"எவ்வளவு பிஸியானவர்? எவ்வளவு பேர் அவர் ஸ்டுடியோவில் அவர் இசைக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்கனு எனக்கு நல்லாவே தெரியும். எல்லாத்தையும் விட்டுட்டு, ஒரு மிகச் சிறந்த மனிதாபி மானியா சில மணி நேரங்களை அர்ஜித்துக்காகச் செலவழிச்சது என்னை நெகிழவெச்சுக் கண் கலங்க வெச்சிருச்சு.
நம்ப மாட்டீங்க... ஆச்சர்யமான ஆச்சர்யம்! ரெண்டு மூணு நாள்லயே என் மகனுக்கு இருந்த எல்லாத் தொல்லைகளும் நீங்கி நல்லபடி ஆகிட்டான். 'எப்படி இது சாத்தியம்’னுலாம் நான் எந்த ஆராய்ச்சிக்கும் போகலை. பையன் நல்லாகிட்டான். அவ்ளோதான். ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் என்னன்னைக்கும் ரஹ்மானுக்கு நன்றிக்கடன்பட்டு இருக்கேன்!'" - Director Shakar
குறிப்பாக தர்கா திருவிழா, சந்தனக் கூடு உற்சவம் இந்துக்கள் - இஸ்லாமியர் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்தி இருந்தது, விழாக்களின் உற்சாகம் குறைய, இந்துத்துவாக்களின் இஸ்லாமிய எதிர்ப்பு பரப்புரை, வஹாபிகளின் மிரட்டல் மற்றும் ஏக இறைவன் பிரச்சாரம் என்பதாக கடந்த 20 ஆண்டுகளில் சந்தனக் கூடு உற்சவங்கள் பெயரளவுக்கே நடக்கிறது. நாகூர் - நாகப்பட்டினம் சாலைகள் முன்பெல்லாம் 10 நாட்கள் களைகட்டி இருக்கும், பெரிய கப்பல் சாலையில் ஓடுவது போல் கப்பல்களை சர்கரங்களில் இழுத்துச் செல்வர், சிறுவர்களும் அவர்கள் பங்கிற்கு சிறிய வடிவ கப்பல்களை இழுத்துச் செல்வர், சந்தனக் கூட்டிற்கு இந்து - இஸ்லாமியர் பேதமின்றி மாலைகளை வாங்கி அதன் மீது வீசுவர், சந்தனக் கூட்டில் அமர்ந்திருப்பவர்கள் இருபக்கத்திலும் கூடி இருக்கும் மக்களுக்கு நல்லாசிகள் செய்து கொண்டே செல்வர். பின்னால் வரும் சாம்ப்ராணி வாகனம் நகரெங்கிலும் நறுமனம் பரப்பிச் செல்லும்.
ஆண்டு தோறும் 20 ஆண்டுகளுக்கு முன்பான காட்சிகள் இவை தான், நாகை - நாகூர் இஸ்லாமிய இளைஞர்கள் வளைகுடாவிற்கு வேலைக்குச் சென்று வரத் துவங்கிய பொழுது தான் நிலமை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது, இஸ்லாமிய இளைஞர்களிடையே வழக்கத்திற்கு மாறான அடர்த்தியான தாடி, நெற்றியில் தெரியும் தொழுகை தடம் என மாறிப் போய் இருக்க சிறுவயதில் என்னுடன் பம்பரம் விளையாடிவர்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை. நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் கூட எதிரே பார்க்கும் போது வெறும் புன்னகையுடன் கடந்து சென்றனர். அவர்களும் அவர்களைப் போன்றவர்களும் வணக்கத்திற்குரியவன் இறைவன் மட்டுமே, தர்ஹாவை புறக்கணிக்க வேண்டும் என்று கூறித் தொடங்கினர், ஜமாத்துகளிலும் பிளவுகள் தர்ஹா கொண்டாட்டங்கள் முற்றிலுமாக களை இழந்துவிட்டது.
இந்த நிலை தொடர்ந்தால் தர்ஹா எனப்படும் அடக்கத் தளங்கள் நாளடைவில் பராமரிப்பின்று அழியும், அப்படியும் மீறி தர்காவிற்குச் செல்பவர்கள் மிரட்டப்படுவார்கள், தர்ஹாக்களை அகற்ற இந்துத்துவாக்கள் தனியாக சதி செய்யத் தேவை இன்றி அனைத்து 100 ஆண்டுகள் புகழ்வாய்ந்த தர்ஹாக்களும் அழிக்கப்பட்டுவிடும்.
******
மேற்சொன்னது போல் இந்தியாவில் இஸ்லாம் காலூன்ற சூஃபி இசமே அடிப்படை, இந்திய சமயங்களின் வழிபாட்டு முறைகளுடன் இஸ்லாமிய ஞானிகள் சூஃபி இசத்தை தாழ்தப்பட்டவர்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு எடுத்துச் சொல்லி வளர்த்தெடுத்தனர், இன்றைய வஹாபி இச வழிமுறைகளுடன்(தென்) இந்தியாவில் இஸ்லாம் பரப்ப முயற்சி செய்யப்பட்டிருந்தால் எவ்வளவு பேர் மதம் மாறி இருப்பார்கள் ? குப்பனும் சுப்பனும் ஒரே நாளில் தங்களது அனைத்து பழக்கவழங்கங்களையும் விட்டுவிட்டு ஓரிறைவனை நினையுங்கள் இது தான் இஸ்லாமிய மார்க்கம் என்று கூறி இருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பார்களா ?
தீண்டாமைக்கு எதிராக மதம் மாறியது என்பதை தவிர்த்துப் பார்த்தாலும் ஏழை எளியவர்களின் கடவுள் நம்பிக்கை என்பது நோய் தீர்க்கும் மருந்து அளவுக்குத்தான், காய்சல், பூச்சிக்கடி, வயிற்றுவலி அனைத்திற்கும் பச்சிலை வைத்தியம் பார்ப்பார்கள், சூஃபிகள் இறை நம்பிக்கையோடு அதனை ஓதி அவர்களுக்கு கொடுத்துவிட்டு அவர்கள் பெயரில் இறைவனிடம் கேட்டுக் கொள்ளும்படி இறையடியார்களாக அடக்கமானவர்களிடம் தெரிவிப்பார்கள் இது தான் பாத்தியா ஓதுதல் என்பது. நம்பிக்கை உடையவர்களுக்கு எதுவும் விரைவில் சரியாகும் என்பது போல் தான் நோய்களும், கடவுளிடம் வேண்டியாகிவிட்டது இனி சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் மன பலம் உடல் பலம் சேர நோய்கள் குணமாகும். சூஃபிகள் தன்னை நாடிவருபவர்களுக்கு மருத்துவம் பார்த்து மன நிலையை சரி செய்ய வழிபாடு செய்வார்கள், இந்த முறையில் தான் 'திலிப்' பாக இருந்த ஏ ஆர் ரஹ்மான் சூஃபி இசத்தில் உள்ளவர் உதவியுடன் தன் குடும்பத்தில் யாரோ செய்த 'ப்ளாக் மேஜிக்' எனப்படும் சூனியம் வேலை செய்து (எனக்கு இதில் நம்பிக்கை இல்லை) குடும்பத்தைப் பாடாய் படுத்த அதிலிருந்து மீண்டதால், பிறகு தன்னை இஸ்லாமிய மார்க்கத்தவராக மாற்றிக் கொண்டார். இது பல ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மானே ஆனந்தவிகடனிலோ, குமுதத்திலோ தெரிவித்தது தான்.
'சே.திலிப்' என்பவர் 'அல்லா ராக்கா ரஹ்மான்' என்று பெயர் மாற்றம் மதம் மாற்றம் செய்து கொள்ள காரணமாக அமைந்தது சூஃபி வழியினரும், அவர் சென்று வந்த தர்ஹாவும் தான், வாஹாபிய நம்பிக்கை அவரை இஸ்லாமிற்குள் இழுத்துவரவில்லை, தர்ஹாக்கள் இல்லை என்றால் ஏ ஆர் ரஹ்மான் திலிப்பாகவே இருந்திருப்பார்.
"குணப்படுத்த முடியாத உனது கடுமையான நோயை மருத்துவர் குணப்படுத்தினார் என்பது உண்மையில்லை அவர் கொடுத்த மருந்தே நோய் குணமானதற்கு காரணம், எனவே மருத்துவரை மற மருந்தை மட்டுமே நினை"
என்பது போன்ற வாதம் தான் வஹாபிகளுடையது, நன்றிப் பெருக்கு உடையவர்கள் இவ்வாறு செய்வார்களா ? என்றெல்லாம் யோசிப்பது இல்லை.
ஏ ஆர் ரஹ்மான் மனமாற்றத்திற்கு ஆதாரனமானது சூஃபி இசம், அதை மறந்துவிட்டு தர்ஹா வணக்கம் இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறினால் அதன் பிறகு ரஹ்மானின் நம்பிக்கையில் என்ன இருக்கிறது ? அதை அவரும் அவ்வளவு எளிதில் விட்டுவிட விரும்புவாரா ?
******
வட இந்தியாவில் எப்படி என்று தெரியாது வாளால் பரவியது என்ற பேச்சும் உண்டு, ஆனால் தென்னிந்தியாவில் இஸ்லாம் பரவ சூஃபி இசமே முக்கிய காரணம், அதனை முற்றிலும் அழித்துவிடும் போது இந்து - இஸ்லாமிய மக்கள் ஒற்றுமை முற்றிலும் சிதையும், மக்கள் மத அடிப்படையில் தனித் தனி தீவுகளாகவிடுவர். பதிவுலகில் கூட சூஃபி இசத்தை சார்ந்தவர்கள் எல்லோருக்கும் நெருக்கமானவர்களாக உள்ளனர், வஹாபிகளில் ஒரு சிலரே அப்படி இருக்கின்றனர், ஏனெனில் அடிப்படையில் வஹாபிகளுக்கு போதிக்கப்படுவது
இறைநம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு இறைநிராகரிப்பாளர்களான காஃபிர்களை உங்களது உற்ற தோழர்களாக
ஆக்கிக் கொள்ளாதிர்கள். (அல்- குர்ஆன் 4:144)
உற்ற தோழர்கள் என்றால் உங்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் தான். (அல்- குர்ஆன் 5:2)
இங்கே இறை நிராகரிப்பவர்கள் எனப்படுவர்கள் வஹாபிகளைப் பொறுத்த அளவில் பிறமதத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் முற்றிலுமாக இறை நம்பிக்கையே இல்லாவதர்களும் தான். அனைவரையும் காஃபிர் என்று நிராகரிப்பது உண்மையெனில் இஸ்லாம் மதத்தை யாரிடம் எடுத்துச் சொல்லுவது மதத்தை எப்படிப் பரப்புவது ? இங்கு தான் வஹாபி இசமும் சூஃபி இசமும் மாறுபட்டு பொருள் கொள்கிறது. பிரமதத்தைச் சார்ந்தவர்கள் நிராகரிக்கக் கூடியவர்கள் அல்ல அவர்களது வழிபாட்டு முறையும் கடவுளின் பெயரும் வேறு என்றாலும் இறையடியார்கள் பிறமதத்தினர் அனைவரும் ஒரே இறைவனைத்தான் வழிபடுகின்றனர் என்ற புரிந்துணர்வை கொண்டுள்ளனர் சூஃபிகள்.
இந்திய பண்பாடு, பழக்கவழக்கம், சமய நம்பிக்கைகள் மத நல்லிணக்கம் என சமூகம் சார்ந்த அனைத்திலும் புரிந்துணர்வை கொண்டு இருப்பவர்கள் சூஃபிகளே. சூஃபிகளால் இந்தியாவில் வளர்ச்சி கண்டு வந்த இஸ்லாம் வஹாபிகனால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் சொல்கிறேன் ஏ ஆர் ரஹ்மான் இஸ்லாமியராக மாறினார் என்றால் அது சூஃபிகளினால் அவர்களது தர்ஹாக்களாலும் தான். ஏ ஆர் ரஹ்மான் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் நேசிக்கப்படுபவராக உணரப்படுவதும் அவரது செயல்முறைகளினாலும் அவரது 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று அடிக்கடிச் சொல்லுவதாலும் தான் அன்றி அவர் ஒரு அடிப்படை வாத வஹாபிய இஸ்லாமியராக இருந்திருந்தால் அவர் ஒரு இஸ்லாமிய இசையமைப்பாளர் என்ற அளவில் தான் அதுவும் இசைக்காக பேசப்படுவார்.
வஹாபிகள் இன்னும் கூடுதலான வன்மத்துடன் சூஃபிகள் இஸ்லாமியர்கள் இல்லை உம்ரா (காஃபாவுக்கு புனித பயணம்) செய்யத் தகுதியற்றவர்கள் என்று சொல்லி தடுத்துவிட்டால் இஸ்லாம் மதத்திலிருந்து சூஃபிகள் தனி மதம் கண்டுவிடுவார்கள் பிறகு அஹமதியா மார்கம் போல் சூஃபி மார்க்கம் என்று வெளிப்படையாகவே பிளவு ஏற்பட்டுவிடும், ஒட்டு மொத்த இஸ்லாமியர் எண்ணிக்கை கனிசமாக குறைந்துவிடும் என்று கொஞ்சம் அடக்கிவாசிக்கிறார்கள்
'சே.திலிப்' என்பவர் 'அல்லா ராக்கா ரஹ்மான்' என்று பெயர் மாற்றம் மதம் மாற்றம் செய்து கொள்ள காரணமாக அமைந்தது சூஃபி வழியினரும், அவர் சென்று வந்த தர்ஹாவும் தான், வாஹாபிய நம்பிக்கை அவரை இஸ்லாமிற்குள் இழுத்துவரவில்லை, தர்ஹாக்கள் இல்லை என்றால் ஏ ஆர் ரஹ்மான் திலிப்பாகவே இருந்திருப்பார்.
"குணப்படுத்த முடியாத உனது கடுமையான நோயை மருத்துவர் குணப்படுத்தினார் என்பது உண்மையில்லை அவர் கொடுத்த மருந்தே நோய் குணமானதற்கு காரணம், எனவே மருத்துவரை மற மருந்தை மட்டுமே நினை"
என்பது போன்ற வாதம் தான் வஹாபிகளுடையது, நன்றிப் பெருக்கு உடையவர்கள் இவ்வாறு செய்வார்களா ? என்றெல்லாம் யோசிப்பது இல்லை.
ஏ ஆர் ரஹ்மான் மனமாற்றத்திற்கு ஆதாரனமானது சூஃபி இசம், அதை மறந்துவிட்டு தர்ஹா வணக்கம் இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறினால் அதன் பிறகு ரஹ்மானின் நம்பிக்கையில் என்ன இருக்கிறது ? அதை அவரும் அவ்வளவு எளிதில் விட்டுவிட விரும்புவாரா ?
******
வட இந்தியாவில் எப்படி என்று தெரியாது வாளால் பரவியது என்ற பேச்சும் உண்டு, ஆனால் தென்னிந்தியாவில் இஸ்லாம் பரவ சூஃபி இசமே முக்கிய காரணம், அதனை முற்றிலும் அழித்துவிடும் போது இந்து - இஸ்லாமிய மக்கள் ஒற்றுமை முற்றிலும் சிதையும், மக்கள் மத அடிப்படையில் தனித் தனி தீவுகளாகவிடுவர். பதிவுலகில் கூட சூஃபி இசத்தை சார்ந்தவர்கள் எல்லோருக்கும் நெருக்கமானவர்களாக உள்ளனர், வஹாபிகளில் ஒரு சிலரே அப்படி இருக்கின்றனர், ஏனெனில் அடிப்படையில் வஹாபிகளுக்கு போதிக்கப்படுவது
இறைநம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு இறைநிராகரிப்பாளர்களான காஃபிர்களை உங்களது உற்ற தோழர்களாக
ஆக்கிக் கொள்ளாதிர்கள். (அல்- குர்ஆன் 4:144)
உற்ற தோழர்கள் என்றால் உங்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் தான். (அல்- குர்ஆன் 5:2)
இங்கே இறை நிராகரிப்பவர்கள் எனப்படுவர்கள் வஹாபிகளைப் பொறுத்த அளவில் பிறமதத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் முற்றிலுமாக இறை நம்பிக்கையே இல்லாவதர்களும் தான். அனைவரையும் காஃபிர் என்று நிராகரிப்பது உண்மையெனில் இஸ்லாம் மதத்தை யாரிடம் எடுத்துச் சொல்லுவது மதத்தை எப்படிப் பரப்புவது ? இங்கு தான் வஹாபி இசமும் சூஃபி இசமும் மாறுபட்டு பொருள் கொள்கிறது. பிரமதத்தைச் சார்ந்தவர்கள் நிராகரிக்கக் கூடியவர்கள் அல்ல அவர்களது வழிபாட்டு முறையும் கடவுளின் பெயரும் வேறு என்றாலும் இறையடியார்கள் பிறமதத்தினர் அனைவரும் ஒரே இறைவனைத்தான் வழிபடுகின்றனர் என்ற புரிந்துணர்வை கொண்டுள்ளனர் சூஃபிகள்.
இந்திய பண்பாடு, பழக்கவழக்கம், சமய நம்பிக்கைகள் மத நல்லிணக்கம் என சமூகம் சார்ந்த அனைத்திலும் புரிந்துணர்வை கொண்டு இருப்பவர்கள் சூஃபிகளே. சூஃபிகளால் இந்தியாவில் வளர்ச்சி கண்டு வந்த இஸ்லாம் வஹாபிகனால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் சொல்கிறேன் ஏ ஆர் ரஹ்மான் இஸ்லாமியராக மாறினார் என்றால் அது சூஃபிகளினால் அவர்களது தர்ஹாக்களாலும் தான். ஏ ஆர் ரஹ்மான் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் நேசிக்கப்படுபவராக உணரப்படுவதும் அவரது செயல்முறைகளினாலும் அவரது 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று அடிக்கடிச் சொல்லுவதாலும் தான் அன்றி அவர் ஒரு அடிப்படை வாத வஹாபிய இஸ்லாமியராக இருந்திருந்தால் அவர் ஒரு இஸ்லாமிய இசையமைப்பாளர் என்ற அளவில் தான் அதுவும் இசைக்காக பேசப்படுவார்.
வஹாபிகள் இன்னும் கூடுதலான வன்மத்துடன் சூஃபிகள் இஸ்லாமியர்கள் இல்லை உம்ரா (காஃபாவுக்கு புனித பயணம்) செய்யத் தகுதியற்றவர்கள் என்று சொல்லி தடுத்துவிட்டால் இஸ்லாம் மதத்திலிருந்து சூஃபிகள் தனி மதம் கண்டுவிடுவார்கள் பிறகு அஹமதியா மார்கம் போல் சூஃபி மார்க்கம் என்று வெளிப்படையாகவே பிளவு ஏற்பட்டுவிடும், ஒட்டு மொத்த இஸ்லாமியர் எண்ணிக்கை கனிசமாக குறைந்துவிடும் என்று கொஞ்சம் அடக்கிவாசிக்கிறார்கள்
எனக்கு தெரிந்து எந்த சூஃபியும் இறைவனுக்கு இணைவைப்பவர்கள் இல்லை, இறையடியார்களிடத்திலும் அன்பு செலுத்துபவர்கள் மட்டுமே. மனைவியையும் நேசிப்பது என்பது பெற்றோர்களை புறக்கணிப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று விளக்கம் சொல்லுகிறார்கள்
எதிர்படும் தெரிந்தவருக்கு வணக்கம் சொல்லுவதைக் கூட இறை 'வணக்கத்துடன்' ஒப்பிட்டுப் பார்த்து இறைவனைத்தவிர வேறு யாருக்கும் வணக்கம் சொல்லக் கூடாது சொல்லும் வஹாபிகளிடம் சூஃபிகளின் விளக்கம் எடுபடுமா ? விளங்கிக் கொள்ளத் தேவை இல்லை என்கிறார்கள் சூஃபிகள்.
எதிர்படும் தெரிந்தவருக்கு வணக்கம் சொல்லுவதைக் கூட இறை 'வணக்கத்துடன்' ஒப்பிட்டுப் பார்த்து இறைவனைத்தவிர வேறு யாருக்கும் வணக்கம் சொல்லக் கூடாது சொல்லும் வஹாபிகளிடம் சூஃபிகளின் விளக்கம் எடுபடுமா ? விளங்கிக் கொள்ளத் தேவை இல்லை என்கிறார்கள் சூஃபிகள்.
"அல்லா......! வஹாபிகளிடம் இருந்து இஸ்லாமியர்களை காப்பாற்று
குரானை அவர்களே ஓதிக் கொள்வார்கள்" என்று சொல்லத் தோன்றுகிறது
இன்ஷா அல்லா !
38 கருத்துகள்:
சூஃபி முறையில் நம்பிக்கையுள்ள நாங்கள் எவரும் தர்ஹாகளுக்குச் சென்று அங்கிருக்கும் வலிமார்களிடம் ( ஞானிகளிடம்) அதைக் குடுங்கள்,இதைக் குடுங்கள் என்று பிராத்திப்பதிலை. எங்கள் குறைகளை இறைவனிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்றுதான் சொல்கிறோம்.
நியாயமாக என் போன்றோர் எழுத வேண்டிய இடுகை. நாத்திகரான நீங்கள் எழுதுகின்றீர்கள்!! நன்றி.
//நியாயமாக என் போன்றோர் எழுத வேண்டிய இடுகை. நாத்திகரான நீங்கள் எழுதுகின்றீர்கள்!! நன்றி.//
நான் நாத்திக - ஆத்திக நிலை எடுப்பதில்லை, பொதுவான சிந்தனைகளை மட்டுமே உடையவன். என்னை எந்தக் கட்டுக்குள்ளும் வைத்துக் கொள்ள விரும்பியது இல்லை. உங்களது சூஃபி விளக்கத்திற்கும் மிக்க நன்றி
nice article mr.kannan.
kannan
from abu dhabi
http://samykannan.blogspot.com/
நீங்கள் கூறுவது உண்மையே. சூஃப்களால்தான் இஸ்லாம் அதிக கெட்டப்பெயர் இன்றி தப்பிக்கிறது.
பல நூற்றாண்டுகளுக்குமுன்னால் இருந்த சூஃபி நிஜாமித்தீன் அவுலியா அவர்கள் பறி என்னை எங்கே பிராமணன் பதிவு ஒன்றில் கீழ்க்கண்டவாறு எழுத வைத்தது.
“திங்கள் இரவு எபிசோடில் உதார் விடும் ஆட்டோ டிரைவரை பார்த்து அசோக் ஒரு விஷயம் சொன்னதுமே நான் ஆடிப்போய் விட்டேன். அந்த ஆட்டோ டிரைவர் உதார் விட்டு, “நாளைக்கு வாம்மா உன்னைக் கீசுடறேன்” எனக் கூற. அசோக் அவனை பரிதாபத்துடன் பார்த்த வண்ணம் “நாளையை யார் பார்த்துள்ளார்கள்” என்ற டயலாக் வரும்போதே நான் தீர்மானித்து விட்டேன், ஆட்டோ டிரைவர் காலி என்று. நேற்றைய எபிசோடில் அது ஊர்ஜிதமானது.
பூஜ்யர் நிஜாமுத்தீனை தான் தில்லி திரும்பியதும் கொன்று விடப்போவதாக தில்லி சுல்தான் Qutb ud din Mubarak Shah கூறுகிறான். அச்சமயம் தில்லிக்கு வெளியே ஒரு ஊரில் படை இறக்கியிருக்கிறான். அடுத்த நாள் தில்லி பிரவேசம். நிஜாமுத்தீனின் பக்தர் கவி அமீர் குஸ்ரு பூஜ்யரிடம் தப்பித்து ஓடுமாறு மன்றாடுகிறார். சுல்தான் தில்லிக்கு மிக அருகில் வந்து விட்டதாக மற்ற சிஷ்யர்கள் பதறுகின்றனர். நிஜாமுத்தீன் அப்போது பதறாமல் கூறுகிறார், "dilli door asth (தில்லி இன்னும் தூரத்தில்தான் உள்ளது)". அடுத்த நாள் சுல்தானின் மரணச் செய்திதான் வருகிறது. அமீர் குஸ்ரு பற்றிய ஒரு ஹிந்தி சீரியலில் இந்தக் காட்சி வருகிறது.
அப்போது அந்த சீரியலை பார்க்கும் போது இருந்த மனநிலையில்தான் சோ அவர்களது இந்த சீரியலில் இந்த காட்சியை காணும்போது இருந்தேன். அதுவும் அசோக் என்பவர் கதைப்படி வசிஷ்ட முனிவர். அவர் கூறியது பலிக்காமல் போகுமா என்பதும் நிஜம்தானே”.
பார்க்க: http://dondu.blogspot.in/2009/02/blog-post_11.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
பதிவுக்கு வந்திருக்கும் மகுடாதிபதிகளின் நெகட்டீவ் ஓட்டுல இன்னும் 35 குறைகிறது, விரைவில் போட்டு முடிக்கவும்.
தர்கா வழிபாடு, சந்தனக்கூடு ஊர்வலம் போன்றவை இஸ்லாத்துக்கு எதிரானவை என்று அவர்களிலேயே ஒரு பிரிவினர் கூறிவருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் ஏதோ ஒரு காரணத்துக்காக இஸ்லாம் மதத்தினைத் தழுவினார் என்ற ஒரே காரணத்துக்காக அவர் செய்வது அத்தனையும் இஸ்லாத்துக்கு எற்ப்புடையது என்று சொல்லிவிட முடியாது. சரியா தவறா என்று எதை வைத்து தீர்மானம் செய்யவேண்டும்? அதை யார் செய்ய வேண்டும்? இஸ்லாத்தின் அடிப்படையாகக் கருதப் படும் திருக்குரானை வைத்து அதை நன்கு கற்றறிந்த வல்லுனர்களால். \\என்னை எந்தக் கட்டுக்குள்ளும் வைத்துக் கொள்ள விரும்பியது இல்லை.\\ என்று சொல்பவரால் அல்ல. \\பொதுவான சிந்தனைகளை மட்டுமே உடையவன்.\\ என்றால் எதிலும் பிடிப்பு இல்லை என்று அர்த்தம். இந்த நிலையில் இருந்து கொண்டு தீர்ப்பு கூறுவது ஏற்கத் தக்கது அல்ல. மாறாக நீங்கள் உண்மையிலேயே இதற்குத் தகுதியானவர்தான் என்றால், சில இஸ்லாமிய சகோதரர்கள் இருக்கிறார்கள், அவர்கள் எதையும் வைச் சாவடாலாகக் கூறுவதில்லை ஆதாரப் பூர்வமாகவே பேசுபவர்கள், அவர்களுடன் நேரிலோ, மெயில்கள், தொலைபேசி மூலமாகவோ உங்கள் வாதத்தை வைத்து அதை பதிவாகப் போடுங்கள், அதை கருத்தில் எடுத்துக் கொள்ளலாம், மற்றபடி நீங்கள் இங்கே எழுதுவது உங்கள் சொந்தக் கருத்து, உங்கள் மனதுக்கு சரியென்று பட்ட கருத்து, அதை ஒரு பொருட்டாகக் கருத் முடியாது.
http://www.tntj.net/29886.html
http://www.tntj.net/head-office/state-bearers
//ப்ளாக் மேஜிக்' எனப்படும் சூனியம் வேலை செய்து (எனக்கு இதில் நம்பிக்கை இல்லை)//
நீங்கள் அந்த கஷ்டங்களை அனுபவிக்கவில்லை
என்பதால் சூன்யம் என்பதே இல்லை என்று சொல்லலாமா
கோவியாரே
அனுபவிக்கும் குடும்பங்களை கேட்டுதான் பாருங்களேன்
இல்லையென்றால் ஒரு மந்திரவாதியுடன் மோதி பார்த்து
அப்புறம் சொல்லுங்களேன்
//இல்லையென்றால் ஒரு மந்திரவாதியுடன் மோதி பார்த்து
அப்புறம் சொல்லுங்களேன்//
நீங்கள் சொல்லுது உண்மையென்றால் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் வீழ்த மந்திரவாதியை நாடினாலே போதும். அரசியல்வாதிகள் இதைச் செய்து பார்க்காமல் இருக்க அவர்கள் நேர்மையளர்கள் இல்லை.
Blogger பாவா ஷரீப் said...
//ப்ளாக் மேஜிக்' எனப்படும் சூனியம் வேலை செய்து (எனக்கு இதில் நம்பிக்கை இல்லை)//
நீங்கள் அந்த கஷ்டங்களை அனுபவிக்கவில்லை
என்பதால் சூன்யம் என்பதே இல்லை என்று சொல்லலாமா
கோவியாரே
அனுபவிக்கும் குடும்பங்களை கேட்டுதான் பாருங்களேன்
இல்லையென்றால் ஒரு மந்திரவாதியுடன் மோதி பார்த்து
அப்புறம் சொல்லுங்களேன்
////
விஜய் டிவி "நீயா நானா" வில் ஒருவர் சவால் விட்டதாக நினைவு,,,
மைனஸ் ஒன்றும் ்பெரிய அளவில் இல்லை...:)
வணக்கம் நண்பர் கோவி
நல்ல பதிவு
பல் விடயங்களை கவனித்து எழுதியுள்ளீர்கள்.ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தை பொறுத்தவரை இஸ்லாம் என்றால் சூஃபியியம் மட்டுமே.இந்துக்களும் தர்கா வழிபாட்டில் ப்ங்கு கொ:ள்வதால் மதம் சார்ந்த முரண்பாடுகள் தமிழக்த்தில் அதிகம் ஏற்பட்டது இல்லை.பாகிஸ்தான் பிரிவினையின் போது கூட தமிழகம் அமைதியாக்வே இருந்தது.
இந்த சவுதி வாஹாபியம் என்பதின் தோற்றமே சர்ச்சைக் குறியது.இது மேற்கத்திய உளவுத் துறையால் கிலாஃபா எனப்படும் ஆட்டோமான் சாம்ராஜ்யத்தை பிளவு படுத்த ஏற்படுத்தப்பட்டது என்ற செய்திகளும் உண்டு.இது எவ்வளவு தூரம் உண்மை என்பது ஆய்வுக் குறியது.சவுதி அரச குடும்பம் மேற்கத்திய நாடுகளின் எண்ணெய் சுரண்டலுக்கு உதவுவதால் அவர்கள் இதனை கண்டு கொள்வது இல்லை.
வஹாபிகளின் குணங்களாக் சிலவற்றை கூறலாம்.
1.வஹாபியம் மட்டுமே சரியான மார்க்கம்.பிற பிரிவினர் அனைவருமே காஃபிரே[நம் போல் ஹி ஹி]!
2. தீவிர மத மாற்றப்ப்பிரச்சாரம்.இதற்கான் கொள்கையாக்கங்கள் விள்க்கங்கள் சவுதியில் இருந்து அதிக பொருள் செலவில் முன்னெடுக்கப்படுகிறது. A)மத புதகத்தில் அறிவியல்,B)பரிணாம் கொள்கை எதிர்ப்பு, யூதர்களுக்கு எதிரான் இனவெறி கருத்துகள் என்ற மூன்று நகைச்சுவை பிரச்சாரங்களே அதிகம் முன்னெடுக்கப்படும்.
3.[ஷாலாஃபிய] ஷாரியா மீதான் இஸ்லாமிய ஆட்சி உலக் முழுதும் [புதிய கிலாஃபா] அமைத்தல்.
4.சவுதி அரச குடும்பம்*அர்சாட்சியின் புகழ் பாடுதல்.
5.வஹாபிகளின் செயல்களின் மீதான விமர்சனங்களை இஸ்லாமின் மீதாக் திசை திருப்புவது.இதுதான் மிக சிறந்த உத்தி.
6.வஹாபி என்ற சொல்லையே அதிகம் பயன்படுத்தாமல் ஏகத்துவம் ,ஓரிறை என்று கொடி பிடிப்பதும் அருமையான உத்திதான்.
7.முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டது,குரான் மட்டும் அப்படியே இருக்கிறது என்னும் [பிடி]வாதம். [மத புதகங்களை மாத்திப்,கெடுத்துப் போட்டான் யூதன் என்பார்கள் No proof so far!!!!!!]
8.குரானில் சொல்லப்ப்ட்ட ஒவ்வொன்றையும் எப்படியாவது சரியே என்று காட்டுவார்கள். எ.கா ஜிஸ்யா,பலதார மணம்,......
அடிமை முறை குரானில் தடை செய்யப்படவில்லை.நன்றாக் நடத்துங்கள் மாதிரி சில வசனக்களுக்கு பொருள் கொள்ளலாம்.அதனை வைத்து குரான் கொஞ்சம் கொஞ்சமாக் அடிமை முறையை ஒழிக்க சொல்லி இருக்கிறது என்று வடி கட்டிய பொய் சொல்வார்கள்.
சவுதியில் பிற நாடுகளின் அழுத்தம் காரணமாக் பொ.ஆ 1962ல் அடிமை முறை ஒழிக்கப்பட்டது..
http://en.wikipedia.org/wiki/Islamic_views_on_slavery
விவாதத்தில் இது குறித்து இன்னும் தகவல் பகிர்கிறேன்.
9. [வஹாபி] இஸ்லாமை விமர்சித்தாலோ,மதம் மாறினாலோ மரண தண்டனை என்பது பல் நாடுகளில் அமலில் உள்ள சட்டம்.அதுவும் சரிதான் என்று பேசுவார்கள்.
10. கொஞ்சம் விவரமாக் கேள்வி கேட்டால் பதிலே வராது.பொதுவாக ஆம்/இல்லை என்ற கேள்விக்கு பதில் வரவே வராது!!!!!!!!. ஆதாரப்பூர்வமான் வரலாறு என்பது அவர்கள் சொல்வது மட்டும்தான்.
எ.கா சவுதி வங்கிகளில் வட்டி உண்டு[புதிய வஹாபி பெயர் கவிஷன் ஹி ஹி ].இது உண்மையா? என்றால் இதுவரை கடந்த ஒரு வருடத்தில் எவரும் பதில் சொன்னது இல்லை ஹி ஹி
இவர்களின் போக்கு இஸ்லாமிய சமூகத்தை மட்டும் அல்ல ,ஓவ்வொருவரையும் நிச்சயம் பாதிக்கும் அபாயம் இருப்பாதால்தான் விமர்சிக்க விவாதிக்க வேண்டியுள்ளது.
நன்றி.
போற போக்க பாத்தா தமிழ்நாட்டுல எல்லா இடத்துலயும் மண்ணை கொட்டு பாலைவனம் வேணும்பாங்க போல...
//ஆண்டு தோறும் 20 ஆண்டுகளுக்கு முன்பான காட்சிகள் இவை தான், நாகை //
முன்பு குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு அதிகம் ம்ககளை சென்றடையவில்லை. தற்போது உண்மை விளங்கியவுடன் நாகூர் ஹந்தூரி களை கட்டவில்லை. இன்னும் ஒரு பத்து வருடம் போனால் அந்த தர்ஹாவை இடித்து விட்டு அங்கு ஒரு கல்லூரியோ மருத்துவ மனையோ கட்டப்படும். அந்த நாள் அதிக தொலைவில் இல்லை.
எப்படியோ மக்கள் நேர் வழியின்பால் வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றே! :-)
jayadev das comment is correct
//ஏ.ஆர்.ரஹ்மான் ஏதோ ஒரு காரணத்துக்காக இஸ்லாம் மதத்தினைத் தழுவினார் என்ற ஒரே காரணத்துக்காக அவர் செய்வது அத்தனையும் இஸ்லாத்துக்கு எற்ப்புடையது என்று சொல்லிவிட முடியாது. //
இருக்கட்டும், அவர் எதைப் பின்பற்றவேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்வார், அதில் தலையிட நமக்கு என்ன உரிமை இருக்கு ?
//அதை யார் செய்ய வேண்டும்? இஸ்லாத்தின் அடிப்படையாகக் கருதப் படும் திருக்குரானை வைத்து அதை நன்கு கற்றறிந்த வல்லுனர்களால். \//
வல்லுனர்கள் வைத்து அறிந்து கொள்ளும் அளவுக்கு அவ்வளவு கடினமானது அல்ல, எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடியது என்கிற பரப்புரையெல்லாம் பொய்யா ? வல்லுனர்கள் சொல்வது மட்டும் தான் சரி என்று யாரை வைத்து சரிபார்க்க முடியும் ?
//என்றால் எதிலும் பிடிப்பு இல்லை என்று அர்த்தம். இந்த நிலையில் இருந்து கொண்டு தீர்ப்பு கூறுவது ஏற்கத் தக்கது அல்ல. //
ஏற்க வேண்டும் என்று நான் வலியுறுத்தவில்லை, எனது கருத்தை மட்டும் தான் கூறினேன், அதைத்தான் கருத்து சுதந்திரம் என்கிறார்கள், தவிர ஏ ஆர் ரஹ்மான் பின்பற்றுவது தான் சரியானது என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை, மாறாக சூஃபி இசத்தைப் பின்பற்றுபவர்கள் பிற மதத்தினருடன் இணக்கமாக இருக்கிறார்கள், மற்ற மதத்தினராலும் நேசிக்கப்படுகிறார்கள் என்று தான் குறுப்பிட்டுள்ளேன்.
//அவர்களுடன் நேரிலோ, மெயில்கள், தொலைபேசி மூலமாகவோ உங்கள் வாதத்தை வைத்து அதை பதிவாகப் போடுங்கள், அதை கருத்தில் எடுத்துக் கொள்ளலாம்//
இது எனக்கு தேவையற்றது என்று கூறுவதைவிட ஏற்கனவே 4 வஹாபிகள் எழுதுவதெல்லாம் நீங்களோ அவர்களோ பொய் என்று சொல்ல முடிந்தால் நீங்கள் குறிப்பிடுவது பற்றி யோசிக்க முடியும். இங்கு எழுதும் வஹாபிகள் தாங்கள் 100 % பின்பற்றுவதாகக் குறிப்பிட்டு கருத்துகள் சொல்லும் போது புதிதாக நான் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது ?
//, மற்றபடி நீங்கள் இங்கே எழுதுவது உங்கள் சொந்தக் கருத்து, உங்கள் மனதுக்கு சரியென்று பட்ட கருத்து, அதை ஒரு பொருட்டாகக் கருத் முடியாது.// அதே நான் எழுதுவது மட்டுமே சரி என்று நான் இங்கு எதையும் குறிப்பிடவில்லை
நன்றி சார்வாகன்,
இஸ்லாம் என்றால் அது வஹாபியிசம் என்ற புரிந்துணர்வை வலிந்து திணிக்கிறார்கள், இது பிற இஸ்லாமியர்களை புறக்கணிப்பதாகவும், இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வையும் வளர்த்து வருகிறது. தென்னிந்தியாவில் மதவெறி ஏற்பட்டிருக்கும் காலம் கடந்த இருபது ஆண்டுகளில் கூடுதல் என்றே சொல்லலாம், கோவை குண்டுவெடிப்பும் கடந்த 20 ஆண்டுக்குள் தான் வருகிறது
//முன்பு குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு அதிகம் ம்ககளை சென்றடையவில்லை. தற்போது உண்மை விளங்கியவுடன் நாகூர் ஹந்தூரி களை கட்டவில்லை. இன்னும் ஒரு பத்து வருடம் போனால் அந்த தர்ஹாவை இடித்து விட்டு அங்கு ஒரு கல்லூரியோ மருத்துவ மனையோ கட்டப்படும். அந்த நாள் அதிக தொலைவில் இல்லை. //
உங்களைப் போன்றோர்களின் ஆசையே (பிறர் வழிபடும்) வழிபாட்டுத் தளங்களை இடித்துவிட விரும்புவது தான் என்பதை சுற்றி வளைத்து எழுதியமைக்கு நன்றி. உங்கள் ஆசை நிறைவேறுமா என்பதை தம்பி அப்துல்லா போன்றவர்களால் தான் பதில் சொல்ல முடியும்.
சாமி கண்ணன், நன்றி
//dondu(#11168674346665545885) said...
நீங்கள் கூறுவது உண்மையே. சூஃப்களால்தான் இஸ்லாம் அதிக கெட்டப்பெயர் இன்றி தப்பிக்கிறது.
//
டோண்டு சார், நீங்கள் சொல்வது சரிதான்
நன்றி நண்பர் கோவி
இப்பதிவு எழுதியற்காக உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.நாம் அல்லா பிச்சை,நாகூர் மீரானை விமர்சிக்க விரும்புவது இல்லை.அவ்ர்கள் இஸ்லாம் தங்கள் நம்பிக்கை என்றே சொல்கிறார்கள்.ஆனால் வஹாபிகள் தாங்கள் சொலவ்து மட்டுமே சரி,நிரூபிப்போம் என்கிறார்கள்.அப்புறம் விமர்சிக்காமல் என்ன செய்வது?
பாருங்கள் குரானை வல்லுனர்கள்தான் புரிந்துகொள்ள முடியும் என்கிறார்.வஹாபி பெருந்தலை ஆனால் குரான் எளிமையாக இருப்பதாக குரானே கூறுகிறது.குரானுக்கும் முரண்படும் கருத்துகளை வஹாபிகள் மிக சிறந்தவர்கள்.
19:97. (நபியே!) நாம் இ(வ் வேதத்)தை உம்முடைய மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு நீர் - பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும்.
44:58. அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.
54:17. நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?
22:16. இன்னும், இதே விதமாக நாம் (குர்ஆனை) தெளிவான வசனங்களாக இறக்கியிருக்கின்றோம்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களை (இதன் மூலம்) நேர்வழியில் சேர்ப்பான்
இப்போது குரான் சொல்வதை நம்புவதா வேண்டாமா?.
இது மட்டும் அல்ல ,இஅவர்கள் சொல்லும் பெரும்பாலான் கருத்துகள் இப்படித்தான் இருக்கும்,இப்ப இப்படி இருக்கிறதே என்பதற்கு அவர் விள்க்கம் கொடுத்தால் நம்க்கு நிச்சயம் பைத்தியம் பிடித்து விடும்!!!!!!!!!!.
குரான் மொழி பெயர்ப்பு பல் பிரிவினரின் இடையே வேறுபடுகிறது.பல்வித பிரிவினர் வெவேறு ஹதிதுகள்[நபி மொழி] ப்யன் படுத்துகின்றனர்.
வஹாபிகள் கடந்த 50 வருட மொழி பெயர்ப்பு மட்டுமே பயன் படுத்துவார்கள்,முகமதுவின் சமீப கால் இபின் அப்பாஸ்,அல் தப்ரி ல் இருந்து அப் சுயுட்டி ,இபின் கதிர் வரை உள்ள குரான் விள்க்க உரைகளை மேற்கோள் காட்டவே மாட்டார்கள்.
ஆக்வே அனைத்து பிரிவினரும் சேர்ந்து ஒரே ஒரு மொழி பெயர்ப்பு கொண்டுவரும் வரை வஹாபி பிரச்சார பீரங்கிகள் அமைதி காக்க வேண்டுகிறோம்!!!!!
இன்னும் பல் விடயங்கள் கூறலாம் எனினும் எப்படி இப்படி துணிந்து எதையும் கூறுகிறார்கள்,த்வறென்று கண்டு பிடித்து விடமாட்டார்களா என கவலைப்படாமல் கருத்திடுவதுதான் மிக சிறந்த நகைச்சுவை.
!!!!!!!!!!!!!!!!
எனது சிறிய வயதில் மொவ்ளூது போன்ற விசயங்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு , அந்த 90 களில் இன்றைய தவ்ஹீத் சமாச்சாரங்கள் கிடையாது . ஆகவே என்னை மற்ற உறவின பெண்கள் அவர்களின் பிள்ளைகளிடம் என்னை காட்டி " அவனை பாரு அழகா மொவ்ளூது ஊத்துறான், நீயும் இருக்கிறீயே ..." என்று என் காது பட சொல்லும் போது பெருமையாக இருக்கும். அதனை கற்று கொள்ள என் தாயாரிடம் நான் வாங்கிய அடிகள் தனிக்கதை .
நிற்க ...
95 களில் பீ ஜெ போன்றவர்கள் தர்காக்களை விலக்க / விலக சொல்லி பயான்கள் செய்தபோது , அப்படி பேசியவர்களை அடிக்காத குறை என்ற சூழல் இருந்தது. காலங்களால் மாறி தற்போது 75 % கபுருகளை விலக்கியவர்கள்தான் இருக்கிறார்கள். நீங்களும் , பதிவர் அப்துல்லாவும் சொன்ன விஷயங்கள் குறித்து சுவனப்பிரியன் போன்றோர் பதில் சொல்வார்கள்.
எனது கேள்வி இது - உங்களிடத்தும் , தவ்ஹீத் கொள்கைகாரர் களிடமும்...
1980-90 களுக்கு முன் வாழ்ந்த முஸ்லிம்கள் இந்த விஷயங்கள் தெரியாமல் மன்னிக்கமுடியாத பாவமான கபுரை வணங்கிவிட்டு இறந்துவிட்டார்கள், அவர்களது பாவ புண்ணிய கணக்கு எப்படியாக இருக்கும்? இண்டர்நெட்டும், பதிப்பகங்களும், பிரச்சாரங்களும் இன்றைய சூழல் போல் இல்லாததால் அவர்கள் எப்படி தெளிவு பெற்று கபுரை புறக்கணிக்க முடியும். ஒருவேளை , விமானம், இன்டர்நெட், புத்தகங்கள், பயான்கள் 2020 களுக்கு பின் வந்திருந்தால் சுவனப்ப்ரியனும், ஏனைய சுன்னது ஜமாஅத்தார்களும் உயரிய ஒரே நேர்வழியான ஏக இறைவனை மட்டும் எப்படி வணங்கி இருக்க முடியும்? மொவ்ளூதுதானே ஊதிகொண்டிருப்பார்கள்?
இப்போதுதான் பதில் தெரிந்துவிட்டது., பின் ஏன் திருந்த மாட்டீர்களா என்று கேட்கதொன்றலாம்., ஆனால் மத ரீதியான விசயங்களுக்கு இது முடிவு கொண்டுள்ள பதிலாக கொள்ள முடியாது. பழக்க வழக்கங்களுக்கு வேண்டுமானால் இந்த மாதிரியான பதிலை தீர்வாக கொள்ளலாம் )
என் மனம் அமைதியின்று இருக்கும் போது திருச்சியில் உள்ள தர்ஹாவிக்கு சென்று இரவு உறங்கி அவர்கள் தரும் எளிமையான உணவை உண்டு வருவேன்....மனம் அமைதியடையும்.ஆனால் இதில் இவ்வளவு விசயம் இருப்பது உங்கள் பதிவு மூலம் அறிந்துகொண்டேன்!
\\இருக்கட்டும், அவர் எதைப் பின்பற்றவேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்வார், அதில் தலையிட நமக்கு என்ன உரிமை இருக்கு ?\\ அவர் இஷ்டத்துக்கும் [நாட்டின் சட்டம் அனுமதிக்கும் வரை, அடுத்தவர் சுதந்திரம் பாதிக்காதவரை ...!!] எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும், அதை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை, ஆனால், அவர் செய்வது அத்தனையும் இஸ்லாம் மதத்திற்கு இணக்கமானது என்று சொல்லும்போதுதான் பிரச்சினை வருகிறது. தர்கா வழிபாடு உள்ளிட்ட பல செயல்கள் [அதை முஸ்லீம்களே பலர் செய்தாலும்] அது இஸ்லாத்துக்கு எதிரானது என்று ஆதாரப் பூர்வமாக திரு.பி.ஜைனுல் ஆபிதீன் [மாநிலத் தலைவர், TNTJ Cell+91 99520 35111 ] அவர்கள் தெரிவிக்கிறார்கள். நீங்கள் ரஹ்மான் செய்வது இஸ்லாத்துக்கு எதிரானது அல்ல என்று இந்த பதிவில் கூறியிருக்கிறீர்கள், நீங்கள் சொல்வது குரான் படி என்றால் திரு.பி.ஜைனுல் ஆபிதீன் போல குரானை கற்றறிந்த ஒருத்தரிடம் உங்கள் வாதத்தை வைத்து [மின்னஞ்சலே போதும்] நிரூபித்தால் அதை ஒப்புக் கொள்ளளாம். உங்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது, அதற்காக இஸ்லாத்தின் மீது இல்லாத ஒன்றைக் கூறி புழுதியை வாரியிறைத்து விட்டு அதையும் கருத்து சுதந்திரத்தின் கணக்கில் சேர்த்துவிடாதீர்கள்.
தர்கா வழிபாடு ஏன் தவறானது?
http://www.youtube.com/watch?v=1yiDUVnbtJ0
ஏ.ஆர். ரஹ்மானை முஸ்லீமாக ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு AVARATHU NADAVADIKKAIKAL IRUKKINRANA : [2:30 Minute onwards]
http://www.youtube.com/watch?v=RlnUI6j_ZqA
\\வல்லுனர்கள் வைத்து அறிந்து கொள்ளும் அளவுக்கு அவ்வளவு கடினமானது அல்ல, எளிதில் புரிந்துக் கொள்ளக் கூடியது என்கிற பரப்புரையெல்லாம் பொய்யா ? வல்லுனர்கள் சொல்வது மட்டும் தான் சரி என்று யாரை வைத்து சரிபார்க்க முடியும் ?\\ அப்படியானால் யார் எதை பற்றி வேண்டுமானாலும் இஷ்டத்துக்கு எழுதலாமா? இஸ்லாம் என்பது குரானை அடிப்படையாக கொண்டு இயங்கும் மார்க்கம். நீங்களும் உங்கள் வாதத்தை குரான் அடிப்படையிலேயே வையுங்கள் அவர்களும் வைக்கட்டும், எது சரி என்பதை படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.
//1980-90 களுக்கு முன் வாழ்ந்த முஸ்லிம்கள் இந்த விஷயங்கள் தெரியாமல் மன்னிக்கமுடியாத பாவமான கபுரை வணங்கிவிட்டு இறந்துவிட்டார்கள், அவர்களது பாவ புண்ணிய கணக்கு எப்படியாக இருக்கும்? இண்டர்நெட்டும், பதிப்பகங்களும், பிரச்சாரங்களும் இன்றைய சூழல் போல் இல்லாததால் அவர்கள் எப்படி தெளிவு பெற்று கபுரை புறக்கணிக்க முடியும். ஒருவேளை , விமானம், இன்டர்நெட், புத்தகங்கள், பயான்கள் 2020 களுக்கு பின் வந்திருந்தால் சுவனப்ப்ரியனும், ஏனைய சுன்னது ஜமாஅத்தார்களும் உயரிய ஒரே நேர்வழியான ஏக இறைவனை மட்டும் எப்படி வணங்கி இருக்க முடியும்? மொவ்ளூதுதானே ஊதிகொண்டிருப்பார்கள்? //
ஷர்புதின் உங்கள் கேள்விகள் (அவர்களுக்கு) புதிதல்ல என்றே நினைக்கிறேன், இந்தேனேசியாவில் தவறான திசையில் தொழுகை நடந்து வந்தது தெரியவர "இறைவன் தெரியாமல் செய்தவற்றை கணக்கில் கொண்டு தண்டிக்கமாட்டான், மாறாக ஏற்றுக் கொள்வான்" என்று சமயத்தினர் விளக்கம் சொன்னார்கள். எனவே முன்பு செய்த கபுரு வணக்கம் அல்லாவுக்கு செய்ததாக கொள்ளப்படும்.
:)
//அப்படியானால் யார் எதை பற்றி வேண்டுமானாலும் இஷ்டத்துக்கு எழுதலாமா? இஸ்லாம் என்பது குரானை அடிப்படையாக கொண்டு இயங்கும் மார்க்கம். நீங்களும் உங்கள் வாதத்தை குரான் அடிப்படையிலேயே வையுங்கள் அவர்களும் வைக்கட்டும், எது சரி என்பதை படிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.//
ஐயா சிலை வணங்கி (உங்கள் புரைபைல் படம் அப்படித்தான் சொல்லுகிறது. உங்களது இரு பின்னூட்டங்களுக்கு சேர்த்தே பதில் சொல்லிவிடுகிறேன், நீங்கள் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிவருகிறீர்கள், இரஹ்மான் வலிமார்களை வணங்குகிறாரா, மரியாதை செய்கிறாரா என்பதற்கு மேலே அப்துல்லா விளக்கம் சொல்லிவிட்டார். யார் சொல்வது அக்மார்க் இஸ்லாம் என்று நான் இங்கு தீர்ப்பு எதையும் எழுதவுமில்லை, எனக்கு அது தேவையற்றதும் கூட.
வஹாபி பதிவர்களை விட நீங்கள் நிறைய தெரிந்து வைத்துள்ளீர்கள், விரைவில் உங்களை அல்லா நாடவேண்டும் என்கிற வஹாபிகள் விருப்பம் உங்களுக்கு கிட்டும் என்று நினைக்கிறேன்.
// வீடு K.S.சுரேஸ்குமார் said...
என் மனம் அமைதியின்று இருக்கும் போது திருச்சியில் உள்ள தர்ஹாவிக்கு சென்று இரவு உறங்கி அவர்கள் தரும் எளிமையான உணவை உண்டு வருவேன்....மனம் அமைதியடையும்.ஆனால் இதில் இவ்வளவு விசயம் இருப்பது உங்கள் பதிவு மூலம் அறிந்துகொண்டேன்!//
நீங்கள் சொல்வது சரிதான், நாகைச் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஏழை எளியவர் என இந்துக்கள் கூட நாகூர் தர்காவில் இரவு படுத்திருந்து வந்து இன்னல் தீரும் என்கிற நம்பிக்கைக் கொண்டு இருந்தனர்
//சவுதி அரச குடும்பம்*அரசாட்சியின் புகழ் பாடுதல்.//
சவுதி அரச குடும்பம் அரசாட்சியின் புகழைச் சத்தமாகப் பாடுதல்.என்றும் மாற்றிக் கொள்ளலாம்...
//கொஞ்சம் விவரமாகக் கேள்வி கேட்டால் பதிலே வராது.//
கொஞ்சம் விவரமாகக் கேள்வி கேட்டால் பதிலே சுத்தமாக வராது என்றும் மாற்றிக் கொள்ளலாம்...
// உங்கள் ஆசை நிறைவேறுமா என்பதை தம்பி அப்துல்லா போன்றவர்களால் தான் பதில் சொல்ல முடியும்.
//
இறைவன் பதில் சொல்வான் :)
ஐயா,
அருமையான பதிவு.
அவர்கள் சுபியசத்தை எதிர்க்க காரணம் அது இசுலாம் மட்டும் அல்ல. இசுலாம் மற்றும் கிருத்துவ முனிவர்களின் கலப்பு தான் சுபியிசம் என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கலாம்.
சுபியசம் தான் கிருத்துவம் மற்றும் இசுலாமின் ஆன்மிகம். மதவாதிக்கு ஆன்மீகத்தை பற்றி என்ன தெரியும்? :)
உங்க இந்த பதிவு மூலம் சூஃபி இஸ்லாம் பற்றி அதிகமறிய முடிந்தது. சகோ சார்வாகன் மேலும் விளக்கினார். பொதுவாக எல்லோருமே அனுபவசாலிகளும் சொல்லுறூங்க இஸ்லாமியர் முன்பெல்லாம் இப்படி கிடையவே கிடையாது என்று. தமிழகத்தை சேர்ந்த சாதாரண இஸ்லாமியர்கள் தான் சவுதியிலிருந்து வஹாபியிசத்த கொண்டுவருகிறார்கள். இனியெல்லாம் மனசஞ்சலம் கொண்ட திலிப்புகலெல்லாம் தொடர்ந்தும் திலிப்பாகவேயிருப்பார்கள்.
சீனு சொன்னார் போற போக்க பாத்தா தமிழ்நாட்டுல பாலைவனம் வேணும்பாங்க போல என்று.அதே திசையில தான் இஸ்லாமியர்கள் சரியா போய்கிட்டருங்காங்க. செய்தியிலே படித்தேன் இலங்கையிலே இஸ்லாமியர்கள் வசிக்கும் காத்தான்குடி என்ற சிற்றியில வீதி பெயர்களையெல்லாம் அரபி பாசையிலும் எழுதி குதுகலிக்கிறர்களாம். இத்தனைக்கும் இலங்கையில் அரச மொழியான தமிழ் ஆங்கிலம் சிங்களம் மட்டுமே பொது பெயர் பலகையில் பாவிக்க முடியும். ஏற்கெனவே காத்தான்குடியில் பேரிச்சம்பழமரம் நட்டாச்சு, தாடி பர்தா எல்லாம் வந்தாச்சு, மிஞ்சியிருப்பது பாலைவனம் மட்டும்.
தமிழ் பதிவுலகத்தில்கூட வஹாபிச்டுகள் ரவுடித்தனம் செய்ய ஆரம்பித்திலிருந்து இஸ்லாமிய மதத்தின்மீதே பலருக்கும் வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.
தென்னாற்காடு மாவட்டம் சிதம்பரம் அருகில் கிள்ளை கடற்கரையில் திருமுழுக்கிற்காக வரும் பூவராக பெருமாளுக்கு
இஸ்லாமியர்கள் வருடந்தோறும் வரவேற்பளிப்பர்.
http://temple.dinamalar.com/news_detail.php?id=9240
இது மத நல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணம். ஆனால் வஹாபிகள் பொதுவாக மத நல்லிணக்கத்தை விரும்பாதவர்களாகவே காட்சி தருகிறார்கள்.
அருமையான பதிவு. வஹபிசம் அதிகரித்து விட்டது உண்மை தான். முன்பை விட கண்முடித்தனமாக நம்பிக்கை வைப்பது அதிகமாகி விட்டது போல இருக்கிறது. ஒரு neutral நிலைபாடு இப்போது மிகவும் குறைந்து விட்டது. நாம் எந்த ஒரு கருத்தை இவர்களுக்கு எதிராக சொன்னாலும் நம்மை முஸ்லிம் இன துரோகி போல பாவிக்கும் மனப்பான்மை இந்த கூட்டதிற்கு இருக்கிறது. அப்துல் கதிர் முஷ்டாக் அஹ்மத் மாதிரி spinner இந்தியால இல்லடா ன்னு சொன்னவுடனே நீ அவங்க ஆளு தானடா. pakisthanku தான சப்போர்ட் பண்ணுவானு அப்படியே ஒதுக்கி வச்ச சில ஐயர் நண்பர்கலடுய மனப்பான்மை தான் இவர்களுக்கும். சாதாரண வாக்கியங்களை அறிவியல் ஆதாரங்கள் என்று சொல்லி அபத்தமாக வாதிடுவது, தனக்கு ஏற்றார் போல literal meaning எடுத்து கொள்வது அல்லது உள்ளர்த்தம் பார்ப்பது.
pj சாகிர் naayak போன்றவர்குலயட டிவி ப்ரோக்ராம் பார்த்தால் அழுவதா இல்ல சிரிபதா என்று தெரீயவில்லை.
நிறைய தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது உங்களிடமிருந்து.
அருமையான கட்டுரை.
சார்வாகன்,
//இந்த சவுதி வாஹாபியம் என்பதின் தோற்றமே சர்ச்சைக் குறியது.இது மேற்கத்திய உளவுத் துறையால் கிலாஃபா எனப்படும் ஆட்டோமான் சாம்ராஜ்யத்தை பிளவு படுத்த ஏற்படுத்தப்பட்டது என்ற செய்திகளும் உண்டு.இது எவ்வளவு தூரம் உண்மை என்பது ஆய்வுக் குறியது//
வாஹாபி என்பதையே பல இஸ்லாமிய நாடுகள் ஏற்றுக்கொள்வதில்லை. முகமது பின் அப்துல் வகாப் என்பவர் கூறிய கொள்கைகளே, வகாபிசம் என்று சொன்னால் அவரை முகமது நபி போல ஒரு இறைத்தூதர் ஆக்குவது ஆகும்,என்பதால் வாகிபிசத்தை எதிர்க்கவே செய்கிறார்கள், சௌதி அரேபியாவை தவிர.
சவுதி என்பதே முகமது பின் அல் சவுத் என்பவரின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படுவது, நாட்டை உருவாக்கியதால் அவர் பெயரையே வைத்துக்கொண்டார்.
அந்த நேரத்தில் வாஹாபை பல நாடுகள் நாடுகடத்தி இருந்தன..அப்போது அல் சவுத் மட்டும் சேர்த்துக்கொண்டார். ஒட்டமான்களுடன் சண்டைப்போட ஆள் திரட்ட மத ரீதியாக புனிதப்போர் என்று சொல்லி உசுப்பேத்த வஹாப் பயன்ப்பட்டார்.இக்வான் எனப்படும் பழங்குடியின வீரர்களை ஜிகாத் செய்து தூய இஸ்லாமிய நாட்டை உருவாக்குவோம்னு வஹாப் திரட்டி ,அல் சவுத் க்கு அளித்தார், பதிலுக்கு வஹாப்பை தலைமை மத குருவாக ஆக்கனும் ஒரு ஒப்பந்தம். இந்த கூட்டணிக்கு பிரிட்டனும் மறைமுக உடந்தை. எல்லாம் சேர்ந்து ஒட்டமான் அரசாட்சியை அழித்து விட்டு சவுதி அரேபியா என்று புதிய நாடு உருவாக்கி கொண்டார்கள். அல் சவுத் ராஜா, வாஹப் மத குரு.
ஆனால் வேலை முடிஞ்சதும் இக்வான் போராளிகள் போகாம எல்லா நாட்டையும் கைப்பற்றி புனித நாடாக்கனும்னு கிளம்பிட்டாங்க, ஜோர்டான், இராக் மேல் எல்லாம் போர் தொடுக்கவே பிரிட்டன் உதவியுடன் அல் சவுத் அவர்களை கொன்று விட்டார்.
வாஹாப் குடும்பமும், சல் சவுத் குடும்பமும் இன்று வரை ஆட்சி, மதம் என்று ஆளுக்கு ஒன்றாக பங்கு பிரித்து ஆளுகிறார்கள், நடுவே இவங்களுக்குள்ள கல்யாண உறவும் ஏற்பட்டு போச்சு அதான் சவுதி அரசே வஹாபிசம் பரவ பண உதவி எல்லாம் செய்யுது.
வஹாபிசம் என்றாலே அடிப்படைவாதிகள் என்று மற்ற இஸ்லாமிய நாடுகள் வெறுக்கவே செய்கின்றன. பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் சவுதி சாதகமாக இருப்பதால் பொழப்பு ஓடுது அங்கே.
@ ஷர்புதீன்
நீங்கள் மிகவும் ஆச்சரியப்படுத்துகிறீர்கள். 47 வயதில் வராத சிந்தனை தெளிவு உங்களிடம் இருக்கிறது.
ஆம் ராஜன்.
ஷர்புதீன் போன்ற சிந்தனை தெளிவு பெற்ற சகோதரங்களும் உள்ளனர்.
கருத்துரையிடுக