பின்பற்றுபவர்கள்

4 மே, 2012

மதுரைக்கு நித்தி, காஞ்சிக்கு தேவ நாதன் ?

பாரம்பர்ய மிக்க சைவ மடத்தில் நித்தியானந்தன் ஆதீனமா ? ஐயோகோ என்று ஒப்பாறி வைக்கிறார்கள், இது வஹாபி மதவாத பதிவர்கள் இல்லை, தமிழ் இந்து தளத்தினர். இரண்டிற்கும் வேறுபாடு ஓநாய் ஆட்டின் மீது காட்டும் அக்கரை மற்றும் காலில் அப்பி இருக்கும் நரகலை கழுவாமல் அடுத்தவன் காலுறை (சாக்ஸ்) நாறுது என்று சொல்வதும் போன்றது தான்.

"ஒரு தனியார் அல்லது அரசாங்க அலுவலகம் இருக்கிறது. அதில் பணிபுரியும் அதிகாரி அல்லது ஊழியர் மீது குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்படுகிறது. அப்போது அந்த நிறுவனம் அல்லது அலுவலகம் என்ன செய்கிறது. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்கிறது. அந்த விசாரணை முடிந்து அவர் மீது குற்றம் இல்லை நிரபராதி என்று முடிவாகும் வரை அவரை இடைக்கால பணி நீக்கம் செய்து வைக்கின்றனர். குற்றம் சுமத்திய பிறகு தான் அந்த குற்றத்தைச் செய்யவில்லை என்று அசைக்கமுடியாத ஆதாரங்களைக் காட்டி அதிலிருந்து வெளிவருவதுதான் சரியான வழி. குற்றச்சாட்டுக்கு ஆளான எவரும் முதலில் சொல்வது நான் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்பதுதான். ஆனால் குற்றம் சாட்டுபவர்கள் சான்றுகளைக் காட்டி குற்றத்தை நிரூபிப்பாரானால் குற்றம் உறுதியாகும். அப்படி அவர் குற்றம் செய்யாதவர் என்று விடுவிக்கப்பட்டாலும், அவர் மீது அந்த கறை படிந்துதான் இருக்கும். நீதிமன்றமும், பொதுமக்களும் அவர் குற்றம் செய்யவில்லை என்று ஒப்புக்கொள்ள வேண்டியதுதான் தர்மம் என்றாலும், மக்கள் மனத்தில் ஒரு நெருடல் இருந்து கொண்டுதான் இருக்கும். இன்னார் இன்ன குற்றச்சாட்டுக்கு ஆளானவர் ஆச்சே, இவர் இந்த பெரும் பதவியை வகிக்கலாமா என்ற எண்ணம் தோன்றத்தான் செய்யும். இப்படிப்பட்ட சூழ்நிலை தமிழகத்தில் தோன்றுவது இது முதன்முறை இல்லை. இதற்கு முன்பும் ஒரு நிகழ்ச்சி நடந்து இன்னமும் முடிவாக நிலையில் இருந்து வருகிறது." - தமிழ் இந்து.

இதற்கு முன்பும் ஒரு நிகழ்ச்சி நடந்து இன்னமும் முடிவாக நிலையில் இருந்து வருகிறது - என்று இவர்கள் காஞ்சி மட கசமுசாக்களைச் சொல்கிறார்களா ? அல்லது நித்தியின் கசமுசாக்கள் இன்னும் நீர்த்துப் போகமல் அதாவது அவை வதந்தி என்ற நிலையை அடையாமல் இருக்கிறது என்று சொல்ல வருகிறார்களா ? ஒன்றும் புரியவில்லை. ஒரு வேளை காஞ்சி மடம் பற்றிச் சொல்ல விரும்பினால் அதை நேரிடையாகச் சொல்லி இருக்க வேண்டியது தானே ? இல்லை நித்தியைத் தான் சொல்கிறார்கள் என்றால் காஞ்சி மடம் பற்றி பொத்திக் கொண்டு இருப்பது ஏன் ? நித்தியாவது காமம் கடந்த சாமியார் என்று பரப்பி திருமணம் ஆனப் பெண்ணுடன் காம லீலைகளில் ஈடுபட்டான் என்ற குற்றச் சாட்டு இருந்தாலும், நித்தியின் மீது கொலைக் குற்றச் சாட்டு எதுவும் பதியப்படாத நிலையில், கொலைக் குற்றச் சாட்டில் வாய்தா வாங்கி, நீதிபதியையே வளைக்க முயன்றார் என்ற குற்றச் சாட்டில் காஞ்சி சுப்புரமணி குப்புறக்கிடப்பதை இதே ரீதியில் கண்டிக்காமல் நித்தி தேர்வை குறைச் சொல்ல இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது ? காஞ்சி மடத் தலைவர் விதவையைக் கூட விட்டுவைக்காதவர் என்கிற குற்றச் சாட்டு மக்கள் மனதில் பதிந்திருக்கும் போது அது குறித்து எதுவும் பேசாத இவர்கள் நித்தி பற்றி கட்டுரை எழுதுவதன் உள்நோக்கம் இந்து மத நன்மையா ?

தவிர சட்டமன்றத்தினுள் ஆபாசப் படம் பார்த்தார்கள் என்கிற சர்சைகளில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சிக்கி நாறிப் போய் இருக்கும் போது மதுரை ஆதினத்திற்கு யார் வந்தால் இவர்களுக்கு என்ன ? இந்திரன் ரிஷி பத்தினிகளை மாறுவேடம் கொண்டு புணர்ந்தான் என்பது போன்ற இந்து சமயங்களில் பல்வேறு பாலியல் குற்றச் சாட்டுகள் பண்பாட்டு தொன்மக் கதைகளாக காலம் காலமாக இருந்துவரும் போது நித்தி மட்டுமே முதன் முறை சிக்கி இருப்பது போன்றும் இதை கண்டிக்கும் தொணியில் எழுதுவதற்கு இவர்களுக்கு இருக்கும் அருகதை என்ன ? இந்திரனை இன்னும் தெய்வமாக வழிபடுபவர்களுக்கு நித்தியின் சரசம் தகாத செயலாக இருப்பதாக நினைப்பது முரண்பாடாக இருக்கிறது. இவர்கள் தெய்வ நிலையில் வைத்திருக்கும் இந்திரனே சபலக் கேசாகத்தான் காட்டப்படும் போது தான் சொக்கிப் போய் இருந்த ஒரு நடிகை தனக்கு சேவகம் செய்ய வந்த போது நித்தி உணர்ச்சிவசப்பட்டான்  என்பது என்ன நடக்கக் கூடாதா நிகழ்வா ? 

காரணம் ஒன்று தான், காஞ்சி மடம் பார்பனர் தலைமை எனவே அங்கு எது நடந்தாலும் தற்காக்க வேண்டும், பூசி மெழுக வேண்டும், முடியாவிட்டால் மவுனாமாக இருக்க வேண்டும், நித்தி ஒரு சூத்திர சாமியார், சூத்திரன் தப்பு செய்தால் அவனுக்கு தண்டனைக் கொடுக்க வேண்டும், பதவி கொடுக்கக் கூடாது. இதைத் தவிர இவர்கள் வேறு என்ன சொல்ல வருகிறார்கள் என்றே தெரியவில்லை. அப்படியும் இல்லை என்றால் பார்பன மேலான்மை ஓங்கும் மதுரை மீனாட்சிக் கோவிலை ஆதினம் வசம் கொண்டுவரும் பொறுப்பு நித்தியிடம் ஒப்படைக்கப்பட்டதால் ஏற்பட்ட பதை பதைப்பா ? அவன்கிட்ட இருக்கும் பணத்திற்கு செய்தாலும் செய்வான் என்று நினைத்து அஞ்சுகிறார்களோ.

இவர்களுக்கு அக்கரை இருந்தால் ஏற்கனவே வழக்குகளில் சிக்கி இருக்கும் காஞ்சி மடத்தலைவர்களை நித்திக்கு இவர்கள் சொல்லி இருக்கும் பரிந்துரைகளைப் போலவே சொல்லி ஓரம் கட்டிவிட்டு அதன் தலைமைக்கு தேவநாதனை கொண்டுவரலாம், தேவனாதனை இன்னும் குற்றவாளி என்று தீர்பளிக்கப்பட்டது போல் தெரியவில்லை, நித்தி தனக்கு சொன்னது போல் தேவநாதனின் விடியோக்கள் கிறிஸ்துவ மிசனறிகளில் கிராப்பிக்ஸ் வேலை என்று தேவநாதனனுக்கு ஆதரவாக இருக்கலாம், தேவநாதனும் புனிதம் அடைந்துவிடுவான், ஒன்று தான் இடிக்கிறது, காஞ்சி மடத்திற்கு பிரம்மச்சாரிகள் தான் வாரிசாக வரமுடியும். அப்பறம் அப்படி இல்ல்லாமல் இருப்பது வேற. தேவநாதன் தற்போது வாய்ப்புகளின்றி பிரம்மச்சாரியாகத்தான் இருப்பான் கூடவே பிறப்பால் அவர்கள் பாஷையில் பிராமணன், வேறென்ன தகுதி வேண்டும் ? ஒரே கல்லில் இரண்டு மாங்காய், காஞ்சி மடத்தலைவர்கள் மானமிக்கவர்கள் குற்றச் சாட்டுகள் நீர்த்துப் போகும் வரை பதவியில் நீடிக்க மாட்டார்கள் தவிர தேவனாதனின் தவறுகளையும் மறைத்துவிடலாம். செய்வார்களா ?

18 கருத்துகள்:

சார்வாகன் சொன்னது…

அருமை சகோ!

இந்த மதவாதிகளிடம் வித்தியாசம் கிடையாது.தன்னுடையதின் தவறுகளை மூடி மறைப்பதும்,அடுத்த மதங்களை நோண்டி நொங்கெடுப்பதும்தானே மத பிரச்சாரம்.

குற்றச்சாட்டுகள் அனைத்தும் பிற மதத்தவரின் சதி!!!!!!!!

இதில் தமிழ் இந்து இன்னும் நுட்பமாக் விளையாடுவதை அம்பல்ப்படுத்திய விதம் அருமை.

எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி??????????

நன்றி

Ramya Parasuram சொன்னது…

/, இது வஹாபி மதவாத பதிவர்கள் இல்லை, தமிழ் இந்து தளத்தினர். இரண்டிற்கும் வேறுபாடு ஓநாய் ஆட்டின் மீது காட்டும் அக்கரை மற்றும் காலில் அப்பி இருக்கும் நரகலை கழுவாமல் அடுத்தவன் காலுறை (சாக்ஸ்) நாறுது என்று சொல்வதும் போன்றது தான்./

நன்றாகச் சொன்னீர்கள்.

Unknown சொன்னது…

இதுக்கு பேர்தான் அவாள் பாசம்!!! காம கேடி சுப்புணிக்கு ஒரு நியாயம் ஜல புல ஜங் நித்திக்கு ஒரு நியாயம்.

பாவம் பங்காரு லட்சுமணன் என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டும் தினமணி கூட பங்காரு என்னவோ ரொம்ப நல்லவர் போலவும் தெகல்கா வம்பாய் மாட்டிவிட்டு பிரபலமானதாகவும்.. இன்னும் தீர்க்கப் படாத போபர்ஸ் முதல் 2ஜி அலைக்கற்றை வரை குறிப்பிட்டு வைக்கிறது ஒரு வரி கூட வாய்தா ராணி பற்றி குறிப்பிடாததன் காரணம் வேறு என்னவாக இருக்க முடியும்? நித்தியாவது ஆன்மீகத்தோடு லவுகீக வாழ்க்கையை சோதித்து பார்த்தார், சுப்புணியோ பல படி மேலே போய் கொலைப்பழி வரை சுமந்தும் நீதியை வளைக்க முற்பட்டும் இன்னும் தண்டக்கோல் தூக்கி வாழையிலையில் மலம்கழித்துக் கொண்டல்லவா இருக்கிறார்?

RAZIN ABDUL RAHMAN சொன்னது…

இரண்டிற்கும் வேறுபாடு ஓநாய் ஆட்டின் மீது காட்டும் அக்கரை மற்றும் காலில் அப்பி இருக்கும் நரகலை கழுவாமல் அடுத்தவன் காலுறை (சாக்ஸ்) நாறுது என்று சொல்வதும் போன்றது தான்./

ம்ம்.. சரிதா சகோ கோவி..
இதை பர்தா பெண்ணடிமை?? என்றும், பெண்ணுரிமை??? குறித்தும் நீங்கள் பேசும்போது ஒருமுறை நியாபகப்படுத்திக்கொள்ளுங்கள்..

ஓநாய்களாய் ஆடுகளின்மீது நாம் பரிதாபப்படுகிறோம் என்று... அல்லது....நம்ம கால்ல ஒட்டிருக்கிர நரகல் இந்த நாத்தம் நாறுதே...நாம எப்டி அவங்க சாக்ஸ பத்தி பேசுறோம்ன்னு.. :)

இதன்மூலம்...நீங்கள் சொல்லவருவதை தெளிவாக சொல்லிவிடுங்கள்...எந்த ஓநாயும் இஸ்லாமிய ஆடுகள் குறித்து பேசக்கூடாது...என்று!!!,,,,

இத நான் சொல்லல நியாயவான் நீங்கதா சொன்னீங்க...நியாயமா நடப்பீங்கல்ல :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//ம்ம்.. சரிதா சகோ கோவி..
இதை பர்தா பெண்ணடிமை?? என்றும், பெண்ணுரிமை??? குறித்தும் நீங்கள் பேசும்போது ஒருமுறை நியாபகப்படுத்திக்கொள்ளுங்கள்..
//

பிரச்சனை பர்தா இல்லை, பர்தா போடாத பெண்கள் ஆண்களை உறவுக்கு அழைப்பது போல் இஸ்லாமிய மதவெறியர்களால் பரப்பப்படும் போது தான் பர்தா விமர்சனம் செய்யப்படுகிறது. அதையும் அதை அணிந்திருக்கும் பெண்கள் மீது அல்ல , மதவெறியர்கள் மீது தான்.

என்னைப் பொருத்த அளவில் காமந்தகர்கள் நிறைந்த நாட்டில் பர்தா அவசியம், முடிந்தால் 6 வயது சிறுமிகளையும் கூட முழுக்க மறைக்காமல் வெளியே அனுப்பக் கூடாது. அது போலவே பாட்டிகளையும்.

இங்கே சிங்கப்பூரில் தொடை தெரியத்தான் ஆடை அணிகிறார்கள், அம்மாவையே அப்படிப் பார்த்து பழகிய சீனர்களுக்கு வயசுப் பொண்ணுங்க அப்படி இருப்பது ஒன்றும் பெரிய விசயமே இல்லை, இங்கு பர்தா இல்லாமல் தான் ஒழுக்கம் பேணப்படுகிறது.

உங்கள் ஆசிரியை புடவையுடன் பார்க்கும் போது உங்களுக்கு சபலம் ஏற்பட்டிருந்தால் உங்கள் கண்களுக்கு முன்பு பர்தா போடாத பெண்களே வரக்கூடாது என்பதை நான் முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். அப்படியும் யாரேனும் வந்தால் உங்களுக்கு அல்லா சொல்லி இருப்பது போல் உங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள், நானெல்லாம் முகத்தைப் பார்த்துத் தான் பேசுவேன், ஆடைக்குள் / ஆடையில்லாத இடத்தை ஊடுறுவிப் பார்ப்பது இல்லை.

? சொன்னது…

@ RAZIN ABDUL RAHMAN

குறையே சொல்லக்கூடாது என்பதல்ல இங்கு கருத்து.

எம்மை குறையே இல்லை, ஆதலால் எம்மை குறையே சொல்லாதே. உம்மிடம் உள்ள குறைகளை நான் சுட்டி உம்மை இழிவு செய்வேன், கேட்டுக்கொள் என்கிற போதுதான் பிரச்சனை வருகிறது.

"நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்" என்று ஈசா நபி சொன்னதை தூக்கி எறிந்ததன் விளைவுதான் இது. தமது கண்ணில் உள்ள உத்திரத்தை பற்றி ஒப்புக்கொண்டு களைய எண்ணும் எவரும் அடுத்தவர் துரும்பினைப் பற்றியும் எழுதலாம் ;-)

RAZIN ABDUL RAHMAN சொன்னது…

//பிரச்சனை பர்தா இல்லை,//
பார்ரா.....இது புதுஸ்ஸால இருக்கு..

பர்தாவ முஸ்லிம்கள், போடுவதையும், அதை போடாத முஸ்லிம்களை,அதன் முக்கியத்துவம் கூறி போடச்சொல்வதும் முஸ்லிம்களிம் inhouse issue தானே?

அதுல,.. ஹிந்துக்கள பத்தி முஸ்லிம்கள் பேசினா ஆடு ஓனாய் கான்செப்ட் சொல்லும், வெளியாலு உங்களுக்கு என்ன வேல..அஸ் பெர் உங்க நியாயப்படி...ம்ம் ம்ம்....


mm.மொதல்ல பர்தாவே அடிமைத்தனம்ன்னு கூச்சல் போட வேண்டியது...அபரம் பர்தா பிரச்சன இல்லன்னு சொல்லிட்டு...ஆண்கள தாக்கனும்கிறதால..மொக்கயா எதாவது மழுப்பவேண்டியது...என்ன கோவிசார் இது....

//என்னைப் பொருத்த அளவில் காமந்தகர்கள் நிறைந்த நாட்டில்// :(

ஆமா ஆமா காமாந்தர்கள் நிறையாத நாட்லதா நீங்க இருக்கீங்க.. போங்க.. விபச்சாரம் கடைச்சரக்காகி பெண்கள் விலைபொருளாக இருக்கும் நாட்டில் யார் எப்டி இருந்தா என்ன?
தவிர அம்மாவையே அப்டிதா பாக்குறாங்க...அதுனால அன்னியர்கள அப்டி பாக்குறதுல தப்பில்லன்னு உங்க பிலாக்கணம் ரெம்பத் தெளிவா இருக்கு,,,:( சீனாக்காரன் கலாச்சாரம் உங்களுக்கு ரொம்ப புடிச்சு போச்சுன்னு நெனக்கிறேன்... ஆமா நீங்கலும் கண்ணுக்கு குளிர்ச்சியா பாக்கனும்ன்னு நெனப்பீங்கள்ளா..உடை குறித்த அக்கரை இல்லாதவங்களா இருந்தாத்தானே...அதுக்கு வசதி.. அப்போ ஆதரிக்கத்தா செய்வீங்க...

ஆசிரியையும் அந்தக்கோலத்துல வந்து பாடம் எடுத்தாத்தா உங்களுக்கு பாடம் ஏறும்ன்னா...உங்களுக்கு படிப்பு ஏறும்ன்னா....அப்படிப்பட்ட ஆசிரியைகள் உங்களைப்போன்ற மாணாக்கர்களுக்காக....அப்டி இப்டி வர வேண்டியதுதான்....:)))
எங்களுக்கு கண்ணு கூசத்தா செய்யும்..

அப்ரம் நீங்க எங்க பாக்குரீங்கன்னு நீங்களே பீத்திட்டா எப்டி..உங்க எதுத்தாப்ல நிக்கிர பொண்ணுகிட்ட கேட்டாவுல தெரியும்.....அவ பட்ட பாட..

நீங்க நல்லவர்தா கோவிசார்... ஒத்துக்கிறோம்...அதுக்காக இப்டி உங்களுக்கு நீங்களே சட்டிபிக்கேட்டுலாம் அடிக்காதீங்க.....
அப்ரம் ஸாரி....நீங்க ரெம்ப டிஸ்டர்ப்டா இருக்கீங்கன்னு நெனக்கிறேன்....அதா என்னென்னமோ பேசுரீங்க....

ஆகமொத்தம் மொக்க காரணத்துல ஜல்லி அடிக்க முடியுதே ஒழிய நியாயவான் நீங்க சொன்ன நியாயத்த பாலோப்பண்ண முடியாது? அப்டித்தானே....போங்க சார் போயி...

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆமா ஆமா காமாந்தர்கள் நிறையாத நாட்லதா நீங்க இருக்கீங்க.. போங்க.. விபச்சாரம் கடைச்சரக்காகி பெண்கள் விலைபொருளாக இருக்கும் நாட்டில் யார் எப்டி இருந்தா என்ன?//

அடிமையைப் (வலக்கரம்) புணர அனுமதிக்கும் உங்க மார்க்கத்தை விட விபச்சாரம் கேடு கெட்டத்தனம் இல்லை, தவிர மறுமணம் மறுமணம் மறுமணம் மறுமணம் - ஒரே ஆள் நாளு பேரை மாற்றி மாற்றி அதற்காக திருமணம் செய்தால் அதுக்கும் பாலியல் தொழிலுக்கும் என்ன வேறுபாடுன்னு எனக்கு தெரியவில்லை. எண்ணிக்கை மட்டும் தானோ ? கூடவே திருமணத்தால் தக்க பாதுகாப்புக் கிடைக்கிறது என்கிற கருத்தையும் சேர்த்துக் கொள்வோம்ங்கிறிங்களா ? அப்ப நாலு எண்ணிக்கையில் என்ன பாதுகாப்பு கிடைச்சுது எனக்கும் தெரியவில்லை,

பர்தா மிகத் தேவை ஆறு வயது பெண் குழந்தைக்கும் தேவை ன்னு 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிட்டாங்கன்னு நாங்க ஒப்புக் கொள்கிறோம்.

உங்களுக்கு பிற மத நண்பர்கள் இருக்கிறார்களா ? பாவம் சார் அவங்க, உங்கப் பார்வை எப்படி என்று தெரியாமல் அவர்களுடைய அம்மா, அக்கா தங்கைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கக் கூடும்.

முடிந்த அளவு மாற்று மதத்தினரிடம் குடும்ப அளவில் நெருங்காமல் பழக முயற்சியுங்கள், அது தான் அவர்களுக்கு நல்லது,

RAZIN ABDUL RAHMAN சொன்னது…

ஆக மொத்தம் உங்கள்களுக்கு திருமணத்துக்கும் விபச்சாரத்துக்கும் எந்த வித்தியாசமும் தெரியாது...ஓக்கே....

திருமணங்கள் வாழ்க...
உங்களது பேச்சில் இருந்து மறுமணமும், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களிலும் உங்களுக்கு உடன்பாடு இல்லை..அவையெல்லாம் உங்கள் பார்வையில் விபச்சாரம்.... சிம்பிலா புரியவச்சதுக்கு நன்றிகள் பல....

மாற்றுமத நண்பர்களின் குடும்பத்தார் இல்ல...யாரா இருந்தாலும்..ஆபாச ஆடை உடுத்தி இருந்தா..நாங்க அருவருப்பாத்தா பாப்போம்...

சைனாக்கார குடும்பத்த பாத்துட்டு.. எல்லாரும் அப்டி இருந்தா சரின்னும், இல்ல அதுதா வேனும்ன்னோ நாங்க கேக்கிறதும் இல்ல..அத ஆதரிக்கிறதும் இல்ல..ஒரு மாற்றுமத சகோதரி கண்ணியமான ஆடை உடுத்துனா...அத ஆதரிக்கவும்.ஒரு முஸ்லிமே ஆபாசமா ஆடை உடுத்துனா..அத புறக்கணிக்கும் தைரியமும்,பக்குவமும் எங்களிடம் உண்டு...தொடை தெரிய ஆடை அணிந்தவர்களுடன் சகஜமாக பழகி,ஆபாசத்தை வாழ்வின் அங்கமாக்கிக்கொள்ள நாம் தயாரக இல்லை...நீங்க பழகிட்டா அது உங்க வாழ்வியல்..

அப்ரம் 6 வயது குழந்தைக்கு பர்தா...???// என்னமோ உங்களுக்கும் நாலு விஷயம் தெரியும்ன்னு நம்பிட்டேன்..ஸாரி...நீங்க ரொம்ப கொழம்பி இருக்கீங்க....தொடர்ந்து பேசாதீங்க... உங்க மனநிலை எனக்கு புரியுது....பொருமையா இருங்க...சரியா,,,

THE UFO சொன்னது…

@
தரு.கோவிக்கண்ணன்,

========//===========
பர்தா போடாத பெண்கள் ஆண்களை உறவுக்கு அழைப்பது போல் இஸ்லாமிய மதவெறியர்களால் பரப்பப்படும் போது தான் பர்தா விமர்சனம் செய்யப்படுகிறது.
=========//============

இப்படி வெறித்தனமாய்
ஆதாரம் இல்லாமல்
வெட்கமின்றி
பொய் சொல்லாதிகள்.

உங்கட வீட்டை பூட்டிபோட்டு வெளியூருக்கு நீங்கள் சென்டால் அக்கப்பம்பக்கது காரவுகள் 'எங்களை ஏனடா திருடர்கள் எண்டு நினைக்கிறவன்' என்று உங்களோட சண்டைக்கு வர மாட்டார்கள் அல்லவா?

'பெண்ணுக்கு ஹிஜாப் ( என்பது மறைக்க வேண்டிய பாகங்களை முறைப்படி மறைக்கும் ஒரு ஆடை) பாதுகாப்பு' என்றுதான் சொல்கிறார்கள்.

வேகநரி சொன்னது…

//முடிந்த அளவு மாற்று மதத்தினரிடம் குடும்ப அளவில் நெருங்காமல் பழக முயற்சியுங்கள்//
மாற்று மதத்தவர்கள் இவர்கள் விடயத்தில் அளவுக்கதிகமான ஜாக்கிரதையா இருக்க வேண்டும். இவங்களுக்கு தான் பர்தா இல்லாம பெண்களை கண்டால் காம உணர்வு தலைக்கேறுகிறதே! வெளிநாடுகளில் குடியேறிய பல அரபு இஸ்லாம் பெண்பளே பர்தாவை குப்பை தொட்டிக்குள் வீசி எறிந்து விட்டு மாற்று மத பெண்கள் மாதிரி சுதந்திரமா இருக்கிறார்கள். இங்கேயென்னவென்றால் 1400 வருடங்களுக்கு முன் ஒருவர் தனது குற்றத்திற்கு காரணமாக மற்ற பெண்களும் பர்தா அணிய வேண்டும் எனற உத்தரைவ எப்படியாவது நடை முறைபடுத்துவதென்றே நிக்கிறார்கள். நமக்கு தெரிந்த ஒரு காபிர் பெண் பர்தா போடாத இஸ்லாம் பெண்ணிடம் கேட்டாராம் பர்தாவை பற்றி அதற்க்கு அவர் அப்படியெல்லாம் பர்தா போட வேண்டும் என்று இஸ்லாமில் இல்லை பர்தா கட்டாயம் போட வேண்டும் என்பது லூஸ்தனமானவர்கள் என்று. ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியிலும் அறிவிப்பாளர் பர்தா போடாத இஸ்லாம் பெண்ணிடம் பர்தா பற்றி கேட்ட போது பர்தாவுக்கும் இஸ்லாமுக்கும் ஒரு சம்பந்தமில்லை சில நாட்டு பெண்கள் தங்க நாட்டு கலாச்சார படி பர்தா அணிந்திருந்திருக்கலாம் என்றார். இவர்கள் எல்லாம் இஸ்லாம் இந்த நவீன காலத்திலும் 1400 வருடங்களுக்கு முற்பட்ட பர்தாவை திணிக்கிறதே என்கின்ற வெட்கத்தினாலே இப்படி சொன்னார்கள் என்று நம்புகிறேன்.

சார்வாகன் சொன்னது…

சகோ இரஜின்

உங்கள் மதத்தில் உள்ள விவகாரமான் விவரங்களை பொது தளத்தில் விள்க்கி நியாயப்படுத்தினால் எதிர் வினைகளே வரக்கூடாது என்றால் எப்புடீ!!!!!!!!!!!

பெண்கள் ஆடை பற்றி பெண்கள் மட்டுமே அல்லது உங்கள் போன்ற மத பிரசாரகர் மட்டுமே விவாதிக்க்லாம் என்பதால் ஆண்களின் ஆடை பற்றி வருவோம்..

இருப்பினும் உங்களிடம் நம்க்கு பிடித்த விடயம் ஒன்று உண்டு.இஸ்லாமிய ஆண்களும் கெண்டைக்கால் வரை மட்டுமே ஆடை அணிய வேண்டும் என்பதை ஆதரபூர்வமாக் கூறியது.இஸ்லாமிய ஆண்கள் இடுப்பு,உள்ளாடை தெரியும் ஜீன்ஸ் போன்ற ஆடைகள் அணிவது ஹராம் என்றீர்கள் பருங்கள்.
வாழ்த்துக்கள்.

ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை அடித்துக் கூறினீர் பாருங்கள்.
எனக்கு உங்களை மிகவும் பிடித்து விட்டது.

சவுதியில் இது அறிந்துதான் ஆண்களும் பேண்ட் அணிதாலும் மேலே அங்கி மாதிரி போட்டு இஸ்லாமை பாதுகாக்கிறார்கள்.

ஆகவே அனைத்து முஸ்லிம் ஆண்களும் சவுதி அங்கி போல் மேலே அணிந்து சுவனம் செல்ல நாடுகிறோம்.

இன்னும் கூட தாடி இதுபோல் வைக்க ஒரு பதிவிட்டு இஸ்லாமியர்களை நல்வழிப்படுத்துங்கள்!!!!

&&&&&&&&
3462. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
Volume :4 Book :60
&&&&&&&&&&&&
இதை நடைமுறைப்படுத்த காஃபிர்களாகிய நாங்கள் உதவிகளை அளிக்க சித்தமாக இருக்கிறோம்

நன்றி

RAZIN ABDUL RAHMAN சொன்னது…

சகோ சார்வகன்...
பதிவைத்தாண்டி உங்களின் கவன ஈர்ப்பை பின்னூட்டத்தில் குவித்து எனக்கு பதில் சொன்னதற்கு நன்றி...

உணர்ச்சி வசப்படாதீங்க..

//உங்கள் மதத்தில் உள்ள விவகாரமான் விவரங்களை பொது தளத்தில் விள்க்கி நியாயப்படுத்தினால் எதிர் வினைகளே வரக்கூடாது என்றால் எப்புடீ!!!!!!!!!!!//

இந்த நியாயத்த நீங்களே கோவி சார்கிட்ட கேளுங்க...நீங்க சொன்ன அதே மேட்டர நாங்க சொன்னா ஓனாய் ஆடு கத சொல்ரார்...

எந்த முஸ்லிம் பதிவர் இஸ்லாம் பத்தி எழுதாதன்னு சொன்னது... எழுதுங்க.. ஆபாசம் இல்லாம,அநாகரீக விமர்சன வசவுகள் இல்லாம எழுதுங்க...இது வரைக்கும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வலையில் பதில்கள் குவிந்துகிடக்கிறெதே தவிர எப்டி இஸ்லாம் பத்தி நீ பேசலாம்..நீ யோக்கியனான்னு கேட்டதில்ல..அப்டி கேட்டிருந்தால்,அதை அவரின் அறியாமையாகக்கூட கருதலாம்...

இப்பவும் நாங்க யாரும் சொல்லல.. இஸ்லாம் பத்தி யாரும் எழுதக்கூடாதுன்னு..கோவிசார் ஒரு நிலைபாடு எடுத்தாக...அதத்தா எல்லாத்துக்கும் பொருத்திப்பாத்தேன்..

ஒத்துக்கமாட்ராக..இந்த நீங்களும் ஒத்துக்க மாட்ரீங்க... இப்டி ஒத்துக்காததால எந்த பிரச்சனையும் இல்ல..இதனால் தெரியவருவது.. அவரோட நிலைப்பாடு தப்புன்னு அவரும் நீங்களும் ஒத்துக்கிறீங்க.. அவ்ளோதான்..

RAZIN ABDUL RAHMAN சொன்னது…

//பெண்கள் ஆடை பற்றி பெண்கள் மட்டுமே அல்லது உங்கள் போன்ற மத பிரசாரகர் மட்டுமே விவாதிக்க்லாம் என்பதால் //

இப்டி யாரும் சொல்லலியே..ஒரு விஷயம் குறித்த தெளிவான புரிதல் உள்ள யாரும் விவாதிக்கலாம்.. ஒன்றைகுறித்து விமர்சித்து பதில் கேட்கும்போது திறந்த மனதுடன் அதை உள்வாங்க தயாராக இருக்கவேண்டியது அவசியம்.முன் முடிவுகளோடு விவாதிக்க வரும்போது முரண்பாடுகளும் கூட வருகிறது.. அதுதான் சிக்கலே..:(

//ஆண்களின் ஆடை பற்றி வருவோம்..//

ஆண்களின் ஆடை குறித்து நீங்கள் சொன்னதுபோல,அதையும் நாமே வழியுறுத்துகிறோம்...

//இருப்பினும் உங்களிடம் நம்க்கு பிடித்த விடயம் ஒன்று உண்டு. இஸ்லாமிய ஆண்களும் கெண்டைக்கால் வரை மட்டுமே ஆடை அணிய வேண்டும் என்பதை ஆதரபூர்வமாக் கூறியது.இஸ்லாமிய ஆண்கள் இடுப்பு,உள்ளாடை தெரியும் ஜீன்ஸ் போன்ற ஆடைகள் அணிவது ஹராம் என்றீர்கள் பருங்கள்.
வாழ்த்துக்கள்.

ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை அடித்துக் கூறினீர் பாருங்கள்.
எனக்கு உங்களை மிகவும் பிடித்து விட்டது.//

நீங்க என் ப்ளாக் பக்கம்லா வர்ரீங்க போல..பெரியபெரிய ஆளுக வந்து போர அளவுக்கா பிரபலமாயிடுச்சு.. பரவாயில்ல :)

உங்களது மேலதி ஆலோசனைகளை நான் கருத்தில் கொள்கிறேன்..

புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி..
-----------------------------
அப்ரம் நாந்தா ஏதோ முஸ்லிம்கள பத்தி அவர் பேசினதால..அவக மேட்டர விட்டுட்டு இதப்பத்தி பேசிட்டு இருக்கேன்...நிங்களாவது பதிவப்பத்தி விரிவா பதில் எழுதுங்களேன்.. ரெம்ப சுருக்கமா முடிச்சுட்டீங்க..ரெண்டே கமெண்ட்தா பதிவின் மையக்கருத்து குறித்து பதிவாகிருக்கு...

அன்புடன்
ரஜின்

வேகநரி சொன்னது…

தகவல் தெரிவிப்பதற்காக மட்டும்
___________________________
ஆமினாMay 5, 2012 06:47 AM
@அஸ்மா
அரவேக்காடு கேசுங்க! இஸ்லாத்தை தாக்கி வரும் பின்னூட்டத்தை மட்டும் வெளீயிடும் thequickfox போன்ற அல்லக்கைகளை என்ன போட்டாலும் ஒடனே வெளியிடும் பதிவுலகில் ஒரே நேர்மையாளர் தான் நம்ம கோவிகண்ணு.... சாரி சாரி கோவிகன்னன்!
இஸ்லாத்தில் சாதிகள் இல்லைங்குறத இவர் அரவேக்காடு பதிவுபோட்டு இருக்குன்னு சொல்ல பாக்குறாராம்! கொடுமை! இவங்களாம் கீழ்பாக்கத்துல இருக்க வேண்டியவங்க..
@கோவி
இஸ்லாத்தை விமர்சிப்பது தவறில்லை
அதன் கொள்கைகளை பற்றி விவாதிப்பதும் தவறில்லை
ஆனா நேர்மைன்னா, உண்மைன்னா என்னான்னு உங்க ப்லாக்ல சைட்ல எழுதி வச்சுக்கோங்க... ஒருநாளைக்கு 100 தடவ வாசிங்க! அப்பவாவது மண்டைல எதாவது ஏறுதான்னு பாக்கலாம்..

கோவி.கண்ணன் சொன்னது…

//thequickfox கூறியது...
தகவல் தெரிவிப்பதற்காக மட்டும்
___________________________
ஆமினாMay 5, 2012 06:47 AM//

ஆமினாங்கிற ஆசாமி எனக்கு எதும் பின்னூட்டம் போடவில்லை, ஒரு சில பின்னூட்டங்களை நான் வெளி இடவில்லை, அது ஆமினாவின் வேறு பெயரில் ஆன பின்னூட்டமாக இருக்குமோ ? :) எத்தனை பேரு வச்சி பின்னூட்டம் போடுவாங்களோ.

Unknown சொன்னது…

ஜிகே என்னாலும் இங்கே இருந்தபடி பர்தாவுக்குள் பாழடையும் கற்புக்கரசிகள் பற்றி பின்னூட்டமிடவோ அல்லது தனிப்பதிவோ இடமுடியும் ஆயினும் தோழர் செங்கொடிபோல் என் பதிவும் தைசெய்யப்பட்ட பதிவாய் மாறி உலகப் புகழ்பெற நான் விரும்பவில்லை. வளைகுடாவில் இருப்பது போல இஸ்லாமிய சுதந்திர நாடு வேறெங்கும் இல்லை. அது அவர்களுக்கு மட்டுமே உரித்தானது.எந்த அரபு தேசக் குடிமகனும் வேறு தேச இஸ்லாமியப் பெண்ணை மணக்க உரிமை உண்டு ஆனால் எந்த நாட்டு இஸ்லாமிய ஆணும் அரபு தேச பெண்ணை மணக்க உரிமை இல்லை ... இதிலேயே நமக்கு தெரிவதில்லையா நம் தோழர்களின் பற்று,,,,

tamilraja சொன்னது…

அடப்பாவிகளா இந்த மத சண்டை இங்கேயும் தொடருதா?

இந்த பதிவுக்கு தேவையில்லாத கருத்துசண்டை போடறிங்களே!
மத மறுப்பாளர் கோவி.கண்ணனை மதவாதி அளவுக்கு நினைத்து தாக்குரிங்க
இந்த பதிவில் இஸ்லாமிய நண்பர்கள் கருத்து தேவை இல்லாதது.
இது மடாதிபதிகள் சம்பந்தப்பட்டது.
இதில் இஸ்லாமிய நண்பர்கள் தலையிட்டு எங்களை விமர்சிக்க அவர்களுக்கு தகுதி இல்லை என்று பெருமை
பேசுவதும் தவறு.
ஆகையால் உங்கள் பெருமை பேசநினைத்தால் உங்களை சிறுமைப்படுத்தும் போது பேசுங்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்