பின்பற்றுபவர்கள்

31 ஆகஸ்ட், 2009

மீசை மழிப்பது பாவச்செயலா?

அண்மையில் நமது மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் அவல் தவில் கூறியுள்ள 'தாடியுடன் சேர்த்து, மீசையும் எடுக்க வேண்டும்' என்ற கருத்து இங்கு மீண்டும் சில தசை அசைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

எந்த தமிழனும் தாடி எடுப்பதை தாழ்த்தி பேசுபவனில்லை. தாடி எடுப்பதை தாழ்த்துபவன் தமிழனாக இருக்க முடியாது. தாடி எடுப்பதை தாழ்த்தும் எவனும் பேச தகுதியற்றவன். அவன் எந்த முடியையும் மழித்துக் கொள்ள தகுதியற்றவன். தாடியை எடுப்பது மட்டும் தான் மழித்தல் என்பதில்லை. ஆனால் மீசை வைத்துக் கொள்வதையும் வீரம் என்பேன். இந்தியா பொன்ற பல மழிப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள நாடுகளில், மாநில எல்லைகள் மழிப்புகளால் மழிக்கப்பட்டிருப்பதால், அந்தந்த மாநிலங்களில் மழிப்புகளில் உள்ள முடி மழிப்பே அவரவர் மழிப்பு வழக்கம் எனலாம். தமிழ்நாட்டிலிருக்கும் தமிழர்களாகிய நமக்கு மீசை தான் முக்கிய அடையாளம்.

பணிநிமிர்த்தமாகவோ அல்லது சுற்றுலா போன்ற இதர காரணங்களுக்காகவோ தன் தாய் மாநிலத்திற்கு வெளியே செல்லும், எல்லையில் வரையப்பட்டிருக்கும் ஒரு கோட்டைத்தாண்டி செல்லும் ஒருவர் தாடியை மட்டும் தான் எடுப்பேன் மீசை எடுக்க விருப்பம் இல்லை என்றால் அவர் அனுபவிக்கும் சிரமங்களை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. 1997ல் மும்பை சென்றபோது நான் அனுபவித்திருக்கிறேன். நம் அண்டை மாநிலமான கேரளா செல்லும் போது அவர்களின் மீசையைப் போலும், அதேபோல ஆந்திரா, கர்நாடகா செல்லும் போது அவர்களைப் போலும் ஜெர்மணி செல்லும் போது ஹிட்லர் போல் மீசையும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது சற்று சிரமமே. ஆந்திராவை தாண்டி சென்று விட்டால், மீசை எடுப்பது பொது வழமையாக இருக்கிறது. மழிப்பு என்ற செயலில் அவரர் மீசையும் மழிக்கப்பட்டு தெரிந்தால் பெரும்பாலான வட மாநிலங்களில் சிரமமின்றி அவர்களைப் போல் மீசையில் ஒட்டாமல் கூழ் குடிக்க முடியும். மீசை மழித்தல் என்ற வட இந்திய வழக்கம், இந்தியாவில் பெரும்பாலானோர் மழிப்பு வழக்கமாக கொண்டிருந்தால், வெளி மாநிலங்களோடு தொடர்பு இருக்கும் அனைவரும் பேஷாக மீசை மழித்துக் கொள்வத்தால், அவரவர் வாழ்வில் நலம் நன்மைபயக்கும். நம் அண்டை மாநிலத்தவர் எப்போதோ இதை ஏற்றுக்கொண்டு மழித்துக் கொள்ள பழகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் பொது மழிப்பான தாடியும் எடுக்கலாமே, மீசை எதற்கு? என்ற வாதமும் கூடவே வருகிறது. தாடி மழிப்பதற்கு யார் தடை விதித்தார்கள்? தாராளமாக மழிக்கலாம். சர்வதேச தொடர்பில் தொழில் செய்பவர்களுக்கு கட்டாயம் தாடி மழித்திருக்க வேண்டும் என்பது போலவே, நம்தேசம் முழுக்க தொழில் தொடர்பு செய்பவர்களுக்கு சாமானியர்களோடு சாமான்யர்களாக தெரிய மீசை மழிப்பும் அவசியமாகிறது. மீசை மழித்துக் கொண்ட ஒருவனுக்கு தமிழ் நாட்டில் தொழில் தொடர்பு வேண்டும் என்றால், மீசை வளர்க்க கற்றுக்கொள்கிறான். தமிழ் திரைப்படங்களில் வருவது போல, குறுந்தாடி வைத்துக் கொள்கிறான், அக்குள் சேவிங்க் பண்ணிக் கொள்கிறான், மீசையை ட்ரிம் பண்ணுகிறான், டை அடித்துக் கொள்கிறான் என்பது போலல்லாமல் அழகாகவே கருகருவென மீசை வைத்துக் கொள்வதைப் பார்க்கிறோம் / நகைக்கிறோம். ஆனால், வட மாநிலங்களுக்குச் சென்று மீசை எடுக்க கற்றுக்கொள்ளும் நம்மவர்களின் முழுவதாக மழிக்காமல் அடியோடு ட்ரிம் செய்வதகாவே இருக்கிறது. நீ பாதி நான் பாதி என்பது போலவே நாம் மழிக்கும் மீசை நம்மில் பாதி, நமக்கு மரியாதையை பெற்றுதருகிறது என்பதை மறுக்க முடியாது. இது அனைத்து பிற மழிப்புகளுக்கும் பொருந்தும்.

சர்வதேச அளவில் அதிகமாக மழிக்கப்படும் முடிகள் வரிசையில் மீசை மழிப்பு இரண்டாவது இடத்தில் வருகிறது என்பதையும், அதற்கடுத்த நிலையிலேயே தாடி மழிப்பும் இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். துபாய் அரபிகளில் பெரும்பாலானோர் மீசை மழிப்பவர்களாக இருக்கின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர், பெங்காளியர், நேபாளியர் மற்றும் ஆப்கானியருக்கான பொது மழிப்பாக மீசை மழிப்பு இருக்கிறது. இவர்களுடைய மீசை மழிப்புக்கும், தாடி மழிப்புக்கும் ஒரே ப்ளேடை பயன்படுத்துவதால், இவர்களால் எளிதில் மழித்துக் கொள்ள முடிகிறது. தேவையிருக்கும் அனைவரும் மழித்துக் கொண்டுள்ளனர். ஆனால் தமிழர்களாகிய நம் பாடுதான் திண்டாட்டம், மீசை மழிப்பு ஒன்றினை கற்றுக்கொள்ளும் முன் (சில தவறான வெட்டினால்) நரக வேதனையுடன் அவமானப்பட வேண்டியிருக்கிறது. மீசை வெட்டுவது மட்டும் அல்ல, நம்மால் சேவிங்க் செய்யவே பழக்கம் இல்லாதிருந்தால் தாடி மழிக்க முயலும் போதும் இதே நிலைதான்.

தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவரும் மீசை வைத்துக் கொள்வது மகிழ்ச்சியளிப்பது போலவே, சிங்கப்பூர், மலேசியா பொன்ற நாடுகளில் மீசை வைத்துக் கொள்ளும் பழக்கம் இருப்பதால், அங்குவரும் மற்ற இந்திய மாநிலத்தவர் / நாட்டவர் மீசை வைத்துக் கொள்ள முகம் மாறுபட்ட அழகாக இருக்கிறது.


தமிழ் நாட்டில் மீசை மழிப்பு எதிர்ப்பு - ஒரு ப்ளேடு பார்வை.
1937, தமிழ்நாட்டில் (அப்போது சில ஆந்திர பகுதிகளையும் உள்ளடக்கியது) ஆங்கிலேயர் ஆட்சியில் காஜஜி தலைமையிலான அரசு 'உயர் நிலை பள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டாய மீசை மழிப்பு' என்ற சட்டம் கொண்டுவருகிறது. தீவிர தமிழ் ஆர்வலர்கள் சிலர் மற்றும் காஜாஜி எதிர்பாளர்கள் சிலரும் சேர்ந்து அத்திட்டத்தை எதிர்கின்றனர்.

மீசை மழிக்கும் போது போது சிலர் இரத்தக் காயம் பட்டனர் என்றும் வரலாறு சொல்கிறது. 1940, அதே காஜாஜியல் இச்சட்டம் திரும்ப பெறப்படுகின்றது. 1965, இந்திய அலுவல் அடையாளமான மீசை மழிப்பு மழித்தவுடன் 'ஒரே மூச்சாக, அரபிக்கடலில் தூக்கி எறியப்பட வேண்டும்' என்ற கொள்கையோடு 'முதலாம் மீசை மழிப்பு ஏற்பு மாநாடு' திருச்சியில் நடத்தப்படுகிறது.

முன்னதாக கடியரசு பத்திரிக்கை, 'மீசை மழிப்பது, பாரிய வழக்கம் என்பதாலும், குடுமி வைத்துக் கொண்ட ஒரு சாதியினரின் மத கோட்பாடுகளை முன்னிருத்தும் முயற்சியே மீசை மழிப்பு' என்றும், மேலும் 'மீசையை மழித்துகொண்டால், மீசையை மழித்துக் கொள்ளும் வட நாட்டவரைவிட நாம் தாழ்ந்த நிலையிலேயே இருக்க வேண்டிவரும்' என்பதாகவும் சொல்லிற்று. இயல்பான இனப்பற்று உணர்ச்சி மிகுதியில் மீசை வைத்துக் கொள்வது பலமாகவே நடந்திருக்கிறது. இதற்கு மா.பொ.சி மீசையே சாட்சி. மீசை மழிக்க ப்ளேடுடன் வந்தவர்கள் கடைவீதியில் அடித்து விரட்டப்பட்டிருக்கின்றனர். அவர்களின் சலூன் கடைகள் உடைத்து நொறுக்கப்பட்டன.

இதே நிலையில், தாடி எடுக்க சொல்லும் போது ஆங்கில எதிர்ப்பில் இருந்திருக்கின்றனர். அப்போதும், இவற்றை கண்டுகொள்ளாமல், தாடியை எடுத்துக் கொண்டவர்களின் சந்ததியின் வாழ்க்கைதரம் இன்று நல்ல நிலையில் உள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மீசை மழிப்பு எதிர்ப்பு முன்னுக்கு வர தாடி மழிப்பு எதிர்ப்பு பின்னால் சென்றது. அதைத்தொடர்ந்து நாவிதர் இயக்கங்கள், மீசை மழிப்பு அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றன. மத்திய ஆட்சியில் பங்குபெறும் திராவிட அரசுகளின் பிரதிநிதிகள் நாள் தோறும் மீசை மழித்துக் கொள்பவர்களும் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். இந்தியாவை ஆட்சி செய்ய மீசை மழிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பது, இயல்பான எதிர்பார்ப்பு.

மீசை மழிப்பு எதிர்ப்பு என்பது அரசியலாகவும், குடுமிவைத்துக் கொள்ளும் ஒரு சமுதாயத்தின் மீது அல்லது குடுமி மீது இருந்த / இருக்கும் வெறுப்பாகவுமே படுகிறது. ஒரு பொருளால் பலன்பெறும் அல்லது அந்தப்பொருள் இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கே புரியம் அப்பொருளின் அருமை. அப்பொருளுக்கு தொடர்பில்லாதவர்கள் அது கூடாதென்ற சாபம் இடக்கூடாது. அப்பொருளை பாவிக்காது, அதன் தீங்கு பற்றிய பொத்தாம்பொதுவான அவதானிப்பு கூடாது. ஒரு கற்பனை; எனக்கு மீசை இருந்தது, வட மாநிலத்திற்கு சென்றிருக்கிறேன். தமிழர்களுக்கெதிரான திடீர் கலவரம், மீசை எடுத்துக் கொண்டால் உயிர் பிழைப்பேன். சொல்லுங்கள்… நான் மீசை வைத்திருக்க வேண்டுமா? கூடாதா?

தாடியைத் தவிர வேறு மழிப்புகளை செய்வது கற்றுக்கொள்வது தவறா? பாவச் செயலா? அட, என்னங்க… உலகமயமாக்கலின் பலன்களை அனுபவித்து வரும் இந்த காலத்திலும், சேவிங்குக்கு தடைவிதிப்பது கட்டுப்பெட்டித்தனம் இல்லயா? முடிக்கு ஏது எல்லை, வளரும் சூழலும் வாய்ப்பும் இருப்பவன் மழித்துக் கொள்ளட்டும், அதை தடுக்கக்கூடாது. தனக்கு தாலையில் முடி நிறைய இருந்தால், வழுக்கையர்களை கிண்டல் அடிப்பது மனித இயல்பு. வேறு ஆள் கிடைக்காதவன் பூனையை…. மழிப்பதன் மூலம் யாருக்கும் எந்த கேடும் வந்துவிடாது. மழிப்பது முடி அளவு. சீனர்களைப் பார்த்தேனும் மீசையை மழித்துக் கொள், என்பதான சொல்லாடல்கள் மழித்தலை ஊக்குவிக்கின்றன.

நன்றி!
முடித்திருத்தம் செய்து கொண்டுவிட்டு குளிக்காமல், அவசரமாக எழுத முயற்சித்தது. கொஞ்ச நாளைக்கு தலைமுடி வெட்டத் தேவை இல்லை. எந்த கடையில் முடி வெட்டுகிறேன் என்கிற தகவல் அனுப்பணும்?

முகம் முழுவதும் மழிப்பதனால் தமிழன் தொன்மையை, பெருமையை மறந்துவிடக் கூடாது என்பதை மட்டும் நினைவில் கொண்டு, மழிப்பதற்கு நோ சொல்லாமல், முறையாக தாடி, மீசை மழித்துக் கொள்வது வாழ்வில் நலமுடன் முன்னேற அனைவரையும் வாழ்த்துகிறேன்

ஜெய்ஹிந்திபுரம் Said... பள்ளி மாணவர்கள் அனைவருக்குமே மீசை அரும்பும் பருவத்தில் மீசை மழிப்பு செய்வது எப்படி என்பது சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும், இல்லை என்றால் வரும்காலத்தில் வடமாநிலங்களுக்குச் செல்லும் போது அவர்கள் மீசையுடன் தனித்து அடையாளமாக நிற்பார்கள், தேச ஒற்றுமை சீர்கெடும். அனைத்து இந்திய ஆண்களுக்கும் பொது அடையாளமாக மீசை மழித்தல் அந்தந்த மாநிலங்களில் பள்ளிகளிலேயே இலவசமாகச் சொல்லிக் கொடுக்கப் படவேண்டும். உங்களுக்கு மீசை மீது ஆசை என்பதற்காக இலவசமாக சேவிங்க் சொல்லிக் கொடுப்பதை அரசியல் செய்து தடுக்காதீர்கள்

SanjaiGandhi Said...
நான் பள்ளிக்கூடம் படிக்கும் போது இந்த சட்டமெல்லாம் கொண்டுவராம விட்டுட்டாங்க பாவிகள். :(

இப்போ டெல்லிக்குப் போனா மீசையோடு ஆசையாக டீ கூட உறிஞ்சிக் குடிக்க முடியலை.. :(

ஊரான் புள்ளைங்க எல்லாம் மீசையோடு கஷ்டப் படனும்.. பேரப் புள்ளைங்க எல்லாம் மீசை எடுக்கனும்.. என்னா ஒரு கொள்ளுகை.. கூடுதலா ஒரு சேவிங் செய்து கொள்வதில் எந்த குத்தமும் இல்லை. எல்லாரும் மீசை மழித்துக் கொள்ளுங்கள். :)

54 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஜோ/Joe சொன்னது…

:))))))))))))))))))))))

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Unknown சொன்னது…

சாதாரண மயிருக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா???

-L-L-D-a-s-u சொன்னது…

சாதாரண மயிருக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா???

;) ;)

இந்த மசுரு அவசியமென்று நினைத்திருந்தேன் . இப்போது இந்த மசுரு இருக்கின்ற தலயே வெணுமான்னு நினக்கிறேன் ;).

-L-L-D-a-s-u சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
-L-L-D-a-s-u சொன்னது…

இது சாதாரண மசிரு இல்லை . தேசிய மசிரு ..

குழலி / Kuzhali சொன்னது…

:-))))))

குழலி / Kuzhali சொன்னது…

//L-L-D-a-s-u said...
இது சாதாரண மசிரு இல்லை . தேசிய மசிரு ..//
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Jawahar சொன்னது…

ஒரே விஷயத்துக்கு நீங்கள் நேற்று கொடுத்த முக்கியத்துவமும், இன்றைக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவமும் 180 டிகிரீ எதிராக இருக்கிறதே... இது திட்டமிட்ட நக்கலா அல்லது விபத்தா?

http://kgjawarlal.wordpress.com

Unknown சொன்னது…

தேச ஒற்றுமை சீர்கெடும். ///
வந்துடாங்கையா. தமிழனை அடையாளம் இல்லாமல் படுத்துவதற்கே இந்த நாய்கள் எல்லாம் உடனே தேச ஒற்றுமை தூ...
எனுங்கோ. சிக்கியனுட போய் மயிர வெட்டசொல்லுங்கள். மானம் கெட்ட தமிழன் நாளை தேச ஒற்றுமைக்காக தாயைகூட விற்பானுக்கள் இவங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//maathumai said...
தேச ஒற்றுமை சீர்கெடும். ///
வந்துடாங்கையா. தமிழனை அடையாளம் இல்லாமல் படுத்துவதற்கே இந்த நாய்கள் எல்லாம் உடனே தேச ஒற்றுமை தூ...
எனுங்கோ. சிக்கியனுட போய் மயிர வெட்டசொல்லுங்கள். மானம் கெட்ட தமிழன் நாளை தேச ஒற்றுமைக்காக தாயைகூட விற்பானுக்கள் இவங்கள்.//

நான் இந்தி திணிப்புக்கு எதிராக நகைச்சுவையாகத்தான் இதனை எழுதினேன். அரைகுறையாக புரிந்து கொண்டு

தவறான சொற்பதங்களைப் பயன்படுத்தாதீர்கள். யாரையாவது திட்டனும் என்றால் தாய், தங்கை என பெண்களை இழுப்பது தமிழர்களின் தரங்கெட்ட குணமாகவே இருக்கிறது. :(

Unknown சொன்னது…

sorry. but we respect mother than other race. thats what we see it as the worst. ok?

நட்புடன் ஜமால் சொன்னது…

இதுக்குமா ...


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

ஜெய்ஹிந்துபுரம், மதுரைக்காரர் பதிவுல கொலைவெறியோட இருந்த பின்னூட்டங்களைப் பார்த்துவிட்டு, நொந்து பொய் நான் அங்கே சொன்னது:
/மருத்துவர் புருனோ ஒரு கொலைவெறியோடு தான் பின்னூட்டங்களில் இறங்கியிருக்கிறார்!

அதுக்காக, இப்படியா?

சீரியல் கில்லர், மெகா சீரியல் எடுத்துக் கில்'றவர் மாதிரி, இத்தனை கில்லர் பின்னூட்டமா?

'அவன நிறுத்தச் சொல்லு! நான் நிறுத்திக்கறேன்' இது வடிவேலு கேட்டாக் காமெடி!

/சென்னையிலோ பெங்களூரிலோ பணிபுரிய வரும் இந்திக்காரர்கள் ஏன் தமிழோ கன்னடமோ கற்பதில்லை /
இதையே மருத்துவர் கேட்டா, செம காமெடி!

யார் சொன்னார்கள், அவர்கள் தமிழைக் கற்றுக் கொள்வதில்லை என்று?

தமிழை ஆதரிக்கிற பலபேர் பேசும் டமிலை விட, அவர்கள் நன்றாகவே தமிழ் பேசுவதைப் பார்த்ததில்லையா?/

கப்பில் சிப்பில் உலரினதுக்கு உங்களுக்கும், மருத்துவர் புருநோவுக்கும் தான் தசை அசைவுகளை ஏற்படுத்தியிருக்கிறமாதிரித் தெரிகிறது.
அங்க சும்மாக் கும்மு கும்முன்னு ஒரு இருநூற்றுப்பதினைந்து குத்துக் குத்தினது போதாதென்று, இங்கேயும் இரண்டாவது டோசா?

/ Jawarlal said...

ஒரே விஷயத்துக்கு நீங்கள் நேற்று கொடுத்த முக்கியத்துவமும், இன்றைக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவமும் 180 டிகிரீ எதிராக இருக்கிறதே... இது திட்டமிட்ட நக்கலா அல்லது விபத்தா?/

சரியாத் தான் கேட்டிருக்கார்!!

ஆ.ஞானசேகரன் சொன்னது…

சீனர்கள் மீசையை மழிப்பதிற்கு பதிலாக புடுங்குகின்றார்கள். இரண்டு நாணயம் கொண்டு அழகாக புடுங்குவதை பார்த்திருக்கின்றீர்களா????

Mahesh சொன்னது…

என்ன... ரெண்டு நாளா 'ரோமா'புரி ஆட்சியா இருக்கு? :))))))))))

Sanjai Gandhi சொன்னது…

ஏஞ்சாமி.. இம்புட்டு தான் முடிஞ்சதா? ஹ்ம்ம்.. இதுக்கும் திருமதி புகழ் முன்னேற்றக் ழகத்துல இருந்து வீரஆண்டியார் பேர்ல அறிக்க வருமோ? :))

ஆனாலும் உங்க பதிவு அழிச்சாட்டியம் தாங்கல கோவியாரே.. மசுரக் கூட விட்டு வைக்க மாட்டேன்றிங்க :))

இதுக்கெல்லாம் வக்கனையா வருவாரே கொழவி.
//குழலி / Kuzhali said...

:-))))))//

இவரு என்ன கொழலியா ஸ்மைலியா? :))

கல்வித் துறைல பெரும் புரட்சியே செய்துக் கொண்டிருக்கும் எங்க கபில்சிபலையா நக்கலடிக்கிறிங்க?.. கவனிச்சிக்கிறோம்.

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Sanjai Gandhi சொன்னது…

//தவறான சொற்பதங்களைப் பயன்படுத்தாதீர்கள். யாரையாவது திட்டனும் என்றால் தாய், தங்கை என பெண்களை இழுப்பது தமிழர்களின் தரங்கெட்ட குணமாகவே இருக்கிறது. :(//

சபாஷ்.

யார் மீதாவது கோபம் இருந்தால் அவரை மட்டும் குறிப்பிட்டு எப்படி வேண்டுமானாலும் உங்கள் கோவத்தை தீர்த்துக் கொள்ளுங்கள். எதுக்கு குடும்பத்தில் இருப்பவரை எல்லாம் குறிப்பிட்டுத் திட்டனும். அவர்கள் என்ன தவறு செய்கிறார்கள். ஒருவனை வேசிமகன் என்று சொன்னால் அது அவனை மட்டும் குறிப்பதில்லை. அவன் தாயையும் இழிவுபடுத்துகிறது. அவர் என்ன தவறு செய்தார்?

ஷாகுல் சொன்னது…

ஏண் நல்லாதானே போயிகிட்டு இருந்துச்சி?

குசும்பன் சொன்னது…

இன்னும் எனக்கு முடி முளைக்கவே இல்லையே என்ன செய்வது நான்?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நான் மீசையோட இருக்கிறேன்!

அதுக்காக...!

டீ குடிக்கனுமா?

:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தாடிக்கார தடியனுகளுக்கு மீசைக்காரன் அடிமையாகிப் போனது ஏன்?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

மொழிப்போர் தியாகிகள் இன்னும் உயிரோடு வாழ்கிறார்கள்!

பாவம்!

உயிரை விட்ட மாணவர்களைப் பற்றி எவனாவது பேசுகிறானா? அவர்களின் குடும்பங்கள்!?

அவர்களின் தியாகம் என்னவாயிற்று!?

ஆண்டுக்கு ஒரு முறை கொடியேத்தி வைத்தால் போதுமா?

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அச்சா கோவி ஜி,

Sanjai Gandhi சொன்னது…

//பாவம்!

உயிரை விட்ட மாணவர்களைப் பற்றி எவனாவது பேசுகிறானா? அவர்களின் குடும்பங்கள்!?

அவர்களின் தியாகம் என்னவாயிற்று!?//

அதானே.. கொலைப் பழி சுமத்தியதை தாங்காமல் நெருப்புக்கு இரையானவர்களைப் பற்றி கவலைப் படாமல் அண்ணனுடன் மறுபடி இணைந்த தம்பிகளும் வாழும் அரசியலில் தியாகத்தைப் பற்றி பேசலாமா ஜோதி சார்? :))

கோவி.கண்ணன் சொன்னது…

//அதானே.. கொலைப் பழி சுமத்தியதை தாங்காமல் நெருப்புக்கு இரையானவர்களைப் பற்றி கவலைப் படாமல் அண்ணனுடன் மறுபடி இணைந்த தம்பிகளும் வாழும் அரசியலில் தியாகத்தைப் பற்றி பேசலாமா ஜோதி சார்? :))//

ஹிஹி ! - 1992ல் காங்கிரசு திமுகவை கொலைகாரர்கள் என்று விமர்சனம் செயததை மறந்த காங்கிரசை சேர்ந்த சஞ்செய்காந்தி ன்னு சைன் போடுங்க சஞ்செய் !

Sanjai Gandhi சொன்னது…

அரசியலில் நிரந்தரப் பகைவனும் இல்லை.. நிரந்தர எதிரியும் இல்லை.. ஆனால் தியாகத்தைப் பற்றி எல்லாம் நினைவு படுத்தக் கூடாதுன்னு சொல்ல வ்ரேன்.. :)

ஓட்டுப் போடுங்கன்னு எழுதிட்டு, அது வேலைக்கு ஆகலைனு தெரிஞ்சதும் இப்போ ஓட்டூப் போடவேணாம்னு உளறியவர்கள் பேச்சைக் கேட்கலியேன்னு பொலம்பறதைக் கூட நினைவு படுத்தக் கூடாதுன்னும் சொல்ல வரேன்.. ;))

( உங்களுக்கு மட்டும் தான் சம்பந்தம் இல்லாம முடிச்சிப் போடத் தெரியுமா? எங்க சீனியர்ஸ் எல்லாம் திராவகக் கட்சிகளை எதிர்த்து அரசியல் பண்ணவங்க. நாங்க திராவகக் கட்சிகளுடன் இணைந்து அரசியல் கத்துக்கிறவங்க. உங்களுக்கு இணையாக இல்லைனாலும் பக்கத்துலையாவது பதில் சொல்வோம் சாமியோவ்..;) )

கோவி.கண்ணன் சொன்னது…

// SanjaiGandhi said...
அரசியலில் நிரந்தரப் பகைவனும் இல்லை.. நிரந்தர எதிரியும் இல்லை.. ஆனால் தியாகத்தைப் பற்றி எல்லாம் நினைவு படுத்தக் கூடாதுன்னு சொல்ல வ்ரேன்.. :)

//

ஆமாம் சஞ்செய் தம்பி,

பாளையம் கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலேன்னு ஹனிபா பாட்டு இன்னும் காதுல ஒலிக்குது,

மிசா கொடுமையெல்லாம் மறந்துட்டு 'கை' குலுக்கனும் என்றால் அது தியாகம் தானே கை கொடுக்கிறவங்களுக்கு குலுக்குறவங்களுக்கும்.
:)

Sanjai Gandhi சொன்னது…

என்ன கோவிஜி நீங்க? எம்மாவாட்டி சொல்றது.. தியாகத்தை எல்லாம் நினைக்கக் கூடாதுன்னு.

Sanjai Gandhi சொன்னது…

//பாளையம் கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலேன்னு ஹனிபா பாட்டு இன்னும் காதுல ஒலிக்குது, //

பல்லிகள் ஓகே. அதென்ன பாம்புகள்? அவர்களென்ன பாம்பாட்டிகளா? :)) இன்னுமாய்யா இந்த ஒலகம் அந்த பாட்டையும் வரிகளையும் நம்புது? :))

அப்பாவி முரு சொன்னது…

ரத்தப் பொறியல் சூப்பரா இருக்கு...

கபிலன் சொன்னது…

" இந்தியா பொன்ற பல மழிப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள நாடுகளில், மாநில எல்லைகள் மழிப்புகளால் மழிக்கப்பட்டிருப்பதால், அந்தந்த மாநிலங்களில் மழிப்புகளில் உள்ள முடி மழிப்பே அவரவர் மழிப்பு வழக்கம் எனலாம். "

எப்படி...எப்படி இதெல்லாம்...
முடியல...
: )

வால்பையன் சொன்னது…

உடலில் மிக மெல்லிய பகுதி மூக்குக்கு கீழிருக்கும் உதடு! மீசை இருக்கட்டும்!

ஒருத்தர் மீசை வைக்கணுமா வேண்டாமான்னு அரசு முடிவு பண்ணுச்சுன்னா இது ஜனநாயக நாடல்ல!

கிரி சொன்னது…

//ஜெகதீசன் said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

:-))))))))))))

மீசைக்குள்ள! இவ்வளோ இருக்கா ;-)

சிங்கக்குட்டி சொன்னது…

என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.

http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html

என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி

சி தயாளன் சொன்னது…

மீசையை வைத்து இப்படி ஒரு க(இ)டியா..i like it...:-)))

பதி சொன்னது…

:-))))

பீர் | Peer சொன்னது…

தேச ஒற்றுமைக்கும் தாடியை பொருத்திப் பார்க்கும் உம் நுகபிநி.

TBCD சொன்னது…

அவ் !

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

//வால்பையன்


உடலில் மிக மெல்லிய பகுதி மூக்குக்கு கீழிருக்கும் உதடு! மீசை இருக்கட்டும்!

ஒருத்தர் மீசை வைக்கணுமா வேண்டாமான்னு அரசு முடிவு பண்ணுச்சுன்னா இது ஜனநாயக நாடல்ல!
///

தாறுமாறாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி

வழிமொழிகிறேன்.

பீர் | Peer சொன்னது…

சற்றுமுன் கிடைத்த செய்தி,

கோவியாரின் மாண்புமிகு மருத்துவ சமூகம் ! என்ற இடுகையை வாசித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மருத்துவ சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இந்ந அறிக்கையை வெளியிட்டாராம்.

சென்ற வாரம் ஒரு சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த கோவியார் இந்த வாரம் அதே சமுக முன்னேற்றத்தை தடுக்கிறார், என்று அதே அமைச்சரே மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்போவதாக நம்பத்தகுந்த பதிவுலக சதுரங்கள் தெரிவிக்கின்றன.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/Blogger பீர் | Peer said...

சற்றுமுன் கிடைத்த செய்தி,

கோவியாரின் மாண்புமிகு மருத்துவ சமூகம் ! என்ற இடுகையை வாசித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், ஒரு அறிக்கை வெளியிடப்போவதாக நம்பத்தகுந்த பதிவுலக சதுரங்கள் தெரிவிக்கின்றன./

பீர்! பாத்துக்கோங்க! மறுபடியும் பின்னூட்டக் குத்தல்கள், குதறல்களைத் தொடர மருத்துவரை நீங்களே வலிய அழைப்பது போலாகி விடப்போகிறது:-))

மருத்துவக்கடிகளுக்கு இன்னமும் தடுப்பூசி கண்டுபிடிக்கலையாம்!

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

மீசை வச்சு, மழிக்கிறவர் கதையைத் தமிழ் மணம் கமழ இங்கேயும் படிக்கலாம்!

http://consenttobenothing.blogspot.com/2009/08/blog-post_26.html

படிச்சுப்பாத்துட்டு, தமிழ்மணம் கமழ்ந்ததா, ரத்த வாடையடிச்சதான்னுட்டு கொஞ்சம் சொல்லுங்க!

கோவி.கண்ணன் சொன்னது…

ஜெகதீசன்,
ஜோ,

நன்றி !

மஸ்தான், சாதாரண மயிரா.....அது இல்லாதவங்க மனக்கஷ்டத்தில் பணம் கரையுது :)

// -L-L-D-a-s-u said...இந்த மசுரு அவசியமென்று நினைத்திருந்தேன் . இப்போது இந்த மசுரு இருக்கின்ற தலயே வெணுமான்னு நினக்கிறேன் ;).//

தாஸ் அது அது அது !!

//குழலி / Kuzhali said...
:-))))))
//
நன்றி !


***********************

//Jawarlal said...
ஒரே விஷயத்துக்கு நீங்கள் நேற்று கொடுத்த முக்கியத்துவமும், இன்றைக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவமும் 180 டிகிரீ எதிராக இருக்கிறதே... இது திட்டமிட்ட நக்கலா அல்லது விபத்தா?

http://kgjawarlal.wordpress.com
//

எழுதிவிட்டு தான் நினைத்தேன். ஆக இரண்டு நாளாக ஒரே முடியோ(வோ)டு தான் பதிவு !

/maathumai said...
sorry. but we respect mother than other race. thats what we see it as the worst. ok?
//
நன்றி, இருந்தாலும் எய்தவர் இருக்க அம்பை நோகக் கூடாது

//அங்க சும்மாக் கும்மு கும்முன்னு ஒரு இருநூற்றுப்பதினைந்து குத்துக் குத்தினது போதாதென்று, இங்கேயும் இரண்டாவது டோசா?
//

கிருஷ்ண மூர்த்தி ஐயா,

அங்கே 215க்கு கும்முக்கும் 'எனக்கு வலிக்கையையேன்னு' அவரு சொன்னதால் தான் இங்கே டார்க் ரூம் டார்சர்.

// நட்புடன் ஜமால் said...
இதுக்குமா ...


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
சீனர்கள் மீசையை மழிப்பதிற்கு பதிலாக புடுங்குகின்றார்கள். இரண்டு நாணயம் கொண்டு அழகாக புடுங்குவதை பார்த்திருக்கின்றீர்களா????
//

சீனர்கள் பெரும் புடுங்கிகள்னு சொல்றிங்க, நான் அந்த அற்புத காட்சியை பார்த்தது இல்லை. கொடுப்பினை இருக்கனும்ல :)

//Mahesh said...
என்ன... ரெண்டு நாளா 'ரோமா'புரி ஆட்சியா இருக்கு? :))))))))))
//

எல்லாம் இட்டாலி அம்மையாரை நினைச்சா வருது ! :)

//ஆனாலும் உங்க பதிவு அழிச்சாட்டியம் தாங்கல கோவியாரே.. மசுரக் கூட விட்டு வைக்க மாட்டேன்றிங்க :))
//

சஞ்செய் உசிர விட்டாலும் ...... :)

// ஷாகுல் said...
ஏண் நல்லாதானே போயிகிட்டு இருந்துச்சி?

3:03 PM, August 31, 2009
//

இதுவும்தான் ! நல்ல போய்கிட்டு இருக்கு !

// குசும்பன் said...
இன்னும் எனக்கு முடி முளைக்கவே இல்லையே என்ன செய்வது நான்?
//

சரவணா...எதுக்கும் சிடி ஸ்கேன் எடுத்துப் பாரு... வேறென்ன மிஸ்ஸிங் தெரியும் :)

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
மொழிப்போர் தியாகிகள் இன்னும் உயிரோடு வாழ்கிறார்கள்!

பாவம்!

உயிரை விட்ட மாணவர்களைப் பற்றி எவனாவது பேசுகிறானா? அவர்களின் குடும்பங்கள்!?

//

ஜோதிபாரதி,

காங்கிரசு கூட்டணியில் இல்லாத போது பேசுறாங்களே !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
அச்சா கோவி ஜி,
//

பகுத் அச்சா ஜோசப் பாய்....!

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
ரத்தப் பொறியல் சூப்பரா இருக்கு...

6:53 PM, August 31, 2009
//
நர நர... !

//எப்படி...எப்படி இதெல்லாம்...
முடியல...
: )//

கபிலன், எதிர்பதிவு எழுதுவது எவ்ளோ கஷ்டம் தெரியுமா ?

//ஒருத்தர் மீசை வைக்கணுமா வேண்டாமான்னு அரசு முடிவு பண்ணுச்சுன்னா இது ஜனநாயக நாடல்ல!//

வால் அரசாங்க 'தில்லு முல்லு' ன்னு சொல்றிங்க சரியய ?

//கிரி said...
//ஜெகதீசன் said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

:-))))))))))))

மீசைக்குள்ள! இவ்வளோ இருக்கா ;-)
//

கிரி நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//சிங்கக்குட்டி said...
என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.

http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html

என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி
//

சிங்கக்குட்டிக்கு அங்கன நன்றி சொல்லியாச்சு !


//’டொன்’ லீ said...
மீசையை வைத்து இப்படி ஒரு க(இ)டியா..i like it...:-)))
//

கடி / இடி அல்ல இது பகடி !

************

பதி நன்றி !

//பீர் | Peer said...
தேச ஒற்றுமைக்கும் தாடியை பொருத்திப் பார்க்கும் உம் நுகபிநி.
//

தாடியை பொருத்திப் பார்க்க மீசையை எடுத்துப் பார்க்கிறேன் :)

//TBCD said...
அவ் !
//
ஹவ் ? :)

//பி]-[த்]-[த]-[ன்] said...


தாறுமாறாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி

வழிமொழிகிறேன்.
//

ரைட்டு, உன்கிட்ட நேசனல் பர்மிட்டு இருக்கு !

// பீர் | Peer said...
சற்றுமுன் கிடைத்த செய்தி,

கோவியாரின் மாண்புமிகு மருத்துவ சமூகம் ! என்ற இடுகையை வாசித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், மருத்துவ சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இந்ந அறிக்கையை வெளியிட்டாராம்.

சென்ற வாரம் ஒரு சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த கோவியார் இந்த வாரம் அதே சமுக முன்னேற்றத்தை தடுக்கிறார், என்று அதே அமைச்சரே மீண்டும் ஒரு அறிக்கை வெளியிடப்போவதாக நம்பத்தகுந்த பதிவுலக சதுரங்கள் தெரிவிக்கின்றன.

1:01 AM, September 01, 2009
//

சென்ற வாரம் ஒரு சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த கோவியார் இந்தவாரம் கட்சி மாறல காட்சி மா(ற்)றி இருக்கிறார்

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணமூர்த்தி said...
மீசை வச்சு, மழிக்கிறவர் கதையைத் தமிழ் மணம் கமழ இங்கேயும் படிக்கலாம்!

http://consenttobenothing.blogspot.com/2009/08/blog-post_26.html

படிச்சுப்பாத்துட்டு, தமிழ்மணம் கமழ்ந்ததா, ரத்த வாடையடிச்சதான்னுட்டு கொஞ்சம் சொல்லுங்க!//

உங்கள் அக்பர் கதையை படிச்சாச்சு !
திரட்டியில் இணைத்தால் தான்
தமிழ்மணம் கமழ்ந்ததான்னு சொல்ல முடியும் :)

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

மாண்புமிகு மருத்துவச் சமூகத்தைப் பத்திக் கொஞ்சம் மனம் நெகிழ வைக்கும் பதிவு:

இன்று காலை ஜெயா செய்திகளில் ஒரு நெகிழ்ச்சியுற வைத்த செய்தித் தொகுப்பு.

சேலத்தில் ஐயனார் என்ற ஒரு முதிய முடிதிருத்தும் தொழிலாளி. இவர் மாதம் ஒருமுறை சேலத்திலுள்ள ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்கிருப்பவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தும் மற்றும் ஷவரம் செய்யும் சேவையை செய்து வருகிறார். மேலும் அவரிடம் முடிதிருத்த வரும் ஏழை மக்களிடமும் பணம் வாங்குவதில்லையாம். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது., "எனக்கு பார்வை நல்லா தெரியற வரைக்கும் இதை தொடர்ந்து செஞ்சுகிட்டு வருவேன் சார். எனக்கு ஏழைகளுக்கு உதவணுங்கற எண்ணம் உண்டு ஆனா எனக்கு வசதி இல்ல அதனால என் தொழில் மூலமா மாசம் ஒரு முறை இத பண்ணிகிட்டு வரேன். எனக்கு கண்பார்வை நல்லா இருக்கற வரை இத செய்வேன்" என்று மிகவும் அடக்கமாகக் கூறினார்.


கொடைப்பணக்காரர்கள் அடுத்தவர்களுக்கு ஐந்து பைசா ஈவதற்கு மனமில்லாமல் இருக்கையில், இவர் மனதளவில் அனைவரையும் விட பணக்காரராக இருக்கிறார். இறைவன் இவருக்கு மேலும் பல்லாண்டு காலம் மங்காத பார்வையை அளித்து இவரது சேவையைத் தொடரச் செய்வாராக!!

- எதிராஜன்
http://idlyvadai.blogspot.com/2009/09/blog-post.html

கோவி.கண்ணன் சொன்னது…

//கொடைப்பணக்காரர்கள் அடுத்தவர்களுக்கு ஐந்து பைசா ஈவதற்கு மனமில்லாமல் இருக்கையில், இவர் மனதளவில் அனைவரையும் விட பணக்காரராக இருக்கிறார். இறைவன் இவருக்கு மேலும் பல்லாண்டு காலம் மங்காத பார்வையை அளித்து இவரது சேவையைத் தொடரச் செய்வாராக!!//

கிருஷ்ண மூர்த்தி ஐயா,

ஐயா ஐயனார் அவரைப் பற்றிய தகவல் அளித்ததற்கு நன்றி !

மழை பெய்யறத்துக்கு கடவுள் காரணாமா இல்லையான்னு சொல்றதைவிட இவரை போல் இருக்கும் ஆட்கள் காரணம் என்று சொல்லலாம். பெரியவருக்கு பாராட்டுகள்.

சிங்கக்குட்டி சொன்னது…

பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.

http://s1023.photobucket.com/albums/af360/singakkutti/?action=view&current=singakkutti-awad.gif

நன்றி.பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.

http://s1023.photobucket.com/albums/af360/singakkutti/?action=view&current=singakkutti-awad.gif

நன்றி.பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.

http://s1023.photobucket.com/albums/af360/singakkutti/?action=view&current=singakkutti-awad.gif

நன்றி.

priyamudanprabu சொன்னது…

ஒருத்தர் மீசை வைக்கணுமா வேண்டாமான்னு அரசு முடிவு பண்ணுச்சுன்னா இது ஜனநாயக நாடல்ல!

அதே அதே


எனக்கு தேவைனா வச்சுக்கிறேன்
இல்லாட்டி எடுத்துவிடுகிறேன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்