பின்பற்றுபவர்கள்

13 ஜூலை, 2012

மரண தண்டனையும் இஸ்லாமிய பதிவர்களும் !


மரண தண்டனைக்கு எதிராக வைக்கும் ஞாயங்களில் முதன்மையானது மனிதாபிமானமோ, அனுதாபமோ அல்லது மரணதண்டனைப் பெற்றவர்களின் குடும்பம் பிறகு சந்திக்கும் பாதிப்புகள் குறித்தோ அல்ல, மாறாக கொலை என்பது மரணம் விளைவித்தக் குற்றம் என்ற வகைப்படுத்தப்படும் போது மரண தண்டனை என்பது மற்றுமொரு கொலைக்கான ஒப்புதல் பெற்ற ஆணை என்றே பொருள், கொலையும் அதன் மூலம் பெறும் மரணத்தின் வலியும் அதன் பாதிப்பும் கொடுமையானது என்றே உணரும் எவரும் அதை இன்னொருவருக்கு பரிந்துரைக்க மாட்டார் என்கிற மிக மிக அடிப்படைப் புரிதலில் தான் மரண தண்டனைக்கு எதிரான வாதங்கள் வைக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன் தான். பல கொலைகளை செய்துவிட்டு சாட்சியோடு மாட்டிக் கொள்பவன் மட்டுமே தண்டனைப் பெறுகிறான் என்பதால் மரண தண்டனை என்பது சமூகத்தில் குற்றங்களைக் குறைக்கும் என்பதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை, 

எந்த ஒரு நாட்டிலும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் என்ற சட்டம் இருந்தால் அதனை லாவகமாக மீறுகிறவர்களும் இருக்கிறார்கள். மாட்டிக் கொள்ளாதவர்கள் தவிர்த்து மற்றவர்கள் தண்டனைப் பெறுகிறார்கள், கூலிப்படைகளின் செயலும், அவர்களைப் பயன்படுத்திக் கொள்பவர்களும், மதவெறியர்களும்ம், தீவிரவாதிகளும் தீட்டும் திட்டங்கள் தவிர்த்து கொலைக்கானக் காரணங்கள் முன்கூட்டியே முடிவு செய்யப்படாத நிலையில் இழைக்கப்படும் கொலைக் குற்றங்கள் யாவும் சற்றே உணர்ச்சி வசப்படுவதால் நடைபெறுவது தான். ஒன்பது கொலை செய்த ஜெயபிரகாசும் கூட திட்டமிட்ட கொலை செய்யவில்லை, உணர்ச்சி வசப்பட்டு தான் கொலை செய்தான், சிறையில் அவனது நன்னடத்தை அவனை விடுதலை செய்ய வைத்தது, எங்கு இருக்கிறான் என்றே தெரியாத நிலையில் அவனும் சமூகத்தில் இருந்து மறைந்தே வாழ்கிறான், வாழ்கிறான் என்றாலும் அவனால் நாள் தோறும் நிம்மதியாக உண்டு, உறங்கி எழ முடியுமா ? என்பது கேள்விக் குறி.

கொலைக்கு தீர்ப்பு கொலை - காட்டுமிராண்டித் தனமானது என்கிற என் சிந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை.
கொலைக்கு தீர்ப்பு கொலை என்பது அடுத்த கொலை.

இறந்தவர்களை மீட்டெடுக்க திறன் அற்ற மனித சமூகத்திற்கு உயிருடன் இருப்பவர்கள் குற்றவாளிகள் என்பதால் கொன்றுவிடும் உரிமை எதை மீட்டுத் தரும் ?

கொலையால் பாதிக்கப்பட்ட சமூத்தின் மன நிலை தெரிந்தால் மரண தண்டனை எதிர்க்க மாட்டீர்கள் ?  என்று கேட்போருக்கு ..... மரண தண்டனையால் பாதிக்கப்பட்ட குற்றவாளிகளின் குடும்பத்தில் ஒருவராகவோ, அவரது மனைவியாகவோ இருந்தால் மரண தண்டனை நியாயம் என்று சொல்ல முடியுமா ?

குற்றவாளிகள் தனிமைபடுத்தப்பட வேண்டியவர்கள், கொத்தடிமையாகக் கூட மாற்றி அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் முழுமையாக அழித்துவிட வேண்டும் என்பதில் எனக்கு என்றைக்குமே ஒப்புதல் இருக்காது, நானே பாதிக்கப்பட்டாலும் கூட.

*********

திட்டமிட்ட படுகொலைகள் கூட தன்னுடைய விருப்பமில்லாமல் யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் நடைபெறும் குற்றத்திற்கும்  அதை செய்த குற்றவாளிக்குமான தொடர்ப்பு ஒரு ஆயுதம் என்ற அளவில் தான், ஆனால் தூண்டியவர்களை (ஆதாரமில்லை) என்று விட்டுவிட்டு (ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2ஜி ஸ்பெக்டர்ம் முறைகேட்டில் அதன் நிறுவனருக்கு சம்மன் அனுப்பாமல் உயர் அதிகாரிகளை மட்டுமே விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து நீதிமன்ற காவலாக சிறையில் வைத்தார்கள்). கொலைக் குற்றத்திற்கான தண்டனை என்ற பெயரில் ஆயுதங்களுக்கு மட்டுமே மரண தண்டனை அளிக்கப்படுகிறது இதையெல்லாம் சரியான நீதி என்று எப்படிச் சொல்ல முடியும் ? சிங்கப்பூரினுள் போதைப் பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை என்பது எல்லோருக்கும் தெரியும், அதில் சிறிய மாற்றமாக கூரியர்களாக முதல் முறை குற்றம் செய்பவர்களின் தண்டனைகள் குறித்து பரீசீலிக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவித்துள்ளனர், இது ஒரு நல்ல மாற்றம் தான், உதாரணத்திற்கு சென்னையில் இருந்து கிளம்பும் ஒரு அப்பாவி பயணியிடம் இந்த மாத்திரையை எங்க சொந்தக்காரர் ஒருவர் சிங்கை விமான நிலையத்தில் பெற்றுக் கொள்வார், அவரிடம் சேர்த்துவிடுகிறீர்களா ? என்று கூறி போதை மாத்திரைகளைக் கொடுக்க, இன்பாமர் மூலம் தெரிந்து கொள்ளும் அரசு கொண்டுவரும் நபரை அப்படியே அள்ளி நீதிமன்றத்தில் கொண்டு சேர்த்து கையில் இருக்கும் பொருளை உறுதி செய்து மரண தண்டனை அளித்துவிடுவார்கள். இங்கு நாம் சிந்திக்க வேண்டியது கொண்டுவரும் நபர் உதவி செய்யும் மனப்பான்மையில் உள்ளவர் என்ற நிலையில் சற்று சுதாரிப்பு இல்லாத நிலையில் அவர் பெரும் சிக்கலுக்கு ஆளாகிறார்,  அந்த குறிப்பிட்ட போதைப் பொருளைக் கொடுக்கச் சொன்னவன் உறவினராகக் கூட இருப்பான், இருந்தாலும் நபர் சிக்கிய பிறகு நான் அவ்வாறு எதையுமே கொடுக்கவில்லை என்று அவனால் சாதித்துக் கொள்ள முடியும். அப்பாவியாக இருந்து ஏமாற்றப்பற்றவர்களை ஏன் தூக்கில் போட வேண்டும் ? ஆனாலும் அவர்கள் இழைத்தது குற்றம், கவனக் குறைவானது என்றாலும் குற்றம் தான் என்பதற்காக சிறை தண்டனைக் கொடுக்கலாம், அதன் மூலம் எச்சரிக்கை கொடுக்க முடியும் என்று அரசு நம்புகிறது. 

மரண தண்டனைகள் குறித்த சிந்தனைகள் நாட்டுக்கு நாடு மனித உரிமை மற்றும் மனிதாபிமான மன நிலை வளச்சிக்கேற்ப மாறும் போது, இஸ்லாமிய பதிவர்கள் குறிப்பாக வஹாபிகள் மரண தண்டனை தேவை என்றே வாதிடுகிறார்கள்.

மரண தண்டனைக் குறித்த வஹாபிகளின் பிடிவாதங்களுக்கு காரணம் ? கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்,. கைக்கு கை மற்றும் பாலியல் குற்றத்திற்காக பெண்களை கல்லால் அடித்துக் கொல்லப்படும் தண்டனைகள் சவுதியில் / ஈரானில் இஸ்லாமிய சட்டம் என்ற பெயரில் இன்னும் நடைபெறுகிறது. இஸ்லாம் சொல்வதெல்லாம் சரி என்னும் போது மரண தண்டனைக் குறித்த இஸ்லாம் பார்வையும் சரியானதே என்று சாதிப்பதற்காக வஹாபிகள் மரண தண்டனை கொள்கையில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

சரி, 
கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்டவை நடத்திய பாட்சா, மதானி உள்ளிட்டோருக்கு இதுவரை எத்தனை முறை நீங்கள் மரண தண்டனை தரவேண்டும் என்று வெளிப்படையாகப் பேசி இருக்கிறீர்கள் ? என்று கேட்டால் மட்டும் அவர்கள் 'ஆர் எஸ் எஸ் சிந்தனை வெளிப்பாடு இவ்வாறு உங்களைக் கேட்கத் தூண்டுகிறது பாட்சாவின் குண்டுவெடிப்பு குற்றம் நிறுபனம் ஆகும் போது பார்க்கலாம் என்கிறார்கள், ஆனால் மோடி வகையறா நீதிமன்றத்தால் தண்டனை பெறாத நிலையில் இவர்கள் அவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பு எழுதிவிடுகிறார்கள்.

மதானி குற்றவாளி இல்லை, நீதிமன்றம் விடுவித்துவிட்டது, அவரை குற்றவாளி என்று சொன்னால் நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்கிறார்கள், சாட்சி அடிப்படையில், ஆதாரம் / ஆதாரமில்லா அடிப்படையில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவது நமக்கு தெரியாதா என்ன ? ஆனாலும் மதானிக்கு பொறுத்திப் பார்க்கும் ஞாயத்தை இவர்கள் கொலைக் குற்றத்தில் விடுதலையாகும் காவிக் கும்பலுக்கும் பொறுத்திப் பார்ப்பார்களா ? உதட்டைத்தான் பிதுக்க வேண்டும்,


இன்னும் சிலர் நேர்மையாக பதில் சொல்வதாக, ஞாயம் பேசுவதாக நினைத்து, 'கோவை வெடிகுண்டு வெடிப்பின் மூல காரணம் அதற்கு முன் பத்தொன்பது பேரை காவிக் கும்பல் வெட்டி தீர்த்தது தான்......என்று சொல்லிவிட்டு அவர்களை தண்டித்தால் (பாட்சா என்று பெயரைக் குறிப்பிட்டு சொல்லாமல்) கோவை வெடிகுண்டு குற்றவாளிகளையும் தண்டிக்கலாம் என்கிறார்கள்

ஹலோ.......எவனோ 19 பேரை படுகொலை செய்ததற்கு கோவையில் பல்வேறு இடங்களில் குண்டு வைத்து அப்பாவி பொது மக்களை கொன்றது எந்த விதத்தில் ஞாயம் ? 40 பேர் எரித்துக் கொல்லப்பட்ட கீழவெண்மணியில் கொலைகாரனைத் (இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயிடுவை) தானே  தலையை வெட்டினார்கள் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள். மாறாக கொலைகாரனின் சாதிக்காரர்களை கொல்லவில்லையே ?  ஊரையே கொளுத்தவில்லையே, பழிக்கு பழி கொலைகளை ஏன் பொது மக்கள் மீது செயல்படுத்த வேண்டும் என்ற எனது கேள்விக்கு........ஒருவரும் பொறுப்பாக பதில் சொல்ல முனையவில்லை.

இவர்கள் மட்டுமல்ல காவிக் கும்பல் கூட சங்கர ராமன் படுகொலைக்கு பெரியவாளுக்கு மரண தண்டனைக் கேட்டு இருக்கிறதா ? கோர்ட் தண்டிக்கட்டும், குற்றவாளியாக நிறுபனம் ஆகட்டும் அப்பறம் (மேல் கோர்டில்) பார்க்கலாம் :) என்று தானே சொல்கிறார்கள்.

மரண தண்டனைக்கு ஆதரவான குறிப்பிட்ட மதரீதியிலான, அரசியல் ரீதியிலான நியாங்கள் எப்போதும் சமூகத்தின் மீதும் பொது மக்களின் மீதும் மிகுந்த அக்கறை உள்ளது போலவும், குற்றமற்ற சமூகத்தை உருவாக்குவது போலவும், நீதி நிலை நாட்டப்பட்டே ஆகவேண்டும் என்பது போலவும் நீட்டி முழக்கப்படுகிறது, அவர்களின் பின் புலன்களைப் பார்த்தால் அவர்கள் ஒருதலைப் பட்சமானவர்கள், அவர்கள் வழங்கும் பரிந்துரைகள் அவர்கள் சமூக / அரசியல் சார்ந்த குற்றவாளிக்கு பொருந்ததாது என்ற நிலையில் தான் வாதிடுகிறார்கள்.

பின்லேடன் தூண்டுதலில் அமெரிக்க ரெட்டை கோபுரம் அல்கொய்தா தீவிரவாதிகளால் தகர்க்கப்படவில்லை, அதெல்லாம் அமெரிக்காவின் திட்டமிட்ட சதி என்றே இதே மரண தண்டனை ஆதரவு நியாயவாதிகளில் பலர் வெளிப்படையாக பின்லேடனை புனிதனாக, இஸ்லாமிய போர்வீரனாக, மாவீரனாக, மாசற்றவனாக முன் நிறுத்துகிறார்கள், அதன் தொடர்பில் தான் பின்லேடனுக்கு சென்னை மசூதியில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது.

உன்னைப் போல் ஒருவன் படத்தையும் விருமாண்டி படத்தையும் ஒப்பிட்டு மரண தண்டனைக் குறித்த கருத்துகளில் கமலஹாசன் தடுமாறுகிறார், தடம் மாறுகிறார், சினிமாவுக்காக எதைவேண்டுமானாலும் மாற்றிக் கொள்கிறார்கள் என்று கண்டனமாகவே நான் எழுதினேன், உன்னைப் போல் ஒருவன் படத்தின் தண்டனைகளை இவர்கள் ஞாயம் என்றும், குற்றவாளிகள் குற்ற முகாந்திரம் இருப்பதாக காட்சி இருப்பதால் அதில் தரும் மரண தண்டனை தவறு அல்ல என்றும் சொல்லுவார்களா ?

இணைப்பு :

தற்கொலை தாக்குதல்களும் மரண தண்டனைகளும் !



60 கருத்துகள்:

குழலி / Kuzhali சொன்னது…

மரண தண்டனை எதிர்ப்பு என்பதை பேசும் பெரும்பாலானோர் குறிப்பாக மதசாய்வு உடையோடு அவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் அடுத்தவர்களுக்கு ஒரு மாதிரியாகவுமே பேசுகிறார்கள்.

// 40 பேர் எரித்துக் கொல்லப்பட்ட கீழவெண்மணியில் கொலைகாரனைத் (இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயிடுவை) தானே தலையை வெட்டினார்கள் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்.//
தவறான தகவல், கோபாலகிருஷ்ண நாயுடுவை கொன்றவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அல்ல, அவர்கள் நக்சல்கள், சாருமஜூம்தார் வழியில் அழித்தொழிப்பே சமூக புரட்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அதை செய்தவர்கள், இந்த வழக்கில் மரண தண்டனை பெற்று விடுதலையானவர் தான் தியாகு.

கோவி.கண்ணன் சொன்னது…

//தவறான தகவல், கோபாலகிருஷ்ண நாயுடுவை கொன்றவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அல்ல, அவர்கள் நக்சல்கள், சாருமஜூம்தார் வழியில் அழித்தொழிப்பே சமூக புரட்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அதை செய்தவர்கள், இந்த வழக்கில் மரண தண்டனை பெற்று விடுதலையானவர் தான் தியாகு.//

1978 வாக்கில் 40 பேர் உயிருடன் கொல்லப்பட்ட பிறகு இருஞ்சூர் நாய்கர் என்பவரின் தலை வெட்டப்பட்டது, ஆனால் கீழவெண்மணி மற்றும் இருஞ்சூர் ஒரே குற்றங்கள் தொடர்பில் உள்ளவையா என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை, பழிக்கு பழி என்கிற சம்பவத்திற்காக இதனைக் குறிப்பிட்டுள்ளேன். இது தகவல் பிழையாக இருக்கலாம், ஆனால் சம்பவங்களில் உண்மை உண்டு.

priyamudanprabu சொன்னது…

ஹலோ.......எவனோ 19 பேரை படுகொலை செய்ததற்கு கோவையில் பல்வேறு இடங்களில் குண்டு வைத்து அப்பாவி பொது மக்களை கொன்றது எந்த விதத்தில் ஞாயம் ? 40 பேர் எரித்துக் கொல்லப்பட்ட கீழவெண்மணியில் கொலைகாரனைத் (இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயிடுவை) தானே தலையை வெட்டினார்கள் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள். மாறாக கொலைகாரனின் சாதிக்காரர்களை கொல்லவில்லையே ? ஊரையே கொளுத்தவில்லையே, பழிக்கு பழி கொலைகளை ஏன் பொது மக்கள் மீது செயல்படுத்த வேண்டும்
///

i think its the diffrents between unnaipol oruvan and virumandi..

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ
நீங்க இவ்வள்வு நாள் பழகியும் மத வாதிகளின் கேரக்டரையே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்களே.

1.அவர்களுக்கு இலாபம் அளிக்கும் மத விடயம் எனில் அவர்களுக்கு மட்டும் என்பார்கள்

[4ஹி ஹி சிலதா பலவா என குழப்பம்] ஆகவே (அதிகபட்சம்)நாலு தார மணம்[அ.நா.தா.ம] புத்தக்கத்தில் சொல்லப்பட்டு இருப்பதை நியாயம் படுத்த விபசாரம் செய்வதை விட அ.நா.தா.ம செய்யலாம் என சொல்லும் விதமே அருமை!.

மதத்தினர சிறுபானமையாக் இருப்பினும் அ.நா.தா.ம செய்யும் உரிமையை எப்படியாவது பெற்று விடுவர்.சிறுபானமியாக் இருப்பின் சமூக் சட்டம் மட்டும் கடவுள் சட்டம்
**********

2. அவர்களை பாதிக்கும் மத விடயம் எனில் எல்லாரையும் சேர்த்து சிக்க வைக்கப் பார்ப்பார்கள்.

கொள் என்றால் வாயைத் திறக்கும் குதிரை கடிவாளம் என்றால் வயை மூடுமாம்!

கையை வெட்டு,தலை வெட்டு,கல்லெறி போன்றவை புத்த்கத்தில் இருப்பதால் மத ஆட்சி நாடுகளில் இது நிறைவேற்ற‌ப் படுகிறது.

ஒரு மதத்தவரின் சட்டம் அவர்களுக்கு மட்டுமே அமல் படுத்தப் பட வேண்டும்.

ஆகவே நம்பிக்கையாளர்களின் விருப்பப் படி அவர்களுக்கு மட்டும் மரண தண்டனை வழங்கலாம்.பிறருக்கு மரண தண்டனை
நீங்கலான மனித உரிமைச் சட்டம் அமல்படுத்த‌லாம்.

எனினும் குற்றவாளிக்கு ஒரு வாய்ப்பாக உனக்கு உன் மத சட்டமா ,இல்லை மதம் மாறி(துறந்து) மனித உரிமை சட்டம் ஏற்கிறாயா என்றால் கடை காலியாகிவிடும். ஆகவே மதவாதிகளின் ஆலோசனையை உடனே அவர்களுக்கு (மட்டும்) அமல் படுத்த வேண்டும்.

ஆகவே மரண தண்டனை ஆதரவு மதவாதிகளை பின் பற்றுவோருக்கு‌
வழங்கலாம்.

சாஃப்ட்வேர் பைரேசி [software piracy]திருட்டுக்கு கை வெட்டலாமா? யாருக்காவது கை மிஞ்சுமா???????

ஹா ஹா ஹா

நன்றி

சிராஜ் சொன்னது…

கோவி அண்ணன்....

சலாம் சொல்லலாமா????

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.....

இத ஏத்துகிறதும் ஏற்காததும் உங்க இஷ்டம்....

/* கொலையும் அதன் மூலம் பெறும் மரணத்தின் வலியும் அதன் பாதிப்பும் கொடுமையானது என்றே உணரும் எவரும் அதை இன்னொருவருக்கு பரிந்துரைக்க மாட்டார் என்கிற மிக மிக அடிப்படைப் புரிதலில் தான் மரண தண்டனைக்கு எதிரான வாதங்கள் வைக்கப்படுகிறது. */

மிகத் தவறான புரிதல்... கொலையும், அதன் மூலம் பெறும் வலியும், அதன் பாதிப்பும் கொடுமையானது என்ற ஒரே காரணத்துக்காக தான் மரண தண்டனை பரிந்துரைக்கப் படுகிறது...

மரண தண்டனைக்கு பின்னாடி உள்ள கான்செப்ட், சமுதாயத்த திருத்துறதோ, குற்றத்த குறைக்கிறதோ இல்ல.. அதெல்லாம் இரண்டாவது காரணிகள் தான்..

முதல் காரணி.. நீதி சார்... நீதி.. பாதிக்கப்பட்டவனுக்கு நீதி கிடைக்குனும்.. அது தான் முக்கியம்...

கோவி.கண்ணன் சொன்னது…

//எனினும் குற்றவாளிக்கு ஒரு வாய்ப்பாக உனக்கு உன் மத சட்டமா ,இல்லை மதம் மாறி(துறந்து) மனித உரிமை சட்டம் ஏற்கிறாயா என்றால் கடை காலியாகிவிடும். ஆகவே மதவாதிகளின் ஆலோசனையை உடனே அவர்களுக்கு (மட்டும்) அமல் படுத்த வேண்டும்.//

இது நல்லா இருக்கே, மரண தண்டனைக் குற்றவாளிகளிடம் நீ மதத் தண்டனை சட்டப்படி கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டுமா ? என்று கேட்டுப் பார்க்கலாம், ஒப்புக் கொண்டால், நோன்பு இருந்தவர் என்ற தகுதியுடன் மதத்தை மதித்தைப் பாராட்டும் விதமாக அவருக்கு நிரந்தர சொர்கத்தின் வாயில் திறக்கப்படலாம். இந்தவிசயத்தில் மதச்சார்ப்பு அற்ற அரசுகள் கருணைக்காட்டனும்.

சிராஜ் சொன்னது…

இஸ்லாம் மரண தண்டனை கொடுத்தே ஆகணும்னு சொல்லல...

நீங்க நினைக்கிற அளவுக்கு இஸ்லாம் காட்டு மிராண்டி மார்க்கம் இல்ல... ஹா..ஹா..ஹா.. மனதில் முன் முடிவுகள் இல்லாம பொருமையா ஆராயுங்கள்.. ஆச்சரியப்படத்தக்க வகையில் குரான் உங்களை கவரும்...

சரி விஷயத்திற்கு வருவோம்...

இஸ்லாம் முடிஞ்சா மன்னியுங்கள்னு தான் சொல்லுது... ஆனா யார் மன்னிக்கனும்னு சொல்லுது தெரியுமா?? பாதிக்கப்பட்ட குடும்பத்தார்... ஹவ் ஸ்வீட்??? கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்தார் அவ்வளவு இழப்பையும் சந்தித்துவிட்டு, நீதி கேட்டு கோர்ட், கோர்ட்டா ஏறி இறங்குவான்?? நாய் மாதிரி அலையுவான்.. நீங்களும், நீதிபதியும் குற்றவாளிய மன்னிப்பீங்களோ?????

மன்னிக்கிறதுக்கு நீங்க யார் சார்??
உங்க பொண்டாட்டிய கற்பழிச்சு கொலை பண்ணா மன்னிப்பீங்களோ???

சிராஜ் சொன்னது…

/* மரண தண்டனைக் குற்றவாளிகளிடம் நீ மதத் தண்டனை சட்டப்படி கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டுமா ? என்று கேட்டுப் பார்க்கலாம், */

அண்ணே.. உங்க இஸ்லாமிய ஞானம் புல்லரிக்க வைக்குதுன்னே..... புல்லரிக்க வைக்குது...

உங்களுக்கு பதில் சொல்ல உங்க பதிவ படிக்க வேண்டியதே இல்ல.. நீங்க, மட்டும் சார்வாகன் பிண்ணூட்டமே போதும்...

Back to business...

இஸ்லாமிய சட்டப்படி, கொலை செய்தவனை கல்லால் அடித்துக் கொல்லக்கூடாது.. தலை வெட்டு...

ஒரே போடு.. ஒரே நிமிஷம்..கதம் கதம்... உங்க மாதிரி தூக்குல தொங்க விட்டு, கழுத்து நெறியிர வரை அவன் துடிதுடித்து... இந்த கதைலாம் இல்ல... ஒரு நிமிஷத்தில் மேட்டர் பினிஸ்.... ஹவ் ஸ்வீட்???

சிராஜ் சொன்னது…

சாரி அண்ணே...

சொல்ல மறந்திட்டேன்.. உங்க கருத்து பிடிக்கல.. அதற்காக முதல் மைனஸ் வோட்ட நான் போட்டு இருக்கேன்..

யாருக்கும் மைனஸ் வோட்டு போட நான் பரிந்துரைக்கல..அதுனால இனி மைனஸ் ஓட்டு விழுத்தால்..அதற்கு நான் பொறுப்பு இல்ல...

கோவி.கண்ணன் சொன்னது…

//இஸ்லாமிய சட்டப்படி, கொலை செய்தவனை கல்லால் அடித்துக் கொல்லக்கூடாது.. தலை வெட்டு...//

கூடவே அல்லாஹு அக்பரும் சொல்வதாக அல்ஜெசிராவில் காட்டுவார்களே அதானே ? தெரியும். தெரியும்.

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு சகோ.

கொலை செய்தால், கொன்றவனைக் கொல் என்கின்றார்கள் அப்படியானால் கொலை செய்தவனைக் கொன்றவனைக் கொல்லலாமா ? !!!

என்னைப் பொறுத்தவரை குற்றம் என்பதை குற்றம் என்று குற்றம் செய்தவர் எண்ண வேண்டும், குற்றம் என்பது தவறான வழி என மக்கள் உணர வேண்டும் !!!

மாறாக உணர வைக்காமல் - அச்சத்தின் ஊடாக குற்றங்களை குறைப்போம் என குதூகலம் கொள்வது நியாயமா ? !!!

சரி மரண தண்டனைக் கொடுப்போம் என ஒத்துக் கொண்டாலும் .. எதற்கு எல்லாம் மரண தண்டனைக் கொடுக்கலாம் என்பதிலாவதா நியாயமுண்டா ?

கொன்றவனைக் கொல்லலாம் ... !!! ஆனால் மனதுக்கு சரியல்ல என நினைத்து மதம் மாறியவனையும் அல்லவா கொல்ல சொல்கின்றார்கள் ... !!! அது எவ்வகை நியாயம் ...

சிராஜ் சொன்னது…

ராஜ பக்க்ஷே நாளைக்கு ஒரு வேல அரஸ்ட் செய்யப்பட்டு கோர்ட்டில் நிறுத்தினால்.. நீங்க, சார்வாகன் எல்லாம் மரண தண்டனை வேண்டாம்னு சொல்லுவீங்க போல???

சொல்லுவீங்களா??? உங்கள் கருத்தை அறிய பேராவளாக உள்ளேன்...

பெயரில்லா சொன்னது…

//சாஃப்ட்வேர் பைரேசி [software piracy]திருட்டுக்கு கை வெட்டலாமா? யாருக்காவது கை மிஞ்சுமா???????//

ஹிஹி !!! என்ன சார்வாகன் இப்படி சொல்லிவிட்டீர்கள் !!! ஷரியாவில் எப்படி சாஃப்ட்வேர் பைரசி பற்றி கூறி இருப்பார்கள் ..
அல்லாஹ் !!! சாஃப்ட்வேர் பற்றி எல்லாமா கூறி இருப்பார் !!!

யார் சொன்னது கூறி இருக்கின்றார் ? என ஒரு குரல் எங்கோ கேட்கின்றது ..... ம்ம்ம்ம்

பெயரில்லா சொன்னது…

//ஒரே போடு.. ஒரே நிமிஷம்..கதம் கதம்... உங்க மாதிரி தூக்குல தொங்க விட்டு, கழுத்து நெறியிர வரை அவன் துடிதுடித்து... இந்த கதைலாம் இல்ல... ஒரு நிமிஷத்தில் மேட்டர் பினிஸ்.... ஹவ் ஸ்வீட்???//

சிராஜ் --- :)

இதுக்கு மேலையும் விளக்கம் விளக்கமாக பதிவு எழுத வேண்டுமோ ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜ பக்க்ஷே நாளைக்கு ஒரு வேல அரஸ்ட் செய்யப்பட்டு கோர்ட்டில் நிறுத்தினால்.. நீங்க, சார்வாகன் எல்லாம் மரண தண்டனை வேண்டாம்னு சொல்லுவீங்க போல??? //

என்னைப் பொறுத்த அளவில் கடாபி, சாதாம் போன்றவர்களுக்கான தண்டனைகளும் தவறே. இராஜபக்சே ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டியவர், குற்றவாளி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, மரண தண்டனை தவறு.

சிராஜ் சொன்னது…

// /இஸ்லாமிய சட்டப்படி, கொலை செய்தவனை கல்லால் அடித்துக் கொல்லக்கூடாது.. தலை வெட்டு...//

கூடவே அல்லாஹு அக்பரும் சொல்வதாக அல்ஜெசிராவில் காட்டுவார்களே அதானே ? தெரியும். தெரியும். //

அண்ணே... இந்த கேலிலாம் இருக்கட்டும்..மொதல்ல நீங்க இஸ்லாமிய சட்டப்படி கொலைக்கு கல்லால் அடிச்சு கொல்லணும்னு சொன்னது தப்புன்னு ஒத்துகங்க.. அது தான் நேர்மையான் செயலா இருக்கும்...

கமான்.. சொல்லிடுங்க....

கோவி.கண்ணன் சொன்னது…

////சாஃப்ட்வேர் பைரேசி [software piracy]திருட்டுக்கு கை வெட்டலாமா? யாருக்காவது கை மிஞ்சுமா???????//

ஹிஹி !!! என்ன சார்வாகன் இப்படி சொல்லிவிட்டீர்கள் !!! ஷரியாவில் எப்படி சாஃப்ட்வேர் பைரசி பற்றி கூறி இருப்பார்கள் ..//

திருட்டு விசிடிக்கு கைவெட்டினால் தமிழ்நாட்டில் பர்மா பஜார்களில் பாதிபேருக்கு கையே இருக்காது சகோ :)

பெயரில்லா சொன்னது…

// ராஜ பக்க்ஷே நாளைக்கு ஒரு வேல அரஸ்ட் செய்யப்பட்டு கோர்ட்டில் நிறுத்தினால்.. நீங்க, சார்வாகன் எல்லாம் மரண தண்டனை வேண்டாம்னு சொல்லுவீங்க போல??? //

ஏன் அவரை கொல்ல வேண்டும் ... !!! அவர் அவரின் இனத்துக்காக என்னவோ செய்தார் .. வெற்றியும் கண்டார்.

என்னப்பா உலகம் முழுதும் ஒரேக் குடைக்குள் கொண்டு வர ஒருக் கூட்டம் போராடுகின்றது. ஒரு தீவை ஒருக் குடைக்குள் கொண்டு வர அவன் போராடினான் .. இரண்டு பேரின் நோக்கம் ஒன்று தானே !!!

பெயரில்லா சொன்னது…

//திருட்டு விசிடிக்கு கைவெட்டினால் தமிழ்நாட்டில் பர்மா பஜார்களில் பாதிபேருக்கு கையே இருக்காது சகோ :)//

:) விசிடி பற்றியுமா ? ஷரியாவில் சொல்லி இருக்காங்க !!! அறிந்துக் கொள்ள ஆவலாக இருக்கின்றது ... ஹிஹி

பெயரில்லா சொன்னது…

ஒரு சகோதரி எழுதி இருக்கின்றார். இந்திய சட்டங்களில் ஓட்டையாம், பணம், அதிகாரம் கொண்டு வெளியே வந்துவிடுவார்களாம். அதனால் கொலை தண்டனையே சிறந்தது என்று !!!

நானும் கேட்டேன் .. அதே ஓட்டை இந்திய சட்டத்தில் அப்பாவி ஒருவனை குற்றவாளியாக்கி கொன்றுவிட்டால் ..

பின்னர் அவன் குற்றவாளி இல்லை என தெரியவரும் போது .. எவன் அவனின் உயிரை திருப்பிக் கொடுப்பான் ... !!! கடவுளா ? அல்லாஹ்வா ? இயேசுவா ? கிருஷ்ணனா ? சிவனா ? இல்லை எதிர்வீட்டுக் குப்புசாமியா ?

அப்பாவிகளைக் கொன்றுவிட்டால் மூன்றாம் நாளில் உயிர்த்தெழ அவர்கள் என்ன ஈஸா அலையா ?

பெயரில்லா சொன்னது…

பதிவுலகில் .. எனக்குத் தெரிந்து ஒரு 25 பேர் வரைக் கொண்ட ஒரு குழு இருக்கின்றது .. ஜால்ராக் குழு என நினைக்கின்றேன். அவர்களின் வேலை எல்லாம் .. புகழும் பதிவுகளுக்கு கும்பலாய் ப்ளஸ் ஓட்டுக் குத்துவது .. எதிர்க் கருத்துக்கள் கொண்ட பதிவுகளுக்கு கும்பலாய் மைனஸ் ஓட்டுக் குத்துவது.. என்ன ஜனநாயக மகத்துவ வழியினை பின்பற்றுகின்றார்கள்... !!!

Yaathoramani.blogspot.com சொன்னது…

எனினும் குற்றவாளிக்கு ஒரு வாய்ப்பாக உனக்கு உன் மத சட்டமா ,இல்லை மதம் மாறி(துறந்து) மனித உரிமை சட்டம் ஏற்கிறாயா என்றால் கடை காலியாகிவிடும். ஆகவே மதவாதிகளின் ஆலோசனையை உடனே அவர்களுக்கு (மட்டும்) அமல் படுத்த வேண்டும்.

ஆகவே மரண தண்டனை ஆதரவு மதவாதிகளை பின் பற்றுவோருக்கு‌
வழங்கலாம்//


தங்கள் பதிவின் கருத்து மிகச் சரியானதே
வண்ணக் கண்ணாடிகள் அணியாமல் படிப்போருக்கு
மட்டும் அது தெரியும்.தங்கள் பதிவுக்கு
பின்னூட்டமாக வந்துள்ள சார்வாகன் கருத்தும்
என்னை மிகவும் கவர்ந்தது
பூனைக்கு மணி கட்டியுள்ளீர்கள்
சப்தம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும்
என நினைக்கிறேன்
.

சிராஜ் சொன்னது…

அண்ணே..

என்னோட மற்றொரு பின்னூட்டத்தையும் வெளியிடுங்க.. இல்லாட்டி அத தனி பதிவா போடுவேன்...

சிராஜ் சொன்னது…

/* திருட்டு விசிடிக்கு கைவெட்டினால் தமிழ்நாட்டில் பர்மா பஜார்களில் பாதிபேருக்கு கையே இருக்காது சகோ */

நான் இஸ்லாம் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன்.. நீங்கள் முஸ்லிம்கள் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்...

ஹா..ஹா..ஹா.. சூப்பர் சகோ...

நல்ல புரிதல்... இஸ்லாமு பற்றி பேசுவமா????

கோவி.கண்ணன் சொன்னது…

//அண்ணே... இந்த கேலிலாம் இருக்கட்டும்..மொதல்ல நீங்க இஸ்லாமிய சட்டப்படி கொலைக்கு கல்லால் அடிச்சு கொல்லணும்னு சொன்னது தப்புன்னு ஒத்துகங்க.. அது தான் நேர்மையான் செயலா இருக்கும்...

கமான்.. சொல்லிடுங்க....//

உங்க மதத் தலைமை செயலகம் சவுதியிலும், தலிபான்களிடமும் கல்லால் அடித்து கொலை செய்யும் பழக்கம் இருக்கிறதா இல்லையா ? அதை ஏன் உங்களுக்கு ஒப்புக் கொள்ளும் மன நிலை வாய்க்கவில்லை ?

சிராஜ் சொன்னது…

வாங்க ரமணி...

/ பூனைக்கு மணி கட்டியுள்ளீர்கள்
சப்தம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும்
என நினைக்கிறேன் */

இன்னைக்கு இங்க சத்தம் அதிகமா இருக்கே?? அப்ப இது நேத்து யாரோ கட்டின மணியாலா??? டவுட்டு...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

கோவி.கண்ணன் சொன்னது…

//எல்லாம் .. புகழும் பதிவுகளுக்கு கும்பலாய் ப்ளஸ் ஓட்டுக் குத்துவது//

எல்லாப் புகழும் தனக்கு தானே கும்பலாய் புகழ்ந்து கொள்வதற்கே.
:)

சிராஜ் சொன்னது…

/* உங்க மதத் தலைமை செயலகம் சவுதியிலும், தலிபான்களிடமும் கல்லால் அடித்து கொலை செய்யும் பழக்கம் இருக்கிறதா இல்லையா ? அதை ஏன் உங்களுக்கு ஒப்புக் கொள்ளும் மன நிலை வாய்க்கவில்லை ? */

அண்ணே தாலிபான்... கோலிபான்..அல்கய்தா.. ஆஹாத கய்தா.. அவங்க பண்றத பத்தி எனக்கு எந்த அக்கரையும் இல்ல... அது அவங்க பிரச்சனை... நீங்க இஸ்லாம்ல இருக்குன்னு தானே சொன்னீங்க... இஸ்லாத்தில அப்படி இல்ல.. வாபஸ் வாங்குங்க.. அது தான் நேர்மை...

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவிகளைக் கொன்றுவிட்டால் மூன்றாம் நாளில் உயிர்த்தெழ அவர்கள் என்ன ஈஸா அலையா ?//

எனக்கு தெரிந்து கடல் அலைகள் தான் உயிர்த்து எழுகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்க இஸ்லாம்ல இருக்குன்னு தானே சொன்னீங்க... இஸ்லாத்தில அப்படி இல்ல.. வாபஸ் வாங்குங்க.. அது தான் நேர்மை...//

இஸ்லாத்தில் இல்லை என்றால் சவுதியில் நடப்பது இஸ்லாமிய விரோத ஆட்சியா ? சகோ சு.பி உள்ளிட்டவர் சவுதி மட்டும் தான் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் குறிப்பிடுவதெல்லாம் பொய்யா ? அதற்கு எனக்கு ஒப்புதல் வேண்டும், பிறகு நீங்கள் குறிப்பிடுவது பற்றி சிந்திக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் இஸ்லாம் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன்.. நீங்கள் முஸ்லிம்கள் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்...//

ஹஹ்ஹா.......அப்ப இஸ்லாமிய சட்டம் முஸ்லிம்களுக்கு இல்லையா ?

Chandru சொன்னது…

சிறைச்சாலைகள் குற்றவாளிகளை திருத்த முடியாத போது மரண தண்டனை அவசியமாகுகிறது. திருத்தாவிட்டாலும் பரவாயில்லை அவனைக் கெடுக்காத சிறையும் உலகில் உண்டோ? சிறைக் கூடங்களை மனநல மருத்துவக் கூடங்களாக மாற்றுங்கள்,(முடியுமா?) பின்னர் யோசிக்கலாம். இன்னும் தமிழ் நாட்டில் ஒரு கொலைக்கு பழிக்கு பழியாக அதுவும் கும்பல்களால் பரம்பரை பரம்பரையாக தொடர்
கொலைகள் நிகழ்ந்து கொண்டிருப்பது கண்கூடு.தலைமுறை தலைமுறையாக திட்டமிட்டு நடைபெறும் வன்முறையை பயமும் பாதிப்பும் தான் நிறுத்தமுடியும். அதுதான் மிருகமாக இருந்தவனை மனிதனாக மாற்றியிருக்கிறது. தண்டனைகள் இல்லாத சமூகம் என்பது மிருகங்கள் வாழும் இடமாகிவிடும். அடிக்கடி உணர்ச்சி வயப்படுபவர்களை என்ன செய்யலாம்.சட்டத்தின் ஒட்டைகளை அடைத்துவிட்டால் நிராபராதிகளை பற்றி கவலைப் பட வேண்டியதில்லை.உயிரோடு இருந்தால் போதும் அடுத்து செய்வதை திட்டமிடுவோம் என்பவனிடம் கல்லுடைக்க சுத்தியலைக் கொடுத்தால் கல்லை மட்டும் உடைக்கமாட்டான். கலவரத்தை அடக்க துப்பாக்கி சூடு இன்னும் அவசியமாகிறது என்பதை உணர்ந்தால் உண்மை விளங்கும். கையில் நன்னெறி நூல்களுடன் காவலரை அனுப்பலாமா?

கோவி.கண்ணன் சொன்னது…

//சொல்ல மறந்திட்டேன்.. உங்க கருத்து பிடிக்கல.. அதற்காக முதல் மைனஸ் வோட்ட நான் போட்டு இருக்கேன்..//

உங்க 'சொல்ல மறந்தக் கதை' வாக்கு அரசியலில் எனக்கு நாட்டமில்லை, என் பதிவுகளுக்கு நானே ஓட்டு போட்டதில்லை

G u l a m சொன்னது…

அன்பு சகோ கோவி கண்ணன்.

ஒரு சகோ கொடுத்த லிங்க் மூலமாக இங்கே வந்தேன். பதிவை படித்ததும் கருத்து சொல்ல எத்தனித்தேன் அதற்கு முன் ஏனைய பின்னூட்டங்களை பார்வையிடலாமே என நினைத்தேன். oops.... செம காமெடியா இருக்கு எனக்கு கமெண்ட் பண்ற இன்ரஸ்ட்டே போச்சி கோவி அண்ணன்.
நான் பலமுறை பலரிடம் சொல்வது ஒன்றுதான் விமர்சிக்கும் ஏதுவாகிலும் அதன் மூலத்தை உணர்ந்தே விமர்சிக்கப்படல் வேண்டும். முதல் பத்தியிலே தெளிவற்ற புரிதல். இஸ்லாத்திற்கு எதிராக ஏதாவது சொல்ல வேண்டும் என்ற கோணத்தில் அணுகி இருக்கிறீர்கள்.

சரி ஒரு வாதத்திற்காக கேட்கிறேன். கோபித்துக்கொள்ள வேண்டாம். உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரை எந்த கேடுகெட்டவனோ கொலை செய்து விடுகிறான் என வைத்துக்கொள்வோம் - என்ன செய்வீங்க அண்ணே அந்த பயலே.,


உங்கள் சகோதரன்
குலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//சரி ஒரு வாதத்திற்காக கேட்கிறேன். கோபித்துக்கொள்ள வேண்டாம். உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரை எந்த கேடுகெட்டவனோ கொலை செய்து விடுகிறான் என வைத்துக்கொள்வோம் - என்ன செய்வீங்க அண்ணே அந்த பயலே., //

எனக்கு என்றைக்குமே ஒப்புதல் இருக்காது, நானே பாதிக்கப்பட்டாலும் கூட.

//இஸ்லாத்திற்கு எதிராக ஏதாவது சொல்ல வேண்டும் என்ற கோணத்தில் அணுகி இருக்கிறீர்கள்.//

வாங்க சார், சகோ சிராஜ் போல் இஸ்லாமும் இஸ்லாமியர்களும் வேற வேற என்ற புரிதலில் இருக்கிறீர்களோ.

திருட்டு விசிடி மேட்டருக்கு அவர் சொல்லிய பதிலைப் பார்க்கவும்.

//செம காமெடியா இருக்கு எனக்கு கமெண்ட் பண்ற இன்ரஸ்ட்டே போச்சி கோவி அண்ணன்.//

நீங்களெல்லாம் நிரந்தர சொர்கத்திற்கு டிக்கெட் விற்கும் கொடுமையைவிடவா ? ஆவ்வ்

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்களெல்லாம் நிரந்தர சொர்கத்திற்கு டிக்கெட் விற்கும் கொடுமையைவிடவா ? ஆவ்வ் //

நீங்களெல்லாம் நிரந்தர சொர்கத்திற் ப்ளாக்கில் / ப்ளாக்குல (Block / Blog) டிக்கெட் விற்கும் கொடுமையைவிடவா என்றும் படிக்கலாம்.

:)

ராசின் சொன்னது…

//கொலை செய்தால், கொன்றவனைக் கொல் என்கின்றார்கள் அப்படியானால் கொலை செய்தவனைக் கொன்றவனைக் கொல்லலாமா ? !!!நம் கருத்தும் !!!

suvanappiriyan சொன்னது…

//சகோ சு.பி உள்ளிட்டவர் சவுதி மட்டும் தான் இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் குறிப்பிடுவதெல்லாம் பொய்யா ? அதற்கு எனக்கு ஒப்புதல் வேண்டும், பிறகு நீங்கள் குறிப்பிடுவது பற்றி சிந்திக்கிறேன்.//

நான் சொல்லாததை சொன்னதாக சொன்னால் நித்தியானந்தாவிடம் புகார் அளிப்பேன். ஆமாம் சொல்லிப்புட்டேன்....:-)

kamalakkannan சொன்னது…

ரத்த பூமியா இருக்கு இந்த விளையாட்டுக்கு நான் வரல

சிராஜ் சொன்னது…

சகோ இக்பால் செல்வன்...

/* பதிவுலகில் .. எனக்குத் தெரிந்து ஒரு 25 பேர் வரைக் கொண்ட ஒரு குழு இருக்கின்றது .. ஜால்ராக் குழு என நினைக்கின்றேன். அவர்களின் வேலை எல்லாம் .. புகழும் பதிவுகளுக்கு கும்பலாய் ப்ளஸ் ஓட்டுக் குத்துவது .. எதிர்க் கருத்துக்கள் கொண்ட பதிவுகளுக்கு கும்பலாய் மைனஸ் ஓட்டுக் குத்துவது.. என்ன ஜனநாயக மகத்துவ வழியினை பின்பற்றுகின்றார்கள்... !!! */

ஹா..ஹா..ஹா.. என்னால சிரிக்க முடியல.. நிஜமாவே ROFL..... லேட்டு கேள்வி பட்டு இருக்கேன்.. நீங்க ரொம்ப tooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo லேட் அண்ணன்..

ஏன் நான் சிரிக்கிறேன்னு சகோ கோவி கண்ணன்கிட்ட மெயில்ல கேட்டுகங்க....

சிராஜ் சொன்னது…

/* கொலை செய்தால், கொன்றவனைக் கொல் என்கின்றார்கள் அப்படியானால் கொலை செய்தவனைக் கொன்றவனைக் கொல்லலாமா ? !!! */

இக்பால் அண்ணன்..

நான் உங்கல என்னமோ நினைச்சேன்..இவ்வள்வு தானா நீங்கள்????? ஆமாம்.. தூக்கு போட்டவன தூக்குல போடலாம்.. அந்த தீர்ப்பு சொன்னவன தூக்குல போடலாம்.. அதுக்காக வாதிட்ட வக்கீல தூக்குல போடலாம்... அதுக்கு சாட்சி சொன்னவன தூக்குல போடலாம்... அந்த நீதிபதி வந்த கார ஓட்டிகிட்டு வந்தவன தூக்குல போடலாம்... அந்த கேஸ விசாரிச்ச போலீஸ் எல்லாரையும் தூக்குல போடலாம்... அந்த கொலை நடக்க காரணமான சமூகத்த(உங்க வாதப்படி) எல்லாரையும் தூக்குல போட்றலாம்... ஒருத்தனுக்கு மரண தண்டனை கொடுத்துட்டு, அதற்கு பிறகு இந்த உலகத்தில இருக்கிற எல்லாருக்கும் மரண தண்டனை கொடுத்திடலாம்.

சிராஜ் சொன்னது…

கோவி அண்ணன்..

/* எனக்கு என்றைக்குமே ஒப்புதல் இருக்காது, நானே பாதிக்கப்பட்டாலும் கூட.
*/

ஹா..ஹா..ஹா.. ரொம்ப கஷ்டப்பட்றீங்கண்ணே... எனக்கே உங்கள பார்க்க பரிதாபமா இருக்கு...

இங்க சொன்னத உங்க சொந்த காரங்ககிட்ட சொல்லிடாதீங்க.. அனாவசியமா இன்னொரு கொலை கேஸ் ஆயிடும்...

ஒரு பட சீன் நியாபகம் வருது. சத்தியராஜ் மற்றும் நாசர்.. சத்தி போலிஸா இருப்பார்... நாசர் கேமராவ காணோம்னு புகார் தருவார்.. திருடன பிடிச்சு சத்தியராஜ் அன்பா விசாரிப்பார்.. அவன் சொல்ல மாட்டான்.. நாசர் மனித உரிமை பேசுவாரு.. பட் தனக்குன்னு வந்ததும் அடிக்க ஒத்துக்குவார்..

ஹா...ஹா..ஹா... இப்ப நீங்க நாசர் மாதிரினே.... சினிமா டயலாக் சொல்றேன்னு காமெடி பன்ணிடாதீங்க.. .. ஏனோ இது நியாபகத்துக்கு வந்துச்சு...

சிராஜ் சொன்னது…

கோவி அண்ணன்...

/*//அப்பாவிகளைக் கொன்றுவிட்டால் மூன்றாம் நாளில் உயிர்த்தெழ அவர்கள் என்ன ஈஸா அலையா ?//

எனக்கு தெரிந்து கடல் அலைகள் தான் உயிர்த்து எழுகிறது. */

முடியல... நெஜமாவே முடியல..
நான் ஒன்னு சொன்னா கேட்பீங்கலா.. நிஜமாவே உங்க நன்மைக்கு தான் சொல்றேன்.. நம்புங்க... நான் கருத்து ரீதியா உங்க எதிரி தான்.. ஆனா நிஜ வாழ்கைல நயவஞ்சகன் கிடையாது...

இஸ்லாம் பத்தி இன்னும் கொஞ்சம் டீப்பா ஆராய்ச்சி பண்ணுங்க.. நீங்க முஸ்லிம்களின் செயல்களை பார்த்து இஸ்லாத்தை எடை போட்டு இருக்கீங்க... இது நல்லா புரியுது.. இதுல எனக்கு எந்த டவுட்டும் இல்ல...

எங்கள கிண்டல் பன்றோம்னு நினைச்சு கிருத்தவர்கள கிண்டல் பண்ணி இருக்கீங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. யாரங்கே கூப்பிடுங்கள் அந்த ராபினை..அவர் வந்து இதற்கு பதில் சொல்லட்டும்....

அண்ணே.. இஸ்லாமிய நம்பிக்கைப்படி ஈசா அலை அவர்கள் மூன்றாம் நாள் உயிர்த்து எழவில்லை...

ஹா...ஹா.. ஹா.. செக் பண்ணிக்கங்க...

naren சொன்னது…

மரண தண்டனை வேண்டாம் என்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, தண்டனை பெறுபவர், அவர்தான் குற்றம் செய்தவர் என்பதை 100% நிரூபனம் செய்ய, விசாரணை செய்து தீர்ப்பு முறை உலகத்தில் இதுவரை இல்லை.

ஆகையால், மரண தண்டனை கடவுளால் தரப்பட்டதுதான், அது சரிதான், என்பவர்கள், குற்றவாளிதான் குற்றம் செய்தவர் என்பதை 100% நிரூபனம் செய்யும், விசாரணை செய்து தீர்ப்பு முறை இருக்கின்றது என்பதை காட்ட வேண்டிய கடமை அவர்களிடம் இருக்கிறது.

khaleel சொன்னது…

பர்மா பஜார் சீடி கடைகள் வருத படவேண்டிய விஷயம் தான். வாய் கிழிய மத்தவங்களுக்கு உபதேசம பண்ணிட்டு திருட்டு விசிடியும் ப்ளூ பிலிம் சீடியும் விக்கறதும் ஒரு பிழைப்பா.
மக்களை திருத்த வந்திருகொம்பானு காலர தூக்கி விட்டுட்டு போற தவ்ஹீது குரூப் தான் அங்க நெறைய கடை வச்சி இருகாங்கரங்கன்றது அவர்களே வெட்கப்பட வேண்டிய விஷயம். என்ன சொல்றது. இதுக்கும் ஒரு சாக்கு வச்சிருப்பாங்க. பிஜெ போன்றவர்கள் அவங்க கிட்ட இருந்து ஆரம்பிக்கலாம் பிரசாரத்தை.

பெயரில்லா சொன்னது…

.... அவர்தான் குற்றம் செய்தவர் என்பதை 100% நிரூபனம் செய்ய, விசாரணை செய்து தீர்ப்பு முறை உலகத்தில் இதுவரை இல்லை. ....

இதைத் தான் நானும் சொல்ல முற்பட்டேன் ... இவன் தான் குற்றவாளி என்பதை 100 சதவீதம் நிரூபிக்க முடியாது .. ஒருவேளை அப்பாவி ஒருவனை கொன்றுவிட்டால் பின்னர் அவன் அப்பாவி அல்ல என தெரிய வந்தால் இந்த சட்டம் அல்லது மதம் செத்தவனை உயிர்ப்பிக்குமா இது தான் எனது வாதமும் ..

பெயரில்லா சொன்னது…

@ சிராஜ் - ஈசா அல்லது இயேசு பற்றிக் கூறி இருந்தேன் ஒரு உவமைக்கு தான் கூறினேன்.. யூதர்கள் இயேசு கடவுள் இல்லை, தூதரும் இல்லை என்பதும் தெரியும் .. கிருத்தவர்கள் இயேசு தூதர் அல்ல கடவுள் என்பதும் தெரியும் .. முஸ்லிம்கள் இயேசு கடவுள் அல்ல தூதர் என்பதும் தெரியும் .. இன்னும் அஹமதியாக்கள், பகாய்கள் கூறுவதும் தெரியும் ..

அது மட்டுமல்ல இயேசு கன்னித் தாய்க்கு பிறந்தார் .. ஆனால் முகமது புணர்ச்சியால் பிறந்தார் என்பதும் தெரியும் ... இயேசு நித்திய ஜீவனாய் வானில் பறந்து சென்றார் ஆனால் தூதர்களிலேயே பெஸ்ட் தூதரான முகமது மண்ணில் மக்கி போனார் என்பதும் தெரியும் ...

இது எல்லாம் பேச ஆரம்பித்தால் சில பேர் மத்தியக் கிழக்கில் என்னோட வலைப்பதிவை தடை செய்வார்கள் என்றும் தெரியும் , சில பேர் ஹாக் செய்வார்கள் என்றும் தெரியும் ....

பெயரில்லா சொன்னது…

என்னைப் பொறுத்தவரை எவ்வளவு பெரிய குற்றவாளியாகவே இருந்தாலும் சரி !!! மனித உயிரை மனிதன் எடுப்பது குற்றமே !!!

வேண்டும் எனில் சாகும் வரை சிறையில் அடையுங்கள், ஆள் இல்லாத தீவுக்கு நாடு கடத்துக்குங்கள், ஆனால் ஒன்றை நியாயப்படுத்தி அதே போல இன்னொரு தவறை நாமே செய்வது முற்போக்கு சிந்தனையாக அமையாது ... !!!

மரண தண்டனைக் குறித்து ஒவ்வொருவருக்கும் அவரவர் மதம் சார்ந்த சிந்தனை அழுத்தங்கள் இருக்கின்றன .. கிருத்தவர்கள், இஸ்லாமியர், இந்துக்கள், பௌத்தர்கள் என இது விரியும் ...

சற்றே இருப் பக்கமும் நிறுத்தி நிதானித்து சிந்தித்தோமானால் ஒரு முடிவுக்கு வரலாம் !!!

சிராஜ் சொன்னது…

/அப்ப இஸ்லாமிய சட்டம் முஸ்லிம்களுக்கு இல்லையா ? */

நோ.. அ பிக் நோ.. அனைவருக்குமானது... தனது அரசின் கீழ் இருக்கும் முஸ்லிம் அல்லாதவரை காப்பது இஸ்லாமிய ஆட்சியாளரின் கட்டாயக் கடமை...

நீதி செலுத்துங்கள் அது உங்களுக்கோ, உங்கள் பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியேனு பொதுவா தான் பேசுது இஸ்லாம்...

அண்டை வீட்டார் பசித்திருக்க நீங்கள் உணவு உண்ணாதீர்கள்னு பொதுவாதான் சொல்லுது இஸ்லாம்.. அண்டை வீட்டு முஸ்லிம் பசித்திருக்கன்னு சொல்லல...

இறுதியாக...

முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுவதில்லை.. இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுபவர்களே முஸ்லிம்.. மற்றவர்கள்???? முஸ்லிம் பெயர் தாங்கிகள்.... அது எத்தனை கோடி பேர் இருந்தாலும் சரியே...

இரண்டுக்கும் பாரிய வேறுபாடு உண்டு...

sultangulam@blogspot.com சொன்னது…

ஒரு நாட்டில் ஒரு சாராருக்கு மட்டும் தண்டணைகளில் பாரபட்சம் காட்டக்கூடாது. நடைமுறையில் அப்படித்தான் உள்ளது என்று நான் எழுதியதை நீங்கள் புரிந்து கொண்ட விதம் மிக அருமை.

அநியாயமாக கொல்லப்பட்ட நிரபாராதிகளுக்காக பழி தீர்க்கப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை என்பதையும் கூடவே குறிப்பிட்டிருந்தேன். அது பாட்சாவாக இருந்தாலும் மதானியாக இருந்தாலும்.

குற்றவியல் தண்டணைகளில் முஸ்லீம்களுக்கு மட்டும் மரண தண்டணையை அமுல்படுத்தவோம் என்று ஆர்எஸ்எஸ் நீண்ட நாட்களாக சொல்லி வருகிறது. நீங்கள் இப்போதுதான்..................

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரு நாட்டில் ஒரு சாராருக்கு மட்டும் தண்டணைகளில் பாரபட்சம் காட்டக்கூடாது. நடைமுறையில் அப்படித்தான் உள்ளது என்று நான் எழுதியதை நீங்கள் புரிந்து கொண்ட விதம் மிக அருமை.

குற்றவியல் தண்டணைகளில் முஸ்லீம்களுக்கு மட்டும் மரண தண்டணையை அமுல்படுத்தவோம் என்று ஆர்எஸ்எஸ் நீண்ட நாட்களாக சொல்லி வருகிறது. நீங்கள் இப்போதுதான்.................
//

இஸ்லாமிய வாழ்க்கை முறை வாழ்ந்து இஸ்லாமிய நிரந்தர சொர்க்கம் செல்கிறவர்களும், மற்றவர்களும் ஒன்றா ? :)
இஸ்லாமியர்கள் இஸ்லாமிய தண்டனையை ஏற்றுக் கொண்டால் தானே சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும், மற்றவர்களுக்கு இஸ்லாமிய சொர்க்கம் இல்லை என்னும் போது, மற்றவர்களுக்கான மண்ணுல தண்டனைகள் அதன் தீர்ப்புகள் குறித்து ஒரு இஸ்லாமியர் கவலை கொள்ளலாமா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//முஸ்லிம்கள் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுவதில்லை.. இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுபவர்களே முஸ்லிம்.. மற்றவர்கள்???? முஸ்லிம் பெயர் தாங்கிகள்.... அது எத்தனை கோடி பேர் இருந்தாலும் சரியே...

இரண்டுக்கும் பாரிய வேறுபாடு உண்டு...//

ஒரு சட்டம் இருந்து அந்தச் சட்டம் நடைமுறையில் பின்பற்ற சாத்தியம் இல்லாத போது சட்டம் யாருக்காக ? தினந்தோறும் ஒரு திருக்குறள் என்பது போல் மனனம் செய்வதற்கா ?

இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் எத்தனை விழுக்காடு என்று ஏதேனும் கணக்கு வழக்குகள் இருக்கிறதா ? அதை வைத்துக் கொண்டு பேசினால், இம்புட்டு பேரு நல்லவங்களாக பின்பற்றுகிறார்களே என்று நாங்க நினைப்போம் இல்லே ?

கோவி.கண்ணன் சொன்னது…

// khaleel கூறியது...
பர்மா பஜார் சீடி கடைகள் வருத படவேண்டிய விஷயம் தான். வாய் கிழிய மத்தவங்களுக்கு உபதேசம பண்ணிட்டு திருட்டு விசிடியும் ப்ளூ பிலிம் சீடியும் விக்கறதும் ஒரு பிழைப்பா.
மக்களை திருத்த வந்திருகொம்பானு காலர தூக்கி விட்டுட்டு போற தவ்ஹீது குரூப் தான் அங்க நெறைய கடை வச்சி இருகாங்கரங்கன்றது அவர்களே வெட்கப்பட வேண்டிய விஷயம். என்ன சொல்றது. இதுக்கும் ஒரு சாக்கு வச்சிருப்பாங்க. பிஜெ போன்றவர்கள் அவங்க கிட்ட இருந்து ஆரம்பிக்கலாம் பிரசாரத்தை.//

உங்களுக்கெல்லாம் தவ்ஹீது குழுவினர் பதில் சொல்லமாட்டார்கள், நீங்கள் முஸ்லிம் பெயர் தாங்கி என்று விமர்சனம் செய்வார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//எங்கள கிண்டல் பன்றோம்னு நினைச்சு கிருத்தவர்கள கிண்டல் பண்ணி இருக்கீங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. யாரங்கே கூப்பிடுங்கள் அந்த ராபினை..அவர் வந்து இதற்கு பதில் சொல்லட்டும்....//

கிறிஸ்துவர்கள் கடவுளாக மதித்துப் போற்றும் ஏசுவை நீங்கள் வெறும் இறைத்தூதர் தான் மற்றும் முகமது போன்ற அழகிய முன்மாதிரி இல்லை என்று பலமுறை நோகடித்துள்ளீர்கள், நீங்க கத்தினாலும் கதறினாலும், சொல்லிச் சீண்டினாலும் ஒரு கிறித்துவர் கூட உங்கள் குழுவிற்கு ஆதரவாக வரமாட்டார்.

sultangulam@blogspot.com சொன்னது…

உங்களுக்கு புரியவில்லையா? விதண்டவாதமா?

ஒரு தகராறில் இரண்டு தரப்புமே முஸ்லீம்களாக இருந்தால், இஸ்லாமிய தண்டணையை வரவேற்போம்.

இரு சாராருமே முஸ்லீம்களாக வருவதால் சிவில் சட்டங்களில் ஏற்றுக் கொள்ள இயலும்.

இந்திய குற்றவியல் நடைமுறையில் நீங்கள் சொல்வது போல் செய்வது சாத்தியமாகுமா? குழப்பங்கள் வருமா? உங்கள் சிந்தனைக்கே !!

இல்லையென்றால் யாராவது அது பற்றி தெரிந்தவர்களிடம் வினவுங்கள் :(

கோவி.கண்ணன் சொன்னது…

//mohamed sultan கூறியது...
உங்களுக்கு புரியவில்லையா? விதண்டவாதமா?

ஒரு தகராறில் இரண்டு தரப்புமே முஸ்லீம்களாக இருந்தால், இஸ்லாமிய தண்டணையை வரவேற்போம்.

இரு சாராருமே முஸ்லீம்களாக வருவதால் சிவில் சட்டங்களில் ஏற்றுக் கொள்ள இயலும்.//

முதலில் இஸ்லாமிய சட்டங்களை ஏற்றுக் கொள்ளுதல் என்பதன் உரிமை முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதா ? அதற்கெல்லாம் யாரும் கவலைப்படுவார்களா ? மனித உரிமை பற்றி யோசிப்பார்களா ? என்று தெரியாத நிலையில் நீங்கள் குறிப்பிடும் ஏற்றுக் கொள்வோம் என்பதன் பொருள் எனக்கு விளங்கவில்லை, இஸ்லாமிய சட்டங்கள் இஸ்லாமியர்கள் மீது நடைமுறைப் படுத்தப்படும் என்பது தானே உண்மை இதில் யாருடைய ஒப்பமும், ஆலோசனைகளும், ஏற்றுக் கொள்ளுதலும் குறித்தவை எந்த புரிதலில் வருகிறது, சரி அது எனக்கு தேவையற்ற தான்,


ஆனால் இஸ்லாமிய நாடுகளாக இருக்கும் இந்தேனேசியா, புருனே மற்றும் மலேசியாவில் இஸ்லாமிய அடிப்படைச் சட்டப்படி எங்களுக்கு திருட்டு குற்றத்திற்கு கை வெட்டுதல் தண்டனையாக கொடுக்கப்பட வேண்டும் என்று எந்த ஒரு அமைப்பும் அங்கு கேட்டது போல் தெரியவில்லை, அங்கு பிரச்சனைகளில் ஈடுபடுபவர்கள் அவர்களுக்குள் இஸ்லாமியர்கள் தானே ? அவர்கள் ஏன் இவை காலத்திற்கும் மனித உரிமைகளுக்கும் ஒவ்வாதது என்று விட்டுவிட்டனர் ? அவர்களெல்லாம் உங்கள் அகராதியில் இஸ்லாமை பின்பற்றும் முஸ்லிம்கள் இல்லையா ?

sultangulam@blogspot.com சொன்னது…

ஐயா கோவி. நீங்கள் இந்தியாவில் தண்டணைச்சட்டம் பற்றி பேசியதற்கு என் பதில்தான் நான் கூறியவை.

இஸ்லாமிய சட்டங்கள் மாற்றத்தக்கவையல்ல. பன்னாட்டு வற்புறுத்தல்கள், அடிப்படைவாத அரசாக முத்திரை குத்தப்படும் நிர்வாகச் சிக்கல்கள் போன்ற பல காரணங்களுக்காக அந்நாட்டில் சட்டங்கள் அமல் செய்யப்படுவதில்லை. ஆனால் அங்கிருக்கும் முஸ்லீமும் தான் இஸ்லாமிய சட்ட அடிப்படைகளை பின்பற்றுவதையே விரும்புவான்.

இறைவன் யாருக்கு நாடவில்லையோ அவர்களுக்கு எத்தனை விவரம் தந்தாலும் புதுக் கேள்விகள்தான் வரும். ||

naren சொன்னது…

http://www.poyyantj.net/2012/07/blog-post.html

இதை படித்தால் உங்களுக்கு ஓரளவு விளங்கும்.-:)

கோவி.கண்ணன் சொன்னது…

//இஸ்லாமிய சட்டங்கள் மாற்றத்தக்கவையல்ல. பன்னாட்டு வற்புறுத்தல்கள், அடிப்படைவாத அரசாக முத்திரை குத்தப்படும் நிர்வாகச் சிக்கல்கள் போன்ற பல காரணங்களுக்காக அந்நாட்டில் சட்டங்கள் அமல் செய்யப்படுவதில்லை. ஆனால் அங்கிருக்கும் முஸ்லீமும் தான் இஸ்லாமிய சட்ட அடிப்படைகளை பின்பற்றுவதையே விரும்புவான்.//

அடிப்படைவாதம் என்கிற விமர்சனங்களை கருத்தில் கொண்டு(ம்) மதப் பிரச்சாரங்கள் செய்வதை யாரும் குறைத்துவிடவில்லை, என்னும் போது பன்னாட்டு வற்புறுத்தல் விமர்சனங்கள், குரான் சொல்லும் படி வாழ்வோம் என்று சொல்லும் இஸ்லாமிய அரசுகளை எந்தவிதத்தில் கட்டுப்படுத்துகிறது என்பது தெரியவில்லை, அது எங்களின் வாழ்வுரிமை, எங்களது நம்பிக்கை என்று செயல்படும் சவுதி அரசிடமான தொடர்ப்புகளை எந்த நாடும் குறைத்துக் கொண்டதாகவும் தெரியவில்லை. விமர்சனத்திற்கு பயந்து கடைமையைச் செய்யாமல் இருப்பவன் இஸ்லாமியன் அல்ல என்பதை நீங்களே கூடச் சொல்லக் கூடும் :)

//குற்றவியல் தண்டணைகளில் முஸ்லீம்களுக்கு மட்டும் மரண தண்டணையை அமுல்படுத்தவோம் என்று ஆர்எஸ்எஸ் நீண்ட நாட்களாக சொல்லி வருகிறது. நீங்கள் இப்போதுதான்..................//

இதில் ஆர் எஸ் எஸ்ஸோ மற்றவர்களோ எந்த நோக்கத்தில் சொல்கிறார்கள் என்றாலும் அவர்கள் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய சட்டபடி நடப்பதை முன்மொழிகிறார்கள் என்பதே பொருள், இஸ்லாமிய சட்டங்கள் காட்டுமிராண்டித் தனமானது அல்ல என்றும் அவற்றை எல்லா நாடுகளும், எல்லா மதங்களும் கூட நடைமுறைப் படுத்திக் கொள்ளலாம் என்கிற பிரச்சார தொனிகள் இதற்கு முரண்பாடுகளாக அவ்வாறான பிறமதத்தவர்களின் இஸ்லாம் சட்டம் குறித்த நடைமுறை பரிந்துரைகளை ஏற்பது இல்லை, தவிர எதோ வெறுப்பால் சொல்வது போலவும் எதிர்கருத்துகள் வருவது வியப்பாக இருக்கிறது, நாமெல்லாம் சொந்தமத்திலிருந்து பிற மதத்திற்கு மாறுவது கண்டிக்கப்படக் கூடியதென்றும், பிற மததிலிருந்து வருவர்களை கட்டி அணைத்து சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் முரண்பாடான கொள்கை வைத்திருப்போம், ஆனா விவாதம் என்று வந்தால் மதச் சார்பாகத் தான் பேசுவோம் என்ற முடிவில் இருப்பவர்கள் பொதுவிவாதம் செய்வதனால் எந்த ஒரு கருத்தையும் மாற்றிவிடாது என்பதையாவது உணர்வார்கள் என்றே நம்புகிறேன்.

//இறைவன் யாருக்கு நாடவில்லையோ அவர்களுக்கு எத்தனை விவரம் தந்தாலும் புதுக் கேள்விகள்தான் வரும். ||
//

நாடியவர்கள் தீவிரவாதிகளாகவும் தற்கொலை தாக்குதலாகவும் மாறி இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரிந்தால், இறைவன் நாடாத எங்களுக்கு விளங்காதது குறித்து நீங்கள் கவலை கொள்ளத்தேவை இருக்காது. அவர்களை இறைவன் நன்றாகவே நாடினான், ஆனால் அவர்கள் தான் இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது எங்களுக்கான பதிலாககோ, தேற்றிக் கொள்ளவோ நீங்கள் சொல்லிக் கொள்ளலாம் :) ஆனால் நான் இங்கு குறிப்பிடுவது உண்மை தானே.


நீங்கள் எப்படி இறை நாடாததால் எங்களுக்கு விளக்கம் ஏறாது என்று நம்புகிறீர்களோ, அதைப் போலவே சலவை செய்யப்பட்ட மதப் பற்று மூளைகளுக்கும் எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்காது என்பதை நானும் நம்புகிறேன்,

குறிப்பிட்டஎந்த பின்னூட்ட விவாதம் உங்கள் கருத்தை ஒட்டி அன்றி, தனிப்பட்ட முறையில் அல்ல :)
இன்ஷா அல்லா

:)

சார்வாகன் சொன்னது…

1.இஸ்லாமில் கல்லறிதல் இல்லை.சகோ சிராஜ்
_____________
1329. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
தம் சமூகத்தில் விபச்சாரம் செய்த ஆண் பெண் இருவரை யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டபடி அவ்விருவரும் பள்ளிவாசலில் ஜனாசாத் தொழுகை தொழுமிடத்திற்கருகில் கொண்டு செல்லப்பட்டுக் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள்.
Volume :2 Book :23

2290. ஹம்ஸா அல் அஸ்லமி(ரலி) அறிவித்தார்
உமர்(ரலி) என்னை ஸகாத் வசூலிப்பவராக அனுப்பினார். (நான் சென்ற ஊரில்) ஒருவர் தம் மனைவியின் அடிமைப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தார். உடனே நான் அந்த மனிதருக்காக ஒரு பிணையாளைப் பிடித்து வைத்துக் கொண்டு உமர்(ரலி) அவர்களிடம் சென்றேன். உமர்(ரலி) அதற்கு முன்பே அவருக்கு, அவர் (மனைவியின் அடிமைப் பெண் தமக்கும் அடிமைப்பெண்தான் என்று கருதி) அறியாமையால் செய்த காரணத்தினால் (கல்லெறிந்து கொல்லாமல்) நூறு கசையடி கொடுத்திருந்தார்கள்.
இஸ்லாத்தைவிட்டு வெளியேறியவர்களைக் குறித்து ஜரீர், அஷ்அஸ் இருவரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் 'இஸ்லாத்தைவிட்டுச் சென்றவர்களை பாவமன்னிப்புக் கேட்கச் செய்யுங்கள். அவர்களுக்காகப் பிணையாட்களை ஏற்படுத்துங்கள் என்று கூறினர். அவ்வாறே அவர்கள் பாவமன்னிப்புக் கோரினர். உறவினர்கள் அவர்களுக்குப் பிணை நின்றனர்.
பிணையாளி இறந்துவிட்டால் அவர்மீது பொறுப்பில்லை (அவரின் வாரிசிடம் எதுவும் கேட்க முடியாது) என்று ஹம்மாது கூறுகிறார்.
பிணையாளி இறந்துவிட்டாலும் அவரின் பொறுப்பு நீங்கவில்லை என்று ஹகம் கூறுகிறார்.
Volume :2 Book :39

_______
இன்னும் குரானில் கல்லெறி வசனம் இருந்தது அந்த வசனம் எழுதிய ஓலையை ஆடு தின்றுவிட்டது என்னும் ஹதிதும் உண்டு.

ஆகவே கல்லெறிதல் இஸ்லாமின் படி சரிதான்.
******
சகோ முகமது சுல்தான்

ஒரு இஸ்லாமியருக்கும்,காஃபிர்கள்க்கும் பிரச்சினை என்றால் ஷரியா பயன்படுத்தக் கூடாது என்றால் நல்லது.இது காஃபிர் பெரும்பானமை நாடுகளில் மட்டுமல்ல இஸ்லாமிய நாடுகளிலும் நடைமுறைக்கு வர வேண்டும் என்றே காஃபிர்கள் கூறுகிறோம்.

ஆகவே காஃபிர்களை இஸ்லாமிய ஷாரியாவில் தண்டிப்பது தவறு.

நன்றி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்