பின்பற்றுபவர்கள்

14 அக்டோபர், 2009

கருத்து, பொருள் வாதங்கள் !

பொதுவாக ஆத்திகம் நாத்திகம் என்கிற சொற்கள் இறை ஏற்பு மறுப்பு எனும் இரு கொள்கைகள் பற்றிய சுறுக்கமான இன்றைய புரிதல்கள்களாக இருக்கின்றன. ஆத்திகம் நாத்திகம் என்பதற்கான இந்து சமய விளக்கம் (மனுதர்ம விளக்கம்) என்பது நான்கு வேதங்களை ஏற்றுக் கொள்கிறவன் ஆத்திகன் அதை மறுப்பவன், தவிர்பவன் நாத்திகன், அதைத்தான் அஸ்தி நஸ்தி என்ற வடசொற்களின் சுருக்கத்தின் விளக்கமாக ஆத்திகம் நாத்திகம் என்று சொல்லாக மாறி இருக்கிறது. பிறமதங்களின் இறை மறுப்புகளும் கூட இப்படிப் பட்ட அவரவர் வேத சார்பில் இறை ஏற்பு மறுப்புகள் குறிக்கப்படுகின்றன, உதாரணத்திற்கு முகமது நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களை காஃபிர்கள் என்றும் ஏற்றுக் கொள்பவர்களை மும்மின்கள் என்றும் சொல்கிறார்கள், இஸ்லாமியர்களின் 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற கருத்து அனைத்து மதங்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு பொதுவான கருத்து என்பதால் ஒருவர் காஃபிரா மும்மீனா என்பதை அவர் முகமது நபியை (இறுதி) தூதராக ஏற்கிறாரா இல்லையா என்பதைப் பொருத்துதான் ஒருவர் அப்படியாக நினைக்கப்படுகிறார். இதுபோன்றே திரித்துவத்தை ஏற்றுக் கொள்பவர்கல் கிறித்துவர்கள் (இறை நம்பிக்கையாளர்கள்) ஏற்காதவர்கள் இறை மறுப்பாளராகக் கருத்தப்படுகிறார்கள். ஆக இறை ஏற்பு மறுப்பு என்பது இறை பற்றிய ஒன்றல்ல மதச் சார்புள்ள ஒரு கருத்தை ஏற்கிறாரா இல்லையா என்பதைப் பொருத்தே. இப்படிப் பார்த்தால் எந்த ஒரு நம்பிக்கையாளரும் இறைமறுப்பாளர்களே என்பதை புரிந்து கொள்ளலாம். வேண்டுமானால் மதம் என்பதை பொதுவில் சாடும் பொழுது அவர்களெல்லாம் வேறு வழியில்லாமல் கூடிக் கொண்டு அங்கு 'இறை நம்பிக்கை' பொதுவானது என்றுக் கூறிக் கொண்டு தாம் 'இறை மறுப்பாளர்கள் அல்ல' என்று சொல்ல வருவார்கள்.

இறை நம்பிக்கைக் குறித்தக் கொள்கைகள் அனைத்துமே பொதுவானது தான். படைப்பு, காத்தல், அழித்தல் என்கிற பொது சித்தாந்தம் அனைத்து இறை நம்பிக்கைகளுக்குமே உண்டு. இதன் படி உலகில், பரவெளியில் (பிரபஞ்சம்) இருப்பது அனைத்துமே படைக்கப்பட்டது என்பதே இறை நம்பிக்கையாளர்களின் கொள்கைகள், இதனை அனைத்து வேத புத்தகங்களும் வலியுறுத்துகின்றன. அதாவது என்றோ ஒருநாள் இல்லாத இருந்தவை இறைசித்த்தால் ஏற்பட்டு நம் கண்ணுக்கும் கருத்துக்கும் தெரிவதாக எண்ணுவது நம்புவதே இறை நம்பிக்கையாகும். மூலப் பொருள் இல்லாது ஒன்றைப் படைக்க முடியாது என்கிற அறிவியல் (பெளதீக) விதிகளுக்கு மாற்றாக இவை என்றோ ஒரு நாள் கடவுள் சித்தத்தால் "தோன்றியவை" அல்லது "படைக்கபட்டவை" என்பதே "கருத்து" முதல்வாதமாகும் (Idealism). இந்த நம்பிக்கைக் கொண்டோர்கள் அனைவருமே கருத்து முதல்வாதிகள் என்பது உலக சிந்தாந்ததங்களில் கொடுக்கப்பட்ட பொதுப் பெயர் ஆகும். கருத்து முதல் வாதப்படி கோழியில் இருந்து முட்டையா முட்டையில் இருந்து கோழியா என்பதற்கான விடை என்றுமே கிடையாது. அதற்கான விடை "கோழிகள்" (சேவல் மற்றும் பெட்டை) இறைவனால் படைக்கப்பட்டது என்பதே ஆகும்.

மூலப் பொருள் இன்றி இன்னொரு பொருள் தோன்றி இருக்க முடியாது என்று சொல்வதே "பொருள் முதல்வாதம்" (materialism)ஆகும். இதிலும் கோழி முதலா ? முட்டை முதலா என்ற கேள்விக்கு தெளிவான எந்த ஒரு விடையும் காண்பது இயலாத ஒன்று என்பதாலேயே பண்டைய கால பொருள் முதல் வாதிகள், கோழியும் முட்டையும் என்றுமே இருப்பதாகும் (Allways Exists) என்பாதாக சொல்லுவார்கள், இவற்றிற்கான தோற்றம் முடிவு என்பது என்றுமே இருந்தது கிடையாது என்பதே அவர்களின் விளக்கமாகும், ஆனால் அதனை அறிவு ரீதியாக ஒப்புக் கொள்ள முடியாத புதிய(நவீன) சிந்தனையாளர்கள் பொருள் முதல்வாதத்திற்கு வலுசேர்க்கும் விதமாக "பரிணாம" கொள்கையைக் கொண்டு வந்தார்கள். டார்வின் பொருள் முதல்வாத நம்பிக்கையாளர். எந்த ஒரு பொருளுக்கும் மூலம் என்பது கிடையாது, ஆனால் மாற்றம் உண்டு என்பதே பரிணாமக் கொள்கையில் அடிப்படையாகும். இதன் படி இன்றைய மனிதன் என்பவன் குரங்கிலிருந்து மாற்றம் பெற்றவனாக கோட்பாடு வகுத்தார்கள் ( இதில் எனக்கு தனிப்பட்ட நம்பிக்கை கிடையாது).

கருத்து முதல்வாதம் என்பது புதிய சிந்தனைகளை தோற்றுவிப்பதில் எந்த ஒரு முனைப்பையும் காட்டியதே இல்லை, அவை தோற்றுவித்ததெல்லாம் பல்வேறு மதங்களையே. பொருள் முதல்வாதச் சிந்தனையாளர்கள் ஏன் எதற்கு எப்படி என்று அனைத்து இயக்கங்களை ஆய்ந்ததன் விளைவாக அதன் செயல்பாடுகள், அதில் ஒன்றை மாற்றி அமைக்கும் போது அதன் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் செயல் ஆகியவற்றை சிந்தனைக்கு எடுத்துக் கொண்டதன் விளைவாகவே அறிவியல், வானவியல், மருத்துவ இயல் கண்டுபிடிப்புகள் அனைத்துமே உருவாகின. கருத்து முதல்வாதிகள் எந்த ஒரு காலத்திலும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் போது அதனை கடுமையாக எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.

அறிவியலும் அறிவியல் கொள்கைகளும் பின்பற்றப்பட்டதும் அதனை கருத்து முதல்வாதிகளான மதவாதிகள் அது ஏற்கனவே மதநூல்களில் மறைமுக மாகச் சொல்லப்பட்டு ஒன்று தான் புதிதல்ல என்றும் சொல்லுவார்கள். உலகெங்கிலும் கருத்து முதல்வாதமே வலுப்பெற்றிருந்தால், வலியுறுத்தப்பட்டால் கண்டுபிடிப்புகள் என்று எதுவும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லாமல் போய் இருக்கும், ஏனெனில் ஆண்டவன் படைப்பில் அனைத்தும் சரியானதாகவும், தேவையான அளவிற்கு இருப்பதாகவே எல்லாகாலத்திலும் கருத்து முதல்வாதிகள் சொல்லி வந்திருக்கிறார்கள்.

பொருள்முதல்வாதம் மேலோங்கும் பொழுது அதனை உள்வாங்கிக் கொள்ளும் உத்தியாக கருத்து முதல்வாதிகள் அதனை வளைத்துவிடுவதுண்டு. பொருள் முதல்வாதியான புத்தர் துன்பங்களுக்குக் காரணம் பேராசை என்றார். இறைவன் இருக்கிறானா இல்லையா என்கிற ஆராய்சிகளை விட்டுவிட்டு தன்னிலையை உணர்ந்து மரணத்திற்கு முன் மனிதனின் வெவ்வேறு நிலையான மூப்பு, பினி யாவும் உண்மை, உலகமும் வாழ்க்கையும் நிலையல்ல என்று சொன்ன போது சடங்குகளில் மூழ்கிக் கொண்டிருந்தவர்கள் ஓரளவுக்கு விழிப்பு அடைந்தனர். பின்னர் பொருள் முதல்வாதம் ஆதிசங்கராரால் உள்வாங்கப்பட்டு வாழ்வே மாயம், உலகம் நிலையற்றது, அனைத்தும் எங்கும் நிறைந்திருந்திருப்பது பிரம்மம் என கடவுள் கொள்கைபோன்று கருத்து முதல்வாதமாக மாற்றியமைக்கப்பட்டது, அதன் பின்னர் வந்த புத்த பிக்குகள் புத்தரை புனிதராக்கி கடவுளாக்கி பொருள் முதல்வாதக் கொள்கைகளை கருத்து முதல்வாதாமாக மாற்றிக் கொண்ட மகாயானக் கொள்கைகளை ஏற்படுத்திக் கொண்டு உருவ வழிபாடுகள், புறச்சடங்குகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

பொருள் சார்ந்த தேவைகளும், அறிவியல் ரீதியான வளர்ச்சிகளும் சமூகத்திற்கு தேவை எனும் போது பொருள் முதல்வாதம் வளர்ச்சி பெரும், கம்யூனிச, கடவுள் மறுப்பு சித்தாந்தங்கள் முதல்வாதத்தை ஒட்டி ஏற்பட்டவை. பொருள்வாதம் மேலோங்கி வளர்ந்த பிறகு கருத்து முதல்வாதம் விழித்துக் கொண்டு அவற்றை உள்வாங்கி வளரும். இன்றைய தேதிகளில் மக்களிடையே இருப்பது கருத்து முதல்வாதமா ? பொருள் முதல்வாதமா ? என்று பார்த்தால் பிழைப்பு வாதம் (வாழ்க்கை) என்பதை வழியுறுத்தல் இரண்டிலுமே இருக்கிறது. ஆனால் பிழைப்புவாதம் பொருள் முதல்வாதத்தின் ஒரு நோக்கமே. இன்றைக்கு கருத்து முதல்வாதங்கள் என எஞ்சியிருப்பது மதவாதமே. மதவாதங்களின் கொள்கைகள் பிழைப்பு வாதம் தான். கருத்துவாதம் முழுக்க முழுக்க பலமிழந்து அறிவியல் துணை தேடும் முயற்சியில் வளர்ச்சி இன்றிப் போய் இருக்கிறது. கருத்து முதல்வாதமான ஆன்மா, தேடல், இறைவன், படைப்பு சொர்க்கம் இதனை முன்னிறுத்தும் வருங்கால புதிய கருத்துவாதம் ஏற்படுவதும் வளர்ச்சி பெறுவதும் நடைபெறுவதும் கடினம். உலக அளவில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய ஏதும் நிகழ்ச்சி / அழிவு ஏதும் நடந்தால் கருத்து முதல்வாதம் தன்னை புதுப்பித்துக் கொள்ளும்.

தொடர்புடைய இணைப்புகள் :
Idealism
Materialism
கடவுளைத் தேடி...
காரணத்தை அகற்றாமல் காரியத்தை அகற்ற முடியாது
Can Consciousness be Created in Software? - Martine Rothblatt

21 கருத்துகள்:

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல கட்டுரை. என் மரமண்டைக்கு என்னமே புரிய வைக்க முயற்ச்சிப்பது புரியது ஆனா என்னனு புரியலை. ஆனாலும் வாதம் வாதம்னு படிச்சி எனக்கு பக்கவாதம் வந்துரும் போல. ஆனாலும் ஒன்னு புரிஞ்சுது எல்லாம் பிழைப்பு வாதம்னு நீங்க சொன்னது உண்மை. நன்றி.

வால்பையன் சொன்னது…

எல்லா மதங்களிலும் நாத்திகர்கள் உண்டு! நான் பல நண்பர்களை சந்தித்துள்ளேன்!

ஆண்மை குறையேல்.... சொன்னது…

ஆத்திக‌த்திற்கு எதிரான‌வ‌ர்க‌ளை நாத்திக‌ர்னு அவ‌ர்க‌ள் தான் சொல்கிறார்க‌ள்.
ஆனால் எங்க‌ளுக்கு வேறு பெய‌ர் இருக்கிற‌து..
"ப‌குத்த‌றிவாதி" என்று...

(இர‌வ‌ல் ‍ க‌‌ம‌ல்)

NO சொன்னது…

அன்பான நண்பர் திரு கோவி கண்ணன் அவர்களுக்கு,

மன்னியுங்கள், என் புதிய ரிலீஸ் உங்கள் பதிவில் இந்த முறை இடம் பெறவில்லை! அண்ணன் திரு சஞ்சய் காந்தியின் பதிவில் ரிலீஸ்!

Trailer
----------

நோ productions வழங்கும்
அன்பான எங்கள் அண்ணன்
பதிவுலக பாவலர், கட்டுக்கடங்கா எழுத்தாவலர்

இணையில்லா, பெமிசால், ஒன் and ஒன்லி

கோவி கண்ணன்

IN and AS

"கோவியன்"
-----------------
(மாறுபட்ட மூன்று அவதாரங்களில் - தும்பி, டெமோ & கோவியன்)

சக நடிகர்கள்-

கோபக்கார அண்ணன் திரு மாதவராஜ் - DCP பிரபாகர்
அண்ணன் திரு அதிஷா - சாரி
அண்ணன் திரு வால்பையன் - மனோதத்துவ நிபுணர்
சதாவாக நடிப்பதற்கு பதிவர்கள் யாரும் பொருந்தாததால், சதாவே நடிக்கிறார் நந்தினியாக!!

-----------

நன்றி

நட்புடன் ஜமால் சொன்னது…

இஸ்லாமியர்களின் 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற கருத்து அனைத்து மதங்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு பொதுவான கருத்து என்பதால் ஒருவர் காஃபிரா மும்மீனா என்பதை அவர் முகமது நபியை (இறுதி) தூதராக ஏற்கிறாரா இல்லையா என்பதைப் பொருத்துதான் ஒருவர் அப்படியாக நினைக்கப்படுகிறார்]]


இறைவன் மிகப்பெரியவன் என்பது எல்லோரும் சொல்வது தான்

முகமதுவை நபியாக ஏற்றுகொள்வதால் முஸ்லீமாக ஆகிவிட இயலாது.

இறைவன் ஈடு இணையற்றவன்

முகமது இறுதி இறைதூதர்

குரான் இறை வேதம்

வானவர்கள் உண்டு

சொர்க்கம் நரகம்

--------------

இவை யாவற்றையும் நம்பனும், இல்லையென்றால் அவர் முஸ்லீமாக ஏற்று கொள்ளப்படமாட்டார்.

-------------

பிறப்பால் ஒருவர் முஸ்லீமாக இயலாது.
இறை நம்பிக்கையற்றோ, மேற் கூறியவற்றை மறுத்தோ ஒருவர் தன்னை முஸ்லீமென்று கூறிகொண்டால் சொல்லி கொண்டால், - அவர் தான் சொல்லிக்கனும் ...

Unknown சொன்னது…

ஜமால்..
//இஸ்லாமியர்களின் 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற கருத்து அனைத்து மதங்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு பொதுவான கருத்து என்பதால் ஒருவர் காஃபிரா மும்மீனா என்பதை அவர் முகமது நபியை (இறுதி) தூதராக ஏற்கிறாரா இல்லையா என்பதைப் பொருத்துதான் ஒருவர் அப்படியாக நினைக்கப்படுகிறார்]]


இறைவன் மிகப்பெரியவன் என்பது எல்லோரும் சொல்வது தான்

முகமதுவை நபியாக ஏற்றுகொள்வதால் முஸ்லீமாக ஆகிவிட இயலாது.

இறைவன் ஈடு இணையற்றவன்

முகமது இறுதி இறைதூதர்

குரான் இறை வேதம்

வானவர்கள் உண்டு

சொர்க்கம் நரகம்

--------------

இவை யாவற்றையும் நம்பனும், இல்லையென்றால் அவர் முஸ்லீமாக ஏற்று கொள்ளப்படமாட்டார்.

-------------

பிறப்பால் ஒருவர் முஸ்லீமாக இயலாது.
இறை நம்பிக்கையற்றோ, மேற் கூறியவற்றை மறுத்தோ ஒருவர் தன்னை முஸ்லீமென்று கூறிகொண்டால் சொல்லி கொண்டால், - அவர் தான் சொல்லிக்கனும் ///

ஒருவர் உண்மையாக நம்புகிறாரா அல்லது சமூகத்துக்காக நம்புவது போல் நடிக்கிறாரா என்று எப்படி சகா முடிவு செய்வீர்கள். சில கோட்பாடுகளை முழுமையாக நம்புவதால் அவன் ஒரு மதத்தவனாக ஆகமுடியும் என்றால், அவற்றை நம்புகிறேன் என்று வேஷம் போட்டு அந்த மதத்தின் புனிதத்தைக் கெடுக்க முடியாதா? இன்றைக்கு முக்கால்வாசி இஸ்லாமியத் தீவிரவாதிகள், ‘இஸ்லாத்தின் பெயரால்' என்று சொல்லியே இஸ்லாத்தைக் கற்பழிக்கவில்லையா? தனியே சில கோட்பாடுகளை நம்புபவன் அல்லது அவ்வாறு நடிப்பவன், ஒரு குறிப்பிட்ட மதத்துக்குள் உள்வாங்கப்படுவதுதான் மதங்கள் மீதான் எங்கள் நம்பகத்தன்மையைக் குறைக்கிறது சகா. இந்த ஒரு பெரிய ஓட்டையில்தான் இந்த மதங்கள் எல்லாம் அடிபட்டுப் போய்விடுகிறன

பீர் | Peer சொன்னது…

//முகமது நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களை காஃபிர்கள் என்றும் ஏற்றுக் கொள்பவர்களை மும்மின்கள் என்றும் சொல்கிறார்கள்,//

யார் சொன்னா?

ஆதாரம்?

கோவி.கண்ணன் சொன்னது…

// பீர் | Peer said...
//முகமது நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களை காஃபிர்கள் என்றும் ஏற்றுக் கொள்பவர்களை மும்மின்கள் என்றும் சொல்கிறார்கள்,//

யார் சொன்னா?

ஆதாரம்?
//

குரான் படிக்கிற நீங்க ஆதாரம் கேட்பது வியப்பாக இருக்கு,

அல்லாவே (இறைவனே) மிகப் பெரியவன், முகமது நபி (இறுதி) இறைத்தூதர் என்பது தானே இஸ்லாமியர்களின் "அடிப்படை" நம்பிக்கை. ஜமால் குறிப்பிட்ட மற்றதெல்லாம் அந்த அடிப்படைக்கு பிறகே. இதுல இறைவன் பொதுப்படையான பிற மதத்தினருக்கும் இருக்கும் நம்பிக்கை தான் மீதி இருப்பது என்ன ? முகமது நபி தூதர் என்கிற நம்பிக்கை. இஸ்லாமியர்களுக்கு கிறித்துவர்களுக்கு எந்த நம்பிக்கை முரணாகுது ?

வேண்டுமானால் மற்ற இஸ்லாமியர்களிடம் கேட்டுப் பாருங்கள் நான் சொன்னது சரியா இல்லையான்னு ? முஸ்லிம்கள் அல்லது மும்மின் அல்லாதவர்கள் யார் ? காஃபிர்கள் தானே ?

கோவி.கண்ணன் சொன்னது…

//இறைவன் மிகப்பெரியவன் என்பது எல்லோரும் சொல்வது தான்

முகமதுவை நபியாக ஏற்றுகொள்வதால் முஸ்லீமாக ஆகிவிட இயலாது.

இறைவன் ஈடு இணையற்றவன்

முகமது இறுதி இறைதூதர்

குரான் இறை வேதம்

வானவர்கள் உண்டு

சொர்க்கம் நரகம் //

ஜமால், வேத புத்தகம், சொர்கம் நரகம்,வானவர் இவை எல்லாம் அனைத்து மதங்களிலும் உள்ளவை அவற்றின் பெயரும் தன்மையிலும் கொஞ்சம் கொஞ்சம் வேறுபாடுகள் உண்டு, இவற்றையும், இறைவனையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இஸ்லாமியர்களுக்கும், கிறித்துவர்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பது தான் நான் குறிப்பிட்டவை

கோவி.கண்ணன் சொன்னது…

//பீர் | Peer said...
//முகமது நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களை காஃபிர்கள் என்றும் ஏற்றுக் கொள்பவர்களை மும்மின்கள் என்றும் சொல்கிறார்கள்,//

யார் சொன்னா?

ஆதாரம்?
//

பீர்,

காஃபிர் என்பதற்கு விளக்கம் சொல்லுங்க, கோவியாராகிய நான் காஃபீரா இல்லையா ?

வால்பையன் சொன்னது…

//காஃபிர் என்பதற்கு விளக்கம் சொல்லுங்க, கோவியாராகிய நான் காஃபீரா இல்லையா ? //

கால் பீரெல்லாம் வேண்டாம், ஃபுல் பீராக ஆர்டர் பண்ணுங்க!

பீர் | Peer சொன்னது…

ஐயா, நீங்கள் சொன்னதற்கு ஆதாரம் தரவும்.

//முகமது நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களை காஃபிர்கள் என்றும் ஏற்றுக் கொள்பவர்களை மும்மின்கள் என்றும் சொல்கிறார்கள்,//

இஸ்லாமியர்கள் சொன்னதா? இஸ்லாத்தில் சொல்லப்பட்டதா?

ஆதாரம்...

பீர் | Peer சொன்னது…

காஃபீர்...

உங்கள் பதிவுகளில் எனக்கு பிடித்த விஷயம், முடிந்தவரை தமிழில் எழுதுவது. யாரும் அறியாத சொற்களையும் தேடி, அழகான தமிழில் எழுதுபவர் நீங்கள். இந்த வார்த்தையையும் தமிழில் எழுதியிருந்தால் படிப்பவர்களுக்கு புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்குமே...

ராஜவம்சம் சொன்னது…

//இஸ்லாமியர்கள் சொன்னதா? இஸ்லாத்தில் சொல்லப்பட்டதா?//

எவன் ஒருவன் இறுதி தூதரை (தூதை)நம்பவில்லையோ அவன் தான் நஸ்டம் அடைந்தவன்

கஃபிர் என்றால் இறைமருப்பாளன்

ராஜவம்சம் சொன்னது…

//காஃபிர் என்பதற்கு விளக்கம் சொல்லுங்க, கோவியாராகிய நான் காஃபீரா இல்லையா//

நீங்களும் இறை மருப்பாளரே

kiram சொன்னது…

இங்கே பார்க்கவும். http://islam-an-introduction.blogspot.com/2008/07/meaning-of-kafir-and-mushrik.html

கோவி.கண்ணன் சொன்னது…

// பீர் | Peer said...
ஐயா, நீங்கள் சொன்னதற்கு ஆதாரம் தரவும்.

//முகமது நபியை ஏற்றுக் கொள்ளாதவர்களை காஃபிர்கள் என்றும் ஏற்றுக் கொள்பவர்களை மும்மின்கள் என்றும் சொல்கிறார்கள்,//

இஸ்லாமியர்கள் சொன்னதா? இஸ்லாத்தில் சொல்லப்பட்டதா?

ஆதாரம்...

1:19 AM, October
//

இஸ்லாமியர்கள் என்பவர்கள் இஸ்லாமை பின்பற்றுபவர்கள், ஒண்ணு மக்கள் மற்றொன்று கொள்ளை என்பதைத்தவிர்த்து வேறு என்ன வேறுபாடு, எனக்கு தெரியவில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் தனிப்பதிவாக போட்டு கூட விளக்கலாமே.

கோவி.கண்ணன் சொன்னது…

//kiram said...
இங்கே பார்க்கவும். http://islam-an-introduction.blogspot.com/2008/07/meaning-of-kafir-and-mushrik.html
//

எங்கப் பகுதி நாகூரில் வந்து கேளுங்கள். காஃபிர் என்பது வசைச் சொல்லாவே இஸ்லாமியர்கள் பிறரை நோக்கி பயன்படுத்துகிறார்கள். "அவன் ஒரு காஃபிர் பய" என்பது போல

கோவி.கண்ணன் சொன்னது…

//பீர் | Peer said...
காஃபீர்...

உங்கள் பதிவுகளில் எனக்கு பிடித்த விஷயம், முடிந்தவரை தமிழில் எழுதுவது. யாரும் அறியாத சொற்களையும் தேடி, அழகான தமிழில் எழுதுபவர் நீங்கள். இந்த வார்த்தையையும் தமிழில் எழுதியிருந்தால் படிப்பவர்களுக்கு புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்குமே...
//

சில மூலச் சொற்களுக்கு தனிப்பொருள் உண்டு, அதை மொழியுடன் தான் புரிந்து கொள்ள முடியும். காஃபிர் என்பதை இறை மறுப்பாளன் என்று சொல்வதை விட இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்ற பொருளில் தானே சொல்லப்படுகிறது. ஏனெனில் பிற மதநம்பிக்கையாளர்கள் யாருமே இறை மறுப்பாளர்கள் கிடையாது

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜவம்சம் said...
//காஃபிர் என்பதற்கு விளக்கம் சொல்லுங்க, கோவியாராகிய நான் காஃபீரா இல்லையா//

நீங்களும் இறை மருப்பாளரே
//

காஃபிர் என்பது இறை மறுப்பாளன் இல்லை, இஸ்லாம் வரையறுத்த இறைமறுப்பாளன் என்று மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். இந்து ஒருவனை நோக்கி அவன் இறைமறுப்பாளன் என்று ஒரு இஸ்லாமியர் சொன்னால் அது சரியான கூற்று கிடையாதே.

தருமி சொன்னது…

//இறை ஏற்பு மறுப்பு என்பது இறை பற்றிய ஒன்றல்ல மதச் சார்புள்ள ஒரு கருத்தை ஏற்கிறாரா இல்லையா என்பதைப் பொருத்தே. இப்படிப் பார்த்தால் எந்த ஒரு நம்பிக்கையாளரும் இறைமறுப்பாளர்களே என்பதை புரிந்து கொள்ளலாம்//

நல்ல வாதம் ...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்