பின்பற்றுபவர்கள்

23 மார்ச், 2012

இலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகள் - கிழித்துக் கொண்டுள்ள மனிதாபிமான முகமூடி !

இலங்கைப் போர் குற்றம் தொடர்பான அமெரிக்கத் தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாகவும், தீர்மானத்திற்கு எதிராகவும் மதவாத நாடுகளே பெரும்பாலும் வாக்களித்துள்ளனர். இதற்கு அடிப்படைக்காரணம் என்று நம்பப்படுபவை இலங்கை அரசுக்கு ஆதரவான நிலை என்பதைவிட முன்பிருந்த விடுதலை போராளிகளுக்கும் இலங்கைவாழ் மற்றொரு மதத்தினருக்கும் இடையேயான பகைத்தான். ஆனால் பிரச்சனையோ விடுதலைப் போராளிகளுக்கும் இலங்கையரசுக்கும் நடந்த போர் பற்றியதல்ல, போரில் கொடுரமாகக் கொல்லப்பட்ட பொதுமக்களைப் பொருத்தும், அவர்களை இன்றும் முள் வேலிக்குள் அடைத்து வைத்திருப்பதும், அவர்களின் உடைமையை பறித்தது பற்றியும் தான் என்பதை மதவாத நாடுகள் சிந்திக்க மறுக்கின்றன. அதாவது முற்றிலும் மனிதாபிமானதிற்கு இழைத்த கொடுமை தொடர்பிலேயே தீர்மானம் உருவாகியும் அதற்கான தீர்வுகளுக்கு இலங்கை அரசை பணிய வைக்கவும் தான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் தாம் மனிதாபிமானத்திற்கு ஆதரனான நாடு என்கிற பிம்பத்தை அமெரிக்க உருவாக்கி அரசியல் செய்தாலும் வீடற்ற, உறவற்ற தமிழர்களுக்கு ஏதேனும் தீர்வு கிடைத்தால் சரி என்ற அளவில் தான் இதனை நினைக்க வேண்டியுள்ளது.

வாக்களிப்பில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ள மதவாத நாடுகள் உலகிற்கு புரிய வைக்கும் பாடம் இதில் அடங்கியுள்ளதையும் அதன் மூலம் மதவாத சக்திகள் ஏன் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதைத் தாம் புரிந்து கொள்ளவேண்டும், தானோ தன்னைச் சார்ந்தவர்களோ பாதித்துள்ளதாக அறிந்தால் மனிதாபிமானம் என்பதெல்லாம் சிந்தனைக்குள் வரத் தேவை இல்லை என்பதை தான் இந்த நாடுகள் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளன, மதங்களும் மதவாதிகளும் காட்டும் மனிதாபிமானம் என்பவை போலித்தனமானது என்று பிறர் கூறும் போது ஆவேசப்படும் மதவாதிகளின் முகமூடிகள் தங்களைச் சார்ந்தவர்களாலேயே அகற்றப்படுவதை பார்த்தும் மூடிக் கொள்ளத்தான் முயற்சி செய்கிறார்கள்.

ஒரு மதவாதி இன்னொரு மதவாதியால் தாக்கப்படும் போது அங்கே மனிதாபிமானம் பேசுபவர்களுக்கு வேலை இல்லை, எதையும் மத அரசியல் கண் கொண்டு பார்த்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதே நல்லது என்பதைத் தான் மதவாதிகள் அவ்வப்போது நினைவுபடுத்திவருகிறார்கள், மோடி அரசின், இஸ்ரேல் அரசின் மதவாத நடவடிக்கைகளைக் கூட நாம் கண்டு கொள்ளாமல் அதை வெறும் மதவாத அல்லது இரு மதங்களுக்கு இடையே நடக்கும் போராட்டங்கள் என்ற அளவில் தான் பார்க்க வேண்டும் என்பதை நமக்கு மதவாதிகள் தான் சொல்லிக் கொடுக்கின்றனர்.

இனி எங்காவது எங்கள் மதத்தை ஒழிக்க முயற்சிக்கிறார்கள், புறக்கணிக்கிறார்கள் என்று ஓலங்கள் கேட்கும் போது அதை நாம் வெறும் மதவாத ஓலம் என்று கேட்டுக் கொண்டு கடந்து செல்வது தான் நமக்கான நடைமுறைகள் என்பதை மதவாதிகளே நமக்குச் சொல்லித்தருகிறார்கள்,

மதவாதிகள் ஏன் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் ? அவர்களால் ஒரு நாளும் மனிதாபிமானத்திற்கு ஆதரவான நிலைப்பாடுகளை மதம் தாண்டிய சிந்தனையாக கொண்டுவந்துவிடவே முடியாது, மதவாதிகள் பேசும் மனிதாபிமானம் போலியானது, மத சார்புநிலையானது அப்படியும் அவர்களால் மனிதாபிமானம் பற்றிய கருத்துகள் சொல்லப்பட்டிருந்தால் அவை வெறும் மதம் பரப்புதல் என்ற செய்ல்பாட்டிற்கு கொடுக்கப்பட்டிருந்த பயிற்சி மட்டுமே.

மதவாதிகள் குறிப்பிடும் உலக இறுதி நாளின் முன்பே மதவாதிகளால் மனிதாபிமானம் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும் பிறகு இந்த உலகம் இருந்தால் என்ன நாசமாகப் போனால் என்ன ?

கடவுள் நம்பிக்கைக் குறித்த சிந்தனைகளில் உலகம் மாற்றம் விரும்பி அதனை அழித்திவிட விரும்புக் கடவுள் அதனை செயல்படுத்த இறக்கிவிடுபவை தான் மதமும் மதவாதிகளும் என்றே நினைக்கத் தோன்றுகிறது, உலகில் மதவாதிகளால் நடந்த ஆக்கப்பூர்வமானவை என்று ஏதேனும் இருக்கிறதா ? என்று நினைத்துப் பார்த்தால் நான் கூறி இருப்பது உண்மையே என்று உணரத் தோன்றும்.

மதம் பேசும் மனிதாபிமானம் என்பவை தன் கூட்டதாரை மட்டுமே சார்ந்தது, ஒரு மதவாதியால் 'அண்டை வீட்டுக்காரருக்கு மாறு (கெடுதல்) செய்யாதீர்கள் ' என்கிற கருத்துகள் மனிதாபிமான கருத்துகளாக முன் வைக்கப்பட்டால், இந்த அண்டைவீட்டினர் என்பதை நாம் ஒரே மதத்தைச் சார்ந்த அண்டைவீட்டினர் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் மறுப்பு சிந்தனைகளை நாத்திகர்கள் பரப்புவதைவிட மனிதாபிமானமற்ற செயல்களால் மதவாதிகளே அதை சிறப்பாக செய்துவருகின்றனர்.

23 கருத்துகள்:

ஜோ/Joe சொன்னது…

சில நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருப்பதற்கு காரணம் இலங்கைக்கு ஆதரவு என்பதை விட , இந்த தீர்மானத்தை கொண்டுவர அமெரிக்காவுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்னும் கோணத்தில் அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்பதால் ..என்பது என்னுடைய கருத்து

கோவி.கண்ணன் சொன்னது…

//சில நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருப்பதற்கு காரணம் இலங்கைக்கு ஆதரவு என்பதை விட , இந்த தீர்மானத்தை கொண்டுவர அமெரிக்காவுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்னும் கோணத்தில் அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்பதால் ..என்பது என்னுடைய கருத்து//

சாலையில் நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கான நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று சொல்பவர் ஏற்கனவே தாம் செய்த விபத்துகளை நினைத்து இதைச் சொல்லத் தேவை இல்லை என்பது சரியான வாதமா ? பாதிக்கப்பட்டவன் சாகக் கிடக்கிறான், பிழைக்க வைக்க வேண்டும் என்பது தான் முதல் சிந்தனையாக இருக்க வேண்டும், அதன் பிறகு பிற விமர்சனங்கள்

Unknown சொன்னது…

மதவாதத்தை எதிர்க்கும்,புரட்சிப் பற்றியே பேசும், எந்தப் புரட்சியாளனுக்கும் நான் ஆதரவு என்ற செகுவராவின் வழிவரும் கம்யூனிஸத்தின் பெயரால் ஆட்சி செய்யும் நாடுகள், புரட்சியோடு மக்களையும் நசுக்கிய இலங்கை சிங்கள அரசை ஆதரிப்பதும்,செய்தது சரியே என வக்காலத்து வாங்குவதும் எந்த வகையில் சேர்த்தி?

சித்தாந்தங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமில்லை என்பதே தெளிவு?

சந்தர்ப்பவாதத்திற்கு மதமோ, கொள்கைகளோ தடையல்ல என்பது மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது!

Unknown சொன்னது…

அன்பின் இனிய கண்ணன் அவர்களே!
தங்கள் பதிவு உண்மையான ஆய்வுப் பதிவு.
முதற்கண் என் வாழ்த்துக்கள்!
ஒருமுறை அறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன கருத்து இதோ...
சோப்பு விற்பவன் கை அழுக்கைப்
பார்க்காதே! சோப்பு அழுக்கைப் போக்குமா என்பதைப் பார் என்பதாகும்
திருமிகு ஜோ அவர்களின் கருத்துக்கு
தங்கள் பதில் அத்தகையதே

புலவர் சா இராமாநுசம்

கோவி.கண்ணன் சொன்னது…

//சோப்பு விற்பவன் கை அழுக்கைப்
பார்க்காதே! சோப்பு அழுக்கைப் போக்குமா என்பதைப் பார் என்பதாகும்//

மிக்க நன்றி புலவர் ஐயா.

கோவி.கண்ணன் சொன்னது…

//சந்தர்ப்பவாதத்திற்கு மதமோ, கொள்கைகளோ தடையல்ல என்பது மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது!//

ரமேஷ் வெங்கடபதி ஐயா,

மிகச் சரியான சொல்.

கிரி சொன்னது…

ஜோ அமெரிக்காவிற்கு எந்த யோக்கியதையும் இல்லை என்பது உண்மை தான்.. ஆனால் பிரச்சனை அமெரிக்கா பற்றியதல்ல. தற்போதைய தீர்மானம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வேண்டும் என்பதற்க்காகத்தான் அமெரிக்கா செய்த குற்றங்களை நியாயப்படுத்த அல்ல. அமெரிக்கா ஈராக் தீர்மானம் வந்தால் அப்போது அமெரிக்காவை எதிர்த்து வாக்களிக்கலாம் ஆனால் அதைவிட்டுவிட்டு அமெரிக்காவை எதிர்ப்பதாக நினைத்து இவர்கள் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் தீங்கு இழைக்க முயல்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் அமெரிக்காவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரட்டும் அதை இவர்கள் முன்னெடுக்கட்டும் அதை யார் தடுக்கப்போகிறார்கள். இது ஏற்புடையதாக இல்லை என்பது என்னுடைய கருத்து.

---------

இந்தியா சீனா வந்து விட்டால் என்ன செய்வது என்றே இலங்கைக்கு ஆதரவு அளித்து வருகிறது இவ்வளோ இலங்கைக்காக செய்து இருந்தும் அவர்கள் சீனாவை கச்சத்தீவில் களம் அமைக்க துணை புரிகிறார்கள். இனிமேலாவது இந்தியா இலங்கை மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. காலாகாலத்திற்கும் இதே போல பயந்து கொண்டு இருந்தால் ராஜபக்சே போன்றவர்கள் தங்களுக்கு வேண்டியதையும் தற்போது இந்தியா துணை கொண்டு சாதித்து விட்டு தனக்கு தேவை என்று வரும் போது இது போல சீனாவை நுழைய விட்டு நம் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவார்கள். எப்படி இருந்தாலும் நஷ்டம் நமக்குத் தான். எல்லாத்தையும் செய்து கொடுத்து நஷ்டப்படுவதை விட தைரியமாக எதிர்த்து நாம் நாமாக இருக்கலாம்.

பொன் மாலை பொழுது சொன்னது…

இது தான் முன்னமே தெரிந்த ஒன்றுதானே!
இதில் வியப்பு ஒன்றும் இல்லையே!!


// கடவுள் மறுப்பு சிந்தனைகளை நாத்திகர்கள் பரப்புவதைவிட மனிதாபிமானமற்ற செயல்களால் மதவாதிகளே அதை சிறப்பாக செய்துவருகின்றனர்.//

செருப்பால் அடித்ததை போன்ற வரிகள். இருந்தாலும் "அவர்கள் " அவர்களின் "நாடுகள்"
எல்லாம் அப்படிதான். தாங்களே உத்தம சீலர்கள் என்று உதார்விட கொஞ்சமும் வெட்கப்டாதவர்கள். இவர்கள் தான் உலக அமைதிக்கும் மனித குலத்திற்கும் சேவை செய்ய வந்த மகா யோக்கியர்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

கம்யுனிசம் பேசும் சீனாவும், ரஷ்யாவும் கியூபாவும் இந்த கூட்டத்துடன் சேர்ந்து கூத்தாடுவது மகா கேவலம். அமெரிக்க எதிர்ப்பு என்ற ஒன்றைதவிர இவர்கள் பாதிக்கபட்ட மக்களைபற்றிய எண்ணமோ அவர்களுக்கு நியாயம் மற்றும் உரிமைகள் கிடக்கவேண்டும் என்ற என்னமோ இல்லை. மதவாதிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் சித்தாந்த வாதிகளாக தம்மை முன்னிறுத்தும் இவர்களிடம் என்ன பெரிய வேறுபாட்டை காண முடியும்?

Robin சொன்னது…

கிரி, கக்கு மாணிக்கம் சொல்வது சரியாகப்படுகிறது.
ராஜ பக்ஷே சீனாவை வைத்து பூச்சாண்டி காட்டி வருகிறார்.
இப்போதுகூட இந்தியா இலங்கைக்கு எதிராக ஓட்டளித்ததற்கு தி.மு.க கொடுத்த அழுத்தம்தான் காரணம் என்று நினைக்கிறேன்.

Unknown சொன்னது…

புலிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது நடத்திய தாக்குதல் வீடியோவை. சேனல்4 இலங்கை அரசின் போர் குற்ற காட்சிகளை பொது உலக அரங்கில் வெளியிடும் போது இவர்களும் வெளியிட்டது என்ன மனிதாபிமானம் என்று எனக்கு புரியவில்லை ஏன் இவ்வளவு காலமாக அதை பிரபலபடுத்தவில்லை? இலங்கையில் போரினால், புலிகளால் பாதிப்படைந்த அனைத்து மக்களும் நன்மை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம் என்பதை மதவாதிகள் புரிந்துகொள்ளவேண்டும்.

ராஜ நடராஜன் சொன்னது…

ஓய்!பின்னூட்ட நண்பர்களே!மதம் என்று சொன்னதும் எல்லோரும் குடு குடுன்னு ஐ.பி பஸ்ஸ புடிச்சுகிட்டு இங்கே ஓடி வந்திட்டீங்களாக்கும்:)நானும்தான் மாங்கு மாங்குன்னு பின்னூட்டம் போடுவேனாக்கும்.பின்னூட்டம் போட்டதுல ராபினை தவிர ஒருத்தர் கூட நம்ம கடைக்கு வரலையே!

கோவி!மத நாடுகள்,கம்யூனிஸ நாடுகள் கை கோர்த்துக்கொண்டார்களா என்றால் இல்லை என்பேன்.சீனா,ரஷ்யா,கியூபாவுக்கு அமெரிக்க எதிர்ப்பு மட்டுமே காரணம்.மதவாத நாடுகளுக்கு இலங்கையின் புலிகளுக்கு எதிரான மத லாபி காரணம்.ஆனால் கம்யூனிஸமும்,மதமும் இலங்கைக்கு ஆதரவு என்ற புள்ளியில் சங்கமித்தது முரண் நகை.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஓய்!பின்னூட்ட நண்பர்களே!மதம் என்று சொன்னதும் எல்லோரும் குடு குடுன்னு ஐ.பி பஸ்ஸ புடிச்சுகிட்டு இங்கே ஓடி வந்திட்டீங்களாக்கும்://

அதென்னவோ சரிதான், சக தமிழன் செத்தாலும் பரவாயில்லை தன் மதம் விமர்சனத்துக்கு ஆளாகக் கூடாதிங்குற எண்ணத்துல இங்கே இரண்டு மைனஸ் ஓட்டுக் கூட விழுந்திருக்கு.

மாசிலா சொன்னது…

ஒரு வகையில் சீனாவும் மதவாதிகள் நாட்டைப் போன்றதுதான். இவ்விரு இரகங்களும் அரசு இயந்திரம் அறிவித்த அதிகார பூர்வ ஒற்றைச் சிந்தனை அடிப்படையிலான மதம்=கம்யூனிசம் நம்பிக்கை தீவிரவாத போக்குடைய நாடுகளே. பழைய கம்யூனிச உளவுப்படை உயரதிகாரியான புட்டினின் இன்றைய ரஷ்யாவும் இதே போக்கை கொண்டுள்ள நாடேதான். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வகை நாடுகளும் அந்நிய நாடுகளில் சிறுபான்மையினரை அழிக்கும் அதிகார வர்க்கத்தை ஆதரிப்பதன் மூலம் தங்களது நாட்டில் உள்ள சிறுபான்மை மற்றும் புரட்சி எண்ணம் உடையவர்களுக்கு முளையிலேயே அதை கில்லி எறிவதுடன் மட்டுமில்லாமல் ஏற்கனவே தாங்கள் நடத்தேற்றிய இனவழிப்பு அராஜக அடக்குமுறை போன்றவைகளுக்கு நியாயம் தேடிக்கொள்ள இது போன்ற சந்தர்ப்பங்களை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள முயற்சிக்கும் நாடகமே.

பெயரில்லா சொன்னது…

உண்மை

Saha, Chennai சொன்னது…

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்த இந்தோனேசியா, வங்கதேசம், குவைத், கத்தார், சவுதி அரேபியா நாடுகள் முஸ்லிம் நாடுகள், ஓகே. ஆனால் புத்த மதத்தை பூர்வீகமாக கொண்ட தாய்லாந்து ஆதரிக்க காரணம், சிறிலங்காவும் புத்த மத நாடு என்பதாலா? அப்ப, புத்த மதம் தான் இப்படி தமிழர்களை கொல்லசொல்லுச்சா? 80 சதவிகித ரோமன் கத்தோலிக்க மக்களைக்கொண்ட பிலிப்பைன்ஸ் ஆதரிக்க காரணம், அந்த மதத்துல அப்புடி சொல்லி இருக்காங்களா? அவ்வளவு ஏன், நம்ம இந்தியா ஆதரிச்ச கதைதான் உங்களுக்கு தெரியுமே, எவ்வளவு போராட்டம், எவ்வளவு நெருக்கடிக்கு பிறகு ஆதரிக்க முடிவெடுத்தாங்க.

அரசியல், ராஜாங்க ரீதியான இம்மாதிரியான முடிவுகளை குறுக்குச்சால் ஓட்டி மதம் சார்த்த பார்வையை புகுத்துவது கோவியாருக்கு மட்டுமே வரும் தனி கலை. keep it up.

கல்வெட்டு சொன்னது…

ஜோ,
அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்ற மதவாத சொம்புகள் இதுவரை எத்தனை தீர்மானங்களை அமெரிக்காவிற்கு எதிராக கொண்டுவந்தார்கள்இதே மன்றத்தில்? தீர்மானக்களின் வெற்றி தோல்வி அல்ல குறைந்தபட்சம் எதிராக தீர்மானிப்பது என்ற முயற்சியாவது இந்த நாடுகளால் நடந்துள்ளதா?

ஈரானையும் ஈராக்கையும் லிபியாவையும் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் என்ன செய்தாலும் சொம்பைவிடாமல் தூக்கிக்கொண்டிருக்கும் செளதி போன்ற மதவாத நாடுகள், எந்தப்புள்ளியில் அமெரிக்காவோடு இணைகிறது? அல்லது எந்தப் புள்ளியில் ஈரான் ஈராக் லிபியாவிடமிருந்து விலகுகிறது? என்பதில் பிழைப்புவாத அரசியல் உள்ளது. மதம் ஒரு போர்வை அவர்களுக்கு.

நீங்கள் சிவாஜி இரசிகராக இருப்பதால் அடிபட்ட எம்ஜிஆர் இரசிகனுக்கு உதவும் ஒரு முயற்சியில் உங்களை நான் எதிர்க்க மாட்டேன். பிரச்சனை உங்களுக்கும் எனக்குமானது அல்ல அடிபட்டவன் பற்றியது.

இவர்கள் இணைந்தது எந்தப்புள்ளியில் என்று அவர்களின் கடவுளுக்கே வெளிச்சம்.

ராஜ நடராஜன் சொன்னது…

சகா!சென்னை அவர்களுக்கு:)

ஏனைய நாடுகள் மதம் அடிப்படையிலும்,புத்த மதத்தின் அடிப்படையிலும் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.ஆனால் பிலிப்பைன்ஸ் நாடு என்ற கேள்வி நல்ல கேள்வியாகவும் பலரால் பதில் சொல்ல முடியாத கேள்வியாகவும் படுகிறது.

இலங்கையை போலவே பிலிப்பைன்ஸ் நாடும் வளைகுடாவில் பணி புரிபவர்களின் அந்நிய செலவாணியை நம்பும் நாடு.கூடவே இலங்கைப் பணிப்பெண்கள் போலவே பிலிப்பைன்ஸ் பெண்களும் வளைகுடாவில் மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்படுபவர்கள்.நாளை வளைகுடா மனித உரிமை மீறல்கள் குறித்து தீர்மானம் வந்தால் இலங்கையும்,பிலிப்பைன்ஸும் ஒரு குழுவில் நிற்பார்கள் என்ற எதிர்கால திட்டமாக இருக்கலாம்.

பாலாறு ஓடும் சவுதியிலிருந்து போன வாரம் 42 பெண்களை தூதரகம் மூலமாக இலங்கை திரும்ப அழைத்துக்கொண்டது.

வவ்வால் சொன்னது…

ராஜ்,

//ஆனால் பிலிப்பைன்ஸ் நாடு என்ற கேள்வி நல்ல கேள்வியாகவும் பலரால் பதில் சொல்ல முடியாத கேள்வியாகவும் படுகிறது.//
சஹா மேலோட்டமாக பார்த்துவிட்டு கேட்டுள்ளார், வரலாற்றின் பக்கங்களை புரட்டியிருந்தால் அப்படிக்கேட்டிருக்க மாட்டார்.

பிலிப்பைன்ஸ் , அமெரிக்காவிற்கு இன்னொரு வியாட்நாம், ஸ்பெயினின் காலனியாக பிலிப்பைன்ஸ் இருந்த போது அவர்களிடம் இருந்து விடுதலைப்பெற உதவுவது போல போரிட்டு பின்னர் தனது காலனியாக இணைத்துக்கொண்டது, பின்னர் பிலிப்பைன் அமெரிக்காவுடன் போரிட்டு விடுதலை வாங்கினாலும் பாதி நாடு தான் கிடைத்தது 1946 இல் தான் அமெரிக்கா முழுதுமாக விடுதலை அளித்தது, மார்கோஸ் ,இமெல்டா மார்கோஸ் என சர்வாதிகாரிகள் எல்லாம் அப்புறமா வந்தவர்கள் தான்.

அமெரிக்காவுடனான போரில் பல லட்சம் அப்பாவிகளும் செத்துள்ளார்கள் ,இப்போது இலங்கை எப்படி தமிழர்களை முகாம்களில் அடைத்ததோ அதே போல முகாம்களில் அடைத்து அமெரிக்கா சித்திரவதை செய்துள்ளது. பிலிப்பன் கொரில்லா படை கண்ணில் படும் அமெரிக்கர்களை கொல்லும் , இப்படி பலத்த உள்நாட்டு யுத்தம் , இலங்கை மற்றும் புலிகள் போல நடந்திருக்கிறது.

பிலிப்பைனை பொருத்தவரை அமெரிக்கா ஒரு இலங்கை அரசு, அமெரிக்க அதிபர் ஒரு ராஜபக்சே. ஆனால் இதில் ஒரு நகை முரண் என்னவெனில் இராஜ பக்சேவை ஆதரிப்பது தான் , பிடிக்கவில்லை எனில் நடுநிலைமை எடுத்திருக்கலாம்.

சார்வாகன் சொன்னது…

வண்க்கம் சகோ,
சரியான் கருத்துகள்,
இப்போது இத்தீர்மான்ம் குறித்த செயல்பாடுக்ளில் அமெரிகாவின் யோக்கியதை,புலிகளின் செயல்கள்,இந்திய அரசின் இரட்டை வேடமோ விவாதிப்பது தேவையற்றது.

தீர்மான‌ம் வெற்றி[நான் எதிர்பார்க்கவில்லை].இதன் மீதாக ஏதேனும் நியாயம் மூன்றாண்டுகளாக் நரகத்தில் வாழும் நம் சகோதரர்கள்க்கு ஏதேனும் செய்ய இயலுமா என்பதே கேள்வி!!!!!
******
மதவாத நாடுகள் அப்ப்டித்தான் இருப்பார்கள்.அவர்கள் ஒருவேளை அவர்கள் மதத்தினர் பாதிக்கப்ட்டால் கூட குரல் கொடுப்பார்கள் என்று கூட நான் எண்ணவில்லை.

வசதியான‌ அரபு நாடுகள் காசா பகுதியில் நடை பெறும் மனித உரிமை மீறல்களையெ கண்டு கோள்ளாமல்,இராக் போருக்கு தள்ம் அமைத்துக் கொடுத்த சவுதி,குவைத் ஆக்வே அவர்கள் அவர்கள் சார்ந்த மதத்திற்கும் துரோகிகள்தான்.

நம் சகோக்கள் தங்களுக்கு சவுதி ஏதாவது பிரச்சினை வந்தால் தாங்கி பிடிக்கும் என்ற நம்பிக்கை உண்டு.இந்த எண்ணம் தவறு என்பதை நிச்சயம் புரிவதற்கு என்ன விலை கொடுப்பார்களோ!

எண்ணெய் இருக்கும் வரை மதக் கொடி பிடிக்கும் ஆளும் அரபு மேட்டுக் குடி கூட்டம் அதன் பிறகு ஓடி விடும் என்பதை அறியாமல் செய்யும் கோமாளித்தனம்.

இதில் இல்ங்கை அரசின் தூதரக லாபி நன்கு செயல்பட்டதும் மதவாத நாடுகள் குழுவாக் இயங்குவதால் மொத்தமாக் வளைத்துப் போட்டார்கள்.அவ்வளவுதான்!!!!!!!!

ஒருவேளை இலங்கையில் உள்ள மத்வாத நாடுகளின் அரசு மதத்தினரின் நலனை பாதுகாத்தே வருகிறோம்,காஃபிர்களை மட்டுமே துன்புறுத்துகிறோம் என்று கூட அவர்களிடம் எடுத்து உரைத்து ஆதரவு வாங்கி இருக்க்லாம்.
இது நடக்கும் வாய்பு நிச்சயம் உண்டு!!!!!!இது இரு குழுக்களுக்கும் சாதகமே!!!!!

ஏதோ இம்முறை அனைத்து தமிழர்களும் ஒற்றுமையாக் இருந்ததால் காங்கிரஸ்
குட்டிகரணம் அடித்தது.இருப்பினும் நம்ப முடியாது.

இத்தீர்மானம் மீதாக என்ன நடக்கும் என்பதையே கவனிப்போம்!

நன்றி

ஜோ/Joe சொன்னது…

கோவியார் , கிரி ,கல்வெட்டு,
என்ன கொடுமை சார் இது ? ஏதோ அமெரிக்காவுக்கு எதிராக சில நாடுகள் வாக்களிப்பதை நான் ஆதரிப்பது போல எனக்கு அறிவுரையும் விளக்கங்களும் கொடுக்கிறீர்கள் :))))

பொதுவாக அமெரிக்கா என்ன நிலைப்பாடு எடுத்தாலும் அதற்கு எதிரான நிலைப்பாடு எடுப்பது சில நாடுகளின் வழக்கம் ..அதனால் இந்த தீர்மானத்தை எதிர்த்த 15 நாடுகளில் சில நாடுகள் இலங்கைக்காக ஆதரிக்கின்ற என்பதை விட அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் என்பதால் அந்த நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புண்டு என சொல்ல வந்தேன் . இதே தீர்மானத்தை ஒரு வேளை இன்னொரு நாடு கொன்டு வந்திருந்தால் , இப்போது எதிர்த்த சில நாடுகள் ஆதரிக்கவும் , ஆதரித்த சில நாடுகள் எதிர்க்கவும் வாய்ப்புண்டு என்பது என் அனுமானம் ..

இதுக்கு போய் என்னமோ அந்த நாடுகளின் நிலைப்பாட்டை நான் ஆதரிப்பது போல எம்.ஜி.ஆர் , சிவாஜி -க்கெல்லாம் போய் எனக்கு விளக்கம் சொல்லுறீங்க ..:))

R.Puratchimani சொன்னது…

பதிவும் பின்னூட்டங்களும் அருமை

R.Puratchimani சொன்னது…

சார்வாகன் said...
// காஃபிர்களை மட்டுமே துன்புறுத்துகிறோம் என்று கூட அவர்களிடம் எடுத்து உரைத்து ஆதரவு வாங்கி இருக்க்லாம்.
இது நடக்கும் வாய்பு நிச்சயம் உண்டு!!!!!!இது இரு குழுக்களுக்கும் சாதகமே!!!!!//

சகோ இப்படி கூடவா நடக்கும் ...அந்த அளவிற்கு மணித் நேயம், நீதி, எல்லாம் செத்து விட்டதா..........கொடுமை

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்