பின்பற்றுபவர்கள்

17 ஜூலை, 2012

பழைய சோறு நல்லதா ?


காலை உணவு குறித்து இன்றைய இளைஞர்கள் இளைஞிகள் பெரிதாக நாட்டம் கொள்வதில்லை, காலையில் எதுவும் சாப்பிடாமல் இருப்பேன் என்பதை பலர் பெருமையாகச் சொல்கிறார்கள், காரணம் வறுமை இல்லை என்றாலும் காலை உணவைத் தவிர்ப்பது எதோ ஒரு புதிய உடற்பயிற்சி போன்று நம்பப்படுவதுட்ன் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் என்றும் நம்புகிறார்கள், உண்மையில் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு நீரிழிவு குறைபாடு வருவதற்கான வாய்ப்பு மிகுதி. இரவு உணவிற்கும் காலை உணவிற்குமான இடைவெளி ஏற்கனவே குறைந்தது 8 மணி நேரமாக இருக்கும் பொழுது, அதை தவிர்த்துவிடுவதால் அந்த இடைவெளி கூடுதலாகி 12 மணி நேரம் வரையிலும் கூட நீட்டிக்கப்படுகிறது, உடலில் உற்பத்தியாகும் இரத்ததிற்கேற்ற அளவில் தான் கணையம் வேலை செய்து இன்சுலினைச் சுரந்து இரத்தத்தில் உள்ள சர்கரையை எரிக்கிறது, காலை உணவு எடுத்த்துக் கொள்ளாததால் இரத்த உற்பத்திக் குறைந்த நிலையில் கணையம் இன்சுலினை உற்பத்தி செய்வதும் இயல்பாகவே குறைய, நாளடைவில் கணையத்தின் இன்சுலின் உற்பத்தித் திறனும் குறைந்துவிடும். இதனால்  இன்சுலின் சுரப்பதில் கட்டுப்பாடு ஏற்பட, வேளை விட்டு சாப்பிடும் போது உண்டாகும் உபரியான இரத்தத்தில்  உபரியாக உற்பத்தியான சர்க்கரையை எரிக்க முடியாமல் அவை இரத்ததில்யே தங்குவதைத் தான் நீரிழிவு குறைபாடு என்கிறார்கள், அதாவது இரத்தத்தில் உள்ள சர்க்கரை எரிக்கப்படாமல் இரத்ததுடன் கலந்து இருப்பதைத் தான் நீரிழிவு என்கிறது மருத்துவ்ச உலகம், இருந்துவிட்டுப் போகட்டுமே என்றுவிட முடியாது, ஏனெனில் இரத்தத்தில் சேரும் சர்க்கரை இரத்ததின் நீர்மத் தன்மையை கெட்டியாக்குவதுடன் இரத்த ஓட்டத்தையும் கட்டுப்படுத்துகிறது. 

இரத்த சர்க்கரை அளவு கூட உடலில் அனைத்து பாகங்களுக்குமான தேவையான இரத்த ஓட்டம் குறைய இயல்பாகவே உடல் பாகங்கள் சீர்கேடு அடைகின்றன, அதனால் தான் மற்ற நோய்களைவிட நீரிழிவு நோய் மனித வாழ்க்கையின் மிகப் பெரிய அரைகூவலாக இருக்கிறது. நீரிழிவு குறைபாடு இதனை நோய் என்று சொல்லமுடியாது) முற்றிலும் குணப்படுத்தப்படாவிட்டாலும் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும் என்பது தான் தற்காலிக மருத்துவத் தீர்வு, அதாவது இரத்தச் சர்க்கரையைக் கூட்டாத வண்ணம் உணவு பழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்வதுடன் தேவையான போது அதற்குறிய மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும், இதைத் தவிர்த்து மருத்துவ உலகம் நீரிழிவு குறித்து முழுமையான எந்த ஒரு தீர்வையும் இதுவரை கண்டிபிடிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை. மற்றொரு நிரந்தர தீர்வு மாற்று கணையம் பொறுத்துவது தான், ஆனாலும் உயிருடன் இருப்பவர்களிடம் இருந்து கணையம் பெறுவதற்கு வாய்ப்புகள் கிடையாது, கணையம் சிறுநீரகங்களைப் போல் இரண்டாக இல்லாமல் ஒன்றாக இருப்பதால் அதற்கான வாய்ப்புகளும் இல்லை, மூளைச் சாவு கண்டவர்களிடம் இருந்து கணையம் பெறப்பட்டாலும் அவை முற்றிலும் பழுதானவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொறுத்தப்படுவதால் பொதுவான நீரிழிவு குறைபாட்டினருக்கு மாற்று உறுப்பு சிகிச்சைகளுக்கான வாய்புகள் கிடையாது. மாற்றுக் கணையம் பொருந்துவதும் மிகக் கடினம், பிழைப்பதற்கான வாய்ப்புகளும் அரிது. இதனால் தான் நீரிழிவுக்கு  இரத்த சர்க்கரையைக் குறைக்கும் மருந்துகளும் உணவுக் கட்டுப்பாடும் தீர்வாக பரிந்துரைக்கப்படுகிறது. 

எனக்கெல்லாம் எந்த நோயும் அண்டாது என்று நம்புவர்களும் இருக்கிறார்கள்', இவையெல்லாம் நாற்பது வயதுவரையான நம்பிக்கையாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் நாற்பது வயதிற்குமேல் இப்படியான நம்பிக்கை ஒரு மூட நம்பிக்கை. ஆண்டுக்கு ஒருமுறையேனும் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, இதய துடிப்பு, சிறுநீர், கண்கள் ஆகியவற்றை சோதனை செய்து அனைத்து உறுப்புகளும் நல்ல முறையில் இயங்குகிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும், ஆண்டுக்கு ஒருமுறையான சோதனை நோய்களின் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுப்பிடிக்கப்படுவதால் அவற்றை குணப்படுத்திக் கொள்ள வாய்பாக அமையும் அலட்சியம் காட்டினால் 'நேற்று வரை நன்றாகத் தான் இருந்தார் என்று நாலு பேர் தன்னைப் பற்றிப் பேசும் போது கேட்க முடியாமல் போய்விடும், இதை பயமுறுத்தல் என்று எடுத்துக் கொள்ளாமல் பரித்துரை என்ற அளவில் பார்த்தால் தனக்கும் தனக்கும் பின்னால் இருக்கும் குடும்பத்தின் மீதான நன்மை கருதியவை என்று புரிந்து கொள்ளப்படும். சர்கரை நோய் 50 - 60 வயதிற்கு மேல் தான் வரும் என்ற நம்பிக்கையும் பலரிடம் உள்ளது, அதன் துவக்க காலம் 30 வயதில் கூட துவங்கி இருக்க இன்றைக்கு வாய்ப்புகள் இருப்பதால் 35 வயதில் நீரிழிவு குறைபாடுகள் வெகு சாதாரணமானவையாக உள்ளது. நீர்ழிவு நோய்களில்  இருவகைப் பிரிவில் ஒன்று (Type 2) பெற்றோர் வழியாக பரம்பரையாக வருவது என்பதால் காலை உணவு எடுத்துக் கொள்ளாதவர்களை அவை 30 வயதிலேயே பற்றிவிடுகிறது. தனக்கு நீரிழிவு இருக்கிறதா என்பதை உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து அறிந்து கொள்ளலாம், நீரிழிவினால் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் (Symptoms) குறித்து நூற்றுக் கணக்கான இணையத் தளங்கள் தகவல்களைத் தருகின்றன.


நீரிழிவு குறைபாட்டால் ஏற்படும் உடல் மாற்றங்களில் பொதுவானவை

1. சிறுநீர் பையில் தேவையான அழுத்தம் இல்லாவிட்டாலும் குளிர்ந்த நீரில் அல்லது பச்சைத் தண்ணீரில் காலோ கையோ படும் பொழுது  சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும் கழிவரை உள்ளிட்ட இடங்களில் எறும்புகளைப் பார்க்க முடியும், சிறுநீரில் இருக்கும் சர்கரையை நுகர எறும்புகள் சேறும்.

2. கணுக்காலிலும் அதற்கும் கீழேயும் கால் பகுதிகளின் தோல் உடல் தோலின் நிறத்தைவிட கருமையாக அல்லது கருமைத் திட்டுகள் காணப்படுதல் மற்றும் காலில் அடி விரல் உள்ளிட்ட சில பகுதிகளில் உணர்வுகள் குறைந்திருத்தல்

3. ஆண்குறியின் முன்தோலில் ஏற்படும் வெடிப்பு, இவை பாலியல் ரீதியான அல்லது அப்பகுதிகளில் காற்றோட்டம் குறைவானதாக  இருப்பதால் ஏற்படும் வியர்வையினால் உற்பத்தி ஆகும் பாக்டீரியா வகைச் சார்ந்த நோயாக இருக்கும் என்று நினைத்து களிம்புகளை தடவி குணப்படுத்திக் கொள்வர். இவை சர்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு அடிக்கடி ஏற்படும், காரணம் சிறுநீரில் சேர்ந்திருக்கும் சர்கரை பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து தோலின் கடினத் தன்மையைக் குறைக்க வெடிப்பு ஏற்படும். இவற்றைக் மருத்துகளின் மூலமாக குணப்படுத்திக் கொள்ளலாம் என்றாலும் மருந்துகளற்ற நிரந்தரத் தீர்வு 'முனைத் தோல் நீக்கம் (சுன்னத்)' இங்கே அடிக்கடி அந்த குறைபாடு கண்டவர்களுக்கான பரிந்துரை என்ற அளவில் சுன்னத் பரிந்துரை உள்ளது மற்றபடி நலமாக இருப்பவர்களுக்கு சுன்னத் செய்வது உறுப்பு சேதம், பல் சொத்தை ஆகமல் தடுக்க அதை எடுத்துவிடுவது தான் நல்லது என்பது போன்ற முட்டாள் தனமான பரிந்துரை.

4. எப்போதும் தாகம் எடுப்பது

5. வழக்கத்துக்கு மாறான சோர்வு மற்றும் உடல் எடை குறைவு

6. உடலில் பல பகுதிகளில் ஏற்படும் அரிப்பு, இரத்த ஓட்டக் குறைவினால் தோல் உலர்ந்து போவதால் ஏற்படும்

7. கண் பார்வை அவ்வபோது மங்குதல்

8. காலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுப்பது.

*********

பசுமாடு பற்றிய தலைப்பில் ஏன் தென்னை மரம் பற்றி எழுதி இருக்கிறீர்கள் ? என்று வாசிப்பவர்கள் நினைக்கக் கூடும், பழைய சோற்றில் மிகுந்த சத்துகள் இருப்பதாகவும் பழைய சோற்றை நாம்  புறக்கணித்ததால் தான் பல வித நோய்கள் நமக்கு ஏற்படுவதாகவும் சில பெரிசுகள் மற்றும் முற்போக்கு இளசுகளும் கருத்துகளைப் பரப்புகின்றனர், பழைய சோறு பாரம்பரிய உணவு என்பது தவிர்த்து மற்ற காலை உணவுகளை ஒப்பிட அதில் சத்துகள் எதுவும் பெரிதாக இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்களா ? என்று தெரியவில்லை, பழைய சோற்றில் நீர் சேர்த்து இரவு முழுவதும் வைத்திருப்பதால் சற்று ஈஸ்டுகள் சேர்ந்திருக்கும், தவிர்த்து பெரிய சத்துகள் எதுவும் கிடையாது, அதில் இருக்கும் ஈஸ்டுகள் மற்றும் சத்துகளின் அளவு இட்லி தோசையில் இருப்பதைவிடக் குறைவே, இட்லி மாவில் உளுந்து சேர்த்து அரைக்கபடுவதால் புரத சத்து கூடுதலாக இருக்கும், பழைய சோற்றில் அதுவும் கிடையாது, பொதுவாக அரிசி உணவில் கூடுதல் சர்க்கரை இருக்கும் என்பது பழைய சோற்றுக்கும் பொருந்தும். 

பழைய சோறு பாரம்பரிய உணவும் கிடையாது, தமிழர்களின் காலை உணவாக கம்பு, கேழ்வரகு, திணை மற்றும் சாமை ஆகியவையே இருந்தன,  மாவாக அரைத்து கூழாகவோ, களியாகவோ செய்து அவற்றில் அசைவம் / காய்கறி குழம்பைச் சேர்த்து உண்பது தான் வழக்கமாக இருந்தது, இத்தகைய உணவுகளில் போதிய அளவு புரதச் சத்து இருப்பதால் நாள் முழுவதுமான பகல் உழைப்பிற்கு தேவையான சத்துகள் கிடைத்துக் கொண்டிருக்கும், நெல் அரிசியை உணவ உட்கொள்ளும் வழக்கம் கடந்த 60 ஆண்டுகளில் பரவலாகியவை தான், மற்ற உணவு பொருள்களை விட விலை கூடுதல், சமைக்க / பரிமார / கலந்து சாப்பிட எளிது என்ற வகையில் வசதியானவர்கள் நெல் அரிசி உண்பது மேம்பட்ட நிலையின் உணவுச் சின்னம் அல்லது பழக்கமாகிப் போனதால் அரிசி உணவை உண்பது கவுரமாகக் கருதப்பட அவை பரவலாக்கம் ஆகி அரிசி உற்பத்தியும் பெருக, தற்போதைக்கு அரிசி உணவு விலை மற்ற உணவு பொருளைவிடக் குறைவாக இருக்கிறது என்பது தவிர்த்து அரிசி உணவில் எந்த ஒரு தனிச் சிறப்பும் இல்லை. மேலும் அரிசிக்கும் கோதுமைக்கும் சர்கரை அளவில் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதால் அரிசிக்கு மாற்றாக கோதுமை சப்பாத்தி, பூரி போன்றவை சர்கரை நோயைக் குறைக்கும் என்பதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை, ஆனாலும் கோதுமை பரிந்துரை என்பது செரிமான நேரத்தை நீட்டிக்கும் என்பதால் கோதுமை குறைந்த பட்சத் தீர்வு என்ற அடிப்படையில் தான் சொல்லப்படுகிறது ஆனால் மாற்றுத் தீர்வு இல்லை, அரிசிக்கு மாற்றாக கோதுமை என்றால் சர்கரை குறைபாடு கண்ட சர்தாஜி என்ன சாப்பிடுவான் ? என்றும் கேட்கிறார்கள் என்பதை கவனத்தில் வையுங்கள்.

பழைய சோற்றில் இருக்கும் நீராகாரம் குடிப்பதால் உடலில் குளிர்ச்சி கிடைக்கும் என்பது தவிர்த்து பழைய சோற்றில் சத்துகள் எதுவும் கிடையாது, பழைய சோற்றைத் தொடர்ந்து காலை வேலையில் சாப்பிடுவதால் பீர் குடிக்காமலேயே தொப்பையை வளர்க்கலாம், கிராமத்தினர் பழைய சோறு தின்றுவிட்டு தெம்பாக வேலை செய்யவில்லையா ? அவர்கள் செய்யும் கடுமையான உடல் உழைப்பினால் பழைய சோறு மட்டுமல்ல எந்த ஒரு உணவும் அவர்களின் உடலை பாதிக்காது. ஆனால் உடல் உழைப்பற்ற மற்றவர்களுக்கு அது பொருத்தமான உணவு அல்ல. பழைய சோற்றில் தனிச் சிறப்புகள் எதுவும் கிடையாது அதை உணவாக எடுத்துக் கொள்வதால் கூடுதல் பலன் எதுவும் கிடையாது. பொதுவாகவே அரிசி சார்ந்த நூடுல்ஸ் உள்ளிட்ட எந்த உணவிலும் சர்க்கரை அளவு கூடுதலாக இருக்கும் என்பதில் பழைய சோறும் சேர்த்தி தான்.  பழைய சோற்றைவிட பாசிப் பயிறு சேர்த்த கஞ்சி உடலுக்கு நல்லது. பாசிப் பயிற்றில் தேவையான புரதமும் இருக்கும். நான் பழைய சோற்றைப் பழிக்கவில்லை, ஆனால் அவற்றை பரிந்துரை செய்யும் அளவுக்கு அதில் தனிச் சிறப்புகள் இல்லை என்று மட்டுமே சொல்கிறேன்.

சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் எதைத் தான் சாப்பிடுவது ? எதையும் சாப்பிடலாம் ஆனால் ஒரே வேளையில் கட்டு கட்டுவோம் என்று உண்ணக் கூடாது, அளவோடு குறிப்பிட்ட இடைவெளியில் எந்த உணவையும் சாப்பிடலாம், இரத்த சர்க்கரை அளவை உடனடியாகக் கூட்டும்   படி எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது, இவ்வாறு உடனடி சர்கரை மாற்றங்கள் (Blood Glucose In-Balance) உடலின் இரத்த ஓட்டத் தன்மைகளிலும் அளவிலும் ஏற்றம் இரக்கம் காட்டுவதால் இயல்பாக செயல்படும் உடலுறுப்புகள் திணறும், பழுதடையும்.

இந்த இடுகையில் முதன்மையாக சொல்ல வந்தது காலை உணவை எந்த காரணத்தை முன்னிட்டும் தவிர்க்காதீர்கள், இருவரும் வேலை செய்யும் சூழலில் உணவு செய்வதற்கு அலுப்பாக இருந்தாலும் வாட்டிய இரண்டு துண்டு பிரட் அல்லது (கடையில் வாங்கிய) இரண்டு இட்லி, ஒரு தோசை, பாலில் ஊறவைத்த சோள சொதில்கள் (சீரியல்) ஆகியவற்றில் எதோ ஒன்றுடன் தேவையான நீர் சத்திற்காக ஒரு டம்ளர் பால் அல்லது தண்ணீர் பருகலாம்.

28 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்ல ஆய்வுக் கட்டுரை! அனைவரும் அறிய வேண்டிய செய்தி!
பகிர்வுக்கு நன்றி!

சா இராமாநுசம்

Unknown சொன்னது…

நல்ல ஆய்வுக் கட்டுரை! அனைவரும் அறிய வேண்டிய செய்தி!
பகிர்வுக்கு நன்றி!

சா இராமாநுசம்

வேகநரி சொன்னது…

நல்ல ஆரோக்கிய தகவல்.

saravana karthikeyan சொன்னது…

அப்படியே சர்க்கரை வியாதிக்காரர்கள் எந்தெந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும், எதையெல்லாம் தவிர்க்கவேண்டும் என்று எழுதியிருந்தால் நலம்...

நான் சொன்னது…

நல்லா சொல்றீங்க .....இது சரிதாங்கோவ்.......

நிகழ்காலத்தில்... சொன்னது…

காலை உணவை தவிர்க்க வேண்டாம் என்ற அறிவுரை நோயுற்றவர்களுக்கு பொருந்தலாம்.

காலை உணவை முழுமையாக ஒரு பதினைந்து நாள் தவிர்த்துப்பாருங்கள். அனுபவம் வேறயாக இருக்கும்.

என் அனுபவத்தில் மிகுந்த ஆரோக்கியமாக உணர்கிறேன். பரிசோதனைகளும் செய்ததில் எந்தக் குறைபாடும் இல்லை...

கோவி.கண்ணன் சொன்னது…

//காலை உணவை முழுமையாக ஒரு பதினைந்து நாள் தவிர்த்துப்பாருங்கள். அனுபவம் வேறயாக இருக்கும்.//

மருத்துவர்கள் கூறும் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவத்தைத் தான் பதிவில் எழுதி இருக்கிறேன். :)

//என் அனுபவத்தில் மிகுந்த ஆரோக்கியமாக உணர்கிறேன். பரிசோதனைகளும் செய்ததில் எந்தக் குறைபாடும் இல்லை.//

இல்லாதவரைக்கும் பிரச்சனைகள் இல்லை :)

ராஜ நடராஜன் சொன்னது…

காலை தேத்தண்ணி அருந்தும் பழக்கத்தை பழைய கஞ்சி மாற்றியிருக்கிறது.

இரவு உணவுக்குப் பின் 8 மணி நேர கால இடைவெளியிருந்த போதும் பழைய கஞ்சி செரிமாண செல்களுக்கு வேலை கொடுக்கிறதென்றே நினைக்கின்றேன்.

மேலும் பழைய கஞ்சி அருந்தும் முறையே பச்ச மிளகா,வெங்காயம்,மோர் அல்லது தயிரும் கலந்து என்பதால் தற்போதைய உணவுப்பழக்கத்துக்கு பழைய மாற்று எனலாம்.

வேகநரி சொன்னது…

காலையுணவு அதி முக்கியமானதாகவே நவீன மருத்துவர்களால் பரிந்துரை செய்யபடுகிறது.

++நான் இந்த மருத்துவர்கள் சொல்பதை நம்புவதில்லை. பூனையார் 5000 ஆண்டு முன்பே காலை உணவு சாப்பிட வேண்டும் என்று சொல்லிவிட்டதால் சாப்பிடுகிறேன்++

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

விழிப்புணர்வு பதிவு.

Yaathoramani.blogspot.com சொன்னது…

காலை உணவின் முக்கியத்துவம்
பெருவாரியானவர்களால் இன்னமும்
உணரப்படாமல்தான் உள்ளது
நல்ல விழிப்புணர்வுப் பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

தருமி சொன்னது…

அட .. சத்து இருக்கோ இல்லையோ .. பழைய் சோறோடு கொஞ்சம் மோர் சேர்த்து வெயில் காலத்துக் காலையில் ஒரு இழுப்பு இழுத்தால் .. அடடே .. என்ன சுகம்!

மாதேவி சொன்னது…

காலை உணவு எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துக் கூறியுள்ளீர்கள்.

எனது வீட்டிலும் இன்று சோறு :))

கல்வெட்டு சொன்னது…

பழைய சோறும் பாண்டியன் மட்டை ஊறுகாயும் நாக்கில் வந்து போகிறது
**
நல்ல கட்டுரை கோவி

? சொன்னது…

பழைய சோறு என்பது அரிசியை நொதித்தலுக்கு (fermentation) உட்படுத்தலாகும். இவ்வாறு அரிசியை நொதிக்க வைக்க உலகெங்கும் பலவேறு முறைகளை மேற்கொள்ளுகிறார்கள். பொதுவாக அரிசியை நொதிக்க வைக்கும்போது அரிசி கூடுதலான சத்துள்ளதாக மாறுகிறது. அரிசியிலுள்ள ஸ்டார்ச் (starch) நீர்மமாகும் வேதிவினை மூலமாக மால்டேஸ் & குளுகோஸாக மாற்றம் பெற்று பின்பு எதில் ஆல்கஹால் எனும் மதுவாக நொதிக்க வைக்கப்படும். இதனால் அரிசியிலுள்ள மொத்த திடப்பொருட்களை கணக்கில் எடுத்தால் சரக்கரை சத்தின் அளவு குறைந்து, புரதத்தின் அளவு இரட்டிப்பாகிறது. மேலும் அத்தியாவிடய அமினோ அமிலங்களின் அளவு குறிப்பாக லைசினின்,மெத்தயோனின் அளவு 5 மடங்கு வரை அதிகரிக்கிறது. இதனால் அரிசியின் புரத தரம் அதிகரிக்கிறது. மேலும் வைட்டமின்களின் அளவும் கூடுகிறது. குறிப்பாக, அரிசியை பாலிஷ் செய்வதால் இழக்கப்படும் தையமின் எனும் B1 யை அரிசி நொதித்தலின் போது நுண்ணியிரிகள் உற்பத்தி செய்கின்றன. சுருக்கமாக நொதித்தலின் போது நுண்ணியிரிகள் சர்க்கரை சத்துக்களை பயனுள்ள சத்தக்களாக மாற்றுகின்றன. இது இட்டி/தோசை மாவு புளிக்கும் போதும் நடக்கிறது. ஆக பழய சோறு புது சோற்றினைவிட சத்து அதிகமுள்ளதே, ஆனால் நொதித்தலின் போது கூடவே உற்பத்தி ஆகும் மது ஈரலுக்கு ஊறுவிளைவிக்கும் என்பதே கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேற்கண்ட கருத்துக்கள் அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகளை குறிப்பாக கீத் ஸ்டைன்கராஸ் எனும் கார்னல் பல்கலை' ஆராய்ச்சியாளரின் கட்டுரையை கொண்டு எழுதப்பட்டுள்ளது. நொதித்தலின் போது சத்து அதிகரிப்பு விகிதம், அரிசியின் தரம், நுண்ணயிரிகள் மற்றும் நொதித்தல் முறை காரணமாக மாறுபடும். நம்மூர் முறையிலும் சத்து அதிகரிப்பதாக பாரதிதாசன் பல்கலை' ஆராய்ச்சி முடிவுகள் கண்டறிந்தாக படித்திருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நொதித்தலின் போது சத்து அதிகரிப்பு விகிதம், அரிசியின் தரம், நுண்ணயிரிகள் மற்றும் நொதித்தல் முறை காரணமாக மாறுபடும். நம்மூர் முறையிலும் சத்து அதிகரிப்பதாக பாரதிதாசன் பல்கலை' ஆராய்ச்சி முடிவுகள் கண்டறிந்தாக படித்திருக்கிறேன்.//

இதெல்லாம் குக்கரில் வேக வைத்த சோற்றிலும் இருக்குமா ? மண் பானை அல்லது அலுமினிய பானையில் அடுப்பில் வைத்து வேக வைத்து வடிக்கப்படும் சோறு மறுநாள் பழைய சோறாக மாறும் போது விரலால் நசுக்கினால் கரையும், குக்கரில் செய்த சோற்றின் பழைய சோறு நசுங்கும் ஆனால் கரையாது. தோசை இட்லியை விட பழைய சோற்றில் சத்துக் குறைவே, மேலும் காலை உணவாக சாப்பிடும் பொழுது மந்தத் தன்மையையும் தூக்கம் மட்டும் சோம்பலையும் ஏற்படுத்தும்.

கம்பங்கூழ், கேழ்வரகு ஆகியவற்றின் பலன்கள் பழைய சோற்றில் கிடையாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி கூறியது...
அட .. சத்து இருக்கோ இல்லையோ .. பழைய் சோறோடு கொஞ்சம் மோர் சேர்த்து வெயில் காலத்துக் காலையில் ஒரு இழுப்பு இழுத்தால் .. அடடே .. என்ன சுகம்!//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் னு கொட்டாவியும் வருமே :)

? சொன்னது…

//இதெல்லாம் குக்கரில் வேக வைத்த சோற்றிலும் இருக்குமா ? ... குக்கரில் செய்த சோற்றின் பழைய சோறு நசுங்கும் ஆனால் கரையாது. //

சாதத்தை வேகவைத்த நீரை வடிக்கும் போது அதிலுள்ள ஸ்டார்ச்சு எனும் சர்க்கரை சத்து வெளியேறிவிடும். இதுதான் காரணம். ஆனால் இத்துடன் நீரில் கரையும் சத்துக்களும் வெளியேறும்.

சர்க்கரை சத்து குறைவாக உட்கொள்ள விரும்வோர் இவ்வாறு நீரை வடிக்கலாம் அல்லது குக்கரில் சமைப்போர் அரிசியை நன்றாக கழுவ வேண்டும்.

நொதித்தலின் போது இந்த ஸ்டார்ச் புரத உற்பத்திக்கு நுண்ணியிரிகளால் பயன்படுத்தப்படுவதினால் அதிக ஸடார்சுள்ள அரிசியை பழய சோற்றிற்கு பயன்படுத்துவது நல்லது. ஆக பழய சாதத்திற்கு குக்கர்
சாதமே நல்லது.

? சொன்னது…

//தோசை இட்லியை விட பழைய சோற்றில் சத்துக் குறைவே, //

புதிய சோற்றினை விட பழய சோறு சிறந்தது அவ்வளவே. தோசை இட்லி மாவின் புரதசத்து அதிகம் இதற்கு நீங்கள் குறிப்பிட்டது போல் உளுந்து காரணம். பழய சாதத்துடன் சத்தான சைடு டிஷ் சாப்பிட்டால் போகிறது.

//மேலும் காலை உணவாக சாப்பிடும் பொழுது மந்தத் தன்மையையும் தூக்கம் மட்டும் சோம்பலையும் ஏற்படுத்தும்.//

நான் குறிப்பிட்டது போல சாதத்தை நொதிக்க வைத்தால் மது உருவாகும். ஆக பழய சாதம் சாப்பிட்டால் வருவது மப்பு!

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் குறிப்பிட்டது போல சாதத்தை நொதிக்க வைத்தால் மது உருவாகும். ஆக பழய சாதம் சாப்பிட்டால் வருவது மப்பு!//

இதை மேலும் மேலும் நொதிக்க வைத்தால் சுண்டக் கஞ்சி :)

Jawahar சொன்னது…

உபயோகமான தகவல்கள். ஆனால் பழைய சோற்றில் சத்து இல்லை என்பதை ஒப்புக் கொள்ள என் மனம் மறுக்கிறது. ஏறக்குறைய ஐந்தாண்டுகள் காலை, மதியம் இருவேளை பழையதே சாப்பிட்டு (நாகப்பட்டினத்தில்) வளர்ந்தவன். பழையதைச் சாப்பிட்டு விட்டு பகல் தூக்கம் தூங்கினால்தான் தொப்பை விழும்.

http://kgjawarlal.wordpress.com

கோவி.கண்ணன் சொன்னது…

//உபயோகமான தகவல்கள். ஆனால் பழைய சோற்றில் சத்து இல்லை என்பதை ஒப்புக் கொள்ள என் மனம் மறுக்கிறது. ஏறக்குறைய ஐந்தாண்டுகள் காலை, மதியம் இருவேளை பழையதே சாப்பிட்டு (நாகப்பட்டினத்தில்) வளர்ந்தவன். பழையதைச் சாப்பிட்டு விட்டு பகல் தூக்கம் தூங்கினால்தான் தொப்பை விழும்.

http://kgjawarlal.wordpress.com//

பழைய சோறு சாப்பிடத் தக்க உணவு இல்லை என்று நான் குறிப்பிடவில்லை, ஆனால் அது சிறந்த உணவு என்று சொல்ல ஒன்றும் இல்லை என்று தான் குறிப்பிட்டுள்ளேன். மற்றபடி நானும் பழைய சோறு சாப்பிட்டு வளர்ந்தவன் தான்.

? சொன்னது…

இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களைப் பார்த்தாலே புரிகிறது, ஏன் டாஸ்மாக்கில் இவ்வளவு கூட்டம் என்று! :-)

பெயரில்லா சொன்னது…

பழைய சோறுக் குறித்து மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையை நன்கு விலாசி உள்ளீர்கள் !!!

கம்பு, கேப்பை, திணை என்பதை தொடர்ந்து உண்டு வந்தால் சர்க்கரை வியாதி வருவதை பெருமளவு குறைக்கலாம் என்பதும் உண்மை .. வோல் க்ரைன்ஸ்களை சாப்பிடும் படி தான் கனடாவிலும் அறிவுருத்துகின்றார்கள் ... !!!

சோறு பொங்கி சாப்பிடுவது விசேட நாள்களில் என்ற பழக்கம் மாறி தினமும் சோறு உண்ணும் பழக்கம் வந்தத்தால் தான் இன்று இந்தியா சர்க்கரை நோயாளிகளில் கூடாரமாக மாறியுள்ளது ... !!!

காலை உணவு மிக அவசியம் .. காலை உணவில் முழுத் தானிய வகைகளை சாப்பிட்டால் மிகவும் நலம் !!!

காய்கறி, கீரைகள், சலாட்கள், முட்டை, பால் போன்றவற்றை உண்ணப் பழகிக் கொள்ள வேண்டும், கம்பு, கேப்பை, திணைகளை உண்ண மக்கள் முயல வேண்டும் .. ஓட்ஸ் சாப்பிடுவது பெருமையாகிவிட்டது இன்று .. ஓட்ஸ் என்பதும் ஒரு வகை திணை தான் என்பதை நாம் மறந்துவிடுகின்றோம் .... !!!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு...

பகிர்வுக்கு நன்றி...தொடருங்கள்...
வாழ்த்துக்கள்... (த.ம. 9)

# * # சங்கப்பலகை அறிவன் # * # சொன்னது…

|| பழைய சோற்றில் மிகுந்த சத்துகள் இருப்பதாகவும் பழைய சோற்றை நாம் புறக்கணித்ததால் தான் பல வித நோய்கள் நமக்கு ஏற்படுவதாகவும் சில பெரிசுகள் மற்றும் முற்போக்கு இளசுகளும் கருத்துகளைப் பரப்புகின்றனர், பழைய சோறு பாரம்பரிய உணவு என்பது தவிர்த்து மற்ற காலை உணவுகளை ஒப்பிட அதில் சத்துகள் எதுவும் பெரிதாக இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்களா ? என்று தெரியவில்லை, பழைய சோற்றில் நீர் சேர்த்து இரவு முழுவதும் வைத்திருப்பதால் சற்று ஈஸ்டுகள் சேர்ந்திருக்கும், தவிர்த்து பெரிய சத்துகள் எதுவும் கிடையாது, அதில் இருக்கும் ஈஸ்டுகள் மற்றும் சத்துகளின் அளவு இட்லி தோசையில் இருப்பதைவிடக் குறைவே ||

கண்ணன்,
பல சமயங்களில் நீங்கள் செய்யும் தவறே இந்தப் பதிவிலும் எனக்குத் தெரிகிறது.
அதாவது எந்தவித ஆய்வு முடிவுகளோ,தரவுகளோ இல்லாத ஒரு செய்தியை அறுதியிட்ட கருத்தாக நீங்கள் சொல்வது.
:))

அரிசிச் சோறை விட கேழ்வரகுக் கூழ் நல்லதா என்றால் நிச்சயம் நல்லது.

ஆனால் கஞ்சி என்று அழைக்கப்படும் பழைய சோறு,இட்லி தோசைகளை விட நிச்சயம் உடலுக்கு நல்லது.

நமக்கு யாராவது அமெரிக்காவிலோ அல்லது லண்டனிலோ இருந்து சொன்னால்தான் நமது உயர்ந்த விதயங்கள் கூட ஒத்துக் கொள்ளத் தோன்றும்.

வேம்பிலிருந்து,மஞ்சள் வரை இதற்குப் பல எடுத்துக் காட்டுகள் காட்ட முடியும்.

இந்தத் தரவில் 12-15 ம் பக்கம் வரை பார்க்கவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அரிசிச் சோறை விட கேழ்வரகுக் கூழ் நல்லதா என்றால் நிச்சயம் நல்லது.

ஆனால் கஞ்சி என்று அழைக்கப்படும் பழைய சோறு,இட்லி தோசைகளை விட நிச்சயம் உடலுக்கு நல்லது.

நமக்கு யாராவது அமெரிக்காவிலோ அல்லது லண்டனிலோ இருந்து சொன்னால்தான் நமது உயர்ந்த விதயங்கள் கூட ஒத்துக் கொள்ளத் தோன்றும்.//

அறிவன் சார், நீரிழிவிற்கான உணவு பரிந்துரைகளில் அரிசி சோற்றின் சர்கரை அளவு குறித்து சொல்கிறார்கள்.நான் பழைய சோற்றின் எதிரி அல்ல, பிடிக்காத உணவும் அல்ல, ஆனால் சிறப்பிக்க ஒன்றும் இல்லை என்று தான் கூறியுள்ளேன், பழைய சோற்றில் சத்துகள் என்றால் அதில் ஊற்றி சாப்பிடும் தயிர் மோர் இவற்றையே சாறும், வெறும் சோற்றில் சர்கரைத் தவிர புரதத் சத்திற்கான வாய்ப்புகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை உங்கள் தரவின் 90 ஆங்கிலப் பக்கங்களை இனிதான் படித்துப் பார்க்க வேண்டும், இணைப்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

tamilweb சொன்னது…

ஒரு வேளை உணவு கூட போதும்.எத்தனை முறையோ..எந்த நேரமோ..அதையே கடைப்பிடித்தால் போதும்!
(12 மணி நேர இடைவெளி..18. மணி நேர இடைவெளி...இதெல்லாம் உண்மையில்லை-ஆதாரம் சித்தர் பாடல்கள்)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்