பின்பற்றுபவர்கள்

15 மே, 2006

இந்தி யா ?

ச்சே கருணாநிதி இந்தி படிக்காம விட்டதால நான் கேவலப்பட்டு போய்டேன் என்று நண்பர்கள் சிலர் புலம்புவது போல சாடமுயல்வது சிலபதிவுகளில் படிக்க நேர்ந்தது.

தமிழர்கள் அனைவரும் காஷ்மிர் முதல் கன்னியாக குமரி வரை நேசனல் பர்மிட் லாரி ஓட்டுவதற்காக தவம் செய்வது போலவும் இந்தி தெரியாததால் அத்தகைய வேலை வாய்ப்புகளை பெற்றோர் சிலர் அவமானப்படுபது போல சொல்ல விழைகிறார்கள். நம் தமிழ்னாட்டிருந்து பஞ்சம் பிழைக்க வட மானிலங்களுக்கு செல்வோர்கள் பலர் அடிப்படையில் இந்தி தெரியாதவர்கள். அவர்களுக்கு படிப்பு அறிவும் கூடக் குறைவே. அத்தகையோர் ஆறே மாதங்களில் நன்றாகவே இந்தியில் வெளுத்து வாங்குகிறார்கள்.

இந்த மெத்தப் படித்த மேதாவிகள் தாங்களுக்கு உள்வாங்கும் திறன் குறைவு என்று ஒப்புக் கொள்ளாமல், கருணாநிதியும், அண்ணாவும் குறுக்கே நின்றார்கள் என்று சொல்லுகிறார்கள். இன்று உலகமயம் பற்றி பேசுகிறோம், எல்லோரும் வேறு வேறு நாடுகளுக்கு சென்று பணியாற்றுகிறோம். வேலை நிமித்தமாக ஜெர்மன் சென்ற ஒருவர் அங்கு தடுமாறினால் தான் இந்தியனாக இருப்பதால்தான் இந்த தடுமாற்றம். அதுவும் இந்தியாவில் ஜெர்மன் சொல்லிக் கொடுக்கப்படவில்லை அதனால் தான் தனக்கு இந்த இழிநிலை என்றும் சொல்லுவாரா ?

யாரோ சிலர் ஏதோ காரணத்தால் வடநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக மொத்த தமிழகத்திலும் இந்தி நுழைய வைத்து தேவையற்றோரும் கட்டாயமாக படிக்க வேண்டுமாம். இந்தி படிக்கவேண்டாம் என்று யாரும் பிரம்பை வைத்துக் கொண்டு நிற்கவில்லை. கட்டாயமாக்கப் படக்கூடாது என்று மட்டுமே சொல்லுகிறார்கள்.

குறிப்பாக தமிழர்களுக்கு அடிப்படையில் எந்த ஒரு மொழியையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் இருக்கிறது. தமிழ் நாட்டிலிருந்தும், கேரளாவிலிருந்தும் அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர்கள் வடநாட்டிற்கு செல்வதைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். அத்தகையோர் அரபி அறிந்து கொண்டா செல்கிறார்கள்? அல்லது கேரள அரசும், தமிழக அரசும் அரபியை பாடத்திட்டத்தில் வைக்கவில்லை என்று புலம்புகிறார்களா? அரபு தேசத்திலிருந்து திரும்பும் அனைவரும் நன்றாக அரபி பேசுகிறார்கள். பெரும்பாலும் படித்தவர்களாக இருப்பவர்கள் அவர்களுக்கு நடுவில் ஆங்கிலத்தில் உறையாடுகிறார்கள். அவர்களுக்கு அரபியும் தேவை யில்லாமல் போய்விடுகிறது.

இவர்களின் இந்தி பிரேம வாதப்படி தமிழர்கள் அனைவரும் இந்திபடிக்கவேண்டும் என்பது சரியென்றால், தமிழகத்தில் வாழும் சவுக்கார்பேட்டை சேட்டுகளுக்கும், சேட்டுகளிடம் சென்று அடகு வைக்கும் போது பேரம் பேச மட்டுமே அது தமிழர்களுக்கு பயனளிக்கும்

47 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மிகச் சரி!

பெயரில்லா சொன்னது…

1.இப்படி எழுதுபவர்கள் யார் என்று பார்க்கவும்...

2.இந்தி படித்தால் வேலை என்றால் அப்புறம் ஏன் இந்திக்காரன் இங்கு சோம்பப்டி விற்கிறான்?

தமிழனின் தாழ்வுமனப்பான்மையை தூண்டிவிடும் சமத்துவபுர ஜென்டில் மேன்களும் புனிதபிம்பங்களும் திருந்தினால் ஒழிய இதுபோன்ற புலம்பல்கள் நிற்காது.

கோவி.கண்ணன் சொன்னது…

//மிகச் சரி! //

சீனுவுக்கு நன்றி

//இந்தி படித்தால் வேலை என்றால் அப்புறம் ஏன் இந்திக்காரன் இங்கு சோம்பப்டி விற்கிறான்?//
ச்சே சேட்ட நினைச்ச நான் சோம்பப்டிய மறந்தேன். சுட்டிக்காட்டிய முத்து நீங்கள் தமிழ் சொத்து :)

பெயரில்லா சொன்னது…

குற்றம் குற்றமே...

இது போன்ற சப்பை கட்டுகளை கட்டுபவர்கள் உண்மையில் யார்...

வாழ்க்கையில் சுகமாக செட்டில் ஆனவர்கள்...

அல்லது

அப்பா சம்பாதித்த சொத்தினை கரைப்பவர்கள்..

அல்லது அப்பா வாங்கி கொடுத்த வேலையில் ஜம் என்று அமர்ந்தவர்கள்..

வேலை தேடி தெரு தெருவாக அலைந்தவர்கள் அல்லர்...

பிற மாநிலத்துக்கு வேலை தேடி செல்லும் பாமரனும் படித்தவனும் ஒன்றா ?

ஒரு தலைமுறையை ஹிந்தி படிக்க விடாமல் இருட்டடிப்பு செய்தவர்களின் அடிவருடியாக செயல்படலாம் தப்பில்லை...அதற்க்காக இது போன்ற சப்பைகட்டுகளை ஒத்துக்கொள்ள முடியாது....

ஹிந்தி படித்தால் வேலை என்று கூறவில்லை...அப்படி பார்த்தால் NIIT போன்ற நிறுவனங்கள் கணிணி பயிற்ச்சி கொடுப்பதினை விடுத்து ஹிந்தி டியூஷன் ஆரம்பித்து இருக்கும்...

கட்டாயப்படுத்தவில்லை என்கிறீர்களே..ஹிந்தியின் மீது தார் பூசியது ஏன் ? ஏன் ஆங்கில பலகைகளின் மீது பூசவில்லை ?

பெயரில்லா சொன்னது…

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

மற்ற மொழிகளைக் கற்பதில் எந்தத் தவறும் இல்லை. அதிலும் நாட்டின் பெரும்பான்மையோர் பேசும் மொழியை வேறு மாநிலங்களுக்குச் சென்று வேலை செய்ய வேண்டும் என்று விரும்புவோர் கற்பது முக்கியமே.

அதற்காக இங்கே ஒரு திணிப்பு நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், அந்தத் திணிப்பை எதிர்த்தால் மட்டம் தட்டுவதும் மிகத் தவறு. ஒரு தொழில் தெரிந்தால் வேலை என்று இருக்க வேண்டுமே தவிர ஒரு மொழி தெரிந்தால் வேலை என்பது என்னவோ எல்லாரும் அங்கே போய் தட்டச்சு வேலை, மொழிபெயர்ப்பு வேலை மட்டுமே செய்யப் போகிறார்கள் என்பது போன்றது. இதே ஒரு கிராமப்புற வங்கி அதிகாரி போன்ற பணிகளில் இருப்பவர்கள் அந்தந்த மாநில மொழி (இந்தி மட்டுமல்ல) விரைவில் கற்றுத் தேற வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே இந்தி பேசுகிறார்கள் என்பதே ஒரு வதந்தி!

இப்போதுதான் இன்னொரு பதிவில் எழுதினேன். இவர்கள் இந்தி மட்டுமல்ல, பூகோளம், வரலாறு, கணினி, அறிவியல் என்று எதைப் படிக்காவிட்டாலும் அதற்குக் கலைஞரைக் காரணம் காட்டுவார்கள்.

பெயரில்லா சொன்னது…

எங்கள் வங்கியிலும் இந்தி தெரியாமல் நீ எப்படி இந்தியன் என்று கேட்டவர்கள் உள்ளனர்.நான் அதையே திருப்பி கேட்பேன்.நீ ஏன் தமிழ் படிக்கவில்லை என்று?

(ஆனால் எனக்கு பட்லர் இந்தி தெரியும்.ஒரு வருட பம்பாய் வாசம் காரணம்)

இதைப்பற்றி செல்வன் ஒரு அருமையான பதிவு போட்டுள்ளார்.அதில் குழலி பதிவிற்கும் என் பதிவிற்கும் லிங்க் கிடைக்கும்.பாருங்கள்.(பின்னூட்டத்தில்)

பெயரில்லா சொன்னது…

//வாழ்க்கையில் சுகமாக செட்டில் ஆனவர்கள்...

அல்லது

அப்பா சம்பாதித்த சொத்தினை கரைப்பவர்கள்..

அல்லது அப்பா வாங்கி கொடுத்த வேலையில் ஜம் என்று அமர்ந்தவர்கள்..

வேலை தேடி தெரு தெருவாக அலைந்தவர்கள் அல்லர்...//.

ஆமாம் இந்தி தெரிந்தவன் மட்டும்தான் சொந்த முயற்சியில் வேலை வாங்கினான். மற்றவன் எல்லாரும் திறமையில்லாம் ஓசியில் வேலையில் நுழைந்துவிட்டவர்கள்.

எப்போ நிறுத்துவீங்க இந்த அரதப்பழசான ஜல்லியை ரவி

பெயரில்லா சொன்னது…

இந்த மாதிரியான பிரச்சாரத்தை அரம்பித்து வைத்தது தின-மலம். அதன் வாசகர் கடிதம் பகுதியில் யாராவது கருணாநிதிக்கு அர்ச்சனை செய்து கொண்டே இருப்பர்.

முடிந்தால் இந்த சுட்டியய் பாருங்கள்.

http://mayavarathaan.blogspot.com/2006/04/2006-287.html

தலைமுறை பற்றிய என் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஜகா வாங்கிவிட்டார்.

வேறு ஒருவர் ஹிந்தி தெரியாததால் பதவி உயர்வு வாய்ப்புகள் கிட்டவில்லை என்கிறார். அவர் இருப்பது தாய்லாந்தில். அங்கு எல்லோரும் ஹிந்திதான் பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன்!!!.

பெயரில்லா சொன்னது…

அதானே,
- 10 ஆண்டுகள் ஆங்கிலத்தை மொழிப்பாடமாகவும், மேலும் 6 ஆண்டுகள் ஆங்கில வழியிலேயே படித்தும் எனக்கு இன்னும் பேச்சு மொழி ஆங்கிலத்தில் சரளமில்லை. இதில் நான் மட்டும் தனியாக இல்லை என்பது எனக்குத் தெரியும். இந்தியைப் பள்ளியில் சொல்லித் தருவதால் இந்தியில் பிளிறிவிட எங்களைப் போன்ற ஆயிரக் கணக்கானோரால் முடியாது என்பதையும் பள்ளியில் எங்கள் தேர்ச்சியைக் கேள்விக்குள்ளாக்கும் ஆங்கிலத்துடன் இன்னொரு சுமையும் கூடும் என்பதையும் "ராஷ்ட்ர பாஷை" ஆதரவாளர்கள் பரிசீலிக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.
_ இந்தி படித்து பண்டிதர்களாய்த் திகழும் என்னுடைய நண்பர்கள் பலருக்கும் "பாரதீய நாபீகீய வித்யுத் நிகம் லிமிடெட்" போன்ற தொடர்களின் அர்த்தம் தெரியவில்லை என்பதை உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
-இந்தியைப் பாடமாகப் படித்த என்னுடைய கேரள, ஆந்திர (ஹைதராபாத் தவிர்த்த) நண்பர்களுடைய நிலையும் நம்மைப்போன்றதாகவே இருக்கிறது.
_நான் சிறிது காலம் இருந்த கர்னாடக மாநில பைலஹோங்கலவிலும் மேற்கு வங்கத்திலும் இந்தி, படிக்காதவர்களிடம் ஆங்கிலம் எவ்வளவு பயனளிக்குமோ அவ்வளவுக்கே பயனளித்தது என்பதை "தேசிய மொழி"வாதிகள் கவனிக்க.
_நம்மூரிலிருந்து வடமாநிலங்களில் வேலைக்கு வரும் "படித்தவர்களில்" பெரும்பாலானோர் தமிழ் படித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தி முறையாகப் படித்தவர்களாகவே இருக்கிறார்கள்
_படிக்காத ஒரிய, ஆந்திர கட்டுமானத் தொழிலாளர்களில் பலர் தங்கள் தாய்மொழி தவிர இந்தி, தமிழ், கன்னடா எனத் தாங்கள் போகின்ற ஊர்களின் மொழிகளில் நடைமுறை அறிவு பெற்றிருந்ததைக் கண்டிருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கட்டாயப்படுத்தவில்லை என்கிறீர்களே..ஹிந்தியின் மீது தார் பூசியது ஏன் ? ஏன் ஆங்கில பலகைகளின் மீது பூசவில்லை ? //

ரூபாய் தாளில் இருப்பது போல அனைத்து மொழிகளிலும் எழுதினால், குறிப்பாக அண்டை மானில மொழிகளை எழுதினால் யார் அழிக்கப் போகிறார்கள்.

//வேலை தேடி தெரு தெருவாக அலைந்தவர்கள் அல்லர்...//

நானும் பெங்களூர், ஹைதாரபாத்தில் வேலைப் பார்த்திருக்கிறேன். கன்னடமும், தெலுங்கும் பேசக் கற்றுக் கொள்ள நாலு மாதம் தான் ஆகியது. டெல்லிக்கு சென்றிருந்தால் நான்கு மாதங்களில் இந்தி கற்றிருப்பேன். சப்பைகட்டுகளல்ல. ஒரு மொழியின் மீது ஆர்வம் இருந்தால் அடிப்படை கல்வியில்லமலே அதை கற்றுக் கொண்டு பேச முடியும்.

//பிற மாநிலத்துக்கு வேலை தேடி செல்லும் பாமரனும் படித்தவனும் ஒன்றா ?//

பாமரனால் முடிந்தது படித்தவனால் முடியவில்லை என்றால் முயலாமையே காரணம்

//ஒரு தலைமுறையை ஹிந்தி படிக்க விடாமல் இருட்டடிப்பு செய்தவர்களின் அடிவருடியாக செயல்படலாம் தப்பில்லை...அதற்க்காக இது போன்ற சப்பைகட்டுகளை ஒத்துக்கொள்ள முடியாது....//

இந்தி படிக்காததால் தமிழ் நாட்டில் இத்தனை லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று ஏதாவது புள்ளி விவரம் இருந்தால் காட்டுங்கள். அதே போல் இந்தி தெரிந்ததால் மட்டுமே இவர்கள் இங்கே குப்பை கொட்டுகிறார்கள் என்ற கணக்கையும் காட்டுங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//அதற்காக இங்கே ஒரு திணிப்பு நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், அந்தத் திணிப்பை எதிர்த்தால் மட்டம் தட்டுவதும் மிகத் தவறு.//

பிரதீப் நன்றாக சொன்னீர்கள் நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

முத்துக்குமரன், வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//வேறு ஒருவர் ஹிந்தி தெரியாததால் பதவி உயர்வு வாய்ப்புகள் கிட்டவில்லை என்கிறார். அவர் இருப்பது தாய்லாந்தில். அங்கு எல்லோரும் ஹிந்திதான் பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன்!!!.//
சிரிச்சி சிரிச்சி வயித்து நோவு வந்திடும் போல

கோவி.கண்ணன் சொன்னது…

//வங்கத்திலும் இந்தி, படிக்காதவர்களிடம் ஆங்கிலம் எவ்வளவு பயனளிக்குமோ அவ்வளவுக்கே பயனளித்தது//
டெல்லிக்கும் பம்பாய்க்கும் மட்டும் போய்விட்டு வந்து இந்தியா முழுவதும் இந்தி இருக்குன்னு ஒரு தோற்றத்தை ஒருவாக்கி இவர்கள் யாரை ஏமாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை.
இந்தியாவில் உலக நாடுகள் நிறுவணங்கள் அமைக்கும் முன் அவர்கள் என்ன இந்தியை கற்றுக் கொண்டு வருகிறார்கள் ?

பெயரில்லா சொன்னது…

இந்தி குறித்த என் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை இங்கு இடுகிறேன்

"இந்தி இப்போது ஆட்சி மொழியாக மட்டும் தான் உள்ளதா என்பது சர்ச்சைக்குரிய கேள்வி...

முத்து குறிப்பிட்டது போல் இந்தியின் பங்களிப்பும் விவாதத்துக்குரியதே...

peaceful co-existence-க்கு இந்தியால் ஆபத்து வருமென்றால் அதை ஆட்சி மொழியில் இருந்து நீக்குவதில் என்ன தவறு...

அதே நேரத்தில் தனி மனித survival-க்காக இந்தி கற்றுதானே ஆக வேண்டும்..

இந்தி ஆதரவு/எதிர்ப்பை இந்த இரண்டு context-லும் பார்க்க வேண்டும் அல்லவா..."

பெயரில்லா சொன்னது…

தமிழ்நாட்டில் ஹிந்தி படிப்பது இருக்கட்டும் தமிழ் படிக்க முடியுமா??
இந்த நிலையை நினைத்தால் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. முதலில் நம் தாய்மொழியை எல்லோரும் கட்டாயமாக படித்தாகவேண்டும் என்ற நிலையை உருவாக்குவோம். பிறகு மற்ற மொழிகளை பற்றி கவலைப்படலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அதே நேரத்தில் தனி மனித சர்விவில்-க்காக இந்தி கற்றுதானே ஆக வேண்டும்..//
எந்தவிதத்தில் சர்விவில் என்று புரியவில்லை. இந்திய மொழிகள் அனைத்தும் கற்றுக் கொடுத்தால் மட்டுமே பேச முடியும் என்பது உண்மையும் அல்ல. வெளிமானிலங்களுக்கு செல்பவர் ஊக்கம் உள்ள சிலருக்கு கற்றுக்கொள்ள ஒரு மூன்று மாதங்கள் ஆகலாம், ஊக்கம் குறைந்தோருக்கு ஒரு ஆறுமாதங்கள் ஆகலாம். ஊக்கமே இல்லாதவர்கள் கற்றுக் கொள்வதைப் பற்றி கவலைப்படுபவர்கள் அல்லர். இவர்கள் சிலருக்காக நான்கு கோடி மக்களும் இந்தி படிக்க வேண்டும் என்பது அபத்தமான கோரிக்கை. இந்தி தமிழகத்தில் நுழைந்தால் இந்தி படங்களும், மும்பை நடிகர்களுக்கு மட்டுமே லாபம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முதலில் நம் தாய்மொழியை எல்லோரும் கட்டாயமாக படித்தாகவேண்டும் என்ற நிலையை உருவாக்குவோம்.// உங்கள் கருத்துக்கும் நன்றி

பெயரில்லா சொன்னது…

சர்வைவல் என நான் குறிப்பிட வந்தது இந்திக்கு மட்டுமல்ல.....வெளி மாநிலங்களில் எந்த மொழியாக இருந்தாலும் குறுகிய கண்ணோட்டம் இல்லாமல் அதை கற்க வேண்டிய தேவையையே குறிப்பிட்டேன்...

இந்தி கட்டாயமாக்க வேண்டுமென்பதும் அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்பதும் அபத்தம் என்பதுதான் என்னுடைய கருத்தும்...

அதே போல் தேசிய ஆட்சி மொழியாக இந்தி இருப்பதும் ஒரு வகையில் இந்தி திணிப்புதான்...

கோவி.கண்ணன் சொன்னது…

//சர்வைவல் என நான் குறிப்பிட வந்தது இந்திக்கு மட்டுமல்ல.....வெளி மாநிலங்களில் எந்த மொழியாக இருந்தாலும் குறுகிய கண்ணோட்டம் இல்லாமல் அதை கற்க வேண்டிய தேவையையே குறிப்பிட்டேன்...//
அந்தந்த மானினங்களுக்கு செல்லும் போது அந்த மொழிகளை அங்கு செல்லும் போது கற்பது இன்றியமையாதது. இதில் மாற்றுகருத்து எனக்கும் இல்லை.

பெயரில்லா சொன்னது…

"ஒரு தலைமுறையை ஹிந்தி படிக்க விடாமல் இருட்டடிப்பு செய்தவர்களின் அடிவருடியாக செயல்படலாம் தப்பில்லை..."-செந்தழல் ரவி

"நம் தாய்மொழியை எல்லோரும் கட்டாயமாக படித்தாகவேண்டும் என்ற நிலையை உருவாக்குவோம்"- அருள் மொழி

ஒண்ணும் இல்லீங்க ..இரு பக்கக் கருத்தைப் பார்த்தேன்.

இந்திக்காகக் கண்ணீர் விடும் மக்கள் ஏன் இந்த இரண்டாவது விஷயத்தைக் கண்டு கொள்வதே இல்லை என்பது எனக்குப் புரிவதேயில்லை!

பெயரில்லா சொன்னது…

செந்தழல் ரவி... அழகான பெயர்..பொருள் செறிந்த பெயர்...ஏன் செந்தழல் ரவி சார், இது நீங்களே வைத்துக்கொண்ட புனைப்பெயரா இல்லை அப்பாவே வைத்த பெயரா...எப்படியாயினும் நல்லா இருக்கு; நல்லா இருங்க..

இதற்கும் உங்கள் கருத்துக்கும் நான் ஒன்றும் முடிச்சு போடவில்லை..அது வேறு இது வேறு! :-) சரியா?

பெயரில்லா சொன்னது…

தொப்புளான்...கொப்பரை முழுங்கி...செல்வம்..

யாருங்க நீங்க...அழகா எழுதுறீங்க..ஆனா பின்னூட்டத்தில மட்டுமே தலையக் காமிக்கிறீங்க...

சீக்கிரம் 'முழுசா' வெளிய வாங்க, please!
கோவி.கண்ணன் உங்க இடத்தை என் தனிப்பட்ட communication-க்கு பயன்படுத்திக் கொண்டுள்ளேன்; மன்னிக்கவும்.

பெயரில்லா சொன்னது…

அடடா, இன்னொண்ணு மறந்து போச்சு.
இந்திக்குக் கண்ணீர் விடும் மக்களே! இந்தப் பாவி கருணாநிதியால நீங்க பாவம் ரொம்பவே கஷ்டப்பட்டு நடுத்தெருவில நிக்கீறீங்க. at least உங்க அடுத்த சந்ததியாவது நல்லா இருக்கணும்னு நினைக்க வேண்டாமா? போன 5 வருஷத்தில நம்ம 'அம்ஸ்' ஆட்சிதான நடந்த்தது. அப்போ கொஞ்சம் எடுத்துச் சொல்லி இப்பவாவது ஆரம்பிச்சிருக்கலாமே! உட்டுட்டீங்களே!

போனா போவுது..இப்பவாவது இந்திப் போராட்டம் II அப்டின்னு ஒண்ணு ஆரம்பிக்கலாமே!

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்திக்காகக் கண்ணீர் விடும் மக்கள் ஏன் இந்த இரண்டாவது விஷயத்தைக் கண்டு கொள்வதே இல்லை என்பது எனக்குப் புரிவதேயில்லை! //
இந்திக்கு முதலை கண்ணீர் வடிப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும் ? எனக்கு தெரிந்து ஒரே காரணம் தான்.

சமஸ்கிரதம் வழக்கு இழந்து மறைந்துவிட்டது. அதன் எழுத்துக்களையும், சொற்களையும் தாங்கி நிற்பதும் இந்திய அளவில் நல்ல செல்வாக்கு இருப்பதும் இந்தி மட்டுமே. அதனை தாங்கிப் பிடித்து இறந்த ஒருமொழியை எழுப்ப முடியுமா என்று நினைக்கும் சில மோடிமஸ்தான்களுக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும். தமிழை கெடுக்கவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு தமிழ் மூலமே அவர்கள் அந்த கருத்துகளை தெரிவிக்கும் போது அவர்களின் துணிவுவை நாம் பாரட்டத்தான் வேண்டும். அதைவிட துணிவுடன் அவர்களுக்கு நாம் பதிலுரைக்கவும் வேண்டும்

கோவி.கண்ணன் சொன்னது…

//போன 5 வருஷத்தில நம்ம 'அம்ஸ்' ஆட்சிதான நடந்த்தது. அப்போ கொஞ்சம் எடுத்துச் சொல்லி இப்பவாவது ஆரம்பிச்சிருக்கலாமே! உட்டுட்டீங்களே//
எல்லாம் 'பொடா' பயம்தான்

பெயரில்லா சொன்னது…

தேசிய வெறியூட்டுவது...

ஒருமுகப்படுத்துவது...

ஆதிக்கம் செலுத்துவது...

வேற என்ன?

கோவி.கண்ணன் சொன்னது…

//தேசிய வெறியூட்டுவது...

ஒருமுகப்படுத்துவது...

ஆதிக்கம் செலுத்துவது...

வேற என்ன? //
இது ஒரு சமஸ்கிரதத்தை மீட்கும் ஒரு முயற்சியாகவே எனக்கு படுகிறது.

பெயரில்லா சொன்னது…

TCS ,VIPRO owner களே இந்திய பத்தி கவலைப்படல, ஏன்னா அவங்களுக்கு உண்மை நிலைமை தெரியும்...

கருணாநிதிய திட்டனும் அவ்ளோதான் logic லாம் பாக்கமாட்டங்க அப்பு.

http://manamay.blogspot.com/2006/05/blog-post_15.html

கோவி.கண்ணன் சொன்னது…

//ணாநிதிய திட்டனும் அவ்ளோதான் logic லாம் பாக்கமாட்டங்க அப்பு.//
கருத்துக்களுக்கு நன்றி அப்பு

பெயரில்லா சொன்னது…

//போனா போவுது..இப்பவாவது இந்திப் போராட்டம் II அப்டின்னு ஒண்ணு ஆரம்பிக்கலாமே!//

தருமி சாரே! இதன் மறுபெயர்தான் நெத்தியடி.

//கட்டாயப்படுத்தவில்லை என்கிறீர்களே..ஹிந்தியின் மீது தார் பூசியது ஏன் ? ஏன் ஆங்கில பலகைகளின் மீது பூசவில்லை ? //

அண்ணாவும் கலைஞரும் இந்தியை எதிர்த்ததால் தமிழ்நாட்டில் யாராவது கற்றுக்கொள்ளாமலேயே இருந்து விட்டார்களா? அல்லது இதுவரை இந்தி படித்தவர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை கிடைத்துவிட்டதா? தமிழர்களே! இந்தி படியுங்கள். உங்களுக்கு வேலை தரத் தயாராக இருக்கிறோம் என்று யாராவது கூவிக்கொண்டு இருக்கிறார்களா?

இந்தி கட்டாயப் பாடமாக இல்லாததால், பீகார், ராஜஸ்தான், குஜராத், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களைவிட, தமிழகம் எந்த விதத்தில் வளராமல் போய்விட்டது? பெங்களூர் மின்னணுவியல் துறையில் முன்னேறியதற்கு இந்தியா காரணம்?

வெளிமாநிலங்களுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்கள் கற்றுக்கொள்ள ஒரு தடையும் இல்லை. மற்ற மொழிகளைப் படிப்பதைக் காட்டிலும் தமிழ்நாட்டில் இந்தி படிப்பது எளிதாகவே உள்ளது.

இலக்கணம் முற்றிலும் வேறாக உள்ள ஆங்கிலத்தையே எளிதில் கற்றுக்கொள்ள முடியும்போது, 90% தமிழுடன் ஒத்துப்போகும் இந்தியைப் படிப்பதா கடினம்?

நன்றி
கமல்

கோவி.கண்ணன் சொன்னது…

//எந்த விதத்தில் வளராமல் போய்விட்டது? பெங்களூர் மின்னணுவியல் துறையில் முன்னேறியதற்கு இந்தியா காரணம்?//
இந்தி காரணமா என்று எழுதியிருக்க இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
உங்களின் ஒத்த கருத்துக்களுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

சென்ற ஆண்டு இதே மாதிரி நடந்த ஒரு விவாதம் இங்கே
http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_13.html

இந்தி எதிர்ப்பு - ஒரு முக்கியமான அலசல் இங்கே
http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_16.html

சாதகம்

இந்தியாவில் நாம் இரண்டாம் நிலை குடிமகனாக ஆகாமல் இருப்பது

மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என்றானது

வட மாநில, தேசிய கட்சிகளுக்கு மொத்தமாக சங்கு ஊதியது

திமுக ஆட்சிக்கு வந்தது

வணக்கம்,நன்றி,வேட்பாளர்,பேச்சாளர்,தலைவர் இன்ன பல சொற்கள் இன்னும் தமிழில் அழியாமல் இருப்பது.

இந்தி தெரியவில்லை என்றால் வெட்கப்படும் மற்ற மாநிலத்தவரைப் போலல்லாமல் தனித்துவமாக இருப்பது.

இன்னமும் சென்னையில் இந்தி வாடை அடிக்காமல் இருப்பது.

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என ஜல்லியடிக்க உதவுவது

இரண்டு தலைமுறையாக இந்தி படிக்கவிடவில்லை என கருணாநிதியை திட்ட ஒரு வாய்ப்பு.

மதராசி என்று எரிச்சலோடு அழைப்பது

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழிற்கு சங்கு ஊதாமல் இருப்பது.

பாதகம்

அச்சா,நஹி,கியா,சலோ போன்ற அருஞ்சொற்களை தமிழ் மொழி இழந்தது

சல்மான்கான், அமீர்கான், சாருக்கானிற்கெல்லாம் ஊரெங்கும் இரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்படாமல் இருப்பது

மீனாட்சி சேஷாத்திரி,கஜோல்கெல்லாம் கோவில் கட்டும் பாக்கியத்தை இழந்தது.

28 நாளில் இந்தி கற்றுக்கொள்வது, ஹி ஹி சாதாரணமாக குறைந்தது 30 நாள் ஆகும், இந்தி அனா,ஆவன்னா ஏற்கனவே பள்ளியில் படித்துவிட்டதால் எப்படியும் குறைந்தது 28 நாளாகும்.

தமிழ் திரைப்படங்களின் பெயர் இந்தியில் இல்லாமல் ஆகிவிட்டது. பாவம் தற்போது ஒன்லி இங்கிலீஷ்.

மதராசி என்று ஏளனத்தோடு அழைத்திருப்பார்கள்

இந்தி சரளமாக பேசமுடியாததற்கு கூனி,குறுகி வெட்கப்படுவது

கருணாநிதியை இந்தி எதிர்ப்பை வைத்து திட்ட முடியாமல் போவது, அதனால் என்ன மேன்ட்ரின் படிக்க விடாமல் செய்தது கருணாநிதிதான் என திட்டலாம்

இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்லமுடியது, அதனால் என்ன மேன்ட்ரின் படித்தால் வேலை கிடைக்கும் என கூறுவோமே.

இந்தி நடிகர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகும் வாய்ப்பு இல்லாமல் போனது

திமுக ஆட்சிக்கு வந்தது, இதில் பாதிதான் உண்மை, காங்கிரசின் மீது அப்போதிருந்த எரிச்சலும் தான் முக்கிய காரணம்.

தமிங்கிலந்தி என்ற ஒரு மொழி உலகிற்கு கிடைத்திருக்கும்

கோவி.கண்ணன் சொன்னது…

//குழலி / Kuzhali said...
சென்ற ஆண்டு இதே மாதிரி
//
குழலி அவர்களுக்கு நன்றி,
உங்கள் பதிவை படித்தேன், நல்ல கருத்துக்கள் நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

பெயரில்லா சொன்னது…

உங்கள் கருத்துக்களை அப்படியே ஏற்கிறேன். அண்ணாவும் தி.மு.க.வும் இல்லாமல் போயிருந்தால் ஒரு வேளை இந்தியாவில் ஆங்கிலம் இந்த அளவிற்கு வேரூன்றியிருக்குமா என்பது சந்தேகம் தான். அதனால் தான் கணிப்பொறி மற்றும் அது சார்ந்த துறைகளும் வளர்ந்தன.
-குப்புசாமி செல்லமுத்து

பெயரில்லா சொன்னது…

நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதியுள்ளீர், கிட்ட தட்ட அதே தலைப்பில். (நான் India = 'இந்தி' யா?) ஏன போட நினைத்தேன்.

தேசிய மொழி என கூறிக் கொள்பவர்களுக்கு முத்து (தமிழினி)(?) சில மாதங்களுக்கு முன் எழுதிய அரசியல் சாசனம் குறித்த பதிவை சிபாரிசு செய்வேன்...

பெயரில்லா சொன்னது…

மொழி என்பது அறிவு இல்லை உணர்வுகளை வெளிக்காட்ட உதவும் சாதனம் என்பதை உணர வேண்டும். நம்மவர்கள் மொழி என்பது அறிவு என்று தவறாக உணர்ந்து கொள்கிறார்கள். ஆங்கில மோகமும் அது போலத்தான் ஆங்கிலம் படித்தால் அறிவு பெருகியது போன்ற உணர்வு. அது தவறாகும். மொழி எப்பொழுது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். நம் உணர்வுகளை வெளிக்காட்ட உதவும் தாய் மொழியைத்தான் ஊன்று கற்க வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

"WE ARE INDIANS FIRST"

Hindi was taught before the formation of dravida party. Now it is not. It is big loss for one generation.

Dravidan party used this sensitive matter to grow up their party to get the power. It is a move to split TN from INDIA.

Except TN, Hindi is one of the language in all states curriculam.

//வேற என்ன? இது ஒரு சமஸ்கிரதத்தை மீட்கும் ஒரு முயற்சியாகவே எனக்கு படுகிறது.//


GOVIKANNAN, what is your problem, whether sanscrit gets life or not.

For the last 40 years, only Dravidan party ruling TN

But......

Is there any system that maintains the update science dictionary for Tamil?

Is tamil atleast the mandatory language in TN?

???

பெயரில்லா சொன்னது…

Excuse me for commenting in english

//"WE ARE INDIANS FIRST"//

I object this, your honour. ;)

I am myself first, then a Tamilan, then an Indian and then 'world -citizen'

Anything that is forced upon at the lowermost level even if it is 'for' the level above it is wrong. Dravidian parties are (were) against the forceful implementation. Please understand.

India has different languages, cultures and religions. Any move to make a Nation state by creating uniformity in any of the above factors is harmful to the country and can not be achieved without compromises including eradication / abdication of individual’s religion/culture/language.

Stop comparing India with other Nation states; we are unique in concept and formation. We should appreciate that fact and learn to live in harmony.

Let me give this for sake of argument… (Though I am not for separate Tamil nation)
‘This part of India (TN) has never been under any of the vast Indian empires (Asoka/ Maurya/ Akbar) it was only the British who put us under one umbrella… so by your logic “We are Indians” ‘coz of British and English, so why don’t we use them as our binding thread?” Sounds stupid right?

If you want a binding force badly, why not English? That will help us to bind with many countries in the world…

One language to be Indian, one language to be a ‘word-citizen’ OR One language to be a ‘word – citizen’ which is easier?

Will every Hindi speaking state accept the easiest choice?

Just because there is a majority on the other side doesn’t mean they have rights to force it by means of ‘State’. Especially when the ‘State’ is Democratic.


Having worked out of state for some time, I sincerely don’t feel that Hindi should be made compulsory. Individuals’ ‘need’ will drive it.

கோவி.கண்ணன் சொன்னது…

//"WE ARE INDIANS FIRST"
//
அப்பறம் வடமொழி தான் நம் இந்துக்களின் மொழி என்று சொல்லுவீர்கள்

தேசிய வாதம் புல்லறிக்க வைக்குது. இந்திபடித்தால் தான் நீ இந்தியன் என்று மத்திய அரசி ஒரு அணை வெளியிடச் சொல்லுங்கள். //Hindi was taught before the formation of dravida party. Now it is not. It is big loss for one generation. //

சும்மா விதண்டா வாதம் பேசிக்கொண்டே இருக்க கூடாது . ஏதாவது புள்ளி விவரம் இருக்கிறதா ? இந்தி படிக்கத்ததால் இவ்வளவு பேருக்கு வேலை கிடைக்கவில்லையென்று. அது சம்பந்தமாக ஏதாவது மத்திய அரசு ஆணை காட்டமுடியுமா ? இல்லை இந்தி தெரிந்ததால் இந்த மானிலத்துக் கரார்கள் இந்தியாவில் ஒளிருகிறார்கள் என்று. ஒரு ஜெனரேசன் இந்திப் படம் பார்க்கவில்லை யென்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள். அதற்கு இந்தி படவுலகம் தானே கவலைப்படவேண்டும். சேட்டுகளே சொல்றான் வைக்கிறான், நிக்றான்னு தமிழ் பேச கற்றுக்கொண்ட போது 'வாட் ஹேபன் டு யூ'


//Dravidan party used this sensitive matter to grow up their party to get the power. It is a move to split TN from INDIA.//

அடேங்கப்பா நல்ல கண்டுபிடிப்பா இருக்கே. திராவடக்கட்சிகள் பலமாக இல்லையென்றால் மத்தியில் சொல்வதைக் கேட்டுக் கொண்டு மண்டையை ஆட்டிக்கொண்டு இருக்கவேண்டியது தான். இமயம் முதல் குமரிவரை உள்ளவர்களை இந்தியன் என்று தான் எந்த தமிழனும் பேசுவான், மதராஸி என்று இந்திகாரன் சொல்வது மாதிரி சொல்வது இல்லை.

//Except TN, Hindi is one of the language in all states curriculam.//

அதுனால மற்ற மானிலங்களில் மக்கள் தரம் உயர்ந்துள்ளதா ? தேசிய உணர்வு அதிகரித்து பக்கத்து மானிலத்துக்கு உடனே தண்ணீர் திறந்து விடுகிறார்களா ? இல்லையென்றால் நம் தமிழர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் அவர்களிடம் போட்டியிட்டு தோல்வி அடைகிறார்களா?

//Is there any system that maintains the update science dictionary for Tamil?//

திண்ணை டாட் காமில் திரு ஜெயபரதன் என்பவர் கனடாவிலிருந்து அறிவியல் கட்டுரைகள் எழுதுகிறார். படித்து விட்டு வாருங்கள். எந்த அளவுக்கு அறிவியல் தமிழ வளர்ந்துள்ளது என்பது தெரியும். அதன் பிறகு இந்தியின் அறிவியலைப் பற்றி சொல்லுங்கள்

//Is tamil atleast the mandatory language in TN?

??? //

வேலை வாய்புகளுக்கு காரணங்களுக்காக ஆங்கிலம் முன்வைக்கப்படுகிறது. இந்தி கற்கவேண்டுமென்றால் 30தே நாட்களில் இந்தி பாசை என்ற புத்தகத்தை வாங்கிப் படிக்கவும். நாலுபேரு படிப்பதற்காக 4 கோடி பேரை இந்தி படிக்கசெல்வது தேவையற்றது.

கோவி.கண்ணன் சொன்னது…

Nandhan,

Royal Solute for you for this reply that made Bajji Soji as Kothu parata

பெயரில்லா சொன்னது…

// Nandhan,
Royal Solute for you for this reply that made Bajji Soji as Kothu parata//
:-))))

பெயரில்லா சொன்னது…

எல்லாம் நாமளே வச்சிக்கறது தான் சார்..நெருப்புன்னா நெருங்கறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிப்பாங்க இல்ல மக்கள்...

மத்தபடி எனக்கு பின்னால பயர் ஆக்சிடெண்டு ஆவலங்க இன்னும்...

பெயரில்லா சொன்னது…

கண்ண்ன் அற்புதமான உங்க்ள் பதிவை நான் தற்போது தான் பார்த்தேன்.. சுட்டி கொடுத்தற்க்கு மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

பட்டர்பிளை,
அடிக்கடி பறந்துவாங்க, புத்தம் புதுப் பூக்களை நுகர்ந்து செல்க

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

புகழ்மிகு பதிவர் கோவி.கண்ணன் அவர்களே!

இந்தி பற்றிய உங்கள் நான்கு பதிவுகள் படித்தேன். மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்! அண்மைக்காலமாக இந்த பாரதிய சனதா ஆட்சியில் மீண்டும் பிறமொழித் திணிப்பு மிகத் தீவிரமாக நடந்து வருவதால் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இணைய மாநாடு ஒன்று ஆட்சித் தமிழறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களால் இந்த மாதம் நடத்தப்பட உள்ளது. அதில் நானும் கட்டுரை படைக்க உள்ளேன். அதற்கு உங்கள் கட்டுரைகளில் உள்ள சில கருத்துக்கள் எனக்குப் பயனளித்தன. மிக்க நன்றி!

பிறமொழித் திணிப்புப் பற்றி இவ்வளவு சரியான நிலைப்பாடும் உறுதியான கருத்துக்களும் கொண்டுள்ள நீங்களும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை படித்தால் நன்றாக இருக்கும். விரும்பினால் மேலதிக விவரங்களுக்குப் பார்க்க - http://thiru2050.blogspot.com/2020/12/2052.html?m=1

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்