பின்பற்றுபவர்கள்

6 பிப்ரவரி, 2012

திருநங்கைகள் அர்சகர் ஆக்கப்பட வேண்டும் !

பிறப்பு வழி குறைபாடுகளுக்கு மருத்துவம் முழுமையான தொரு தீர்வை எட்டாத நிலையில் அக்குறைபாடு உடையவர்களை சமூகம் கிண்டல் கேலி செய்யாது ஏற்றுக் கொளல் வேண்டும் என்பதே பொதுவான புரிதல். 'திருநங்கைகள் என்று யாரும் கிடையாது அவர்கள் பெண்களாக தன்னைத் தானே நினைத்துக் கொள்ளும் திமிர்பிடித்த ஆண்கள்' என்று கூறும் ம(ந்)த அறைகுறைகளின் கருத்துகளை நான் நிராகரிக்கிறேன், இந்த ம(ந்)தவாதிகள் உடலியல் குறைபாடுகள் அனைத்திற்கும் மருத்துவ தீர்வு எட்டப்படதா நிலையில் வெறும் பழைமை ம(ந்)தவாத அடிப்படையில் மருத்துவம் தீர்வு சொல்லியதாக நினைத்துக் கொண்டு அவ்விதக் கருத்துகளை பரப்புகின்றனர். உதாரணத்திற்கு ஆண் பெண் என முழு உடல் தகுதி பெற்ற தம்பதிகளுக்கு குழந்தை பிறக்காமல் இருக்க பிறப்பிலேயே கர்ப்பை அல்லது முட்டை உற்பத்தியின்மை அல்லது ஆணுக்கு விந்தனு குறைபாடு ஆகிய ஒன்று தான். இவற்றிற்கான தீர்வுகளை மருத்துவ உலகம் இன்னும் கண்டுபிடிக்காத சூழலில் குழந்தை வேண்டிய அந்தம்பதியினருக்கு மாற்றுத் தீர்வு தத்தெடுத்துக் கொள்ளுதல் தான், இதற்கு விருப்பமில்லாதவர்களை தூற்றுவது அறிவின்மை மட்டுமின்றி அவர்களின் குறை அவர்களுடையது அல்ல அது தீர்க்கப்படாத அல்லது தீர்க்க முடியாத பிறப்பு வழி குறைப்பாடு. திருநங்கைகளின் உடலியல் / மனநிலை / உளவியல் அடிப்படையகளை புரிந்து கொள்ளாதவர்கள் ம(ந்)த வாதிகள் மட்டுமே, இது போன்ற மனித சமூக நல எதிர்ப்பு ம(ந்)த வாத கருத்துகளால் சமூகம் என்றைக்குமே பயன்பெற்றதில்லை என்பதால் அவற்றை புறந்தள்ளிவிட்டு இருக்கின்ற குறைகளை ஏற்றுக் கொள்வதற்கு அல்லது சரி செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

**********

உலக முன்மாதிரியாக தமிழக கிறிஸ்தவர்கள் திருநங்கை ஒருவரை ஆயராக ஆக்கியுள்ளனர் (நியமனம்), இது உண்மையில் பாராட்டக் கூடியதும் தமிழ் நாடு இதற்கு முன்னோடியாக இருப்பதற்கு தமிழர்கள் என்ற வகையில் பெருமைப் படக் கூடிய ஒன்றாகும். இதை வெறும் மதமாற்றச் செயலுக்கான மாற்று உத்தி என்று பார்க்காமல் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு என்ற வகையில் பார்க்கிறேன், கிறிஸ்துவர்கள் கனிசமான அளவில் இருக்கும் திருநங்கைகளை மதம் மாற்றுவதன் மூலம் அவர்களின் மக்கள் தொகையை உயர்த்திக் கொண்டு கனிசமான அளவு வெளிநாட்டு நிதிகளையும் பெற்றுக் கொள்வர் என்கிற மாற்றுக் கருத்து உள்ளவர்கள், அதையே ஏன் இந்து மதத்தினருக்கும் பரிந்துரைக்கக் கூடாது, அவ்வாறு சொல்லுவதற்கான தெளிந்த மனநிலையையில் இருந்தால் திருநங்கையின் ஆயர் நியமனம் கிறித்துவ மிசனரி நடவடிக்கை என்று கூறலாம்.

திருநங்கைகளை அர்சகர் ஆக்கினால் கிடைக்கும் நன்மைகளில் முக்கியமானது

1. பெண்களுக்கு அவர்களால் எந்த வித பாலியல் ரீதியான வன்முறைகள் நடக்காது ( உதாரணம் தேவ நாதன்)
2. பெருமைப் படக் கூடிய வேலை என்பதால் கண்டிப்பாக அவர்களைப் போன்றவர்கள் பாலியல் தொழில் இருந்து திரும்புவர் அல்லது அவ்வாறு செய்வது ஒடுமொத்த திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் செயல் என்று மாற்று வேலைக்கு அவர்கள் செல்லவும் அவர்களுக்கு வேலை வழங்கும் சூழலும் ஏற்படும்
3. இயல்பாக நளினமானவர்கள் என்பதால் கோவில்களின் பரத கலை மற்றும் பிற ஆடல்கலைகளை அவர்கள் நன்கு பயின்று அவற்றையும் வாழவைப்பார்கள்
4. பெண்களின் குணம் அவர்களுக்கு இருப்பதால் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்வர்

கூத்தாண்டவர் விழாவில் ஒருநாள் தாலி கொடுத்து அதைப் பின் அறுத்து எறிய அன்று கேட்கும் அவர்களின் கூக்குரலின், ஓலங்களில் ஒப்பாறியில் அவர்களின் ஒட்டு மொத்தமாக அவர்களின் கடந்த கால வேதனைகளை தீர்த்துக் கொண்டதாக இந்து மதத்தினர் நினைக்கின்றனர். அவை கொஞ்சம் உண்மை தான் என்றாலும் அவர்களின் இழி நிலை மாறி சமூகத்தில் தன்னையும் ஒருவராக இன்றி அமையாதவராக ஆக்குவதன் மூலம் தான் அச்சமூகம் நல்ல நிலையை எட்ட முடியும், இன்றைய தேதியில் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் நோய்பரவல்களில் திருநங்கைகளின் கைங்கர்யம் கனிசமாக உண்டு என்றாலும அவர்கள் வேறு வழியின்றி அல்லது வாழுதல் கட்டாயத்தின் பேரில் அங்கு துறத்தப்படுகின்றனர். அல்லது சமூக எதிரிகளால் அங்கு தள்ளிவிடப்படுகின்றனர்.

திருநங்கைகளை அர்சகராக ஆக்குவதால் ஏற்கனவே கூந்தல் உள்ளவர்கள் என்ற முறையில் அப்பணிக்கு கொண்டை போட்டுக் கொள்வது எளிது மேலும் ஆண் அர்சகரைப் போன்று மேலாடை இல்லாத அரைமனிதனாக வலம் வந்து அருவெறுப்பை ஏற்படுத்தாமல் இருப்பார்கள், மூன்று நாள் வீட்டு விலக்கு மாதவிலக்கெல்லஅம் அவர்களுக்கு கிடையாது என்பதால் இந்துமதம் சொல்லும் தூய்மைக் கேடும் ஏற்படாது, பார்பன அர்சகர்கள் இதனை எதிர்த்தாலும் பிற கோவில்களில் பூசாரிகளாக அவர்களை பணிக்கலாம், எந்த ஒரு ஆகமவிதிகளிலும் திருநங்கை அர்சகராகும் / பூசாரி ஆவதை தடுக்கும் கட்டுப்பாடுகள் கிடையாது என்றே நினைக்கிறேன். நாயகிபாவம் என்ற ஒரு வழிபாட்டு வழக்கம் இந்து மத வழக்கங்களில் ஆண் கடவுளை கணவனாக நினைத்து உருகும் முக்தி தேடும் வழிகள் இருக்கிறதாம், அவற்றைச் செய்ய சரியானவர்கள் திருநங்கைகள் தான்.

திருநங்கைகளை இறைப்பணிக்கு திருப்புவதன் மூலம் சமூகம் அவர்களுக்கு மாறு செய்து முன்பு செய்து வந்த கொடுமைகளின் சாப விமோசனம் பெறும் மற்றும் பாவப்பட்ட பாலியல் தொழில் இருந்து அவர்களும் விடுதலையாவார்கள் என்பது எனது நம்பிக்கை.

7 கருத்துகள்:

dondu(#11168674346665545885) சொன்னது…

உங்கள் பதிவை கிட்டத்தட்ட முற்றிலுமாக ஆதரிக்கிறேன். திருநங்கைகளுக்கு தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பதற்காக அவர்களுக்குத்தான் இட ஒதுக்கீடு வேண்டும், மற்றப்படி பெண்களுக்கெல்லாம் வேண்டாம் என நான் இட்ட பதிவையும் பாருங்கள், http://dondu.blogspot.com/2010/04/blog-post_10.html

ஒரு சிறு டிஸ்கி.
//1. பெண்களுக்கு அவர்களால் எந்த வித பாலியல் ரீதியான வன்முறைகள் நடக்காது ( உதாரணம் தேவ நாதன்)//
தேவநாதன் கேஸ் ஒரு ஃப்ரீக். அவனை உதாரணமாக கொள்வது எம்மட்டில் சரியாக இருக்கும்?

அப்படிப் பேசினால் திருநங்கை அர்ச்சகர்களுக்கு கோவிலுக்கு வரும் ஆண்களால் பாதிப்பு ஏற்படலாம் என்ற வாதமும் எழுமே, அதுவும் இயற்கைக்கு மாறான புணர்ச்சிகளுக்காக?

அன்புடன்,
டோண்டு ராகவன்

சு.பரணி கண்ணன் சொன்னது…

Excellent and Very Good suggestion.

More over they don't have to save money for their heirs so they wont take money from devotees.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்படிப் பேசினால் திருநங்கை அர்ச்சகர்களுக்கு கோவிலுக்கு வரும் ஆண்களால் பாதிப்பு ஏற்படலாம் என்ற வாதமும் எழுமே, அதுவும் இயற்கைக்கு மாறான புணர்ச்சிகளுக்காக?

அன்புடன்,
டோண்டு ராகவன்//

காலம் காலமாக எதோ ஒரு விதத்தில் கோவில்களுடன் திருநங்கைகள் தொடர்பு வைத்திருக்கின்றனர், நான் சிறுவயதில் பார்த்த வில்லிபாரத சொற்பொழிவின் போது கூந்தலை விரித்து அழும் பாஞ்சாலியாக நடிப்பார்கள், அவர்கள் அழும் காட்சி நம்மை உருக்கிவிடுவதாகவே இருக்கும். கோவிலுக்குள்ளும் திருநங்கைகள் மீது ஆசை கொள்ளும் ஆண் மனநோய் பிடித்தவனாக வாய்ப்பு உண்டு, நீங்கள் சொல்வது போல் தேவநாதன் போல் ஒரு எக்ஸப்ப்சன், அதற்காக இவர்களை விட்டுவிட முடியாது

கோவி.கண்ணன் சொன்னது…

//பெண்களுக்கெல்லாம் வேண்டாம் என நான் இட்ட பதிவையும் பாருங்கள், http://dondu.blogspot.com/2010/04/blog-post_10.html//

இந்த விசயந்தில் நீங்களும் உங்கள் குருநாதர் சோ இராமசாமியும் தலையால் தண்ணீர் குடித்தாலும் பெண் சமூகம் கட்சிகளை நடத்தி தலைமை ஏற்று பதவிகளையும் பெறுவதை தடுக்க முடியாது என்பதே. உதாரணம் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ஜெயலலிதா, கவர்னர் அம்மா, மாயாவதி மற்றும் பலர்

கோவி.கண்ணன் சொன்னது…

//More over they don't have to save money for their heirs so they wont take money from devotees.//

நீங்கள் சொல்வது மிகச் சரியானது, கோவில் சொத்தைச் சுரண்டி தனதாக்கிக் கொள்ளும் தேவை அவர்களுக்கு இல்லை.

Unknown சொன்னது…

கருத்து ஆதரிக்கத் தக்கது! ஆனால்,திருநங்கைகள் பங்களிப்பு ஆராதனையோடு நின்றுவிடாமல்,அவர்களுக்கு கல்விகளிலும்,பதவிகளிலும்,கட்சிகளிலும் இட ஒதுக்கீடு அளித்து அதிகாரிகளாகவும்,ஆட்சியாளராகவும் மாற்ற வேண்டும்!

dondu(#11168674346665545885) சொன்னது…

நீங்கள் குறிப்பிடும் அதே இந்திரா காந்தி, சோனியா காந்தி, ஜெயலலிதா, கவர்னர் அம்மா, மாயாவதி மற்றும் பலர் இட ஒதுக்கீடு பெற்று வரவில்லை என்பதைத்தான் நானும் சோவும் உதாரணமாகக் காட்டி பெண்களுக்கு இட ஒதுக்கீடு தேவையேயில்லை எங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கிறோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்