கழுவதா ? துடைப்பதா எது சிறந்தது ? : இதை நான் விளக்கிச் சொல்லத் தேவையில்லை, 'கால் கழுவி வந்தான்' - இடக்கரடக்கல் (நன்றி திரு டோண்டு) என்ற தமிழ் இலணக்கத்தை கற்று தான் வந்திருப்பீர்கள், பொதுவாகவே வெளிநாட்டினரை பேப்பரை வைத்துத் துடைத்துக் கொள்பவர்கள் சுத்தமற்றவர்கள் என்று நம்மவர்கள் கேலி செய்து தமக்குள் நகையாடுவார்கள், அதை வெளிநாட்டுக்காரர்களிடம் சொல்லி இருக்கிறார்களா ? என்று பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை, குளிர் நாடுகளில் கழுவ எப்போதும் சுடுநீர் கிடைக்காத சூழலில் இலை தழை, துணிகளில் துடைத்துக் கொள்ளுதல் எளிய வழியாக இருந்து, நடுங்கும் குளிரில் பச்சைத் தண்ணீரும் குளிராகத்தான் இருக்கும், அதைப் பயன்படுத்திப் பார்த்தால் தான் அந்த கொடுமையே தெரியும். தாள்கள் கண்டுபிடிப்பின் பிறகு தண்ணீர் உறிஞ்சும் தாள்களைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். நாங்களெல்லாம் தண்ணீர் ஊற்றி கையினால் கழுவுவோம் என்று கூறினால் இந்தியர்களுக்கு கைகுலுக்க வருபவர்கள் யாரும் உவந்து கொடுப்பார்களா ? நம்மில் எத்தனை பேர் கழுவும் போதும் கழிவிய பின்பும் சோப்புகளைப் பயன்படுத்துகிறோம், சென்னைப் போன்ற பெருநகரங்களில் கழுவதற்கு ஒரு கப் தண்ணீர் தான் என்ற நிலையில் கைச் சுத்தம் என்று எதைக் கூறுவோம் ? இருந்தாலும் பிறரைப் போல் தான் நாமும் என்பதால் நம் தயக்கங்கள் நம்மிடையே கைகுலுக்களின் போது வருவதில்லை.
நாங்கள் தண்ணீர் விட்டுக் கழுவோம் என்றதும் ஒரு சீனர், அருவெறுபான பார்வையுடன் 'நாங்கள் அங்கே வெறும் கையை வைத்துப் பார்ப்பதையே அருவெறுப்பாக நினைத்து தான் தாளை பயன்படுத்துகிறோம், உங்களால் எப்படி முடிகிறது ? தவிர நீங்கள் கையினால் பிசைந்து சாப்பிடுபவர்கள் அல்லவா ? (நாம அதுக்கென்றே கை ஒதுக்கி வைத்திருப்பது அவர்களுக்கு தெரியாது) வெறுங்கையால் கழுவீர்களா ? என்று கேட்டார், பின்னர் 'சாக்கடையில் கையை விட்டு சோப்பு போட்டு கழுவினாலும் நமக்கு அறுவெறுபாகத் தானே இருக்கும் என்றார் ?' எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை, 'இல்லை நாங்கள் சாப்பிட வேறு கையைப் பயன்படுத்துவோம்' என்று சொல்லும் முன் இரண்டு கையினால் தட்டப்பட்டு சாப்பிடப்படும் மசால் வடை மனசாட்சி தடுத்தது. தண்ணீரில் கழுவதினால் தான் நாகரீகம் என்பது இல்லை, இப்பொழுதெல்லாம் ஈரத் தன்மையுடன் கூடிய உறிஞ்சு தாள் வந்துவிட்டது, அதில் கிரிமி நாசினியும் சேர்த்தே வருகிறது, வெறும் பேப்பரில் துடைப்பதைக் காட்டிலும், தண்ணீரைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் நலமேன்மை கொண்டது, நன்றாக உறிஞ்சு தாளால் துடைத்துவிட்டு பின்னர் தண்ணீரால் கழுவி, பின்னர் கையையும் சோப்புப் போட்டுக் கழுவினால் பின்னர் யாருக்கும் கைகொடுக்கும் முன்பும் மனசாட்சி உறுத்தாது.
*********
விருத்த சேதனம் : நண்பர் சுவனப்பிரியன் மிக அழகாக விருத்த சேதனம் பற்றி கட்டுரை எழுதியுள்ளார், அவர் எழுதியதற்கு எதிர்வினை அல்ல இப்பதிவு, மாறுபட்ட கருத்து மட்டுமே. விருத்த சேதனம் என்றால் என்ன ? எனக்கு தெரிந்து இந்த சொல் பழைய ஏற்பாட்டு பைபிள்களின் மொழிப் பெயர்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது, பின்னர் சிலர் பயனபடுத்துகிறார்கள், பழைய ஏற்பாட்டு பைபிளின் மொழிப் பெயர்ப்பில் நிறைய வடமொழிச் சொற்கள் இடம் பெற்றிருக்கும், விருத்த சேதனம் என்ற சொல் வடமொழியில் 'ஆண் குறி முன் தோல் நீக்கம்' என்பதன் மொழிப் பெயர்ப்பு ஆகும், விருத்தம் என்பது ஆண் குறி - இன 'விருத்தி'க்கான உறுப்பு என்பதன் சுறுக்கம்
சேதனம் - என்றால் சிதைத்தால், அதாவது ஆண் குறி சிதைப்பு என்ற பொருளில் தான் அந்த சொல்லின் வடமொழிப் பொருள் உள்ளது, ஆண் குறியின் முனைவரை மூடியிருக்கும் தோலின் முன்பகுதியை வெட்டி எடுப்பதே விருத்த சேதனமாம். இதை ஆங்கிலத்தில் ( circumsion) என்பர், இதற்கு தமிழில் 'முன் தோல் நீக்கம்' என்று பொருள், இவை தொடர்புடைய இடத்தில் (Contextual) பயன்படுத்தும் போது புரிந்து கொள்ள முடியும் என்பதால் முழுதாக 'ஆண் உறுப்பு முன் தோல் நீக்கம்' என்று எழுதத் தேவை இல்லை. இவ்வாறு எளிதாக புரியக் கூடிய தமிழ் சொற்கள் இருக்க இவை இன்னமும் விருத்த சேதனம் என்றும், சுன்னத் என்றும் சொல்லப்படுவதற்கு காரணம் இவை இன்னமும் மதரீதியான சடங்காக இருக்கிறது என்பதே காரணம். தண்ணீர் கிடைக்காத பண்டையை பலதார பாலைவன தேசங்களில் முந்தோல் நீக்கம் ஆண் குறி கிரிமித் தொற்றினையும் அவற்றினால் ஏற்பட்ட அரிப்பு பாதிப்புகளை ஓரளவு தடுத்தது.
நண்பர் சுவனப்பிரியன் இவை என்னமோ ஒட்டு மொத்த ஆண்களின் தேவை போன்று மிகைப்படுத்தே எழுதியுள்ளார், இதை செய்து கொள்வதால் 60 விழுக்காடு உயிர்கொல்லி (எய்ட்ஸ்) பாதிப்பில் இருந்து பாலியல் தொழிலாளியிடம் சென்று வருபவர்களைக் காக்குமாம். உண்மை என்றாலும் மீதம் 40 விழுக்காட்டிற்கு எந்த உத்திரவாதமும் அதில் இல்லை. இவர் சொல்வதைப் படித்துவிட்டு முன் தோல் நீக்கிக் கொண்டவர்களில் ஒரு சிலர் பத்தாம் பசலியாக இருந்து தொலைந்து பாலியல் தேவைக்காக விலைமாந்தரை நாடுபவராக இருந்தால், அவர் தாம் ஆண் உறை இன்றி நாடமுடியும் என்று எண்ணி செயல்பட்டு நோயையும் நாடிவிடும் ஆபத்து உண்டு.
என்னதான் முந்தோலை வெட்டிவிட்டு ஆண் குறிமுனைப் பகுதி மரத்துப் போய் இருந்தாலும் உடலுறவு நேரங்களில் சிறுநீர்பாதையின் துளை (Urethra) சிறுது திறந்து திறந்து மூடுவதால் பாலியல் கிருமி தொற்றிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது, இது தான் அந்த 40 விழுக்காட்டு ஆபத்து, இதை சுவனப்பிரியன் சொல்லவில்லை,
சுவனப்பிரியன் சொல்லும் 60 விழுக்காட்டு வாய்ப்பு என்பது முந்தோலின் உட்புறத்தில் கிரிமி தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் தான். இவற்றின் பாதிப்பை உடலுறவு முடிந்த பிறகு கழுவதன் மூலம் போக்கிக் கொள்ள முடியும், ஆனால் மேற்சொன்ன 40 விழுக்காடு வாய்ப்பில் முன் தோல் நீக்கியவரும் நீக்காதவரும் தகுந்த ஆணுறை பயன்படுத்தாவிட்டால் ஒன்றே.
முந்தோல் நீக்கம் என்பது யூதர்களாலும், அவர்களின் மத வழியின் பிரிவுகளில் ஒன்றான இஸ்லாமியர்களும் பின்பற்றி வரும் மதச் சடங்கு ஆகும், தற்போது யூதர்களிடையே இப்பழக்கம் குறைந்துவருகிறது, இஸ்லாமியர்களிடம் கட்டாயக் கடமை என்று தெரிகிறது, மற்றபடி இதில் அறிவியல் பயன் மருத்துவ பயன் என்று எதுவுமே இல்லை, முன்பல் நீட்டிக் கொண்டிருபவர்களுக்கு அவற்றை பின் தள்ளி சரி செய்யும் பல் மருத்துவம் போன்றதே, முந்தோலை தள்ள முடியாத மதவழக்கமாக அதை ஏற்கனவே செய்திருக்காதவர்கள் அதை நீக்கிக் கொண்டால் ஆண் குறி விரைப்பின் போது வழி ஏற்படாது,
அடுத்த நீடித்த இன்பம் தர முனைத்தோல் நீக்கம் பயன் அளிக்கிறது என்றும் ஒரு சிலர் சொல்லுகிறார்கள், இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை, காரணம் முன் தோல் நீக்கிக் கொள்வதால் குறி முனை உடல் தோல் போன்று தடிப்பாகி உணர்வு நரம்புகள் கட்டுப்பட்டிருக்கும் என்பதால் அவை உண்மையே என்றாலும் நீடித்த உடலுறவை பெண்கள் விரும்புகிறார்களா ? என்பதும் முக்கியம், பெண் குறி பாறையின் துளை அல்ல அதுவும் உணர்வுச் சதையே தேவைக்கு மிஞ்சிய உராய்வு பெண்ணுக்கு எரிச்சலையே தரும் என்றே நினைக்கிறேன்.
முன்தோல் நீக்கிக் கொள்ளாதன் பயன் என்று மருத்துவர்களாலும், ஆண்களாலும் உணர்ந்து சொல்லப்படுவை, உடலுறவு உராய்வின் போது முந்தோல் முன்னும் பின்னும் நகர்ந்து விரிவதால் ஆண்களுக்கு கூடுதல் இன்பம் கிடைக்கிறது, மேலும் உணர்ச்சி மிக்க ஆண் குறி முனையும் மென்மையும் முந்தோலால் பாதுக்காப்பட்டு மிக எளிதிலேயே விறைப்படைய உதவுகிறது, குறிப்பாக ஆண்களின் சுய இன்பத்தில் முந்தோலின் பங்கு என்னவென்றால் உடலுறவுக்கு நெருக்கமான இன்பத்தைக் கொடுக்கும், ஆனால் இதையெல்லாம் முன் தோலை சிறுவயதில் இருந்தே நீக்கப்பட்டவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது சோகமே.
*********
பாலியல் நோய் பரவலை 60 விழுக்காடு முந்தோல் நீக்கம் கட்டுப்படுத்துகிறது என்பதும் உண்மை என்றாலும் அந்த உண்மை பாலியல் தொழிலாளியை நாடுபவர்களுக்கும் திருமணத்தைத் தாண்டி கள்ள உறவு வைத்திருப்பவர்களுக்கும் தேவைப்படலாம், ஒழுக்கமாக குடும்பம் நடத்துபவர்களுக்கும் குளிக்கும் போது முன்தோலை பின் தள்ளிக் கழுவி தூய்மையாக வைத்திருப்பவர்கள்க்கும் தேவையற்றது. ஒருவருக்கு ஒருவர் என்று வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தேவையான ஒன்று சுவனப்பிரியன் கூறுவதை நான் கடுமையாகவே மறுக்கிறேன், நகைப்புக்கு இடமான கூற்று, காரணம் எதோ ஒரு மதச்சடங்குகளில் ஒரு காதை அறுத்துக் கொள்வது காது கேட்கும் திறனை அதிகரிக்கும் என்று ஒரு கேணப்பயல் அறிவியல் / மருத்துவ உண்மை என்று கொளுத்திப் போட்டு அனைவரையும் காதுகளை அறுத்துக் கொள்வது தான் மனித குல நன்மை என்று சொல்லுவது போன்றது தான் இவை.
சுவனப்பிரியன் சொல்லும் 60 விழுக்காட்டு வாய்ப்பு என்பது முந்தோலின் உட்புறத்தில் கிரிமி தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் தான். இவற்றின் பாதிப்பை உடலுறவு முடிந்த பிறகு கழுவதன் மூலம் போக்கிக் கொள்ள முடியும், ஆனால் மேற்சொன்ன 40 விழுக்காடு வாய்ப்பில் முன் தோல் நீக்கியவரும் நீக்காதவரும் தகுந்த ஆணுறை பயன்படுத்தாவிட்டால் ஒன்றே.
முந்தோல் நீக்கம் என்பது யூதர்களாலும், அவர்களின் மத வழியின் பிரிவுகளில் ஒன்றான இஸ்லாமியர்களும் பின்பற்றி வரும் மதச் சடங்கு ஆகும், தற்போது யூதர்களிடையே இப்பழக்கம் குறைந்துவருகிறது, இஸ்லாமியர்களிடம் கட்டாயக் கடமை என்று தெரிகிறது, மற்றபடி இதில் அறிவியல் பயன் மருத்துவ பயன் என்று எதுவுமே இல்லை, முன்பல் நீட்டிக் கொண்டிருபவர்களுக்கு அவற்றை பின் தள்ளி சரி செய்யும் பல் மருத்துவம் போன்றதே, முந்தோலை தள்ள முடியாத மதவழக்கமாக அதை ஏற்கனவே செய்திருக்காதவர்கள் அதை நீக்கிக் கொண்டால் ஆண் குறி விரைப்பின் போது வழி ஏற்படாது,
அடுத்த நீடித்த இன்பம் தர முனைத்தோல் நீக்கம் பயன் அளிக்கிறது என்றும் ஒரு சிலர் சொல்லுகிறார்கள், இதில் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை, காரணம் முன் தோல் நீக்கிக் கொள்வதால் குறி முனை உடல் தோல் போன்று தடிப்பாகி உணர்வு நரம்புகள் கட்டுப்பட்டிருக்கும் என்பதால் அவை உண்மையே என்றாலும் நீடித்த உடலுறவை பெண்கள் விரும்புகிறார்களா ? என்பதும் முக்கியம், பெண் குறி பாறையின் துளை அல்ல அதுவும் உணர்வுச் சதையே தேவைக்கு மிஞ்சிய உராய்வு பெண்ணுக்கு எரிச்சலையே தரும் என்றே நினைக்கிறேன்.
முன்தோல் நீக்கிக் கொள்ளாதன் பயன் என்று மருத்துவர்களாலும், ஆண்களாலும் உணர்ந்து சொல்லப்படுவை, உடலுறவு உராய்வின் போது முந்தோல் முன்னும் பின்னும் நகர்ந்து விரிவதால் ஆண்களுக்கு கூடுதல் இன்பம் கிடைக்கிறது, மேலும் உணர்ச்சி மிக்க ஆண் குறி முனையும் மென்மையும் முந்தோலால் பாதுக்காப்பட்டு மிக எளிதிலேயே விறைப்படைய உதவுகிறது, குறிப்பாக ஆண்களின் சுய இன்பத்தில் முந்தோலின் பங்கு என்னவென்றால் உடலுறவுக்கு நெருக்கமான இன்பத்தைக் கொடுக்கும், ஆனால் இதையெல்லாம் முன் தோலை சிறுவயதில் இருந்தே நீக்கப்பட்டவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது சோகமே.
*********
பாலியல் நோய் பரவலை 60 விழுக்காடு முந்தோல் நீக்கம் கட்டுப்படுத்துகிறது என்பதும் உண்மை என்றாலும் அந்த உண்மை பாலியல் தொழிலாளியை நாடுபவர்களுக்கும் திருமணத்தைத் தாண்டி கள்ள உறவு வைத்திருப்பவர்களுக்கும் தேவைப்படலாம், ஒழுக்கமாக குடும்பம் நடத்துபவர்களுக்கும் குளிக்கும் போது முன்தோலை பின் தள்ளிக் கழுவி தூய்மையாக வைத்திருப்பவர்கள்க்கும் தேவையற்றது. ஒருவருக்கு ஒருவர் என்று வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தேவையான ஒன்று சுவனப்பிரியன் கூறுவதை நான் கடுமையாகவே மறுக்கிறேன், நகைப்புக்கு இடமான கூற்று, காரணம் எதோ ஒரு மதச்சடங்குகளில் ஒரு காதை அறுத்துக் கொள்வது காது கேட்கும் திறனை அதிகரிக்கும் என்று ஒரு கேணப்பயல் அறிவியல் / மருத்துவ உண்மை என்று கொளுத்திப் போட்டு அனைவரையும் காதுகளை அறுத்துக் கொள்வது தான் மனித குல நன்மை என்று சொல்லுவது போன்றது தான் இவை.
மதச்சடங்காக நீக்கிக் கொண்ட அமெரிக்க யூதர்களும், இஸ்லாமியர் அல்லாத பிறரும் அவற்றை மீண்டும் வளர்த்து எடுக்கின்றனர், நீக்கிக் கொண்ட தோலை வளர்த்தெடுக்க மருத்துவ முறைகளும் உண்டு. முன் தோல் நீக்கம் ஏன் செய்யக் கூடாது ? அல்லது முன் தோல் நீக்கம் செய்வதை தவர்க்க வேண்டும் ? என்பதற்கு 1000க் கணக்கான சுட்டிகள் உள்ளன, அவற்றில் ஒன்றை இரண்டையாவது சுவனப்பிரியன் படித்திருப்பார் என்பது ஐயமே,
நண்பர் சுவனப்பிரியன் மதப்புத்தகங்கள் தவிர்த்து பிறவற்றையும் படிக்க வேண்டும் என்று கீழ்கண்ட சுட்டியைத் தருகிறேன்
Foreskin restoration
Circumcision_controversies
பின்குறிப்பு: குற்றவாளிகள் நிறைந்த நாடுகளில் சட்டம் கடுமை மிக மிகத் தேவையான ஒன்று, அது போல் பாலியல் தொழிலாளியை மிகுதியாக நாடும் நாட்டினருக்கும் தேவையான ஒன்றாக முன் தோல் நீக்கம் இருக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும் அதன் மூலம் பாலியல் நோய் தடுப்பை 60 விழுக்காடு மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மை என்றாலும் அதன் பொருள் 60 விழுக்காடு தடுக்கப்பட்டதாக ஆகாது, அந்த 60 விழுக்காட்டின் பாதிப்பில் இல்லாதவர்கள் இன்னொருநாள் பாலியல் தொழிலாளிடம் செல்லும் போது சிக்கிக் கொள்வார்களா ? இல்லையா ? என்பதை முன் தோல் நீக்கம் முடிவு செய்யாது, சென்று வரும் எண்ணிக்கையே அதை முடிவு செய்யும்.
மதச் சடங்கு என்ற பெயரில் காதை அறுத்துக் கொள்ளட்டும், விரலை வெட்டிக் கொள்ளட்டும், காது குத்திக் கொள்ளட்டும், ஆனால் அது பொதுவான முக அழகையும், விரல் அழகையும் தரும் என்பது வெறும் பொய்யுரை தான்.
38 கருத்துகள்:
ஆகா என்ன ஒரு ஆராட்சி!!!!!!!!
திரு கோவிக் கண்ணன்!
//நாங்கள் தண்ணீர் விட்டுக் கழுவோம் என்றதும் ஒரு சீனர், அருவெறுபான பார்வையுடன் 'நாங்கள் அங்கே வெறும் கையை வைத்துப் பார்ப்பதையே அருவெறுப்பாக நினைத்து தான் தாளை பயன்படுத்துகிறோம், உங்களால் எப்படி முடிகிறது ? தவிர நீங்கள் கையினால் பிசைந்து சாப்பிடுபவர்கள் அல்லவா ? (நாம அதுக்கென்றே கை ஒதுக்கி வைத்திருப்பது அவர்களுக்கு தெரியாது)//
நீங்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஆடு மலம் கழிப்பதை புளுக்கை என்றும் மாடு மலம் கழிப்பதை சாணம் என்றும் சொல்கிறோம். ஆடு புளுக்கை போட்ட மல துவாரம் ஓரளவு சுத்தமாகவே இருக்கும். ஆனால் மாடு சாணம் போடுவதால் அதன் மலத் துவாரத்திலும் பக்க வாட்டிலும் சாணத்தின் எச்சங்கள் மிஞ்சியிருப்பதை பார்க்கலாம். இதே நிலையை ஐரோப்பியர்களுக்கும நமக்கும் ஒப்பிட்டு பாருங்கள். ஒவ்வொருவரும் சாப்பிடும் சாப்பாட்டின் தன்மை மாறுவதால் கழிவின் நிலையும் மாறுதல் அடைகிறது. இந்தியர்களுக்கு சாணம் என்றால் ஐரோப்பியர்களுக்கு புளுக்கையை உதாரணமாக்கலாம். எனவே ஐரோப்பியர்கள் தாளை உபயோகப்படுத்துவது அவர்கள் அளவில் ஓரளவு சுத்தமாகி விடுகிறது. இருந்தாலும் அவர்களும் தண்ணீர் விட்டு கொஞ்சம் கழுவுவது சுத்தத்தை அதிகப்படுத்தும்.
(ஐயே......என்ன ஒரே நாத்த மேட்டராக இருக்கிறது என்று யாரும் முகம் சுழிக்க வேண்டாம். :-))
//இவ்வாறு எளிதாக புரியக் கூடிய தமிழ் சொற்கள் இருக்க இவை இன்னமும் விருத்த சேதனம் என்றும், சுன்னத் என்றும் சொல்லப்படுவதற்கு காரணம் இவை இன்னமும் மதரீதியான சடங்காக இருக்கிறது என்பதே காரணம்//
'முன் தோல் நீக்கம்' என்று மொட்டையாக சொன்னால் யாருக்கும் விளங்காது. இந்த பழக்கம் அனைவரிடத்திலும் பரவும் போது ஒருக்கால் புதிதாக தமிழ்ச் சொல் கண்டுபிடிக்கப் படலாம். அதுவரை இது இருக்கட்டுமே!
//நண்பர் சுவனப்பிரியன் இவை என்னமோ ஒட்டு மொத்த ஆண்களின் தேவை போன்று மிகைப்படுத்தே எழுதியுள்ளார்,//
இந்தியாவில் பெரும்பாலோர் சிறுநீர் கழித்து விட்டு அந்த இடத்தை கழுவுவதில்லை. ஒருவர் சிறுநீர் கழித்தவுடன் சில சொட்டுகள் முன் தோலில் தங்கி விடுவதை பலரும் அனுபவத்தில் உணர்ந்திருப்பர். இது நாளடைவில் அரிப்பு போன்ற பல நோய்களை தோற்று விக்கிறது. மலம் ஜலம இரண்டும் நம் உடலில் இருந்து வெளியாகும் கழிவுகளே! ஒன்றை சுத்தப்படுத்தி விட்டு மற்றொன்றை சுத்தப்படுத்தாமல் ஆட்டி விட்டு வருவது ஆரோக்கியமா? தண்ணீர் விட்டு கழுவாததனால் பஸ் ஸ்டாண்டு பக்கம் நம்மால் நிற்க முடிகிறதா? மூத்திர வாசனையும் பஸ் ஸ்டாண்டுகளும் இணை பிரியாத நண்பர்களானது தண்ணீர் விட்டு கழுவாததனாலேயே!
விறைப்புத் தன்மை குறைந்தவுடன் ஆணின் முன்தோல் பகுதியில் சில துளி விந்துகளும் தேங்கி விடுகிறது. நீங்கள் கழுவினாலும் மூடிய தோலின் உள்ளே உள்ள அசுத்தங்களை உங்களால் முழுவதுமாக அகற்ற முடியாது. இங்கு தான பிரச்னையே ஆரம்பமாகிறது. இதைத்தான் மருத்துவர்களும் கோடிட்டுக் காட்டுகின்றனர்.
மேலே சொன்ன பாதிப்புகள் எதுவும் முன் தோலை நீக்கியவர்களுக்கு ஏற்படுவதில்லை. விறைப்புத் தன்மை இருக்கும் போதும் அதே நிலைதான். விறைப்புத் தன்மை குறையும் போதும் அதே நிலைதான். இங்கு கிருமிகள் தொற்ற வாய்ப்பு மிக மிக குறைவு. தமிழகத்தில் பெரும்பாலான இந்து மருத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே முன் தோலை நீக்கி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். முன்பு ஜெயலலிதா கூட தொட்டில் குழந்தை திட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் சுன்னத் செய்விக்கப்பட்டதை நாம் மறந்து விட முடியாது. மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு அதன்பிறகு மற்றவர்களும் இந்த பழக்கத்தை பரவலாக்க வேண்டும்.
மற்றபடி களவியில் இது எந்த அளவு உபயோகமாக இருக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் தீர்மானிக்க முடியும்.
//'கால் கழுவி வந்தான்' - குழுஉக்குறி என்ற தமிழ் இலணக்கத்தை கற்று தான் வந்திருப்பீர்கள்,//
இடக்கர் அடக்கல், மங்கல வழக்கு, குழூஉக்குறி என்பன தகுதி வழக்கில் அமைந்தவை.
இடக்கர் அடக்கல்
இடக்கர் எனப்படும் அருவருக்கத்தக்க செயல்களையும் பொருளையும் மனதில் அடக்கிக்கொண்டு தகுதியாக்கிச் சொல்லுதல்.
எ.கா.:
மலம் கழுவுதலை கால் கழுவுதல் என்றல்
மங்கல வழக்கு
வருத்தமும் அச்சமும் தரும் சொற்களைத் தவிர்த்து அவற்றினிடத்தில் நயம் தரும் சொற்களைத் தகுதியாக்கிச் சொல்லுதல்.
எ.கா.:
ஒருவர் இறந்துவிட்டார் என்று சொல்வதற்கு மாற்றாக மறைந்துவிட்டார் அல்லது துஞ்சினார் என்றல்.
குழூஉக் குறி
ஒரு துறையினரோ, வேறு குழுவினரோ தங்களுக்குள் சில சொற்களைத் தகுதியாக்கி வேறு பொருள் தருமாறு பயன்படுத்துதல்.
எ.கா.:
சாராயம் குடிப்பதை தண்ணீர் அடித்தல் என்றல், யானைப்பாகர் ஆடையைக் 'காரை' என்றல்
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dear Dondu Sir. You are correct, please
Also leave comment about your view on removing foreskins. Thank you.
கோவி,
சின்னத்து செய்வதால் நன்மைகள்தான் அதிகம்.
* பெண்களுக்கு அதிக சுகம் கெடைக்குதாம்
http://men.webmd.com/news/20090721/male-circumcision-improves-sex-life-for-women
* எச் ஐ வி இன்ஃபெக்சன் வருவதை குறைக்குதாம்.
Circumcision and HIV
Schoen and others, such as Harvard medical anthropologist Daniel Halperin, PhD, say the evidence that circumcision prevents HIV transmission has been solid since the late 1980s. But the medical community has been skeptical until recently, and the most convincing studies emerged after the AAP statement.
Early this year, three trials in which Kenyan and Ugandan men were randomly selected to receive circumcision were halted when it became clear that circumcision helped prevent transmission of HIV. Men who got it were about half as likely to get infected. “A 50% reduction is about the same as some vaccines,” says Schoen. Final vindication came in March of this year when the United Nations World Health Organization announced that male circumcision should be added to the list of interventions that can help prevent the disease.
It appears that circumcision helps fight AIDS because the foreskin is particularly susceptible to attack by HIV. It often develops cracks or tears that can be infected by viruses. And diseases such as syphilis and chancroid, a bacterial infection more common in uncircumcised men, can provide a gateway for HIV.
The AAP is now finalizing a new statement on circumcision and expects to release it in 2008 or 2009.
//முன்தோல் நீக்கிக் கொள்ளாதன் பயன் என்று மருத்துவர்களாலும், ஆண்களாலும் உணர்ந்து சொல்லப்படுவை, உடலுறவு உராய்வின் போது முந்தோல் முன்னும் பின்னும் நகர்ந்து விரிவதால் ஆண்களுக்கு கூடுதல் இன்பம் கிடைக்கிறது, மேலும் உணர்ச்சி மிக்க ஆண் குறி முனையும் மென்மையும் முந்தோலால் பாதுக்காப்பட்டு மிக எளிதிலேயே விறைப்படைய உதவுகிறது, குறிப்பாக ஆண்களின் சுய இன்பத்தில் முந்தோலின் பங்கு என்னவென்றால் உடலுறவுக்கு நெருக்கமான இன்பத்தைக் கொடுக்கும், ஆனால் இதையெல்லாம் முன் தோலை சிறுவயதில் இருந்தே நீக்கப்பட்டவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது சோகமே.//
என் கருத்தும் அதுதான்.
அதை விடுங்கள், பெண்க்ளின் பிறப்பிறுப்பில் க்ளிடோரிசை நீக்கும் விஷயத்தை சில இசுலாமிய சமூகத்தினர் செய்வது சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு பெரும் கொடுமைதானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//விருத்த சேதனம் என்றால் என்ன ? எனக்கு தெரிந்து இந்த சொல் பழைய ஏற்பாட்டு பைபிள்களின் மொழிப் பெயர்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது// உண்மைதான். இந்த பழக்கம் யூதர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்டதுதான்.
நல்ல பதிவு
யாரிடம் விள்க்கம் கேட்கலாம் என்று தேடியபோது அதற்காகவே எழுதப் பட்டது போன்று இருக்கிறது.
************************
பாலியல் நோய் உள்ள பெண்ணுடன், பாதுகாப்பற்ற உடல் உறவு கொள்பவருக்கு, முன் தோல் நீக்கம் செய்து இருந்தால் எச் ஐ வி கிருமி பரவும் வாய்ப்பு 60% குறைவு என்பதுதான் நண்பர் சுவனப் பரியனின் பதிவு.
******************
மேலே கூறிய வாக்கியத்தை படித்தாலே அதன் பயன்பாடு யாருக்கு,தேவையா? என்று முடிவெடுத்து விடலாம்.பல பயனுள்ள தகவல்கள் தந்து உள்ளீர்கள்.அனைத்து 18+ தமிழர்களும் அறிய வேண்டிய தகவல்கள்.
இது சரி,பயனுள்ளது என்று விள்க்கும் மத பிரச்சார விளக்கும் நண்பர்கள் பாலியல் கல்வியை மட்டும் எதிர்பார்கள்.கருத்தடை சாதனம் பயன்படுத்துவது மதவாதிகளால் அதிகமாக எதிர்க்கப் படுகிறது.இதுதான் ஆப்பிரிக்க நாடுகளில் எய்ட்ஸ் பரவுவதன் காரணம்.
ஆண்குறி நுனித் தோல் நீக்கம் நமக்கு தேவையில்லை!!!!!!!!!!!!!!
நன்றி
ஒன்னுக்கு போறதுக்கு தவிர மற்றதுக்கு பயன்படுத்தாத காரணத்தால்.அனுபவம் எதுவும் கிடையாத காரணத்தால்.அப்படியா? என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்
ஏமாற்றம்!
உங்கள் பதிவு எனக்கு மிகுந்த மன வருத்ததை அளித்தது.
இந்த (அருவருப்பான) பிரச்சினைக்கு ஒரு பதிவு தேவைதானா? அதுவும் உங்களிடமிருந்து?
சுகாதாரத்தில் பெயரில்தான் முன் தோல் அகற்றுகிறார்கள்.
டோண்டு சொன்ன ஆப்ரிக்க பெண்களின் பருப்பு (clitoris) அகற்றுதல் இசுலாமியர்களின் கண்டுபிடிப்பா என்பது விவாதிக்கப்படவேண்டியது..
மதம் என்றால் என்னவென்றே அறியாத சில ஆப்ரிக்க ஆதிவாசி இனத்தவர்கள் சிலரிடையே இன்றைய நாட்களிலும் இது போன்ற பழக்கம் உள்ளது. இளம் பெண்களுக்கு இதை செய்பவர்கள் வயது முதிர்ந்த பெண்களே.
ஆதியிலேயே இவை போன்ற பழக்க வழக்கமுள்ள இனத்தவர்கள் சிலர் பிற்காலத்தி இசுலாமிய மதத்தை தழுவியதால் இன்று இக்குற்றத்தை இம்மதத்தின் மீது சுமத்துகிறோமா?
சிந்திப்போம்!
நன்றி.
//The AAP is now finalizing a new statement on circumcision and expects to release it in 2008 or 2009.//
இதுதான் கடைசியாக வந்த APP statement.....
Scientific studies show some medical benefits of circumcision. However, these benefits are not sufficient for the American Academy of Pediatrics (AAP) to recommend that all infant boys be circumcised. Parents may want their sons circumcised for religious, social and cultural reasons. Since circumcision is not essential to a child’s health, parents should choose what is best for their child by looking at the benefits and risks.
//இருந்தாலும் அவர்களும் தண்ணீர் விட்டு கொஞ்சம் கழுவுவது சுத்தத்தை அதிகப்படுத்தும்.
//
டெட்டால் சோப்புக் கூட 99 விழுக்காடு தான் கிரிமிகளைக் கொல்கிறது என்று அவர்களது விளம்பரத்தில் போடுகிறார்கள், தண்ணீர் விட்டு கழுவுபவர்களில் எத்தனை பேர் சோப்பு போட்டு கழுவுகிறார்கள் என்கிற புள்ளி விவரம் தெரிந்தால் தண்ணீரில் கழுவது பற்றி நீங்கள் ஒப்பிடலாம், வெள்ளைக்காரன் சொல்வது அவன் கைகளில் கிரிமி வர வாய்ப்பே இல்லை என்பது தான், பின்னாடி 100 விழுக்காடு சுத்தமாக இருக்கிறதா இல்லையா என்பது பற்றி இல்லை.
//இந்தியாவில் பெரும்பாலோர் சிறுநீர் கழித்து விட்டு அந்த இடத்தை கழுவுவதில்லை. ஒருவர் சிறுநீர் கழித்தவுடன் சில சொட்டுகள் முன் தோலில் தங்கி விடுவதை பலரும் அனுபவத்தில் உணர்ந்திருப்பர். //
பெரியவர்களுக்கு எப்படி என்று தெரியாது, சுன்னத் செய்த சிறுவர்களுக்கு கால்சட்டையில் சிறுநீர் கழித்த பின் வட்டமாக சிறுநீர் பரவி இருப்பதை சிறுவயதில் பார்த்திருக்கிறேன், சுன்னத் செய்யாத சிறுவர்களுக்கு அப்படி ஆகுவது மிக மிக குறைவே
//இந்தியாவில் பெரும்பாலோர் சிறுநீர் கழித்து விட்டு அந்த இடத்தை கழுவுவதில்லை. ஒருவர் சிறுநீர் கழித்தவுடன் சில சொட்டுகள் முன் தோலில் தங்கி விடுவதை பலரும் அனுபவத்தில் உணர்ந்திருப்பர். //
எத்தனை பேர் எங்களுக்கு பிரச்சனை என்று சொன்னார்கள்? பாலைவன தேசத்தில் செங்ககல்லில் தான் ஒற்றிக் கொள்வார்களாமே, நம்மூரிலும் சிலர் செய்வதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்
//மேலே சொன்ன பாதிப்புகள் எதுவும் முன் தோலை நீக்கியவர்களுக்கு ஏற்படுவதில்லை. விறைப்புத் தன்மை இருக்கும் போதும் அதே நிலைதான். விறைப்புத் தன்மை குறையும் போதும் அதே நிலைதான். இங்கு கிருமிகள் தொற்ற வாய்ப்பு மிக மிக குறைவு. //
நாள் தோறும் குளிக்க மனமில்லாமல் அல்லது தண்ணீர் கிடைக்காதவர்களுக்கு வேண்டுமானால் கிரிமி தொற்றலாம், அது பல் விளக்காமல் இருப்பது போன்றது தான்.
//தமிழகத்தில் பெரும்பாலான இந்து மருத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே முன் தோலை நீக்கி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்//
இதற்கான புள்ளிவிவரம் அல்லது அடிப்படைச் செய்தி ஆதாரம் எதுவுமே இல்லாமல் எந்தத் தகவலையும் நம் விருப்பம் போல் சொல்ல முடியும்.
*****
நம்மில் 90 விழுக்காட்டினருக்கு எந்த ஒரு சந்தர்பத்திலாவது பல்வலி குறிப்பாக கடைவாய் பல்வலி வரும், உயிர் போகும் அளவுக்கு வலி எடுக்கும். சிலர் அதை அகற்றிவிடுவர், அதற்காக குழந்தையாக இருக்கும் போதே அவ்வாறு அகற்றிக் கொண்டால் பல்வலி பற்றிய அனுபவமே வாழ்க்கையில் ஏற்படாது என்று கூறுவது அறிவான செயல் ஆகாது.
சுன்னத் விசயத்திலும் இதுவே பொதுக்கருத்தாகும், உறுப்பில் பிரச்சனை அல்லது பாலியல் தொழிலாளியை தொடர்ந்து நாட அதுவும் ஆணுறை இல்லாமல் நாட விருப்பம் கொண்டவர்கள் செய்து கொள்ளலாம், ஆனால் அது எல்லோரும் செய்ய ஏற்றது என்று கூறுவது அறிவார்ந்த பரிந்துரையும் இல்லை, நீங்கள் மதவழக்கப்படி இதைப் பின்பற்றுவது உங்கள் விருப்பம், ஆனால் அதற்கு உடல் நலம், மருத்துவம் என்ற முலாம் பூசத் தேவை இல்லை, நல்ல வேளை எந்த மதத்திலும் ஒரு காதை அறுத்துக் கொள்ளும் வழக்கம் இல்லை.
மதச் சார்பாக இதனை கொண்டு செல்லவேண்டாம் என்று விரும்பினாலும் சுவனப்பிரியனான உங்களிடம் ஒரே ஒரு கேள்வி தான், அனைத்தையும் அழகாகவும், காரண காரியத்தோடும் படைத்ததாக நம்பப்படும் இறைவன், ஆண்களுக்கு ஏன் முன் தோல், வைத்து அதையும் குழந்தையாக இருக்கும் போது கதறலைப் பொருட்படுத்தாது அறுத்து எறிய விரும்பினான் என்று தெரிந்து கொள்ளலாமா ?
// மாசிலா said...
ஏமாற்றம்!
உங்கள் பதிவு எனக்கு மிகுந்த மன வருத்ததை அளித்தது.
இந்த (அருவருப்பான) பிரச்சினைக்கு ஒரு பதிவு தேவைதானா? அதுவும் உங்களிடமிருந்து?
சுகாதாரத்தில் பெயரில்தான் முன் தோல் அகற்றுகிறார்கள். //
அது சுகாதர பாதிப்புக்கு உள்ளாவர்களுக்குத்தானே, மனைவியிடம் மட்டுமே கூடுபவர்களுக்கும், நாள் தோறும் குளிப்பவர்களுக்கும் என்ன எழவு பிரச்சனை ஏற்படும் என்று தெரிந்து கொள்ள ஆவல், நீங்களாவது கொஞ்சம் புளி போட்டு விளக்குங்களேன்
//அதை விடுங்கள், பெண்க்ளின் பிறப்பிறுப்பில் க்ளிடோரிசை நீக்கும் விஷயத்தை சில இசுலாமிய சமூகத்தினர் செய்வது சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு பெரும் கொடுமைதானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
ஆதிவாசியாகத் தொடர்கிறர்களாம், அவங்க ஆதிவாசியாக இருந்த போது கும்பிட்ட சாமியைத் தொடரக்கூடாதாம், இந்தப் பழக்கத்தைத் தொடர்வதற்கும் அவங்க மதத்திற்கும் தொடர்பில்லையாம்.
//* எச் ஐ வி இன்ஃபெக்சன் வருவதை குறைக்குதாம்.
Circumcision and HIV//
அப்ப HIV வர வாய்ப்புள்ள அளவுக்கு செயல்படுபவர்கள் தானே செய்து கொள்ள வேண்டும். பல்வலிக்கிறவன் தானே பல்லை எடுப்பான். பின்னாளில் வலிக்கும் என்பதற்கு முன்கூட்டியே எடுத்துவிடுவானா ?
ஆணுறுப்பு தோல்வெட்டுக்கு எதிராக வைக்கப்படும் கருத்துக்கள்..
1. உலகில் 10% ஆண்கள் மட்டுமே வெட்டிக்கொள்ளுகிறார்கள்.இவர்களோடு ஒப்பிடுகையில் மீதியிருக்கும் 90% பேர் அதிகமாக நோய்வாய்ப்படுகிறார்கள் என்பதிற்கு எந்தவித ஆதாரமுமில்லை. அமெரிக்காவில் 1980-ல் 80% பேர் வெட்டிக்கொண்டார்கள் தற்போது 50% பேர் மட்டுமே வெட்டுகொள்ளுவதாக தெரிகிறது.
2. வெட்டிக்கொள்ளுவது சுகாதாரத்தை அதிகரிக்கும் என்பது உண்மையில்லை. முன்தோல் உள்வாங்க ஆரம்பித்தபின் முன்தோலை சற்றே பின்னிழுத்து சோப் போட்டு கழுவ குழந்தைகளுக்கு கற்று தந்தாலே போதுமானது.. American Academy of Pediatrics states that "almost all uncircumcised boys can be taught proper hygiene that can lower their chances of getting infections, cancer of the penis, and sexually transmitted diseases"
3. STD எனப்படும் பாலியல் நோய்கள் தாக்கும் அபாயத்தை தோல் வெட்டு 1% மட்டுமே குறைக்கிறது (தனிமனித ஒழுக்கமே சிறப்பு). ஆணுறுப்பில் வரும் புற்றுநோயை தோல் வெட்டு குறைக்கிறதாக கருதப்பட்டாலும் அந்த நோய் மிகவும் அரிதாகவே ஏற்படுகிறது.
நன்றி; Vincent Iannelli, M.D., Board certified pediatrician and Fellow of the American Academy of Pediatrics.
அமெரிக்காவில் தோல்வெட்டினை தடுக்க பல அமைப்புகள் இயங்கிவருகின்றன அவற்றின் இணையதளங்களில் (intactamerica.org, circumcision.org, mgmbill.org) மேலதிக விபரங்களை பெறலாம்.
மைனஸ் ஓட்டு குத்திய மகராசன்களுக்கு நன்றி, உங்களின் எதிர்ப்பு ஓட்டு இந்தப் பதிவைப்பற்றி எந்த ஒரு கருத்தையும் ஏற்படுத்திவிடாது, மாறாக இதை எதிர்பதன் குழு அரசியலையும் பழமை வாதத்தின் எச்சத்தையும் வெட்டவெளிச்சமாக்கிவிடும் என்பது உங்களுக்கு தெரியாமல் போனது அந்தோ பரிதாபாம்
//இது சரி,பயனுள்ளது என்று விள்க்கும் மத பிரச்சார விளக்கும் நண்பர்கள் பாலியல் கல்வியை மட்டும் எதிர்பார்கள்.கருத்தடை சாதனம் பயன்படுத்துவது மதவாதிகளால் அதிகமாக எதிர்க்கப் படுகிறது.//
இன்னும் நண்பர் சுவனப்பிரியன் தாடி வைப்பதன் நன்மைகள், மீசை வைத்திருப்பவர்களுக்கு ஏற்படும் இழப்புகள், அரை ட்ராயர் அணிவதின் ஆபத்துகள் என்று ஏராளமான பயனுள்ள தகவல்கள் வைத்திருக்கக் கூடும். நானும் அவ்ர் என்னவெல்லாம் எழுதுவார் என்று படிக்க காத்திருக்கிறேன், நீங்களும் காத்திருங்கள்.
//1. உலகில் 10% ஆண்கள் மட்டுமே வெட்டிக்கொள்ளுகிறார்கள்.//
நாங்கள் உலக மக்கள் தொகையில் 20 விழுக்காடு இருக்கிறோம் பிறகு ஏன் 10 விழுக்காடு என்று தவறான தகவல் தருகிறீர்கள் என்று கேட்கக் கூடும்.
:)
20 விழுக்காட்டில் பாதி பெண்கள் என்பதால் அதில் பாதியாக 10 விழுக்காட்டு ஆண்கள் செய்து கொள்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ளீர்கள் என்றே நினைக்கிறேன்.
//2. வெட்டிக்கொள்ளுவது சுகாதாரத்தை அதிகரிக்கும் என்பது உண்மையில்லை. முன்தோல் உள்வாங்க ஆரம்பித்தபின் முன்தோலை சற்றே பின்னிழுத்து சோப் போட்டு கழுவ குழந்தைகளுக்கு கற்று தந்தாலே போதுமானது..//
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இது செய்யக் கூடாது, முந்தோலின் முடிச்சு சேருமிடம் கிழிந்துவிடும் வாய்ப்புண்டு, ஐந்து வயதிற்கு பிறகு சொல்லித்தரலாம்
உங்க நண்பருக்கு விருத்த சேதனத்தின் மீது அது எப்படி அவ்வளவு ஆர்வம் வந்தது? ஏதோ நீரழிவு நோய் வராமல் பாதுகாத்து ஆரோக்கியமா வாழ்வதற்க்கு நல்ல தகவல் ஒன்றை சொல்வது போல் விருத்த சேதனத்தை சொல்கிறார். வலியும் வேதனையும் நிறைந்த விருத்த சேதனம் மெதுவாக உலகத்தைவிட்டு நீங்கும்.
எல்லாம் அறிந்த எல்லாம் காரண காரியங்களோடு தான் படைத்த கடவுளின் படைப்பான முன் தோலை நீங்கும் செயலை எல்லோரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்.
//நாங்கள் உலக மக்கள் தொகையில் 20 விழுக்காடு இருக்கிறோம் பிறகு ஏன் 10 விழுக்காடு என்று தவறான தகவல் தருகிறீர்கள் என்று கேட்கக் கூடும்.//
Dr.வின்சென்ட் தனது கட்டுரையில் 10% ஆண்கள் என (தவறாக) குறிப்பிட்டுவிட்டார். உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி 30% ஆண்கள் வெட்டிகொண்டுள்ளார்கள்.அவர்களில் அதிகமானோர் -70% பேர் முசுலிம்கள். அமெரிக்க ஆண்களின் வெட்டுவிகிதம் குறைந்துவிட்டதாக, அதுவும் குறிப்பாக கைக்குழந்தை பருவத்தில் வெட்டுவது குறைந்து இப்போது ~50% ஆகிவிட்டது என்பது சரியான தகவல். கைக்குழந்தை பருவத்தில் முன்தோலை வெட்டுவது கொடூரமான செயல் என மனித உரிமை ஆர்வலர்கள் செய்த பிரச்சாரம் அமெரிக்காவில் நன்றாக எடுபட்டுள்ளது. பொதுவாக அமெரிக்க குடிமக்கள் கருணைமிக்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.
//ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இது செய்யக் கூடாது, முந்தோலின் முடிச்சு சேருமிடம் கிழிந்துவிடும் வாய்ப்புண்டு, ஐந்து வயதிற்கு பிறகு சொல்லித்தரலாம்//
முன்தோல் உள்வாங்குதல்/பிரிதல் (foreskin retraction-க்கு தமிழில் என்ன?) எந்த வயதிலும் ஏற்படலாம். சிலருக்கு 18 வயதில்தான் நிகழும். சராசரியாக இது ஏற்படும் வயது 10.4 என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். foreskin retractionக்கு பிறகு தோலை இழுத்து சுத்தம் செய்வது நலம்.
தலைப்பை பார்த்து ஏதோ விவகாரமான விசயம்ன்னு உள்ளேன். சீனர்கள் குறித்து படித்துக் கொண்டு வர அட ரொம்ப சுவராசியமாக இருக்கேன்னு நகர்ந்துகிட்ட அடுத்தடுத்து விசயத்தை பார்த்துக்கிட்டே படிச்சுக்கிட்டே வந்தவுடன்
ஆகா பொங்கி மைனஸ் ஓட்டு குத்தியிருப்பாங்களேன்னு வந்து பார்த்தா?
ச்சும்மா சொல்லக்கூடாது?
தீயா வேல செய்யுற்ங்க.
முன் தோல் நீக்குவது மிகவும் சுத்தமாக வைத்துருக்க உதவும். அத்தியாவசியமானது.
பாதுகாப்பில்லாத உறவு எப்படியிருப்பினும் ஆபத்துதான்.
லைக்கிங்.
//சுவனப்பிரியன் said...
திரு கோவி கண்ணன்!
// ஆனால் சுன்னத் அனைத்து ஆண்களுக்கும் தேவையான ஒன்று நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மைக்கு மாறானவையே.//
வெட்டப்படாத நுனி தோலில் சிறுநீரும் விந்தும் தேங்கி விடுகிறது. மேலும் முஸ்லிம் அல்லாத மற்ற இனத்தவர் சிறுநீர் போன இடத்தை கழுவுவதும் இல்லை. இது போன்ற காரணங்களால் பல பால்வினை நோய்கள் வருவதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. நுனி தோலை வெட்டியவர் கழுவவில்லை என்றாலும் சிறிது நேரத்தில் காய்ந்து விடும். இந்த வசதி நுனித் தோல் வெட்டப்படாதவருக்கு கிடைப்பதில்லை.
மேலும் சிறுநீர் போய் விட்டு கழுவாமல் வருவது சுகாதாரம்தானா என்பதற்கு உங்களின் பதில் என்ன?//
திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள், உடலுறவுக்கு பின் குளியல் அறைக்குச் சென்று கழுவி வருவதை நகரவாசிகள் பின்பற்றுகின்றனர். அப்படியும் தண்ணீர் பிரச்சனை என்றால் திஸ்யூ பேப்பரின் அழுந்த துடைத்தால் போயிற்று, இவ்வாறு துடைத்த முந்தோல் நீக்கப்பட்ட ஆண் குறியின் தூய்மை முன் தோல் நீக்கப்பட்ட துடைக்காத ஆண் குறியின் தூய்மையை விட மேலானது.
சிறுநீர் கழிக்கும் ஆண்கள் பலர் ஆண்குறியின் முந்தோலை பின்னுக்கு தள்ளி பிதுக்கிவிட்டு தான் சிறுநீர் கழிப்பர், பிறகு இரண்டு ஆட்டு ஆட்டினால் எஞ்சியிருப்பவையும் சிந்திவிடும், முனைத்தோல் நீக்கப்படாத உங்கள் நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். இதற்கும் மேல் தூய்மை வேண்டுமென்போர் கழுவதில் தவறு இல்லை, எனது இஸ்லாமிய நண்பர்கள் சிறுநீர் கழித்த பின் கழுவி நான் பார்த்ததில்லை, காரணம் கழிவறையின் தண்ணீர் கேட்டிற்கு கழுவாமல் இருப்பதே சுகாதாரம் என்று கூட நினைத்திருக்கக் கூடும்.
இஸ்லாமியர்களில் சிலர் சிங்கப்பூர் / மலேசியாவில் பொதுக்கழிவறையில் கைகழுவும் இடம் வரைக்கும் திறந்து கொண்டே வந்து ஒருகையால் தண்ணீர் பிடித்து கழுவதை காண முடியும், நீங்கள் வசிக்கும் நாட்டிலும் அப்படித்தான் இருக்கும், கழுவும் இடம் தண்ணீர் சிதறி கழுவாத மற்றவர்கள் அங்கு நிற்க நேரிட்டால் அருவெறுப்பையே தரும். அதை விடக் கொடுமை மதக் கடமை என்ற பெயரில் சிறுநீர் பெய்யும் பேசனில் இருந்து தானாக கழுவும் தண்ணீரை சிலர் கையில் பிடித்துக் கழுவிக் கொள்கிறார்கள், அந்தக் கருமத்தில் (சிறுநீர் பீங்கானில்) கைவைத்து தண்ணீர் பிடித்து கழுவுதைக் காட்டிலும் கழுவதைவிட கழுவாமல் இருப்பதே நல்லது, ஏனெனில் பலரும் அங்கு சிறுநீர் கழித்து கிரிமிகளால் நிறைந்திருக்கும் இடம் அது.
கண்ட கண்ட தண்ணீரில் கழுவதைவிட கழுவாமல் இருப்பதும், முடிந்தால் திஸ்யூ பேப்பரில் துடைப்பதும் நலம், அதற்காக முந்தோலை வெட்டிக் கொள்ள வேண்டும் என்பது நிராகரிக்கப்பட வேண்டிய கூற்று. நகமும், மயிரும் வளரும் என்பதால் நீக்கிக் கொள்வது தேவையாகிறது, வெட்டப்பட்ட முனைத்தோல் பல்லியின் வால் அள்ள வளருவதற்கு, குறியின் முனைத்தோலை பின் தள்ளமுடியாத பிரச்சனையாக இருப்பவர்கள் களைந்து கொள்வது ஒரு மருத்துவ தீர்வு, ஆனால் அது அனைவருக்கும் பொதுவான தீர்வு அல்ல.
நாற்பது வயதிற்கு மேல் பார்வை ஒருவேளை மங்கக் கூடும், எனவே இப்போதே கண்ணாடி அணிந்து பழகுங்கள் என்று ஒரு மதம் சொன்னால் அதை நீங்கள் நிராகரிக்கமாட்டீர்களா ? அது போன்றதே சுன்னத் செய்து கொள்வது குளிக்காத ஆதிவாசி இனப் பழக்கமாகி பின்னர் தண்ணீர் கிடைக்காத பாலைவனப் பழக்கமாகி அதை வழியுறுத்தும் விதமாக மத வழக்கம் மற்றும் சடங்கு ஆகி இருக்கிறது, இதற்கு மேல் அதைப் பற்றி சுத்தம் சுகாதாரம், மருத்துவம் மண்ணாங்கட்டி என்று சொல்ல ஒன்றும் இல்லை.
ஒரு ஊரில் மீசையே வளராதவன் மாறுபட்டவனாக தெரிந்தால் அவமானம் என்பதற்கு மீசை இன்றி இருப்பதே ஆணுக்கு அழகு என்று சொன்னால் கேட்பவர் நகைப்பார்கள். உங்கள் கூற்றும் அத்தகையதே.
உங்கள் வாதங்களை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன், அதில் அறிவுபூர்வமான விளக்கம் எதுவும் இல்லை.
உங்கள் கடைசியாக வந்த பின்னோட்டம் சிறந்த விளக்கம்.
//கழுவும் இடம் தண்ணீர் சிதறி கழுவாத மற்றவர்கள் அங்கு நிற்க நேரிட்டால் அருவெறுப்பையே தரும். அதை விடக் கொடுமை மதக் கடமை என்ற பெயரில் சிறுநீர் பெய்யும் பேசனில் இருந்து தானாக கழுவும் தண்ணீரை சிலர் கையில் பிடித்துக் கழுவிக் கொள்கிறார்கள்இ அந்தக் கருமத்தில் (சிறுநீர் பீங்கானில்) கைவைத்து தண்ணீர் பிடித்து கழுவுதைக் காட்டிலும் கழுவதைவிட கழுவாமல் இருப்பதே நல்லது//
உண்மை.கழுவாமல் இருப்பதே எவ்வளவோ நல்லது. மதவெறி பிடித்தால் எப்படி மோசமாக நடக்க முடியும் என்பதிற்க்கு இது எடுத்துகாட்டு. மேற்கு நாடுகளுக்கு கஷ்டபட்டு மாணவர் விசா எடுத்து வரும் அரபிகள் படிக்கும் இடங்களிலோ பகுதி நேர வேலை செய்யும் இடங்களிலோ பிடித்து கழுவ சந்தர்பமே கிடையாது. அதனால் மற்ற மனிதர்கள் மாதிரியே அவர்களும் மாறி ஊர் திரும்பும் போது நல்ல பிள்ளையாக போவார்கள்.
//மாசிலா said
டோண்டு சொன்ன ஆப்ரிக்க பெண்களின் பருப்பு (clitoris) அகற்றுதல் இசுலாமியர்களின் கண்டுபிடிப்பா என்பது விவாதிக்கப்படவேண்டியது..
மதம் என்றால் என்னவென்றே அறியாத சில ஆப்ரிக்க ஆதிவாசி இனத்தவர்கள் சிலரிடையே இன்றைய நாட்களிலும் இது போன்ற பழக்கம் உள்ளது. இளம் பெண்களுக்கு இதை செய்பவர்கள் வயது முதிர்ந்த பெண்களே.
ஆதியிலேயே இவை போன்ற பழக்க வழக்கமுள்ள இனத்தவர்கள் சிலர் பிற்காலத்தி இசுலாமிய மதத்தை தழுவியதால் இன்று இக்குற்றத்தை இம்மதத்தின் மீது சுமத்துகிறோமா?
சிந்திப்போம்!//
பாருங்கய்யா, 1981 ல ஒரு ஆதிவாசி (?) சொன்னது,
1981-JAN-29: The Great Sheikh of Al-Azhar (the most famous University of the Islamic World) stated that parents must follow the lessons of Mohammed and not listen to medical authorities because the latter often change their minds. Parents must do their duty and have their daughters circumcised.
http://www.religioustolerance.org/fem_cirm.htm
என்னதுதான் பெருசு..... என்னதுதான் பெருசு...... அப்படின்னு கூவிகிட்டு வெட்கமே இல்லாம கோமணத்துக்கு வெளிய தொங்கபோட்டுகிட்டு அலையுற கூட்டத்த பார்த்தா அருவெறுப்ப இருக்கு.
சாதி வெறியனுக்கும், மத வெறியனுக்கும் யாராச்சும் ஆறு வேறுபாடு சொல்லுங்களேன்.
நிற்க,
இயற்கையின் நியதிப்படி அண்டத்தில் இருக்கும் அனைத்தும் குழுவாகவே இயங்குகின்றன. பல காரணிகளைக் கொண்டு குழுவின் அளவு மாறுபடும். குறிப்பிட்ட வரையறையைத் மீறினால் அந்த குழு உடைந்து பிரியும். நம் பிறப்பும் இறப்பும் கூட இதற்கு விலக்கல்ல.
நாம் ஒரு சரியான அளவுள்ள குழுவுக்குள் இயங்க வேண்டியிருக்கிறது. ஒரே நேரத்தில் பல குழுவுக்குள் அடையாளப்படுத்திக் கொள்ளவும் முடிகிறது.
இங்கே நாம் இணைந்திருப்பது 'தமிழ்' 'தமிழர்கள்' என்ற அடையாளத்தோடு. அந்தக் குழுவை செழுமைப்படுத்த முயற்சி எடுப்பதைத் தவிர்த்து பிற குழுவின் அடையாளங்களை இங்கே திணிக்க வேண்டிய கட்டாயம் என்ன?
----------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)
(18+ என்று மேலே போட்டிருப்பதால், கொஞ்சம் தைரியமாக இதை எழுதுகிறேன்)
முன் தோலை நீக்கும் போது அந்த தோலின் முனையில் முடியும் நூற்றுக்கணக்கான உணர்ச்சி reciptors சேர்த்தே நீக்கப்படுகிறது. அதனால் நஷ்டம் ஆணுக்கே.
அதுவும் மட்டும் இல்லாமல், தோல் சற்று தடித்து/rough-ஆக இருப்பதால், பெண்ணின் குறிக்குள் சென்று வெளியே வரும் போது அந்த 'rough' தோல் பெண்ணின் குறியின் 'மென்மையான' உட்புற சுவர்களில் தேய்த்து வரும் போது பெண்ணின் உணர்ச்சிகளை மேலும் அதிகரிக்கும். ஆக, நஷ்டம் பெண்ணுக்கும் தான்.
(18+ என்று மேலே போட்டிருப்பதால், கொஞ்சம் தைரியமாக இதை எழுதுகிறேன்)
முன் தோலை நீக்கும் போது அந்த தோலின் முனையில் முடியும் நூற்றுக்கணக்கான உணர்ச்சி reciptors சேர்த்தே நீக்கப்படுகிறது. அதனால் நஷ்டம் ஆணுக்கே.
அதுவும் மட்டும் இல்லாமல், தோல் சற்று தடித்து/rough-ஆக இருப்பதால், பெண்ணின் குறிக்குள் சென்று வெளியே வரும் போது அந்த 'rough' தோல் பெண்ணின் குறியின் 'மென்மையான' உட்புற சுவர்களில் தேய்த்து வரும் போது பெண்ணின் உணர்ச்சிகளை மேலும் அதிகரிக்கும். ஆக, நஷ்டம் பெண்ணுக்கும் தான்.
நீர்முள்ளி 200 கிராம் ஓரிதழ்தாமரை 200 கிராம் ஜாதிக்காய் 100 கிராம் நெருஞ்சி 100 கிராம் முறையாக 60 நாட்கள் சாப்பிட அனுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123
அருமையான பதிவு
பலதார மணம் மட்டும் அல்ல கூடுதலாக அடிமைப் பெண்களை கணக்கில்லாமல் வைத்துக் கொள்ளும் சமூகங்களில் மட்டும்தான் விருத்த சேதனம் பின்பற்றப்படுகின்றது.குரானில் நீங்கள் 1,2,3,4 பெண்களை திருமணம் செய்யுங்கள். யுத்தத்தில் கைபற்றிய பெண்களை-குமுஸ்- எத்தனை போ்களையும் செக்ஸ்அடிமைகளாக வைத்துக் கொள்ளுங்கள்- என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
முஹம்மது நபிக்கு 10 மேல் மனைவிகள். நிறைய குமுஸ் பெண்களை அடிமைகளாக வைத்தீருந்தாா். இன்றும் அரபிகள் மனைவி குமுஸ் பெண்களை வைத்திருக்கின்றாா்கள்.யுத்தத்தில் கைபற்றப்பட்ட பொருட்கள் மற்றும் பெண்களில் 5சதம் நபி பங்கு.
என்னுடைய முன்தோல் இன்னும் உரியவில்லை..என்ன செய்தல் உரியும்...
வணக்கம் தோழர்களே,
ஆண்மை குறைவு
நரம்பு தளர்ச்சி
கை கால் நடுக்கம்
உறுப்பு சிறுத்திருத்தல்
விரைவில் விந்து வெளிபாடு
தூக்கத்தில் விந்து வெளிபாடு
உயிரணு குறைவு
விரை மேல், கீழ் ஏற்றம் இறக்கம்
போன்ற அனைத்து வித ஆண்மைகுறைவு பிரச்சனைக்கும் சித்தர்கள் கூறிய முறைபடி சுத்தி செய்து சரியான அளவில் மூலிகைகள் சேர்க்கபட்டு எந்த பக்கவிளைவும் இல்லாமல், உங்களின் பிரச்சனையை ஆராய்ந்து மருந்து தருகிறோம்.
20 நாளில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் தெரியும்.
60 வயதிற்குட்பட்ட சக்கரை வியாதி இல்லாதவர்கள் தொடர்புகொண்டு முழு நிவாரணம் பெறலாம்.நன்றி
பாரம்பரிய சித்த மருத்துவர்:
மோகன்ராஜ்.
சித்தர் கோவில்.
கஞ்சமலை.
சேலம்-636010
கைபேசி:9688888410
6383456410
வணக்கம் தோழர்களே,
ஆண்மை குறைவு
நரம்பு தளர்ச்சி
கை கால் நடுக்கம்
உறுப்பு சிறுத்திருத்தல்
விரைவில் விந்து வெளிபாடு
தூக்கத்தில் விந்து வெளிபாடு
உயிரணு குறைவு
விரை மேல், கீழ் ஏற்றம் இறக்கம்
போன்ற அனைத்து வித ஆண்மைகுறைவு பிரச்சனைக்கும் சித்தர்கள் கூறிய முறைபடி சுத்தி செய்து சரியான அளவில் மூலிகைகள் சேர்க்கபட்டு எந்த பக்கவிளைவும் இல்லாமல், உங்களின் பிரச்சனையை ஆராய்ந்து மருந்து தருகிறோம்.
20 நாளில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் தெரியும்.
60 வயதிற்குட்பட்ட சக்கரை வியாதி இல்லாதவர்கள் தொடர்புகொண்டு முழு நிவாரணம் பெறலாம்.நன்றி
பாரம்பரிய சித்த மருத்துவர்:
மோகன்ராஜ்.
சித்தர் கோவில்.
கஞ்சமலை.
சேலம்-636010
கைபேசி:9688888410
6383456410
வணக்கம் தோழர்களே,
ஆண்மை குறைவு
நரம்பு தளர்ச்சி
கை கால் நடுக்கம்
உறுப்பு சிறுத்திருத்தல்
விரைவில் விந்து வெளிபாடு
தூக்கத்தில் விந்து வெளிபாடு
உயிரணு குறைவு
விரை மேல், கீழ் ஏற்றம் இறக்கம்
போன்ற அனைத்து வித ஆண்மைகுறைவு பிரச்சனைக்கும் சித்தர்கள் கூறிய முறைபடி சுத்தி செய்து சரியான அளவில் மூலிகைகள் சேர்க்கபட்டு எந்த பக்கவிளைவும் இல்லாமல், உங்களின் பிரச்சனையை ஆராய்ந்து மருந்து தருகிறோம்.
20 நாளில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் தெரியும்.
60 வயதிற்குட்பட்ட சக்கரை வியாதி இல்லாதவர்கள் தொடர்புகொண்டு முழு நிவாரணம் பெறலாம்.நன்றி
பாரம்பரிய சித்த மருத்துவர்:
மோகன்ராஜ்.
சித்தர் கோவில்.
கஞ்சமலை.
சேலம்-636010
கைபேசி:9688888410
6383456410
Bro naan Hindu@ Tamilan, sunnat asai pattu seithu konden, entha oru maruthuva perachai elay endralum. Enaku neengal solnathu pola entha unarchi ilapum erpadalai but kama unarchi tan inum athikam aagi iruku. So neengal tavarana oru pathivu iturukingal.
கருத்துரையிடுக