பின்பற்றுபவர்கள்

30 மே, 2012

கலவை 30/மே/2012 !

சிங்கப்பூர் அருகே இருக்கும் மலேசிய ஜோகூர் பாருவில் கண்ணாடி கோவில் என்று ஒரு தனியார் (இராஜ காளியம்மன்) கோவில் உள்ளது, முழுக்க முழுக்க கண்ணாடி வேலைப்பாடுகளால் ஆனது. சாலைக்கு தள்ளி 100 மீ தொலைவில் அமைந்திருக்கும் கோவிலை தொலைவில் இருந்து பலமுறை பார்த்திருக்கிறேன், இரண்டு வாரத்திற்கு முன் நண்பர்கள் இருவரின் விருப்பத்தினால் உள்ளே சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பல்வேறு வண்ணக் கண்ணாடித் துண்டுகளால் ஆன வண்ண வேலைப்பாடுகளால் இழைத்து வைத்திருக்கிறார்கள் கோவிலை. ஜோகூர் பாரு பகுதியின் அறிவிக்கப்படாத சிறிய சுற்றுலாத் தளம் போல் நிறைய பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர், அவர்களில் வெளி நாட்டினருக்கு 10 ரிங்கிட் நுழைவு கட்டணம் பெறப்படுகிறது. ஒரு மலேசிய இளம் சாமியார் அந்தக் கோவிலை உருவாக்கி அங்கு ஒரு ஆன்மிகக் குழுவை உருவாக்கி அந்த கோவிலில் அவர்களது ஆன்மிகம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்துகிறார். பக்தர்கள் அனைவரும் செவ்வாடை அணிந்திருந்தனர், ஆனால் மருவத்தூர் குரூப் கிடையாது. கோவிலுனுள் ஏசு, புத்தர், சாய்பாபக்கள் உள்ளிட்டோரின் வெள்ளை பலிங்கில் செய்த உருவச் சிலைகள் உள்புறச் சுற்றில் இருந்தன. ஜோகூர் செல்பவர்கள் ஒருமுறை சென்று பார்க்கலாம், அருகே இரயில் தண்டவாளம் கூட உண்டு.








*****

இரண்டு வாரத்திற்கு முன்பு சிங்கப்பூர் இலக்கிய வட்டம் சார்ப்பில் பட்டிமன்றம் நடந்தது, கண்ணகி மாதவி கற்பு பற்றிப் பேசாமல் கர்ணன் - கும்பகர்ணன் இவர்களில் தியாகி யார் என்று பேசிக் கொண்டு இருந்தனர். மகாபாரதம் முழுவதும் வந்து போகும் ஒரு பாத்திரத்தையும், இராமயணத்தின் இறுதியில் வரும் ஒரு பாத்திரத்தையும் ஒப்பிடுவதில் இருவருக்குமான ஒப்பிடத் தக்கப் போதிய தகவல் இல்லை என்பதால் கர்ணன் ஆதரவு மற்றும் கும்பகர்ணன் ஆதரவு இருவருமே கர்ணன் பற்றிய ஆதரவு எதிர்ப்பு விமர்சனங்களாகச் செய்து கொண்டு இருந்தனர். கடைசியாக தீர்ப்பை கர்ணனுக்கு ஆதரவாகச் சொல்லிவிட்டனர். கர்ணன் படம் மறு வெளியீடு செய்ததன் பலனோ. தலைப்புகளும் ஒப்பீடும் அபத்தமாக இருந்தாலும் பேச்சுகள் போரடிக்கவில்லை. என்னைக் கேடால் முதல்வர்களில் மோசமானவர் கருணாநிதியா, ஜெ-வா என்று பட்டிமன்றம் வைத்தால் பேச நிறைய தகவல்கள் இருக்கும்.

*****

இதுவும் இரண்டுவாரம் முந்தைய தகவல் தான், 2 வாரம் முன்பு சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மோசமான சாலை விபத்து. 1.4 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி விலை உள்ள பெர்ராரி காரை மிக வேகமாக ஓட்டிவந்த ஒருவர் போக்குவரத்து விளக்கை மதிக்காமல் ஒரு வாடகைக் காரில் பலமாக மோத, பெராரி சொந்தக்காரர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து போனார், வாடகை கார் ஓட்டுனர் வயது 52 மறுநாள் மருத்துவமனையில் இறந்து போனார், வாடகைக் காரில் பயணம் செய்த தற்காலிகமாக சிங்கப்பூரில் இருந்த ஜப்பானிய இளம் பெண் வயது 20 விபத்து நடந்த அரைமணி நேரத்தில் மாண்டு போனார், அந்த மோசமான விபத்தில் அந்த அதிகாலை நேரத்தைப் பயன்படுத்தி விபத்தில் சிக்கிய பெண்ணின் முனகளைப் பொருட்படுத்தாமல், அங்கேயே அவளது பொருள்களை ஒரு ஆடவர் திருடிச் சென்றாராம். சிங்கப்பூரில் கடந்தவாரம் முழுவதும் அந்த விபத்து பற்றி தான் எங்கும் பேச்சு. 1.4 மில்லியன் என்பது இந்திய ரூபாய் மதிப்புக்கு 5.88 கோடி. ஒரு நொடில் அவ்வளவு பணமும், மூன்று உயிர்களும் பாதிப்புக்கு உள்ளனது, விபத்தை நடத்தியவர் சீனாவில் இருந்த் 2 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்த ஒரு பணக்கார இளைஞன் (32 வயது) அவனுக்கு ஒரு 8 மாத கர்ப்பத்துடன் ஒரு மனைவியும், ஒரு 4 வயது பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்த விபத்து குடியினால் ஏற்பட்ட விபத்து என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த பெராரி ஓட்டுனர் குடிந்திருந்தாராம்.


ஒரு நொடி விபத்தில் எப்படியெல்லாம் வாழ்கையே பறிபோகிறது என்பதைக் காட்டும் வீடியோ.

*****
நீயா நானா கோபிநாத் - பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் பற்றி முகநூல் மற்றும் சமூக இணையத் தளங்களில் சர்ச்சைகள் ஓடிக் கொண்டு இருக்கின்றன, அந்த நிகழ்சியை நானும் பார்த்தேன், பவர் ஸ்டார் போலி கவுரவம் தெரிந்தது தான், நிகழ்ச்சியின் தலைப்பும் பேசு பொருளும் தெரிந்து தான் அந்த நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டு வந்திருந்தார். தான் அவமானப்படுத்தப் படுவோம் என்று கூட அவர் அறிந்திருக்கக் கூடும், கோபிநாத்தின் பேச்சுகளில் எனக்கு உடன்பாடு இல்லை. போலி கவுரவம் பற்றி பேசும் கோபிநாத் நடிகர் விஜயையும் அவருடைய அப்பாவையும் சிறப்பு விருந்தினராகக் கூட்டி வந்து அவர்களது கடந்த கால போலி கவுரவங்களையும் 'இந்தப் பாடலைப் பாடிக் கொண்டு இருப்பவர் உங்கள் விஜய்' பற்றிக் கேள்வி கேட்க முடியுமா ? 100 கோடி செலவில் கட்டப்பட்ட சட்டமன்ற வளாகத்தைப் புறக்கணித்த ஜெவின் போலி கவுரவம் பற்றி கோபிநாத்தினால் கேள்வி எழுப்ப முடியுமா ? முற்றிலும் தமிழில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு கோட் சூட் போட்டு நடத்திவரும் கோபிநாத்தின் கவுரவம் எத்தகையது ? அவரது உடைக்காகத்தான் நிகழ்ச்சி பேசப்படுகிறதா ? வேறொரு நிகழ்ச்சியில் பட்டிமன்றம் என்பது காலவதியான விவாத முறை என்றெல்லாம் கூட இவர் ஒருமுறை திருவாய் மலர்ந்திருந்தார், இவர் நடத்தும் நிகழ்ச்சி ரசிக்கப்படுகிறது என்பதற்காக பாரம்பரியமாக நடத்தி வரும் நிகழ்ச்சியை பற்றி காலவதியானவை, பழமையானவை என்று இவர் எந்த அடிப்படையில் பேசுகிறார் என்றே தெரியவில்லை, இன்றைக்கும் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றத்திற்கென்றே பெரும் ரசிகர் கூட்டமே இருக்கின்றது. வளரும் நிலையில் கோபிநாத்தின் தான் தோன்றித்தனமான கருத்துகள் அவரின் வளர்ச்சிக்கு பின்னடைவே. கோபிநாத்தின் அத்தனை அவமானகரமான கேள்விகளுக்கும் கோபப்படாத பவர் ஸ்டார் இன்னும் 30 ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவில் நுழைந்திருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றியது.

*****

இப்பெல்லாம் எங்க பையன் செங்கதிர் அடம் பிடிப்பதை நிறுத்த ஐபோன் கை கொடுக்கிறது ஆனாலும் அவன் மிகுதியாக அடம்பிடிப்பதற்கும் அதுவே காரணமாகவும் அமைந்துவிடுகிறது, ஒரு 20 நிமிடம் கையில் கொடுப்போம். தொடு திரையை நன்றாக கையாளுகிறான், பிடிக்காதவற்றை (பெரும்பாலும் ஐபோன் விளையாட்டுகளை) உடனேயே மூடிவிட்டு வேறொன்றை அழுத்தி எடுத்துக் கொள்கிறான், சிறிய குழந்தைகளும் பயன்படுத்தும் படி ஐபோன் அமைந்திருப்பது தான் அதன் வெற்றி என்றே நினைக்கிறேன், டாக்கிங் கலெக்சன் எனப்படும் பேசும் விலங்குகள், பறவைகள் ஆகிய விளையாட்டுகளை விரும்பி அதனுடன் பேசுகிறான். கண்ணுக்கு பிரச்சனை ஆகிவிடக் கூடாது என்பதற்காக கொஞ்ச நேரத்தில் அவன் கையில் இருந்து பறித்து கையை வேகமாகச் சுழற்றி 'காக்காய் தூக்கிப் போய்விட்டது' என்று மறைத்துத்தான் பிடுங்க முடியும், அவ்வாறு செய்வதை கவனித்து வந்து ஐபோனுக்கு பெயர் 'காக்கா' என்று நினைத்துக் கொண்டு இருக்கிறான், எப்போதெல்லாம் போன் வேண்டுமோ அப்போது 'அப்பா காக்கா' என்று கேட்கிறான். செம அக்குறும்பாக இருக்கிறது. வேலைக்கு பிறகு மற்றும் வார இறுதிகளில் குழந்தையுடன் நல்ல பொழுது போக்கு.



28 மே, 2012

ஒரு இடைத்தேர்தலும் எதிர்கட்சி வெற்றியும் !


தமிழகத்தில் இந்தியாவில் இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சியின் வெற்றி கணிக்க முடியாதது என்று சொல்ல ஒன்றும் இல்லை, கண்டிப்பாக ஆளும் கட்சிதான் வெற்றிபெறும் இதற்குக் காரணம் பணமழை மற்றும் வாக்களர்களுக்கு லஞ்சம் என்று சொல்லப்பட்டாலும், அடுத்து பொதுத் தேர்தலுக்கு முன்பு எதிர்கட்சிக்கு வாக்களிப்பதால் எந்த நன்மையும் கிடைக்காது என்பதும் பெரிதளவும் உண்மை. மீறியும் வாக்களித்தால் ஆளும் கட்சியின் சினத்துக்கு ஆளாகி தொகுதியின் வளர்ச்சி பணிகள் முடங்கிவிடும் என்று மக்கள் கருதுவார்கள், இப்படித்தான் ஆளும் கட்சிகள் வெற்றிபெறுகின்றன அத்தகைய வெற்றி நல்லாட்சி நடைபெற்றதற்கான வெகுமதி என்று ஆளும் கட்சி வெளியே பெருமையாகக் கூறிக் கொள்ளும், தொடர்ந்து இடைத்தேர்களில் இமாலய வெற்றி பெறும் எந்தக் கட்சியும் அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய வரலாறு இல்லாததால் ஆளும் கட்சியின் தற்பெருமைகள் மிகவும் நாடகத்தனமானது என்பதை அரசியலே அறியாத வாக்காளர்களும் உணர்ந்து தான் உள்ளனர்.

இடைத்தேர்தல் என்பதே அரசின் பணவிரயமும், பொது மக்களின் நேரவிரயமும் தான் எதிர்கட்சியினரின் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தல் அந்தக் கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் இழப்பு என்பதைத் தவிர வேறெதும் இழப்பு இல்லை. இடைத்தேர்தல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை, கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றி என்பவை கட்சிக்கு கிடைக்கும் வெற்றி தான், தனிப்பட்ட செல்வாக்கினால் வெற்றிபெறுபவர்கள் இல்லை எனும் போது தேர்தல் ஆணையம் புதிதாக தேர்தல் நடத்தாமல் வெற்றிபெற்ற கட்சியினர் பரிந்துரை செய்யும் வெறொருவருக்கு பதவியைக் கொடுத்துவிடலாம். எல்லாவற்றையும் முறைப்படுத்த முயலும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலுக்கான விதிகளை அமைத்தால் நல்லது, கட்சி சார்பில் போட்டியிடும் வாக்களர் வெற்றி தனிப்பட்ட வெற்றியாக கருதப்படாது கட்சி விரும்பினால் எவரையும் மாற்றிக் கொள்ள முடியும் என்ற அறிவித்தல் இருந்தால் இடைத்தேர்தல் செலவுகள் பெரிதாகக் குறைக்கப்படும். இதில் இருக்கும் சிக்கல் குறிப்பிட்ட வெற்றிபெற்ற வேட்பாளரை கட்சி சுதந்திரமாக செயல்படவிடாமல் 'மாற்றிவிடுவேன்' என்கிற மிரட்டல் இருக்கும் என்பது உண்மை தான். தொகுதி மக்களுக்கே பிடிக்காதவரை கட்சி பரிந்துரைத்தாலும் அவர்களின் பதவிகாலம் ஐந்தாண்டுக்கு குறைவே தவிர பிடிக்காதவரை பரிந்துரைத்த கட்சியை மக்கள் மீண்டும் ஆதரிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் இடைத்தேர்தல்களை தவிர்க்க முடியும்.

******

சிங்கப்பூரில் சென்ற சனிக்கிழமை ஒரு இடைத்தேர்தல் நடந்து முடிந்தது, அந்த தொகுதி வழக்கமாக கடந்த 20 ஆண்டுகளாக எதிர்கட்சியே வெற்றிபெரும் தொகுதி. தொகுதியை வென்ற நாடாளுமன்ற உறுப்பினரின் நடத்தை ஒழுங்கீனம் காரணமாக கட்சி அவரை பதவி விலகச் சொல்லியது. இதனால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. ஆளும் கட்சியின் பெரும் குறையான அந்தத் தொகுதியை மக்கள் அதிருப்தியின் காரணமாக வென்றுவிடமுடியும் என்று நம்பியது. ஆனாலும் வெறும் மூன்று விழுக்காட்டு வாக்குகளே ஆளும் கட்சிக்கு கூடுதலாக கிடைக்க எதிர்கட்சி அந்த தொகுதியை தக்க வைத்துக் கொண்டது.
இதெல்லாம் தமிழகத்தில் இந்தியாவில் நடக்க வாய்ப்பிருக்கிறதா ?

இடைத்தேர்தல் என்றாலே முதலமைச்சர், அமைச்சர், அரசு அலுவலர்கள் என அனைத்து அரசு எந்திரங்களும் ஆளும் கட்சிக்கு பம்பரமாகச் செயல்பட எதிர்கட்சி இடைத்தேர்தலில் வெல்வது கனவிலும் நடைபெறாத ஒன்று. சிங்கப்பூர் ஜெனநாயகம் பற்றி உலக நாடுகளில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் பொது மக்களை பயமுறுத்தி அல்லது எதிர்கட்சியை முடக்கி தேர்தலில் வென்றுவிடலாம் என்று அவர்கள் முயற்சிப்பது கிடையாது காரணம் உண்மையான ஜனநாயகம் இருந்தால் ஆளும் கட்சி மீது எல்லா தரப்பினருக்கும் நம்பிக்கை இருக்கும் என்று நினைக்கிறார்கள், இந்த நம்பிக்கை இல்லாமல் செயல்படும் தமிழக, இந்திய ஆளும் கட்சி அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் வெறும் பிம்பங்களை ஏற்படுத்திவிட்டு அடுத்த பொதுத்தேர்தலில் எதிர்கட்சி வரிசையில் அமர்கிறார்கள், சில ஆளும் கட்சிக்கு அந்த வாய்ப்புக் கூட கிட்டாமல் போய்விடுகிறது.

மக்களாட்சியில் அரசு என்பது மக்களுக்கான சேவை நிறுவனங்கள் என்பதை மறந்து ஆளுமை செலுத்தும் மன்னராட்சி அமைப்பாகவும், அதன் பதவி இன்பங்கள், பிற் சலுகைகள், ஆட்சியில் இருக்கும் வரை விஐபி மதிப்பு இவைகளினால் ஆளுமைப் போட்டி என்ற அளவில் அரசியல் கட்சிகள் முனைந்து செயல்படுகின்றன. இவர்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வது கிடையாது, பதவியில் இருக்கும் வரை தனிவிமானங்களில் நாடுகளைச் சுற்றிப் பார்த்து இராஜ மரியாதைகளைப் பெற்று சுகபோக வாழ்கை வாழ்ந்துவருகிறார்கள், இவர்களை ஒப்பிட மன்னர் ஆட்சி முறைகளே தேவலாம், அதில் அதிகார வர்க்கம் என்று ஒன்று தான் இருக்கும், ஆனால் மக்களாட்சியிலோ வருண பேதம் போன்று அடுக்கடுக்கான அதிகார அமைப்புகள். ஜென நாயகம் என்பது மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அமைப்பிற்கெல்லாம் தலைமையானது என்று சொல்லும் படிதான் நடந்து கொள்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகளால் மக்கள் ஆட்சிகள் நம்பிக்கையற்றவையாகும் காலம் தொலைவில் இல்லை.

ஜைனப்புக்கு இறை அச்சம் இல்லையாம் !


மணவிலக்கு என்பது மனித உரிமை. மனித பண்பு நலன் போற்றப்படுகின்ற சமூகத்தில் அவற்றைக் காப்பதற்கு மணவிலக்குகள் இன்றியமையாதவை. மனித திருமண பந்தம் என்பது விரும்பிய வாழ்க்கை என்பதைவிட வெறுக்கத் தக்க வாழ்கை இல்லை என்ற அளவில் அந்த பந்தம் அறுபடாமல் தொடர்கிறது, மண வாழ்க்கை வெறுப்பாகவும், சகித்துக் கொள்ள முடியாத நிலையில் தொடரும் போது வாரிசுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மணவாழ்க்கை கசப்பாக இருந்தாலும் அவை தொடருகின்றன. வாரிசுகளுக்காக சகித்துக் கொள்ளுதல் என்பதில் கூட ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தான், ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையும் இன்றியமையாதது என்பதில் வாரிசுகளின் நலன் இரண்டாம் இடத்திற்கு செல்லும் போது மணவிலக்குகள் நடைபெறுகின்றன. தனிமனித நலன் என்று பார்க்கும் போது இது தவறு இல்லை. பிரச்சனை முற்றும் போது பொறுக்கமுடியாமல் என்றோ ஒரு நாள் கொலை / தற்கொலை என்னும் போது பாதிக்கப்படாத வாரிசுகள் மணவிலக்கினால் பாதிக்கப்பட்டுவிடுவார்களா ? என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டால் மணவிலக்கு பற்றிய முடிவின் போது வாரிசுகள் பற்றிய கேள்விகள் பின்னுக்கு தள்ளப்படும்.

நண்பர் சுவனப்பிரியன் 'விவாகரத்தில் முதல் 10 இடத்தை பெற்ற நாடுகள்' என்று ஒரு பதிவை இட்டு அதில் இஸ்லாமிய நாடுகளின் பெயர்கள் இல்லை என்று புளகாங்கிதம் அடைந்திருக்கிறார். முதலில் மணவிலக்கு செய்யப்படும் நாடுகளில் மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றன என்பதை இவர் புரிந்து கொண்டு இருக்கிறாரா என்றே தெரியவில்லை, இரண்டாவதாக மணவிலக்கு குறைவாக உள்ள நாடுகளில் மணவிலக்கு செய்துவிட்டு தனித்து வாழும் ஒரு சூழல் இருக்கிறதா என்று இவர் ஆராய்ந்து பார்த்தாரா என்றும் தெரியவில்லை, இவர் குறிப்பிடும் சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் ஒரு பெண் தனித்து வாழவே முடியாத நிலையில் ஆணைச்சார்ந்து வாழும் வாழ்கை என்பதில் மணவிலக்குகள் நடைபெற சாத்தியமே இல்லை என்பதைத் தவிர்த்து வேறு என்ன காரணிகள் இருக்க முடியும் கணவன் நான்கு திருமணம் செய்து கொண்டாலும் தலையிட முடியாத நிலைதான் முதல் மனைவியின் நிலை. இதில் அவள் எங்கிருந்து மணவிலக்கை நினைத்துப் பார்ப்பாள் ? பொருளாதாரத்திற்கு ஆணைச் சார்ந்திருக்கும் அடிமைகளாக பெண்கள் இருக்கும் சமூகத்தில் மணவிலக்கு குறைவாக இருக்கும், ஆனால் கள்ளத் தொடர்புகள் உள்ளிட்ட மற்ற தற்சமூக சீர்கேடுகள் மிகுதியாக இருக்கும். வெளி உலகுக்கு கட்டுப்பட்டவர்களாக காட்டப்படுபவர்கள் கட்டி வைத்து தான் காட்டப்படுகிறார்கள் என்பது நாம் அறியாத ஒன்றா ?

கள்ளத் தொடர்புகள், நம்பிக்கை துரோகம், அடித்து துன்புறுத்தி (இஸ்லாம் கணவன் மனைவியை லேசாக அடிக்கலாம் என்று உரிமை வழங்கியுள்ளது, அந்த லேசாக என்பதைக் குறித்த அளவுகளையெல்லாம் பெண் பிள்ளைப் பெற்ற அப்பனைத் தான் கேட்கவேண்டும்) வைத்திருத்தல், கொலை, தற்கொலை இவற்றையெல்லாம் விட ஒத்துவரவில்லை என்றால் மணவிலக்கு பெற்று பிரிந்து போவதில் என்ன பெரிய தவறும், சமூகக் குற்றமும் இருக்க முடியும் ?

மணவிலக்கு என்பது சமூக சீர்கேடாகவும், மேற்கத்திய கலாச்சார நுழைவு என்று காட்டப்படுவதன் காரணம் என்ன ?

நடுத்தர வர்க்கம் என்னும் ஒரு போலி சமூகம் உருவாகாத காலத்தில் மணவிலக்குகள் மிகச் சாதாரணமானவையே, ஒரு ஆலமரத்தடியில் நாட்டமையின் தீர்ப்பாக 'வெட்டி விடுதல்' நடைபெறும். ஆண் மற்றும் பெண்ணுக்கு உழைப்பு இன்றியமையாததாக இருந்த காலத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழுதல் என்பது குடும்பம் என்னும் ஒரு அமைப்பில் இருவரும் வாழ்ந்து சந்ததிகள் பெருக்கிக் கொள்ளத்தான் என்பதன் புரிந்துணர்வு இருந்தது, ஒருவருக்கு ஒருவர் ஒத்துவரவில்லை என்றால் ஒரே நாளில் பிரிந்து போய்விடுவார்கள், அவர்களுக்கு மறுமணமோ, விரும்பியவருடன் வேறொரு வாழ்கையோ நடைபெற்று தான் வந்ததன. இன்றைக்கும் கிராமங்களில் இருந்து நீதிமன்ற வழக்காக மணவிலக்கு வழக்குகள் செல்வது கிடையாது. இன்றைக்கு நடுத்தரவர்கம் என்னும் போலி சமூக வர்க்கமும் உருவாகிய பிறகு மணவிலக்கு என்று பேசுவதே பாவம், கெடுதல், கலாச்சார சீர்கேடு என்பது போன்ற கருத்துகள் பரவலாகப்பட்டன. நடுத்தர வர்க்கத்து கனவுகள் தான் இன்றும் திரைபபட வடிவமாக முன்வைக்கபடுகின்றன, நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியில், தனி மனித உரிமை என முன்னேறி மேல் தட்டு நிலையை அடையும் போராட்டம் நடந்தே வருகிறது. தனக்கும் கீழாக இருக்கும் கீழதட்டு மக்களை பின்பற்றி மணவிலக்கு செய்து கொள்கிறார்கள் என்று சொல்வது கூட தம்மை தாழ்வானதாக்கிவிடும் என்று கருதும் நடுத்தரவர்க்கம், அதனை ஞாயபடுத்தி அதே சமயத்தில் பட்சாதாபம் ஏற்படுத்தும் முயற்சியாக மேற்கத்திய கலாச்சாரம் நுழைந்து தம் சமூகத்தைக் கெடுத்துவருவதாக புலம்பிவருகிறது. ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி அந்த சமூகத்திற்கு பிற சுதந்திரங்களையும் சலுகைகளையும் வழங்கிவிடும் அவற்றில் ஒன்று தான் ஒத்துவராத திருமண பந்தங்களை விலக்கிக் கொள்ளும் உரிமை.

மணவிலக்கிற்கும் இறை அச்சத்திற்கும் என்ன தொடர்ப்பு ? அடி உதை வாங்கிக் கொண்டு திருமண பந்தம் தொடரப்பட வேண்டும் என்பது தான் இறை அச்சங்கள் சொல்லும் தீர்ப்பா ? வஹாபிய விளம்பர விளம்பி திரு சுவனப்பிரியன் இவ்வாறு தான் கூறுகிறார். அதாவது இறை அச்சம் மிக்க இஸ்லாமியர்களிடமும் இஸ்லாமிய நாடுகளிலும் மணவிலக்கு குறைவாம் நல்ல வேளை இல்லவே இல்லை, இஸ்லாம் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் கிளப்பிவிட்ட வதந்தி என்று சொல்லாதவரை. இவர் வாதம் காலில் கொஞ்சமாக ஒட்டிக் கொண்டிருக்கும் 'பீ' நாறாது, இருந்துவிட்டு போகட்டும். ஒருவேளை 'தலாக் தலாக் தலாக்' சொல்வது மணவிலக்கு ஆகாது என்று கருதுகிறாரோ.

இறை அச்சம் மணவிலக்கு வேண்டாம் என்று சொல்கிறதா ?

இஸ்லாமியர்களின் ஹதீது அறிவிப்பாளர்களில் ஒருவர் மற்றும் அவர்களால் இஸ்லாமிய அன்னையர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜைனப்(ரலி), இவர் முகமதுவின் வளர்ப்பு மகன் ஜையதுவின்(ரலி) மனைவியாகவும் வாழ்ந்தார். பின்னர் மணவிலக்கு பெற்று முகமதுவிற்கே மனைவி ஆனார், அதை ஞாயப்படுத்த அல்லாவே தனிக் குரானெல்லாம் இறக்கி இருக்கிறார். அதில் கூட இறை அச்சம் இல்லாதால் ஜைனப் மணவிலக்கு பெற்று முகமதுவை மணந்து கொண்டார் என்று சொல்லபடவில்லை, பிறகு எப்படித்தான் சுவனப்பிரியர் மணவிலக்கிற்கும் இறையச்சத்திற்கும் முடிச்சுப் போடுகிறார் என்றே தெரியவில்லை, இதை ஒத்து ஓத நான்கு வகாபிகளின் பின்னூட்டம் அதில் என்னை இழுத்து நக்கல் வேறு அடித்து இருக்கிறார்கள்.

பட்டப் பகலில் பூனை கண்ணை மூடாவிட்டாலும் பூளோகத்தின் மறுபகுதி இருட்டாகத்தான் இருக்கும், 

Malaysian Muslim Divorce Rate Up: Muslim Couple Splits Every 15 Minutes



என்னைப் பொருத்த அளவில் இந்தத் தகவல் மலேசியாவில் மனித உரிமைகளை மதிப்பதில் வளர்ச்சி கண்டுவருகிறது. குறிப்பாக பெண்கள் வேலை வாய்ப்பில் இருப்பதால் அவர்களால் பொறுத்தமற்ற மணவாழ்கையை உதறிவிட முடிகிறது என்று கருதுகிறேன். 

பின்குறிப்பு : இதை நான் மதவாதமாகவோ , மதம் சார்பிலோ, அல்லது குறிப்பிட்ட மதத்தை தாக்க வேண்டும் என்றோ எழுதவில்லை, அடிப்படை வாதிகள் சமூகக் கருத்தை திணிக்கும் போது அவற்றிற்கு பதில் சொல்வது 1400 பழமை வாத சிந்தனைகளை நீர்த்துப் போக வைக்கும் என்கிற நம்பிக்கையால் எழுதுகிறேன். எனது இடுகைகளில் கண்டிப்பாக புதிய சிந்தனைகளுக்கு ஓரிருவரிகளாக வாய்பளிக்கும், இதை எதோ சுவனபிரியனுக்கு எழுதிய எதிர்பதிவாக நினைக்க வேண்டாம். சுவனப்பிரியன்கள் போன்றோர் வலைப்பதிவுகள் எழுதாமலும் இருப்போர், அவர்களும் ஆதரங்கள் இன்றி விவாதிக்கும் போது இதை எடுத்துச் சொல்லுங்கள். 

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயக்கப்பட்டால் மறுமணங்கள் எங்கு நிச்சயக்கப்படுகின்றன ?

25 மே, 2012

மேம்பட்டுவரும் திருநங்கைகள் சமூகம் !


ஆனந்த விகடன் வலைபாயுதே பகுதியில் எனது வலைப்பதிவு பற்றி குறிப்பிட்டு இருந்த போது திருநங்கைகள் குறித்து நான் எழுதி இருந்ததன் வரிகள் இடம் பெற்றிருந்தன.  

"உலக முன்மாதிரியாக தமிழக கிறிஸ்தவர்கள் திருநங்கை ஒருவரை ஆயராக ஆக்கியுள்ளனர், திருநங்கைகளை அர்சகராக ஆக்குவதால் ஏற்கனவே கூந்தல் உள்ளவர்கள் என்ற முறையில் அப்பணிக்கு கொண்டை போட்டுக் கொள்வது எளிது மேலும் ஆண் அர்சகரைப் போன்று மேலாடை இல்லாத அரைமனிதனாக வலம் வந்து அருவெறுப்பை ஏற்படுத்தாமல் இருப்பார்கள், மூன்று நாள் வீட்டு விலக்கு மாதவிலக்கெல்லஅம் அவர்களுக்கு கிடையாது என்பதால் இந்துமதம் சொல்லும் தூய்மைக் கேடும் ஏற்படாது, பார்பன அர்சகர்கள் இதனை எதிர்த்தாலும் பிற கோவில்களில் பூசாரிகளாக அவர்களை பணிக்கலாம், எந்த ஒரு ஆகமவிதிகளிலும் திருநங்கை அர்சகராகும் / பூசாரி ஆவதை தடுக்கும் கட்டுப்பாடுகள் கிடையாது என்றே நினைக்கிறேன். நாயகிபாவம் என்ற ஒரு வழிபாட்டு வழக்கம் இந்து மத வழக்கங்களில் ஆண் கடவுளை கணவனாக நினைத்து உருகும் முக்தி தேடும் வழிகள் இருக்கிறதாம், அவற்றைச் செய்ய சரியானவர்கள் திருநங்கைகள் தான்"

கூத்தாண்டவர் திருவிழாவில் கூடும் திருநங்கைகளை கேலிப் பொருளாக பார்த்துவரவும், அவர்களிடம் சில்மிசம் செய்யவும் செல்வோர்கள் அதிகம். இத்தகைய அவமான அங்கீகாரம் தவிர இந்து மதம் சார்பில் திருநங்கைகளுக்கு பெரிய அங்கீகாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

திருநங்கைகள் குறித்த பல்வேறு தரப்பினர்கள் கூறும் கருத்துகள் கவனமாக படிக்கப்படுகிறது என்பதைத்தான் ஆனந்தவிகடனில் அந்த தகவல் இடம் பெற்றிருந்த போது தெரியவந்தது. பாதிரியார் ஆன திருநங்கை யார் அவர் பெயர் என்ன, எந்த சூழலில் அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது  போன்ற தகவல்கள் அந்தப் பதிவை  எழுதும் போது எனக்கு கிடைக்கவில்லை, நேற்று விஜய் தொலைகாட்சியில் 'குற்றமும் பின்னனியும்' என்ற நிகழ்சியின் இரண்டாம் பாகமாக பாதிரியார் ஆன திருநங்கையைப் பற்றீய தகவல்களை, அவரது பேட்டியுடன் கொடுத்தனர், இவற்றைக் காட்டவேண்டிய நிகழ்ச்சியின் பெயர் சற்று உறுத்தல் என்பது தவிர்த்து, அது பலரும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி என்பதால் அதில் அந்தத் தகவல் வந்திருந்தது பலரை அடைந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 'பாரதி ராஜா' என்ற பெயரில் ஆண் குழந்தையாகப் பிறந்து வழக்கம் போல் திருநங்கைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளால் தன்னை ஒரு பெண்ணாக நினைக்கத் துவங்கி பல்வேறு சிக்கல்கள், குடும்பத்தினரின் வெறுப்பு, கோபம் ஆகியவற்றை எதிர்நோக்கத் திறன் இல்லாமல் சென்னைக்கு வந்து பிற திருநங்கைகளுடன் சேர்ந்து கடை கேட்கும் (கை தட்டி பிச்சை எடுத்தல்) செய்து வந்தாராம், அதில் ஏற்பட்ட அவமானங்கள் 'எவ்வளவு பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்த எனக்கு இவ்வளவு அவமானமா ?' கூனிக் குறுகி தத்தளிக்கும் போது, சமூக ஆர்வலர் மூலமாக ஒரு கன்னியாஸ்திரி அறிமுகமாக அவர் வழியாக கிறிஸ்துவ சமய்ப் படிப்பைப் மதுரையில் தங்கிப் படித்துவிட்டு. அவரின் பரிந்துரையின் மூலமாக செங்கல்பட்டு கிறிஸ்துவ சமய ஆயர் என்னும் பதவியைப் பெற்று இறைப் பணி செய்துவருகிறார்.

நேற்று அவர் பேட்டியைப் பார்க்கும் போது அவருடைய கண்ணில் அதன் பெருமிதம் தெரிந்தது, மறைவாக பாலியல் தொழில் அதில் அடி உதை, பொய் வழக்கு, பாலியல் நோய், கடன், கொலைகள் என்பதாகத்தான் அவரைப் போன்ற மற்ற திருநங்கைகளின் வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது என்பதைப் நினைக்க அவரது பெருமிதத்தின் மீதான பொருள் ஆழமாக விளங்கியது.

பாரதி பாதிரியாக இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் பாரதியை ஒரு பெண்ணாகவும், மதபோதகராகவும் பார்த்து மிகவும் மரியாதையாகவே நடத்துகின்றனர் என்பதையும் நிகழ்ச்சியில் காட்டினார்கள், 'என் தம்பி தனது திருமணத்திற்கு வரக்கூடாது என்று கூறினான், ஆனால் இன்றோ என் தலைமையில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன, இது எனக்கும் திருநங்கைகள் சமுகத்திற்கும் பெருமையானது' என்று கூறினார் பாரதி.

ஆண் உடல் வலிவும் பெண் மனமும் இருப்பதால் அவர்களால் பண்பாட்டு கலைகளை நல்ல முறையில் வளர்க்க முடியும். ஆனால் சமூகம் தான் அவர்களை பாலியல் தொழிலில் தள்ளிவிட்டு தொடர்ந்து அவமானமும் படுத்துகிறது. ஆண் பெண் செய்யக் கூடிய அனைத்து வேலைகளையும் இவர்களால் செய்ய முடியும், தலைமை ஏற்கவும் முடியும். அவர்களை செயல்படவிடாமல் முடக்கி வைத்திருப்பது அவர்களுடைய பெற்றோர்களும், பின்னர் சமூகமும் தான். பாரதி மூலமாக திருநங்கைகளுக்கு தன்னம்பிக்கையும், பொதுமக்களுக்கு மாற்றுப் பார்வையும், அவர்களை சமூகத்தின் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையும் வாய்க்கும் என்றே தெரிகிறது, இது ஒரு நல்ல முன்னோட்டம். ஆனால் இதையும் மதப் பிரச்சாரத்திற்கு திருநங்கையை வளைத்த கிறிஸ்துவம் என்று தூற்றி அவர்களை இழிவுப்படுத்தத் தான் முயல்வர். ஏனென்றால் மதவெறி மனிதாபிமானங்களை என்றுமே மதித்தது இல்லை, இதைவீடக் கொடுமையானது இஸ்லாமிய சமூகம் திருநங்கைகள் முற்றிலுமாகவே நிராகரிக்கிறார்கள், வெறும் நம்பிக்கை தான் என்றாலும் ஆதாம் ஏவாள் இல்லாமல் தனித்து உருவாக்கப்பட்டது அவனுள் சரிபாதி பெண்மை இருந்தது, திருநங்கையாக இருந்தான் என்றாவது ஒப்புக் கொண்டால் திருநங்கைகள் பற்றிய தெளிவாவது கிடைக்கும். சிந்திப்பவர்களுக்கு இதில் நல் அத்தாட்சி இருக்கிறது என்று கூறி இதை நான் மத அரசியலாகத் தொடரவிரும்பவில்லை, 

தகவலின் சாரம் திருநங்கைகளை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை மனிதனாக மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதே, அவர்கள் முன்னேற்றம் தொடர்வது சமூகம் தன்னை மாற்றிக் கொண்டு இருப்பதன் அடையாளமாகத் தெரிகிறது. ஆஷா பாரதி, நர்தகி நட்ராஜ், லிவிங்க் ஸ்மைல் வித்யா, சிஙகப்பூரில் ஒரு குமார், இப்படிக்கு ரோஸ் என்று திருநங்கைகள் பிரபலங்களாக வளர்ந்துவருகிறார்கள், அவர்களுக்கு மகுடம் வைத்தது போல் பாதிரியாராக பாரதி. தமிழ் சமூகம் நாட்டிலேயே முன்னோடியாக திருநங்கைகளுக்கு வழி அமைத்துக் கொடுத்திருப்பதால் பண்பாட்டு வளர்ச்சியில் நாம் முன்னோடி என்பது நமக்கு பெருமையானது. நல்வாழ்த்துகள்


24 மே, 2012

'சுன்னத்' - சுவனப்பிரியன் செய்த அறுப்பு வாதம் !

நண்பர் சுவனப்பிரியன் தனது மதம் சார்ந்த பிரச்சாரங்களை மதம் சார்ந்தது என்று எழுதாமல் மாற்றுவழியில் மனிதனுக்கு மகத்தான நன்மை என்ற ரீதியில் சுன்னத் பற்றி ஒரு பதிவை எழுதி இருக்கிறார். இதே போன்ற அவரது பதிவுக்கு எதிர்வினை ஏற்கனவே எழுதப்பட்டது என்றாலும், அவரது மத ரீதியிலான பொய் பிரச்சாரங்களை அவ்வப்போது நாமும் விமர்சிப்பதன் மூலம் அவரது பிரச்சாரங்களை முறியடிக்க முடியாவிட்டாலும், அவரது பதிவைப் படித்துவிட்டு 'மாட்டிக் கொள்ளாமல்' பாலியல் தொழிலாளியை நாடி உயிர்கொள்ளி நோயை ஒரு சிலர் ஆட்கொள்ள நேர்ந்தால் தடுக்க முடியும் என்பதால் இதை மீண்டும் எழுதுகிறேன், மற்றபடி அவர் பதிவை எவரும் பெருட்படுத்தமாட்டார்கள் என்றால் எனக்கு ஒன்றும் இல்லை.

சுவனப்பிரிய ன் முதலில் பதிவுக்கு தலைப்பு ''சுன்னத் பண்ணுங்க! எய்ட்ஸை விரட்டுங்க!' ' என்று தான் வைத்திருந்தார், பின்னர் ' 'சுன்னத்'(கத்னா) பண்ணிக் கொள்ளும் ஜிம்பாப்வே எம்பிக்கள்!' என்று மாற்றியுள்ளார்.

சுன்னத் எய்ட்ஸ் நோயை தடுக்குமா ? என்பதற்கு முன்பு சுன்னத் வரலாறு பற்றிப் பார்ப்போம், ஆண்களுக்கு ஆண்குறியின் முன் தோலை அகற்றிக் கொள்ளும் பழக்கம் யூத இனத்தின் பழக்கமாக இருந்தது, இதற்கு அடிப்படைக்காரணம் கடும் குளிர் மற்றும் வரட்சி ஆகிய காரணங்களுக்காக அவர்களிடையே குளிக்கும் பழக்கமும் குறைவாக இருந்தது, அதனால் பருவமடைந்த ஆண்களுக்கு ஆண்குறியில் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட்டு அதற்கான தீர்வு முந்தோலை அகற்றிக் கொள்ளுதல் என்று வழக்கமாக பின்னர் மதக்கடமைகளில் ஒன்றாக வழியுறுத்தப்பட்டது, பூணூல் அணிந்தவர் 'உயர்ந்தோர்' என்று பரப்பட்டதைப் போல் சுன்னத் செய்து கொள்ளாதவர்கள் அசுத்தமானவர்கள் என்ற கருத்து யூதர்களிடம் இருந்து பின்னர் அவ்வாறு செய்து கொள்ளாதவர்களை விமர்சனம் செய்யும் அளவுக்கு ஆனதும், ஏற்கனவே யூத மதம் என்கிற நிறுவனத்தை துவங்கியவர்கள் என்ற நிலையில் யூத இனம் மேலனதாகவும், அவர்களது செயல்கள் உயர்ந்த பண்பு நலன் சார்ந்த, நாகரீகமேன்மை பட்டதாகவும் அரபுக்களிடமும், ரோமானியர்களிடமும் ஒரு எண்ணத்தை தோற்றுவித்தது, பின்னர் யூத மதப்பிரிவுகளாக கிறிஸ்தவமும், இஸ்லாமும் பிரிய 'சுன்னத்' செய்து கொள்வது மதப் பழக்கம், ஒழுக்கம் சார்ந்தவை என்பதாக கொள்கையாக்கிக் கொள்ளப்பட்டது. 19 நூற்றாண்டிற்கு முன்பே கிறிஸ்தவ பிரிவு சுன்னத் செய்து கொள்ளும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டது, இன்றைய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் யூதர்கள் அல்லாத கிறித்துவர்களில் சுன்னத் செய்து கொள்பவர்கள் 5 விழுக்காட்டிற்கும் குறைவே.

சுன்னத் செய்து கொள்ளாத ஐரோப்பிய பிரபலங்கள் Famous Intact Men குறித்த தகவல்களை அந்த இணையத் தளத்தில் காணலாம்.

இஸ்லாமியர்கள் சுன்னத் பழக்கம் கைவிடப்படாமல் இருப்பதற்குக் காரணம் ? வேறு ஒன்றுமே இல்லை, அவை குரானிலும் கதீசிலும் சொல்லப்பட்டு கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது என்பது தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை. குரான் கட்டளையை மீற அவர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் அவர்களால் அந்தப் பழக்கத்தை விட்டொழிக்க முடியாது. அதை ஞாயப்படுத்தச் சொல்லி யாரும் கேட்காவிட்டாலும், நெற்றியில் கிரல் விழுந்த ஒருவர் உலகில் உள்ள எல்லோருக்கும் அதே கீரல் இருந்தால் தன்னைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள் என்பதாகத் தான் இவர்கள் அதை மற்றவர்களுக்கு 'பரிந்துரை' செய்கிறார்கள்.

சுன்னத் செய்து கொள்வது எய்ட்ஸ் பரவலை தடுக்கிறதா ?

இதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை, காரணம். எய்ட்ஸ் பரவல் பாதுகாப்பற்ற பாலியல் உறவால் பரவுகிறது என்றாலும், அவ்வாறு பாதுக்காப்பற்ற பாலியல்உறவை நாடும் சுன்னத் செய்யப்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றிக் கொள்ளாது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. சுன்னத் செய்யப்பட்ட ஆண் ஒருமுறை பாலியல் தொழிலாளியை நாடி நோயைத் தொற்றிக் கொள்ளவில்லை என்றால் அடுத்த் முறை அவர் கவலைப்படாமல் செல்லலாம் என்று சொல்ல ஒன்றும் இல்லை. உலக சுகாதார நிறுவனங்கள் இத்தகைய பொய் பிரச்சாரங்களை நிராகரித்துவருகின்றனர், மாறாக பாதுக்காப்பான பாலியல் உறவை நாடச் சொல்லுகிறார்கள்.

மனைவியர் தங்கள் கணவனை சுன்னத் செய்து கொள்ளச் சொல்வது 'நீ பாலியல் தொழிலாளியிடம் சென்றுவருவதை நான் மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறேன்' என்பதே ஆகும், கணவனின் வருமானம் மட்டும் போதும் எங்கு 'போனாலும்' கவலை இல்லை என்று எந்த ஒரு மனைவியும் நினைக்கமாட்டாள். படிப்பறிவு இல்லாதவர்களுக்கு எய்ட்ஸ் என்பது காற்றில் பரவும் நோய் சுன்னத் செய்து கொள்ளாதவர்களை அது 'கப்' என்று பிடித்துக் கொள்ளும் என்ற தகவல் பரப்பட்டாலன்றி அறிவுள்ள எவரும் நன்றாக ஒழுக்கமாக நடந்து கொள்ளும் கணவனை நீ அறுத்துக் கொண்டு வா என்று சொல்லமாட்டார்கள், ஒருவேளை ஆப்பிரிக்க பெண்களுக்கு எய்ட்ஸ் காற்றில் பரவும் நோய் என்று சொல்லப்பட்டதோ ?

கணவர்களான ஆண்களுக்கு சுன்னத் வழியுறுத்தும் சுவனப்பிரியன் மனைவியர்களான பெண்களுக்கு என்ன வழியுறுத்துவாறோ ? ஆப்பிரிக்க நாடுகளில் செய்யப்படும் பெண்களுக்கான சுன்னத் ?

*****

சுன்னத் செய்வது என்பது காட்டுமிராண்டி பழக்கம், இதை மதப் பழக்கம் என்றால் அதில் சொல்வதற்கு விமர்சனம் செய்ய ஒன்றும் இல்லை, அலகு குத்தி காவடி எடுப்பதற்கு என்ன விமர்சனமே அதே போன்றதுதான், அது அம்மதப் பழக்கவழக்கம் யாருக்கும் விமர்சனம் செய்யும் உரிமை இல்லை, செய்து கொள்பவர்களுக்கு இல்லாத அக்கரை நமக்கு ஏன் என்று விட்டுவிடலாம். ஆனால் அது பொதுவானது, கடைபிடிக்க வேண்டியது என்னும் போது தான் நாம் விமர்சனம் செய்கிறோம், மதக் கடமை என்றாலும் இவை காட்டுமிராண்டி பழக்கம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. காரணம் ?

முதலில் சுன்னத் செய்து கொள்வதோ உடலில் ஏதேனும் மாற்றம் செய்து கொள்வதோ அவரவர் விருப்பம் என்றாலும் இவை ஒருவரிடம் அவருடைய அனுமதி பெறாமல் செய்வது கொடுமையான ஒன்று, குறிப்பாக ஆண் குழந்தைகள் பிறந்ததும் இரண்டு வயதிற்குள் மதக் கடமை என்று நிறைவேற்றிவிடுகிறார்கள், அதில் குழந்தைக்கு என்ன விருப்பம் இருக்க முடியும் ? ஒரு ஆண் வளர்ந்த பருவ வயதில் மதக் கடமை ஒன்று இருக்கிறது நிறைவேற்றுவது உனது கடமை என்று சொன்னால் அவனுடைய விருப்பம் பற்றி கேட்கும் ஒரு வாய்ப்பு அது பற்றிய மத ரிதியிலான புரிந்துணர்வும் அவனுக்கு இருக்கும், அவனுடைய அனுமதியுடன் அதை செய்துவிடமுடியும், ஆனால் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளை மதக் கடமைகள் என்று கூறி அறுத்துப் போடுவதை (Child Abuse) மதக் கடமை என்று நியாப்படுத்தினாலும் அதை காட்டுமிராண்டித் தனம் என்று விமர்சனம் செய்வதில் தவறே இல்லை.

*****

ஒரு சில ஆண்களுக்கு பிறவி குறைபாடாக முன் தோலை பின்னுக்கு தள்ள முடியாத நிலையில் மருத்துவ தீர்வாக சுன்னத் செய்யப்படுகிறது, மற்றபடி நல்ல நிலையில் இருக்கும் ஆணை அறுத்துக் கொள்ளச் சொல்வதில் எந்த ஒரு அறிவார்ந்த செயலும் இருப்பதாகத் தெரியவில்லை, பாலியல் நோய் பற்றிய விழிப்புணர்வில் பாதுகாப்பான உடல் உறவுக்குத்தான் வழியுறுத்த வேண்டுமே அன்றி சுன்னத்தை முதன்மைத் தீர்வாக செல்வது அறியாமையின், மதப்பற்றின் வெளிப்பாடே.

கைவிரல்களில், நகங்களில் அழுக்கு சேராத நாளே இல்லை, கை கழுவி விட்டு தான் சாப்பிடுகிறோம், அதற்காக நகங்களை வேருடன் பிடுங்கிக் கொள்ளுங்கள், கரண்டியால் சாப்பிடப் பழகுகங்கள் என்று யாரும் சொல்வது கிடையாது, ஆண்குறியில் அழுக்குகள் சேர்வது இயல்பான ஒன்று நாள் தோறும் குளிக்கும் போது அதை கழுவ எவ்வளவு நேரமாகும் ? அதைத் தவிர்க்க ஏன் வெட்டிக் கொள்ள வேண்டும் ? என்றோ ஒரு நாள் பல்வலிவரலாம் பற்களை பிடுங்கிக் கொள் நல்லது என்றால் பல்லின் பயன் ? முற்றிலும் இழக்கிறோம். அதே தான் சுன்னத் செய்து கொள்ளும் ஆண்கள் ஆண் உறுப்பின் மென்மையை இழக்கிறார்கள், அதானால் கிடைக்கும் முழுமையான உடல் உறவு மற்றும் தன்னின்ப பழக்கத்தின் முழுச் இன்பத்தையும் இழக்கிறார்கள். ஏற்கனவே சுன்னத் செய்யப்பட்டு உணர்வு நரம்புகளின் உணர்வுகள் குறைந்த நிலையில் அதன் மீது ஆணுறையும் அணிந்து கொள்ளும் ஆண்களுக்கு உடலின்பம் என்பது 50 விழுக்காடு கிட்டுமா ? என்பதே ஐயம். சுன்னத் செய்யப்பட்ட ஆண்குறி ரப்பர் ஆண்குறிகளைவிட சற்று துடிப்பானது என்று மட்டுமே சொல்லலாம், இயற்கை வழங்கிய அற்புதமான முன் தோலை வெட்டிக் கொள்வதால் ஆண்களுக்கும் நட்டம், அதை வெட்டிக் கொண்டு பாலியல் தொழிலாளியை நாடிவாருங்கள் என்று சொல்ல பெண்களுக்கும் நட்டம்.

இவர்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள் ? வேறு என்ன ? மேலே சொல்லி உள்ள 'முகத்தில் கிரல் பட்டவன் நிலையே' நாம் அவர்களைப் பார்த்து பரிதாப்படுவோம், ஆண் குழந்தைகள் சுன்னத் செய்வதிலிருந்து முற்றிலும் காப்பற்றப்படவேண்டும், மதவாத மூடப்பழக்க வழக்கங்கள் முற்றிலும் ஒழிய வேண்டும்.

சுன்னத் செய்யச் சொல்வதைவிட இரண்டு குழந்தைப் பெற்ற ஆணை கு.க செய்யது கொள்ளச் சொல்வது தான் மிக முக்கியமானது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், கள்ளத் தொடர்பில் உருவாகும் கருவையும் தடுக்க முடியும்.

Rights of Parent and Child

Infant circumcision violates the UN Declaration of Human Rights.
Article V, United Nations Declaration of Human Rights states that "No one shall be subjected to torture or to cruel, inhuman or degrading treatment or punishment." It says nothing about circumcision of infants nor when it is chosen by adolescents and adults. This Article is aimed fairly and squarely at the treatment of captives, prisoners and suspects by law enforcement and military authorities. Its only relevance to circumcision is to prohibit this as a forcible treatment of captives or prisoners.
Circumcision, with its proven prophylactic benefits, cannot ever be officially regarded as contravening the UN Declaration when performed by suitably qualified persons at the request of the patient or his legal guardians.
Parents have no right to inflict circumcision on their sons.
Numerous research projects have shown that there is a small net prophylactic (i.e. preventative) benefit from infant circumcision which doesn't accrue if the circumcision is performed after infancy. Furthermore, in a number of cultures the religious or social norm is for boys to be circumcised. If a boy is not circumcised as an infant then these benefits are denied to him.
An infant cannot make his own decision to be circumcised (just as he cannot make his own decisions about immunisation, religious upbringing, choice of schooling, etc). Parents have a right and a duty to make, on behalf of a child, those decisions which he cannot make for himself. It is thus up to the parents to make the decision based on what they see as the benefits and risks. They make many other far-reaching decisions for their children every day, so why not this one too?
Infant circumcision is highly traumatic for the boy.
There is little evidence that circumcision itself is more than slightly stressful for the average baby. All babies cry when they are undressed or restrained. Many babies sleep quite peacefully through their circumcision, whilst others go to sleep contentedly as soon as they are comfortably dressed again after it.
General anaesthetics should normally be avoided with infants, but a small amount of local anaesthetic to provide a dorsal penile nerve block can be used. Most doctors (and all Jewish Mohels) prefer to completely avoid the small risks posed by any anaesthetic agents. Instead, a few drops of wine or a sugar solution pacifier have been found to have excellent results.
A baby's nervous system is not as highly developed as in an older child, although he can feel some pain, neither is his memory. A baby cannot localize any pain from his circumcision; has no sense that his penis is in any way different from any other part of his body; and doesn't remember anything of the circumcision (whereas an older child - say over 2 years old - will localize and remember any pain).

இணைப்பு : 12 Reasons to Say “No” to Circumcision

17 மே, 2012

காணாமல் போனவை - கோவணம் !


பண்பாடு கலாச்சார மேன்மை என்கிற சமூக பூச்சுகளில் காணமல் போவதில் முதன்மையானது பாரம்பரிய உடைகள் தான். விலையும் பொழிவும் மலைக்க வைக்கவில்லை என்றால் பட்டுப் புடவையும் பட்டு வேட்டியும் கூட தமிழர்களிடம் இருந்து காணாமல் போய் இருக்கும், ஏதாவது நிகழ்ச்சி அல்லது கோவிலுக்கு செல்லுவதற்கு என்ற அளவில் அவைகள் இன்றும் நம்மிடையே இருப்பது ஆறுதல். உடைகள் அழகுக்காக ? வசதிக்கா ? என்பதைக் காட்டிலும் தோற்றத்திற்காகவும் நன்மதிப்பிற்காகவும் என்கிற பரிணாமங்களாக அந்நிய ஆடைகளையே அணிந்துவருகிறோம், வெயில் நாடுகளில் வேட்டியில் இருக்கும் காற்றோட்டத்தை நீளக் கால்ச் சட்டை (Pant) தந்துவிடாது. இருந்தாலும் சபை நாகரீகம் என்பதாக வேட்டிகள் புறக்கணிக்கப்படுகிறது, தமிழகத்திலும் வேட்டிக் கட்டி அலுவலகம் செல்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அரசு அலுவலகங்களில் விதித்தடையாக இல்லாவிட்டாலும் வெட்டி அணிந்து செல்வதை யாரும் வரவேற்பது கிடையாது, நான் துவக்கப் பள்ளியில் படித்த காலங்களில் ஆசிரியர்கள் வேட்டி கட்டிக் கொண்டு வருவார்கள், அரசு அலுவலகம் செல்பவர்களில் கனிசமானவர்கள் வேட்டி அணிந்தவர்களாக இருந்தனர். ரொம்பவும் எளிமையான உடை, அதை கை விட்டுவிட்டது பண்பாட்டுக் கூறுகளுக்கு நட்டம் தான். வேட்டியே காணாமல் போன பிறகு கோவணம் ?

வேட்டிக்கு முன்பே காணாமல் போனது கோவணம், வேட்டி அணிந்தவர்கள் பரவலாக கோடு போட்ட உள்ளாடைக்கு (ராமராஜன் டைப் அண்டர்வேருக்கு) மாறி உள்ளாடைகளிலும் நாகரீகம் என்பது நுழைந்து கொள்ள கோவணம் கட்டிக் கொள்வது முற்றிலுமாக மறைந்து போனது, கோவணம் என்பதே இல்லாதவர்களின் ஒற்றை உடை என்ற அளவில் பார்க்கப்பட்டது, எங்காவது வயலில் வேலை செய்பவர்கள், விறகு வெட்டுபவர்கள், சாக்கடைக்குள் இறங்குபவர்கள் தவிர்த்து கோவணம் அணிந்திருப்பவர்கள் எண்ணிக்கை விரைவாக குறைந்தது. 

இடுப்பு சுற்றளவு அளவு பற்றிக் கவலைப்படாமல் இரண்டு முழம் துண்டுத்துணியை இறுக்கமாகவோ, தளர்வாகவோ வசதிக்கேற்ப, அரைஞான் (அரை நாண் - பாதி உடலில் பூணும் கயிறு) கயிற்றில் கட்டிக் கொள்ளும் ஒரு உள்ளாடை என்ற அளவில் இன்றைய நவீன உள்ளாடைகளில் இருக்கும் வசதிகளுக்கு குறைவில்லாமல் மேலாகவே இருந்தது கோவணம். கோவணம் கட்டவதற்கு என்று சுற்றிக் கட்டிக் கொள்ளும் அரைஞான் கயிற்றை மட்டும் இன்றும் பலர் கட்டிக் கொள்கிறார்கள், வெறும் அரைஞான் கயிற்றால் என்ன பயன் என்று தெரியவில்லை, இடுப்பைச் சுற்றிக் கட்டப்படும் கருப்பு அல்லது சிவப்பு நிற பார்பனர் அல்லாதவர்களின் இடுப்புப் பூணூல் போன்று வெறும் வழக்கமாகக் (சம்பிரதாயம்) கட்டப்படுகிறது தமிழக தமிழ் (இந்து) ஆண்களின் அரைஞான் கயிறுகள். சாவியை கட்டுவதற்குக் கூட பயனில்லாத அளவில் அரைஞான் கயிறுகளின் இன்றைய தேவை என்ன வென்றும் தெரியவில்லை.

கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஆண்களின் எளிமையான உள்ளாடையாக இருந்தது கோவணம், தலையில் முண்டாசும், உடலில் சிறிய கோவணம் கட்டிக் கொண்டு வேலை செய்பவர்கள், வேலை முடிந்ததும் குளத்தில் இறங்கி குளித்துவிட்டு இடுப்பு மறைக்க குளத்தில் நின்று கோவணத்தை அவிழ்த்து அலசி பிழிந்து தோளில் போட்டுக் கொண்டு துண்டை நனைத்து பிழிந்து உடலை துவட்டிப் பின்னர், அதனை சுற்றிக் கொண்டு மேலே வந்து கோவணத்தை அங்கேயே காய வைத்து கட்டிக் கொண்டு வீடு திரும்புவார்கள். வெறும் கோவணத்தை அணிந்திருப்பதை அறுவெறுப்பாக பார்க்காத சமூகமாக, அதை காம உணர்வுத் தூண்டுதலாகப் பார்க்காத சமூகமாக, பால் கொடுக்கும் தாய்மார்களிடம் கவர்ச்சி தேடாத சமூகமாகத் தான் தமிழ் சமூகம் இருந்தது, இவற்றில் நாகரீகம் என்பது புக இன்றைய மனச் சீர்கேடுகளும் புகுந்துள்ளதை மறுக்கலாகாது.


இன்றைக்கு ஏதோ ஒரு படத்தில் முன்னனி நடிகர் ஒருவர் கோவணம் கட்டிக் கொண்டு நடித்தால் அது புரட்சி என்ற அளவில் அந்தப் பெருமை நடிகருக்கு கிடைக்கும் அளவுக்கு கோவணம் இழுக்காப்பட்டுள்ளது. இன்றைக்கு ஆண்கள் அணியும் ஜட்டிக்கும் குழந்தைகளுக்கு போட்டுவிடும் டயப்பருக்கும் ஈரம் உறிஞ்சுதல் என்பது தவிர்த்து பெரிய வேறுபாடு இல்லை. கோவணத்தின் பயன் என்பதில் அதன் எளிமை, பராமரிப்பு என்பது தவிர்த்துப் பார்த்தாலும் ஆண்களுக்கு மிகவும் ஏற்ற உள்ளாடை என்றே சொல்லப்படுகிறது, குறிப்பாக விரைகள் மிகவும் குளிர்ந்து போகமல் உடல் சூட்டுடன் நெருக்கமாக வைத்திருப்பதற்கு கோவணம் பயனளிக்கிறதாம், இதன் மூலம் விந்தணுக்களும் உற்பத்தியும் பாதிக்கப்படாமல் இருக்குமாம். உடல் சூட்டை விட விரைகள் 2 டிகிரி குறைவாக இருப்பதால் விந்தணுக்கேற்ற வெப்பம் உருவாக்கப்படுகிறது அதனால் தான் மனித விரைகள் உடலுக்கு வெளிப்புறமாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனாலும் அவை வெளிப்புறமாக இருப்பதால் குளிர்ந்தும் போகும் என்பதால் ஓரள உடலோடு சேர்த்து கட்டி இருந்தால் அதே 2 டிகிரி குறைவான சமநிலை காக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது, இவையெல்லாம் சொல்லக் கேள்விப்பட்டவையே இதற்கு ஆதாரம் என்னிடம் கேட்காதீர்கள். எப்படிப் பார்த்தாலும் கோவணம் பயனற்றது, நகரீகமற்றது என்று சொல்ல ஒன்றும் இல்லை, அவை உள்ளே அணியப்படும் ஆடை என்பதால் ஒருவர் தாம் கோவணம் தான் கட்டி இருக்கிறேன் என்று வெளிப்படுத்த வேண்டியதற்கான தேவையும் இல்லை. பேண்ட் அணிபவர்கள் உள்ளாடையாக கோவணம் அணிந்தால் அவசரத்திற்கு சிறுநீர் கழிக்க அவிழ்க்க கொஞ்சம் மெனக்கட வேண்டி இருக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். மற்றவர்கள் பார்த்துவிடுவார்களே என்பது தவிர்த்து அதில் வேறு நேரடியான பிற சங்கடங்கள் எதுவும் இல்லை.

*****

ஒரு பக்கம் நாம் கோவணத்தை புறக்கணித்தாலும் ஜப்பானிய பாரம்பரிய உள்ளாடை என்ற அளவில் அவர்களிடையே கோவணங்கள் கட்டும் வழக்கம் இன்றும் உள்ளது, தமிழர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும் மொழி பண்பாட்டு தொடர்புகளில் கோவணமும் ஒன்று, அவர்களுடைய திருவிழாக்களில் கோவணம் அணிந்து கலந்து கொள்ளும் ஆண்கள் மிகுதி, தவிர சுமோ வீரர்கள் கோவணங்களைத் தான் அணிந்திருப்பார்கள், அவர்களின் கோவணம் தமிழர்களின் கோவணங்களைவிட நீளமான துணியால் ஆனது காரணம் அவர்கள் அரை ஞான் கயிறு கட்டிக் கொள்வதில்லை எனவே வேட்டி அளவுக்கு நீளமான துணியை பிரி (திரித்து) அவற்றை இடுப்பில் சுற்றி அதையே கோவணமாக முடிந்திருப்பார்கள். ஜப்பானிய கோமணத்திற்கு அவர்கள் வழங்கி வரும் பெயர் Fundhosi ((இதில் இருக்கும் தோஷி, வேட்டி வேஷ்டி ஆனது போல், வேட்டியின் ஒரு திரிபு என்றே நினைக்கிறேன்), தற்போதைய ஜப்பானிய கோவணங்கள் நாடா வைத்தும் விற்பனைக்கு கிடைக்கிறது.

For traditional Japanese men, fundoshi is THE underwear of choice at summer! We'll reveal you a bit about the currently popular traditional underpants movement! 
Psst, fashion watch, fundoshi have become the hot shit in Japan recently! No wonder, since this Japanese tied underwear for men is being rediscovered for its comfort. Generally, we would associate fundoshi with traditional pants or the formal attire for Shinto festival. However nowadays, there are all kinds of fun variations for men and women — and its sales are soaring! PingMag will introduce to you a fine selection that still leaves modern-day Japanese in awe.
Written by Ayana
Translated by Natsumi Yamane




Heritage
During the Sengoku periodfundoshi used to be a piece of military clothing only worn by the samurai class, but since the Edo periodfundoshi also became widespread among commoners and various historical sources confirm that it established itself as the standard male tied underwear. With the wave of Westernisation after World War II, however, fundoshi gradually went out of fashion to be taken over by western underwear. 
http://komanamkaupinam.blogspot.com/2008/07/fwd-fundoshi-for-blog.html
*****
இன்றைக்கும் கோவணத்தின் பயன்பாடு என்ற அளவில் மலையாளிகளின் கேரள ஆயுர்வேத உடம்பு பிடிப்புக்கு (மசாஜ்) செல்பவர்களுக்கு கோவணம் தான் கட்டிவிடுவார்கள், இரண்டு முழம் 20 செமி அகலத்தில் ஆன வெள்ளைத் துணியின் நிள வாக்கில் இருபுறமும் ஒரு செமி அளவுக்கு மறு முனைக்கு சற்று கீழ் வரை கிழித்து அதை கோவணமாக கட்டிவிடுவார்கள்.


பழனி மலை முருகனை இன்னும் Jocky ஜட்டிக்கு மாற்றாத அளவில் நாம் கோவணத்தை காப்பாற்றி வருகிறோம் :)

இணைப்புகள்:
http://komanamkaupinam.blogspot.com/

14 மே, 2012

கழிவறைச் சின்னங்கள் !

மனிதனுக்கு (ஆண் / பெண் இருவருக்கும் தான்) அமைதி படுக்கை அறையில் கிடைக்கிறது என்றால், உடல் அழுத்தக் குறைவதும், புத்துணர்வும் கிடைப்பது கழிவறையில் தான், இதன் பிறகே பூசை அறையின் முக்கியமெல்லாம், ஒருவீட்டில் நல்லப் படுக்கை அறையும், கழிவறையும் இல்லை என்றால் அங்கு குடி இருப்பது மறைவான தெருவோரங்களில் குடியிருப்பதற்கு ஒப்பானது. பூசை அறைகளின் நறுமணங்களின் முக்கியங்களைவிட கழிவறைகளின் தூய்மையும் உலர்வும் மிகவும் இன்றியமையாதது. நாகரீக மேன்மை என்பதைவிட உலகின் பசிப்பிணி அகற்றமே மனித சமூகத்தின் முதல் நோக்கம் என்பது போல் தூய்மையான கழிப்பிடம் மிகவும் இன்றியமையாதது மற்றும் நோக்கமாகவும் இருக்க வேண்டும். 'தனித்திரு, பசித்திரு' - இதில் முதலில் வரும் தனித்திரு பூசை அறையில் யோக நிலையில் அல்லது தொழுகை / வழிபாட்டில் தனித்திருப்பதைக் காட்டிலும் கழிவறையில் தனித்திருத்தல் தான் தனிமனிதனின் உன்னதமான தேவையாக இருக்கிறது. நல்ல சுகாதாரமான, காற்றோட்டமான கழிவறையில் ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்திருந்தாலும் அதில் கிடைக்கும் மன அமைதிக்கு ஈடு இணையை எந்த ஒரு வழிபாடும் தந்துவிடமுடியாது என்பதை நான் இங்கு பதிக்கிறேன். உண்மையைச் சொல்லப் போனால் உடலின் கழிவேற்றம் உடலுக்கும் மனதிற்கும் சிறு இன்பத்தைத் தான் கொடுக்கும், அந்தக் கழிவு உயிர்நீர், சிறுநீர் மற்றும் உணவுக்கழிவாகக் கூட இருக்கலாம். 


அடக்கமுடியாமல் சிறுநீரை கழிவறைக் கிடைக்கும் வரை அடக்கிக் கொண்டு இருப்போர் கழிவறையில் அதை கழிக்கும் போது கிடைக்கும் தற்காலிக நிம்மதி பெருமூச்சு, அது தரும் புத்தணர்வு சுவையான ஐஸ்க்ரீம் உண்பதைக் காட்டிலும் உடலின்பம் தரக் கூடியவை. மலச்சிக்கல், நீர்கடுப்பு என்பதையெல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஒவ்வொரு முறை கழிவு வெளியேற்றமும் மனிதனுக்கு கொஞ்சமேனும் உடலின்பத்தைத் தூண்டிவிட்டு தான் செல்கிறது. உங்கள் கழிவறை தனிமைகளில் இங்கு படிப்பது நினைவிருந்தால் ஒப்பிட்டுப்பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். அடுத்தது பசித்திரு, பசித்திருக்க உணவு செரிமானமும் அதன் பிறகு வயிறு காலியாகவும் இருக்க வேண்டும். தனித்திரு, பசித்திரு இந்த இரு சொல்லின் பொருளை முழுமையாக உணரவைப்பது ஆழ்மனத்தேடல்களோ, ஆன்மிகத் தேடல்களோ இல்லை கழிவறைகள் தான். பூசை அறைகளைவிட கழிவறைகளின் பரப்பளவும் உள் அலங்காரமும் நன்றாகவும், தூய்மையாக இருக்க வேண்டும். மனித சமூகத்தில் இலட்சியங்களில் ஒன்றாக தூய்மையான கழிப்பிடத்தின் தேவை எங்கும் உணர்த்தப்படவேண்டும். கழிவறைகளை தூய்மை செய்ய முகம் சுளிக்காதவர்களால் தான் இதனை மேம்படுத்த வேண்டும், என்னைப் பொருத்த அளவில் என் வீட்டு கழிவறைகளை நான் கழுவுவதை விரும்பிய செயல்களுள் ஒன்றாகத்தான் செய்கிறேன். பொதுக் கழிவறைகளை கழுவ அழைத்தாலும் என்னால் தயங்கமல் மனம் உவந்து அதைச் செய்ய முடியும். தொற்று நோய்க் கூடம், நெடி என்பது தவிர்த்துப் பார்த்தால் நம் உடலில் உள்ளவை தானே அங்கும். இங்கு கழிவறை என்று பொதுவாக நான் குறிப்பிட்டு இருந்தாலும் அவை குளியல் அறையையும் சேர்த்தே குறிப்பதாகும், வீடுகளில் அவை சேர்ந்து தான் இருக்கின்றது. உடலே ஒரு கோவில் என்பது போல் உடலே கழிவறைகளினாலும் ஆனது என்றும் சொல்லலாம்.

*******

கழிவறைச் சின்னங்கள் ஒவ்வொரு நாடுகளின் ரசனைக்கேற்று வரைந்துள்ளனர், குறிப்பாக உடைகள் அந்தப் பகுதி கலைகள் உள்ளிட்டவை கூட கழிவறைச் சின்னங்களில் காட்சியாக்கப்பட்டிருக்கும். ஒரு காலத்தில் (30 ஆண்டுகளுக்க்கு முன்பு) தமிழகத்தின் பிரபல கழிவறைச் சின்னங்களாக, ஆண் பெண் கழிவறைகளைக் குறிக்க ரஜினியின் தலையையும், ஶ்ரீ தேவியின் தலையையும் வரைந்தோ அல்லது படத்தில் இருந்து வெட்டி ஒட்டியோ வைத்திருந்தனர், இவை பெரும்பாலும் நகர மற்றும் சிறு நகர திரையரங்க பொதுக்கழிவறைகளின் காட்சியாக இருக்கும். இப்போதெல்லாம் நடிகர் நடிகைகளின் படங்களைப் போடுவதில்லை. கரியால் ஆண் / பெண் உருவங்களை வரைந்து வைத்திருக்கின்றனர். ஒரு படத்தில் கூட கவுண்டமணியையும் படத்தில் அவரின் மனைவியையும் படம் பிடிக்கும் செந்தில் அதை திரையரங்க கழிவறைகளில் ஆண் / பெண் கழிவறைக் குறிக்கும் சின்னமாக ஆக்கி வைத்திருப்பார், அதைப் பார்த்துவிட்டு கவுண்டமணி செம டென்சன் ஆகிவிடுவார். கழிவறையின் முகப்புகளில் குறிப்பிட்டவரின் அனுமதி இல்லாமல் அவர்களின் படங்களை வைப்பது தமிழகத்தின் நடைமுறையாக இருந்தது, மற்றும் அதில் இடம் பெறும் படத்திற்க்குரியவர்கள் அதை விரும்பமாட்டார்கள் என்பதும் அந்தக் காட்சியில் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டு இருந்தது. வெள்ளைக்கார சமூகத்தின் அடி ஒற்றிய நாடுகளின் கழிவறை சின்னங்கள் பொதுவானது நீலக் கால் சட்டை அணிந்த ஆண் நிழல் உருவமும், முழுகால் வரை உடை அணிந்த நிழல் பெண் உருவமும் கழிவறைச் சின்னங்களாக இருக்கும்.

சில ரசிக்கத் தக்க நகைச்சுவையான கழிவறைச் சின்னங்கள்.

















மேலும் சில









(வளைகுடா நாடுகளில்?)




கீழே உள்ளதை பார்த்த பிறகு திறந்த ஜிப்போடு வெளியே வருபவர்கள் தான் நினைவுக்கு வந்தது :)


ரொம்ப நகைச்சுவையாக நான் ரசித்தது கீழே



அது அது........


இணைப்புகள் :

வழிபாட்டுத் தலங்களைவிட உயர்ந்தது எது ?


மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்