பின்பற்றுபவர்கள்

28 ஜனவரி, 2013

கமலஹாசன் ஏற்கனவே இஸ்லாமியர்களை இழிவு.....


எதோ விஸ்வரூபம் படத்தில் மட்டும் தான் கமலஹாசன் முல்லா ஓமர் மற்றும் ஆப்கானிய தலிபான்களை தீவிரவாதிகளாகவும், அவர்கள் கையில் வைத்து புனித போருக்கு அழைப்பு விடுக்கும் புனித புத்தகத்தை தீவிரவாத நூலாகக்கி கேவலப்படுத்தி இழிவு படுத்தினார் என்பதில்லை, கமலஹாசன் இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதை ஏற்கனவே துவங்கிவிட்டார், அவ்வை சண்முகி படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தீர்கள் என்றால் நீங்கள் ஏற்கனவே கமல் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இருப்பதை தெரிந்து கொள்ளலாம், அந்த படத்தில் கமலின் நண்பராக வரும் நாசர் ஒரு முஸ்லிம் சமையல்காரனாக காட்டப்பட்டு இருப்பார், காலம் காலமாக தமிழ் சினிமாவில் கடத்தல் காரர்களாக சித்தரிக்கப்படும் இஸ்லாமியர்களை கமல் இந்தப்படத்தில் சமையல்காரனாக சித்தரித்திருந்ததை முஸ்லிம் பார்த்திரத்திற்கு  புரோமோசன் கொடுத்திருப்பதாக நினைக்காதீர்கள், அந்த சமையல்காரன் வேடத்திலும் முதலாளியிடம் பணத்தை கையாடல் செய்த நபராகத்தான் நாசரைக் காட்டி இருப்பார், இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் இஸ்லாமியர்கள் படிப்பறிவு அற்றவர்கள், சமையல் வேலைக்கு தான் சரியாக இருப்பார்கள், இருந்தாலும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைக்க வைக்குமா வைக்காதா ?

நன்றாக பேசும் நாசரை அடுத்தக் காட்சியில் ஊமையாக்கி ஒரு பார்பனர் வீட்டில் பொய் சொல்லி வேலைக்குச் சேரும் ஆளாகவும் காட்டி இருப்பதால் இஸ்லாமியர்கள் பொய் சொல்ல ஊமையாகக் கூட நடிக்கத் தயங்கமாட்டார்கள் என்பதுடன், அவர் வாய்பேச இயலாத நிலையில் சொல்லும் இறை வேத மந்திரங்களை எதோ காயத்திரி மந்திரம் சொல்லுவதாக டெல்லிகனேஷ் எடுத்துச் சொல்வதாக அவர்களுடைய வழிபாட்டை கொச்சைப்படுத்தி இருப்பார், மீனா வழுக்கி விழ தரையில் எண்ணையைக் கொட்ட நாசர் சொல்லித்தருவது போலவும், குறுக்குவழிக்கு வழி சொல்லுபவர்களாகவும் ஒரு இஸ்லாமியரைக் காட்டி இருப்பதை இவ்வளவு நாள் யாரும் பார்க்காமல் விட்டது வியப்பாக இருக்கிறது. ஐந்துவேலை நமாஸ் செய்யும் நாசருக்கு நெற்றியில் பட்டைப் போட்டு ஊமையாக்கி.........கமலஹாசன்.........

தசவதாரம் படத்தில் ஒரு நெட்டை பையனை ஆப்கான் உடையில் காட்டி இஸ்லாமியர்கள் என்றால் இப்படி இருப்பார்கள் என்றெல்லாம் ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கி இருந்தார், அதுமட்டுமன்றி பலதெய்வ வணக்கம் அம்மன் வேட நடிகையான கேஆர் விஜயாவை இஸ்லாமிய பெண்மணியாக காட்டி இருப்பது இஸ்லாமியர்களின் மீதான தொடர்சியான இழிவாகவும், வண்மமாகவும் இருந்தும் இதுவரையாரும் கண்டுகொள்ளாமல் கண்டனம் தெரிவிக்காமல் விட்டது வியப்பளிக்கிறது. கமல் மட்டுமா ? ஆர்யா என்கிற இஸ்லாமிய நடிகரை இந்து சாமியாராக்கி நெற்றியில் பட்டைப்போட்டு இஸ்லாமியர்களுக்கு முற்றிலும் மாற்றான 'நான் கடவுள்' என்ற கடவுள் நிராகரிப்பு தலைப்பில் இஸ்லாமிய நடிகரை இழிவு படுத்தி இருந்தார் இயக்குனர் பாலா.

வடிவேலு ? ஒரு பைத்தியத்திடம் பின்லேடன் அட்ரஸ் பற்றிய காட்சியை நகைச்சுவையாக்கி பின்லேடன் என்கிற இஸ்லாமியரை இழிவுபடுத்தி இருந்தது,.........தொடர்ச்சியாக தமிழ் பட உலகம் இஸ்லாமியர்களை இழிவு படுத்துகிறது படுத்துகிறது........ப...டு,,,த்,,,து,,,,கி,,,,ற,,,து.

எனக்கு ஒரு ஐயம்.......பின்லேடனுக்கும், முல்லா ஓமருக்கும் அட்ரஸ் தமிழ்நாடா ? அவர்களைப் பற்றி எடுக்கப்பட்ட படத்தை பார்த்தும், பின்னே ஏன் இவர்கள் இஸ்லாமியர்கள் இழிவுபடுத்தப்படுவதாக விஸ்வரூபத்தின் கழுத்தில் கத்தி வைத்து தலிபான் பாணியில் தண்டிக்க விரும்புகிறார்கள் ? ஞாயமாக தங்கள் ஒட்டுமொத்தப் பெயரையும், புனித நூலையும் கெடுத்த பின்லேடன், முல்லா ஓமர்மீதல்லா இவர்களுக்கு கோபம் வரவேண்டும் ? பின்லேடன் இறப்புக்கு சிறப்பு தொழுகை நடத்தும் பொழுது இழிவுபடாமல் இருந்த இஸ்லாமிய சமூகம், முல்லா ஓமர் பற்றிய படத்தால் இழிவுபடுத்துப்பட்டுவிடுமா ?

10 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

கோவி,

இதென்ன "ஊமைக்குத்து" :-))

ஹி...ஹி நாசர் ஏன்ற கூத்தாடி ஒரு பெயர் தாங்கி இஸ்லாமியர்,எனவே அவர் அப்படி நடிப்பதால்/நடிக்க வைக்கப்பட்டதால் எங்களுக்கு இழிவு இல்லை :-))

இப்படிக்கு

ஒரு மார்க்கப்பந்து!!!

இதானே சொல்லப்போறாங்க :-))

Rajez சொன்னது…

நான் இந்த தலைப்பை பார்த்தவுடனே திட்டுவதற்க்காகத்தான் வந்தேன். ஆனா முழுசா படிச்சவுடனே சிரிச்சுட்டேன்.

சார்வாகன் சொன்னது…

சகோதரரே,
உங்கள் மீதும்,உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தி சமாதானம் உண்டாவதாக!!.
தூய இஸ்லாத்தை பற்றி சரியான புரிதல் இன்றி எழுதப்பட்ட பதிவு. இஸ்லாம் குறித்த உங்களின் சந்தேகங்களை அலாவின் இணையத்தளம நடத்தி வரும் ஆஃப்சர்கில் ஜே.பீ இடம் கேட்கலாம்.

எனினும் தூய இஸ்லாத்தை பற்றி அறியாத இழிவான பிறவிகள் அவ்வப்போது விமர்சிதாலும் அமைதி விரும்பி முஸ்லிம்கள் அமைதி காத்தோம் ,ஆனால் இப்படி பெயர் தாங்கி முஸ்லிம் நாசர், மார்க்கப் போராளி (மர்கூம்) பின்லேடன் ஆகியோரை நகைச்சுவையாக்கியது, அவருக்கான் தொழுகையை கேவலப் படுத்தியதைக் கூட சகித்தோம்.

அல்லாஹ் குரானில் கூறுகிறான்!!

9:12. அவர்களுடைய உடன்படிக்கைக்குப்பின், தம் சத்தியங்களை அவர்கள் முறித்துக் கொண்டு, உங்களுடைய மார்க்கத்தைப் பற்றியும் இழித்துக் குறை சொல்லி கொண்டு இருப்பார்களானால், அவர்கள் (மேற்கூறிய செயல்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக நிராகரிப்பவர்களின் தலைவர்களுடன் போர் புரியுங்கள்; ஏனெனில் அவர்களுக்கு நிச்சயமாக ஒப்பந்தங்கள் (என்று எதுவும்) இல்லை.

மெலே கூறிய இறைவாக்கில் இருந்து நாங்கள் செய்வது சரி எனப் புரியும்!!

ஆனால் அடிமடியிலே கை வைக்கும் வண்ணம் உலகளாவிய கிலாஃபா அமைக்க போராடும் தலிபான், அல்கொயதா ஆகியோரின் செயல்களை தமிழில் திரைப்படம் எடுத்ததால் பொங்கி விட்டோம்!!

இது ஆரம்பம் மட்டுமே!!. அல் கொய்த,தலிபான் பற்றிய செய்திகளே
பொய்கள் என்பதால் ஒலிபரப்பக் கூடாது என அண்ணன் த்லைமையில் போராடப் போகிறோம்.

இதற்கு நடுநிலை மதச்சார்பற்ற[ ஹி ஹி !] தமிழர்கள் வழக்கம் போல் ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்!!

இப்படிக்கு

தாவாப் பிரியன் சார்வாகன்

நன்றி!!

suvanappiriyan சொன்னது…

தசாவதாரத்தில் தலித்தாகவும் அவதாரம் எடுத்திருப்பார். அந்த முகத்தை அழகாக காட்டியிருக்கலாம். கர்ண கொடூரமாக மேக்கப்பை போட்டிருப்பார். தலித்கள் என்றால் அவலட்சணமாகத்தான் இருக்க வேண்டுமா? சூத்திரர்கள் என்றால் வைதீகனுக்கு அவ்வளவு இளக்காரமா? 'முற்போக்கு பேசும் வைதீகன் மிக ஆபத்தானவன்' என்று பெரியார் சொன்னது எவ்வளவு உண்மையாக உள்ளது.

கோவிக் கண்ணனோடு சேர்ந்து அவருக்கு ஆதரவளிக்கிறேன். :-) பக்கத்து மாவட்டத்துகாரர். எனவே ஆதரவு இன்னும் அதிகமாக கொடுக்கிறேன். :-(

சார்வாகன் சொன்னது…

நண்பர்களே,
சவுதி புகழ்பாடிகளின் ஒருவரான அண்ணன் சு.பி யும் அவ்வப்போது விபசாரம் செய்த ஒரு இளவரசியையே கொன்ற சவுதி என புகழ்பாடி வருவதால் அந்த விக்கி பிடியா படித்து மிகப்பரிய அதிர்ர்சி.

http://en.wikipedia.org/wiki/Misha'al_bint_Fahd_al_Saud

ஒரு திருமணம் ஆகாத சவுதி இளவரசி லெபனான் படிக்க சென்ற இடத்தில் ,இன்னொரு சவுதி பையனை காதலித்தார். சவுதி திரும்பி வந்து சில தடவை இரக்சியமாக் சந்திக்க குடும்பத்தினர் தடை. காதலனுடன் ஆண் வேடம் பூண்டு ஓட முயல் விமான நிலையத்தில் பிடி பட்டனர்.

காதலனை மறந்து அரச குடும்ப‌ ஆளை மறக்க வற்புறுத்தியதில் இளவரசி மறுத்து தண்டனை ஏற்கிறார்.

வழக்கம் போல் பொது மக்கள் முன்னிலையில் இளவரசி தலை வெட்டப்பட்டது, காத்லன் இதனைப் பார்க்க வைத்து பிற அவன் த்லை இளவரசியின் உறவினர் 5 முறை வெட்டினாராம்!!

இத்னையும் புகழும் சவுதி அடிவருடிகளை உணர்ந்து கொள்ளுங்கள் காஃபிர்களே!!

காதலுக்கும் விபசாரத்திற்கும் வித்தியாசம் தெரியா ஈனர்களே

சிந்திக்க மாட்டீர்களா!!

நன்றி!!

பெயரில்லா சொன்னது…

http://mudhanmudhalaga.blogspot.com/2013/01/blog-post.html

Yaathoramani.blogspot.com சொன்னது…

அட ஆமாம்.அப்போது சரியாக கவனிக்காமல் விட்டதனால்தான்
இப்படி தொடர்ந்து படமெடுக்கிறார்களோ ?
சிந்திக்கவும் சிரிக்கவும் செய்யும் அருமையான பதிவு
வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 3

vaasu சொன்னது…

to சுவனப் பிரியன்
// கர்ண கொடூரமாக மேக்கப்பை போட்டிருப்பார்*//
அந்த படத்தில் கமல் போட்ட எல்லா மேக்கப்பும் கர்ண கொடுரமகதான் இருக்கும்

nagoreismail சொன்னது…

Kamal hasan tevalaam pola irukke, neenga konjam athigamaave kevala paduthura maathiri irukku, ungaloda munthaiya thai poosa pathivu kooda thalithgalai oru vagaiyil thaakkiya pathivu thaan

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்