பின்பற்றுபவர்கள்

5 செப்டம்பர், 2016

வலைப்பதிவுகள் குறைந்து வருவது ஏன் ?

வலைப்பதிவுகள் வளர்ச்சி குறைந்ததற்கு முகநூல் மற்றும் வாட்ஸப் உள்ளிட்டவற்றின் வளர்ச்சி என்பது மேம்போக்கான கருத்து மட்டுமே

உண்மையில் மொபைல் இயங்குதளம் வந்தபிறகு ஒவ்வொருவரின் மடிக்கணிணி மற்றும் மேசை கணிணி பயன்பாடு குறைந்துவிட்டது, என்னேரமும் மொபைல் மற்றும் ஆப்சுகள் கையில் இருப்பதால் முகநூல் மற்றும் வாட்ஸப் பயன்பாடுகள் எளிதானது, பொதுவாகவே நாம எல்லோருமே சோம்பேரிகளே, எது வசதியோ, எளிதானதோ அதைத்தான் பயன்படுத்துவோம்

வலைப்பதில் எழுத மொபைல் பயன்படுத்துவதும் அதன் ஒருவிரல் தட்டச்சும் போதுமானதாக இல்லை, ஒரு வலை இடுகை எழுத 5-10 நிமிடம் பிடிக்கும், ஒற்றைவிரலால் அதை தட்டச்சுவது அயற்சி (boring) ஏற்படுத்தும், இந்த காரணங்களினால் வலைப்பதிவில் எழுதுவது வதைதான்

மற்றபடி முகநூல் வலைப்பதிவுகளுக்கு ஆப்பு வைக்கவில்லை, வைத்தது ஆப்பிள் மற்றும் ஆண்டராய்ட் செயலிகளே, கூடவே நம் சோம்பேறித்தனமும், தற்போது வலைப்பதிவில் எழுவதை சூழல் என்னும் காரணி பங்குவகிக்கிறது, முதலில் விசைப்பலகையுடன் கூடிய கணிணி மற்றும் ஒரு இடத்தில் அமர்வதற்காக நேரம் ஒதுக்குவது, இதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது

வலைப்பதிவுகள் மொபைல் ஆப்சுகளால் எளிமைபடுத்தபட்டால் மீண்டும் எழும், பிரபலங்களைத்தவிர என்னதான் எழுதினாலும் வலைப்பதிவின் வீச்சுகளை முகநூல் தந்துவிடாது

வலைபதிவுகள் திரட்டிகள் ஆப்சுகளுக்கு மாறி சரிசெய்து கொண்டால் வலைபதிவுகள் வளர்ச்சியுறும், இல்லை என்றால் ஜெமோ சொன்னது போல் வலைப்பதிவர்கள் வெறும் புற்றீசல்கள் தான் அவர்களால் தொடர்ந்து எழுத முடியாது என்ற கூற்று உண்மையாகிவிடும், நாம எழுத தற்போதைய கட்டுப்பாட்டில் முதன்மையானது மொபைல் தொழில் நுட்பமே

வலை எழுத்தை கைவிட்ட பின் தலைக்கு பின்னால் இருந்த ஒளிவட்டங்கள் மங்கி வருவதை பிரபலபதிவர்கள் உணர்ந்துவருகிறார்கள்,

உண்மை தானே ?

இதை ஒருவிரலால் தட்டச்சவே தாவு தீர்ந்துவிட்டது, இந்த அளவு தட்டச்ச விசைபலகையில் ஐந்து நிமிடம் என்றால் இதை மொபைலில் நான் 25 நிமிடம் தட்டச்சினேன் :(

இன்னமும் வலைப்பதிவில் எழுதுபவர்களில் 90 விழுக்காட்டினர் தங்கள் பதிவுகளை விசைப்பலகை வழியாக தட்டச்சிப் போடுவதினால் தான் அவர்களால் தொடர முடிகிறது. விசைப்பலகையை பயன் குறைந்து பற்பயன் (ஸ்மார்ட் ஃபோன்) பேசிக்கு அனைவருமே மாறிவிட்டால் நீண்ட பதிவுகளை எழுதுவது இயலாததாக ஆகிவிடும், தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

*****

பழைய வலைப்பதிவர்கள் எழுதுவதற்கு ஆர்வமாக உள்ளனர், ஆனால் எழுதும் சூழல் மாறிவிட்டதால், இரண்டு வரி டிவிட்டர், கூகுள் + மற்றும் முகநூல்களில் படங்கள் மற்றும் ஐந்துவரிகளுக்கு மிகாமல் இரண்டு மார்க் கேள்விக்கான விடைகள் போன்று சுருக்கிக் கொண்டனர், நான் வலைபதிவில் எழுதவில்லை ஆனால் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் 10K டிவிட்டுகளை எழுதிவந்துள்ளேன். நான் மடிக்கணிணியை தொட்டே இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.

வலைப்பதிவு திரட்டிகள் போன்று முகநூல் பதிவு திரட்டிகள் வந்தால் தமிழ் சமூக எழுத்து ஆர்வலர்களை ஒன்று திரட்ட முடியும், அப்படி இருந்தாலும் நீளமான கட்டுரைகளை கண்டிப்பாக மொபைலில் தட்டச்ச முடியாது.

வலைப்பதிவை இன்னார் தான் படிக்க வேண்டும் என்று மறைக்க முடியாது. வலைப்பதிவு கட்டற்ற ஊடகம், முகநூல், கூகுள் + இவற்றிற்கு மாற்றாக வரமுடியாது, தொழில் நுட்பங்கள் நம் வசிதிக்காக மாறிக் கொண்டே இருக்கும், ஒருவிரலால் தட்டச்ச முடிவதில்லை என்ற சூழல் வரும் போது அதற்கும் மாற்றுவரும், நம் சோம்பேறித்தனத்தை கைவிட்டால் வலைப்பதிவில் நின்று ஆடலாம், ஏனெனில் வலைப்பதிவுகள் போன்று முகநூல் பலதரப்பு நண்பர்களை பெற்றுத் தராது.


11 கருத்துகள்:

Jayakumar Chandrasekaran சொன்னது…

உண்மை. பதிவு எழுதுவதற்கும் ஒரு திறமை தேவைப்படுகிறது. ஒரு சின்ன விஷயத்தை சிறுகதை போன்று சொல்ல வேண்டும்.பதிவுகள் சில சமயம் நண்பர்களை விரோதிகளாக்கும். பதிவுகள் காலம் கடந்தும் நிலை நிற்கும். இது போன்ற காரணங்களால் பதிவர்கள் தற்போது மெனக்கெடுவது இல்லை.

--
Jayakumar

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

நல்லதொரு அலசல். ஆண்ட்ராய்ட் போன் வந்த பிறகு வலைப்பதிவு பக்கம் நிறையபேர் வருவதில்லை. அவர்களுக்கு copy & paste தகவல்களை வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும், பார்வையிடவும் பகிர்வதற்குமே நேரம் சரியாக இருக்கிறது.

வரதராஜலு .பூ சொன்னது…

உண்மை.

வர்மா சொன்னது…

மிகநேர்த்தியான பதிவு. உண்மையை தர்க்கரீதியாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஆனாலும் வலைப்பதிவுக்கான மவுசு இன்னமும் குறையவில்லை.
அன்புடன்
வர்மா

கோவி.கண்ணன் சொன்னது…

jk22384 கூறியது...
உண்மை. பதிவு எழுதுவதற்கும் ஒரு திறமை தேவைப்படுகிறது. ஒரு சின்ன விஷயத்தை சிறுகதை போன்று சொல்ல வேண்டும்.பதிவுகள் சில சமயம் நண்பர்களை விரோதிகளாக்கும். பதிவுகள் காலம் கடந்தும் நிலை நிற்கும்.//


ஜெகெ, சரிதான், மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//தி.தமிழ் இளங்கோ கூறியது...
நல்லதொரு அலசல். ஆண்ட்ராய்ட் போன் வந்த பிறகு வலைப்பதிவு பக்கம் நிறையபேர் வருவதில்லை. அவர்களுக்கு copy & paste தகவல்களை வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும், பார்வையிடவும் பகிர்வதற்குமே நேரம் சரியாக இருக்கிறது.//

தமிழ் இளங்கோ, அவர்கள் எல்லோருமே காபி பேஸ்ட் செய்வது இல்லை, எழுதுவது நின்றாலும் நிறைய வாசிக்கிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

வர்மா கூறியது...
மிகநேர்த்தியான பதிவு. உண்மையை தர்க்கரீதியாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஆனாலும் வலைப்பதிவுக்கான மவுசு இன்னமும் குறையவில்லை.
அன்புடன்
வர்மா//

வர்மா, பாராட்டுக்கு மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// வரதராஜலு .பூ கூறியது...
உண்மை.
//

வருகைக்கு மிக்க நன்றி

Yarlpavanan சொன்னது…

நன்றாக அலசியுள்ளீர்கள்
பாராட்டுகள்

http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

துளசி கோபால் சொன்னது…

உண்மை. வலைப்பூவுக்கே என் ஓட்டு :-)

Nanjil Siva சொன்னது…

பதிவு எழுதுவதற்கு அறிவு நுட்பம் திறமை தேவைப்படுகிறது. மீண்டும் வலைப்பூ பூத்துக்குலுங்கும் என்பதில் சந்தேகம் இல்லை...
https://www.scientificjudgment.com/

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்