பின்பற்றுபவர்கள்

25 ஜூன், 2006

இலங்கைத் தமிழர் நிலை குறித்து ...

இலங்கையின் உள்நாட்டில் நடக்கும் தற்போதைய போர் சூழல் நிலை பெரும் கவலை அளிக்கிறது. இலங்கைத் தமிழ் மக்கள் முகவரி மறுக்கப்பட்டவர்களாக, அகதிகள் என்று இலக்குத் தெரியாத படகுகளாய் இந்திய ஆதாரவைத் தேடி தமிழக கரைகளில் ஒதுங்குகின்றனர். அவர்கள் இடம் பெயர்வது வெளினாட்டு வேலைக்குச் செல்வதுபோல் பொருளீட்டவோ, இனப்பெருக்கம் செய்வதற்கோ அல்ல. தங்கள் உடமைகளை இழந்தாலும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற சிறு நம்பிக்கையினால் மட்டுமே.

நமது இந்திய பத்திரிக்கைகளும், அரசியல் கட்சிகளும் குறிப்பாக தமிழ் பத்திரிக்கைகளும், மற்றும் ஏனைய ஊடகங்களும் இலங்கைத் தமிழர் என்றாலே வேண்டாத விருந்தாளிகள் போல் எண்ணி, அவர்களின் துயர்பற்றி எழுதுவதில்லை. மேலும் இவர்கள் இலங்கை அப்பாவித் தமிழர்களையும், இனப் போராளிகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்து எதிர்கருத்துக்களையே வெளியிடுகின்றனர்.

எங்கோ பாலஸ்தீனத்திலும், இஸ்ரேலிலும் நடக்கும் வன்முறைகளுக்கு குரல் கொடுத்து, கண்ணீர் சிந்தி, அது பற்றி பேசும் கட்சிகளும், சமூக அமைப்புகளும் சக தமிழன் செத்துமடிவதைப் பற்றி கண்களைக் கூடத் திறந்து பார்பதில்லை.


இந்திய மண்ணில், அதுவும் தமிழ் மண்ணில் நடந்த படுகொலை ஒவ்வொரு தமிழனுக்கும் இழுக்கும், மண்ணிக்க முடியாததும் தான். ஆனால் படுகொலையில் கணவனை பறிகொடுத்தும், தூக்கு தண்டனைக் கைதிகளுக்காக பாராளு மன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவியைவிட நமது இந்திய பத்திரிக்கைகளும், அரசியல் கட்சிகளும் என்ன துன்பம் அனுபவித்தார்கள் ? காங்கிரஸ் கட்சித் தலைவியே மன்னித்துவிட்டு மனிதனேயம் பார்க்கும் போது, அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இவர்கள் தொடர்ந்து எதிர்நிலையிலேயே இருப்பது எதை சாதிப்பதற்காக வென்றே தெரியவில்லை.

இலங்கை தமிழர்கள் உள்ள தற்போதைய நிலையில், சக தமிழர்களான நாம் அனுதாபம் கொள்ளாவிட்டாலும், அவர்களின் மனம் புண்படும் படி அவமறியாதை செய்யாமல் இருப்பது நன்று.


இதை எழுதியபின்,
இன்று கடைசியாக கிடைத்த நற்செய்தி : போராளிகளை நேரிடையாக பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அதிபர் அழைப்பு.
போர் மேகம் கலையும் என்று நம்புவோம் !

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நேரடிப்பேச்சுவார்த்தையென்பது இன்னும் ஆபத்தான விசயம். இதை இப்போதுதான் மகிந்த அறவித்தார் என்றில்லை. முன்பே சொல்லிவருவதுதான். நோர்வேயை வெளியேற்ற வேண்டுமென்பது அவர்களின் நீண்டநாள் கனவு. அப்படி நேரடிப்பேச்சு நடந்தால் போரை விரைவுபடுத்தவே இது உதவும். எனவே இதில் மகிழ்ச்சியடைய ஏதுமில்லை.

பெயரில்லா சொன்னது…

kanna, Most Tamilar in TN have soft corner towards our elam brothers, but not willing to accept their militant outfit, you know, we were taught "Thustanai kandaal dhoora vizhagu" policy.

கோவி.கண்ணன் சொன்னது…

//
kanna, Most Tamilar in TN have soft corner towards our elam brothers, but not willing to accept their militant outfit
//
நான் போராளிகளைப் பற்றிக் கூறவில்லை. அப்பாவித் தமிழர்களின் வாழ்வுரிமையை மட்டும் எண்ணி வருந்து எழுதியது இது.

பெயரில்லா சொன்னது…

நூற்றுக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து ,தமிழ் பெண்களை மானபங்கப்படுத்திய ஒரு இராணுவத்தின் செயலையும் ,ராஜீவ் காந்தியின் படுகொலையும் ஒப்பிட முடியாது .ராஜாங்க ரீதியில் ஒரு நாட்டின் தலைவர் கொல்லப்பட்டதால் இந்த மன்னிப்பு அவசியமாக இருக்கலாம் .ஆனால் தார்மீக ரீதியில் ராஜீவ்காந்தி படுகொலைக்காக புலிகள் மன்னிப்பு கேட்க வேண்டியது தமிழ்நாட்டு தமிழர்களிடம் .உணர்வு பூர்வமாகவும் வெளிப்படையாகவும் தமக்கு ஆதரவு அளித்து வந்த அம்மக்களை இந்த ஒரு நிகழ்வின் மூலம் சொந்த நாட்டில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி மற்றவர் பரிகசிக்கச் செய்தது மிகப்பெரிய தவறு .அதற்கான பலனைத்தான் இன்று அவர்கள் அனுபவிக்கிறார்கள் .அதைப்பார்த்து தமிழ்நாட்டு தமிழர்கள் வாய்பொத்தி நிற்பதற்கு புலிகளே காரணம் .தங்கள் தலையிலே தானே மண் அள்ளிப் போட்டுக்கொண்டதுமில்லாமல் ,தமிழக தமிழர்களின் நம்பிக்கையை தகர்த்ததற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்பது தான் தார்மீக அடிப்படையில் சரியானது.

பெயரில்லா சொன்னது…

நமது சகோதர சகோதிரிகளுக்கு நிச்சியம் ஒரு அமைதி தீர்வு காணப்படவேண்டும்.

நன்றி.

பெயரில்லா சொன்னது…

GK,

நிச்சயம் தமிழர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விசயம்.......

பெயரில்லா சொன்னது…

கோ.க,
யாழ்ப்பாணத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி பெண்ணே' என்று. அதுபோலத்தான் பெரும்பாலான தமிழக ஊடகங்கள் செயற்படுகின்றன. உலகின் பல பாகங்களில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு குரல் கொடுக்கும் இவ்வூடகங்கள் ஈழத்தமிழினத்தின் நிலமைபற்றி எழுதாமல் இருட்டடிப்புச் செய்வதற்கு என்ன காரணம்.

யாரோ - ? சொன்னது…

நீங்கள் நம்புகிறீர்களா இலங்கை அதிபரின் அழைப்பு சமாதானத்திறக்கு என்று..???? இல்லவே இல்லை. அவர்கள் எப்படி வெட்டி வீழ்த்தளம் என்று எண்ணுகிறார்கள்.. இது உங்களது தவறான புரிதல்இ, இருந்தாலும் உங்கள் ஆதரவிற்கு நன்றி
உண்மையிலேயே இலங்கைத் தமிழர் படும் துயரம் பற்றிய ஒரு தெளிவான பார்வை இந்தியாவிலும் சரி, இந்திய தமிழர்களிடமும் சரி என்றும் ஏற்படவேயில்லை. ஒன்று ஓவராக உணர்ச்சி வசப்படுகிறார்கள்.. அல்லது அநியாயத்திற்கு எதிர்க்கிறார்கள்,.. (இதற்குள் இலங்கை அரசுக்கு ஆயுதம் தருவதும் ஆதரவு தருவதும் அடக்கம்) யாருமே பிரச்சனையின் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை. எங்களுக்கு தேவை எங்களது உரிமையே அன்றி பிச்சையாகக் கிடைக்கும் சலுகையல்ல.

மீண்டுமொருமுறை உங்களுக்கு எனது நன்றிகள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்