பின்பற்றுபவர்கள்

6 மார்ச், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் 2 !

அது என்ன 'பூதை' ? போதை என்பதைத்தான் எழுத்துப் பிழையாக தட்டச்சுவிட்டேனோ ? என்று நீங்கள் நினைக்கக் கூடும், பூனையாரின் பாதை என்பதைச் சுருக்கமாக 'பூதை' என்று (முன்பும்) எழுதியுள்ளேன், அதை நீங்கள் 'கீதை' போன்றோரு பாதை என்றும் கொள்ளலாம், பூனையாருக்கு ஒன்றும் நட்டமில்லை. நேற்று கனவில் வந்த பூனையார் மனிதரின் பழக்க வழக்கங்கள் குறித்து மிகவும் கவலைப்பட்டார். இப்போதெல்லாம் 'கழுவ' தண்ணீரையும் அல்லது துடைக்க பேப்பரையும் பயண்படுத்துகிறார்கள் அது எவ்வளவு சுற்றுச் சூழலுக்கு கெடுதல் தெரியுமா ? என்று கேட்டார் பூனையார். வேற என்ன தான் செய்வது ? தூய்மை முக்கியமில்லையா ? என்று கேட்டேன், பூமியில் மூன்றாம் உலகப் போர் தண்ணீரால் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று எதிர்காலம் குறித்து பேசிய பூனையார், தண்ணீரை அளவாகப் பயன்படுத்தலாம், பக்கெட் பக்கெட்டாக கழுவ பயன்படுத்துவது, ஆற்று குளத்து நீரை அசிங்கப்படுத்துவதெல்லாம் தண்ணீர் கேடுகள் தானே, என்றவர், தாளைப் பயன்படுத்துவதால் மரங்கள் வெட்டப்படுகிறது, இயற்கைச் சூழலுக்கும் மழை வற்றுவதற்கும் இது தான் காரணம் என்று கூறியவர் போகட்டம், ஆனால் கழுவுவதைவிட கழிவை அகற்றுவதில் இக்கால மக்கள் கவலைப்படுவதே இல்லை, தண்ணீரைத் திறந்துவிட்டு மொத்தமாக அப்படியே கூவம் போன்ற ஆற்றிலோ, கடலிலோ கலக்கச் செய்துவிட்டு ஒட்டு மொத்த நீர் ஆதரத்தையும் கெடுத்துவிடுகிறார்களே என்று கவலை தெரிவித்தார். பிறகு என்ன தான் செய்யச் சொல்கிறீர்கள் பூனையாரே என்று கேட்டேன்.

பூனையார் சொன்னார், நீர் பூனைகள் கழிப்பதைப் பார்த்திருக்கிறீரா ? மணலை நோண்டி குழிபறித்துவிட்டு கழித்துவிட்டு பின்னர் குழியை மூடிவிடும், இதனால் கழிவு நாற்றம், ஈ மொய்தல் அதிலிருந்து நோய் தொற்றல் மற்றும் பிற சுகாதாரக் கேட்டுத் தொல்லைகள் இன்றி, கழிவு மக்கி அடி உரம் ஆகிவிடுகிறது, கழிவு மறுபயனீட்டு உரமாக ஆக்கப்படுகிறது, இதை ஏன் மனிதர்கள் பின்பற்றக் கூடாது, 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பூனையாரைப் பின்பற்றுபவர்கள் கழிப்பின் பிறகு மண்ணைத் தான் பயன்படுத்துகிறார்கள், கழிவை கையாளுவதில் இருக்கும் அறிவியல் மற்றும் சுற்றுப்புற நன்மைகளை இன்றைய அறிவியலாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்று கூறி திடுக்கிட வைத்து சிந்தனையைத் தூண்டினார் பூனையார், இருந்தாலும் ஒண்டு குடித்தனாமாக அடுக்குமாடிக் குடியிருப்பில் குழி தோண்டி 'இருக்க' மண் எங்கே கிடைக்கும் ? என்று கேட்டேன், அது உங்கள் வாழ்க்கை முறை, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை நீங்கள் மாற்றிவிட்டதால் உங்களால் மண்ணைப் பயன்படுத்த முடியவில்லை, மற்றபடி பூனையார் கழிவு இருத்தல் மூடுதல் செயல்முறைகள் எக்காலத்திற்கும் ஏற்றதே. இன்றும் கூட கிராமங்களில் நடைமுறையில் உள்ளது, உங்கள் வாழ்க்கை முறையின் மனிதத் தவறுகள் எப்படி பூனையாரின் கொள்கைத் தவறாகும் என்று கேட்டு மடக்கினார். சரி தானே என்று நினைத்தேன். 5000 ஆண்டு காலப் பழமையான தன் பூதைத் தத்துவத்தில் ஒன்றை பூனையார் குறிப்பிட்டார்." உங்களுக்கு பூனையார் அறிவுறுத்துகிறேன், நீங்கள் திறந்த வெளியில் (மலம்) கழிக்காதீர்கள், சுகாதார கேடுகளை (தண்ணீர் வீணாகுதல் , மற்றும் நோய் பரவல்) கருத்தில் கொண்டு மண் குழிகளை பயன்படுத்துங்கள், நீங்கள் எத்தனை (முறை) குழிப் பறித்தீர்கள் என்பதை பூனையார் அறிவார், ஏனெனில் பூனையார் அறிவானவர், அன்பானவர் (மதில்) மேலானவர் " (பூ.த.மொ 99)

அடுத்ததாக பூனையார் "சந்திரன் பூமியை ஏன் சுற்றுகிறது என்று தெரியுமா ?" என்று கேட்டு என் பதிலுக்காக என்னை நோக்கினார்.

என்னது 'பூதை அறிவியலா ? இன்னொரு நாளைக்கு பார்க்கலாம், தவிர அவுங்க அளவுக்கு உன்னால் அறிவியலை மிக்ஸியில் போட்டு அடித்துக் கொடுக்கும் திறமை இருக்கிறதா ? என்று தெரியவில்லை, என்றேன். ஒரு முறை முறைத்துவிட்டு கனவில் இருந்து காணாமல் போனார், இன்னொரு நாளைக்கு கனவில் வரும் போது பால் வைத்து, மன்றாடித் தான் பூனையாரின் பூதைகளைப் பெற வேண்டும் போல

பூதையார் பூனையார் வாழ்க !

பின்குறிப்பு 1 : பூனையாரின் பூதை மார்கத்தில் சேர்ந்து கொண்டால் உங்கள் முன் ஜென்மப் பாவங்களில் 85 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும், முன்பிறவி நம்பிக்கை இல்லை என்றாலும் பரவாயில்லை, இப்பிறவியின் பாவங்களை 90 விழுக்காடு பூனையார் எடுத்துக் கொண்டு நற்கதிக் கொடுக்கத் தயாராக உள்ளார், உடனே முந்துங்கள் (நன்றி பூனையார் பூதை மார்க்கத்து தலைமை பூசாரி திரு தருமி ஐயா)

பின்குறிப்பு 2 : இந்த இடுகையை 2 - 3 ஆண்டோ அதற்கு பிறகோ படிப்பவர்கள், கோவியாருக்கு இடைப்பட்ட (இந்த காலத்தில்) என்ன ஆயிற்று, பூனையார் பூதையார் என்றெல்லாம் எழுதியுள்ளாரே என்று நினைக்கக் கூடும், குறிப்பிட்ட (இந்த காலத்தில்) பதிவுலகில் மதப் பிரச்சார நெடிகள் மூக்கைத் துளைத்ததால், மதச் சுதந்திரம் மற்றும் மதப் பிரச்சார சுதந்திரம் என்ற அடிப்படையில் கோவியார் மற்றும் பூனையாரின் பூதை மார்கத்தினரால் 'கடவுள் பூனையார் ' அதில் இறக்கிவிடப்பட்டுள்ளார் என்பதை தகவலாகப் பெற்றுக் கொள்ளவும்.

இணைப்புகள் :
பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் (எளிய அறிமுகம்)
முக நூல் : Cat Worship

8 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

நியூஸிக் கிளையின் தலைமைப் பூசாரி(ணி)யாக நான் பதவிப்பிரமாணம் செஞ்சாச்சு.

தருமி சொன்னது…

அதாவது.... "நான் தான்" தலைமைப் பூசாரி. என் கீழ், நியூசிக் கிளையின் 'அசிஸ்டென்ட்' பூசாரி துளசி என்று அனைத்து சபை மெம்பர்களுக்கும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்தடுத்த கண்டங்களுக்குப் பூசாரி இடம் காலியாக இருப்பதால் விரைவில் அப்ளை பண்ணுங்கள். இல்லாவிடில் பூனையார் என்னிடம் நேரடியாக, திருப்பரங்குன் மலையில் வைத்து யார் யாரை என்னவாக்கலாம் என்று சொல்வதாக வாக்களித்துள்ளார்.

தருமி சொன்னது…

....இன்றைய அறிவியலாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்று கூறி திடுக்கிட வைத்து ...//

எப்படி இன்றைய அறிவியலாளர்களுக்கு தெரிந்தது அன்றே நம் பூனையாருக்குத் தெரிந்தது. ஆச்சரியம் தான். கடவுள்னா .. கடவுள்தான்.

வாழீ எம்பெருமான் பூனைச் சாமி!

கோவி.கண்ணன் சொன்னது…

நீங்கள் (தருமி ஐயா மற்றும் துளசி அம்மா) கிளைகளின் தலை பூசாரியாக இருங்கள், ஆனால் நான் தான் தலைமை மதகுரு

தருமி சொன்னது…

// நான் தான் தலைமை மதகுரு//

என்னதானிருந்தாலும் பூனைச்சாமி முதலில் உங்களிடம் பேசியதால் நீங்கள் தான் தலைமை மதகுரு. ஆனால் இறுதியாக என்னிடம் தான் சாமி பேசுச்சு. அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதோடு, இனி யாரிடமும் பேசுவதாக சாமிக்கு ஐடியா இல்லையாம். மாற்றி மாற்றி ஒவ்வொருத்தரிடமா பேசிப் பேசி சாமிக்கும் போரடிச்சிருச்சாம். இருக்காதா ...!

கோவி.கண்ணன் சொன்னது…

//அதோடு, இனி யாரிடமும் பேசுவதாக சாமிக்கு ஐடியா இல்லையாம். மாற்றி மாற்றி ஒவ்வொருத்தரிடமா பேசிப் பேசி சாமிக்கும் போரடிச்சிருச்சாம். இருக்காதா ...!//

அப்ப தருமி வர்சன் பூனையார் மார்கத்தில் கடைசி மதகுரு நீங்கள் தானா ? ஒப்புக் கொள்ள மாட்டோம், நீங்க வேண்டுமானால் காட்டுப் பூனைக்கு தலைமை மதகுரு ஆகுங்கள்.

தருமி சொன்னது…

// நீங்க வேண்டுமானால் காட்டுப் பூனைக்கு தலைமை மதகுரு ஆகுங்கள்.//

நீங்கள்தான் முதல தலைமை குரு என்றீர்கள். சம்மதித்து விட்டோம். அதோடு ஆளை விடுங்கள்.

//பூனையார் மார்கத்தில் கடைசி மதகுரு நீங்கள் தானா ? ஒப்புக் கொள்ள மாட்டோம், //

நீங்கள் என்ன ஒப்புக் கொள்வது ..! அதை சாமி அல்லவா முடிவு பண்ண முடியும். (பூனைச் சாமி எல்லாம் அறிந்தவன்/ள்.) அவரே சொல்லியாச்சே .. அதன் பிறகு நீங்கள் எப்படி சாமி சொன்னதை மறுக்க முடியும். இப்படியெல்லாம் பேசினால், ஏற்கென்வே பூனைச் சாமி சொன்னபடியே (என் வழிக்கு எதிராகப் பேசுபவன் யாராயிருந்தாலும்)அவ்னைக் கொதிக்கும் பாலில் முக்கியெடுக்க வேண்டும் என்ற தண்டனை மற்ந்து விட்டதா?

நானே இறுதி குரு ...ஜாக்ரதை..!

தருமி சொன்னது…

உங்களுக்காச்சி ... எனக்காச்சி ... பாத்திருவோம்.

என் வழியினர் என்னையே கடைசி மதகுருவாக ஏற்றுக் கொண்டு விட்டனர்.பூனைச்சாமியும் (திருப்பரன்குன்றம் மலைக்கு) வந்து என்னை கடைசியாளாக சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.

அவர் அறியாததா ...?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்