பின்பற்றுபவர்கள்

4 நவம்பர், 2009

வேதங்களுக்கு முன்பான இயற்கை மற்றும் இயக்கம் !

மனிதன் உட்பட விலங்குகள் அனைத்தின் இனப்பெருக்க உறுப்புகளைவிட மிகவும் பாதுகாப்பான அமைப்பில் இருப்பது கடினமான ஓட்டினுள் அமைந்த மூளையும், மார்ப்புக் கூடுகளினுள் அமைந்த இதயமும் தான். அதே போன்று பிற உயிர்தோற்றதிற்கான விதைகள், முட்டைகள் பாதுகாப்பான மேலோடுகளோடு அமைந்திருகின்றன. திடீர்தாக்குதல், விபத்து, கடுமையான நோய் என்பதைத்தவிர்த்து இவ்வுறுப்புகள் நேரிடையாக நலிவுறாது. கருவளர்ச்சியுறும் போது முதல் நிலை செல்களில் இருந்து முதலில் தோற்றுவிக்கப்படுவது இதயம், பிறகு மூளை, இவ்விரண்டு உறுப்புகள் செயல்பாட்டில் தான் ஏனைய உறுப்புகளும் இயங்குகின்றன. உலக வியப்புகள் (பிரம்பிப்பு, அதிசயம், ஆச்சரியம்) என்று பட்டியல் இட்டிருப்பவைகளைப் பார்த்து மனிதர்கள் வியப்படைவதைவிட வியப்பானவை உயிரினங்கள் ஒவ்வொன்றின் உடல் அமைப்புகள் மற்றும் அவற்றின் இயக்கம்.

உயிரினங்கள் ஒவ்வொன்றின் தோற்றம்(Shape) மற்றும் அதன் செயல்பாடுகள்(Activities), இயக்கம் மற்றும் அதன் தொடர்சிக்காக இனப்பெருக்கச் சுழற்சி அமைப்புகளில் உள்ள நுண்ணறிவுடன் ஒப்பிடுகையில் கணிணி, செயற்கைக்கோள், செவ்வாய் ஆய்வு வரை நீண்டுவிட்ட நம் அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவும் மிகச் சாதாரணமானவை ஏனெனில் மிகவும் நுட்பமான மனித மூளையே கூட இயற்கையில் அமைந்த ஒன்று அதனை பயன்படுத்துவதைத் தான் மனிதர்களான நாம் செய்துவருகிறோம். அறிவியலாளார் ஐன்ஸ்டீன் கூட முழுமையாக மூளையின் செயல்பாடுகளைப் பயனபடுத்தியவர் அல்ல ஆனால் மூளையின் செயல்பாடுகளை மற்றவர்களைவிட மிகுதியாகப் பயன்படுத்தியவர் என்று (IQ படி) சொல்கிறார்கள்.

இப்படி பெரும் வியப்புக்குள்ளான பெருவெளி(பிரபஞ்சம்), வெளித்திரள்கள் (கேலக்ஸி) சூரியன், கோள்கள், உயிரினம், அவற்றின் இயக்கம் இவற்றை ஏற்படுத்தியது யார் என்ற மனித மனக் கேள்வியின் ஒற்றை விடையாக இறை நம்பிக்கையாளர்களின் ஒரே மற்றும் இறுதிக் கூற்றான 'இறைவனின் படைப்பு' என்று சொல்லப்படுவதும் கூட என்னைப் பொறுத்தளவில் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. அதே சமயத்தில் இவை பெருவெடிப்பு மற்று பரிணாம வளர்ச்சியின் கூறுகள் என்பதும் சரியானக் கூற்று என்பதை அறிவியல் இன்னும் எட்டவில்லை, அவை ஒரு கோட்பாடு, அறிவுக்கு மற்றும் சிந்திக்க ஏற்றவை என்ற அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறதே அன்றி முடிவாக பரிணாமம் தான் காரணம் என்பதாக அறிவியல் உலகம் எந்த வரையறையையும் செய்யவில்லையே, அதன் தொடர்பாக பெருவெடிப்பு பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் மட்டுமே இருக்கின்றன.

ஆறுநாளில் உலகம் படைக்கப்பட்டது, இரத்தக்கட்டியில் / களிமண்ணில் இருந்து மனிதனைப் படைத்தோம், பிரம்மா விழித்தான் உலகம் உண்டாகிற்று போன்ற மதங்கள் காட்டும் படைப்புக் கொள்கைகள் சூரியன் உலகைச் சுற்றிவந்ததாக நம்பப் பட்டக் காலத்தில் ஏற்கக் கூடிய ஒன்றாக இருந்திருக்கலாம், ஆனால் இன்றைக்கு இவை அந்த காலத்தில் மனித மனம் கண்டுபிடிக்க முடியாதவற்றிற்கான சொல்லப்பட்ட விடை என்பதைவிட அவை என்னாளும் அன்னாளும், அதற்கு முந்தேயும் மனித மனக் கேள்வியாக இருந்திருக்கின்றன என்பதையும் காட்டும் குறிப்புகள் என்பதாகத்தான் என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது.

மதங்கள் என்னதான் இறுதி, உறுதி என்று உயிரினங்களின் தோற்றம் குறித்த அனைத்தையும் 'படைப்பு' , 'இறைச்சித்தம்' என்று முடிவுரை எழுதி இருந்தாலும் அவற்றிற்கான விடைகள் இன்றும் தேடலாகத்தான் இருக்கிறது. மேலும் ஒவ்வொரு மதமும் அவற்றிற்கான விடையை தங்கள் சிந்தனைகளுக்கு ஏற்ப வரையறை செய்திருப்பதுடன் அவை ஒவ்வொன்றும் மாறுபட்டு இருப்பதால் மதங்கள் காட்டும் படைப்புக் கொள்கையில் யாதொரு உண்மையும் இருப்பது போலோ அல்லது பொதுவான ஒன்றாகவோ ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல என்றே நினைக்க முடிகிறது.

இயற்கையின் வியப்புகளை, அமைப்புகளை கடவுள் செயலாக நினைத்துப் பார்ப்பதில் இருக்கும் அபத்தம் போல் வேறெதும் அபத்தம் எதுவுமில்லை, ஏனெனில் இந்த அபத்தம் மூளையின் சிந்தனைத் திறனை மழுங்கடிக்கக் கூடியது அல்லது சிந்தனையைத் தடுப்பது ஆகும், மனித முயற்சியினால் ஆவது எதுவுமில்லை என்று மனிதன் நினைத்திருந்தால் இயற்கையை கட்டுப்படுத்துகிறோமோ அல்லது அதற்கு முயற்சிக்கிறோமா என்பதைவிட விமானப் பயணம் முதல் வின்வெளிப்பயணம் வரை இயற்கை அதன் தன்மையைப் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட இயற்கையின் மீதானப் பயணம் கூறு இல்லாத ஒன்றாக ஆகி இருக்கும். இது கடவுளால் அமைந்த ஒன்று என்று எந்த ஒரு பொருளையும் உறுதியாகக் காட்டமுடியாத போது ஒட்டுமொத்த பருப்பொருள்களையும் கடவுள் படைப்பாகப் பார்ப்பதில் நினைப்பதும் அபத்தம் தானே. இது கடவுள் செயல் என்று உணர்ச்சி வசப்படுவதாலோ அல்லது அல்ல என்று சொல்வதாலோ இயற்கையும் அதன் தன்மையும் செயல்பாடுகளும் ஒரு நாளும் மாறப் போவதுமில்லை.

வேதப்புத்தகங்களும், குறிபிட்ட சில முதிர்ந்த சாமியார்களும் உலகைப் பற்றிய முழு அறிவு(ஞானம்) அளிப்பதாகக் கூறுவதெல்லாம் எந்த ஒரு காலத்திலும் முழுமையான உண்மையாக இருந்திருந்தால் இன்றும் உலகம், இயற்கைப் பற்றிய அறிவுத் தேடல் என்பற்கான தேவைகளே இல்லாது போய் இருக்கும். எந்த ஒரு கடவுள், மத, அறிவியல் நம்பிக்கைகளும் முழுமையானதொரு பிரஞ்ச இயக்க அறிவைக் கொண்டு கொடுத்துவிடும் என்பது எப்போதும் நடந்ததே இல்லை. இந்த சாமியார், இந்த மதம், இந்த நம்பிக்கை முழுமையான ஒரு அறிவை, ஞானத்தைத் தருகிறது என்று எவரும் நம்பினால் அவை வெறும் நம்பிக்கை மட்டுமே.

இயற்கை என்னும் மாபெரும் பரவெளியையும் அடக்கிய இயக்கத் தொகுப்பு அல்லது பரவெளியுடன் இயங்கும் பேரறிவு அதன் சொந்தக்காரர், உரிமையாளர், படைப்பாளி என்பது போன்ற இறைக்கட்டுமானங்கள் அதன் மீது இல்லாத காலத்திலும் இயற்கை அதன் போக்கிலேயே தொடர்ந்து இயங்கி வந்து கொண்டுதான் இருக்கிறது என்கிற உண்மை வேதப்புத்தகங்கள் எதிலும் எழுதப்படவில்லை.

8 கருத்துகள்:

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

ஸ்ரீ அரவிந்த அன்னை இன்னும் கொஞ்சம் தெளிவாகவே,இப்படிச் சொல்லியிருக்கிறார்:

“Why do men cling to a religion?


Religions are based on creeds which are spiritual experiences brought down to a level where they become more easy to grasp, but at the cost of their integral purity and truth.

The time of religions is over.


We have entered the age of universal spirituality, of spiritual experience in its initial purity.”


-quoted from Words of The Mother, Part II First Edition 1989 pp.88

இந்த பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே இருக்கிறது என்ற கருத்தும் உண்டு இல்லையா? அது போலவே, வேதம், நம்பிக்கைகள் இதெல்லாம் ஒரு ஆரம்பப் புள்ளிகளாக எடுத்துக் கொண்டு பார்த்தால் முரண்பாடு தெரியாது.

நம்பிக்கைகள் வெறும் மூட நம்பிக்கைகளாகி விடுவது அவற்றின் குற்றம் அல்ல! நாம் தான் தேங்கி நின்றுவிட்டோம் என்பதைப் புரிந்து கொண்டு, முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்தால், எந்தக் குழப்பமும் இல்லை.

Self Realization சொன்னது…

sir you are correct...what an explanation about the nature...we are all a part of nature..but still we don't know who created the nature....It is only a procedure that nature follows....but we need to follow that procedure also...we can't change the design pattern/architecture of this nature...Based upon our research the unknown space with zero gravity(suniyam/nothing) is the truth....That means no god...we are the design pattern of nature...Every one atleast realize this now.Thank you for your writings...

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணமூர்த்தி said...
ஸ்ரீ அரவிந்த அன்னை இன்னும் கொஞ்சம் தெளிவாகவே,இப்படிச் சொல்லியிருக்கிறார்:

//

கிருஷ்ண மூர்த்தி ஐயா, அன்னையின் கூற்றுகளை எடுத்து எழுதியதற்கு நன்றி

//
நம்பிக்கைகள் வெறும் மூட நம்பிக்கைகளாகி விடுவது அவற்றின் குற்றம் அல்ல! நாம் தான் தேங்கி நின்றுவிட்டோம் என்பதைப் புரிந்து கொண்டு, முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்தால், எந்தக் குழப்பமும் இல்லை.//

நாம் தேங்கி நின்றதற்கு மதப்பற்றும் அதன் பழமை வாதக் கொள்கைகளின் மீதான பற்றும் தான் காரணம். தனிமனித மனத்தேடலின் தடைக்கற்காளாகத் தான் இக்காலத்தில் மதங்களை மதப்பற்றாளர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//Self Realization said...
sir you are correct...what an explanation about the nature...we are all a part of nature..but still we don't know who created the nature....It is only a procedure that nature follows....but we need to follow that procedure also...we can't change the design pattern/architecture of this nature...Based upon our research the unknown space with zero gravity(suniyam/nothing) is the truth....That means no god...we are the design pattern of nature...Every one atleast realize this now.Thank you for your writings...
//

இயற்கையை யார் உருவாக்கினார்கள் என்கிற கேள்விகள் அதன் மீதான வியப்பினால் ஏற்படுவது மட்டுமே என்பதே கட்டுரையின் சாரம். மற்றபடி இயற்கை இந்தக் கேள்விகள் இல்லாத காலத்திலும் இருந்தே வந்திருக்கிறது என்றே சொல்லி இருக்கிறேன். 1 + 5 = 6 என்பது கணக்கு, எண்ணியல் முறைகள் இல்லாத காலத்திலும் உண்மைதான்.

மற்றபடி கடவுள் நம்பிக்கை, இருக்கிறதா இல்லையா என்கிற நம்பிக்கை சார்ந்தவற்றிற்குள் நான் நுழைவது இல்லை.
:)

Unknown சொன்னது…

நண்பர் கோவி .கண்ணன் அவர்களுக்கு நான் தங்களுடன் நிறைய உரையாட விரும்புகிறேன் . காரணம் தங்களின் கருது கூற்று உண்மை இருப்பதுவும் ஒன்று , நீங்கள் சித்தர்கள் எப்படி வாழ்ந்தார்கள் . அவர்கள் கடுவுளை நம்பினார்களா என்று அறிய சித்தர்களின் வாழ்கை முறையை ஆராயுங்கள் உங்களுக்கு இப்பிறவியின் அர்த்தம் புரியும் ,கோரக்கரின் சந்திரரேகை என்ற புத்தகம் தங்களுக்கு கிடைத்தால் படியுங்கள் , கிடைக்க வில்லை என்றால் என்னை அழையுங்கள் தங்களுக்கு நான் அந்த புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன் பிரதி எடுத்து கொண்டோ அல்லது படித்து விட்டோ கொடுங்கள் . நன்றி .
"நாதன் உள்ள்ருகையிலே நட்ட கல்லும் பேசு மோட " சிவ வாக்கிய சித்தர் இது தங்களின் கூற்றுக்கு thanku 9944494045

கோவி.கண்ணன் சொன்னது…

//prabakar.l.n said...
நண்பர் கோவி .கண்ணன் அவர்களுக்கு நான் தங்களுடன் நிறைய உரையாட விரும்புகிறேன் . காரணம் தங்களின் கருது கூற்று உண்மை இருப்பதுவும் ஒன்று , நீங்கள் சித்தர்கள் எப்படி வாழ்ந்தார்கள் . அவர்கள் கடுவுளை நம்பினார்களா என்று அறிய சித்தர்களின் வாழ்கை முறையை ஆராயுங்கள் உங்களுக்கு இப்பிறவியின் அர்த்தம் புரியும் ,கோரக்கரின் சந்திரரேகை என்ற புத்தகம் தங்களுக்கு கிடைத்தால் படியுங்கள் , கிடைக்க வில்லை என்றால் என்னை அழையுங்கள் தங்களுக்கு நான் அந்த புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன் பிரதி எடுத்து கொண்டோ அல்லது படித்து விட்டோ கொடுங்கள் . நன்றி .
"நாதன் உள்ள்ருகையிலே நட்ட கல்லும் பேசு மோட " சிவ வாக்கிய சித்தர் இது தங்களின் கூற்றுக்கு thanku 9944494045

//

திரு பிரபாகர், கருத்துக்கு நன்றி, கோரக்கர் எங்க ஊருக்கு வெகு அருகில் வடக்கு பொய்கை நல்லூரில் கோவில் கொண்டுள்ளார், என்னுடைய அண்ணன் கட்டிட பொறியாளர், கோவில் வடிவமைத்து கட்டுவதையும் முன்னின்று நடத்தி கொடுத்தார். உங்களுக்கு கால அவகாசம் கிடைத்தால் நாகப்பட்டினம் சென்று கோரக்கரைக் கண்டுவாருங்கள்.

ஜோதிஜி சொன்னது…

விஞ்ஞானத்தை அத்தனை கூற்றையும் மெய்ஞானத்தை இணைத்து பழரசமாக கொடுத்த பதிவை எந்த தமிழன் தமிழ் மணத்தில் தவறு பாதையில் சொடுக்கிய நல்ல ஆத்மா?

உணராதவர் உள்வாங்கதவர். தாமதமாக உள்ளே வந்தவனுக்கு குற்ற உணர்ச்சி.

வாழ்த்துக்கள். நன்றி சிவா.

பித்தனின் வாக்கு சொன்னது…

இந்த கட்டுரைக்கு கருத்துக்களை ஒரு பின்னூட்டம் மூலம் சொல்ல முடியாது, நிறைய விவாதம் செய்ய வேண்டும். நன்றி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்