பின்பற்றுபவர்கள்

18 ஜூன், 2008

வருண பேதத்தைக் கட்டிக்காக்க பயன்படும் இட ஒதுக்கீடு... !

இதைப் படியுங்கள் முதலில்....

தாழ்த்தப்பட்டவன் உயர்வுக்கு இந்து மதம் என்ன செய்திருக்கிறது ? மாற்றுமதத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இட ஒதிக்கீடு வழங்கினால் இந்து மத தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்களாம் - போலிக் கண்ணீர் வடிப்பது பிஜேபி

தாழ்தத்பட்டவர்கள் எந்த மதத்தில் சேரவேண்டும் என்பது அவர்கள் விருப்பம், தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு அவர்கள் பழைய மதத்திற்கு திரும்புவதே சாட்சியாக இருக்கிறது.

அப்படி இருக்கையில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை மதங்களால் மாற்றியமைக்கப் படுகிறது என்பது தோற்றுப் போன வாதம். இது இவ்வாறு இருக்கையில் அவர்களது சலுகைகளை மதத்தின் பெயரால் பறிப்பது என்ன ஞாயம்.

தலித் கிறித்துவரின் பெற்றோர் இரண்டு தலைமுறைக்கு முன்பு கிறித்துவராக மாறி இருந்தால் அவர் பிற்படுத்தப்பட்டவர் பிரிவில் வருகிறார். அவர் 'தாய்' (தாயார் அல்ல, தாய்மதம் என்றால் இந்து மதமாம்) மதம் திரும்பிவிட்டால் தாழ்த்தப்பட்டவராகிறார். அவருக்கு சலுகை கிடைக்குமா ? அதாவது நீ உன்னை இந்துமத வருணப்படி தாழ்த்திக் கொள் அதன் பிறகு இட ஒதிக்கீடு கிடைக்கும் என்பது போல் இருக்கிறது.

பிஜேபியின் இந்து தலித் மீதான பாசத்தைப் பாருங்கள்...பிறமதத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு சலுகை வழங்கினால் 'இந்து' தலித்துகள் பாதிக்கப்படுகிறார்களாம். ஆனால் பிற மதத்தில் உள்ள தலித்துக்கள் 'இந்து' மதம் திரும்பினால்...'தாய் மதம்' திரும்பிவிட்டார்கள் என்று பெரிய விழா எடுப்பார்களாம். அப்போது புதிதாக எண்ணிக்கையை அதிகப்படுத்தி இருக்கும் 'தாய் மதம் திரும்பும் தாழ்த்தப்பட்டவர்களால் ஏற்கனவே இருக்கும் 'இந்து' தாழ்த்தப்பட்டவர்களுக்கான சலுகைகள் குறைந்து பாதிக்கப்பட மாட்டார்களா ? இவர்களின் புதிய / திரும்பிய வருகையின் எண்ணிக்கையைப் பொருத்து அரசாங்க சலுகைகளின் (இட) எண்ணிக்கை அதிகப்படுத்தப்படுகிறதா ? சலுகைகளின் எண்ணிக்கையை இந்து மதம் திரும்பும் தாழ்த்தப்பட்டவர்களின் தொகைக்கு ஏற்ப அதிகப்படுத்துவோம் என பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் எதுவும் தீர்மானம் நிறைவேறி இருக்கிறதா ?

பின்பு எதற்கு இந்து தாழ்த்தப்பட்டவர்களின் மீது பிஜேபியினருக்கு போலியான ஒரு அக்கரை ?

தாழ்த்தப்பட்டவர்களுக்கு மதத்தின் பெயரைச் சொல்லி சலுகைகள் பறிக்கப்படுவதும், திரும்பி வந்தால் கிடைக்கும் என்ற நிலையில் வைத்திருப்பது...வருண பேதமும் சூத்திரனும் எப்போதும் இருக்கவேண்டும்...அந்த அமைப்பு கட்டிக்காக்கப் படவேண்டும் என்பதே. அரசாங்கம் மூலம் எதோ அவர்கள் நிலை உயரவேண்டும் என்ற பெரும் தன்மையில் கொடுப்பதாக சொல்லிக் கொண்டாலும் வருணம் பாதுக்காக்கும் ஆயுதமாகவே அரசாங்க சலுகைகள் இருக்கிறது. சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாக.......மக்கள் ஆட்சியில்......'நீ இந்து தாழ்த்தப்பட்டவனாக இரு அப்பொழுதுதான் நீ சலுகைகளை அடைய முடியும்...... ' அதன் மூலம் மறைமுகமாக வருண விச விருட்சம் பட்டுப் போகாமல் காப்பதற்கு சட்டம் வைத்திருப்பது எவர் கண்ணுக்கும் தெரியாமல் போனது வியப்பே. இதைக் குறிப்பிட்டு எவரும் பொதுநல வழக்கு தொடுப்பார்களா ?

இதே கருத்தை முன்பு சற்று விரிவாக எழுதியதன் சுட்டி

6 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

:)

நையாண்டி நைனா சொன்னது…

நல்லதை பண்ணுவதற்கு மதம் முக்கியமோ? அப்படி அவர்கள் வருந்தினால், இந்து என்று அறிவிக்கப்பட்ட அனைவரையும் அவர்கள் சமமாக நடத்த தயாரா?
மேலும் திரு குமாரவேல் அவர்கள் இந்து ஒருவர் உருவாக்கிய அரிசியை தான் உண்ண வேண்டும், இந்து நாட்டில் இருந்து இறக்குமதி செயப்பட்ட டீசல், பெட்ரோல் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வளவு ஏன் கிருஸ்தவனால், முஸ்லிமால் கண்டுபிடிக்கபட்ட எதனையும் பயன் படுத்தாமல் இருப்பாரோ?

மேலும் திரு. கோவி அண்ணா... இட ஒதுக்கீடு.. வருண பேத தை வளர்க்க அல்ல!!!
இவ்ளோ நாள் நம் மக்கள் அந்த பேததினாலே தான் கல்வி அறிவு வழங்க படாமல் நசுக்க பட்டு வந்தனர், அதானாலேயே பின்னர் அதே காரணம் வைத்து சலுகைகள் வழங்க முன்வந்தனர் நம் முந்தைய தலைவர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மேலும் திரு. கோவி அண்ணா... இட ஒதுக்கீடு.. வருண பேத தை வளர்க்க அல்ல!!!//

நைனா,

எழுதியுள்ளதை தவறாக பொருள் கொண்டு இருக்கிறீர்கள்.

மதம் மாறிவிட்டால் ஒரு தாழ்த்தப்பட்டவர் ஒரே நாளில் பணக்காரர் ஆகி அவர் நிலை உயர்ந்து விடுகிறதா ?
பிறகு ஏன் இட ஒதுக்கீடு மதச்சாயத்துடன் இருக்கனும்...அதையேன் இந்து மதம் பாதுகாப்பு ஆயுதமாக பயன்படுத்தனும்
என்று தான் சொல்லி இருக்கேன்.

TBCD சொன்னது…

இடஒதுக்கீடு சமூக நிலை மாற வழங்கப்பட்டது. பொருளாதார நிலை வைத்து அதை எடை போடுறீங்களே..வயசாகிடுச்சா..அண்ணாச்சி.,. :P

நாஞ்சில் சம்பத் சமீபத்தில் விஜய் அலைவரிசையில் பகிர்ந்துக்கொண்டது, பாபு ஜகஜீவன் ராம்,பல காலம் அமைச்சராக இருந்தவர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்,அவர் ஒரு சிலையயை திறந்தப் போது, தீட்டாகிவிட்டது என்று சிலைக்கு குளிப்பாட்டினார்களாம்..அதாவது பொருளாதார, அதிகார நிலையில் உயர்ந்திருந்தாலும், சமூக நிலை மாறாமல் இன்னும் இருக்கின்றது.


//கோவி.கண்ணன் said...
மதம் மாறிவிட்டால் ஒரு தாழ்த்தப்பட்டவர் ஒரே நாளில் பணக்காரர் ஆகி அவர் நிலை உயர்ந்து விடுகிறதா ?
//

Thamizhan சொன்னது…

காஞ்சி சுப்பிரமணி தாழ்த்தப் பட்டோர் தலைவர்களுக்கு சூமோ வும்,
தாழ்த்தப் படோர் குடியிருப்புக்களில் கோவில்கள் புதுப்பிக்கப் பணமும்,
குழாய்த் தண்ணீரும் போட்டுக் கொடுத்தாராம்.
கைது செய்தவுடன் நான் தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஜலம் கொடுத்தேனே,இப்போ நேக்கு ஆதரவு தரமாட்டேங்கிறாளே என்று நொந்து கொண்டாராம்.
அது மாதிரிதான் இருக்கு பி ஜே பி யின் புலம்பல்.முதலில் மனிதனை மனிதனாக நடத்துங்கள்,பின்னர் புலம்புங்கள்.

மோகன் கந்தசாமி சொன்னது…

////'நீ இந்து தாழ்த்தப்பட்டவனாக இரு அப்பொழுதுதான் நீ சலுகைகளை அடைய முடியும்...... ' அதன் மூலம் மறைமுகமாக வருண விச விருட்சம் பட்டுப் போகாமல் காப்பதற்கு சட்டம் வைத்திருப்பது எவர் கண்ணுக்கும் தெரியாமல் போனது வியப்பே.///

"'நீ இந்து தாழ்த்தப்பட்டவனாக இரு அப்பொழுதுதான் நீ சலுகைகளை அடைய முடியும்" என்று கூற எவருக்கும் உரிமை இல்லை, மேலும் அவர்களைக் கேட்டு எவர்க்கும் சலுகை தரப்படுவதில்லை, சுயமாக போராடிப் பெற்ற சலுகைகள் அவை. இதனால அவர்களின் வர்ணம் தழைத்தாலும் அழிந்தாலும் யார்க்கும் கவலை இல்லை, நமது முன்னேற்றம் தான் முக்கியம். 80 வருடங்களுக்கு முன் தென்கிழக்கு இந்தியாவில் தொடங்கிய புரட்சி நாடெங்கும் பரவி இருந்தால், பொருளாதார முன்னேற்றம் ஒரு சீராக பரவியிருந்தால் இந்நேரம் பிராமணர்கள் தீண்டத்தகாதவர்களாகி இருப்பார்கள்(தமிழகத்திலே கிட்டத்தட்ட நிலைமை இப்படித்தான்) . அப்போதும் வர்ணம் இருந்திருக்கும், உல்ட்டாவாக.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்