பின்பற்றுபவர்கள்

23 ஜூன், 2008

மனைவிக்கும் துணைவிக்கும் என்ன வேறுபாடு ?

இந்த செய்தியை படிச்சுட்டு கருத்து சொல்லுங்க !

"நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, மு.க.தமிழரசு, மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினிஸ மருமகள் ஸ்ரீநிதி, மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸின் மனைவி செளமியா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்."

இந்த பதிவிற்கு செய்தி எதுவும் இல்லை, எனவே டிஸ்கி போட்டுக் கொள்கிறேன்.
டிஸ்கி : வேறொன்றும் உள்நோக்கம் இல்லை, காலையில் போட்ட முருகன் படத்தைப் போலவே ஐயம் தீர்த்துக் கொள்ள முற்படுகிறேன். அந்த செய்தியைப் படித்ததும் முருகன் ஞாபகம் தான் வருகிறது.

65 கருத்துகள்:

முகவை மைந்தன் சொன்னது…

மனைவி - கட்டிக் கொண்டவர்
துணைவி - சேர்த்துக் கொண்டவர்

பொருந்துமா? எதற்கு இன்னமும் இப்படிப் பிரித்து எழுதுகிறார்களோ? மனைவியர் என்றே குறிப்பிட்டு விடலாம். ஆமா, இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு?

Subbiah Veerappan சொன்னது…

கணவனுக்கும் துணைவனுக்கும் என்ன வித்தியாசமோ அதே வித்தியாசம்தான் இதற்கும்!

இது எப்படி இருக்கு ஹ,ஹ,ஹாஆ....!:_))))

TBR. JOSPEH சொன்னது…

இது தமாஷுக்காகத்தான். யாரும் தப்பா நினைச்சிக்கக் கூடாது.

மனைவின்னா மணையில (அதாவது வீட்டுல) இருக்கறவர். துணைவின்னா கூடவே (அதாவது எப்பவும்) இருக்கறவர்.

அப்ப இணைவின்னு சொல்றாங்களே அதுக்கெ என்ன அர்த்தம்.

நீங்க வேற. இது வெறும் எழுத்துப்பிழையா இருக்குங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவை மைந்தன் said...
மனைவி - கட்டிக் கொண்டவர்
துணைவி - சேர்த்துக் கொண்டவர்

பொருந்துமா? எதற்கு இன்னமும் இப்படிப் பிரித்து எழுதுகிறார்களோ? மனைவியர் என்றே குறிப்பிட்டு விடலாம். ஆமா, இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு?
//

முகவை,

அதைக் இனம் பிரித்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. தட்ஸ் தமிழ் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் ஆதரவாளர்களோ ?

சத்தியமாக இது ஊகம் தான்.

:)

செய்தி ஊடகங்கள் செய்யும் உள்குத்து அரசியல்கள் பார்க்கும் போது அவை அரசியலை அசைத்துப் பார்க்கும் தூண்கள் என்பது உண்மை என்றே விளங்குகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
கணவனுக்கும் துணைவனுக்கும் என்ன வித்தியாசமோ அதே வித்தியாசம்தான் இதற்கும்!

இது எப்படி இருக்கு ஹ,ஹ,ஹாஆ....!:_))))
//

அப்படியா சொல்கிறீர்கள் ?

இவர்கள் இனம் பிரித்துச் சொல்லி இருப்பதைப் பார்க்கும் போது துணைவன் என்று கணவனைச் சொன்னால் பொருள் மாறிவிடும் போல் தெரிகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//டி.பி.ஆர் said...
இது தமாஷுக்காகத்தான். யாரும் தப்பா நினைச்சிக்கக் கூடாது.

மனைவின்னா மணையில (அதாவது வீட்டுல) இருக்கறவர். துணைவின்னா கூடவே (அதாவது எப்பவும்) இருக்கறவர்.

அப்ப இணைவின்னு சொல்றாங்களே அதுக்கெ என்ன அர்த்தம்.

நீங்க வேற. இது வெறும் எழுத்துப்பிழையா இருக்குங்க.
//

நல்ல கற்பனைதான்.

மனைவி வீட்டில் இருப்பவர், துணைவி அலுவலக வேலைகளுக்கு துணையாக இருப்பவர்.

இணைவி என்றால் - சரிக்கு சமமாக கணவரிடம் நடந்து கொள்பவர் என்று சொல்லலாமா ?
:)

Sivaram சொன்னது…

//அதைக் இனம் பிரித்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. //

அவசியம் சட்டத்திற்காகத்தான்..இந்து திருமண சட்டப் படி ஒரு மனைவி மட்டுமே இருக்க முடியும்.

துணைவிகளைப் பற்றி ,சட்டம் எதுவும் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன்..

லக்கிலுக் சொன்னது…

கலைஞரின் மனைவி தயாளு அம்மாள்.

கலைஞரின் மகள் கனிமொழி அவர்களின் தாயார் ராஜாத்தி அம்மாள் கலைஞருக்கு துணைவியார்.

விளக்கம் போதுமா? 1972லேயே பண்ரூட்டியார் சட்டமன்றத்தில் இந்த விளக்கத்தை கொடுத்திருக்கிறார்!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜீவன் said...
//அதைக் இனம் பிரித்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. //

அவசியம் சட்டத்திற்காகத்தான்..இந்து திருமண சட்டப் படி ஒரு மனைவி மட்டுமே இருக்க முடியும்.

துணைவிகளைப் பற்றி ,சட்டம் எதுவும் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன்..

2:21 PM, June 23, 2008
//

ஜீவன் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, முதல் மனைவி எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் சட்டம் ஒன்றும் செய்யாது. இரண்டாவதும் மனைவி என்றே சொல்லப்படும்...சொத்துபிரச்சனை வராமல் இருக்க இரண்டாவது மனைவிக்கும் பதிவு திருமணம் தேவைப்படும்.

bala சொன்னது…

//மனைவிக்கும்,துணைவிக்கும் என்ன வேறுபாடு?//

கோவி.மு.கண்ணன் அய்யா,

ப்பூ,இது என்ன கேள்வி?மனைவி,தயாளு(kind Heart) வா இருந்தா,ராசாத்தி(King's Keep),துணைவியா வருவாங்க.ஆனா, அதுக்கு King கருணையில்லாம வெறும் நிதி படைத்தவரா இருக்க வேண்டும்.

பாலா

PS

விக்ரமனின் இந்த சரியான பதிலால்,அவன் மெளனம் கலைந்துவிடவே,கோவி.மு.வேதாளம் மீண்டும் மரத்தின்மீதேறி..

கோவி.கண்ணன் சொன்னது…

// bala said...

கோவி.மு.கண்ணன் அய்யா,

ப்பூ,இது என்ன கேள்வி?மனைவி,தயாளு(kind Heart) வா இருந்தா,ராசாத்தி(King's Keep),துணைவியா வருவாங்க.ஆனா, அதுக்கு King கருணையில்லாம வெறும் நிதி படைத்தவரா இருக்க வேண்டும்.

பாலா

PS
//

ஜயராமன் சார்

மிக்க நன்றி.

TBR. JOSPEH சொன்னது…

விளக்கம் போதுமா? லக்கிலுக்//

போறும்யா! இப்படியொரு விளக்கம் சட்டமன்றத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளதா? அது தெரியாம என்ன கண்ணன்?

முகவை மைந்தன் சொன்னது…

@லக்கிலுக்

ஏன் சட்டமன்றத்தில் விளக்கம் அளிக்கப் பட்டது? கொண்டவர் இருக்க, பண்ருட்டி ராமச்சந்திரன் எதற்கு விளக்கமளித்தார்?

Subramanian சொன்னது…

ஏங்க இவ்வளவு சப்பைக்கட்டு?
மனைவி என்னா பொண்டாட்டி.துணைவின்னா வப்பாட்டி.பொண்டாட்டி பொண்டாட்டிதான்.வப்பாட்டி வப்பாட்டி தான்.இரண்டும் ஒன்றாகாது.

தருமி சொன்னது…

//ஆமா, இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு?//

ரிப்பீட்டேய்!!!

ஒருவேளை கடவுளையும் கலைஞரையும் ஒண்ணா வச்சி பார்க்கிறீங்களோ .. நடத்துங்க ..நடத்துங்க ..

ஈஷ்வரா ..

FunScribbler சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கோவி.கண்ணன் சொன்னது…

அன்பர்களே, நண்பர்களே...கலைஞரை கும்முவதற்காக இந்த பதிவு எழுதப்படவில்லை. தூணைவிக்கும், மனைவிக்கும் என்ன வேறுபாடு என்பதற்காக கேட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

அன்பர்களே, நண்பர்களே...கலைஞரை கும்முவதற்காக இந்த பதிவு எழுதப்படவில்லை. தூணைவிக்கும், மனைவிக்கும் என்ன வேறுபாடு என்பதற்காக கேட்டேன்.

லக்கிலுக் சொன்னது…

//திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
ஏங்க இவ்வளவு சப்பைக்கட்டு?
மனைவி என்னா பொண்டாட்டி.துணைவின்னா வப்பாட்டி.பொண்டாட்டி பொண்டாட்டிதான்.வப்பாட்டி வப்பாட்டி தான்.இரண்டும் ஒன்றாகாது.
//

உண்மைத்தமிழன் அண்ணாச்சி, கலக்கிட்டீங்க போங்க :-)

//போறும்யா! இப்படியொரு விளக்கம் சட்டமன்றத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளதா?//

ஜோசப் சார்! இப்படியொரு பிரச்சினை சட்டமன்றத்திலேயே எழுப்பப்பட்டது என்பது தான் சரி :-)

//ஏன் சட்டமன்றத்தில் விளக்கம் அளிக்கப் பட்டது? கொண்டவர் இருக்க, பண்ருட்டி ராமச்சந்திரன் எதற்கு விளக்கமளித்தார்?//

முகவை மைந்தன்!

இருதார தடைசட்டம் வந்தபோது காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் இந்தப் பிரச்சினையை எழுப்பினார். முதல்வரே சட்டத்தை மீறியிருக்கிறாரே என்று கேட்டார். அப்போது தான் பண்ரூட்டி எழுந்து இந்த வினோத விளக்கத்தை அளித்தார்.

லக்கிலுக் சொன்னது…

அப்புறம் கோவி.மு.கண்ணன் அய்யா (நன்றி : ஜயராமன் சார்)

”கோயிங் ஸ்டெடி” என்றால் என்னவென்று கேட்டும் ஒரு பதிவு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

”ஐ யாம் கோயிங் ஸ்டெடி வித் ஷோபன் பாபு” என்றொரு நடிகை முன்பொருமுறை சொல்லி இருந்தார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...

லக்கிலுக் ஐயங்கார்,
(பெயர் கிருஷ்ணகுமார் அப்ப ஐயங்கார் என்று சொல்வது தான் சரி)

கலைஞரைக் குறிப்பிட்டு இருப்பதாக நினைத்து ஏன் இப்படி கோபக்கனை தொடுக்கிறீர்கள், எம்ஜிஆர் முதல் காளிமுத்துவரை துணைவி மனைவி உடையவர்களே, இதுல கலைஞரை சொல்லியதாக நினைப்பது தவறு, இடம் சுட்டி பொருள் விளக்கம் கேட்டேனேயன்றி வேறொன்றும் இல்லை.

கோயிங்க் ஸ்டெடி ? அதுபற்றி எழுதத்தான் நீங்க இருக்கிறீர்களே ?

Athisha சொன்னது…

வூட்ல சொல்ற பொண்ண கண்ணாலம் கட்டிகினா மனைவி

நம்மாலா எதுனா உஷார் பண்ணி, கட்டிகினா துணைவி

(உதவி ; கொருக்குபேட்டை கபாலி)

இன்னா தலீவா இந்த விளக்கம் போதுமா

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிஷா said...
வூட்ல சொல்ற பொண்ண கண்ணாலம் கட்டிகினா மனைவி

நம்மாலா எதுனா உஷார் பண்ணி, கட்டிகினா துணைவி

(உதவி ; கொருக்குபேட்டை கபாலி)

இன்னா தலீவா இந்த விளக்கம் போதுமா
//

அதிஷா... இது டூ மச்...அப்போ காதல் கல்யாணம் செய்து கொண்டால் மனைவிக்கு பெயர் துணைவியா ?

Subbiah Veerappan சொன்னது…

/////லக்கிலுக் said...
//திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
ஏங்க இவ்வளவு சப்பைக்கட்டு?
மனைவி என்னா பொண்டாட்டி.துணைவின்னா வப்பாட்டி.பொண்டாட்டி பொண்டாட்டிதான்.வப்பாட்டி வப்பாட்டி தான்.இரண்டும் ஒன்றாகாது.
//
உண்மைத்தமிழன் அண்ணாச்சி, கலக்கிட்டீங்க போங்க :-)////

அவரும் இவரும் ஒரே ஆள் தானா?
இன்னும் எத்தனை பேர்களில் அவர் வலம் வருகிறார் லக்கியாரே?
கொஞ்சம் போட்டுக்... இல்லை ...இல்லை..... கொஞ்சம் விளக்கினால்
வலைப்பதிவில் உள்ள உயிர்கள் உங்களை வணங்கும்!

வாத்தியாரே,

லக்கி சொன்னதை நான் நம்பவில்லை.

உண்மைத்தமிழன் எனக்கு அப்படியெல்லாம் வேறொரு பெயரில் பின்னூட்டவதற்கான தேவை இல்லை. அவர் பெயரிலேயே எப்போதும் போடுவார்.

Athisha சொன்னது…

கோவிண்ணா

வூட்ல சொல்ற பொண்ண கண்ணாலம் கட்டிகினா மனைவி

அதுக்கப்பறம்

நம்மாலா எதுனா உஷார் பண்ணி, கட்டிகினா துணைவி

இப்ப கரீட்டா வர்தா

மங்களூர் சிவா சொன்னது…

நல்ல பதிவு விளக்கம் அறிய ஆவலாக இருக்கிறேன்..

Subbiah Veerappan சொன்னது…

////வாத்தியாரே,
லக்கி சொன்னதை நான் நம்பவில்லை
உண்மைத்தமிழன் எனக்கு அப்படியெல்லாம் வேறொரு பெயரில் பின்னூட்டவதற்கான தேவை இல்லை. அவர் பெயரிலேயே எப்போதும் போடுவார்.////

லக்கியார் என்றால் ஒரு மரியாதை இருக்கிறது!
அவர் எதற்காக பொய் சொல்ல வேண்டும் அல்லது சுற்ற விட வேண்டும்?

குழப்புகிறீரே கோவியாரே!
இருங்கள் மீண்டும் வந்து அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிஷா said...
கோவிண்ணா

வூட்ல சொல்ற பொண்ண கண்ணாலம் கட்டிகினா மனைவி

அதுக்கப்பறம்

நம்மாலா எதுனா உஷார் பண்ணி, கட்டிகினா துணைவி

இப்ப கரீட்டா வர்தா
//
ம்ஹூம் பொருள் இப்பவும் சரியாக வரலை.

அருகில் இருப்பவர் மனைவி...மனதில் இருப்பவர் துணைவி
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
நல்ல பதிவு விளக்கம் அறிய ஆவலாக இருக்கிறேன்..

4:54 PM, June 23, 2008
//

சிவா,

உங்கள் வருங்கால பார்டனர் மனைவியா துணைவியான்னு தெரிந்து கொள்ளப் போகிறீர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
////வாத்தியாரே,
லக்கி சொன்னதை நான் நம்பவில்லை
உண்மைத்தமிழன் எனக்கு அப்படியெல்லாம் வேறொரு பெயரில் பின்னூட்டவதற்கான தேவை இல்லை. அவர் பெயரிலேயே எப்போதும் போடுவார்.////

லக்கியார் என்றால் ஒரு மரியாதை இருக்கிறது!
அவர் எதற்காக பொய் சொல்ல வேண்டும் அல்லது சுற்ற விட வேண்டும்?

குழப்புகிறீரே கோவியாரே!
இருங்கள் மீண்டும் வந்து அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!
//

வாத்தியாரே,

இதற்கு விளக்கம் லக்கிக் கொடுப்பதைவிட தம்பி உ.தமிழன் கொடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அல்லது தி.சர்தார் வந்து 'நான் அவரில்லை' என்று சொல்லனும்

லக்கிலுக் சொன்னது…

//அவரும் இவரும் ஒரே ஆள் தானா?
இன்னும் எத்தனை பேர்களில் அவர் வலம் வருகிறார் லக்கியாரே?
கொஞ்சம் போட்டுக்... இல்லை ...இல்லை..... கொஞ்சம் விளக்கினால்
வலைப்பதிவில் உள்ள உயிர்கள் உங்களை வணங்கும்!//

உண்மைத்தமிழன் திண்டுக்கல் சர்தாரா இல்லையா என்று தோழர் வரவனையான் தான் நேரில் வந்து சொல்ல வேண்டும்! :-))))

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
//அவரும் இவரும் ஒரே ஆள் தானா?
இன்னும் எத்தனை பேர்களில் அவர் வலம் வருகிறார் லக்கியாரே?
கொஞ்சம் போட்டுக்... இல்லை ...இல்லை..... கொஞ்சம் விளக்கினால்
வலைப்பதிவில் உள்ள உயிர்கள் உங்களை வணங்கும்!//

உண்மைத்தமிழன் திண்டுக்கல் சர்தாரா இல்லையா என்று தோழர் வரவனையான் தான் நேரில் வந்து சொல்ல வேண்டும்! :-))))
//

லக்கி ஐயங்கார்,

ஏன் தோழர் வரவனை மீது இப்படி ஒரு கொலைவெறி ?

துளசி கோபால் சொன்னது…

இப்படியெல்லாமா ஒரு கன்ஃப்யூஷன்?

//கணவனுக்கும் துணைவனுக்கும் என்ன வித்தியாசமோ அதே வித்தியாசம்தான் இதற்கும்!//

என்னைப்பொருத்தவரை

கணவன் (கோபால்)வேலைக்குப்போய் சம்பாரிச்சுக் கொண்டுவர்றவர்

துணைவன்( கோபால கிருஷ்ணன்) வீட்டுலேயே 24 மணி நேரமும் என்கூடவே எனக்குத் துணையா இருக்கறவர் மியாவ்:-))))

இப்பப் புரியுதுங்களா?

Subbiah Veerappan சொன்னது…

/////Blogger துளசி கோபால் said...
இப்படியெல்லாமா ஒரு கன்ஃப்யூஷன்?
//கணவனுக்கும் துணைவனுக்கும் என்ன வித்தியாசமோ அதே வித்தியாசம்தான் இதற்கும்!//
என்னைப்பொருத்தவரை
கணவன் (கோபால்)வேலைக்குப்போய் சம்பாரிச்சுக் கொண்டுவர்றவர்
துணைவன்( கோபால கிருஷ்ணன்) வீட்டுலேயே 24 மணி நேரமும் என்கூடவே எனக்குத் துணையா இருக்கறவர் மியாவ்:-))))////

கண்போன்றவன் கணவன்
கண்போன்றவளுக்குத் துணையாக இருப்பவன் துணைவன்
இது சரியா டீச்சர்!
உங்கள் பின்னூட்டத்தின் BGM மியூஸிக் (மியாவ்..மியாவ்) சூப்பர் டீச்சர்!

G.Ragavan சொன்னது…

மனைவின்னா தாலி இருக்கும். துணைவிக்கும் தாலி இருக்கலாம். ஆன சர்ட்டிபிகேட் இருக்காது.

சுருங்கச் சொன்னா பொண்டாட்டி வெப்பாட்டி.

லக்கி, கோயிங் ஸ்டெடி கிண்டல் செய்யப் பட வேண்டியதுன்னா... துணைவி காமெடியும் கிண்டல் செய்யப்பட வேண்டியது தான். My comment is not based on my political ideas.. but just a comment on their personal life.

லக்கிலுக் சொன்னது…

//லக்கி, கோயிங் ஸ்டெடி கிண்டல் செய்யப் பட வேண்டியதுன்னா... துணைவி காமெடியும் கிண்டல் செய்யப்பட வேண்டியது தான். My comment is not based on my political ideas.. but just a comment on their personal life.//

ராகவன் சார்!

நீங்க இப்படி சொல்லலேன்னா தான் நான் ஆச்சரியப்படணும் சார் :-)

Sanjai Gandhi சொன்னது…

அடிக்கடி இந்த மாதிரி செய்தி படிக்கும் போது எனக்கும் இதுக்கு விளக்கம் தெரிஞ்சிக்கனும்னு தோணும். ஆனா பதிவு போட்டு கேட்டா.. இதுல எதோ உள்குத்து இருக்குனு நெனைச்சி திராவிட அய்யங்கார்(நன்றி. கோவி கண்ணன்:)) லக்கி அண்ணன் தனி பதிவு போட்டு நம்மை தாளித்துவிடுவார் என்ற "பயத்தில்":P நான் கேட்காமல் இருந்தேன். நீங்க கேட்டுட்டிங்க.
.. நாம எதோ நம்ம கட்சி பாசத்துல பின்னூட்டம் போட்டலே பின்னி பெடலெடுக்கிறார்.. இதுல பதிவு போட்டா என்ன ஆகறது? :)..

பின்னூட்டங்கள் மிகவும் சுவைபட உள்ளன... ஆனால் இன்னும் உண்மை விளங்கவில்லை.. :))...

மாயவரத்தான் சொன்னது…

விவாதம் மனைவி, துணைவி குறித்தது. இதில் சம்பந்தமேயில்லாமல் லக்கியார் ஏதோ கோயிங் ஸ்டடி குறித்து உளறுவது ஏன்?

இதே போல வேறு யாராவது வந்து குறுக்கு கேள்வி கேட்டால், "சம்பந்தமில்லாமல் கேட்குற" என்று அவர் திட்டுவார். ஆனால் அவர் அப்படி சம்பந்தமில்லாமல் உளறுவார். (எப்பதான் அவர் சம்பந்ததோடு உளறியிருக்கார் என்கிறீர்களா?)

கோவி.கண்ணன் சொன்னது…

//மாயவரத்தான்... said...

மாயவரத்தார்,

ரொம்ப நாள் கழித்து பின்னூட்டி இருக்கிறீர்கள். மேட்டர் அப்படி...கை பரபரக்க வைத்துவிட்டதா ?

பின்னூட்டத்திற்கு நன்றி.

உங்களுக்கு நண்பர் லக்கி பதில் அளிப்பார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//SanJai said...
அடிக்கடி இந்த மாதிரி செய்தி படிக்கும் போது எனக்கும் இதுக்கு விளக்கம் தெரிஞ்சிக்கனும்னு தோணும். ஆனா பதிவு போட்டு கேட்டா.. இதுல எதோ உள்குத்து இருக்குனு நெனைச்சி திராவிட அய்யங்கார்(நன்றி. கோவி கண்ணன்:)) லக்கி அண்ணன் தனி பதிவு போட்டு நம்மை தாளித்துவிடுவார் என்ற "பயத்தில்":P நான் கேட்காமல் இருந்தேன். நீங்க கேட்டுட்டிங்க.
.. நாம எதோ நம்ம கட்சி பாசத்துல பின்னூட்டம் போட்டலே பின்னி பெடலெடுக்கிறார்.. இதுல பதிவு போட்டா என்ன ஆகறது? :)..

பின்னூட்டங்கள் மிகவும் சுவைபட உள்ளன... ஆனால் இன்னும் உண்மை விளங்கவில்லை.. :))...
//

சஞ்ஜெய்,

நம்ம லக்கிதான் கேட்கலாம், கலைஞரே கூட்டனி ஆளுங்க தட்டியும் கேட்கலாம்...தவறு செய்தால் குட்டியும் கேட்கலாம் என்று கூட்டணி கட்சிகளை தட்டிக் கொடுப்பார். ஆனால் அதைக் கேட்டுவிட்டு நாமும் காடுவெட்டி குருவாக மாறி கேள்விக்கனைகளை பதில் சொல்ல திண்ரும் அளவுக்கு கேட்டால் மட்டுமே லக்கி நிதானம் இழப்பார்.

நான் இத்துடன் 2 முறை அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன். முன்பு தினகரன் அலுவலகம் எரிப்பின் போது ஏடாகூடமாக கேள்விக்கேட்டுவிட்டு அவரிடம் சிக்கினேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
மனைவின்னா தாலி இருக்கும். துணைவிக்கும் தாலி இருக்கலாம். ஆன சர்ட்டிபிகேட் இருக்காது.

சுருங்கச் சொன்னா பொண்டாட்டி வெப்பாட்டி.

லக்கி, கோயிங் ஸ்டெடி கிண்டல் செய்யப் பட வேண்டியதுன்னா... துணைவி காமெடியும் கிண்டல் செய்யப்பட வேண்டியது தான். My comment is not based on my political ideas.. but just a comment on their personal life.
//

ஜிரா கவுத்துப்புட்டிங்களே,

வாழ்க்கை 'துணை' நலம் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் வப்பாட்டி குறித்து சொல்லி இருக்காரா ?

துணைவியை - வப்பாட்டி என்று சொல்வது சரிவராது..ஏனென்றால் துணைவியை பொது இடத்திற்கு கூடவே விழாக்களுக்கும் கூட்டிச் செல்வார்கள், மனைவிக்கு இருக்கும் சகல உரிமைகளும் உண்டு.

G.Ragavan சொன்னது…

// ஜிரா கவுத்துப்புட்டிங்களே,

வாழ்க்கை 'துணை' நலம் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் வப்பாட்டி குறித்து சொல்லி இருக்காரா ?

துணைவியை - வப்பாட்டி என்று சொல்வது சரிவராது..ஏனென்றால் துணைவியை பொது இடத்திற்கு கூடவே விழாக்களுக்கும் கூட்டிச் செல்வார்கள், மனைவிக்கு இருக்கும் சகல உரிமைகளும் உண்டு. //

மரியாதை உன்டு..... சர்டிபிகேட் உன்டா? :-)

Subramanian சொன்னது…

// கோவி.கண்ணன் said...
//SP.VR. SUBBIAH said...
/////லக்கிலுக் said...
//திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
ஏங்க இவ்வளவு சப்பைக்கட்டு?
மனைவி என்னா பொண்டாட்டி.துணைவின்னா வப்பாட்டி.பொண்டாட்டி பொண்டாட்டிதான்.வப்பாட்டி வப்பாட்டி தான்.இரண்டும் ஒன்றாகாது.
//
உண்மைத்தமிழன் அண்ணாச்சி, கலக்கிட்டீங்க போங்க :-)////

அவரும் இவரும் ஒரே ஆள் தானா?
இன்னும் எத்தனை பேர்களில் அவர் வலம் வருகிறார் லக்கியாரே?
கொஞ்சம் போட்டுக்... இல்லை ...இல்லை..... கொஞ்சம் விளக்கினால்
வலைப்பதிவில் உள்ள உயிர்கள் உங்களை வணங்கும்!
//

வாத்தியாரே,

லக்கி சொன்னதை நான் நம்பவில்லை.

உண்மைத்தமிழன் எனக்கு அப்படியெல்லாம் வேறொரு பெயரில் பின்னூட்டவதற்கான தேவை இல்லை. அவர் பெயரிலேயே எப்போதும் போடுவார்.//

இல்லீங்க.நான் வேற ஆளுங்க.உண்மைத் தமிழன் வேறெங்க.என் பேருக்குப் பின்னாடி 2818834628383879881 எண்கள் வருமுங்க.

அப்புறம்,லக்கிலுக்கின் கேள்விக்குப் பதில் சொல்லலாங்களா?
ரோஜாவை எந்தப் பெயர் கொண்டு அழைத்தாலும் ரோஜா ரோஜா தாங்க.அதே மாதிரித் தான் கோயிங் ஸ்டெடின்னு ஆங்கிலத்தில் நாசூக்கா சொன்னாலும் வப்பாட்டன் தாங்க.(வப்பாட்டி பெண்பால்னா வப்பாட்டன் ஆண்பால் தானுங்களே)

கோவி.கண்ணன் சொன்னது…

//திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...

இல்லீங்க.நான் வேற ஆளுங்க.உண்மைத் தமிழன் வேறெங்க.என் பேருக்குப் பின்னாடி 2818834628383879881 எண்கள் வருமுங்க.

அப்புறம்,லக்கிலுக்கின் கேள்விக்குப் பதில் சொல்லலாங்களா?
ரோஜாவை எந்தப் பெயர் கொண்டு அழைத்தாலும் ரோஜா ரோஜா தாங்க.//

திச சார்,

இது சொ.செ.சூ இல்லையே ?
:)

Sanjai Gandhi சொன்னது…

//இதே போல வேறு யாராவது வந்து குறுக்கு கேள்வி கேட்டால், "சம்பந்தமில்லாமல் கேட்குற" என்று அவர் திட்டுவார். ஆனால் அவர் அப்படி சம்பந்தமில்லாமல் உளறுவார். (எப்பதான் அவர் சம்பந்ததோடு உளறியிருக்கார் என்கிறீர்களா?)//

அட.. அப்டிங்களா? இது தெரியாம அவரோட சமீபத்து பதிவுக்கு நான் போட்ட கமெண்டுக்கு பதில் சொல்லும் போது எனக்கு அறிவு இல்லைனு சொல்லிட்டாருங்க :P...

அதுக்கு பதில் சொல்லி நான் போட்ட பின்னூட்டதை வெளியிடவே இல்லை.. :)).. நேரம் இல்லைனு சொல்ல மாட்டார்னு நம்பறேன். ஏன்னா முதல் கமெண்டுக்கு உடனே பதில் வந்தது.. இரண்டாவது கமெண்டும் சில விநாடிகள் இடைவெளியில் போட்டுட்டேன்...

Sanjai Gandhi சொன்னது…

//ஆனால் அதைக் கேட்டுவிட்டு நாமும் காடுவெட்டி குருவாக மாறி கேள்விக்கனைகளை பதில் சொல்ல திண்ரும் அளவுக்கு கேட்டால் மட்டுமே லக்கி நிதானம் இழப்பார்.//
அது சரி..:-))

Subramanian சொன்னது…

கோவி.கண்ணன் said...
//திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...

இல்லீங்க.நான் வேற ஆளுங்க.உண்மைத் தமிழன் வேறெங்க.என் பேருக்குப் பின்னாடி 2818834628383879881 எண்கள் வருமுங்க.

அப்புறம்,லக்கிலுக்கின் கேள்விக்குப் பதில் சொல்லலாங்களா?
ரோஜாவை எந்தப் பெயர் கொண்டு அழைத்தாலும் ரோஜா ரோஜா தாங்க.//

திச சார்,

இது சொ.செ.சூ இல்லையே //

நிச்சயமாக சொ.செ.சூ இல்லவே இல்லை.
அது சரி.என் பின்னூட்டத்தை மட்டுறுத்திட்டீங்களே.ஆபாசமா எதுவும் சொல்லவே இல்லீங்களே.எப்படி இருப்பினும் உங்கள் உரிமையை மதிக்கிறேன்.

முகவை மைந்தன் சொன்னது…

49வது பின்னூட்டம்!

முகவை மைந்தன் சொன்னது…

50வது பின்னூட்டம்!

போதும், இந்தத் தலைப்புல இதுவரை நடந்த விவாதம். பின்னூட்டப் பெட்டியை இழுத்து மூடுங்க! ம்ஹூம்....

aathirai சொன்னது…

manaivi - married according to some law.
thunaivi - kept illegally.

one wife law applies only to Hindus.
Who is a Hindu?
Anyone who marries by going around fire seven times is hindu, by law. (Bachelors!note this.)

Is Muka a hindu? He calls them 'thirudan'.

Did Muka marry his daughter's mother by any other law??Then you can call her second wife. Or else, thunaivi is correct.

அபி அப்பா சொன்னது…

நல்ல விவாதம்!

ஆனால் சிவன் முதலாக எல்லா இந்துக்கடவுளுக்கும் ஒண்றுக்கும் மேல்பட்ட மனைவிகள் இருக்கும் போது(அய்யப்பன், ஆஞ்சநேயர் தவிர்த்து) இந்துத்துவா சட்டம் "ஒருவனுக்கு ஒருத்தி" என சொல்லியதால் பிறப்பால் இந்துவாக பிறந்த கலைஞரும், காளிமுத்துவும், பேராசிரியரும், கோசிமணியும், எம்ஜியாரும், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.... அவ்வலவு ஏன் சரத்குமாரும் எல்லோருமே மனைவி, துணைவி என சப்பைகட்டு வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார்கள். அவர்கள் அப்படி விளையாட காரணமே "இந்துத்துவா" சட்டத்தின் குறைபாடுதான். ஆக மனைவியும் ஒண்ணுதான் துணைவியும் ஒண்ணுதான்!!!

போங்க போங்க எல்லாரும் போய் விவசாயத்தை பாருங்க 49 பின்னூட்டம் ஆகிடுச்சு! கோவி வந்து நன்றி சொன்னா 50 ஆகிடும்!! போதும் போதும் ! அடுத்த பதிவுக்கு தயாராகுங்க:-)))

கோவி.கண்ணன் சொன்னது…

//திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...
கோவி.கண்ணன் said...
//திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...

இல்லீங்க.நான் வேற ஆளுங்க.உண்மைத் தமிழன் வேறெங்க.என் பேருக்குப் பின்னாடி 2818834628383879881 எண்கள் வருமுங்க.

அப்புறம்,லக்கிலுக்கின் கேள்விக்குப் பதில் சொல்லலாங்களா?
ரோஜாவை எந்தப் பெயர் கொண்டு அழைத்தாலும் ரோஜா ரோஜா தாங்க.//

திச சார்,

இது சொ.செ.சூ இல்லையே //

நிச்சயமாக சொ.செ.சூ இல்லவே இல்லை.
அது சரி.என் பின்னூட்டத்தை மட்டுறுத்திட்டீங்களே.ஆபாசமா எதுவும் சொல்லவே இல்லீங்களே.எப்படி இருப்பினும் உங்கள் உரிமையை மதிக்கிறேன்.
//

திண்டுக்கல் சர்தார்,

உங்கள் பின்னூட்டம் எதையும் நிறுத்துவைக்கவில்லை. பொதுவாக பெயருடன் ஆபாசமில்லாமல் வரும் பின்னூட்டங்களை அனுமதிப்பேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// முகவை மைந்தன் said...
50வது பின்னூட்டம்!

போதும், இந்தத் தலைப்புல இதுவரை நடந்த விவாதம். பின்னூட்டப் பெட்டியை இழுத்து மூடுங்க! ம்ஹூம்....
//

50 அடிக்க பேருதவி புரிந்த முகவை மைந்தனுக்கு நன்றி !
அடிக்கடி வாங்க !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அபி அப்பா said...
நல்ல விவாதம்!

ஆனால் சிவன் முதலாக எல்லா இந்துக்கடவுளுக்கும் ஒண்றுக்கும் மேல்பட்ட மனைவிகள் இருக்கும் போது(அய்யப்பன், ஆஞ்சநேயர் தவிர்த்து) இந்துத்துவா சட்டம் "ஒருவனுக்கு ஒருத்தி" என சொல்லியதால் பிறப்பால் இந்துவாக பிறந்த கலைஞரும், காளிமுத்துவும், பேராசிரியரும், கோசிமணியும், எம்ஜியாரும், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.... அவ்வலவு ஏன் சரத்குமாரும் எல்லோருமே மனைவி, துணைவி என சப்பைகட்டு வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார்கள். அவர்கள் அப்படி விளையாட காரணமே "இந்துத்துவா" சட்டத்தின் குறைபாடுதான். ஆக மனைவியும் ஒண்ணுதான் துணைவியும் ஒண்ணுதான்!!!

போங்க போங்க எல்லாரும் போய் விவசாயத்தை பாருங்க 49 பின்னூட்டம் ஆகிடுச்சு! கோவி வந்து நன்றி சொன்னா 50 ஆகிடும்!! போதும் போதும் ! அடுத்த பதிவுக்கு தயாராகுங்க:-)))
//

"ஆக மனைவியும் ஒண்ணுதான் துணைவியும் ஒண்ணுதான்!!! "

அபி அப்பா,

தனிஒருவனாக தைரியத்துடன் வந்து என் சந்தேகத்தை தீர்த்து வைத்த அபி அப்பாவே...நீவீர் வாழ்க !

பொற்கிழியை எந்த முகவரிக்கு அனுப்புவது ? சரி சரி பின்னூட்ட்டமாகவே உங்கள் பதிவில் போட்டு விடுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//aathirai said...
manaivi - married according to some law.
thunaivi - kept illegally.

one wife law applies only to Hindus.
Who is a Hindu?
Anyone who marries by going around fire seven times is hindu, by law. (Bachelors!note this.)//

ஆதிரை,

ஐயையோ சீர்த்திருத்த திருமணம், தமிழ்முறை திருமணம் செய்து கொண்டவர்களுக்கு சட்ட பாது'காப்பு' கிடைக்காதா ?

//Is Muka a hindu? He calls them 'thirudan'.//

இந்து > திருடன் - அதுதான் உள்ளம் கவர் கள்வன் என்று கலைஞர் சொல்லிவிட்டாரே பிறகு இன்னும் ஏன் ஏன் கொலைவெறி ?

//Did Muka marry his daughter's mother by any other law??Then you can call her second wife. Or else, thunaivi is correct.
//

அப்பாடா சரியான தீர்ப்பு !

லக்கிலுக் சொன்னது…

கோவி கண்ணன் அய்யங்கார் அவர்களே!

மாயவரத்தான் அய்யா உளறலில் பி.எச்.டி. பட்டம் பெற்றவர் என்று வலையுலகில் பெயர் வாங்கியவர். அவருக்கெல்லாம் பதில் சொல்லுவது அவ்வளவு முக்கியமா என்ன?

அப்புறம் சஞ்சய்னு புதுசா ஒருத்தர் ஏதேதோ அரைகுறையா புரிஞ்சிக்கிட்டு பின்னூட்டங்கள் போட்டுக்கிட்டிருக்காரு. அவரு நெஜமாலுமே புதுசாதானா இல்லை வேற ஏதாவது பழைய ஞானப்பழத்தோட கொண்டையா என்று தெரியவில்லை :-)

மாயவரத்தான் சொன்னது…

ஹிஹி..

Lucky,

ஏன்யா சம்பந்தமில்லாத மேட்டரை பதிவிலே இழுக்கக்கூடாதுன்னு நியாயம் பேசுவீங்களே, இங்கே நீங்க கேட்ட கேள்வி சம்பந்தம் உள்ள மேட்டரா, உங்களுக்கு ஒரு நியாயம், அடுத்தவங்களுக்கு ஒரு நியாயமான்னு கேள்வி கேட்டா அதுக்கு எப்படி பதில் தர முடியும்?

இதுக்கு பேரு தான் சமாளிபிகேஷன்.

உங்க தலைவரே "ஆமாம்டா நீதான்டா கொலைகாரன்"னு சமாளிபிகேஷன் செஞ்சவராச்சே!

மாயவரத்தான் சொன்னது…

அபி அப்பா, அப்படீன்னா கருணாநிதி கடவுளைப் பின்பற்றுகிறார்ன்னு சொல்ல வர்றீங்களா?

லக்கிலுக் சொன்னது…

//ஏன்யா சம்பந்தமில்லாத மேட்டரை பதிவிலே இழுக்கக்கூடாதுன்னு நியாயம் பேசுவீங்களே,//

நான் எப்போய்யா அதுமாதிரி பேசுனேன்? என் பதிவில் இழுக்கப்பட்டதெல்லாம் சம்பந்தமில்லாத மேட்டரா தானிருக்கும்னு நேத்து வந்த சரவணகுமாருக்கே தெரியும், உங்களுக்கு தெரியாதா? :-)

எதையாவது, எங்கேயாவது உளறி கொட்டிட்டு அய்யய்யோ, அடிக்குறாங்களேன்னு புலம்ப வேண்டியதே உமக்கு பொழைப்பா போச்சி! :-)))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//மாயவரத்தான்... said...
அபி அப்பா, அப்படீன்னா கருணாநிதி கடவுளைப் பின்பற்றுகிறார்ன்னு சொல்ல வர்றீங்களா?
//

மாயூ,

அபிஅப்பா அப்படி சொல்லிவிட்டால் நீங்கள் கருணாநிதியை பின்பற்றுவேன் என்று சொல்ல வர்றீங்களா ?

Sanjai Gandhi சொன்னது…

//அப்புறம் சஞ்சய்னு புதுசா ஒருத்தர் ஏதேதோ அரைகுறையா புரிஞ்சிக்கிட்டு பின்னூட்டங்கள் போட்டுக்கிட்டிருக்காரு. அவரு நெஜமாலுமே புதுசாதானா இல்லை வேற ஏதாவது பழைய ஞானப்பழத்தோட கொண்டையா என்று தெரியவில்லை :-) //

எதை பத்தி எழுதறோம்னு ஒரு தெளிவே இல்லாம சும்மா குருட்டாம் போக்குல ஏக வசனத்துல அரைகுறையா எழுதற உங்க பதிவுகளுக்கு அந்த மாதிரி தான் பின்னூட்டம் போட முடியும் லக்கி...
அட அப்படி என்னத்தை பத்தி தான் எழுதினிங்க சொல்லுங்க சார்னு பின்னூட்டம் போட்டா அதை வெளியிடறதும் இல்ல.. எதை பத்தி என்று தெளிவு படுத்தறதும் இல்லை..
சும்மா காண்டாகறதுல அர்த்தம் இல்லை கிருஷ்ணகுமார் அண்ணாச்சி.. :-)

காவடி தூக்கறத பத்தி கேள்வி கேட்டது ஒரு தப்பா? முடியலைடா சொக்கா.. :(
//ஆனால் அதைக் கேட்டுவிட்டு நாமும் காடுவெட்டி குருவாக மாறி கேள்விக்கனைகளை பதில் சொல்ல திண்ரும் அளவுக்கு கேட்டால் மட்டுமே லக்கி நிதானம் இழப்பார்.//

நன்றி :தோழர் கோவி. கண்ணன். :-)
...ஒய் ஸ்மைலி.. சேம் ஸ்மைலி...

அபி அப்பா சொன்னது…

கோவியாரே!!! சன் டிவி எடுத்த கருத்து கணிப்பினால் உண்டான சேதாரம் உமக்கும் தெரியும்!!!கிட்டதட்ட இந்த பதிவும் அப்படித்தான்!

எனக்கு லக்கியாரும், மாயவரத்தாரும், பொடியன் சஞ்சயும் தம்பிகள் தான் இருந்தும் தாய் வேறு வாய் வேறு அல்லவா அதனால் இந்த விளக்கம்!!

1. \\ கோவி.கண்ணன் said...
அன்பர்களே, நண்பர்களே...கலைஞரை கும்முவதற்காக இந்த பதிவு எழுதப்படவில்லை. தூணைவிக்கும், மனைவிக்கும் என்ன வேறுபாடு என்பதற்காக கேட்டேன்.\\

கோவியாரே! உங்கள் பதிவில் இப்படி நீங்கள் கோடிட்டு காட்டியிருக்காவிடில் இந்த விளக்கம் லக்கியார் கொடுத்திருக்க மாட்டார்!

\\
\\இந்த செய்தியை படிச்சுட்டு கருத்து சொல்லுங்க !

"நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினின் \\

2. சஞ்சய்! உனக்கு குழப்பிகொள்ள வேறு விஷயமே கிடைக்க வில்லையா!! அந்த காமராஜ் பதிவில் போய் பார் என் பின்னூட்டத்தை! முடிந்தால் நான் தொலைபேசியில் விவாதிக்கிறேன் உன்னுடன்!!! என் அறிவார்ந்த சகோதரா என்னுடன் பேசு! பின் பின்னூட்ட சண்டைக்கு தயாராகு லக்கியுடன். உன் பக்க நியாயம் இருப்பின் நான் உன்னுடனே!!!

3.மாயவரத்தாரே! நான் எப்பவும் சொல்லவில்லையே கலைஞர் இறைவனை பின்பற்றுகிறார் என. உலக நியதிப்படி ஆண்கள் பெண்களை விட அதிக சதவிகிதம் பிறக்கின்றனர். ஒரு ஆண் ஒரே மனைவியை திருமணம் செய்து கொண்டதால் வந்த புதிய தமிழ் சொல் "முதிர் கன்னி" போன்றவை.

இதை எல்லாம் தவிர்க்கவே அப்போது ஒரு ஆணுக்கு இரு மனைவிகள் என்பத்து ஒத்து கொள்ளப்பட்டது.

ஆனால் இந்த்துத்துவா சட்டம் ஏதோ ஒரு பிரிவு கடவுளை பின்பற்றுபவரால் உண்டாக்கப்பட்டத்து என்றே பலரின் கருத்தாகும்.அதானாலேத்தான் இன்றைக்கும் "ஒருவனுக்கு ஒருத்தி" என முழங்கி "சப்பைகட்டு" வார்த்தை பிரயோகத்தை நமது மக்கள் பயன்படுத்த செய்துவிட்டார்கள்!!ஒரு இஸ்லாமியர் என்றைக்காவத்து இது மனைவி, இது துணைவி என சொல்லியிருக்கிறாரா, காரணம் அவர் சட்டம் அப்படி சொல்கிறது. சட்டத்தை மாத்துங்கப்பா!!! இல்லாட்டி பார்வதியை மனைவி என்றும் கங்கையை துணைவி என்றும் சொல்லுங்கப்பா!!!

3. லக்கி!! எத்துக்கும் நல்ல டாக்டரா பார்த்து பிரஷர் செக்கப் செய்வத்து ....................தமிழ்மணத்துக்கு நல்லத்து!!!!:-))))))

Sanjai Gandhi சொன்னது…

//2. சஞ்சய்! உனக்கு குழப்பிகொள்ள வேறு விஷயமே கிடைக்க வில்லையா!! அந்த காமராஜ் பதிவில் போய் பார் என் பின்னூட்டத்தை! முடிந்தால் நான் தொலைபேசியில் விவாதிக்கிறேன் உன்னுடன்!!! என் அறிவார்ந்த சகோதரா என்னுடன் பேசு! பின் பின்னூட்ட சண்டைக்கு தயாராகு லக்கியுடன். உன் பக்க நியாயம் இருப்பின் நான் உன்னுடனே!!//

ஆஹா.. குமார் அண்ணா நீங்களுமா? :) அவர் அந்த பதிவில் " அன்று ராஜாஜிக்கு மணி ஆட்டாமல் இருந்திருந்தால் திமிக ஆட்சிக்கு வந்திருக்காது இன்று காமரஜர் ஆட்ச்சிக்கு காவடி தூக்கி இருக்க வேண்டியதில்லை" என்பது போல எழுதி இருந்தார். இதற்கு தான் நான் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். இதில் என்ன குழப்பம் கண்டுபிடித்து விட்டீர்கள் என எனக்கு புரியவே இல்லை. நான் என்ன குழம்பிவிட்டேன் என தயவு செய்து தெளிவாக சொன்னால் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் லக்கி அதற்கு விளக்கம் சொல்லாமல் எனக்கு அறிவே இல்லை என்பது போல சொல்லி இருக்கிறார். :)))..

பிறகு பலரும் சில விஷயங்களை என்னுடன் சாட்டில் சொன்னார்கள்.. அதற்கு பிறகு லக்கியுடன் விவாதம் பண்ணுவதில் எனக்கு விருப்பம் போய்விட்டது. :)
//முடிந்தால் நான் தொலைபேசியில் விவாதிக்கிறேன் உன்னுடன்!!! //

இதெல்லாம் டூ மச்.. உங்க கூட விவாதம் பண்ற அளவு நான் இன்னும் வளரலை அண்ணா...:) உங்களை பற்றி எனக்கு தான் நன்றாகத் தெரியுமே.. சும்மா போகிற போக்கில் பேசும் ஆள் இல்லை நீங்க. ஆகவே உங்க கருத்துக்கு எப்போதுமே நான் ரொம்ப மரியதை கொடுப்பவன் தான்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்