பின்பற்றுபவர்கள்

2 செப்டம்பர், 2016

உள்ளேன் ஐயா

2012 வரை ஓடிக் கொண்டிருந்த வலைப்பதிவு வண்டி பிறகு சுணக்கம், எனக்கு அதன் பிறகு வேலை மாற்றம், முன்பு போல் பணியிடையில் ஊதியத்துடன் வலைப்பதியும் நல்வாய்ப்பு பிறகு ஏற்படவில்லை, கிட்டதட்ட அதே காலகட்டத்தில் வாட்ஸப், முகநூல் என்று சமூக ஊடக பதிவர்கள், வாசிப்பவர்கள் பயணத்தை விரிவுபடுத்திக் கொள்ள, வலைப்பதிவில் பதிவுகள் எழுதி திரட்டிகளில் சேர்ப்பது குறைய, திரட்டிகளின் வளர்ச்சிகளும் நின்றுவிட்டதற்கு தமிழ்மணமும், பிற திரட்டிகளுமே சாட்சியாக நிற்கின்றன

என்னுடைய முக நூல் பக்கம் 10 ஆண்டுகளுக்கு முன்பே கணக்கு துவக்கப்பட்டாலும் 2010க்கு பிறகு அவ்வப்போது பயன்படுத்திவர அதில் நண்பர்களாக இணைந்து / இணைத்து இருப்பவர்கள் 80 விழுக்காடு வலைப்பதிவில் நான் முழுமூச்சாக இயங்கி வந்த காலத்தில் இயங்கியவர்கள் தான். வலைப்பதிவின் வழி எனக்கு கிடைத்த நண்பர்கள் வட்டம் மிகப் பெரியது, நாட்டு எல்லைகளை கடந்தது.

வலைப்பதிவர் அல்லாத முகநூல் நண்பர்களின் வட்டத்தில் பெரும்பாலும் உடன் வேலை செய்பவர்கள், அவர்களின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்ற அளவிலும் விருப்ப அடைப்படையில் சில குழுக்களில் இணைந்து இருப்பவர்களாக உள்ளனர், ஆனால் என்னைப் போன்ற பதிவர்களின் முகநூல் பலதரப்பட்ட நண்பர் வட்டம் கிடைக்கப்பெற்றவர்களால் முக நூலிலும் நல்ல விவாதப் பதிவுகளையும், வாசிப்பு அனுபவம் தரும் கட்டுரைகளை படைக்கின்றனர்.

அறிமுகமில்லாதவர்களை முகநூலில் இணைத்து அவர்களுக்கும் பிடிக்கும் படி எழுதுவது என்பது நடைமுறையில் வாய்ப்பற்றது, முக நூல் பிரபலங்களுக்கு ஏற்ற ஒரு சமூக வலைதளம், முக நூல் திரட்டி போன்ற அமைப்பில் திரட்டித் தரப்படாததால் யாராவது அறிமுகப்படுத்தினால் அல்லது விருப்பக் குறி(லைக்) இட்டிருந்தால் மட்டுமே அது நம்முடைய நேரவரிசை( டைம்லைன்)க்கு வரும், மற்றபடி ஒரு கட்டுரையை எழுதிவிட்டு வலைப்பதிவு போல் எல்லோரையும் அடையும்படி செய்வது இயலாது என்பதால், இன்னமும் நான் வலைப்பதிவுகளில் எழுதுவதை வரவேற்கிறேன்.

வலைப்பதிவில் எழுதும் போது எழுத்து சமரசம் (யார் என்ன நினைபபார்கள்) தேவையில்லை,  நமது எண்ண ஓட்டம் எழுத்துகளில் வெளிப்படும் என்பதால் குறிப்பிட்ட காலம் எழுதிவந்தாலே ஒத்த சிந்தனை உள்ள நண்பர்களால் புதிய நட்புகள் உருவாகுவது மிகவும் நேர்த்தியாக இயற்கையாக வலைப்பதிவுகளால் ஏற்பட்டுவிடும்.

என்னைப் பொருத்த அளவில் நான் எழுதுவதை எழுத விரும்பி கோர்வை வராதவர்கள், சொல்லத் தயங்குபவர்கள் தனிப்பட்ட முறையில் என்னை பாராட்டுவதுண்டு,  என்னுடைய மதவாத எதிர்ப்பு மூட நம்பிக்கை பதிவுகளை பாராட்டியவர்கள் 99 விழுக்காடு எதாவது ஒரு மதத்தில் நம்பிக்கை உள்ளவர்களே, அவர்கள் சொல்லத் தயங்குவதை மென்று விழுங்குவதை, தொண்டையில் நிற்பதை சிலர் எழுதும் போது அவர்கள் அதை பாராட்டவே செய்வார்கள்.

கொஞ்ச நாள் முகநூல் மற்றும் வாட்சப்புகளில் சிக்கிக் கொண்டுள்ளவர்கள் ஓவர் டோஸ் அல்லது திகட்டியதும் வலைப்பதிவு போன்ற கட்டுபாடுகளற்ற ஊடகத்தை திரும்பவும் நாடுவார்கள் என்றே நம்புகிறேன்

முடிந்த அளவிற்கு வலைப்பதிவுகளில் நானும் அவ்வப்போது தலைகாட்டலாம் என்றே உள்ளேன். ஆனால் அது 'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' என்ற அளவுக்கெல்லாம் முழுமூச்சாக இருக்காது :)



Once Again

33 கருத்துகள்:

அன்புடன் நான் சொன்னது…

அதுதாங்க பொற்காலம்.... படிச்சி அதுக்கு கருத்த நேர்மையா பதிவிட முடிந்தது... இப்பல்லாம் வெறும் லைக்கு .... கமெண்ட் நிறைய போலித்தனம்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

காலச் சுழற்சி.. வருக வருக

வருண் சொன்னது…

பதிவர் ராஜநடராஜன் மறைந்துவிட்ட செய்தி தெரியும்தானே? நீங்க இரங்கள் தெரிவித்தமாதிரி தெரியவில்லை..அதனால்த்தான் இதைப் பகிர்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

வருண், வருந்துகிறேன்டு, எனக்கு தெரியாது, அதுகுறித்த தகவல் இடுகை இருந்தால் சுட்டுங்கள்

வருண் சொன்னது…

http://parvaiyil.blogspot.com/2015/12/blog-post_30.html

கோவி! இது அவரோட கடைசிப் பதிவு. அதில் பின்னூட்டங்கள் பாருங்க. முக்கியமாக ஜோதிஜியின் பின்னூட்டங்கள்! ஜோதிஜி மற்றும் பழமி பேசி இருவருக்கும்தான் அவரை பர்சனலாகத் தெரிந்து இருந்து இருக்கிறது..

Yaathoramani.blogspot.com சொன்னது…

நானும் உள்ளேன் ஐயா எனச்
சொல்லிக் கொள்வதில்
மகிழ்ச்சியடைகிறேன்
வாழ்த்துக்களுடன்....

தனிமரம் சொன்னது…

நானும் உள்ளேன் உங்களுடன் ஸார்))

சிவபாலன் சொன்னது…

கோவி, வாழ்த்துக்கள்! சிவபாலன்

வேகநரி சொன்னது…

உள்ளேன் ஐயா :)

priyamudanprabu சொன்னது…

நல்லது :)

மங்களூர் சிவா சொன்னது…

மகிழ்ச்சி

பித்தனின் வாக்கு சொன்னது…

நானும் உள்ளேன் அண்ணா!. (பதிவு படிக்க மட்டும்).

aravi சொன்னது…

welcome kannan

பெயரில்லா சொன்னது…

ஒத்த கருத்து உடையவன் என்கிற வகையில் தாங்கள் மீண்டும் வலைப்பதிவு எழுதுவது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பழையபடி கருத்தாழமிக்க பதிவுகள் செய்ய வாழ்த்துகள்!

suvanappiriyan சொன்னது…

நிறைய சண்டை: அதிக வாக்கு வாதங்கள் என்று உங்களோடு மல்லு கட்டிய காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். :-)

எவ்வளவுதான் மாற்றுக் கருத்து இருந்தாலும் நம்மில் மரியாதை கொஞ்சமும் குறைந்ததில்லை. அதனை முக நூலில் காண முடியவில்லை. :-(

பதிவர் ராஜ நடராஜன் இறந்த செய்தி அதிர்ச்சியானது. இப்போதுதான் தெரியும்.

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

மீண்டும் வலைப்பக்கம் எழுத வந்தமைக்கு வாழ்த்துகள்! தொடர்ந்து எழுதவும்.

ஜோதிஜி சொன்னது…

வலைப்பதிவில் எழுதும் போது எழுத்து சமரசம் (யார் என்ன நினைபபார்கள்) தேவையில்லை, நமது எண்ண ஓட்டம் எழுத்துகளில் வெளிப்படும் என்பதால் குறிப்பிட்ட காலம் எழுதிவந்தாலே ஒத்த சிந்தனை உள்ள நண்பர்களால் புதிய நட்புகள் உருவாகுவது மிகவும் நேர்த்தியாக இயற்கையாக வலைப்பதிவுகளால் ஏற்பட்டுவிடும்.

அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதனைப்பற்றி கவலைப்படாமல் என் சுதந்திரம் என் சிந்தனைகள் என்று கருத்தில் கொண்டு செயல்பட்ட அத்தனை பேர்களும் இணையத்தில் வென்றவர்கள். அதில் நீங்களும் ஒருவர்.

கோவி.கண்ணன் சொன்னது…

// Karuna Karasu கூறியது...
அதுதாங்க பொற்காலம்.... படிச்சி அதுக்கு கருத்த நேர்மையா பதிவிட முடிந்தது... இப்பல்லாம் வெறும் லைக்கு .... கமெண்ட் நிறைய போலித்தனம்.//

பயணத்தின் போதே மேய்வதற்கு மொபைல் அதில் முகநூல் / வாட்ஸப். லைக்கு தான் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில் சிவா கூறியது...
காலச் சுழற்சி.. வருக வருக //

மிக்க நன்றி சிவா

கோவி.கண்ணன் சொன்னது…

//Ramani S கூறியது...
நானும் உள்ளேன் ஐயா எனச்
சொல்லிக் கொள்வதில்
மகிழ்ச்சியடைகிறேன்
வாழ்த்துக்களுடன்....//

ரமணி சார்,

உங்களை நினைவு வைத்திருக்கிறேன், குறிப்பாக அந்த பாம்பு கதை

கோவி.கண்ணன் சொன்னது…

//பிளாகர் தனிமரம் கூறியது...
நானும் உள்ளேன் உங்களுடன் ஸார்))//

நீங்க பழைய பலே ஆள் இல்லே ? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் கூறியது...
கோவி, வாழ்த்துக்கள்! சிவபாலன்//

சிவா, அடுத்த முறை சென்னையில் சந்திப்போம்

கோவி.கண்ணன் சொன்னது…

//வேகநரி கூறியது...
உள்ளேன் ஐயா :)//

மிக்க நன்றி :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Priyamudan Prabu கூறியது...
நல்லது :)//

பாட்டெல்லாம் இப்ப எழுதுவதில்லையா பிரபு ?

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா கூறியது...
மகிழ்ச்சி//

மிக்க மகிழ்ச்சி சிவா

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு கூறியது...
நானும் உள்ளேன் அண்ணா!. (பதிவு படிக்க மட்டும்).//

நீங்க அண்ணான்னு சொன்னாதான் எனக்கு வயது தெரிகிறது சுதா

கோவி.கண்ணன் சொன்னது…

// aravindan ranganathan கூறியது...
welcome kannan//

மிக்க நன்றி சார்

கோவி.கண்ணன் சொன்னது…

//Sudhakar கூறியது...
ஒத்த கருத்து உடையவன் என்கிற வகையில் தாங்கள் மீண்டும் வலைப்பதிவு எழுதுவது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பழையபடி கருத்தாழமிக்க பதிவுகள் செய்ய வாழ்த்துகள்!//

பாராட்டுக்கு நன்றி ஐயா, முடிந்த வரையில் எழுத உள்ளேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப் பிரியன் கூறியது...
நிறைய சண்டை: அதிக வாக்கு வாதங்கள் என்று உங்களோடு மல்லு கட்டிய காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். :-)

எவ்வளவுதான் மாற்றுக் கருத்து இருந்தாலும் நம்மில் மரியாதை கொஞ்சமும் குறைந்ததில்லை. அதனை முக நூலில் காண முடியவில்லை. :-(

பதிவர் ராஜ நடராஜன் இறந்த செய்தி அதிர்ச்சியானது. இப்போதுதான் தெரியும்.//

சுபி சார்,
சாரி நீங்க வஹாபி இல்லையா ? :)

நன்றாக இருக்கிறீர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//தி.தமிழ் இளங்கோ கூறியது...
மீண்டும் வலைப்பக்கம் எழுத வந்தமைக்கு வாழ்த்துகள்! தொடர்ந்து எழுதவும்.

//

மிக்க நன்றி, முடிந்தவரையில் எழுதுவேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிஜி திருப்பூர் கூறியது...
வலைப்பதிவில் எழுதும் போது எழுத்து சமரசம் (யார் என்ன நினைபபார்கள்) தேவையில்லை, நமது எண்ண ஓட்டம் எழுத்துகளில் வெளிப்படும் என்பதால் குறிப்பிட்ட காலம் எழுதிவந்தாலே ஒத்த சிந்தனை உள்ள நண்பர்களால் புதிய நட்புகள் உருவாகுவது மிகவும் நேர்த்தியாக இயற்கையாக வலைப்பதிவுகளால் ஏற்பட்டுவிடும்.

அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதனைப்பற்றி கவலைப்படாமல் என் சுதந்திரம் என் சிந்தனைகள் என்று கருத்தில் கொண்டு செயல்பட்ட அத்தனை பேர்களும் இணையத்தில் வென்றவர்கள். அதில் நீங்களும் ஒருவர்.

//

ஜோதிஜி,

கருத்து சுதந்திரம் மதிக்கிறேன், அது எனக்கும் இருக்க வேண்டும், மனத்தடையை தவிர்ப்பது அப்படித்தான்.

வேகநரி சொன்னது…

கோவியருக்கு வரவேற்பு மிகவும் பலமாக உள்ளது. அண்ணர் சுவனப்பிரியனும் வந்துவிட்டார். சகோ நந்தவனத்தான், சார்வாகனுக்காக காத்திருக்கிறேன்.

Nanjil Siva சொன்னது…

முகநூல் like போடுவதற்கும் forward பண்ணுவதற்கும் மட்டுமே பயன்படுகிறது ... வலைப்பதிவு பட்டுமே மனதோடு உறவாடுவதற்கும் அறிவு வளர்சிக்கும் தீனி போடும் தளம்... மீண்டும் வலைப்பூ மலரும்..!!
https://www.scientificjudgment.com/

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்