பின்பற்றுபவர்கள்

9 ஏப்ரல், 2012

* மறுபடியும் கிடைத்த நல்வாய்ப்பு !

கஸ்ட் 20, 2007 ஆம் ஆண்டு கிடைத்த தமிழ்மணம் நட்சத்திர பதிவர் வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது. எழுதத் துவங்கி ஓராண்டு கழித்து கிடைத்த முதல்வாய்பிற்குப் பிறகு நான்கு அரை ஆண்டுகளில் இரண்டாம் வாய்ப்புக் கிடைத்துள்ளது, மீண்டும் நட்சத்திரம் ஆக்கப்படலாம் என்கிற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாவிட்டாலும். அதை ஒரு நன்மதிப்பாக நினைத்திருந்ததால் அப்போது எடுத்து வைத்த திரை ஒற்று (ஸ்கிரீன் ஷாட்கள்) கீழே உள்ளப் படங்கள்.





புதிதாக எழுதவரும் பதிவர்கள் துவக்க காலத் தமிழ்மணத்தின் முகப்பு எப்படி இருந்தது என்று பார்த்துக் கொள்ளலாம். முன்பு தமிழ்மணம் சார்பில் 'பூங்கா' என்கிற மாத இதழ் இணையப் பதிப்பு வெளியானது(படத்தில் பார்க்க), அப்போழுது எழுதிவந்தவர்களில் 80 விழுக்காட்டினர் எழுதுவதைக் குறைத்துவிட்டார்கள், அவர்களில் ஐம்பது விழுகாட்டினர் எழுதுவதையே நிறுத்திவிட்டனர், மீதம் டிவிட்டர், கூகுள் + மற்றும் முகநூலில் எழுதிவருகின்றனர். எல்லோருக்கும் எப்போதும் நேரமும் ஆர்வமும் இருக்கும் என்று சொல்லமுடியாது. அதே போன்று எழுதப் பழகியவர்களுக்கு எதையாவது எழுதாவிட்டால் மன அழுத்தம் ஏற்பட்டுவிடும், சமூக அவலங்கள், வன்கொடுமைகள் குறித்து நம்மால் எதுவும் செய்ய இயலாது என்று தெரிந்த போதிலும் ஆற்றாமையை நாலு பேருடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது ஓரளவு மன அழுத்தம் குறைகிறது. 

தேர்தல் காலங்களில் பதிவர்கள் தீயாக எழுதுவார்கள், ஆனால் முடிவுகள் எதிர்பார்த்த அளவில் இருக்காது, விழிப்புணர்வு, பொதுபுத்தி ஆகியவற்றை ஓரளவு கடந்து எழுதுவதால் உலக நடப்பும் அப்படித்தான் இருக்கும் என்று நாம் எண்ணுகிறோம், அது வலைப்பதிவுகள் மூலம் வளர்த்துக் கொண்ட பொது புத்தி. புற உலகில் ஊடகங்களை தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் எத்தனை பேருக்கு இருக்கிறது ? அதுவும் தமிழ் சூழலில் ஊடகங்கள் பக்க சார்பு உள்ளவை என்பதால் சில நாளிதழ்களின் வாசகர்களாக இருப்பவர்கள் நாளிதழலின் மன நிலையைக் காட்டுபவர்களாகத்தான் கருத்து கொண்டிருப்பார்கள். வலைப்பதிவில் எழுதுவதால் பெரிதாக சமூகமாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என்றாலும் நாளடைவில் எழுதுபவர்களின் எண்ணிக்கைக் கூட, வாசகர்களின் எண்ணிக்கைக் கூட அவர்கள் மூலம் கருத்துப் பரவல்களை ஏற்படுத்தி, பொது புத்திகட்டமைப்புகளையும் அசைத்துப் பார்க்க முடியும்.

வலைப்பதிவில் எழுதுவதன் மூலம், உலகத் தமிழ் சமூகத்தில் வெவ்வெறு நாடுகளில் வசிப்பர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது,  வகுப்பு தோழர்கள், வசிக்குமிடத் தோழர்கள் என்பதைத் தாண்டி நட்பு வட்டம் விரிவடைகிறது,  வலைப்பதிவரின் திருமணங்களுக்கு வலைப்பதிவர்கள் திரளாக சென்று வருகின்றனர், 10 ஆண்டுக்கு முன்பு இவையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஒருவரின் எழுத்தின் தன்மையை வைத்து ஓரளவு அவருடைய சிந்தனை ஓட்டம் மற்றும் எண்ணங்களை அறிந்து கொள்வதால் நம்முடன் தொடர்பில் இருக்கும் பதிவர் நண்பரின் தன்மைக்கேற்ப பழக முடிகிறது. தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளமுடியும். 7 ஆண்டுகளாக எழுதிவருவதன் மூலம் எனக்கு கிடைத்த வலைப்பதிவு நண்பர்கள் வட்டத்தில் குறைந்தது 100 பேராவது என்னை / நான் நேரில் சந்தித்துப் பேசியவர்கள்.

சில ஆண்டுகள் கழித்து நாம் எழுதியதைத் திரும்பப்படிக்க நமக்கே வியப்பாக இருக்கும், ஒன்று நம்மால் இவ்வளவு சிறப்பாக இவற்றை எழுத முடிந்திருக்கிறதா ? இரண்டு எழுத்தின் தரம் ஒப்பிட தற்காலத்தில் கூடி இருப்பதையும் அறிய முடியும். வலைப்பதிவு என்பது ஆவணம் போன்றது,  நமது நிலைப்பாடுகள் ஒவ்வொரு காலத்தில் எப்படி சென்றிருந்தது என்று அறிய முடியும். கேள்விப்படாத தகவல்களை, ஆதாரமின்றிய தகவல்களை எழுதுவது பின்னர் அவற்றில் உண்மையில்லை என்று அறியும் பொழுது நாம் எழுதியவை பயனற்றவையாகி இணையக் குப்பையாகிவிடும், அதை வேறொருவர் போதிய தெளிவின்றிப் படிக்கும் போது உண்மை என்றே நினைத்துக் கொண்டு இருப்பர், தவறான தகவல்களை ஒரு சிலர் நம்முடைய பொறுப்பற்ற செயலால் உள்வாங்கிக் கொண்டிருப்பர் என்பதை நினைத்து எழுதுவது வலைப்பதிவில் எழுதுவதில் கடைபிடிக்க வேண்டிய எழுதப்படாத அணுகுமுறைகள்.


******
மூன்றாம் முறையாக காலம் வலைப்பதிவின் முகப்பை மாற்றி இருக்கிறேன் , கீழே உள்ளது 2008 செப்டம்பர் வரை இருந்தது

அதன் பிறகு சென்றவாரம் வரை இருந்த முகப்பு 
இப்போதெல்லாம், பெரிய திரைகளும் அகலத் திரைகளும் மேசைக் கணிணி மற்றும் மடிக்கணிணிகளில் இருப்பதால் புதிய முகப்பை அதற்கேற்றவாறு மாற்றி இருக்கிறேன். இடுகை எழுதும் / படிக்கும் பகுதி பெரியதாகவும் பிற பக்கவாட்டுத்தகவல்களுக்கு போதிய அளவும் விட்டிருப்பதால் வாசிக்கவும், பெரிய அளவுக்கு படங்களை பார்ப்பதற்கும் இந்த முகப்பு நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கூகுல் ப்ளாக்கரின் அண்மைய மாற்றங்களின் பயன்பாடுகளுடன், செல்பேசி உள்ளிட்டவைகளில் வாசிக்க எளிதாகவும் மாற்றப்பட்டுள்ளதால் நான் இந்த புதிய முகப்பிற்கு மாறி உள்ளேன். பழையன கழிதல் என்ற அடிப்படியில் உங்கள் வலைப்பதிவுகளையும் மாற்றிக் கொண்டால் வாசிப்பவர்களுக்கு பயனாக இருக்கும் என்பது எனது பரிந்துரை.
*******
எனக்கு தெரிந்து இரண்டாம் முறை நட்சத்திர பதிவராகும் வாய்ப்பு பெற்றவர்கள் 13 வலைப்பதிவர்கள்.

திருமதி துளசி கோபால்
தமிழ்மணம் திரு காசி ஆறுமுகம்
திரு தருமி
கூடல் வலைப்பதிவு திரு குமரன்
(ஐ)சங்கமம் திரட்டி / விவசாயி திரு இளா
சாத்தான் குளத்து வேதம் திரு ஆசிப் மீரான்
நண்டு @நொரண்டு -ஈரோடு 
இளவேனில் திரு தமிழ்நதி 
திரு மோகன்தாஸ் இளங்கோவன்
தமிழ் புத்தகத் தகவல் திரட்டு விருபா(தொடர்ந்து இருவாரம்)

நாம் வாழ்நாளில் வால்நட்சத்திரங்களை இருமுறை பார்க்க முடிவது அரிது, தமிழ்மணத்தில் இரண்டாம் முறை நட்சத்திரப் பதிவராக எழுதும் வாய்ப்புக் கிடைத்ததற்கு தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். எனது பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும் பதிவர் நண்பர்களுக்கும், வாசக பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்றவார தமிழ்மணம் நட்சத்திரப் பதிவுகளை சிறப்பாக எழுதிய தனிமரம் திரு சிவனேசன் அவர்களுக்கு பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள்.

54 கருத்துகள்:

Robin சொன்னது…

வாழ்த்துகள் கோவி!

புதுகை.அப்துல்லா சொன்னது…

முன்பு நட்சத்திரமாக இருந்த காலத்தில் வாழ்த்திய அதே அப்துல்லாவுக்கு இப்போது மீண்டும் வாழ்த்தும் வாய்ப்பு கிட்டியதில் மகிழ்ச்சி :)

புதுகை.அப்துல்லா சொன்னது…

இரண்டாம் முறையாக ஆசீப்மீரான் அண்ணாச்சியும் நட்சத்திர வாய்ப்பு பெற்றார்.

Unknown சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள் கோவியாரே!

priyamudanprabu சொன்னது…

வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி சொன்னது…

மகிழ்ச்சி. வாழ்த்துகள்! முன்பிருந்த முகப்பை சேமித்து வைத்திருப்பதும் சிறப்பு.

@புதுகை.அப்துல்லா,
/முன்பு நட்சத்திரமாக இருந்த காலத்தில் வாழ்த்திய/

2007-ல் எழுத வந்துவிட்டீர்களா? 2008 மே மாதப் பதிவர் வட்டத்தை சேர்ந்தவர் இல்லையா:)?

CS. Mohan Kumar சொன்னது…

மகிழ்ச்சி வாழ்த்துகள்

கோவி.கண்ணன் சொன்னது…

திரு ராபின் நன்றி
திரு அப்துல்லா,
ஆசிப் மீரான் பெயர் சேர்த்துள்ளேன், நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி
//முன்பு நட்சத்திரமாக இருந்த காலத்தில் வாழ்த்திய அதே அப்துல்லாவுக்கு இப்போது மீண்டும் வாழ்த்தும் வாய்ப்பு கிட்டியதில் மகிழ்ச்சி :)// 2007லேயே வந்துட்டியளா அப்போ மூத்தப் பதிவர் அண்ணன் அப்துல்லா நன்றி.

கரிகாலன் சார் நன்றி

தம்பி பிரியமுடன் பிரபு நன்ரி

ராமலக்‌ஷ்மி மேடம் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

திரு மோகன் குமார் மிக்க நன்றி

கபிலன் சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி !

புதுகை.அப்துல்லா சொன்னது…

// 2007-ல் எழுத வந்துவிட்டீர்களா? 2008 மே மாதப் பதிவர் வட்டத்தை சேர்ந்தவர் இல்லையா:)?

//

அக்கா, 2007 இல் பின்னூட்டப் பதிவராக இருந்தேன். 2008 மே உங்களோடு இணைந்து எழுதத் துவங்கினேன் :)

புதுகை.அப்துல்லா சொன்னது…

// வாய்ப்பு பெற்றவர்கள் 10 வலைப்பதிவர்கள்.

//

ஆசீப் அண்ணாச்சியை இணைத்து விட்டதால் 11 எனத் திருத்துங்கள்.

Ravichandran Somu சொன்னது…

வாழ்த்துகள் கோவியாரே !!!

iniyavan சொன்னது…

வாழ்த்துகள்!

மோகன் கந்தசாமினு ஒருவர் இரண்டு முறை இருந்ததாக நினைவு.

கோவி.கண்ணன் சொன்னது…

//கபிலன் கூறியது...
வாழ்த்துக்கள் கோவி !//

திரு கபிலன் நன்றி

// 2007 இல் பின்னூட்டப் பதிவராக இருந்தேன். 2008 மே உங்களோடு இணைந்து எழுதத் துவங்கினேன் :)//

இப்ப பழையபடி பின்னூட்டப் பதிவர் ஆகிட்டேன் என்று சொல்லவில்லையே :)

//ரவிச்சந்திரன் கூறியது...
வாழ்த்துகள் கோவியாரே !!!//

நன்றி ரவிச்சந்திரன்

// என். உலகநாதன் கூறியது...
வாழ்த்துகள்!

மோகன் கந்தசாமினு ஒருவர் இரண்டு முறை இருந்ததாக நினைவு.//

அவர் மோகன் கந்தசாமி இல்லை, மோகன் கந்தசாமி ஒருமுறை உலா வந்தார், மோகன் தாஸ் என்பர் இருமுறை வந்தார்

'பசி'பரமசிவம் சொன்னது…

என் இனிய நண்பர் கோவி இரண்டு முறை கவுரவிக்கப் பட்டதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
மேலும் சிறக்க வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//என் இனிய நண்பர் கோவி இரண்டு முறை கவுரவிக்கப் பட்டதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
மேலும் சிறக்க வாழ்த்துகள்.

திங்கள், 9 ஏப்ரல், 2012 2:58:00 p//

மிக்க நன்றீ திரு பரமசிவம் ஐயா

துளசி கோபால் சொன்னது…

நட்சத்திரமே! இனிய வாழ்த்து(க்)கள்.

எல்லா சமாச்சாரங்களையும் கலந்து கட்டி நல்லதொரு 'கலவை' யாக அமையப்போகும் வாசிப்புக்குக் காத்திருக்கின்றேன்.

ரெடி....ஸ்ட்டார்ட்....ம்யூஜிக்:-))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் கூறியது...
நட்சத்திரமே! இனிய வாழ்த்து(க்)கள்.

எல்லா சமாச்சாரங்களையும் கலந்து கட்டி நல்லதொரு 'கலவை' யாக அமையப்போகும் வாசிப்புக்குக் காத்திருக்கின்றேன்.

ரெடி....ஸ்ட்டார்ட்....ம்யூஜிக்:-))))))))//

எல்லாம் அரைகுறையாக இருக்கு, இன்னும் அடுத்த இடுகை முடிக்கப்படாமல் தான் இருக்கு. பார்ப்போம், எல்லாம் காலத்தின் கையில் :)

நன்றி அம்மா

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துகள்

தேவன் மாயம் சொன்னது…

Dear Kovi! How are you? Congrats!

தேவன் மாயம் சொன்னது…

Dear Kovi! How are you? Congrats!

தமிழ்சேட்டுபையன் சொன்னது…

தமிழ்மண நட்சத்திரமாக மீண்டும் வந்தமைக்கு வாழத்துகள் கோவிஜீ!

தனிமரம் சொன்னது…

தமிழ்மண நட்சத்திரம் சிறப்பாக ஜொலிக்க முதலில் வாழ்த்துக்கள்.

தனிமரம் சொன்னது…

தமிழ்மணத்தின் பூங்கா இதழ் பற்றிய ஞாபகங்கள் என்றும் பசுமையான நினைவுகள் அப்போதும் வாசகனாக இருந்தேன் இப்போது ஒரு பதிவாளர் ஆனாலும் பலருக்குத் தெரியாத விடயத்தை மீளவும் ஞாபகப்படுத்தி பல விடயங்களை சிறப்பாக தொகுத்த பதிவு கோவியாரே.தொடர்ந்து கலக்குங்கள் முன்னவர்கள் பல இன்று வந்திருக்கின்றார்கள் மகிழ்ச்சி.

சேலம் தேவா சொன்னது…

வாழ்த்துகள்ண்ணே..!!

அம்பலத்தார் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே

புதுகை.அப்துல்லா சொன்னது…

// மோகன் கந்தசாமினு ஒருவர் இரண்டு முறை இருந்ததாக நினைவு.

//

no. he was a star for only one time

ராஜ நடராஜன் சொன்னது…

என்னது!மறுபடியும் நாற்காலியில உட்கார வைச்சிட்டாங்களா?இதயம் இனித்தாலும் கண்கள் பனிக்கவில்லை:)

வேகநரி சொன்னது…

இரண்டாவது தடவையாக நட்சத்திரமாக வந்திருக்கிறிங்கள். வாழ்த்துக்கள்.
சிங்கபூர் தேசிய கொடியை வைத்து கொண்டு ஒரு படத்தில் நிற்க்கிறீர்கள். ஊரோடு ஒத்து வாழ் என்ற உயர் தத்துவத்தையே சொல்லுகிறீர்கள்.

குமரன் (Kumaran) சொன்னது…

வாழ்த்துகள் கண்ணன்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

இரண்டாம் முறை தமிழ்மணம் மகுடத்தில் வந்த நீங்கள் ஆறுமுறையேனும் வந்து சாதனை படைக்க வாழ்த்துகிறேன் :))))

Amudhavan சொன்னது…

காலம் எத்தனை வேகமாய் ஓடுகிறது என்பதை சுலபமாக அறிந்துகொள்ள இந்த இரண்டாம் வாய்ப்பு பயன்படும் என்று நினைக்கிறேன். நிறையப்பேர் எழுதுவதை நிறுத்திவிட்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதும் உங்களுக்கும் உங்களைப்போன்ற இன்னும் பிறருக்கும் வாழ்த்துக்கள்.

Amudhavan சொன்னது…

காலம் எத்தனை வேகமாய் ஓடுகிறது என்பதை சுலபமாக அறிந்துகொள்ள இந்த இரண்டாம் வாய்ப்பு பயன்படும் என்று நினைக்கிறேன். நிறையப்பேர் எழுதுவதை நிறுத்திவிட்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதும் உங்களுக்கும் உங்களைப்போன்ற இன்னும் பிறருக்கும் வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

வாழ்த்துகள் சார்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வாழ்த்துக்கள்

ILA (a) இளா சொன்னது…

வாழ்த்துகள் :)

மற்றும் நன்றி!~

கிரி சொன்னது…

வாழ்த்துகள் கோவி கண்ணன் :-)

SathyaPriyan சொன்னது…

வாழ்த்துக்கள். அருமையான பதிவுகளை எதிர் பார்க்கிறேன். நன்றி.

suvanappiriyan சொன்னது…

வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் சொன்னது…

வாழ்த்துகள் அண்ணன்.

இராம.கி சொன்னது…

வாழ்த்துக்கள், கோவி. மிகுந்த நாட்களாயின, உங்களைப் பார்த்து, பேசி. அவ்வப்போது உங்கள் பதிவைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

பழைய ஆட்கள் ஒருசிலர் இப்பொழுது எழுதாமல் இருப்பது இழப்புத்தான்.

அன்புடன்,
இராம.கி.

தருமி சொன்னது…

பூனையாரின் ஆசியோடு என் வாழ்த்துகளையும் இணைத்துக் கொள்கிறேன்.

சிவபாலன் சொன்னது…

வாழ்த்துகள் கோவி!

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.ராதாகிருஷ்ணன் கூறியது...
வாழ்த்துகள்//

மிக்க நன்றி ஐயா.

//தேவன் மாயம் கூறியது...//

நெடுநாள் சென்று உங்கள் பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சி.

//தமிழ்சேட்டுபையன் கூறியது...
தமிழ்மண நட்சத்திரமாக மீண்டும் வந்தமைக்கு வாழத்துகள் கோவிஜீ!//

மிக்க நன்றி

//தனிமரம் கூறியது...
தமிழ்மண நட்சத்திரம் சிறப்பாக ஜொலிக்க முதலில் வாழ்த்துக்கள்.//

தங்கள் இருபின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//சேலம் தேவா கூறியது...
வாழ்த்துகள்ண்ணே..!!//

தேவா நன்றி

//அம்பலத்தார் கூறியது...
வாழ்த்துக்கள் நண்பரே//

மிக்க நன்றி அம்பலத்தார்

//ராஜ நடராஜன் கூறியது...
என்னது!மறுபடியும் நாற்காலியில உட்கார வைச்சிட்டாங்களா?//

நாற்காலி என்ன ஆப்பா ?
:))

//இதயம் இனித்தாலும் கண்கள் பனிக்கவில்லை:)//

மார்கழி மாதம் தான் பனிக்கும் :)

கோவி.கண்ணன் சொன்னது…

// thequickfox கூறியது...
இரண்டாவது தடவையாக நட்சத்திரமாக வந்திருக்கிறிங்கள். வாழ்த்துக்கள்.
சிங்கபூர் தேசிய கொடியை வைத்து கொண்டு ஒரு படத்தில் நிற்க்கிறீர்கள். ஊரோடு ஒத்து வாழ் என்ற உயர் தத்துவத்தையே சொல்லுகிறீர்கள்.//

நன்றி,

இதுதான் ஊருன்னு ஆனப் பிறகு அது தான் கொடின்னு ஆகிவிட்டது
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) கூறியது...
வாழ்த்துகள் கண்ணன்.//

மிக்க நன்றி குமரன்

கோவி.கண்ணன் சொன்னது…

//nigalkalathil siva கூறியது...
இரண்டாம் முறை தமிழ்மணம் மகுடத்தில் வந்த நீங்கள் ஆறுமுறையேனும் வந்து சாதனை படைக்க வாழ்த்துகிறேன் :))))//

நன்றி சிவா........

ஏன் ஏன் இந்தக் கொலவெறி.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

// Amudhavan கூறியது...
காலம் எத்தனை வேகமாய் ஓடுகிறது என்பதை சுலபமாக அறிந்துகொள்ள இந்த இரண்டாம் வாய்ப்பு பயன்படும் என்று நினைக்கிறேன். நிறையப்பேர் எழுதுவதை நிறுத்திவிட்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதும் உங்களுக்கும் உங்களைப்போன்ற இன்னும் பிறருக்கும் வாழ்த்துக்கள்.//

தங்களது வாழ்த்துக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி அமுதவன் ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் கூறியது...
வாழ்த்துகள் சார்
//

நன்றி நண்பரே

//நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
வாழ்த்துக்கள்//

நன்றி நண்பரே

//
ILA(@)இளா கூறியது...
வாழ்த்துகள் :)

மற்றும் நன்றி!~//

மிக்க நன்றி இளா

//கிரி கூறியது...
வாழ்த்துகள் கோவி கண்ணன் :-)//
ரொம்ம நன்றி ரஜினி கிரி சார்

கோவி.கண்ணன் சொன்னது…

//SathyaPriyan கூறியது...
வாழ்த்துக்கள். அருமையான பதிவுகளை எதிர் பார்க்கிறேன். நன்றி.//
மிக்க நன்றி சத்யபிரியன்

//
சுவனப்பிரியன் கூறியது...
வாழ்த்துக்கள்//

நன்றி சுவனப்பிரியன்

//
நட்புடன் ஜமால் கூறியது...
வாழ்த்துகள் அண்ணன்.//

ஜமால் தம்பி நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//இராம.கி கூறியது...
வாழ்த்துக்கள், கோவி. மிகுந்த நாட்களாயின, உங்களைப் பார்த்து, பேசி. அவ்வப்போது உங்கள் பதிவைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

பழைய ஆட்கள் ஒருசிலர் இப்பொழுது எழுதாமல் இருப்பது இழப்புத்தான்.

அன்புடன்,
இராம.கி.//

அன்பின் திரு இராமகி ஐயா

தேவநேயப் பாவாணரைப் பார்த்ததில்லை, நான் வாழும் காலத்தில் உங்களைப் பார்த்து / பேசியது எனக்குக்கிடைத்த நல்வாய்ப்பு. மகிழ்வானது, மறக்க இயலாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி கூறியது...
பூனையாரின் ஆசியோடு என் வாழ்த்துகளையும் இணைத்துக் கொள்கிறேன்.//

பூனையாருக்கு கொஞ்ச நாள் ஓய்வு. என்றாவது / எங்காவது மத அறிவியல் பதிவுகள் வந்தால் பூனையார் சிலிர்த்து எழமால் இருக்கனும்.

வாழ்த்துக்கு நன்றி தருமி ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் கூறியது...
வாழ்த்துகள் கோவி!//

உங்கள் வாழ்த்து தனிச் சிறப்பானது, முன்பு நட்சத்திரமாக இருந்த பொழுது வாழ்த்திய நீங்கள், மீண்டும் இங்கு வாழ்த்துவதற்காக வந்திருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி சிபா.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்