பின்பற்றுபவர்கள்

15 ஜூன், 2006

எழுத்தில்லாத கவிதை !

ஒருவரியில் கவிதை படித்திருக்கிறேன். ஓர் எழுத்தில் கவிதை படித்திருக்கிறேன். ஒரு சவாலாக நினைத்து எழுதியது இது.

எழுத்தில்லாத கவிதை !எழுத்தில்லாமல் கவிதை எழுதமுடியுமா ?

கேட்டாள் அவள் !

முடியும் என்றேன் நான் !

எப்படி ? என்ற அவளிடம்
வெள்ளை காகிதத்தை நீட்டினேன்

என்ன இது ? என்றாள்

புரியவில்லையா ?

நீ இல்லாத என் இதயத்தை
தன் வெறுமையால்
வெளிச்சமிடும் கவிதை ஒன்று
இதன்
உள்ளே இருப்பது
உனக்கு
தெரியவில்லையா ?


-கோவி.கண்ணன்

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அழகான காதல்!

கோவி.கண்ணன் சொன்னது…

கவிதை என்றாலே யாரும் எட்டிப்பார்ப்பது இல்லை, நீங்கள் வந்து பார்த்து பராட்டியதற்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

kovi kannan sorry for writeing in english here in my blog named in kavithaikal is the same nobody come and didnot post a comment even it was a good one :)))

பெயரில்லா சொன்னது…

அருமையான சிந்தனை

கோவி.கண்ணன் சொன்னது…

சிவ முருகன்,
பாரட்டுக்கள் படபடக்க வைத்து பறக்க வைக்கிறது.
நன்றி
நன்றி
நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

மகேந்திரன்,
பதிவுகளில் ஜாதி மதங்களை தொட்டு எழுதிவிட்டால் முத்திரை குத்திவிடுவார்கள். உங்கள் கவிதைகளில் தொட்டு இருப்பதாக தெரிகிறது

பெயரில்லா சொன்னது…

முத்திரை விழுவதால் சிலரின் முகத்திரை கிழியுமென்றால் அதுவும் சம்மதமே. கவிதைகள் ஒரு காதல் கடிதங்காளக மட்டும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதாலேயே பிறரின் படைப்புக்களும் எனது பதிவில் இடப்படுகின்றன.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்