பின்பற்றுபவர்கள்

9 ஜூன், 2008

7 ½ பக்க நாளேடு :)

19 செப் 2008 : கலைஞர் ஓய்வெடுக்கப் போவதாக அறிவித்த திமுக கழகத்தின் தலைமையகம், முதல்வர் பதவிக்கு திரு ஸ்டாலினை கட்சி நிர்வாகிகள் ஒருமனதாக முன்மொழியப்பட்டு தேர்ந்தெடுத்தாக அறிவித்திருக்கிறது...... இது தொடர்பாக திமுகவின் வலைப்பூ பிரிவு தலைவர் திரு லக்கி லுக்கை தொடர்பு கொண்ட நம் நிருபர்

நிருபர் : கலைஞர் முதல்வர் ஆகவேண்டுமென்பதற்காக வாக்களித்த கட்சித் தொண்டர்களிடையேயும், இரண்டாம் மட்ட நிர்வாகிகளிடமும் ஸ்டாலினின் திடீர் தலைமை குறித்து அதிருப்தி நிலவுகிறதே இது பற்றி தங்கள் கருத்து என்ன ?

லக்கி லுக் : திமுக தொண்டர்கள் என்றுமே கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டவர்கள் (எம்ஜிஆர், வைGO கட்சியை பிரித்துக் கொண்டு போனது தனிக்கதை). தலைமையின் முடிவை ஏற்கத் தயாங்காதவர்கள். யாரோ விசமிகள் திமுக கழகத்தில் கலகம் செய்வதற்காக பொய் செய்திகளை பரப்பி வருகிறார்கள். இது பொய் என்பதற்க்கு தளபதி ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் கூடிய மக்கள் கூட்டமும் தொண்டர் பட்டாளமுமே சாட்சி.

20 செப் 2008 : திமுக ஆட்சியில் தமிழகம் பின் தங்கிவிட்டது... இந்த கூட்டணியில் நீடித்தால் அடுத்த தேர்த்தலில் எங்களுக்கு ஓட்டுவிழுமா அல்லது உதைவிழுமா என்பதே இப்பொழுது எங்களை குடைந்து கொண்டிருக்கும் கேள்வி - மருத்துவர் இராமதாஸ் ஐயா

இதுபற்றி ஞாயர் காஃபி கிளப்பில் பேசிக் கொண்டிருந்தவர்களிடம் காது கொடுத்த போது
"இனிமே மருத்துவர் ஐயா அடிக்கும் பல்டிகளைப் பாருங்கள், விஜயகாந்தும் அம்மா கட்சி கூட்டணிக்குள் இருக்கிறார்...இவரும் கூட்டணிக்குள்ளே போகப்போகிறார்...ரஜினி என்கிற பேயை ஓட்ட தம்பி விஜயாகாந்த்தான் சரியான நபர் என்று பேட்டியெல்லாம் கொடுப்பார்.


21 செப் 2008 : "உங்களை கூட்டணியில் இருந்து அறிவிப்பு இன்றி நீக்கிவிட்டதாக நமது எம்ஜிஆரில் செய்தி வந்து இருக்கிறதே", இதுபற்றி 'உண்மையான' மதிமுக பொதுச்செயளர் திரு வைகோ செல்பேசியில் தொடர்பு கொண்ட நமது நிருபரிடம், வைகோ

"சென்ற சட்டமன்ற தேர்தலில் நான் சிறையில் இருந்ததை பேசி அனுதாப ஓட்டில் 60 சீட்டுகள் வரை வென்றது அதிமுக. அது ஒரு ஆணவம் பிடித்த பாசிச தலைவியின் கட்சி. இந்த முறை டெபாசிட் கூட வாங்காமல் மண்ணைக் கவ்வப்போவது நிஜம். இதற்காக நாங்கள் இமயம் முதல் குமரிவரை பாதயாத்திரை தொடங்கிவிட்டோம். பாசிச செயலலிதாவின் கொட்டம் அடக்குவோம்

இன்னிக்கு இது போதும்.......

லக்கி பாணி ஏழரைபக்க நாளேடு அவ்வப்போது தொடரும்....

12 கருத்துகள்:

நையாண்டி நைனா சொன்னது…

/*எம்ஜிஆர், வைGO கட்சியை பிரித்துக் கொண்டு போனது தனிக்கதை*/

இதில் "வைGO" என்று எழுதி இருப்பது, உங்கள் நகைச்சுவை உணர்வை காட்டுகிறது.....

ஜெகதீசன் சொன்னது…

:))

இராம்/Raam சொன்னது…

ஹி ஹி .... :)

அருப்புக்கோட்டை பாஸ்கர் சொன்னது…

:-)))))

Athisha சொன்னது…

தமிழக அரசியல் கட்சிகளின் சார்பக உங்களுக்கு கண்டனங்கள்.

அனைத்து கட்சி ஆட்டோ வந்து கொண்டே இருக்கிறது

;-))

லக்கிலுக் சொன்னது…

//½ பக்க நாளேடு :) //

தலைப்பில் அரை எப்படி போட்டீர்கள்? ஏதாவது ஸ்பெஷல் கீ இருக்கிறதா? :-(

கிரி சொன்னது…

அதிஷா said...
தமிழக அரசியல் கட்சிகளின் சார்பக உங்களுக்கு கண்டனங்கள்.

அனைத்து கட்சி ஆட்டோ வந்து கொண்டே இருக்கிறது


:-)))))))))

முரளிகண்ணன் சொன்னது…

:-)))))))

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டம் வழங்கிய

நையாண்டி நைனா,

ஜெகதீசன்,

அருவை பாஸ்கர்,

அதிஷா,

முரளிகண்ணன்,

லக்கி லுக்,

இராம்,

மற்றும்

கிரி ஆகியோர்களுக்கு மிக்க நன்றி !

தருமி சொன்னது…

7½ - ஏழரைய இழுத்து உட்டுட்டீங்களே, பரட்டை...!!
:)

ezhil arasu சொன்னது…

எல்லாம் சரிங்க. அன்பழகனை மறந்துட்டீங்கா.அவ்ருக்கு ஏதாவது மாநில கவர்ணர் பதவி அல்லது மத்திய அமைச்சர் பதிவியாவது.ஆர்காட்டார்,வீரபாண்ண்டியார் சமாதானம் ஆகிவிட்டார்களா?

கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி
என்னாவாயிற்று?

மாறன் சகோதரர்களின் பங்கு இதிலுண்டா?

அஞ்சா நெஞ்சன் அழகிரியின் கட்சி பதவி ?


இவையெல்லாம் பற்றி அடுத்த 7.5 பக்க நாளேட்டிலா?

இக்பால் சொன்னது…

தி மு க தொண்டர்கள் சார்பாக என் வாழ்த்துக்களை கூறுகிறேன்

ஆனாலும் தலைப்பு 7 1/2 என்பது அதைக் குறிக்கிறது என்று தெரியவில்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்