பின்பற்றுபவர்கள்

18 மே, 2007

தேவாரம் திருவாசகத்தை கொளுத்த வேண்டும் !

கோவில் தமிழகத்தில் இருக்கிறது, கோவில் தமிழர்கள் உதிரம் சிந்தி கட்டியது, கோவில் கட்டுவதற்கு உதவியதும் தமிழக மன்னர்கள். ஆனால் தமிழ் தெரியாத ஒரு கடவுளுக்கு ஏன் கோவில் கட்டினார்கள் என்பதே என் ஆதங்கம். ஆம் நான் சிதம்பர நடராஜனைத்தான் சொல்கிறேன். தென்நாடுடைய சிவனோ போற்றி என்று தெரியாமல் எழுதிவிட்டார்கள் போலும். தமிழ் தெரியாத ஒரு கடவுளுக்காக உழைப்பையும் பொருளையும் நம் முன்னோர்கள் வீனடித்திருக்கிறார்கள்.

சிவ பெருமான் உடுக்கை அடித்தும் பிறந்ததாம் தமிழும் வடமொழியும் என்று வடமொழி மறைய ஆரம்பித்தபோது கதை எழுதினார்கள். உடுக்கையின் இடது கைப்பக்கம் இருந்து தமிழ் வந்திருக்கும் போல இருக்கு அதனால் தான் தீண்டத்தகாத மொழி ஆக்கிவிட்டார்கள் என நினைக்கிறேன். நாம் நினைப்பது போல் தமிழ்மக்கள் கட்டிக் கொடுத்த கோவிலா சிதம்பரம் ? இல்லை தேரேறி வந்தார்களாம் தீட்சிதர்கள் அப்போது அனுமார் சஞ்சீவி மலையை துக்கிவந்தது போல் சிதம்பரம் கோவிலையும் தூக்கிவந்து தமிழகம் விமோசனம் பெற வேண்டும் என்ற நன்மைக்காக கொண்டு வந்திருக்கிறார்கள். இது புரியாத தமிழ் கிறுக்கர்கள் தேவாரத்தை ஓதுவோம், திருவாசகத்தை பாடுவோம் என்று குரல் எழுப்பினால் தீட்சிதர்கள் என்ன செய்வார்கள் பாவம் ?

தமிழைத் தீண்டாத கோவில்களை தமிழர்கள் ஏன் தீண்டனும் புரிக்கணியுங்கள் வருமானம் குறைந்தால் வழிக்கு வருவார்கள்ள். அதை விடுத்து போராட்டம் என்ற பெயரில் போலிஸ் காரன் கையில் அடிவாங்கி மிதிபடுவதைவிட மெளன போராட்டமே வெற்றிதரும்.

இந்த நாட்டில் ஆத்திகனுக்கு அவன் மொழியில் வழிபடும் உரிமையை பெற்றுத்தர நாத்திகர்களே போராட வேண்டி இருக்கிறது என்பது ஆத்திகர்களின் தலையெழுத்து. இராமர் படத்தை போட்டு உடைத்தார்...பிள்ளையாரை உடைத்தார் என்று பெரியார் மீது குற்றப்பத்திரிக்கை வாசித்து 'பெரியார் நாத்திகர்' என்று அவரைப் பற்றி அக்கரையாக புகழ் பரப்பிய குஞ்சுகள்...இறைவனுக்காக பாடப்பட்ட தமிழ்பாடல்களைப் புறக்கணிப்பதற்கு காரணமாக சப்பைக் கட்டு கட்டுவது எந்தவகை ஆத்திகம் என்று தெரியவில்லை.

எனக்கு என்ன சொல்லத் தோன்றுகிறது என்றால் 'தமிழ்நாட்டுக் கோவில்களில் கூட பாடமுடியாத தேவரமும் திருவாசகமும் இருந்து என்ன பயன் ? இந்த வருட சொக்கனுக்கான சொக்கபானை எரிப்பின் போது தமிழ் இறை நூல்களை மொத்தமாக போட்டு எரித்துவிட்டு தர்பணம் பண்ணிட்டு திரும்பிப்பார்காமல் போங்கடா' ன்னு சொல்லவருது. மன்னிக்கவும் ! தோடுடைய செவியன் ... தமிழை விரும்பாத செவிடனாகிவிட்டாரே என்ற ஆதங்கம் தான் !


பின்குறிப்பு : தமிழை நீச பாசை என்று தூற்றுபவர்களை செருப்பால் அடிப்பேன் என்று சொல்லத் துணிபவர்கள் இந்த இட்டுகை குறித்து மாற்றுக் கருத்து சொல்லலாம். இது 27 ஆவது பின்னூட்டத்திற்கு பிறகு போடப்பட்ட பின்குறிப்பு. எனவே முதல் 27 பின்னூட்டங்கள் பின்குறிப்பிற்கு முன்பே போடப்பட்டது என சொல்லிக் கொள்கிறேன்

69 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

why are burning the valuable things.Burn the Bras.. who block you and your language.If you are burning the thiruvasagam and thiruppavai it will be easy for them to promote the devapadai as thier choice.

...Kannan.

முத்துகுமரன் சொன்னது…

தேவாரத்தையும் திருவாசகத்தையும் எரிக்க வேணாம். நடராஜனை கிளப்பி சுடுகாட்டுக்கு கூட்டி வந்துவிட்டால் போதும்.

அமர்நாத் சொன்னது…

நல்ல வாய்ல வருது ...ஆனா எல்லாம் தமிழிலேயே வருது.

சமஸ்கிருதம் இல்ல ஹிந்தி லே ரெண்டு ( அதுக்கு மேல உங்கள் விருப்பம் ) கெட்ட வார்த்த இருந்தா திட்டுங்கப்பா.

எவ்வளவு திமிர் இருக்கணும் இவனங்களுக்கு...

'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை'

கொஞ்சம் ஓவரா தான் பொறுத்துடோமோ?

¸ñ½ý ÌõÀ§¸¡½õ சொன்னது…

சிதம்பரம் கோயிலில் தேவாரமோ திருவாசகமோ பாடப்படுவதில்லை என்று யார் சொன்னார்கள்?

இன்று தமிழக அரசு நிர்வகிக்கும் பெரும்பாலான கோயில்களில்-அதாவது முன்பு ஓதுவார் மூர்த்திகள் பணி நடந்து கொண்டிருந்த கோயில்களிலேயே இன்று தேவாரம் கிடையாது, ஓதுவார்களும் கிடையாது. இது தமிழ் வளர்க்கும் 'லச்சனம்'.

ஆனால் சிதம்பரம் கோயிலில் காலம் காலமாக தினந்தோறும் திருமுறைகள் ஓதப்பட்டு வருகின்றன. அர்த்தஜாம ஆரத்தியின்பொது பஞ்சபுராணம் ஓதப்படுகிறது.

ஏன் இப்படி பொய்களையே பரப்பிக்கொண்டிருக்கிறீர்கள். நேரில் போய் பார்த்துவிட்டுத்தான் வாருங்களேன்.

யாரோ ஒரு வம்பரை அங்கே அனுமதிக்கவில்லை என்பதற்காக தமிழையே ஒதுக்கிவிட்டார்கள் என்பது வெறும் வெறுப்பினால் வரும் பொய்.

சரி, அதுபோகட்டும்; பச்சைத்தமிழர்களால் நிர்வகிக்கப்படும் இந்து அறநிலையத் துறை எவ்வளவு தேவாரப் பாடசாலைகளை நடத்துகிறது? அதில் வருடம் தோறும் எத்தனை ஓதுவார்களை உருவாக்குகிறது? எத்தனை ஓதுவார் மூர்த்திகளுக்கு பணி வாய்ப்புக் கொடுத்திருக்கிறது? தமிழ் போராளிகள் அங்கேயும் கொஞ்சம் போராடுங்களேன்.

கண்ணன்.

nayanan சொன்னது…

அன்புடையீர்,

அப்படிச் சொல்லாதீர்கள். ஏற்கனவே
கரையானை வைத்து பாதியை எரித்து
விட்டார்கள்.

தேவாரக் கனல் திரும்பும்! நம்பிக்கை
கொள்ளுங்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

பெயரில்லா சொன்னது…

ஐயா பக்திமானே!
தேவாரம், திருவாசகமாகட்டும்,
சமஸ்கிரத மந்திரங்கள், ஸ்லோகங்கள்
ஆகட்டும் இவைகள் எதனாலாவது
கடவுளுக்கு ஏதாவது நன்மை தீமை
உண்டா?
எதற்காக இப்படி புலம்பிக்கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கு எது இஷ்டமோ அதைப்படியுங்கள்.
எங்கு படிக்கிறேம் என்பது முக்கியம்ல்ல.
எப்படிப்படிக்கிறேம் என்பது தான் முக்கியம்.
அழிக்கும் எண்ணதை உள்ளத்திலிருந்து அகற்றி
ஆக்கும் எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.
எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

ஜடாயு சொன்னது…

கோவி கண்ணன், நீங்கள் ஆன்மிகத்தில் கொஞ்சமாவது பற்றுள்ளவராயிருந்தால் தப்பித்தவறிக் கூட இந்த மாதிரி வார்த்தை வந்திருக்காது - "தேவரம் திருவாசகத்தை கொளுத்த வேண்டும் !" என்று. இவற்றைக் கொளுத்த வேண்டும் என்ற உம் உள்மன தீய எண்ணம் தான் இப்படி வெளிப்பட்டிருக்கிறது.

முதலில் நீர் கோவிலுக்குப் போகும் ஆளா என்றே எனக்கு சந்தேகம் வருகிறது. தமிழகத்தின் எல்லாக் கோவில்களிலும் திருமுறைகள், வேதமந்திரங்களின் ஒத்திசையோடு முழங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. சிதம்பரத்தின் பிரசினை சில விஷமிகள் வேலை - அது விரைவில் தீரும்.

"இருக்கொடு தோத்திரம் இயம்பினன் ஒருபால்" என்று தான் மணிவாசகர் வாழ்ந்த திருவாசக காலத்திலேயே வழிபாடு இருந்திருக்கிறது. "வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக" என்று தான் சம்பந்தர் அருளினார்.

இந்து ஆன்மிகம் பற்றிய எந்த புரிதலும் இல்லாம் கடைந்தெடுத்த வெறுப்பில் விளைந்த இந்த அபத்தப் பேச்சை நிறுத்தித் தொலையும்.

"மொழிகள் சங்கமிக்கும் இந்து ஆன்மிகம்" என்ற எனது இந்தப் பதிவையும் பார்க்கவும் -
http://jataayu.blogspot.com/2007/04/blog-post_29.html

எம் திருமுறைகளைக் கொளுத்த வேண்டும் என்று சொல்லும் உம்மை சிவன் தண்டிக்கட்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜடாயு said...
கோவி கண்ணன், நீங்கள் ஆன்மிகத்தில் கொஞ்சமாவது பற்றுள்ளவராயிருந்தால் தப்பித்தவறிக் கூட இந்த மாதிரி வார்த்தை வந்திருக்காது - "தேவரம் திருவாசகத்தை கொளுத்த வேண்டும் !" என்று. இவற்றைக் கொளுத்த வேண்டும் என்ற உம் உள்மன தீய எண்ணம் தான் இப்படி வெளிப்பட்டிருக்கிறது.

//

ஐயா ஜடஆயு,

அதே சிதம்பரத்தில் தான் தமிழில் எழுத்தப்பட்ட திருமுறைகள் பூட்டிவைக்கைப்பட்டு கறையானுக்கு உணவாக்கப்பட்டது ( உங்க ஆளுங்க 'பாதுக்காப்பாக வைத்திருக்க முயன்றதில் கவனக்குறைவு ஏற்பட்டி இருக்கலாம் என்று ஜல்லி அடிக்கலாம்) அதற்கெல்லாம் எதாவது கண்டனம் தெரிவித்து பக்தி பீரிடும் தமிழர் என்று காட்டி இருக்கிறீர்களா ?

எனது தீய எண்ணம் கிடக்கட்டும் உங்கள் மாய எண்ணத்தை அகற்றிவிட்டு பேசுங்கள். மதவெறியை தூண்டிவிடுவது அன்றி எதாவது மத ஒற்றுமைக்காக ஒரு எழுத்தாவது எழுதி இருந்தால் காட்டுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Anonymous said...
why are burning the valuable things.Burn the Bras.. who block you and your language.If you are burning the thiruvasagam and thiruppavai it will be easy for them to promote the devapadai as thier choice.

...Kannan.
//

Mr Kannan,

தடித்த தோல் தமிழர்கள் ஆகிவிட்டோம். வாட்டாள் நாகராஜ் போல தடால் 'அடி' ஆளுங்க உருவானால் தான் இதுக்கெல்லாம் விடிவுகாலம் பிறக்கும் !

முத்துகுமரன் சொன்னது…

//"இருக்கொடு தோத்திரம் இயம்பினன் ஒருபால்" என்று தான் மணிவாசகர் வாழ்ந்த திருவாசக காலத்திலேயே வழிபாடு இருந்திருக்கிறது. "வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக" என்று தான் சம்பந்தர் அருளினார்.//

சம்பந்தர் அருளினது எல்லாம் இருக்க்கட்டும். தீட்சதர்கள் எப்போது அருள்வார்கள் சாமி. சொன்னீங்கணா புண்ணியமா போகும். இறைச்சாலையில் பாடமுடியாமல் இருப்பதற்கு கொளுத்துவது மேல் என்ற விரக்தி உங்களுக்கு தீய எண்ணமா?.
கோவிலுக்கு போறவன் மட்டும்தான் ஆன்மீகவாதியா! உதட்டில் ஒன்றூம் உள்ளத்தில் ஒன்றும் கொண்டு வேடமிடும் மனிதர்கள்தான் இறைவனை அவமதிப்பவர்கள்,

தென்னாட்டுடைய சிவனே போற்றி! தென்னாட்டின் மொழி தமிழுக்கு அனுமதி மட்டும் இல்லை.

இதெல்லாம் விடுங்க! இந்திய தேசிய கொழுந்துகளே! இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அமைக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை( அறநிலையத்துறை ஆணையர் விசாரித்து உத்தரவிட வேண்டும் என்பது நீதிமன்ற ஆணை- ஆணையரின் தீர்ப்பு தமிழில் பாடலாம் என்பது) மீறும் இந்த தீட்சதர்களை இந்திய தேசிய துரோகிகள் என்று அறிவிப்பீர்களா??

தான் வீற்றிருக்கும் மண்ணின் மொழியையும், மாணிக்க வாசகர், சம்பந்தரின் பாக்களையுமே காக்க வக்கில்லாத நடராஜருக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை.

பி.கு 1: ஆகஸ்ட் இந்தியா வருகிறேன். என்னோடு வந்து சிதம்பரத்தில் தேவாரம் திருவாசகம் பாட ஜடாயு நீங்கள் தயாரா? போக்குவரத்து மற்றும் தங்கும் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

பி.கு 2: ஜடாயு ஆன்மீகப் (சைவ )பாரம்பர்யமிக்க குடும்பம்தான் என்னுடையது. ஆன்மீக துரோகி அது இது என்று ஜல்லி வேண்டாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//எம் திருமுறைகளைக் கொளுத்த வேண்டும் என்று சொல்லும் உம்மை சிவன் தண்டிக்கட்டும்.//

ஜடாயு,
கரையானுக்கு திருமுறைகளை சாப்பாடாக போட்டவனுங்களே திவ்யமாக தின்னுட்டு தொப்பையை வளர்த்து வைத்திருக்கிறார்கள்... பரம்பரைகள் நல்லா சொத்து சுகத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்னை தண்டிக்கப்போகிறாரா சிவன் ?

நல்ல நகைச்சுவை !

Thamizhan சொன்னது…

அன்று அறிஞர் அண்ணா அவர்கள் பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை அவ்ர்களுடன் பெரும் பக்திமான்கள் நடுவர்களாக இருந்த பட்டிமன்ற்த்திலே கம்பராமாயணம் எரிக்கப் படவேண்டும் என்று பேசி வெற்றி கண்டார்.அது "தீ பரவட்டும்" என்ற நூலாக உள்ளது.
தமிழனிடமிருந்த நல்லது எல்லாவற்றையும் தமதாக்கிக் கொண்டு,அவர்களின் வழிபாடுகளையும்,கடவுள்களையும் அபகரித்துக் கொண்டு அவர்களது மூளைகளிலே விலங்குகளைப் போட்டு,ஆட்சி சூட்சியால் இன்று தமிழன் தமிழுணர்வுடன் கூடப் பேச முடியாதபடி வாய்ப் பூட்டு போட்டுள்ளவர்கள் நமக்கு அறிவுரை கூறுவதுதான் திகைப் பூட்டுகிறது.
எத்தனை முறை எப்படி எப்படியெல்லாம் தமிழர்களை அவமானப்படுத்தியும் அழித்தும் உள்ளார்கள்.
கோவிலைக்கட்டிய ராஜராஜ சோழனுக்கே கோயில் உள்ளே அனுமதியில்லை!
சைவத்தை முழுதும் முழுங்கி சைவமே பார்ப்பனீயத்திற்கு அடிமை.ஏதோ ஓரிரு மடங்கள் தவிர சைவ மடங்கள் பார்ப்பனீய அடிமை மடங்களாகத்தான் இருக்கின்றன்.
பெரிய பக்திமானாகத் திகழ்ந்து,வடமொழி அறிந்து வேத சாஸ்திர அடிமையாயிருந்து,கடைசியில் உண்மை உணர்ந்து "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய்" வள்ளலார் "அருட் பெருஞ்சோதி "வழி பாட்டைப் பிள்ளையார் மற்ற பார்ப்பன் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க நீதிமன்ற உத்தரவு பெற வேண்டியுள்ளது.
இறைவன்,கோவில் என்று தமிழர்களை அடிமைகளாக்கி வைத்திருப்பதால் தானே இந்த தமிழுணர்வே பொங்கி எழுகிறது.
இன்னும் எங்களை எங்கள் நாட்டிலேயே அடிமைகளாக் வாழ்ச்சொல்வீர்களானால் அது அந்தக் கடவுளுக்கே பொறுக்காது என்பதையாவது இவர்கள் உணரவேண்டாமா?
நாங்கள் வாழ நீங்கள் வழி வகுக்க வேண்டாம்.உங்களை வாழ வைத்தற்கு கொஞ்சமாவது நன்றியுடையவர்களாக,மனிதர்களாக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

வெட்டிப்பயல் சொன்னது…

இல்லைங்க கோவி.கண்ணன், கடவுள் நம்பிக்கை இருக்கவங்க எல்லாத்தையும் கொளுத்திடலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெட்டிப்பயல் said...
இல்லைங்க கோவி.கண்ணன், கடவுள் நம்பிக்கை இருக்கவங்க எல்லாத்தையும் கொளுத்திடலாம்.
//

பாலாஜி,
சிதம்பரத்தில் நந்தனார் இறைவனுடன் இரண்டர'கலந்தது' ஞாபகம் வருது ! இப்போதெல்லாம் அது போல செய்யமுடியாது !
:(

Unknown சொன்னது…

//இந்த நாட்டில் ஆத்திகனுக்கு அவன் மொழியில் வழிபடும் உரிமையை பெற்றுத்தர நாத்திகர்களே போராட வேண்டி இருக்கிறது என்பது ஆத்திகர்களின் தலையெழுத்து//

ஜிகே நீங்க இங்கதான் நிக்கறீங்க

பெயரில்லா சொன்னது…

I have done in சிதம்பரம். But here the issue is he wants to sing by standing on place......

Mr Muthukumaran and Kovi.kannan....

DO YOU UNDERSTAND THIS ISSUE OR NOT.......




Mr. Kovi.Kannan alias Fool...

சிதம்பரம் கோயிலில் தேவாரமோ திருவாசகமோ பாடப்படுவதில்லை என்று யார் சொன்னார்கள்? ஆனால் சிதம்பரம் கோயிலில் காலம் காலமாக தினந்தோறும் திருமுறைகள் ஓதப்பட்டு வருகின்றன.

In there is a adminstration office, have some rules and regulations when I go to that place I should follow the same.

There is no difference between you and the rowdies of Madurai.

If someone is not allowed to do...can you smash everything.

So if someone is not allowed to do we can destroy anything in the world.

Are you educated....Civilized....

/**** முத்துகுமரன் said...
தேவாரத்தையும் திருவாசகத்தையும் எரிக்க வேணாம். நடராஜனை கிளப்பி சுடுகாட்டுக்கு கூட்டி வந்துவிட்டால் போதும். ****?

You can do sing தேவாரத்தையும் திருவாசகத்தையும் in sudukaadu/ Idukaadu ....who cares I have done in சிதம்பரம். But here the issue is he wants to sing by standing on place......

Mr Muthukumaran and Kovi.kannan....

DO YOU UNDERSTAND THIS ISSUE OR NOT.......

.கு 1: ஆகஸ்ட் இந்தியா வருகிறேன். என்னோடு வந்து சிதம்பரத்தில் தேவாரம் திருவாசகம் பாட ஜடாயு நீங்கள் தயாரா? போக்குவரத்து மற்றும் தங்கும் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

Mr Muthukumaran, I am Sengappan from Kovai. Taking your challange, I will pay for you visit from your house to temple and back to your house including food and stay. I am in USA as of now and I will be in India for August 4 and September 30.

இந்த நாட்டில் ஆத்திகனுக்கு அவன் மொழியில் வழிபடும் உரிமையை பெற்றுத்தர நாத்திகர்களே போராட வேண்டி இருக்கிறது என்பது ஆத்திகர்களின் தலையெழுத்து

Only Naathikans are talking.....

வெட்டிப்பயல் சொன்னது…

//இந்த நாட்டில் ஆத்திகனுக்கு அவன் மொழியில் வழிபடும் உரிமையை பெற்றுத்தர நாத்திகர்களே போராட வேண்டி இருக்கிறது என்பது ஆத்திகர்களின் தலையெழுத்து//

ராமானுஜர்னு ஒருத்தர் இருந்தாருங்க கோவி. அவரை பத்தி கொஞ்சம் படிச்சி பாருங்க. அவரும் நிறைய போராடிருக்காருங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//ராமானுஜர்னு ஒருத்தர் இருந்தாருங்க கோவி. அவரை பத்தி கொஞ்சம் படிச்சி பாருங்க. அவரும் நிறைய போராடிருக்காருங்க. //

பாலாஜி !

படித்து இருக்கிறேன் சாதி பாகுபாடுகளை அகற்றவேண்டுமென்றால் தாழ்த்தப்பட்டவர்களை உயர்சாதிக் காரர்களாக சாதி மாற்றம் செய்யப்படவேண்டும் என்று சொல்லி மாற்றியும் காட்டி இருக்கிறார். மற்றபடி மூடநம்பிக்கைகள் அதாவது யாகங்களில் பலி இடுதல், உடன்கட்டை ஏறுதல் போன்றவைகள் அவர்காலத்திலும் இருந்தது அவற்றிற்காக அவர் எதுவும் சொல்லி இருந்தால் தெரிவியுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

வெட்டிப்பயல் சொன்னது…

//படித்து இருக்கிறேன் சாதி பாகுபாடுகளை அகற்றவேண்டுமென்றால் தாழ்த்தப்பட்டவர்களை உயர்சாதிக் காரர்களாக சாதி மாற்றம் செய்யப்படவேண்டும் என்று சொல்லி மாற்றியும் காட்டி இருக்கிறார்.//

இதை செய்யறது சாதாரணம்னு நினைக்கறீங்களா கோவி?

(பெரியார் படத்துல கடைசியா அவர் சாகும் போது கூட உங்களை எல்லாம் சூத்திரனாவே விட்டுட்டு போறனேனு சொல்லுவாரு. அவரை கேட்டா அந்த கஷ்டம் தெரியலாம்)

உடன்கட்டை ஏறுதலை தவிர்க்க போராடிய ராஜா ராம் மோகன் ராய் நாத்திகவாதியா?

உலகத்துல நல்லது எல்லாம் நாத்திகவாதிகளால தான் வந்துச்சினு நீங்க சொல்றது தவறு. அதை தான் நான் சொல்றேன். ஆனா நீங்க அதை ஒத்துக்காம அடுத்து ராஜா ராம் மோகன் ராய் மத்தவங்களுக்காக எப்படி போராடினார்னு கேள்வி கேப்பீங்க???

நீங்க எதை வேணா கொளுத்துங்க... ஆனா உங்க காசுல வாங்கி கொளுத்துங்க ;)

கோவி.கண்ணன் சொன்னது…

//உலகத்துல நல்லது எல்லாம் நாத்திகவாதிகளால தான் வந்துச்சினு நீங்க சொல்றது தவறு. அதை தான் நான் சொல்றேன். ஆனா நீங்க அதை ஒத்துக்காம அடுத்து ராஜா ராம் மோகன் ராய் மத்தவங்களுக்காக எப்படி போராடினார்னு கேள்வி கேப்பீங்க???
//
பாலாஜி,

நாத்திகத்தின் அவசியம் என்ன என்று விளக்கினால் நன்றாக இருக்கும். புத்தரால், சமணரால் நாத்திகவாதம் வந்தது அதன் காரணம் என்ன ?
உங்கள் அனுமானத்தில் சொல்லுங்க !

எனக்கு தெரிந்து ஆத்திகர் அறிவிழந்து மக்களுக்குள் பேதமை வளர்த்தால் தான் நாத்திகம் தோன்றியதாக நான் நினைக்கிறேன். எந்த ஒரு நாத்திகனும் விரும்பி தானே நாத்திகன் ஆன முன்னாள் ஆத்திகர்கள் என்பது என் கருத்து.

வெட்டிப்பயல் சொன்னது…

//
நாத்திகத்தின் அவசியம் என்ன என்று விளக்கினால் நன்றாக இருக்கும். //

முதலில் தோன்றிய மனிதன் நாத்திகன் தானே???

ஆத்திகர்கள் உருவாக காரணம் என்னவா இருந்திருக்கும்? நீங்க விளக்கினால் நன்றாக இருக்கும்.

பார்ப்பானுங்கனு சொல்லிடாதீங்க...

இன்னும் பல காடுகளில் வசிக்கும் மனிதரும் ஏதாவது ஒரு வகையில் எதையாவது வணங்கி கொண்டு தான் இருக்கிறார்கள்.

புத்தரையே சாமியா கும்பிடறாங்களே... அது எதுக்கு?

வெட்டிப்பயல் சொன்னது…

கேள்வி கேக்கறது நல்லா இருக்குங்க.. நான் இனிமே கேக்கறேன்...

1. எல்லா சமூகத்திலும் கடவுள் நம்பிக்கை ஏதோ ஒரு வகையில் வந்ததன் காரணம் என்ன?

நியோ / neo சொன்னது…

நண்பர் கோவி கண்ணன்! :)

தீக்கிரையாக்க வேண்டியது தமிழ்ப்பாடல்களை அன்று - எந்தக் கும்பல் நந்தனைத் தீக்கிரையாக்கியதோ, நந்த்தனாரின்(திருநாளைப் போவார்) சிலையைக் கூட சிற்றம்பல(சிதம்பர) Kஒவிலின் உள்ளே வைக்காமல் வெளியில் எறிந்ததோ,
யார் அருட்பெரும்சோதி வள்ளலாரைக் தீயில் தள்ளி கொலை செய்து 'மோட்சம்' அடைந்தார் என்ற்று கதைகட்டினார்களோ,
யார் தமிழ்ப்பாடல்களை எல்லாம் 'செல்' அரிக்க்க விட்டு அழிக்க நினைத்தார்களோ,
யார் தமிழை 'சூத்திர' மொழி என்று இன்றளவும் கேவலப்படுத்தி வருகிறார்களோ,

அவர்களையும் அவர்களின் தலைமுறையினரையும் அல்லவா தீக்கிரையாக்க வேண்டும்?

கூடுதலாக - தமிழ்நாட்டில் தமிழ்மொழிப்பற்று கொண்டு தமிழுக்கு நேர்ந்து வரும் அவமானம் பற்றி பேசுகிற தமிழனிடம் வந்து - 'போஸ்ட் மாட்டர்னிசம்' பேசி - பார்ப்பனியத்தை 'தடுத்தாட் கொள்ளும்' ****-களையும் அல்லவா கொளுத்தவேண்டும்?

இன்னும் ஒரு அரை நூற்றாண்டுக்குள்ளாவது இது நிகழத்தான் போகிறது.

பெயரில்லா சொன்னது…

1. Kamba ramayanam
2. Rajaji mahabharatha urai
3. Thirukkural
4. Kalkiyin ponniyin selvan
5. Periyapuranam
6. Silappadhikaram
7. Seevaka Sinthamani
8. Manimekalai

All these list of books and endless other literary tretise from tamil should be burnt because it makes no meaning to "Shudhras".

Only Periyar's ponmozhigal should be THE book for all times and all seasons, it has every thing. Its more scientific and gramatical than Tholkappiyam. More romantic than Aghanaanooru.

Long live Periyar and his ideology.

வெட்டிப்பயல் சொன்னது…

தலைவா,

தேவாரம், திருவாசகம் புத்தகத்தை தானே சொன்னீங்க??? மதுரைல எரிச்ச மாதிரி யாராவது மனுசன சொன்னீங்களா? ;)

நான் பாட்டுக்கு காசு கொடுத்து கொளுத்துங்கனு போட்டுட்டேன் ;)

மக்களே நான் சொன்னது புத்தகத்தை தான்.. நாளைக்கே சிதம்பரத்துல யாரையாவது கொளுத்தினா அதுக்கு நான் சம்பந்தம் இல்லை...

கோவி.கண்ணன் சொன்னது…

வெட்டிப்பயல் said...
//
நாத்திகத்தின் அவசியம் என்ன என்று விளக்கினால் நன்றாக இருக்கும். //

முதலில் தோன்றிய மனிதன் நாத்திகன் தானே???

ஆத்திகர்கள் உருவாக காரணம் என்னவா இருந்திருக்கும்? நீங்க விளக்கினால் நன்றாக இருக்கும்.

பார்ப்பானுங்கனு சொல்லிடாதீங்க...

இன்னும் பல காடுகளில் வசிக்கும் மனிதரும் ஏதாவது ஒரு வகையில் எதையாவது வணங்கி கொண்டு தான் இருக்கிறார்கள்.

புத்தரையே சாமியா கும்பிடறாங்களே... அது எதுக்கு?

1:29 AM, May 19, 2007
வெட்டிப்பயல் said...
கேள்வி கேக்கறது நல்லா இருக்குங்க.. நான் இனிமே கேக்கறேன்...

1. எல்லா சமூகத்திலும் கடவுள் நம்பிக்கை ஏதோ ஒரு வகையில் வந்ததன் காரணம் என்ன?
//

பாலாஜி,

இது பற்றி புத்தகமே எழுதலாம்...

இயற்கையிலேயே மனிதனுக்கு ஆராயும் அறிவு உள்ளது தன்னை சுற்றி நடக்கும் காரண காரியங்களை கற்காலத்திலேயே ஆரய என்று சொலல்முடியாவிட்டாலும் ஓரளவுக்கு சிந்திக்கத் தொடங்கினான். மரம் ஏன் அசைகிறது, இரவில் ஏன் சூரியன் மறைந்து இருட்டுகிறது என இயற்கையைப்பற்றி ஆராய தலைப்பட்டனர். அன்றை அறிவு நிலையில் இவற்றிற்கு விடைகிடைக்க சாத்தியமில்லாததால் மேலான கடவுள் இருப்பதாக நினைக்கத் துடங்கினான். அவற்றைப் பற்றி சிந்தித்து சிந்தித்து மனிதன் இறைவனைப் படைத்தான்.

நான் எங்கிருந்து பிறந்தேன் ? நான் யார் ? என்ற கேள்வி ஆத்திகர்களுக்கு மட்டுமல்ல நாத்திகர்களுக்கும் உண்டு. ஆனால் எல்லாம் இயற்கை என்ற நினைத்து தனது பிறப்பு பற்றிய உடல் ரீதியான அறிவுநிலையில் நாத்திகர்கள் திருப்திப்பட்டுக் கொண்டு வாழ்க்கையில் அதன் பாதையிலேயே செலுத்துவார்கள் . இறைவனைப்படைத்த ஆத்திகர்கள் மேலும் சிந்திக்க ஆரம்பித்ததும் இறைவன் பேராற்றல் உடையவன் என்று நம்ப ஆரம்பித்தார்கள். இறைவனுக்கு கீழ்படிய வேண்டும், பயப்படவேண்டும் அப்படி நடந்து கொள்ளவில்லை என்றால் இறைவன் தண்டித்துவிடுவான் என்று இறைவன் பற்றிய நம்பிக்கைகள் பயமாக மாறி இருந்திருக்கிறது.

மரண பயம் என்ற அடிப்படை உணர்வு அதாவது இறப்பிற்கு பின்னால் தான் தண்டிக்கப்படுவதாகவோ, மீண்டும் பிறப்பதாகவோ மனித சமூதாயத்திற்கு ஏற்பட்ட கற்பனையின் விளைவாக கடவுள் கொள்கைகள் பின்னாளில் மதங்களாக தோன்றி இருக்கக்கூடும். மேலும் சமுக ஒழுங்கைக் கட்டிக்காப்பதற்கு ஒரு வழியாகத்தான் மதங்கள் தோன்றி இருக்கக் கூடும். மனிதனின் செயல்களுக்கு ஏற்ப மறுமையில் தண்டனையோ வெகுமதியோ கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டுவதின் மூலம் மனிதன் எந்த ஒரு செயலை செய்யும் முன் அவற்றினால் நன்மையா? தீமையா ? என்று அவனே முடிவெடுப்பதற்காக உடனடியாக பலாபலன்களை அவன் மூளைக்குக் காட்டுவதுதான் மறுமைப் பற்றிய மதங்கள் வழி பதியப்பட்ட உணர்வு அல்லது கோட்பாடு.

********
இன்னொரு நாளைக்கு தனிப்பதிவாக இடுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

பாலாஜி,

தமிழில் பாடுவது தொடர்பாக எனது இடுகையை எழுதி இருக்கிறேன். அதுபற்றி எதுவுமே கருத்து சொல்லாமல் எரிப்பது, புதைப்பது பற்றி நீங்கள் ஆர்வமாக இருப்பதால் - இது குறித்து உங்களிடம் விவாதம் செய்வது வீன் என நினைக்கிறேன்.

தமிழை நீச பாசை என்று சொல்பவனை செருப்பால் அடிப்பேன் என்று ஒருவார்த்தை சொல்ல உங்களுக்கு துணிவிருந்தால் உங்கள் ஆத்திக கருத்துக்களை இங்கே சொல்லுங்கள் விவாதம் செய்ய நானும் தயார். அது முடியாவிட்டால் இது 'வெட்டி' பதுவு அல்ல என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

மன்னிக்க !

வெட்டிப்பயல் சொன்னது…

//தமிழை நீச பாசை என்று சொல்பவனை செருப்பால் அடிப்பேன் என்று ஒருவார்த்தை சொல்ல உங்களுக்கு துணிவிருந்தால் உங்கள் ஆத்திக கருத்துக்களை இங்கே சொல்லுங்கள் விவாதம் செய்ய நானும் தயார். அது முடியாவிட்டால் இது 'வெட்டி' பதுவு அல்ல என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.//

அவனை செருப்பால அடிக்க வேணாங்க. அவனை எல்லாம் புடிச்சி உள்ள போடனும். அதுல எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை

நீங்க வேச்ச தலைப்பு தான் கோபத்துக்கு காரணம். மேலும் உங்களுக்கு தமிழ் மேல பற்று இருக்கறதை விட நாத்திகத்து மேல தான் பற்று இருக்கற மாதிரி என் மனசுல படுது. (ஏற்கனவே ஒரு இடகைல உங்ககிட்ட இதை பத்தி பேசியிருக்கேன். நீங்க எழுதிய தமிழ்லையும் தப்பு இருக்கு உங்க கருத்துலையும் தப்பு இருக்குனு ஒருத்தர் சொன்ன, முதலில் தமிழில் என்ன தப்புனு கேட்டு அதை சரி செய்திருக்கலாம். ஆனா உங்களுக்கு உங்க கருத்து மேல் தான் பாசம் அதிகம்)

நீங்க எல்லாம் நாட்டை திருத்தறவங்க. நாங்க எல்லாம் வெட்டி தான். இனிமே உங்களோட எந்த பதிவுக்கும் வந்து உங்க நேரத்தை வீணாக்க மாட்டேன்...

கோவி.கண்ணன் சொன்னது…

//(ஏற்கனவே ஒரு இடகைல உங்ககிட்ட இதை பத்தி பேசியிருக்கேன். நீங்க எழுதிய தமிழ்லையும் தப்பு இருக்கு உங்க கருத்துலையும் தப்பு இருக்குனு ஒருத்தர் சொன்ன, முதலில் தமிழில் என்ன தப்புனு கேட்டு அதை சரி செய்திருக்கலாம். ஆனா உங்களுக்கு உங்க கருத்து மேல் தான் பாசம் அதிகம்)
//

பாலாஜி 'இடகைல' இல்லை 'இடுகையில்' என்று இருக்க வேண்டும். தமிழ் எழுத ஆரம்பித்ததே இந்த மூன்றுவருடங்களாகத்தான். 'இடகைல; ங்கிற மாதிரி தப்பு எல்லோருக்கும் வருவதுதான். ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையாக இருந்தாலும் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்கிறேன். இங்கே ஒருவார்த்தை எழுத்துப்பிழையாக இருந்தாலும் பதிவின் பொருளில் சரியாகவே புரிந்து கொள்ளப்படும் என்பதாகவே நினைக்கிறேன். என்பதிவில் பலர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு எழுத்துப்பிழையை வைத்து பதிவை குறைசொல்வதை பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

நான் வைத்த தலைப்புக்கு கோபம் வருகிறது...அதே திருமுறை நூல்கள் கறையானுக்கு உணவாக்கியதை பக்கம் பக்கமாக பலரும் கட்டுரைகளாக ஆதாரங்களுடன் எழுதி உள்ளனர். எஞ்சியது மட்டுமே திருமுறைகளாக தொகுக்கப்பட்டு தற்பொழுது நம்மிடம் இருக்கிறது. இத்தகைய பாதகங்களைச் செய்துவிட்டு இன்றளவிலும் தமிழில் வழிபாடு நடத்த நாம் போராட வேண்டி இருக்கிறதே என்று உங்களுக்கு ஏன் கோபம் வரவில்லை என்று எனக்கு வியப்பாக இல்லை. ஏனென்றால் நீங்கள் தமிழ் எக்கேடுகெட்டாலும் ஆத்திகம் தழைக்கிறதே என்று நினைப்பவர் என்று நினைக்கிறேன்.

வருவதும், வராததும் உங்கள் முடிவு. அடுத்தவர்களின் சுதந்திரத்தில், முடிவில் தலையிட எனக்கு ஒன்றும் உரிமை இல்லை.

எழில் சொன்னது…

சிறப்பான பதிவு.
சரியான கோபம்.

G.Ragavan சொன்னது…

திருக்கோயில்களில் இங்கு தமிழிலும் அர்ச்சனை நடத்தப்படும் என்ற பலகை என்று தூக்கி எறியப்பட்டு இங்கு வடமொழியிலும் அர்ச்சனை நடத்தப்படும் என்று பலகை வைக்கப்படுகிறதோ...அன்றுதான் வரலாற்றில் நன்னாள்.

விஷமியோ கிருமியோ...அவருக்குத் தமிழில் பாடித் தொழ விருப்பம்...அதை எப்படி தடுக்க வேண்டும். சரி...அந்த விஷமியை விட்டு விடலாம்...நான் போய்ப் பாட முடியுமா? அந்தச் சபையில். நானும் விஷமியோ? என்றைக்குத் திருக்கோயில்களில் சாதிப்பாகுபாடு இல்லாமல் சமயப்பணி ஆற்ற முடிகிறதோ...அப்பொழுதுதான் உண்மையான சமதர்மம் பிறக்கிறது. இதைச் செய்ய வேண்டிய பொருப்பு எல்லாருக்கும் உண்டு. மற்ற ஊரில் அப்படி இப்பிடி இருக்கலாம். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என்னுடைய ஊர் இப்படித்தான் இருக்க வேண்டும்.

இதற்கு ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றால்...தமிழர்கள் என்று தம்மை நம்புகிறவர்கள் அந்தக் கோயிலைப் புறக்கணிக்க வேண்டும். கற்கோயில் இறைவன் உளக்கோயிலிலும் இருக்கிறான். ஆகையால் நமக்கு நட்டமில்லை. இதுதான் என்னுடைய கருத்து. கும்ம விரும்புகிறவர்கள் கும்மிக்கொள்ளலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

பாலஜி,

உங்கள் புனைப்பெயரில் நீங்கள் பின்னூட்டம் நீங்கள் போட்டாலும் உங்கள் பெயரான பாலாஜி என்று குறிப்பிட்டே என்பதிவில் மறுமொழியும், உங்கள் பதிவில் பின்னூட்டமும் இட்டுவருகிறேன். பெயர் தெரியாததற்கு முன்பு ஒருவேளை உங்கள் புனைப்பெயரை குறிப்பிட்டு பின்னூட்டமோ, மறுமொழியோ இட்டு வந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

இது 'வெட்டி' பதுவு அல்ல என்று முடிவு செய்து கொள்ளுங்கள். - என்று சொன்னதும் கூட எனது பதிவைக் குறித்துமட்டுமே. அதற்காகத்தான் '' க்குள் வெட்டி என்று போட்டேன். தங்களைக் குறித்து அல்ல !

இது ஒரு தன்னிலை விளக்கம் மட்டுமே. அதுவும் நான் உங்களைக் குறித்துச் சொல்கிறேன் என்று நீங்கள் தவறாக நினைத்திருக்கக் கூடும் என்று உங்கள் கடைசி பின்னூட்டத்திற்கு பிறகு நானாகவே தீர்மாணித்துக் கொண்டதால்.

rv சொன்னது…

தேவாரத்தையும் திருவாசகத்தையும் எரிக்கணுமான்னு டிசைட் பண்ணவேண்டிய அத பாலோ பண்றவங்களோட வேலை.. இந்த ஹோலியர்-தான்-தௌ விளையாட்டெல்லாம் இன்னும் எத்தனை காலம் தான்?

தமிழக நாத்திகர்களின் ஆலயங்களில் எல்லாம் அனைவருக்கும் சமமான இடஒதுக்கீடு, மொழி ஒதுக்கீடு எல்லாம் கிடைக்குதான்னு நம்மளேயே கேட்டுக்க வேண்டிய நிலைமை இருக்கு கோவி.க..

இப்படி இருக்கும்போது ஏதோ கற்சிலையாம், அது இருக்குற ஊராம், அதுல தேவாரம் பாடுறாங்க, ஆனா பாடலேன்னு சொல்லனும்னு எல்லாம் நமக்கு என்ன கவலைங்கோ இங்க?

பெயரில்லா சொன்னது…

Chidambaram is a temple town of great antiquity going back to early Christian era. Periyapuranam was composed in the thousand-pillared hall. Four Saiva Saints (Appar, Sundarar, Sambandar and Manikkavacakar) worshipped at the temple. Today Sambandar stands (as a stucco statue) at the South Gate, Appar at the West Gate, Sundarar at the North Gate and Mannikkavacakar at the East Gate. The gates are the entry points in the towers or gopurams. Together with domed Chit Sabha, the five structures represent the five faces of Siva.

கோவி.கண்ணன் சொன்னது…

//இராமநாதன் said...
தேவாரத்தையும் திருவாசகத்தையும் எரிக்கணுமான்னு டிசைட் பண்ணவேண்டிய அத பாலோ பண்றவங்களோட வேலை.. இந்த ஹோலியர்-தான்-தௌ விளையாட்டெல்லாம் இன்னும் எத்தனை காலம் தான்?
//

இராமநாதன்,

அதை பாலோ பண்ணுகிறவர்கள் அடிவாங்கி மதிபடுகிறார்களே.

ஹோலியர்-தான்-தௌ - இந்த விளையாட்டு யாரும் விளையாடவில்லையென்றால் கோவில் கதவுகள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கீழாகவைக்கப்பட்டவர்களுக்கு திறந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா ?
திருவரங்க பெருமாளும், சிதம்பர நடராஜனும் வந்து அனைவரையும் கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்களா ?

எரிக்கச் சொன்னது தவறு ! புறக்கணிப்பது உயர்வோ ?

//தமிழக நாத்திகர்களின் ஆலயங்களில் எல்லாம் அனைவருக்கும் சமமான இடஒதுக்கீடு, மொழி ஒதுக்கீடு எல்லாம் கிடைக்குதான்னு நம்மளேயே கேட்டுக்க வேண்டிய நிலைமை இருக்கு கோவி.க..
//

நாத்திகர் எவரோ செய்யும் செயலுக்கும் நான் பொருப்பேற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சிலரின் அனுகுமுறைகளும் கருத்துக்களும் பிடித்திருக்கிறது. அதற்காக அவர்கள் செய்வதற்கெல்லாம் முட்டுக் கொடுப்பவன் நான் அல்ல.

ஆத்திகர்கள் வேண்டுமானால் ஆத்திகர்கள் செய்யும் தவறுக்கு முட்டுக் கொடுக்கலாம். நான் ஆத்திகனோ நாத்திகனோ இல்லை ஒரு பார்வையாளன் !

கோவி.கண்ணன் சொன்னது…

//வெட்டிப்பயல் said...
//
நாத்திகத்தின் அவசியம் என்ன என்று விளக்கினால் நன்றாக இருக்கும். //

முதலில் தோன்றிய மனிதன் நாத்திகன் தானே???

ஆத்திகர்கள் உருவாக காரணம் என்னவா இருந்திருக்கும்? நீங்க விளக்கினால் நன்றாக இருக்கும்.

பார்ப்பானுங்கனு சொல்லிடாதீங்க... //

பாலாஜி,

பார்பானுங்கனு சொல்லி விடாதீர்கள் - என்று சொன்னதன் மூலம் எனது பதிவுகளையும் எண்ணங்களும் பார்பனர்களுக்கு எதிரானது என்று சொல்ல முயன்றதற்கு பாராட்டுகள். உங்கள் மறுமொழியைப் படித்து விட்டு மிக வேகமாக எனது நண்பர் ஒருவர் செயல்பட்டார் ( என் நண்பர் வி.எஸ்.கே அல்ல) என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது இந்த இடுகையில் பார்பனர்கள் குறித்து எதுவும் நான் சொல்லாது இருக்கும் போது நீங்கள் நான் அவ்வாறு சொல்வதாக இட்டுக்கட்டிய முயற்சி ஒரு நல் முயற்சி. சீர்திருத்தம் வேண்டும் என்று சொல்பவர்களை எல்லோரும் அதே 'எதிரி' தத்துவத்தில் தான் சுறுக்க முயன்றார்கள்.

இப்படித்தான் பலர் சிலரின் தோல்களை உரிக்கிறேன் என்று கத்தியை எடுக்கும் போது அவசரத்தில் தன் மீது போட்டுக் கொண்டு தங்கள் தோலை உறித்துக் காட்டுகிறார்கள்.

selventhiran சொன்னது…

கோவிக்கண்ணன், கிறித்துவர்கள் ஞாயிறு தவறாமல் தேவாலயம் செல்கின்றனர். இஸ்லாமியர்கள் வேளை தவறாமல் தொழுகின்றனர். இந்துக்கள்...? உங்களது ஆத்திரம் தமிழுக்கு அங்கீகாரம் இல்லை என்பதால் ஏற்பட்டதா? ஆலயங்களில் தேவராமும், திருவாசகமும் பாடப்பட்டால் தமிழ் வளர்ந்துவிடுமா என்ன? பல வருடங்களாக ஆலயத்திலே சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்து வந்ததால், சமஸ்கிருதம் வளர்ந்துவிட்டதா? நீங்களும், நானும் சமஸ்கிருதத்தின்பால் ஈர்க்கப்பட்டுவிட்டோமா என்ன?

தமிழை வளர்க்க இதுவல்ல வழி.. முதலில் அறிவியல் தழிழை வளருங்கள். அலுவலகங்களில் பேசவும், அறிக்கை அளிக்கவும் தமிழைப்பயன்படுத்துங்கள். தமிழிலக்கிய எளிய மொழியில் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுங்கள். அதை விட்டு விட்டு தேவாரத்தை கொழுத்துவேன். திருவாசகத்தை எரிப்பேன் என்பதெல்லாம் வேட்டியை அவிழ்த்து தலைப்பாகை கட்டிக்கொள்வது போல கேலிக்கூத்து ஆகிவிடும். அப்புறம் ராமதாஸ் மாதிரி அடிக்கடி "உணர்ச்சிவசப்பட்ட நிலையிலே" பிரச்சனைகளை அணுகாதீங்க.. உடம்புக்கு நல்லதல்ல.

தமிழ்தானே வளரும். அதற்குரிய தகுதியும் வளமும் அதற்கு உண்டு. வளர்க்கிறேன் பேர்வழி என்று அதன் வேர்களுக்கு வெந்நீர் உற்றாதீர். ப்ளீஸ்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்

ஸ்ரீ சரவணகுமார் சொன்னது…

//யாரோ ஒரு வம்பரை அங்கே அனுமதிக்கவில்லை என்பதற்காக தமிழையே ஒதுக்கிவிட்டார்கள் என்பது வெறும் வெறுப்பினால் வரும் பொய்.//

//சிதம்பரத்தின் பிரசினை சில விஷமிகள் வேலை //

சரி ஜடாயு இந்த பதிவில் பின்னூட்டமிடும் பலருக்கு இருக்கும் ஒரே ஆதங்கம் சிதம்பரத்தில் தமிழில் பாட வேண்டும் என்பது தான்(வேறு எந்த விஷமத்தனமும் இல்லை)

நீங்கள் நான் மற்றும் பின்னூட்டமிடுபவர்களில் சிலரும் சேர்ந்து சிதம்பரம் சென்று திருமறைகளை பாட முனைவோம்.
இன்னுமொரு விசயம் அங்கு போகும் போது நீங்கள் பார்ப்பனர் என்ற அடையாளம் வெளியில் தெரியாமல் வர வேண்டும்.

G.Ragavan சொன்னது…

// ஸ்ரீசரண் zei...
//யாரோ ஒரு வம்பரை அங்கே அனுமதிக்கவில்லை என்பதற்காக தமிழையே ஒதுக்கிவிட்டார்கள் என்பது வெறும் வெறுப்பினால் வரும் பொய்.//

//சிதம்பரத்தின் பிரசினை சில விஷமிகள் வேலை //

சரி ஜடாயு இந்த பதிவில் பின்னூட்டமிடும் பலருக்கு இருக்கும் ஒரே ஆதங்கம் சிதம்பரத்தில் தமிழில் பாட வேண்டும் என்பது தான்(வேறு எந்த விஷமத்தனமும் இல்லை)

நீங்கள் நான் மற்றும் பின்னூட்டமிடுபவர்களில் சிலரும் சேர்ந்து சிதம்பரம் சென்று திருமறைகளை பாட முனைவோம்.
இன்னுமொரு விசயம் அங்கு போகும் போது நீங்கள் பார்ப்பனர் என்ற அடையாளம் வெளியில் தெரியாமல் வர வேண்டும். //

இந்தத் திட்டம் நன்றாக இருக்கிறது. ஆன்மீகத் தமிழன்பர்கள் சேர்ந்து இந்த முயற்சி எடுக்க வேண்டும். எந்தச் சாதிய அடையாளமும் இல்லாமல் எல்லாரும் சென்று தேவாரம் ஓத வேண்டும். இந்தத் திட்டத்திற்கு என்னுடைய ஆதரவு உண்டு.

குட்டிபிசாசு சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி.கண்ணன், உங்கள் கருத்துகள் ஏற்றுக்கொள்ளதக்கது.பிள்ளைகறிச்மைப்பது, கட்டினமனைவியை மாற்றானுடன் அனுப்பிவைப்பது பகுத்தறிவுடன்கூடிய செயல் என்று எண்ணுபவர்கள், திருமுறைகளைத் தொழட்டும். அனுமன், கம்பர், விபிடனன், மாணிக்கவாசகர்,அப்பர்...இவர்களுடைய(திராவிடர்களுடைய) ஆற்றல் கோடரிக்காம்புகளாகிவிட்டன.

Hariharan # 03985177737685368452 சொன்னது…

கோவி. கண்ணன்,

கரெக்டுங்க. சிதம்பரத்தில் நடராஜனுக்குத் தமிழில் மட்டுமே வழிபாடு செய்யாததால் சிவபெருமான் சோகமாகி மதுரையில் சொக்கநாதராகக் குடி இருந்தும் மதுரையின் குடிமக்களை அஞ்சாநெஞ்சன்களின் வெடிகுண்டுத் தாக்குதலில் எரித்துக் கொன்றபோது தமிழ்நாட்டுக் கோவில்களில் ஒன்லி தமிழ் வழிபாடு இல்லாததால் கோபம் கொண்டு விட்டார்.

மதுரையில் நடந்த தீக்குண்டு தாக்குதல் அழகிரியின் கைவண்ணம் என்று மக்கள் நினைத்திருக்கின்றார்கள்.
மெய்யாக சொக்கநாதப்பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த நெருப்பு அது!

தினகரன் தீக்குண்டு தாக்குதல் வழக்கில் சிபிஐ சிவனைக் கோர்ட்டில் ஆஜர் படுத்த கூட்டிவரும் போது கருணாநிதி எத்தனை பெரிய ஆன்மீகவாதி என்பது தெரியும். தேவரம் திருவாசகம், சம்ஸ்கிருத மந்திரங்கள் வரவழைக்கமுடியாத சிவபெருமானை தினகரன் - அழகிரி-சிபிஐ கூட்டணியால் வரவைக்கும் பெருமை தானைத்தலைவர் அகில உலக தமிழினக் காவலர் தமிழக முதல்வர் கருணாநிதிக்கே உண்டு!

இல்லீங்களா கோவி.கண்ணன்!

Hariharan # 03985177737685368452 சொன்னது…

//தேவாரத்தையும் திருவாசகத்தையும் எரிக்க வேணாம். நடராஜனை கிளப்பி சுடுகாட்டுக்கு கூட்டி வந்துவிட்டால் போதும்.//

முத்துக்குமரன்,

நடராஜப் பெருமானை தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுடுகாடுகளான மதுரைக்கு கூட்டிட்டு வரணுமா? இல்லை தருமபுரிக்கா?

ஜடாயு சொன்னது…

// நீங்கள் நான் மற்றும் பின்னூட்டமிடுபவர்களில் சிலரும் சேர்ந்து சிதம்பரம் சென்று திருமறைகளை பாட முனைவோம். //

சிதம்பரம் மட்டுமல்ல, மகாராஷ்டிர சிவன் கோயிலிலேயே போய் தேவாரம் பாடியவன் நான் -
http://jataayu.blogspot.com/2007/04/blog-post_29.html

சமீபத்தில் சிதம்பரம் சென்றிருந்த போது கூட, இரவில் பள்ளியறை சமயத்தில் எல்லாக் கோயில்களிலும் வழக்கமாகப் பாடும் 'முக்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை' பதிகத்தை ஓதுவார் பாடிவர சுவாமியும், அம்பாளும் பள்ளியறை எழுந்தருளினர். தெரிந்தவர்கள் சிலரும் கூடச் சேர்ந்து பாடினோம்.

தாராளமாக செய்யுங்கள். பேய்வாருங்கள், தேவாரம் பாடி இறைவனை வழிபட்டு வாருங்கள். உங்கள் முயற்சிக்கு இறைவன் துணை நிற்கட்டும்.

ஜடாயு சொன்னது…

// அதே சிதம்பரத்தில் தான் தமிழில் எழுத்தப்பட்ட திருமுறைகள் பூட்டிவைக்கைப்பட்டு கறையானுக்கு உணவாக்கப்பட்டது ( உங்க ஆளுங்க 'பாதுக்காப்பாக வைத்திருக்க முயன்றதில் கவனக்குறைவு ஏற்பட்டி இருக்கலாம் என்று ஜல்லி அடிக்கலாம்) அதற்கெல்லாம் எதாவது கண்டனம் தெரிவித்து பக்தி பீரிடும் தமிழர் என்று காட்டி இருக்கிறீர்களா ? //

திருச்சிற்றம்பலத்தில் பூட்டிய அறையில் கிடந்த திருமுறைகளைகத் திறந்து உலகுக்கு அளித்தவர் யார்? திருநாரையூர் நம்பியாண்டார் நம்பிகள். இவர் சைவ வேதியர் குடியில் தோன்றியவர். வியாசர் வேதங்களை நான்காகத் தொகுத்தது போன்று சைவத் தமிழ் மறைகளைப் பன்னிரண்டாகத் தொகுத்து அளித்த சான்றோர் இவரே. இவரும் அந்த "ஆளுங்க" கும்பலைச் சேர்ந்தவர் தானோ உம்மைப் பொறுத்த வரையில்?

தமிழகத்தின் ஒவ்வொரு சிற்றூர்களில் அலைந்து, திரிந்து அடியார்களின் வரலாற்றைச் சேகரித்து எமக்குத் தந்த சேக்கிழார் பெருமானுக்குத் தெரியாத திருமுறை வரலாறு உமக்குத் தெரியும் என்ற எண்ணமோ?

குமட்டல் எடுக்க வைக்கும் உம் அறியாமையையும், நாசித்தனமான வெறுப்பையும் தான் இங்கே வெளியே கொட்டியிருக்கிறீர்.

பெயரில்லா சொன்னது…

ஹரிஹரன்,
பதிவுக்குச் சம்பந்தமாக பேஸுமய்யா!
அழகிரி, கருணாநிதியெல்லாம் இங்க என்னத்துக்கு?
(அத நாம பேஸ வேண்டிய எடத்துல பேஸ்லாம், சரியா?)

முத்துகுமரன் சொன்னது…

//தாராளமாக செய்யுங்கள். பேய்வாருங்கள், தேவாரம் பாடி இறைவனை வழிபட்டு வாருங்கள். உங்கள் முயற்சிக்கு இறைவன் துணை நிற்கட்டும்.//

இறைவனின் மெய்யடியார் நீங்கள் துணைக்கு வாங்களேன்.

Hariharan # 03985177737685368452 சொன்னது…

//ஹரிஹரன்,
பதிவுக்குச் சம்பந்தமாக பேஸுமய்யா!
அழகிரி, கருணாநிதியெல்லாம் இங்க என்னத்துக்கு?
(அத நாம பேஸ வேண்டிய எடத்துல பேஸ்லாம், சரியா?) //

அப்பாவி அனானி சார்,

என்ன ஓய் இப்படிப் பேஸிட்டேள்?!

தமிழின் தமிழ் = கருணாநிதி இது தெரியாத வாழைமட்டையா இருக்கீரே!

அழகிரி = குட்டித் தமிழின் தமிழ்

கோவி.கண்ணன் ஐயா இந்தப் பதிவுல பேசுறது தமிழ் குறித்து தானுங்களே!

தமிழ் சம்பந்தமா தமிழின் தமிழ் கருணாநிதியையும், குட்டித் தமிழின் தமிழ் அஞ்சா நெஞ்சர் அழகிரியையும் பேஸப்படாதுன்னெல்லாம் பேஸப்படாது அனானி சார்!

முத்துகுமரன் சொன்னது…

//சமீபத்தில் சிதம்பரம் சென்றிருந்த போது கூட, இரவில் பள்ளியறை சமயத்தில் எல்லாக் கோயில்களிலும் வழக்கமாகப் பாடும் 'முக்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை' பதிகத்தை ஓதுவார் பாடிவர சுவாமியும், அம்பாளும் பள்ளியறை எழுந்தருளினர். தெரிந்தவர்கள் சிலரும் கூடச் சேர்ந்து பாடினோம். //

தகவலுக்கு நன்றி திரு.ஜடாயு அவர்களே. ஜடாயு பாடலாம். ஆறுமுகச்சாமிதான் பாடக்கூடாது.

//சிதம்பரத்தின் பிரசினை சில விஷமிகள் வேலை - அது விரைவில் தீரும்.//
ஜடாயுவை பாட அனுமதிப்பவன், ஆறுமுகச்சாமியை பாட அனுமதியாதியாது, ஜடாயு வருகையில் வேறொரு ஓதுவாரை பாட அனுமதித்து பேதம் பார்ப்பவனே தானே அந்த விஷமி. சத்தியமாய் அவன் தீட்சதனே அன்றி வேறொருவனும் இல்லை.

ஆறுமுகசாமியும் ஓதுவார்தான். ஆறுமுகச்சாமியும் ஜடாயுவை அழைத்துச் சென்றால் பாடமுடியும் போலிருக்கிறதே. இறையடியார்களின் கோரிக்கையை பூர்த்தி செய்ய நாம் அனைவரும் ஜடாயுவை அழைத்து செல்வோம் சிதம்பரம் கோவிலுக்கு.

இந்துக்களின் இந்த கோரிக்கையை தட்டிக்கழிக்கமாட்டீர்கள் என நம்புகிறேன் திரு.ஜடாயு.

பெயரில்லா சொன்னது…

ஹரிஹரன் ஐயா,

நீங்கள் ஆன்மிக புலியாக இருக்கிறீர்கள், உங்கள் பதிவில் ஒருவர் சுவாமிகள் வாழை இலையில் போவது ஏன் ? என்று ஆன்மிகம் குறித்துக் கேட்டால் அவை பதிவுக்கு சமபந்தம் என்று நினைப்பீர்களா ?

- போலி பாலா

ஸ்ரீ சரவணகுமார் சொன்னது…

/தமிழ் சம்பந்தமா தமிழின் தமிழ் கருணாநிதியையும், குட்டித் தமிழின் தமிழ் அஞ்சா நெஞ்சர் அழகிரியையும் பேஸப்படாதுன்னெல்லாம் பேஸப்படாது அனானி சார்! //

இந்த குடுமிகளெல்லாம் ராமனையோ கிருஷ்ணனையோ அன்றாடம் நினைப்பார்களோ இல்லையோ, கருணாநிதியை மட்டும் நோடிக்கொரு முறை நினைப்பார்கள். கழிவறையில் முக்க நேர்ந்தாலும் அதற்கும் காரணம் கருணாநிதி தான் என்று வெளியில் வந்து வெட்கமில்லாமல் தம்பட்டம் அடிப்பார்கள்.


//தாராளமாக செய்யுங்கள். பேய்வாருங்கள், தேவாரம் பாடி இறைவனை வழிபட்டு வாருங்கள். உங்கள் முயற்சிக்கு இறைவன் துணை நிற்கட்டும்.//

ஜடாயு நீரும் அல்லவா எங்களுடன் வருகிறீர். எங்கே நழுவ பார்க்கிறீர்?

வெட்டிப்பயல் சொன்னது…

//கோவி.கண்ணன் said...

பாலஜி,

உங்கள் புனைப்பெயரில் நீங்கள் பின்னூட்டம் நீங்கள் போட்டாலும் உங்கள் பெயரான பாலாஜி என்று குறிப்பிட்டே என்பதிவில் மறுமொழியும், உங்கள் பதிவில் பின்னூட்டமும் இட்டுவருகிறேன். பெயர் தெரியாததற்கு முன்பு ஒருவேளை உங்கள் புனைப்பெயரை குறிப்பிட்டு பின்னூட்டமோ, மறுமொழியோ இட்டு வந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

இது 'வெட்டி' பதுவு அல்ல என்று முடிவு செய்து கொள்ளுங்கள். - என்று சொன்னதும் கூட எனது பதிவைக் குறித்துமட்டுமே. அதற்காகத்தான் '' க்குள் வெட்டி என்று போட்டேன். தங்களைக் குறித்து அல்ல !

இது ஒரு தன்னிலை விளக்கம் மட்டுமே. அதுவும் நான் உங்களைக் குறித்துச் சொல்கிறேன் என்று நீங்கள் தவறாக நினைத்திருக்கக் கூடும் என்று உங்கள் கடைசி பின்னூட்டத்திற்கு பிறகு நானாகவே தீர்மாணித்துக் கொண்டதால். //

நீங்க என் புனைப்பேரை வெச்சி நக்கல் பண்றதுக்காக தான் Quotes ல போட்டுருக்கீங்கனு நினைச்சி தான் நான் அப்படி சொன்னேன். அதுக்கு அப்பறம் உங்க பதிவுக்கும் நான் வரல. இப்ப ராயல் சொல்லி தான் வந்து பார்த்தேன்.

என் பதிவுல வந்து என்னை நக்கல் பண்ணா அது வேற விஷயம். ஆனா உங்க பதிவுக்கு நான் வரும் போது நீ வெட்டி பேச்சு பேசறவன் தானே உனக்கு இங்க இடமில்லைனு சொன்னா கண்டிப்பா மானமிருக்கறவன் அடுத்து வர மாட்டான்.

நான் அப்படி நினைச்சி தான் வரல...

//தமிழில் பாடுவது தொடர்பாக எனது இடுகையை எழுதி இருக்கிறேன். அதுபற்றி எதுவுமே கருத்து சொல்லாமல் எரிப்பது, புதைப்பது பற்றி நீங்கள் ஆர்வமாக இருப்பதால் - இது குறித்து உங்களிடம் விவாதம் செய்வது வீன் என நினைக்கிறேன்.//

நீங்க தமிழில் பாடுவதை பத்தி மட்டும் எழுதியிருந்தால் நான் அதை கண்டிப்பாக வரவேற்றிருப்பேன். ஆனால் நாத்திகர்கள் தான் ஆத்திகர்களுக்காக போராட வேண்டும் என்று நீங்கள் அதில் சொல்லியதால் தான் நான் நீங்கள் எதை/யாரை எரிக்க ஆசைப்படுகிறீர்கள்னு கேட்டேன்.

"தேவாரத்தை" தேவரம்னு போட்டிருக்கீங்க. அதை மாத்துங்கனு நான் Not to Publishனு சொல்லி தானே போட்டிருந்தேன். அதைக்கூட சரி செய்ய உங்க மனசு கேக்கல. இவன் என்ன சொல்றது நம்ம என்ன கேக்கறதுனு நினைக்கறீங்க. பின்னூட்டத்துக்கெல்லாம் பதில் சொல்றீங்க. அதை மாத்த ஒரு நிமிஷமாகுமா?

வெட்டிப்பயல் சொன்னது…

//பாலாஜி,

பார்பானுங்கனு சொல்லி விடாதீர்கள் - என்று சொன்னதன் மூலம் எனது பதிவுகளையும் எண்ணங்களும் பார்பனர்களுக்கு எதிரானது என்று சொல்ல முயன்றதற்கு பாராட்டுகள். உங்கள் மறுமொழியைப் படித்து விட்டு மிக வேகமாக எனது நண்பர் ஒருவர் செயல்பட்டார் ( என் நண்பர் வி.எஸ்.கே அல்ல) என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது இந்த இடுகையில் பார்பனர்கள் குறித்து எதுவும் நான் சொல்லாது இருக்கும் போது நீங்கள் நான் அவ்வாறு சொல்வதாக இட்டுக்கட்டிய முயற்சி ஒரு நல் முயற்சி. சீர்திருத்தம் வேண்டும் என்று சொல்பவர்களை எல்லோரும் அதே 'எதிரி' தத்துவத்தில் தான் சுறுக்க முயன்றார்கள்.
//
இந்து மதம்னாலே அது பார்ப்பணர்கள் மதம் எனபதை போல எல்லாரும் பேசுவதால் தான் அப்படி சொன்னேன். மேலும் இந்த இடுகை யார் செய்யும் தவறை குறித்து இட்டுருக்கீர்கள்?

தில்லையில் தமிழில் பாடவிடாமல் தடுக்கும் கும்பலை பற்றி எழுதிவிட்டு அதற்கும் பார்ப்பணருக்கும் சம்பந்தமில்லைனு சொன்னா யாராவது நம்புவாங்காளா? தீட்சகர்களும் பார்ப்பணர்கள் தானே.

//
இப்படித்தான் பலர் சிலரின் தோல்களை உரிக்கிறேன் என்று கத்தியை எடுக்கும் போது அவசரத்தில் தன் மீது போட்டுக் கொண்டு தங்கள் தோலை உறித்துக் காட்டுகிறார்கள்.//

ஆமா நான் வாழைப்பழம் நீங்க தோல் உரிச்சி காமிச்சிட்டீங்க. சும்மா காமெடி பண்ணாதீங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//தில்லையில் தமிழில் பாடவிடாமல் தடுக்கும் கும்பலை பற்றி எழுதிவிட்டு அதற்கும் பார்ப்பணருக்கும் சம்பந்தமில்லைனு சொன்னா யாராவது நம்புவாங்காளா? தீட்சகர்களும் பார்ப்பணர்கள் தானே.//

பாலாஜி,

தீட்சிதர்களும் பார்பணர்கள் என்று நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். ஆனால் வெளியில் வேறுவிதமாக பேசிக் கொள்க்கிறார்கள். எனது அன்பு நண்பர் திரு குமரன் அவர்கள் கூட உங்கள் நேற்றைய பதிவில் கீழ்க்கண்டவாறு சொல்லி இருக்கிறார். நானும் அவ்வாறு தான் புரிந்து வைத்துள்ளேன்.

"தீட்சிதர்கள் சிற்றம்பல மேடையிலும் மற்றவர்கள் (பார்ப்பனர்கள் உட்பட எல்லோரும் - பார்ப்பனர்கள் என்ற ஒரே காரணத்தால் அவர்கள் மேடையில் ஏறிப் பாட முடியாது.)

இதுபோன்ற quote களை பலரும் எழுதி இருக்கிறேன். மிக சமீபத்திய உதாரணம் என்பதால் உங்கள் பதிவில் இருந்தே எடுத்துக் காட்டுகிறேன்.

தில்லைவாழ் அந்தனர் தேர் ஏறி வின்னுலகில் இருந்து மண்ணுலகிற்கு வந்தவர்களாம் பார்பனர்களுக்கும் மேல் என்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//"தேவாரத்தை" தேவரம்னு போட்டிருக்கீங்க. அதை மாத்துங்கனு நான் Not to Publishனு சொல்லி தானே போட்டிருந்தேன். அதைக்கூட சரி செய்ய உங்க மனசு கேக்கல. இவன் என்ன சொல்றது நம்ம என்ன கேக்கறதுனு நினைக்கறீங்க. பின்னூட்டத்துக்கெல்லாம் பதில் சொல்றீங்க. அதை மாத்த ஒரு நிமிஷமாகுமா? //

பாலஜி,

தமிழ்மணத்தில் இடுகையை தலைப்பில் பிழையுடன் இடுகையை சேர்த்துவிட்டால் பின்பு மாற்றினாலும் அங்கு மாறாது என்பது உங்களுக்கும் தெரியும். அதனால் தலைப்பின் பிழையை உடனடியாக மாற்றுவதற்கு அவசியம் இல்லை என்று நினைத்தேன். தமிழ்மணத்தில் இருந்து தான் பதிவுக்கு வருகிறார்கள்.

சுட்டிக் காட்டியதற்கு நன்றி. இப்பொழுது மாற்றியாகிவிட்டது.

மீண்டும் வந்து உங்கள் கருத்துக்களைக் கூறியதற்கும் நன்றி !

பெயரில்லா சொன்னது…

ஜிகே அய்யா,
உங்க மூளை ஏன் எப்பவும் எதையாவது/யாரையாவது கொளுத்தலாமான்னு கேவலமா யோசிக்குது?நீங்க பேசாம அழகிரி கும்பல்ல அடியாளா சேர்ந்துடுங்கய்யா.அப்பப்போ மதுரைய அவர் கண்ணகி மாதிரி கொளுத்தும் போது உங்களுக்கு ஜாலியா தொழில் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

பாலா

பெயரில்லா சொன்னது…

"Ignorance is bliss"

பெரியார் தவறையே அவரது சீடர்களும் தொடர்கிறீர்கள்.

தமிழ் சைவம், தேவாரம், திருவாசகம் அனைவருக்கும் சொந்தம். தமிழரின் முக்கிய அடையாளம் சைவ மதம். The most liberal among all religions of the world is our Tamil Saivam.
இதை எரிப்போம் என்று பேசியவர்கள் எல்லாம் கடைசியில் இதன் மேற்றுமை புரிந்து வரும் இடம்.

ராகவன் சொன்ன மாதிரி, சில கோவில்ககளில் இன்னமும் உள்ள "தனியார்" ஆதிக்கங்களை உடைத்து எறிய வேண்டும்.

நாங்கள் எங்களை சூத்திரர் என்று நினப்பதில்லை. சிலரை தாழ்த்தப்பட்டோர் என்பதும் விரைவில் மாறும்.

இதற்கு பெரியார் காரணம் என்று சொல்லாதீர்கள். கேரளத்தில் நாயர்களுக்கும், ஈழவருக்கும், ஆந்திரத்தில் கம்மாவுக்கும், ரெட்டிக்கும், கருனாடகத்தில் ஒக்கலிகவுக்கும், லிங்காயத்துக்கும் இந்த பெரியார் வந்தா சமூகத்தில் உயர்த்தினார்? The reasons make up a separate article.

உடனே என்னை பார்ப்பன அடிவருடி என்று சொல்ல ஆரம்பிக்க வேண்டாம். தமிழன் என்ற அடையாளத்தை விரும்பி ஏற்கும் அனைவரும் தமிழரே. திராவிடர் என்பதை மற்றவர் ஏற்காத போது, நாம் ஏன் பிடித்து தொங்க வேண்டும்?.

We do admit that there are problems in our religion; These are being done away with slowly. The new Archakar Act is one good example. The trustees of all government managed temples come from all castes. I agree this is happening slowly; but eventually it will happen. If you do not have patience, do not try to misled people.

கோவி.கண்ணன் சொன்னது…

// திராவிடர் என்பதை மற்றவர் ஏற்காத போது, நாம் ஏன் பிடித்து தொங்க வேண்டும்?.
//

அனானி அன்பரே,

திராவிடர் என்ற பொதுப்பெயர் திணிக்கப்பட்ட ஒன்று. திராவிடர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் தானாகவே வைத்துக் கொண்ட பெயர் அல்ல.

ஒரு வாக்கு அதிகம் பெற்று கூட வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்படடுகிறார்கள். நீங்கள் சொல்லும் 'திராவிடர் என்பதை மற்றவர் ஏற்காத போது' - என்பதில் அப்படி ஏற்காதவர் பலரா ? சிலரா ? கொஞ்சம் தெளிவு படுத்தவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜிகே அய்யா,
உங்க மூளை ஏன் எப்பவும் எதையாவது/யாரையாவது கொளுத்தலாமான்னு கேவலமா யோசிக்குது?நீங்க பேசாம அழகிரி கும்பல்ல அடியாளா சேர்ந்துடுங்கய்யா.அப்பப்போ மதுரைய அவர் கண்ணகி மாதிரி கொளுத்தும் போது உங்களுக்கு ஜாலியா தொழில் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

பாலா //

பாலா ஐயா,
உங்க மூளை ஏன் கருணாநிதியையே எப்போதும் கேவலமாக நினைத்துக் கொண்டிருக்கிறது.
:)

நண்பர் ஹரிஹரன் மறக்காமல் மதுரையுடன் தருமபுரியையும் குறிப்பிட்டு இருந்தார் தாங்களும் அவ்வாறு குறிப்பிடாததில் எனக்கு ஏமாற்றமே !
:(

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜடாயு...சிதம்பரம் மட்டுமல்ல, மகாராஷ்டிர சிவன் கோயிலிலேயே போய் தேவாரம் பாடியவன் நான் -
http://jataayu.blogspot.com/2007/04/blog-post_29.html
//

ஜடாயு ஐயா,

நீங்கள் சிதம்பரத்தில் பாடினீர்கள், சிகாகோவில் பாடினீர்கள் என்பது குறித்து மகிழ்ச்சி. அப்படியே ஒதுவார் ஆறுமுக சுவாமிகளையும் அடுத்த முறை அழைத்துச் சென்று பாடவையுங்கள். அப்படி செய்தால் அந்த வயதான மனிதர் போலிஸ் காரர்களுடன் போராட வேண்டிய அவசியம் இருக்காது.

நீங்கள் இத்தகைய செயற்கரிய காரியத்தை செய்வதற்கு நிதிவுதவியும், பயணப்படியும் அளிப்பதற்கு பலர் உதவ காத்திருக்கின்றனர். இறைவனின் சேவை என்று தங்களே சொந்த செலவில் செய்தாலும் மகிழ்ச்சியே. செய்வீர்களா ?

கலகரான், கழககாரன் என்று வெறுப்பை உமிழ்வதைவிட இது நல்ல செயல் என நினைக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

//மதுரையுடன் தருமபுரியையும் குறிப்பிட்டு இருந்தார் தாங்களும் அவ்வாறு குறிப்பிடாததில் எனக்கு ஏமாற்றமே !//

ஜிகே அய்யா,

நீங்க சொல்றது கரெக்ட்.நீங்க தருமபுரி கும்பல் கிட்ட போனாக்க தாரளமா உங்களுக்கு வேலை போட்டு கொடுப்பாங்க.ஆனா மதுரை அழகிரி அய்யா பெரிய கை;உங்க தகுதிக்கும்,திறமைக்கும் ஏற்ற இடம் மதுரை தான்.சந்தேகம் இல்லை.அடித்து ஆடும் நீங்கள்,இனிமே கொளுத்தியும் ஆடலாம்.வாழ்த்துக்கள்.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//தினகரன் தீக்குண்டு தாக்குதல் வழக்கில் சிபிஐ சிவனைக் கோர்ட்டில் ஆஜர் படுத்த கூட்டிவரும் போது கருணாநிதி எத்தனை பெரிய ஆன்மீகவாதி என்பது தெரியும். தேவரம் திருவாசகம், சம்ஸ்கிருத மந்திரங்கள் வரவழைக்கமுடியாத சிவபெருமானை தினகரன் - அழகிரி-சிபிஐ கூட்டணியால் வரவைக்கும் பெருமை தானைத்தலைவர் அகில உலக தமிழினக் காவலர் தமிழக முதல்வர் கருணாநிதிக்கே உண்டு!

இல்லீங்களா கோவி.கண்ணன்!//

ஹரி,

தினகரன் - கருணாநிதி - அழகிரி எல்லாம் ஏன் இங்கு வந்தார்கள் ?

தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள்ளே பெருமாள் வந்து அழைத்துச் சென்றாரா ? இராமசாமி பெரியார் தானே கதவுகளை வசைபாடி திறக்க வைத்தார். அவர் ஆன்மிக வாதி இல்லையே !

இன்றைய காலத்தில் ஓதுவார் ஆறுமுக சாமி இருப்பதால் 'தேவாரம் பாடனுமா ? உள்ளே வா !... என்று அழைத்துச் சென்று முக்தி அடையவோ, இறைவனுடன் இரண்டர கலக்கவோ வைக்க முடியாது.

:)))))))

கோவி.கண்ணன் சொன்னது…

ஸ்ரீசரண் தங்கள் கருத்துக்களுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Amar said... கொஞ்சம் ஓவரா தான் பொறுத்துடோமோ?//

அமர்,

உங்கள் கோபம் புரிகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//nayanan said...
அன்புடையீர்,

அப்படிச் சொல்லாதீர்கள். ஏற்கனவே
கரையானை வைத்து பாதியை எரித்து
விட்டார்கள்.

தேவாரக் கனல் திரும்பும்! நம்பிக்கை
கொள்ளுங்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
//
நாக.இளங்கோவன் ,

உங்கள் நம்பிக்கையில் நானும் பங்கு கொள்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Anonymous said...
ஐயா பக்திமானே!
தேவாரம், திருவாசகமாகட்டும்,
சமஸ்கிரத மந்திரங்கள், ஸ்லோகங்கள்
ஆகட்டும் இவைகள் எதனாலாவது
கடவுளுக்கு ஏதாவது நன்மை தீமை
உண்டா?
எதற்காக இப்படி புலம்பிக்கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கு எது இஷ்டமோ அதைப்படியுங்கள்.
எங்கு படிக்கிறேம் என்பது முக்கியம்ல்ல.
எப்படிப்படிக்கிறேம் என்பது தான் முக்கியம்.
அழிக்கும் எண்ணதை உள்ளத்திலிருந்து அகற்றி
ஆக்கும் எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.
எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
//

மிக அருமையான கருத்து !!! சோற்றை தின்னுவிட்டு அவன் அவன் வேலையை பாருங்கடான்னு சொல்ல வருகிறீர்கள் சரிதானே. வெள்ளைப் புறாக்களுடன் உங்களுக்கு அதிக பழக்கம் இருக்கும் என நினைக்கிறேன்.
உங்களைப் போல சிலரும் அது அது அப்படி அப்பிடியே இருக்கனும். கேள்வி கேட்கப்படாதுன்னு தான் சொல்றாங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//¸ñ½ý ÌõÀ§¸¡½õ said...
சிதம்பரம் கோயிலில் தேவாரமோ திருவாசகமோ பாடப்படுவதில்லை என்று யார் சொன்னார்கள்?
//

உங்கள் கருத்தும் மிக அருமை. அதாவது அப்படி இல்லை என்று போராடுபவன் மடையன், அதைப்பற்றி பத்தி பத்தியாக எழுதும் பத்திரிக்கைகளும் வீனர்கள். விவாதிப்பவன் அயோகியன்.

எத்தனை காலம் தான் கட்டுச் சோற்றுக் குள் பெருச்சாளி இல்லை என்று சொல்வது நிற்குமோ ?

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜடாயு...

திருச்சிற்றம்பலத்தில் பூட்டிய அறையில் கிடந்த திருமுறைகளைகத் திறந்து உலகுக்கு அளித்தவர் யார்? திருநாரையூர் நம்பியாண்டார் நம்பிகள். இவர் சைவ வேதியர் குடியில் தோன்றியவர். வியாசர் வேதங்களை நான்காகத் தொகுத்தது போன்று சைவத் தமிழ் மறைகளைப் பன்னிரண்டாகத் தொகுத்து அளித்த சான்றோர் இவரே. இவரும் அந்த "ஆளுங்க" கும்பலைச் சேர்ந்தவர் தானோ உம்மைப் பொறுத்த வரையில்?

தமிழகத்தின் ஒவ்வொரு சிற்றூர்களில் அலைந்து, திரிந்து அடியார்களின் வரலாற்றைச் சேகரித்து எமக்குத் தந்த சேக்கிழார் பெருமானுக்குத் தெரியாத திருமுறை வரலாறு உமக்குத் தெரியும் என்ற எண்ணமோ?

குமட்டல் எடுக்க வைக்கும் உம் அறியாமையையும், நாசித்தனமான வெறுப்பையும் தான் இங்கே வெளியே கொட்டியிருக்கிறீர்.//

ஜடாயு அய்ய்ய்யா,

பொதுவாக எனது பதிவுகளைப் படிப்பவர்கள் நேரம் செலவு செய்து படிக்கிறார்கள் அவர்களை கருத்துக்களில் ஒப்புதல் இல்லாவிட்டாலும் மதிக்க வேண்டும் என்று நினைப்பேன்.

மேலே சொன்னதை வைத்துப் பார்க்கும் போது குண்டு வச்சி எடுத்த டயலாக் தான் ஞாபகம் வருது..

இவங்களே வைப்பாங்களாம் அப்பறம் இவங்களே கண்டுபிடிச்சாச்சுன்னு காட்டுவாங்களாம் - இதை எல்லோரும் பாராட்டுனுமாம்.

மணிப்பவள பருப்பை தமிழில் வேக வைக்க முடியில என்ற கடுப்பில் இருப்பவர்கள் (எல்லோருமே என்று சொல்லவில்லை) தமிழை காத்தார்கள், தமிழுக்காக தீக்குளித்தார்கள், கழுமரம் ஏறினார்கள் என்று சொல்வதெல்லாம் ஓவராக இல்லை. (நீங்க சொல்லலிங்க ஐயா) :)))

என்னோட அறியாமை குமட்டலாகவே இருக்கட்டும். அறிந்து தெளிந்து ஞானம் உள்ள தங்களின் எழுத்துக்களை, சமூக கருத்துக்களையும், தேசிய பற்றையும் பார்த்து பலருக்கு தொற்று நோய் காலராவே கண்டுவிட்டதாம்.

இப்படி சொல்வதற்கு எனக்கு வருத்தம் உண்டு. அடுத்தவர்களை வசைப்பவர்களுக்கு தன்னை மற்றவரும் வசையும் போது பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று சொல்கிறார்கள்.
:)))
சரியா ஜடாயு ஐயா.

கோவி.கண்ணன் சொன்னது…

என்பதிவில் கேட்பதற்கு என்பதிவிலேயே பதில் சொல்லுங்க பக்திமான்களே. ப்ளாகர் காரன் நாத்திக பதிவை படிக்கக் கூடாது மீறி படித்தால் ஜிமெயில் அக்வெண்டை குளோஸ் பண்ணிடுவேன்னு கண்டிசன் எல்லாம் போடவில்லைனு நினைக்கிறேன். அப்படி எதாவது ஒன்னு என்றால் பரிகாரம் செஞ்சுடலாம்.

என்பதிவும் திறந்து தான் இருக்கு.

கொ. வை.அரங்கநாதன் சொன்னது…

It is often said that Ramalinga Adigalar was murdered by Bhramins. If we accept that we are degrading Ramalinga Adigalar. In many times he himself proclaimed that he won't die ( Katrale, Puviyale, Kaganamathanale yatralum Azhiyatha thegam vendumentren, Virainthalithan enakke')We may not beleive this. But his message to world itself how can we lead a life without death only. (Maranamilla Peruvazhvu). So at least hereafter dont say Ramalinga Adigalar was murdered.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்