பின்பற்றுபவர்கள்

20 ஜனவரி, 2009

தமிழர்களுக்கு பாலியலில் ஏன் இவ்வளவு ஆர்வம் ?

கூகுள் தேடலில் தமிழ் நாட்டின் வரைபடம் பார்பதற்காக tamil என்று அடிக்க தொடங்கினேன். மிகுதியாக தேடிய (குறி) சொற்களின் பட்டியலை கூகுள் உடனேயே காட்டியது, முதலில் காட்டிய சொல்லைப் பார்த்ததும், அதிர்ச்சி ஏற்பட்டதும், கூடவே ஆர்வமும் ஏற்பட்டது, நம்ம தமிழ் ஆளுங்கதான் இப்படியா, வேறு மாநிலகாரர்களும் இப்படியா ? அவர்களது மொழிப் பெயரை கூகுள் தேடலில் கொடுத்த போது காட்டிய அடிக்கடி தேடும் பட்டியலில் தமிழுக்கு வருவது போல் ஒரு சொல் கூட இல்லை. மனதை தேற்றிக் கொண்டு, tamil என்று அடிப்பதற்கு பதிலாக, thami என்று z அடிக்கும் முன்பே பட்டியலைக் காட்டியாது, அதிலும் முதலில் வருவது :( நீங்களே பாருங்கள்.

தமிழர்கள் எப்போதும் அதே நினைப்பில் இருப்பதால் என்னவோ, சுரணை இருக்க வேண்டிய மற்றவற்றில் அற்று இருக்கிறார்கள் போலும் :(

பலவீனமானவர்களுக்கே அதுபற்றிய சிந்தனை இருக்கும், அதை ஆர்வம் என்று சொல்லிவிட முடியாது என்றே நினைக்கிறேன், தமிழர்கள் (குறிப்பாக ஆண்கள்) இதில் நாட்டம் கொண்டு இருப்பது பலவீனம் தான். மற்றொரு கோணத்தில் பார்த்தால், இணையத்தை மிகுதியாக பயன்படுத்துபவர்கள் தமிழர்கள், மற்ற மாநிலக்காரர்களில் இணையத்தை பயன்படுத்துபவர்களில் அதைத் தேடுபவர்கள் குறைவாக இருக்கலாம் என்றே ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டி இருக்கிறது









இப்ப சொல்லுங்க....தமிழன் என்று 'சொல்'லடா..................

ஒரே ஒரு ஆறுதல்... kerala என்று தேடும் போது kerala girls வருகிறது. எண்ணப்படி பார்த்தால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அதையும் தமிழாளுங்கதான் தேடி இருப்பார்கள் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது :)


44 கருத்துகள்:

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

ஏன் தமிழனின் நிலை இப்படி இருக்கிறது என்பதற்கு உங்கள் பதிவிலேயே விடை இருக்கிறது.

நீங்களும் பார்த்ததும் சரி ...அவர்கள் தேடியதும் சரி.. ”குறி” சொற்கள் என நீங்களே சொல்லிவிட்டீர்களே...!

எனக்கு ஒரு சந்தேகம். வேற்று மொழிக்காரர்கள் ஏன் தமிழில் தேடி இருக்க கூடாது?

( இதுக்கெல்லாம் ஒரு பதிவா? கஷ்டகாலம். - இதுக்கு பின்னூட்டம் வேற.. :)) )

பாண்டித்துரை சொன்னது…

நல்ல தேடல்.
ஆமா cafe-ல் எந்த சுட்டிங்க!

பாண்டித்துரை சொன்னது…

///( இதுக்கெல்லாம் ஒரு பதிவா? கஷ்டகாலம். - இதுக்கு பின்னூட்டம் வேற.. :)) )/////

ஆக ஓம்கார் சாமி குறி சொல்லிடுச்சு

பாண்டித்துரை சொன்னது…

//ஆமா cafe-ல் எந்த சுட்டிங்க!//

ஆமா எந்த cafe-ல் எந்த சுட்டிங்க!

Prabhusankar சொன்னது…

தமிழில் மட்டுமே படிப்பவர்கள் அதிகம் உண்டு. தமிழனுக்கு அக நானூறும் தெரியும். புற நானூறும் தெரியும். தமிழனை கேவலப்படுத்த வேறு யாரும் தேவையில்லை. தமிழனே போதும்.

நட்புடன் ஜமால் சொன்னது…

ஹா ஹா ஹா

சிரிப்பதை தவிர வேறு தெரியவில்லை

(இடுக்கண் வருங்கால் ...)

கோவி.கண்ணன் சொன்னது…

//( இதுக்கெல்லாம் ஒரு பதிவா? கஷ்டகாலம். - இதுக்கு பின்னூட்டம் வேற.. :)) )//

ஸ்வாமி கண்ணுல இந்த பதிவு படும்னு நானும் நினைக்கல !

//எனக்கு ஒரு சந்தேகம். வேற்று மொழிக்காரர்கள் ஏன் தமிழில் தேடி இருக்க கூடாது?//

வேறு மாநிலத்திற்கு சென்றால் அவர்கள் அப்படி தேடினார்களா என்று கேட்டுச் சொல்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//எனக்கு ஒரு சந்தேகம். வேற்று மொழிக்காரர்கள் ஏன் தமிழில் தேடி இருக்க கூடாது?//

cafe ல் இல்லை, நீங்களே உங்கள் கணனியில் கூகுளுக்கு போய் தட்டச்சு செய்து பாருங்கள், பட்டியல் வரும்

கோவி.கண்ணன் சொன்னது…

//இரா.பிரபுசங்கர் said...
தமிழனை கேவலப்படுத்த வேறு யாரும் தேவையில்லை. தமிழனே போதும்.
//

நம்ம குறையை நாமே உணரவில்லையென்றால் பிறர் சொல்லும் போது எரிச்சலே அடைவோம், சரியா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//பாண்டித்துரை said...
///( இதுக்கெல்லாம் ஒரு பதிவா? கஷ்டகாலம். - இதுக்கு பின்னூட்டம் வேற.. :)) )/////

ஆக ஓம்கார் சாமி குறி சொல்லிடுச்சு
//

சொல்லிடுச்சு - என்று சொல்லாதீங்க, வலையுலகம் தவிர்த்து பலரால் அவர் கொண்டாடப்படுகிறார். கோவையில் பலரால் அறியப்பட்டவர். எனக்கு தெரிந்து மிக நல்ல மனிதர்

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
ஹா ஹா ஹா

சிரிப்பதை தவிர வேறு தெரியவில்லை

(இடுக்கண் வருங்கால் ...)
//

கடுக்கண் வந்தால் காதில் போட்டுக் கொள்ளனுமா ?

சரவணகுமரன் சொன்னது…

நல்ல ஆய்வு...

சரவணகுமரன் சொன்னது…

யோசிக்க வேண்டிய விஷயம்தான்... :-(

Sanjai Gandhi சொன்னது…

//தமிழன் என்று 'சொல்'லடா..//

கிகிகி.. டமிலன் என்று ஜொள்ளடா.. :))

கோவி.கண்ணன் சொன்னது…

//சரவணகுமரன் said...
நல்ல ஆய்வு...
//

நன்றி !

//சரவணகுமரன் said...
யோசிக்க வேண்டிய விஷயம்தான்... :-(
//

மாறவேண்டியதும் கூட

கோவி.கண்ணன் சொன்னது…

//SanJaiGan:-Dhi said...
//தமிழன் என்று 'சொல்'லடா..//

கிகிகி.. டமிலன் என்று ஜொள்ளடா.. :))
//

தப்பு !

தமிழன் என்றால் ஜொள்ளடா ! என்று சொல்லி இருக்க வேண்டும் !

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

இதற்கு நான் ஏதாவது பின்னூட்டமிட. மூத்தவர் நீங்க இப்படி சொல்லலாமா என நீங்க பதில் எழுத..எனக்கெதுக்கு வம்பு..அதனால் வெறும சிரிச்சுட்டு போயிடறேன்...

:-))))))))))

துளசி கோபால் சொன்னது…

தமிழன் மட்டுமில்லே இந்தியன்னு சொல்லுங்க. இல்லாமலேயா 30 கோடி ஜனங்களின் சங்கம்...... இப்ப....

பாரத சமுதாயம் வாழ்கவே!!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
தமிழன் மட்டுமில்லே இந்தியன்னு சொல்லுங்க. இல்லாமலேயா 30 கோடி ஜனங்களின் சங்கம்...... இப்ப....

பாரத சமுதாயம் வாழ்கவே!!!!!
//

துளசி அம்மா,

indian என்ற தேடலில் அது வரவில்லை. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan 11:20 AM, January 20, 2009
இதற்கு நான் ஏதாவது பின்னூட்டமிட. மூத்தவர் நீங்க இப்படி சொல்லலாமா என நீங்க பதில் எழுத..எனக்கெதுக்கு வம்பு..அதனால் வெறும சிரிச்சுட்டு போயிடறேன்...

:-))))))))))
//

நான் இதை சீரியஸாக எடுத்துக் கொள்கிறேன். :)

நாம பிறகு உட்கார்ந்து பேசுவோம் !
:))))))

EKSaar சொன்னது…

தமிழர் கணணி அறிவை இதற்குத்தான் ஆக கூடுதலாக பயன்படுத்துவது ஒன்றும் ரகசியம் அல்ல. இலங்கையில் அதிகம் பார்க்கப்பட்ட இணையங்கள்
http://eksaar.blogspot.com/2008/12/blog-post_30.html

குடுகுடுப்பை சொன்னது…

கலாச்சார கட்டுப்பாடுகள் அதிகம் என்று அர்த்தம், உலகிலேயே சவூதி அரேபியாவில்தான் அதிகம் டவுன்லோடு செய்யப்படுகிறதாம்.

நம்ம பதிவு சூடாச்சே ஏன்

குடுகுடுப்பை: டியூசன் டீச்சர் விமர்சனம்

CA Venkatesh Krishnan சொன்னது…

என்னத்த சொல்ல?...

என்னமோ போங்க....

ஆனாலும்....

நல்ல பதிவு...

இக்பால் சொன்னது…

ரூம் போட்டு யோசிப்பிங்களோ?

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

// ...சொல்லிடுச்சு - என்று சொல்லாதீங்க, வலையுலகம் தவிர்த்து பலரால் அவர் கொண்டாடப்படுகிறார். கோவையில் பலரால் அறியப்பட்டவர். எனக்கு தெரிந்து மிக நல்ல மனிதர்...//


இதற்கான விளம்பர தொகை ரூபாய் 100-ஐ தமிழகம் வரும்பொழுது தந்தால் போதுமா?

:))

நையாண்டி நைனா சொன்னது…

அண்ணா, பின்னூட்டம் பெருசா வந்துச்சு, அதனாலே தனிப்பதிவாக....

M.Karthikeyan சொன்னது…

Intha pathivu romba late!

I have wrote about it earlier

http://blog.karthikeyan.net.in/2008/11/bad-search-results-for-tamil-in-google.html

கோவி.கண்ணன் சொன்னது…

//இதற்கான விளம்பர தொகை ரூபாய் 100-ஐ தமிழகம் வரும்பொழுது தந்தால் போதுமா?

:))//

அதெல்லாம் வேண்டாம், பக்கதுலதானே பழனி, ஒரு பொட்டலம் திருநீறு வாங்கி வையுங்கோ !

:)))))))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//karthikeyan said...
Intha pathivu romba late!

I have wrote about it earlier

http://blog.karthikeyan.net.in/2008/11/bad-search-results-for-tamil-in-google.html
//

ஓ நல்லது, நான் அதை கவனிக்கவில்லை. மேலும் ஒப்பீடுகளுடன் ஒரு செய்தியைச் சொன்னால் தான் அதன் வீச்சு இருக்கும், உங்கள் பதிவில் அது மிஸ்ஸிங் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
அண்ணா, பின்னூட்டம் பெருசா வந்துச்சு, அதனாலே தனிப்பதிவாக....
//

உங்க ஆராய்ச்சி, எண்ணம், ஊகம் நல்லா எழுதி இருக்கிறீர்கள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//என்ன கொடும சார் said...
தமிழர் கணணி அறிவை இதற்குத்தான் ஆக கூடுதலாக பயன்படுத்துவது ஒன்றும் ரகசியம் அல்ல. இலங்கையில் அதிகம் பார்க்கப்பட்ட இணையங்கள்
http://eksaar.blogspot.com/2008/12/blog-post_30.html

12:28 PM, January 20, 2009//

தகவலுக்கு நன்றி சார் !


// ஜோதிபாரதி said...
:))))))//

என்னது வெறும் சிரிப்பானை மட்டும் போட்டுச் செல்கிறீர்கள், ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லையா :)

12:36 PM, January 20, 2009


// குடுகுடுப்பை said...
கலாச்சார கட்டுப்பாடுகள் அதிகம் என்று அர்த்தம், உலகிலேயே சவூதி அரேபியாவில்தான் அதிகம் டவுன்லோடு செய்யப்படுகிறதாம்.

நம்ம பதிவு சூடாச்சே ஏன்

குடுகுடுப்பை: டியூசன் டீச்சர் விமர்சனம்
//

இறுக்கப்படும் பொருள்களே தளர்வதற்கு முயற்சிக்கும் என்பது இயற்கை நியதி தானே !


// இளைய பல்லவன் said...
என்னத்த சொல்ல?...

என்னமோ போங்க....

ஆனாலும்....

நல்ல பதிவு...

1:57 PM, January 20, 2009//

இளைய பல்லவன், மிக்க நன்றி !


//இக்பால் said...
ரூம் போட்டு யோசிப்பிங்களோ?//

:) ரூம் போடலை, ரூமில் உட்கார்ந்து யோசித்தாலே போதும் ! :)

Balaji சொன்னது…

ஒரு வேலை வேற்று மாநிலத்து சதியா, பரவில்லை களவும் கற்று மர

malar சொன்னது…

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்
சிந்தனை ரொம்ப நல்ல இ ருந்தது

சி தயாளன் சொன்னது…

ஆகா....ஓகோ...

நையாண்டி நைனா சொன்னது…

/*//நையாண்டி நைனா said...
அண்ணா, பின்னூட்டம் பெருசா வந்துச்சு, அதனாலே தனிப்பதிவாக....
//

உங்க ஆராய்ச்சி, எண்ணம், ஊகம் நல்லா எழுதி இருக்கிறீர்கள் !*/

பாராட்டுக்கு நன்றி...
வலைதளத்திற்கு வந்ததுக்கும் நன்றி.

நசரேயன் சொன்னது…

நான் நல்ல பையன் அப்படி எல்லாம் தேட மாட்டேன்

வால்பையன் சொன்னது…

ஹா ஹா

இன்னோரு விசயம் தெரியுமா
இந்த தேடல் எல்லாம் சிங்கையில இருக்குறவங்க தான் பன்றாங்களாம்

Thamizhan சொன்னது…

என்ன செய்வது.
சினிமா தான் தமிழனை ஆள்கிறது.அங்கே முதன்மைப் பொருளே
SEX தான்.
அடுத்து ஆள்வது கடவுளும்,சாமியார்களும்.அங்கே மூல முதல் பொருளும்,நட மாடுந்தெய்வங்களும் அய்யோ
SEX SEX SEX தானே!

G.Ragavan சொன்னது…

ஹாஹாஹா உங்க பதிவு சரியானதுன்னாலும் பதிவோட கருத்து தப்பானது. :-)

ஏன்னு கேக்குறீங்களா? இதுக்கு நாலு வருசம் நான் பின்னாடி போகனும். நான், ஒரு வடக்கத்திப் பையன், மலையாளி.. மூனு பேரும் நண்பர்களா இருந்தோம். அப்போ நெட்டுல மேட்டர் எப்படித் தேடுறதுன்னு பேசுனோம். மலையாளி நண்பன் மல்லுன்னு போட்டுத் தேடுனான். வடக்கத்தி நண்பன் தேசின்னு போட்டுத் தேடுனான். நமக்குத் தமிழ்தானே. :-)

ஆகா நீங்க மலையாளம்....கேரளான்னு தேடாம malluன்னு தேடிப் பாருங்க. அதே மாதிரி desi. தமிழர்களையும் மலையாளிகளையும் தவிர மத்தவங்கள்ளாம் desiய நீரோட்டத்துல சேந்தாச்சுங்கோவ் :-)

நீங்க என்னடான்னா தமிழன் மட்டுந்தான் இப்பிடின்னு பேசுறீங்க. ஒலகமே இப்பிடித்தான் இருக்குதுங்கோய்.

VSK சொன்னது…

கோவியாருக்கே கிடைக்கும் தலைப்புகளில் இதுவும் ஒன்று! நல்லா சிரிச்சேன்!

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

கணினியை முதலில் உபயோகிகக் துவங்குவோர் முதலில் இதற்குத்தான் பயன்படுத்துவார்கள் போலும் :)

King... சொன்னது…

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
\\
கணினியை முதலில் உபயோகிகக் துவங்குவோர் முதலில் இதற்குத்தான் பயன்படுத்துவார்கள் போலும் :)
\\
ஆமா நானும் ஒரு காலத்துல அப்பிடித்தான் இருந்தேன்...:)

ராஜ பார்வை சொன்னது…

//தமிழில் மட்டுமே படிப்பவர்கள் அதிகம் உண்டு. தமிழனுக்கு அக நானூறும் தெரியும். புற நானூறும் தெரியும். தமிழனை கேவலப்படுத்த வேறு யாரும் தேவையில்லை. தமிழனே போதும்//

i accept

வெண்பூ சொன்னது…

என்னா ஒரு ஆராய்ச்சி... நம்ம ஆளுங்கள பத்தி தெரிஞ்சதுதான.. :))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்