பின்பற்றுபவர்கள்

29 அக்டோபர், 2009

யாதும் நாடே யாவரும் பாரீர் (Disney Land, Paris) - 6

ஆங்கில நாடுகள் (UK) தவிர்த்து ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலம் என்பது மதிக்கத்தக்க மொழிமட்டுமே, ஏற்றுக் கொண்ட மொழி என்று கூற முடியாது. உலகநாடுகளில் பலர் ஆங்கிலம் தெரிந்திருக்கிறார்கள் என்பதற்காக தகவல்கள், அறிவிப்புகள் ஆகியவற்றில் தேவையான போது மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்துவதை ஐரோப்பிய பயணத்தின் போது கண், செவியுற்றேன். செல்லும் இடம் எங்காவது ஆங்கில அறிவிப்பு வரும் போது 'தாய் மொழி'யைக் கேட்பது போன்று இருந்தது. காரணம் அதைத்தவிர அங்குள்ள வட்டாரமொழிகள் பற்றிய சிறிதேனும் அறிந்திருக்கவில்லை. 'பொது' மொழியை முன்னிலைப் படுத்தும் மொழி அரசியல்வாதிகள் இதைப் புரிந்து கொள்வது நல்லது. ஏனெனில் தேவையின்றி எந்த ஒரு மொழியும் திணிக்கப்பட்டால் அது பிரிதொருமொழியை அழுத்தும் அல்லது அழிக்கும் என்பதைத் தாண்டி பொதுப் பயனாக அமைவது கிடையாது.

இந்தியாவில் இந்தி ஆதிக்கம் வட்டார, மாநில மொழிகளை அழித்துவருகிறது என்பதே உண்மை. என்றோ ஒரு நாள் விடுமுறைக்காக, சுற்றிப்பார்க்க நான் ஐரோப்பா செல்வதற்கு அந்தநாடுகளில் உள்ள அனைவருக்கும் ஆங்கிலம் தெரிந்திருந்தால் நான் தொடர்புகளுக்கு கடினப்படமாட்டேன் என்று நினைப்பது அறிவீனம், என்னையோ, என்னைப் போன்று அங்கு செல்லும் மிகச் சிலரையோ கருத்தில் கொண்டு அங்குள்ளவர்கள் தேவையின்றி ஒரு மொழியை பொது மொழியாக ஏற்கவேண்டும் என்கிற சுயநல எதிர்பார்ப்புகள் தவறு, அது கூறுகள் அற்றது என்பது என்கருத்து. தெரிந்தோ தெரியாமலோ இந்தி பொதுமொழியானால் இந்தியர்களுக்கு 'நல்லது' என்று கருத்துக் கொண்டோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்களுக்காக உதவி செய்ய அந்தந்த நாட்டு அரசுகள் உதவி மையங்கள் அமைத்திருக்கிறது, எந்த ஒரு சுற்றுலா தளத்திலும் இதுவே நடைமுறை. அங்குள்ள கடைகளுக்கு பன்னாட்டு மக்கள்கள் சென்றுவருவதால் பழக்கத்தின் காரணமாக அவர்களுக்கு ஓரளவுக்கு ஆங்கிலம் பேசும் திறன் இருக்கிறது, அவை போதுமானதே. அதைத் தவிர்த்து நான் எதிர்படும் ஒருவரிடம் வழிகேட்க ஆங்கிலம் பயன்படுத்தினால், அவருக்கு அது புரியவில்லல என்றால், அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லையே இந்த நாட்டு மொழிக்கொள்கை சரி இல்லை என்று நினைத்தால் மொழிபற்றிய எனது அறிவு சுய நலம் சார்ந்த, சுறுங்கிய ஒன்று என்பதைத் தவிர்த்து அது பரந்த சிந்தனை அல்ல.

*****

21 /அக்/2009 புதன் கிழமை, பாரிஸ் பயணத்தின் இரண்டாம் நாள், ஈபிள் கோபுரத்திற்கு அடுத்து சுற்றிப்பார்க்க நினைத்த இடம் டிஸ்னி லேண்ட். உலகில் ஒருசில நாடுகளில் டிஸ்னி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட பொழுது போக்கு பூங்காக்களில் ஐரோப்பாவில் பாரிசிலும் ஒன்று இருக்கிறது, பாரிஸ் நகரத்தில் இருந்து 40 மைல் தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது. அன்று லேசான மழை பெய்து கொண்டிருந்தது. இலண்டனில் இருந்து மகள் ஆசைப்படி ஏற்கனவே ஒரு குடை எடுத்து வந்திருந்தோம், அதையும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

பாரிஸ் நகரிலிருந்து RER எனப்படும் மற்றொரு புறநகர் இருப்புப்பாதை தொடர்வண்டி வழித்தடங்களின் வழியாக அந்த இடத்திற்கு நேரடியாகச் செல்ல முடியும் என்பதை தங்கிய விடுதியின் வரவேற்பாளர்களிடம் கேட்டுக் கொண்டோம். முதல் நாளும் கடுமையான அசதியின் காரணமாக காலை 9 மணிக்கு மேல் தான் எழ முடிந்தது, விடுதியில் இருந்த ஐரோப்பிய காலை உணவுகளாக ரொட்டி(ப்ரெட்), கலவை பழச் சாந்து (ஜாம்), பழச் சாறுகள் கிடைத்தன. நகர தொடர் வண்டியில் சென்று chatelet என்ற நிலையத்திற்கு சென்று,



அங்கிருந்து RER தடத்தில் சிவப்பு நிற வழித்தட தொடர்வண்டியை எடுத்து marne-laa-vallee நோக்கி செல்லும் தொடர் வண்டியில் ஏறினால் டிஸ்னிலேண்ட் அருகில் நிற்கும்.

அதுவே அந்த வழித்தடத்தில் இறுதி நிலையமாகும். திரும்புவதற்கும் சேர்த்தக் கட்டணமாக மூவருக்கும் 10 Euro பெற்றுக் கொண்டார்கள்.

டிஸ்னி பொழுது போக்கு பூங்காவிற்கு பெரியவர்களுக்கு நுழைவு கட்டணம் நபருக்கு 52 Euro, சிறுவர்களுக்கு நபருக்கு 45 Euro வாக டிஸ்னி லேண்ட் மற்றும் டிஸ்னி ஸ்டுடியோ ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் சேர்த்து பெற்றுக் கொண்டார்கள். பூங்கா வழிகாட்டி வரைபடங்களைக் கொடுத்தார்கள். உள்ளே சென்றதும் அழகாக வடிவமைக்கப்பட்ட கட்டிடம் இருந்தது,

அதைத் தாண்டி இருபக்கமும் டிஸ்னி தனிப்பட்ட தயாரிப்புகள் விற்கப்படும் கடைகள் இருந்தன,

இந்த மாத இறுதியில் ஹாலோவின் திருவிழா வருவதை ஒட்டி அது தொடர்பான கொண்டாட்ட பரங்கிப் பழ அலங்காரங்கள் அங்கங்கே இருந்தன. பல ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மிகப் பெரிய பூங்க, சுழன்று தலைகீழகாக சுழலும் வண்டி (ரோலர் கோஸ்டர்) சவாரிகளில் பலவிதங்களில் பல இடங்களில் அமைக்கப் பட்டு இருந்தன. மையப்பகுதியில் அலாவுதீன் மாளிகையும் அதன் இடது பக்கம் அகழி போன்ற அமைப்பின் நடுவில் எரிமலைப் போன்ற உயரமான செயற்கை மலைகள் அமைக்கப்பட்டு அதனைச் சுற்றிலும் சுழலும் வண்டி ஓடியது, அதைச் சுற்றி இருந்த் ஆழமான தண்ணீரில் மிகப் பெரிய சுற்றுலா படகு பார்வையாளர்களை ஏற்றிக் கொண்டு சுற்றிவந்தது. இரண்டிலும் ஏறி சுற்றி வந்தோம்.





அங்கெல்லாம் சென்று வரவே மாலை மணி 3க்கும் மேல் ஆகியது, அங்கங்கே வரிசையில் நிற்கவேண்டும், கூட்டம் மிகுதியாக ஈர்க்கும் ஒரு சில விளையாட்டுகளில் முன்கூட்டிய பதிவு வசதி இருக்கிறது, அதில் பதிந்துவிட்டால் அதில் உள்ள நேரத்தில் அதாவது சுமார் 1 - 2 மணி நேரம் கழித்து ஒரு நேரம் ஒதுக்கும், அப்போது அங்கிருந்தால் போதும், வரிசையில் நிற்பதை தவிர்த்துக் கொள்ளலாம்.

பூங்காவின் நடுவே அமைந்த அலாவுதீன் மாளிகையின் கீழ் தளத்தில் அசையும் ட்ராகன் ஒன்றை வடிவமைத்து காட்சிக்கு வைத்திருந்தார்கள். மேல் தளத்தில் கடைகள் இருந்தன. அந்த மாளிகையின் பின் பகுதியின் சற்று தொலைவில் ஆப்ரிக்கர்களின் பாரம்பரிய இசை முழக்கம் அவ்வ்போது நடை பெற்றுக் கொண்டிருந்தது.



அதன் வலது பக்கம் பெரிய செயற்கை மரம் மேலே ஏறிச் செல்ல படிக்கட்டுகளுடன் இருந்தது. அதன் அருகிலேயே செயற்கைக் குகை. அதைத் தொடர்ந்து செயற்கையான ஆறு, அதில் உடைந்த படகு போன்ற அமைப்பும், அதற்கு அடுத்து கடற்கொள்ளைகள் பற்றிய காட்சிகள் இருந்தன, அந்த காட்சிகளுக்கு உள்ளே தொடர் படகின் வழியாக சென்று பார்க்கும் வசதிகள் இருந்தன.

அலாவுதீன் மாளிகையின் வலப்பக்கம், கோப்பைகளில் அமர்ந்து சுற்றிவரும் ராட்டின விளையாட்டுகள்,

குதிரை,யானை,கடல்குதிரை,பல்லக்கு ஆகியவற்றுடன் மேலே கிழே இறங்கி சுழலும் ராட்டினம், ஆகியவையும். பக்கதில் அமைக்கப்பட்ட லிட்டில் வேர்ல்ட் எனும் பெரிய கூடத்தில் தொடர் படகு வழியாக அழைத்துச் சென்று அங்கு பன்னாட்டு பண்பாடுகளை சிறுவர் பொம்மைகளின் ஆடல்பாடல்களுடன் காட்சியாக வைத்திருந்தார்கள்.






(அசைபடம் : யுட்யூப்)
அடுத்த பகுதியில் வின்வெளிப் பயணம் (ஸ்பேஸ் ரைடு) என்னும் ஒரு விளையாட்டுக் கூடம் இருந்தது, மிக விரைவாக செல்லும் ஏற்றம், மேலே சென்றதும் கும்மிருட்டு அறைக்குள், ரோலர் கோஸ்டர் போலவே தலைகீழகாக மேலும் கீழுமாக சுழன்று சுழன்று வந்தது.


அதையெல்லாம் முடித்து வருவதற்குள் மாலை மணி 6 ஐ நெருங்கியது. பூங்காவின் நடுப்பகுதிக்கு வந்தோம்.

ஹோலோவின் அலங்கார வண்டியும், வேசமிட்டவர்களின் ஆடல்பாடல்களுடன் அதிரும் இசையுடன் அந்தப் பகுதியில் ஊர்வலமாகச் சென்றார்கள்.


ஏற்கனவே மாலை 7 மணிக்கு அடுத்த பகுதியின் டிஸ்னி ஸ்டுடியோ மூடிவிடும் என்று சொல்லி இருந்தார்கள். டிஸ்னி பூங்காவை முழுவதும் பார்க்க முடியவில்லை, இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கிறது, அதற்குள் அங்கு என்னதான் இருக்கிறது என்று அங்கும் சென்றும். மொத்தம் 7 ஸ்டுடியோ, முதல் ஸ்டுடியோவிற்கு மட்டுமே செல்ல முடிந்தது. அங்கு கார்டூன் அசைபடங்கள் எவ்வாறு அந்தகாலத்திலும் இந்த காலத்திலும் எடுக்கிறார்கள் என்பதை காட்சிக்கு வைத்திருந்தார்கள்.



கூடவே டிஸ்னி படங்க்களில் வரும் அனைத்து உருவங்களையும் வைத்து ஒரு குறும்படக் காட்சியை ஓடவிட்டார்கள். அதற்குமேல் அங்கு பார்க்கப் பிடிக்கவில்லை. மற்ற ஸ்டுடியோக்களையும் பார்க்க நேரமில்லை. மீண்டும் டிஸ்னி லேண்ட் சென்று அதை சுற்றிவரும் உள் ரயில் வண்டியில் ஏறி ஒருமுறை சுற்றிப்பார்த்துவிட்டு திரும்பிவிட்டோம். அனைவருமே பூங்கா மூடும் நேரம் ஆகையால் திரும்பினர்.

நாங்களும் விடுதிக்கு வந்து சேர இரவு 9 மணி ஆகியது.

டிஸ்னிலேண்ட் 'ஒன்ஸ்மோர் போலாமா டாடி'ன்னு கேட்கும் அளவுக்கெல்லாம் கவரவில்லை. ஒரு முறை பார்க்கலாம். நுழைவுக் கட்டணம் அதற்கு செலவிடும் நேரமும் மிகுதி, உடல் அசதி இவையெல்லாம் சென்று வந்த பிறகே உணரப்படும் என்பதால்.....மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றாது.

இரண்டு நாளே பாரிஸில் இருப்பதற்கு முடிவு செய்திருந்த படியால், அடுத்து நாள் விடுதி நடைமுறை படி 11 மணிக்கு வெளியேற வேண்டும் .....மதியம் 3 மணிக்கு ஏர் ப்ரான்ஸில் ஜூரிக் செல்ல வேண்டி இருந்தது, காலையில் கிடைக்கும் மூன்று மணி நேரத்திற்குள் வேறு என்ன பார்க்க நேரம் இருக்கும் ? இருந்தாலும் கொஞ்சம் முயற்சி செய்து இரு இடங்களுக்கு சென்று வந்தோம்.

13 கருத்துகள்:

சுந்தரா சொன்னது…

அழகான படங்களுடன் தெளிவான பயணக் கட்டுரை...

நன்றி கோவி கண்ணன் அவர்களே.

NO சொன்னது…

அன்பான நண்பர் திரு கோவி கண்ணன்,

கருத்து குத்தாட்டங்கள் கொஞ்ச நேரம் கண்மூடினவோ
சுற்றுலா சொல்வதில் தங்களின் மனம் சிக்குண்டதோ

தூக்கமில்லா தங்களின் விழிகள் தயக்கமில்லாமல் திரையிட்டன
தரம் என நம்பி தாமாஷாகிப்போன தங்களின் திரட்டிகளை - அது அந்த காலம்

கருத்துகள் காய்ந்து கடிக்க ஏதுமில்லாமல்
கடல் கடந்த போன கதைகளை கண்டபடி நீங்கள் கொட்டுவது - அது இந்தக்காலம்

கோவிக்கே கதைகள் பஞ்சமோ
இனி உளறல்கள் யாரிடம் தஞ்சமோ
என்று இந்த உலகம் இனி அஞ்சுமோ

பதிவுலகின் மூத்த கதைமகனே, பீலாவின் பிதாமகனே
புருடாக்க்களை பூட்டமுடியாது, பதிவுலகின் தங்களின் நிகர் ஒருவரை காட்டமுடியாது

வாருங்கள் வாந்திஎடுங்கள் , சுற்றுலாவை சற்று சுற்றிவிட்டு தங்களின் சகட்டுமேனி சரக்குகளை!

எதிர்ப்பார்ப்புடன்

நன்றி

நோ

Note:

Moral of the Story - Mediocre's dont get appreciated for their innovation. They are just expected to do what they do the best - Mediocrity!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//No said...

கருத்துகள் காய்ந்து கடிக்க ஏதுமில்லாமல்
கடல் கடந்த போன கதைகளை கண்டபடி நீங்கள் கொட்டுவது - அது இந்தக்காலம்//

தரம் தாழ்ந்த உங்கள் விமர்சனங்களை வெறும் கருத்து சுதந்திரம் என்பதற்காக மட்டுமே மதிக்கிறேன். நான் என்றுமே கடை விரித்திருக்கிறேன்.....வாருங்கள் என்று கூவியது இல்லை. என் எழுத்தின் தரம் தெரிந்த தாங்கள் மீண்டும் மீண்டும் எதை அறிந்து கொள்ள இங்கு வருகிறீர்கள் என்று தெரியவில்லை. எதற்கும் மருத்துவரிடம் சென்று உங்களின் செயல்களை விளக்கி எதேனும் பரிகாரம் தேடிக் கொள்வது நல்லது

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல கட்டுரை, அங்கன போய்க்கூட திருந்த மாட்டிங்களா? அங்க போய்க்கூட மொழிப்பிரச்சனை பற்றி நடுவில எதுக்கு?. எந்த மொழி ஆனாலும் விருப்பப்பட்டால் பயில்லாம். திணிவு என்பது இனி யாராலும் முடியாது. மக்கள் ஜனனாயகத்தில் ரொம்ப கொட்டுப் போயிட்டாங்க. ஆதல்லால் இனி மொழித்திணிப்பு என்பது சாத்தியம் அல்ல. அதுபோல மக்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களை அடுக்கு மொழியால் இனி ஏமாத்தவும் முடியாது. கவலையை விட்டு கட்டுரை எழுதுங்கள்.நல்ல படங்கள், நல்ல காட்சிகள். பயணித்தற்க்கும் எங்களை பயணிக்க வைப்பதற்கும் நன்றி.

NO சொன்னது…

அன்பான நண்பர் திரு கோவி கண்ணன்,

கடைசியில் கோபம் கொண்டார் நண்பர் கோவியார்
இதுவரை மிக பொறுமை காத்த இவர் ஒரு ஏறக்குறைய கிருபானந்த வாரியார்

யோகிகள் ஆத்திரப்பட்டால் விடுவார்கள் கடும் சாபம்
நண்பர் கோவியாருக்கு இப்பொழுது வந்திருப்பதோ பெரும் கோபம்

நண்பரே, பல கணிப்புகள் தவறாகுமோ என்று நினைத்தேன், but slowly turning out to be
correct, in the sense the amount of self importance and ego trips bordering on narcism that is slowly consuming typical bloggers like you.

Thanks for that and my case rests!

நன்றி

யோகிகள்

sivaguru சொன்னது…

Marne la Vallee

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

தெளிவான பயணக் கட்டுரை...

கோவி.கண்ணன் சொன்னது…

//சுந்தரா said...
அழகான படங்களுடன் தெளிவான பயணக் கட்டுரை...

நன்றி கோவி கண்ணன் அவர்களே.
//

பாராட்டுக்கு நன்றி நண்பரே !

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...
நல்ல கட்டுரை, அங்கன போய்க்கூட திருந்த மாட்டிங்களா? அங்க போய்க்கூட மொழிப்பிரச்சனை பற்றி நடுவில எதுக்கு?. எந்த மொழி ஆனாலும் விருப்பப்பட்டால் பயில்லாம். திணிவு என்பது இனி யாராலும் முடியாது. மக்கள் ஜனனாயகத்தில் ரொம்ப கொட்டுப் போயிட்டாங்க. ஆதல்லால் இனி மொழித்திணிப்பு என்பது சாத்தியம் அல்ல. அதுபோல மக்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களை அடுக்கு மொழியால் இனி ஏமாத்தவும் முடியாது. கவலையை விட்டு கட்டுரை எழுதுங்கள்.நல்ல படங்கள், நல்ல காட்சிகள். பயணித்தற்க்கும் எங்களை பயணிக்க வைப்பதற்கும் நன்றி.
//

நன்றிங்கோ !

கோவி.கண்ணன் சொன்னது…

//No said...
அன்பான நண்பர் திரு கோவி கண்ணன்,

கடைசியில் கோபம் கொண்டார் நண்பர் கோவியார்
இதுவரை மிக பொறுமை காத்த இவர் ஒரு ஏறக்குறைய கிருபானந்த வாரியார்

யோகிகள் ஆத்திரப்பட்டால் விடுவார்கள் கடும் சாபம்
நண்பர் கோவியாருக்கு இப்பொழுது வந்திருப்பதோ பெரும் கோபம்//

No ங்கிறதுக்கு பதிலாக Nondu ன்னு புனைப்பெயர் வைத்திருக்கலாம் மிஸ்டர் No. பாவம் 10 நாள் நான் எதுவும் எழுதாதால் உங்களுக்குத்தான் தீணி இல்லாது போய் இருக்கும்.

//நண்பரே, பல கணிப்புகள் தவறாகுமோ என்று நினைத்தேன், but slowly turning out to be
correct, in the sense the amount of self importance and ego trips bordering on narcism that is slowly consuming typical bloggers like you.

Thanks for that and my case rests!

நன்றி

யோகிகள்
//

நன்றிங்கோ, உங்க இங்கிலிபீஸு உளறல் எனக்கு புரியாதுங்கோ !

கோவி.கண்ணன் சொன்னது…

//stev said...
Marne la Vallee
//

அங்கிட்டா இருங்கிங்க ! அவ்வ் தெரியாமல் போச்சே.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.Radhakrishnan said...
தெளிவான பயணக் கட்டுரை...
//

மிக்க நன்றி ஐயா. தங்கள் பயணத்திற்கும் வாழ்த்துகள்

cheena (சீனா) சொன்னது…

பாரீஸில் கடைசி நாள் - பயணக்களைப்பு - இருப்பினும் பார்க்க வேண்டிய இடங்க்ளைப் பார்த்து முடித்த கோவியின் பயனத் திட்டம் பாராட்டத் தக்கது.

நல்வாழ்த்துக்ள் கோவி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்