பின்பற்றுபவர்கள்

20 நவம்பர், 2009

பெரியார் விழுந்து வணங்கிய கால்கள் !

திராவிடக் கொள்கையில் ஒன்றாக சுயமரியாதை என்பது தனிமனித உரிமை, யாருடைய காலில் விழுவதும் தனிப்பட்ட மனிதனுக்கு இழுக்கு என்பதை கொள்கையாக வைத்திருந்த தந்தை பெரியார் அதை தன் தொண்டர்களுக்கும் வலியுறுத்தினார். அப்படிப்பட்ட சுயமரியாதைச் செம்மல் தனது வாழ்நாளின் இறுதி நாட்களில் ஒரு நிகழ்வில் இறைத்தொண்டர் ஒருவரின் காலில் விழுந்தார் என்று படித்த போது பெரும் வியப்பாக இருந்தது.

"தமிழகத்தைப் பொருத்த அளவில் நாத்திகம் என்பது கீழ்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும், ஆத்திகம் என்பது மேல்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும் மாறிவிட்டதை ஏற்றுக் கொள்ளவேண்டி இருக்கிறது"
-மகா சன்னிதானம் தெய்வசிகாமணி அடிகளார் (எ) குன்றக்குடி அடிகளார்

அதாவது ஆத்திகம் - ஆன்மிகம் என்பதே மேல் சாதி மக்களின் நலன் பேணுவதற்கு உருவாக்கப்பட்ட ஒன்று. இப்படிச் சொன்னவர் பெரியாராலும் பெரியார் தொண்டர்களாலும் கொண்டாப்பட்டார் என்று நினைக்கும் போது அது தவறே அல்ல. மேடைப் பேச்சுகளின் வழி ஒருவரை ஒருவர் பெரியாரும், அடிகளாரும் கடுமையாக விமர்சனம் செய்து சாடி வந்த வேளையில், ஒருமுறை பெரியாரும் அடிகளாரும் கலந்து கொண்ட ஒரு பொன்மாலை நிகழ்ச்சி நடந்தது, அந்நிகழ்ச்சியில் இருவரின் பேச்சும் இருவரையுமே கவர அன்று முதல் திராவிட கழக, அடிகளார் ஆன்மிக மேடை நிகழ்ச்சிகள் பல ஒன்றாக நடந்தன.

1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிகளார் மிகவும் தீவிரமாக ஆதரிக்கவே பெரியார் அடிகளார் முன்பைவிட பலமாக ஆதரித்தார். அறிஞர் அண்ணா தமிழக முதல்வரானதும், அடிகளாரை மேலவை உறுப்பினருக்கு பரிந்துரைக்க, பதவி ஏற்றதும் இந்தியாவிலேயே முதன் முறையாக மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மிகவாதி என்ற பெருமையை அடிகளாருக்கு ஏற்பட்டது.

1967ல், அண்ணா பதவி ஏற்றதும் திருச்சியில் பெரியார் பிறந்த நாளை ஒட்டி விழா நடைபெற்றது, அந்த நிகழ்ச்சியில் நாவலர் நெடுஞ்செழியன், குன்றக்குடி அடிகளார், திருச்சி திராவிடக் கழக தலைவர் செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த ஆண்டு பிறந்த நாள் செய்தியாக பெரியார் அறிவித்த செய்தியைக் கேட்டதும் அனைவரும் அதிர்ந்தனர், ஒரு சில குடும்ப பிரச்சனைகளை மறைமுகமாகக் குறிப்பிட்ட பெரியார், இறுதியாக "நான் துறவியாகிவிடலாமா என்று பார்க்கிறேன்"

அதை கேள்விபட்டபோது அண்ணா அப்போது அமெரிக்காவில் இருந்தார், அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையிலும் பெரியாருக்கும் ஆறுதல் கடிதம் எழுதினாராம். "அப்படி துறவு மேற்கொள்வதாக இருந்தால் குன்றக்குடி மடத்துக்கு வந்துவிடுங்கள்" என்றாராம் பிறந்த நாள் விழாவில் தலைமை ஏற்ற அடிகளார். 'அப்படி என்றால் பெரியார் குன்றக்குடி மடத்தின் தலைவராகட்டும், அடிகளார் திராவிடக் கழகத்தின் தலைவராகட்டும், அப்படி செய்தால் அது பெரியாருக்கு சிறந்த பிறந்த நாள் பரிசாக அமையும்' என்று கேட்டுக் கொண்டாராம் செல்வேந்திரன். அங்கிருந்தவர்களின் பல்வேறு உரையாடல்களைக் கேட்டுக் கொண்டு இருந்த பெரியார் எதுவும் பேசாமல் இருக்க, 'பெரியாரே இது பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பதால் நான் செல்வேந்திரனின் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறேன்' என்றாராம் அடிகளார்.

அனைவரும் கலகலப்பாக பேசிக் கொண்டு இறுதியாக பாராட்டு நடத்திய அடிகளார் பெரியாருக்கு பொன்னாடைப் போடுவதற்கு எழ, தன்னால் பிறர் துணை இன்றி எழவே முடியாத பெரியார் தானே முயன்று கால்கள் நடுநடுங்க எழுந்து நின்றதும், அடிகளார் பெரியாருக்கு பொன்னாடை போர்த்தி வணக்கம் தெரிவிக்க, பெரியார் கால்கள் நடுநடுங்க குனிய உணர்ந்து கொண்ட அடிகளார் சமாளித்து தடுக்க முயற்சிக்கும் முன் பெரியார் அடிகளாரின் காலை தொட்டு வணங்கிவிட்டார். இது அங்கு பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாம். அடிகளார் ஆன்மிகவாதி என்றாலும் அவர் பெரியாரைவிட வயதில் பாதி அளவுதான். பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை பெரியாரே மீறுவது அனைவரையும் மவுனத்தில் ஆழ்த்தியதாம்.

மறுநாள் பெரியார் இல்லத்தில் கூடிய தொண்டர்களும், திருச்சி செல்வேந்திரனும் தயங்கி தயங்கி நிற்க, பெரியார் நேற்றைய நிகழ்வு உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கும் என்றதும் "ஐயா நேற்று நீங்கள் செய்த காரியம் எங்களுக்கு பிடிக்கவில்லை, தூக்கமில்லாம் செய்துவிட்டது" என்றது எல்லோருக்குமே பிடிக்காமல் போய்விட்டதா ? என்று கேட்டு, 'என்னங்க செல்வேந்திரன், நீங்கள் புத்திசாலின்னு நெனெச்சேன்' என்று சொல்லிக் கொண்டே பேசத் தொடங்கினாராம் பெரியார்.

"சர்.சி.பி.இராமசாமி ஐய்யரை தெரியுமா உங்களுக்கு ? எருமை நாக்கை விரும்பி சாப்பிடுகிற பார்பனத் தலைவர்...உலகமெல்லாம் சுற்றி வந்து பெரிய பதவிகளில் இருந்தவர் அவர் போய் காஞ்சிபுரம் சங்கராச்சாரி காலில் விழுகிறாரே ஏன் ?... தான் மரியாதை செய்தால் தான், தன்னுடைய நிறுவனம் பெருமைபடனுமின்னு, அதைத்தான் நானும் செய்தேன், சூத்திர சாதி மடத்தை (அடிகளாரின் மடத்தை) நானும் பெருமைபடுத்த நானும் செஞ்சேன். எனக்கு என் மரியாதை முக்கியமில்லை, என் இனத்தின் மரியாதை தான் முக்கியம், பகுத்தறிவு மற்ற எல்லா எழவையும் அப்பறம் பாத்துக் கொள்ளலாம்" என்றார்

*****

தனது சாதிப் பெருமைக்காக எதைவேண்டுமானாலும் குறிப்பாக பிற சாதியை தாழ்த்தி பெருமை சேர்த்துக் கொள்ளும் பிற சாதித் தலைவர்களைவிட, தனது மக்களுக்காக தனது கொள்கையையையும், சுயமரியாதையும் இழக்க முடிவு செய்த பெரியாரைப் போல் இனி ஒரு பெரியாரைப் பார்க்க முடியாது.

பல்வேறு தரப்பினரால் ஓட்டு வாங்கி பிரதமர் ஆனாலும் சமயத்தலைவர்களின் காலில் விழுவது இன்றும் நடப்பில் இருக்கத்தான் செய்கிறது. (மட)சாமியார்கள் காலில் பெரிய பதவியில் இருப்பவர்கள் விழுவது ஏன் ? பெரியார் சரியாகச் சொல்லியே இருக்கிறார். காலில் விழுவது அரசியல்வாதிகளின் அவர் அவர் விருப்பம் என்றாலும் கிறித்துவர்களின், இஸ்லாமியர்களின் ஓட்டையும் இவர்கள் வாங்கி இருக்கிறார்கள், ஒரு அரசியல்வாதி ஒருசாமியார் காலில் விழுகின்றார் என்றால் அவரை ஆதரிக்கும் மக்களும் சாமியாரைப் பெருமையாக பார்ப்பார்கள் அல்லது அவர்களின் ஆதரவையும் சாமியாரின் காலடியில் வைப்பது போன்றது, விழட்டும் ஆனால், ஒரு பாதிரியின், இமாமின் கால்களில் அமைச்சர்கள், தலைவர்கள் விழுவது போல் தெரியவில்லை. யாரை மக்களுக்கு பெருமைபடுத்திக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் காலில் மட்டும் தான் விழுவார்கள். மதச் சார்பற்ற நாடு என்று நாம் மார்தட்டிக் கொண்டு தான் வருகிறோம், இதெல்லாம் போகப் போகத் தெரியுமா ?

*****

பெரியார் குன்றக்குடி அடிகளாரின் காலில் விழுந்த நிகழ்வைப் பற்றி தற்போதும் எப்போதும் திக தலைமை மற்றும் ஆதரவாளர்கள் வெளியே சொல்வது இல்லை, குறிப்பாக தமிழ் ஓவியா இது பற்றி எழுதியது போல் தெரியவில்லல. அதற்குக் காரணம் இவர்கள் பெரியாரை புனிதராக காட்ட முயற்சிப்பது தான். பெரியார் புனிதரும் அல்ல புத்தரும் அல்ல, நேர்மையான நல்லதொரு புரட்சிகரத் தலைவர், அவரை புனிதப்படுத்தினால் அவர் அந்நியப்பட்டுப்போவார். பெரியார் வாழ்க்கை மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் போன்ற திறந்த புத்தகம்.

இடுகை தகவல் : "இனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா ?" (பக்கம் 171 - 182)
நூல் ஆசிரியர் திருச்சி செல்வேந்திரன், நாம் தமிழர் பதிப்பகம். 17/1, தாச்சி அருணாச்சலம் தெரு, மயிலாப்பூர். சென்னை 4

42 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\பெரியார் புனிதரும் அல்ல புத்தரும் அல்ல, நேர்மையான நல்லதொரு புரட்சிகரத் தலைவர், அவரை புனிதப்படுத்தினால் அவர் அந்நியப்பட்டுப்போவார். பெரியார் வாழ்க்கை மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் போன்ற திறந்த புத்தகம்.\\

மிகச் சரியான பார்வை

நல்லதொரு நிகழ்வை பகிர்ந்தமைக்கு நன்றி கோவியாரே

நிகழ்காலத்தில்... சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வால்பையன் சொன்னது…

செமத்தியான விவாதம் இருக்கும் என நம்பி!

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

அறிந்த சம்பவம் தான்!
குன்றக்குடி ஆதீனத்திற்கு இன்னொரு முகமும் இருக்கிறது. பட்டிமன்றங்கள் வெட்டிமன்றங்களாகநடத்திக் கொண்டிருந்த காலத்தில், இன்னமும் எத்தனை நாளைக்குத்தான் கற்பில் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா என்றே பேசிக் கொண்டிருக்கப்போகிறோம்? சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றி விவாதம் நடத்துகிற களமாக ஆக்க வேண்டாமா என்று ஆரம்பம் செய்து வைத்தவர் அவர்! இதை நான் நேரடியாகவே பார்த்து, கேட்டு அரிந்திருக்கிர௪எந். என்னுடைய பதிவு ஒன்றில் கூட இது சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால், அவர் ஆரம்பிக்க நினைத்த நல்ல மாற்றம் நடைமுறைக்கு வரவில்லை. பெயரளவுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நிகழ்வுகள் இருந்தாலும், திண்டுக்கல் லியோனி மாதிரிக் கொணட்டி பேசுகிறவர்கள், பட்டி மன்றத்தை சினிமா ரசிகர் மன்றம் மாதிரியே ஆக்கிக் கெடுத்ததும் நடந்தது.

குன்றக்குடி முந்தைய ஆதீனம் பல வகைகளிலும் வித்தியாசமானவர் தான்!

Unknown சொன்னது…

"தமிழகத்தைப் பொருத்த அளவில் நாத்திகம் என்பது கீழ்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும், ஆத்திகம் என்பது மேல்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும் மாறிவிட்டதை ஏற்றுக் கொள்ளவேண்டி இருக்கிறது"

உண்மையான வரிகள்.

அருமையான தகவல்.

நன்றி

கல்வெட்டு சொன்னது…

கோவி,
பெரியார் அறக்கட்டளை அதுசார்ந்த சொத்துகள் இல்லை என்றால் வீரமணி அவர்களின் செயல்பாடு என்னவாகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

வீரமணியை அவரின் செயல்களை ஆதரிக்கும் தேவை இல்லை என்றால் தமிழ்ஒவியா வந்துருக்கமாட்டார். நோக்கம் சார்ந்த ஆதரிப்பு.

***
அதிரடி கலகக்காரர் பெரியார்.

அவரும் சில அதிரடிமுடிவுகளை சில நோக்கத்திற்காக எடுத்திருக்கலாம். ஆனால் அது சமூக நோக்கமாக இருக்கும். சொத்து காக்கும் நோக்கம் அல்ல.

***

காஞ்சி சாமியாருக்கு பக்தர்களாக இருப்பவர்களில் ஐயர் அய்யங்கார் சாதி மக்கள் அதிகம்.

மேல்மருத்தூர் சாமியாருக்கு பக்தர்களாக ஐயர் , அய்யங்கார் சாதி மக்கள் இருந்தாலும் காஞ்சி சாமியாருக்கு இருப்பது போல இல்லை என்பது நான் அறிந்த ஒன்று.

**

அந்த வகையில் ஒரு பார்ப்பனீய மேல்சாதி எதிர்ப்பாக தெய்வசிகாமணி (எ) குன்றக்குடி அடிகளாரின் காலில் விழுந்து அவரை மரியாதை செய்ததை, நான் பெரியாரின் கலகச்செயலாகவே பார்க்கிறேன்.

***

சாமியார்கள் பலவகை.

1. மதுரை ஆதீனம் (இன்று இருப்பவர்) ஒரு அரசியல் காமடி. ஒருமுறை துப்பாக்கி எடுப்பேன் என்று முழங்கியவர் என்று நினைக்கிறேன். பாதிரி ஜெகத்காஸ்பரும் இந்தவகை.

2.காஞ்சி காம கோடி பார்ப்பனீய சித்தாங்களின் ஆதரவளார். பெரியவரின் 'சூத்திர பாசை', இந்திராவை 'மாட்டுக் கொட்டைகையில் வைத்துப் பார்த்தது' ,'வேலைக்குப்போகும் பெண்கள் பற்றிய கருத்து' .....

3. சாய்பாபா இவர் ஒரு மேஜிக்காமடி. சாமியாரின் அருள் மேஜிக்,தங்கக்காசு என்று பாய்துவிட்டு மருத்துவமனை ,தண்ணீர் என்று புல்லிற்கும் பாய்வது ஒரு ஆறுதல்

4.சாருவிற்கு ஜீரோ டிகிரி நாவலை அமெரிக்காவில் விற்கும் வரத்தைக்கொடுத்த பரமகம்ச நித்யானந்தர் இளையதலைமுறை கார்ப்போரேட் சாமியார்.
http://charuonline.com/Sep2009/KadavulaiKanden.html
சாருவின் கொசுறு:
//நான் கேட்ட வரம் இதுதான்: ஸீரோ டிகிரி என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். அது ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. டெஹல்கா போன்ற முக்கியமான பத்திரிகைகளில் அது பற்றிய உற்சாகமான மதிப்புரைகள் வந்துள்ளன. ஆனால் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் அதை எடுத்துச் செல்ல ஆள் இல்லை.//

5. தமிழ் பதிவுலகில் ஆர்கானிக் சிடி ரீடர் கண்டுபிடிப்பது, ஜோசியம் பார்ப்பது என்று நவீன முறைகளில் அனைவரையும் வேதகாலத்திற்கு அழைத்துச் செல்லும் நமது ஓம்கார்.

இப்படி பலர்......இவர்கள் எல்லாம் சாமியார்கள்.

*******************************

ஆனால் தெய்வசிகாமணி (எ) குன்றக்குடி அடிகளார் அவர் வாழும் இடத்தில் ஒரு சமூகமாற்றத்தை நிகழ்த்திய சாதரண மனிதர். A rebel in saffron , என்று சொல்லலாம் அவரை.

ஓடி ஓடி பலருக்கு அருள்வாக்கும் வரமும் தராமல் தான் வழ்ந்த இடத்தில் இருக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர உழைத்தவர்.

மேலும் படிக்க....

http://beyouths.blogspot.com/search/label/kundrakudi%20adigalar

// பெரியார் விட்டுச் சென்ற அந்தப் பணிகளை நான் தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுத்துவேன்", என்று அடிகளார் பேசினார்.

.....


சுமார் 3000 மக்கள் வாழும் குன்றக்குடி கிராமம் வானம் பார்த்த பூமியாக,வறண்டு கிடந்தது.அங்கிருத்த நிலங்களில் கால் பகுதி கூட சரி வர விவசாயம் செய்யப்பட்டவில்லை.முக்கால் பங்கு நிலம் வீணே கிடந்தது........

அவர் 1976 அக்டோபர் 2 ஆம் தேதி(காந்தி ஜெயந்தி அன்று) அவ்வூர்ப் பெரியவர்களை அழைத்துப் பேசினார்.நாம் எல்லோரும் சேர்ந்து, நம் கிராம முன்னேற்றத்திற்கு முயற்சி செய்யலாம்.இந்த மண்ணில் கிடைக்கும் மூலப்பொருட்களையும்,விளைபொருட்களையும் பயன்படுத்தி,கூட்டுறவு முறையில் தொழில்கள் தொடங்கலாம் என அடிகளார் தெரிவித்தார்........

1977 காந்தி ஜெயந்தியன்று அதற்கான குன்றக்குடி திட்டக் குழு உருவானது.

பாலிதீன் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை, பனை ஓலை மற்றும் நார்களால் முறம், கூடை, விசிறி,பெட்டி,துடைப்பம் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை செய்யும் குடிசைத் தொழில்,முந்திரிக் கொட்டையிலிருந்து பருப்பைப் பிரித்து எடுக்கும் தொழிற்சாலை,அந்த பருப்பு நீக்கப் பட்ட தோட்டிலிருந்து பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை,பட்டுப் பூச்சி வளர்த்து,பட்டு நூல் எடுக்கும் திட்டம்
என பல திட்டங்களாக விரிவடைந்தது.

1980 ஆம் வருடத்தில் குன்றக்குடியில் இருந்த ஒரே ஒரு கந்து வட்டிக்கடைக்காரரையும் அங்கிருந்து வெளியேற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.வட்டிக் கடைக்காரர் வெளியேற மறுத்தார்.எனவே அவரிடம் இனிமேல் யாரும் கடன் வாங்கக் கூடாது என்ற திட்டம் இயற்றப் பட்டது.

எனவே கந்து வட்டிக்கடைக்காரர் தானாகவே அங்கிருந்து வெளியேறினார்.
//

சிங்கக்குட்டி சொன்னது…

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//இமாமின் கால்களில் அமைச்சர்கள், தலைவர்கள் விழுவது போல் தெரியவில்லை

//

எவரது காலிலும் விழ இஸ்லாமும் அனுமதிப்பதில்லை.இமாம்களும் அனுமதிப்பதில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//எம்.எம்.அப்துல்லா said...
//இமாமின் கால்களில் அமைச்சர்கள், தலைவர்கள் விழுவது போல் தெரியவில்லை

//

எவரது காலிலும் விழ இஸ்லாமும் அனுமதிப்பதில்லை.இமாம்களும் அனுமதிப்பதில்லை.
//

தம்பி அப்துல்லா,
தடலடியாக விழுபவர்கள் மதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறதா ? இல்லையா ? என்றெல்லாம் நினைக்க மாட்டார்கள், ஒரு இந்து (பிறமதத்தினர்) காலில் விழ அவர்களுடைய மதம் அனுமதிக்கிறதா என்று தெரிந்து கொண்டு செயல்படுத்த முடியாது.

*****

ஜெவின் காலில் விழுந்த இஸ்லாமிய பெரியவர் வாணியம்பாடி முன்னாள் எம்எல்ஏ ஆசிப் முகமது பற்றி தெரியுமா ? அந்த புகைப்படத்தை நான் செய்தித்தாளில் பார்த்திருக்கிறேன். இத்தனைக்கும் ஆசிப் ஜெவை விட வயதில் மூத்தவர்

***

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு அவர்களின் பண்டிகைகளில் இஸ்லாமியர்கள் வாழ்த்து தெரிவிப்பது கூட ஹாரம் என்று சொல்கிறார்கள், எத்தனை பேர் அதை பின்பற்றுகிறார்கள். :)

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//ஜெவின் காலில் விழுந்த இஸ்லாமிய பெரியவர் வாணியம்பாடி முன்னாள் எம்எல்ஏ ஆசிப் முகமது பற்றி தெரியுமா ? அந்த புகைப்படத்தை நான் செய்தித்தாளில் பார்த்திருக்கிறேன். இத்தனைக்கும் ஆசிப் ஜெவை விட வயதில் மூத்தவர்

//


ஆசிப் முகமது வாணியம்பாடி எம்.எல்.ஏ அல்ல. அவர் வெற்றி பெற்றது திருவல்லிக்கேணி தொகுதியில்.டான்சி நிலம் இவர் ஊரகவளர்ச்சி அமைச்சராக இருந்த நேரத்தில் ஜெ.வுக்கு அளிக்கப்பட்டது.அதனால் பின்னர் இவரும் விசாரணை வளையத்தில் சிக்கினார். சரி ஆசிப் மட்டுமா காலில் விழுந்தார்?? நாகூர்மீரான்,லியாக்கத் அலி என்று எத்தனையோ இஸ்லாமிய பெயர்தாங்கிகள் :))

***************

//இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு அவர்களின் பண்டிகைகளில் இஸ்லாமியர்கள் வாழ்த்து தெரிவிப்பது கூட ஹாரம் என்று சொல்கிறார்கள், எத்தனை பேர் அதை பின்பற்றுகிறார்கள். :)

//

நிச்சயம் இந்தத் தகவல் தவறு என்று என்னால் ஐயம்திரிபுர சொல்ல முடியும். குரானிலோ அல்லது ஹதீசுகளிலோ எங்கும் இப்படி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எந்த லூசு இப்படி உங்களிடம் சொன்னது என்று தெரியவில்லை.
ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது...கண்டிப்பாக நான் அதை மீறித்தான் தீருவேன்.

:)

*********************

கோவி.கண்ணன் சொன்னது…

//நிச்சயம் இந்தத் தகவல் தவறு என்று என்னால் ஐயம்திரிபுர சொல்ல முடியும். குரானிலோ அல்லது ஹதீசுகளிலோ எங்கும் இப்படி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எந்த லூசு இப்படி உங்களிடம் சொன்னது என்று தெரியவில்லை.
ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது...கண்டிப்பாக நான் அதை மீறித்தான் தீருவேன்.

:)

*********************//

அப்துல்லா,

நீங்கள் மீறுவது பற்றி எனக்கு கருத்துகள் இல்லை, ஆனால் நான் குறிப்பிட்டது இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களுக்கான வழிகாட்டுதல் ஆக்கப்பட்டுள்ளது, என்பதைப் பலர் சுட்டிக்காட்டுகிறார்கள்

http://www.islamiyadawa.com/qa/qa23.htm


23 கேள்வி : மாற்றுமத நண்பர்களுக்கு புது வருடம், கிருஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் மற்றும் பிறந்த நாளின் போது வாழ்த்து சொல்லலாமா? வாழ்த்து அட்டைகள் அனுப்பலாமா? (மன்சூர், யாகூ மெயில் மூலமாக)

மாற்று மதத்தவர்களுக்கு கிருஸ்துமஸ் போன்ற அவர்களது பெருநாட்களின் போது வாழ்த்துச் சொல்வது கூடாது என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் தமது தமது 'அஹ்காமு அஹ்லித்திம்மா' என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார். 'மாற்று மதத்தினரின் விசேஷ நிகழ்ச்சிகளின் போது அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது ஹராம் என்பது ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். வாழ்த்துச் சொல்லக் கூடியவர் 'குப்ர்' என்னும் இறைநிராகரிப்பு அளவுக்குச் செல்லாவிட்டாலும் அவர் ஹராமைச் செய்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை. சிலுவையை வணங்குவதற்காக ஒருவரை வாழ்த்துவது போன்றே இது. ஏன் அதைவிட பாவம் கூடியது என்று கூடச் சொல்லலாம். யார் ஓர் அடியானை அவன் செய்த பாவத்திற்காக அல்லது பித்அத்திற்காக அல்லது குப்ருக்காக வாழ்த்துகிறாரோ அவர் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளாகிறார்'

இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுவது போல் வாழ்த்துக் கூறுவது ஹராம் என்று சொல்லக் காரணம், வாழ்த்துபவர் வாழ்த்தப்படுபவரின் இஸ்லாத்திற்கு புறம்பான காரியங்களை அங்கீகரிக்கின்றார் என்பதனலாகும்.

வாழ்த்தப்படுபவர் நம்முடன் தொழில் புரியக்கூடியவராகவோ, கல்லூரித் தோழனாகவோ அல்லது பக்கத்து வீட்டுக்காரனாகவோ இருப்பினும் சரியே!

மாற்று மதத்தவர்கள் அவர்களுடைய பெருநாள் தினங்களில் நமக்கு வாழ்த்துச் சொன்னால் அவர்களுக்கு நாம் பதில் சொல்லவும் கூடாது. ஏனெனில் அது நமது பெருநாள் அல்ல. அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதுமில்லை.

அவ்வாறே அத்தினங்களில் அவர்களது அழைப்புகளுக்கு பதில் சொல்லவும் கூடாது.

மேலும் சில முஸ்லிம்கள் அத்தினங்களை தமது பெருநாள் போன்று கொண்டாடுகின்ற நிலையும் காணப்படுகிறது, அதுவும் ஹராமாகும்.

'எவர் பிறசமயத்தவர்களுக்கு ஒப்பாகிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது)

அஷ்ஷெய்க் முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். 'மாற்று மதத்தவர்களின் விசேஷ தினங்களில் அவர்களை வாழ்த்துவது அவர்களது வாழ்த்துக்குப் பதில் சொல்வது, அத்தினங்களில் அவர்களது அழைப்பை ஏற்று அவர்களது விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல் அல்லது அத்தினங்களை கொண்டாடுவது அனைத்தும் கூடாது. அவ்வாறு செய்பவர் பாவியாவார். இவற்றை ஒருவர் முகஸ்துதிக்காகவோ அன்பினாலோ அல்லது வெட்கத்தினாலோ செய்தாலும் அவர் பாவியாவார். ஏனெனில் அல்லாஹ்வுடைய தீனில் காம்ப்ரமைஸ் என்னும் (சமரசத்திற்கு) இடம் இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

vijayan சொன்னது…

Priyar nermaiyana manidhar thaan,but avarudaya sishyargal thaan(annadorai & co) onnaam number yogiyargal.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

அண்ணே நீங்கள் குடுத்துள்ள ஆதாரத்தில் குரானில் இருப்பதாகவோ ,நபிகள் உரைத்ததாகவோ எங்காவது இருக்கின்றதா?? அது அவர்கள் புரிந்துகொண்ட அல்லது சொல்ல விரும்பிய சொந்தக் கருத்து. நான் இஸ்லாத்தின் பேரில் ஒரு கருத்தைச் சொன்னால் அது குரான் சொன்னதாகுமா??

இஸ்லாத்திற்கு அத்தாரிட்டி குரானும்,எம் பெருமானாரும் மட்டுமே. இவர்களை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

அண்டை வீட்டாரின் மகிழ்ச்சியிலும்,துக்கத்திலும் தவறாது பங்கு கொள்ளுங்கள்

அண்டைவீட்டார் பசித்திருக்க நீங்கள் உண்ணுவது தவறு

மேலே உள்ளது நபிகளின் அறிவுரை.இதில் அண்டைவீட்டார்
என்றுதான் சொல்லி உள்ளார்களே தவிர, அண்டைவீட்டு இஸ்லாமியர் என்று நபிகள் சொல்லவில்லை. இன்றைய அரபுநாட்டில் முழுவதும் இஸ்லாமியர்கள் இருக்கலாம். நபிகள் இந்த அறிவுரை சொன்ன காலத்தில் அரபுநாட்டில் அண்டை அயலார்களாக கிருத்துவர்களும்,யூதர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Jawahar சொன்னது…

பணிவது உயர்வின் வெளிப்பாடு. எகிறுவது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு. இரண்டும் இல்லாதிருப்பது assertiveness. பணிந்ததற்கு விளக்கம் சொல்லாமல் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்!

http://kgjawarlal.wordpress.com

Unknown சொன்னது…

அண்ணே எம்.எம்.அப்துல்லா

http://dharumi.blogspot.com/2009/09/blog-post.html

இந்த பதிவுக்கு உங்க கருத்தை தெரிந்து கொள்ளளாமா?

நன்றி

நிகழ்காலத்தில்... சொன்னது…

குன்றக்குடி அடிகளாரைப்பற்றி கல்வெட்டு
இங்கே பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி..

கோவி.கண்ணன் சொன்னது…

//எம்.எம்.அப்துல்லா


அண்டை வீட்டாரின் மகிழ்ச்சியிலும்,துக்கத்திலும் தவறாது பங்கு கொள்ளுங்கள்

அண்டைவீட்டார் பசித்திருக்க நீங்கள் உண்ணுவது தவறு

மேலே உள்ளது நபிகளின் அறிவுரை.இதில் அண்டைவீட்டார்
என்றுதான் சொல்லி உள்ளார்களே தவிர, அண்டைவீட்டு இஸ்லாமியர் என்று நபிகள் சொல்லவில்லை. இன்றைய அரபுநாட்டில் முழுவதும் இஸ்லாமியர்கள் இருக்கலாம். நபிகள் இந்த அறிவுரை சொன்ன காலத்தில் அரபுநாட்டில் அண்டை அயலார்களாக கிருத்துவர்களும்,யூதர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
//

அப்துல்லா,
அண்டை வீட்டுக்காரர்கள் பற்றிய விளக்கம் நன்று. எனக்கும் இதில் குழப்பம் இருந்தது.
:)

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

// என் பக்கம் said...
அண்ணே எம்.எம்.அப்துல்லா

http://dharumi.blogspot.com/2009/09/blog-post.html

இந்த பதிவுக்கு உங்க கருத்தை தெரிந்து கொள்ளளாமா?

நன்றி

//


அன்பின் சகோதரர் என்பக்கம்,

என்னைப் பொறுத்த அளவில் அதிகம் பழக்கம் இல்லாதவர்களிடம் சென்று கருத்து மோதல் செய்வதோ, கருத்து விவாதம் செய்வதோ, கருத்துச் சண்டை போடுவதோ ஒருபோதும் செய்வதில்லை. இதை ஒரு கொள்கையாகவே வைத்து இருக்கின்றேன்.

திரு.கோவியார் என் அன்பு நண்பர். சிங்கைக்குச் சென்றபோது அவரைப் போய் நானும், சென்னைக்கு வந்தால் என் வீட்டிற்கு அவரும் வந்து நேரில் சந்தித்து உறவாடும் அளவிற்கு நண்பர்கள். என் கருத்தில் வேறுபாடு இருந்தாலும் கோவி என் நட்பை ஒருபோதும் உதற மாட்டார். இந்த நம்பிக்கை இருப்பதால்தான் நான் இங்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன். இதுவரை நான் பதில் சொல்லி உள்ளதும் இதுபோன்ற நண்பர்களின் தளங்களில் மட்டுமே.

திரு.தருமி அய்யாவைப் பொருத்தவரை எனக்கு நேரடிப் பழக்கம் இல்லை. அதனால் எந்த மறு பதிலும் என்னிடம் தாங்கள் எதிர்பார்க்க வேண்டாம்.

இன்னோரு விஷயம்.நான் ஆன்மீகவாதி...மதவாதி அல்ல. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்குப் புரியும் என்று நம்புகின்றேன்.

நான் இஸ்லாத்தில் சூஃபி முறையில் நம்பிக்கை கொண்டிருப்பதால் என்னையே இஸ்லாமியன் அல்ல என்றும் சிலர் கூறுகின்றனர் :))

Unknown சொன்னது…

நன்றி

திரு. எம்.எம்.அப்துல்லா

நன்றி

சிநேகிதன் அக்பர் சொன்னது…

தகவலுக்கு நன்றி.

கல்வெட்டின் தகவலுக்கும், அப்துல்லா அண்ணனின் தகவலுக்கும் நன்றி.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

திரு.கி.வீரமணி அவர்களும், முதல்வர் கருணாநிதி அவர்களும் குன்றகுடி அடிகளார் மீது அவர் வாழ்ந்த காலத்தில் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்கள்!

நீங்கள் பகிர்ந்த செய்தி எனக்கு புதியது.

எங்கள் உறவினர் இல்லத்திருமணங்களில் குன்றகுடி அடிகளார் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். ஒரு திருமணம் கி.வீரமணி தலைமையில், குன்றகுடி அடிகளார் நடத்தி வைப்பதாக அமைந்தது. இந்த நிகழ்வு அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இதுதான் காரணமோ?(அப்போது தாலி மட்டும் தான் கி.வீரமணி அவர்களுக்கு வேலி என்று நினைத்துக் கொண்டேன்????)

இருப்பினும் இது போன்ற புத்தகத்தில் எழுதப் படுபவைகள் அனைத்தும் உண்மை என்று நம்பி விட முடியாது.

கண்ணதாசன் முதல் க.இராசாரம் வரையிலான நாத்திகர்கள் மரிக்கும் காலத்தில் பக்தி பழங்களாக இருந்ததை யாரும் மறுக்கமுடியாது!

ஆ.ஞானசேகரன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/கண்ணதாசன் முதல் க.இராசாரம் வரையிலான நாத்திகர்கள் மரிக்கும் காலத்தில் பக்தி பழங்களாக இருந்ததை யாரும் மறுக்கமுடியாது!/

ஜோதிபாரதி, என்ன சொல்ல வருகிறீர்கள்?

என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்! ஒரு கருத்து அப்படியே கடைசிவரை மாறாமலேயே இருக்குமா?

அபிப்பிராயங்கள், நம்பிக்கைகள், பழக்கங்கள் எல்லாம் அனுபவத்தில் மட்டுமே வருவது. அனுபவம் வேறு மாதிரிச் சொல்லிக் கொடுக்கும்போது, அதற்கு முந்தைய நம்பிக்களைக், அல்லது பிடிமானங்கள் தகர்ந்தும் போகும்! மாற்றமும் நிகழும்!

Sanjai Gandhi சொன்னது…

..தம்பி அப்துல்லா,//

அட கொடுமையே.. அப்துல்லாவுக்கு என்ன வயசுன்னு தெரியுமா கோவிஜி? அவர் உங்களை விட4 வயசு பெரியவர். :)

அப்துல்லா மாம்ஸ் விளக்கங்கள் ரொம்ப நல்லா இருக்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi™ said...
..தம்பி அப்துல்லா,//

அட கொடுமையே.. அப்துல்லாவுக்கு என்ன வயசுன்னு தெரியுமா கோவிஜி? அவர் உங்களை விட4 வயசு பெரியவர். :)

அப்துல்லா மாம்ஸ் விளக்கங்கள் ரொம்ப நல்லா இருக்கு.

11:52 PM, November 22, 2009
//

ஆஹா எனக்கு 25+ கொடுத்து இளைஞர் அணியில் இடம் கொடுக்க காத்திருக்கும் சஞ்செய் வாழ்க !

G.Ragavan சொன்னது…

ஆன்மீகத்தில் அடிகளாரின் பணி சிறப்பானது. அவரைப் பாராட்டுவது பொருத்தம். அதைப் பெரியார் செய்திருப்பது அவரது பெயருக்குப் பொருத்தம். இருவரின் இறை நம்பிக்கைகள் வேறானாலும் ஊருக்கு நல்லது என்ற நம்பிக்கையில் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறார்கள் போல.

பித்தனின் வாக்கு சொன்னது…

சரி சரி என்ன சொல்ல வர்ரிங்க, அவர் கால்ல இவர் விழுந்த அது மரியாதை. இனத்தின் மாண்பு, மத்தவங்க கால்ல மத்தவங்க விழுந்தா அது சாதியம், ஏமாற்று அப்படின்னா. எனக்கு ஒன்னும் புரியல்லை, திராவிடக் கொள்கை மாதிரி. நன்றி.

பித்தனின் வாக்கு சொன்னது…

எனக்கு புரிந்து எல்லாம் ஒன்னுதான். யார் உடைத்தாலும் அது மண்பானை, பார்ப்பான் உடைத்தால் அது பொன் பானை. யார் காலில் யாரு வேணா உழுகலாம், புரளலாம் ஆனா பார்ப்பான் காலில் யார் விழுந்தாலும் அது அனாகரீகம் அப்படிதானா?.

என் கருத்து என்னவேன்றால் குன்றக்குடி அடிகளாரின் காலில் 100 முறை வேண்டுமானுலும் விழுவேன், ஆனால் இப்ப மறைந்த சந்திர ஸேகர சங்கராச்சாரியின் காலில் 1000 முறை வேண்டுமானலும் விழுவேன். இது அவர்கள் சாதி காரணம் அல்ல ஒழுக்கத்தின்,தவத்தின் காரணம். இப்ப இருக்க சங்கராச்சாரி காலில் விழுவதை வீட என் காலை வெட்டிக் கொள்வேன். நன்றி.

பித்தனின் வாக்கு சொன்னது…

// நாத்திகம் என்பது கீழ்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும், //
என்ன இழவுடா இது? அப்ப மதுரை வீரனுக்கு ஆடு வெட்டறது, கருப்பண்ண சாமிக்கு படையல் போடுறது, அய்யனாருக்குப் பூசை போடுவது எல்லாம் கீழ்சாதி நாத்திகமா சொல்லவே இல்லை. இது எப்ப இருந்து மாத்துனாங்க?. எதுக்கு போடண்ட் வாங்கி இருக்க வீரமணி கிட்டையும் அவன் பிள்ளையாண்டான் கிட்டையும் ஒரு வார்த்தை கேட்டுவிடு அம்ம்பி.

கோவி.கண்ணன் சொன்னது…

//என் கருத்து என்னவேன்றால் குன்றக்குடி அடிகளாரின் காலில் 100 முறை வேண்டுமானுலும் விழுவேன், ஆனால் இப்ப மறைந்த சந்திர ஸேகர சங்கராச்சாரியின் காலில் 1000 முறை வேண்டுமானலும் விழுவேன்//

ஒரு தாழ்த்தப்பட்ட சாமியார் காலில் 100 முறையும் அதுவே பார்பன சாமியார் என்றால் 1000 முறையும் விழுவேன் என்று சொல்லும் உங்கள் எண்ணிக்கை முறையிலான பார்பன பாசம் நெகிழவைக்கிறது. தொடர்ந்து விழுங்கள், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

// பித்தனின் வாக்கு said...
// நாத்திகம் என்பது கீழ்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும், //
என்ன இழவுடா இது? அப்ப மதுரை வீரனுக்கு ஆடு வெட்டறது, கருப்பண்ண சாமிக்கு படையல் போடுறது, அய்யனாருக்குப் பூசை போடுவது எல்லாம் கீழ்சாதி நாத்திகமா சொல்லவே இல்லை. இது எப்ப இருந்து மாத்துனாங்க?. எதுக்கு போடண்ட் வாங்கி இருக்க வீரமணி கிட்டையும் அவன் பிள்ளையாண்டான் கிட்டையும் ஒரு வார்த்தை கேட்டுவிடு அம்ம்பி.
//

அதை ஆடுவெட்ட தடை போட்ட சொறிநாய்களுக்கும், சாமி 'மாம்சம்' சாப்பிடாது என்று கூறும் மடையன்களுக்கும் சொல்லுங்க பித்தன்ஜி

பித்தனின் வாக்கு சொன்னது…

// உங்கள் எண்ணிக்கை முறையிலான பார்பன பாசம் நெகிழவைக்கிறது. தொடர்ந்து விழுங்கள், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை //
நான் பின்னூட்டத்திலேயே அது அவர்களின் தகுதி பொறுத்து என்று கூறிவிட்டேன், பின்னும் சாதி பார்ப்பது நான் அல்ல, நீங்கள் தான் என் சாதி பார்க்கின்றிர்கள்.
சந்திசேகர சுவாமிகள், மனிதர்கள் மீது அன்பும் பாசமும், கடவுள் ஒழுக்கமும் கொண்டு இருந்தார். அவருக்கு எதிர் காலத்தில் நடப்பதை கூறும் சக்தியை தம் தவ வலிமையால் பெற்று இருந்தார். ஆதலால் அவருக்கு 1000 முறையும்.
குன்றக்குடி ஒரு தத்துவ ஞானி, மற்றும் ஒரு நற்பணி சேவகர் ஆதலால் அவருக்கு 100 முறையும் சொன்னேன். நன்றி.

பித்தனின் வாக்கு சொன்னது…

அப்துல்லா அண்ணாவின் கருத்துக்கள் அனைத்தும் நன்று.
இதுபோல உன் அயலானையும் நேசி, எல்லாருடனும் சமாதான உண்டாகுவதாக என்று யேசு கிறிஸ்து கூட கூறியிருக்கின்றார்.
ஆனால் அவர்களின் நல்ல கருத்துக்களை எல்லாம் விட்டு விட்டு மத கருத்துக்களை மட்டும் கடைப் பிடிகின்றேம். நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...
அப்துல்லா அண்ணாவின் கருத்துக்கள் அனைத்தும் நன்று.
இதுபோல உன் அயலானையும் நேசி, எல்லாருடனும் சமாதான உண்டாகுவதாக என்று யேசு கிறிஸ்து கூட கூறியிருக்கின்றார்.
ஆனால் அவர்களின் நல்ல கருத்துக்களை எல்லாம் விட்டு விட்டு மத கருத்துக்களை மட்டும் கடைப் பிடிகின்றேம். நன்றி.//

குன்றக்குடி அடிகளாரின் தகுதியை ஒப்பீடு அளவில் எடை போடும் தகுதி உங்களுக்கு இருக்கிறது ஐயா !

Sanjai Gandhi சொன்னது…

//ஆடுவெட்ட தடை போட்ட சொறிநாய்களுக்கும், //
நல்லா இருக்கே. ஆடு வெட்ட தடை போட்டதுக்கு என்ன கருமாந்திரக் காரணம் வேணாலும் இருக்கட்டும். ஆனால், வரவேற்கத்தக்கது. உணவுக்காக உயிர்களைக் கொல்வது மடத்தனம். இதற்கு சொரிநாய் பட்டமா? பாவம் ஜெயலலிதா.

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi™ said...
//ஆடுவெட்ட தடை போட்ட சொறிநாய்களுக்கும், //
நல்லா இருக்கே. ஆடு வெட்ட தடை போட்டதுக்கு என்ன கருமாந்திரக் காரணம் வேணாலும் இருக்கட்டும். ஆனால், வரவேற்கத்தக்கது. உணவுக்காக உயிர்களைக் கொல்வது மடத்தனம். இதற்கு சொரிநாய் பட்டமா? பாவம் ஜெயலலிதா.
//

தம்பி சஞ்செய், வளர்ப்பு மகன் திருமணத்துக்கு எத்தனை ஆடுகள் பிரியாணி ஆனதுன்னு கேட்டு பாருங்க. அப்படியே தோல் தொழிற்சாலைகளை தடை பண்ண முடியுமான்னு கேட்டுப் பாருங்க. ஏழைகள் செய்தால் அது பாவம், அதிகாரவர்கம் செய்தால் அது தொழிலா ?

மணிகண்டன் சொன்னது…

கோவி - ஆடு வெட்டுதலை பற்றி வேறு சமயங்களில் வேறுவிதமாக பேசி இருக்கிறீர்கள். சோ, இங்கே நீங்கள் சொல்வது ஒரு பார்ப்பனீய எதிர்ப்பாக மட்டுமான கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...

கோவி - ஆடு வெட்டுதலை பற்றி வேறு சமயங்களில் வேறுவிதமாக பேசி இருக்கிறீர்கள். சோ, இங்கே நீங்கள் சொல்வது ஒரு பார்ப்பனீய எதிர்ப்பாக மட்டுமான கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது.

6:21 AM, November 24, 2009//

உயிர்கொலை கூடாது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் அதைச் சொல்பவன் தோல் பதனிடும் தொழிலை எதிர்பவனாக இருக்க வேண்டும். அதை நீங்களாக பார்பன கருத்தாக எடுத்துக் கொள்கிறீர்கள். நான் அதை ஜெ, இந்துத்துவ கருத்தாகத்தான் நினைக்கிறேன்.

Sanjai Gandhi சொன்னது…

/தம்பி சஞ்செய், வளர்ப்பு மகன் திருமணத்துக்கு எத்தனை ஆடுகள் பிரியாணி ஆனதுன்னு கேட்டு பாருங்க. அப்படியே தோல் தொழிற்சாலைகளை தடை பண்ண முடியுமான்னு கேட்டுப் பாருங்க. ஏழைகள் செய்தால் அது பாவம், அதிகாரவர்கம் செய்தால் அது தொழிலா ?//

ரெண்டுமே பாவம் தான் கோவியாரே. நீங்க அரசியல் கண்ணோட்டத்தோட மட்டுமே பர்க்கிறிங்க. நான் மனிதாபிமானத்தோட பார்க்கிறேன். இதனாலேயே அசைவ உணவுகளை தவிர்த்துவருகிறேன். தோல்களுக்காக என ஆடுகள் வெட்டப் படுகின்றனவா? உணவுக்காக வெட்டப் படும் ஆடுகளின் தோல்களைத்தான் தொழில் ரீதியாக பயன்படுத்துகிறார்கள் என நினைத்தேன்.

உயிர்பலியை முடிந்தவரை தவிர்க்கனும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ரெண்டுமே பாவம் தான் கோவியாரே. நீங்க அரசியல் கண்ணோட்டத்தோட மட்டுமே பர்க்கிறிங்க.//

அரசியல் கண்ணோட்டத்தில் பக்க சார்புகள் இருப்பதைத்தான் சுட்டினேன்.

//தோல்களுக்காக என ஆடுகள் வெட்டப் படுகின்றனவா? உணவுக்காக வெட்டப் படும் ஆடுகளின் தோல்களைத்தான் தொழில் ரீதியாக பயன்படுத்துகிறார்கள் என நினைத்தேன்.

உயிர்பலியை முடிந்தவரை தவிர்க்கனும்.//

கறிகளுக்காக வெட்டப்படாவிட்டால் தொல்களுக்காக வெட்டப்படும், அதுனால இது என்பது வெறும் நொண்டி சாக்கு தான் சஞ்செய்.

யானைகளை, விஷபாம்புகளை உணவுகளுக்காகக் கொல்வதாக நான் கேள்விப்பட்டது இல்லை.

முகவை மைந்தன் சொன்னது…

வால்பையன் ஏமாந்துருப்பாருன்னு நினைக்கிறேன் :-(

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்