புரிந்தவர்கள் தெரிந்தும் எதுவும் பேசாமல் மவுனமாய் காடுகளில் ஒளிந்து வாழ்கிறார்கள், ஏன் என்றால் இந்த கலிகாலத்தில் மனிதன் தானாக உணர்ந்தால் மட்டுமே உண்டு, யாரும் எப்படியும் சொல்லி அவர்களுக்கு புரியவைக்க முடியாது.
இதையே மவுனமே மிகப்பெரிய தண்டனை என்று சொன்னார் விவேகானந்தர்.
இதில் மேலும் விவாதிக்க என்ன இருக்கிறது.
For the first time I am looking at an equal and neutral view of both the religions. Mr. Kannan I have met you in Swami Omkar's blog.
I am not yet proficient in handling tamil in the net - please bear with me.
/ / அனைத்தையும் படைக்கும், இயக்கும் இறைவன், நடைபெறும் மதவெறிச் செயல்களுக்கும், இயற்கைச் சீற்றங்களுக்கும் காரணமா ? என்றால், அது மனிதர்களின் தவறான செயல் என்றும், இயற்கைச் சீற்றங்கள் பற்றிய மழுப்பலான பதில்களே வருவதுண்டு. இதற்கெல்லாம் ஏற்றுக் கொள்ளும் //
யார் சொன்னா? நல்லவைகளுக்கு இறைவன் பெறுப்பு என்றால் தீமைகளுக்கும் அவன் தான் பெறுப்பு. நானே ஊழி, நானே அழிப்பவனும், காப்பவனும் கண்ணன் (நீங்க அல்ல) சொல்லியுள்ளார். கடவுள் தான் காரணம். நல்லவர் இறப்பது அவர்தம் ஊழ்வினையால் கடவுள் செயல்தான்.
// மதப்பற்றாளிடமும் அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கும் என்று நினைப்பது ஞாயமற்றது //
இது நீங்க எத்தனை உண்மையான ஞானிகளைப் பார்த்துள்ளீர்கள் என்பதைப் பெறுத்து, மனிதனின் எந்த ஒரு நிகழ்வும், சந்தோகமும் ஆன்மீகம் களையும்.
// "வருணங்களைப் படைத்தோம் என்பதும், உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் (இனம்) அமைத்தோம்" என்கிற இரண்டுமே நிராகரிக்கக் கூடியதே, ஏனெனில் மனிதர்கள் பிரிந்து கிடப்பதே இது போன்ற பேதங்களினால் தான்.//
நல்ல கருத்துக்கள் ஏற்றுக் கொள்கின்றேன். மனிதர்களில் பிரிவும் பிளவும் தவிர்க்க வேண்டும். நன்றி.
//யார் சொன்னா? நல்லவைகளுக்கு இறைவன் பெறுப்பு என்றால் தீமைகளுக்கும் அவன் தான் பெறுப்பு. நானே ஊழி, நானே அழிப்பவனும், காப்பவனும் கண்ணன் (நீங்க அல்ல) சொல்லியுள்ளார். கடவுள் தான் காரணம். நல்லவர் இறப்பது அவர்தம் ஊழ்வினையால் கடவுள் செயல்தான்.
//
பித்தன் அண்ணே,
அப்படியா ..... அப்படி என்றால் சுனாமி சாவுகளை விட்டுவிடுவோம், மகாமகம் மிதிகளில் இறந்தவர்களையும் விட்டுவிடுவோம்....ஒன்றே ஒன்று கும்பகோணத்தில் சிறுவர் பள்ளியில் தீப்பிடித்து பிஞ்சுகள் கருகியதற்கு கடவுள் தான் காரணம் என்று துணிந்து எழுதுங்களேன். உங்களால் முடியாது.
நான் எல்லாவற்றிற்கும் அல்லது எதற்கும் கடவுளே காரணம் என்கிற அபத்தக் கருத்தை கொண்டிருக்க வில்லை. நீங்கள் கொண்டிருந்தால் அது உங்கள் சொந்த கருத்து.
:)
நல்ல பதிவு...உங்களை விட நான் இரண்டு ஆண்டுகள பின் தங்கி உள்ளேன் என நினைக்கின்றேன் :)
ரிக், யஜுர், சாம, அதர்வண இவைதான் வேதங்கள்.
வேதத்தின் சாரத்தை உபநிஷத்கள் தருகின்றன.
உபநிஷத்களின் சாரமாக பகவான் க்ருஷ்ணரின் திருக கமலத்திலிருந்து வந்தது பகவத் கீதை
கருத்துரையிடுக