எம்மதமும் சம்மதம் ஆனால் பூனை மதமே என் மதம், இன்றைய உலக மதங்களுக்கு முன்னோடியானது பூனை மதமே, ஆம் ! பிரமீடு கால எகிப்தில் பூனையே கடவுளாக கொண்டாடப்பட்டது. பூனை மதத்தை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் ? உலகில் உள்ள மதங்களில் யாவும் போலி சாமியார்களும், மதவாதிகளும் ஆகிரமித்து அதை மாற்றிவிட்டதால் நான் ஆதி மதமான பூனை மதத்தை உயிர்பித்து அதில் சேர்ந்து கொள்ள முடிவு செய்தேன்.
பூனைக்கு கடவுள் தகுதி இருக்கிறதா ? ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற மூன்று நிலைகளில் பூனை இருப்பதால் அதற்கு முழுமையான தகுதி உண்டு. ஏராளமான குட்டிகளை ஈன்று ஆக்குகிறது, அவைகளில் பலவற்றை கவ்விச் சென்று காக்கிறது, நம்மை ஏமாற்றும் எலிகளை அழித்து நம்மைக் காக்கிறது, இவற்றையெல்லாம் வெறெந்த தெய்வமாவது செய்கிறதா ? இவற்றையெல்லாம் நாய் செய்கிறதே அதுவும் கடவுள் இல்லையா ? நாய் ஏற்கனவே பைரவராக தத்தெடுக்கப்பட்டு உப தெய்வமாக தன்னை மாற்றிக் கொண்டதால் முழுத் தெய்வ தகுதியை அது இழந்துவிட்டது.
பூனையாரின் தத்துவங்கள் :
பூனைக் கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும் - இதை நாம் பூனையார் கொடுத்த 'பகூத்' அறிவைக் கொண்டு சிந்துத்து ஆய்ந்து பார்த்தால் தான் இது எவ்வளவு பேருண்மைகளை அறிவியலைக் கொண்டுள்ளது என்றே நாம் உணருவோம், மேம்போக்காகப் பார்த்தால் இது வெறும் பழமொழிதான். அதாவது பூனைக் கண்ணைத் திறத்தல் மூடுதல் என்ற இரு நிகழ்வாக இந்த ஒரு பழமொழியை நாம் ஆய்(வு) செய்ய வேண்டும், இன்றைய அறிவியல் விஞ்ஞானிகள் என்ன சொல்லுகிறார்கள் ? உலகம் பெருவெடிப்பில் இருந்து தோன்றியது என்று தானே சொல்லுகிறார்கள், அதாவது பெருவெடிப்பின் துவக்கம் பூனை கண்ணைத் திறத்தல், பூனையின் கண் திறந்திருக்கும் வரையில் பிரபஞ்சத்தின் தோற்றம் அதைத் தொடர்ந்து கேலக்ஸிகள், சூரியன், இந்த பூமி மற்றும் நாம் எல்லோரும் இருப்போம், பூனை கண்ணை மூடத் துவங்கும் அந்த வினாடியில் பிரபஞ்சம் சுருங்கத் துவங்கி புள்ளி ஆகிவிடும், பிரபஞ்சம் சுருங்க ஆரம்பித்தால் பூமி இருக்குமா ? அதைத் தான் பூனைக் கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும் அதாவது இருட்டு என்பது அழிவு, பூமி அழிந்துவிடும் என்கிறார்கள், இந்த எளிய தத்துவத்தில் பிரபஞ்ச பேருண்மையே அடங்கி இருப்பதை சிந்திக்கமாட்டீர்களா ? என்று பூனையார் அரைகூவல் விடுக்கிறார்,. இதை யாரோ எவரோ சொல்லி இருந்தால் இவ்வளவு தத்துவத்தையும் ஒன்றாகச் சொல்லி இருக்க முடியுமா ? இதைவிட இதன் சிறப்பு இந்த தத்துவம் எகிப்திய பிரமீடுகள் தோன்றிய போது அதாவது 3500 ஆண்டுகளுக்கு முன்பே இது சொல்லப்பட்டுவிட்டது தான்.
இரவு வணக்கத்திற்கு உரியவர் பூனையார் மட்டுமே : உங்களில் பலர் இரவு வணக்கம் சொல்லி வருகிறீர்கள், ஆனால் அதை யாருக்கு சொல்லுகிறீர்கள் என்பது தான் முக்கியம், தூங்கப் போகிறவர்களுக்கு இரவு வணக்கம் சொல்லுவதால் என்ன பயன் ? சிந்திக்க மாட்டீர்களா ? பூனையார் கடவுளாக இரவு முழுவதுமே விழித்திருப்பவர், உங்கள் (பால், மீன் தவிர்த்த) உணவு பொருட்களை எலிகளிடம் இருந்து காப்பவர். அவருக்குச் சொன்னால் உங்கள் வணக்கத்தை நினைவு வைத்துக் கொண்டு உங்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்பார், அதைவிடுத்து வேறு யாருக்கும் சொன்னால் என்ன பயன் ஏற்படப் போகிறது. பூனையார் உங்களை எச்சரிக்கிறார்.
இரவு வணக்கத்திற்குரியவர் (வீட்டுப்) பூனையார் மட்டுமே காட்டுப் பூனையார் இல்லை: . உஙகளில் பலர் பூனை என்றால் அனைத்துப் பூனையும் தானே என்றே நினைகின்றீர்கள், காட்டுப் பூனையும் வீட்டுப் பூனையும் ஒன்றா ? காட்டுப் பூனை கள்ளப் பூனை அது நீங்கள் தூங்கும் நேரங்களில் உங்கள் வீட்டுக் கோழிகளை திருடிச் சென்றுவிடும், ஆடுகளின் குரல்வளையைக் கடித்து இரத்தம் குடித்து கொன்றுவிடும். அதனால் உங்களுக்கு பொருள் நட்டமே, எனவே நீங்கள் இரவு வணக்கம் சொல்லும் போது எந்தப் பூனைக்குச் சொல்லுகிறீர்கள் என்பது தான் முக்கியம், குறிப்பாக பூனையாருக்கு இரவு வணக்கம் சொல்லும் போது காட்டுப் பூனையைப் பற்றி நினைக்கவே நினைக்காதீர்கள், காட்டுப் பூனை மனிதனுக்கு மாறும் ஊறும் செய்துவிட்டது அதை பூனையார் அவ்வாறு செய்யததற்காக சபித்தே விட்டார், அதனால அவை ஓடி ஒழிந்து இரவில் மட்டுமே வெளிவருகின்றன.
உங்களை (அவர்களை) நான் எச்சரிக்கிறேன் (காட்டுப் பூனைக்கு வணக்கம் சொல்லுபவர்களை), உங்களில் யார் இரவு வணக்கத்தை (இடைவிடாது) இரவு நேரங்களில் (எனக்கு மட்டும்) சொல்லுகிறீர்களோ, (அவர்களுக்கு) பிரமீடு தேசத்து அடுத்த வாழ்க்கையில் இரவு பகலாக ஊர் சுற்றிக் காட்டுவேன், மற்றவர்களின் பகலும் இருட்டாக்கப்படும்(பூ.த.மொ 211)
பூனைகளில் நானே மிகப் பெரிய பூனை (பூ.த.மொ 142)
*********
எகிப்து நாடுடைய இறைவா போற்றி !
குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது..........போன்ற பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் பின்னர் ஆய்வு செய்யப்படும்
பூனையார் நாடினால் மேலும் (மேலும்) தொடரும்...
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
19 கருத்துகள்:
ஆஹா..... நம்ம 'பூனை' மதத்தை விவரிச்சுச் சொன்ன அழகே அழகு!
கோகி, கப்புவின் ஆசிகள் உங்களுக்கு!
// துளசி கோபால் said...
ஆஹா..... நம்ம 'பூனை' மதத்தை விவரிச்சுச் சொன்ன அழகே அழகு!
கோகி, கப்புவின் ஆசிகள் உங்களுக்கு!//
பூனை மதத்து நியூசி கிளை உங்களுக்குத்தான்.
நானே பூனைச் சாமியாரிணி ஆகப்போறேன். கோபால் வேலையில் இருந்து ஓய்வு பெறும் நாளுக்காகக் காத்திரிப்பு:-)
ஆஸ்ரமம் ப்ளான் எல்லாம் ரெடி. ப்ராஜெக்ட் ரிப்போர்ட் தயார்.
//துளசி கோபால் said...
நானே பூனைச் சாமியாரிணி ஆகப்போறேன். கோபால் வேலையில் இருந்து ஓய்வு பெறும் நாளுக்காகக் காத்திரிப்பு:-)
ஆஸ்ரமம் ப்ளான் எல்லாம் ரெடி. ப்ராஜெக்ட் ரிப்போர்ட் தயார்.//
இன்றே செய் நன்றே செய் -ன்னு முன்னோர்கள் சொல்லி இருக்காங்க, கோகி ஆவியை கோவிலுக்குள் புடிச்சுப் போடுங்க. நாங்க புனிதப் பயணம் அங்கு வருகிறோம் :)
பாவி மனுஷா ...!
இன்னும் நிறைய சந்தேகம் இருக்கு. இப்போதுதான் 'பவர்'போச்சு... வந்து கேள்வி கேக்கணும். ஆனாலும் ஒரே ஒரு சந்தேகம்://அடுத்த வாழ்க்கையில் இரவு பகலாக ஊர் சுற்றிக் காட்டுவேன், மற்றவர்களின் பகலும் இருட்டாக்கப்படும்(பூ.த.மொ 211)// பூனையாரின் இந்த உறுதிமொழி மட்டும் எனக்குப் போதவிலை. இன்னும் கொஞ்சம் juicy ஆகச் சொல்லியிருந்திருந்தால் இந்நேரம் மதுரைக் கிளையின் தலைமைப் பொறுப்புக்கு என் விண்ணப்பத்தை பூனையாரின் தலைமை அலுவலகத்திற்கு 'பூனைப் பிரியன' என்ற பெயரில் (அதாவது, உங்களுக்கு) அனுப்பியிருந்திருப்பேன்.சே! வட போச்சே!!!!!!
¾í¸ÙìÌ ¸¼×û Ì¡¢ò¾ ¬úó¾ º¢ó¾¨É þø¨Ä. «¾É¡ø ¾¡ý þôÀÊ ¸¼×û Å¢ºÂò¾¢ø §¸Ä¢ §À͸¢ýÈ£÷¸û. ¿£í¸û ¸¼×¨Ç ¯ýáÁø þÕôÀ¾¡ø ¸¼×ÙìÌ ±ó¾ þÆôÒõ þø¨Ä. Á¡Ã¡¸ ¯í¸Ùì̾¡ý.þó¾ ¯Ä¸õ þÂíÌŨ¾ ¨Åò¾ ¸¼×Ç¢ý þÕô¨À ¯ÉÃÄ¡õ. º¢ó¾¢ôÀÅ÷¸ÙìÌ Å¢¨¼ þó¾ ¯Ä¸¢ø ¿¢¨ÃóÐ ¯ûÇÐ. º¢ó¾¢ìÌõ «¨ÉÅÕìÌõ «¾üì¸¡É Å¢¨¼ ¸¢¨¼ìÌõ. ¬É¡ø ´ù¦Å¡ÕÅÕìÌõ ¸¢¨¼ìÌõ Ţ¢ø §ÅÚÀ¡Î þÕìÌõ. þýÚ Á¾í¸û ÀĚḠ¸¼×¨Ä ÀüÈ¢ ¦º¡ø¸¢ýÃÐ «¾¢ø ¯í¸ÖìÌ ÁüÚ ¸ÕòÐ þÕì¸Ä¡õ. ¬É¡ø ¸¼×ø ¯ñÎ ±ýÀ¾¢ø ¾¢ó¾¢ìÌõ ±ÅÕìÌõ Á¡üÚ ¸ÕòÐ þÕì¸ ÓÊ¡Ð. Á¾í¸¨Ç §¸Ä¢ ¦ºö¸¢ý¦Èý ±ýÈ ¦À¡¢ø ¸¼×¨Ä §¸Ä¢ ¦ºö¡¾£÷¸û. þ¨ÈÅÉ¢ý ¦¸¡Àò¾¢üìÌ ¬Ä¡É¡ø «íÌ ¯í¸¨Ç ¸¡ì¸ ¡Õõ þÕì¸ Á¡ð¼÷¸ø. º¢ó¾¢Ôí¸û! ¸¼×¨Ç ¯Éà ÓÂÙí¸ø!
// தருமி said...
பாவி மனுஷா ...!//
நீங்கள் விரைவில் நாத்திகத்தில் இருந்து பூனையார் மதத்திற்கு மாற வேண்டும் என்று பூனையாரிடம் வேண்டிக் கொள்கிறேன். பூனையார் நாடினால் நீங்கள் மாறுவீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது
//நல்லவண்டா..! said...
¾í¸ÙìÌ ¸¼×û Ì¡¢ò¾ ¬úó¾ º¢ó¾¨É þø¨Ä. «¾É¡ø ¾¡ý þôÀÊ ¸¼×û Å¢ºÂò¾¢ø §¸Ä¢ §À͸¢ýÈ£÷¸û. ¿£í¸û ¸¼×¨Ç ¯ýáÁø þÕôÀ¾¡ø ¸¼×ÙìÌ ±ó¾ þÆôÒõ þø¨Ä. Á¡Ã¡¸ ¯í¸Ùì̾¡ý.þó¾ ¯Ä¸õ þÂíÌŨ¾ ¨Åò¾ ¸¼×Ç¢ý þÕô¨À ¯ÉÃÄ¡õ. º¢ó¾¢ôÀÅ÷¸ÙìÌ Å¢¨¼ þó¾ ¯Ä¸¢ø ¿¢¨ÃóÐ ¯ûÇÐ. º¢ó¾¢ìÌõ «¨ÉÅÕìÌõ «¾üì¸¡É Å¢¨¼ ¸¢¨¼ìÌõ. ¬É¡ø ´ù¦Å¡ÕÅÕìÌõ ¸¢¨¼ìÌõ Ţ¢ø §ÅÚÀ¡Î þÕìÌõ. þýÚ Á¾í¸û ÀĚḠ¸¼×¨Ä ÀüÈ¢ ¦º¡ø¸¢ýÃÐ «¾¢ø ¯í¸ÖìÌ ÁüÚ ¸ÕòÐ þÕì¸Ä¡õ. ¬É¡ø ¸¼×ø ¯ñÎ ±ýÀ¾¢ø ¾¢ó¾¢ìÌõ ±ÅÕìÌõ Á¡üÚ ¸ÕòÐ þÕì¸ ÓÊ¡Ð. Á¾í¸¨Ç §¸Ä¢ ¦ºö¸¢ý¦Èý ±ýÈ ¦À¡¢ø ¸¼×¨Ä §¸Ä¢ ¦ºö¡¾£÷¸û. þ¨ÈÅÉ¢ý ¦¸¡Àò¾¢üìÌ ¬Ä¡É¡ø «íÌ ¯í¸¨Ç ¸¡ì¸ ¡Õõ þÕì¸ Á¡ð¼÷¸ø. º¢ó¾¢Ôí¸û! ¸¼×¨Ç ¯Éà ÓÂÙí¸ø!//
இப்படியெல்லாம் திட்டுவாங்களா ?
//நல்லவண்டா..! said...
தங்களுக்கு கடவுள் கு¡¢த்த ஆழ்ந்த சிந்தனை இல்லை. அதனால் தான் இப்படி கடவுள் விசயத்தில் கேலி பேசுகின்றீர்கள். நீங்கள் கடவுளை உன்ராமல் இருப்பதால் கடவுளுக்கு எந்த இழப்பும் இல்லை. மாராக உங்களுக்குதான்.இந்த உலகம் இயங்குவதை வைத்த கடவுளின் இருப்பை உனரலாம். சிந்திப்பவர்களுக்கு விடை இந்த உலகில் நிரைந்து உள்ளது. சிந்திக்கும் அனைவருக்கும் அதற்க்கான விடை கிடைக்கும். ஆனால் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வியயில் வேறுபாடு இருக்கும். இன்று மதங்கள் பலவாராக கடவுலை பற்றி சொல்கின்ரது அதில் உங்கலுக்கு மற்று கருத்து இருக்கலாம். ஆனால் கடவுல் உண்டு என்பதில் திந்திக்கும் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. மதங்களை கேலி செய்கின்றென் என்ற பெயா¢ல் கடவுலை கேலி செய்யாதீர்கள். இறைவனின் கொபத்திற்க்கு ஆலானால் அங்கு உங்களை காக்க யாரும் இருக்க மாட்டர்கல். சிந்தியுங்கள்! கடவுளை உனர முயளுங்கல்!//
இப்படியெல்லாம் திட்டுவாங்களாவா ? இப்பப் படிச்சுப்பாருங்க
//தங்களுக்கு கடவுள் கு¡¢த்த ஆழ்ந்த சிந்தனை இல்லை. அதனால் தான் இப்படி கடவுள் விசயத்தில் கேலி பேசுகின்றீர்கள். நீங்கள் கடவுளை உன்ராமல் இருப்பதால் கடவுளுக்கு எந்த இழப்பும் இல்லை. மாராக உங்களுக்குதான்.இந்த உலகம் இயங்குவதை வைத்த கடவுளின் இருப்பை உனரலாம். சிந்திப்பவர்களுக்கு விடை இந்த உலகில் நிரைந்து உள்ளது. சிந்திக்கும் அனைவருக்கும் அதற்க்கான விடை கிடைக்கும். ஆனால் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வியயில் வேறுபாடு இருக்கும். இன்று மதங்கள் பலவாராக கடவுலை பற்றி சொல்கின்ரது அதில் உங்கலுக்கு மற்று கருத்து இருக்கலாம். ஆனால் கடவுல் உண்டு என்பதில் திந்திக்கும் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. மதங்களை கேலி செய்கின்றென் என்ற பெயா¢ல் கடவுலை கேலி செய்யாதீர்கள். இறைவனின் கொபத்திற்க்கு ஆலானால் அங்கு உங்களை காக்க யாரும் இருக்க மாட்டர்கல். சிந்தியுங்கள்! கடவுளை உனர முயளுங்கல்!//
அடுத்த தத்துவத் தொகுப்பில் போடும் அளவுக்கு அட்வைஸ் மழையாக இருக்கு. கடவுள் இல்லைன்னு யார் சொன்னது, எனக்கு என் பூனை தான் கடவுள். தயவு செய்து எனது கடவுளை நிந்திக்காதீர்கள். பூனையார் கருணையானவர் தண்டிக்கமாட்டார், மன்னிப்பார்
//இந்த உறுதிமொழி மட்டும் எனக்குப் போதவிலை.//
தருமி ஐயா, நீங்கள் இன்னும் நல்ல (பகூத்) அறிவு கொண்டு சிந்திக்கவில்லை என்று தான் தெரிகிறது, போகட்டும்.
பூனையைக் கடவுளாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு பூனையாரின் சொர்கத்தில் பூனையார் போலவே இரவு பகலாக இல்லாமல் எல்லாம் பகலாகவே இருக்கும் மறுப்போருக்கு நரகமாகவே அதாவது இரவே இருக்கும்.
பூ.த.மொ. புத்தகம் எங்கே கிடைக்கும்?, எந்த மொழியில் எழுதப்பட்டிருக்கிறது?. அதற்கு கோனார் நோட்ஸ் இருக்கிறதா?. பூனையார் மதத்தில் எத்தனை பிரிவுகள் இருக்கின்றன? பூனையாரின் தூதவர் யார்? நான் அந்த மதத்தில் சேர்ந்தால் என்ன கிடைக்கும்?
மியாவ்...மியாவ்...மியாவ்..
பூனையறிஞர் அண்ணன் கோ.க. வாழ்க.
//
உங்களை (அவர்களை) நான் எச்சரிக்கிறேன் (காட்டுப் பூனைக்கு வணக்கம் சொல்லுபவர்களை), உங்களில் யார் இரவு வணக்கத்தை (இடைவிடாது) இரவு நேரங்களில் (எனக்கு மட்டும்) சொல்லுகிறீர்களோ, (அவர்களுக்கு) பிரமீடு தேசத்து அடுத்த வாழ்க்கையில் இரவு பகலாக ஊர் சுற்றிக் காட்டுவேன், மற்றவர்களின் பகலும் இருட்டாக்கப்படும்(பூ.த.மொ 211)
//
இந்த ஜாக்கேட் போடும் கலையை எந்த “டையலரிங்” கடையில் கற்க வேண்டும்.
கேள்விகளுக்கு மியாவ் சத்ததால் பதில் சொல்லவும்.
நல்ல தத்துவம்.
சகோ.கோவி,
அஷ்டலக்கடி கொய்யா!(வணக்கமுங்கோ)
நீங்கள் வணங்கும் பூனைக்கடவுளுக்கு சக்திகள் காணாது, வவ்வால் கடவுளுக்கே அதி அற்புத மீஒலிப்பார்வை, பறக்கும் சக்தி, தலைகீழாக தொங்கும் சக்தி எல்லாம் இருக்கு.எல்லாம் வல்ல ஏக இறைவன்(ஆண்) வவ்வால் ஒருவரே!
எனவே பூனை மதத்திலிருந்து வவ்வால் மதத்திற்கு மாற அழைக்கிறேன், அப்படி மாறினால் உங்கள் கடந்த காலப்பாவங்களை வட்டியுடன் தள்ளுப்படி செய்யப்படும்., மேலும் இலவச இணைப்பாக 100 MB புண்ணியமும் தரப்படும், எனவே எதிர்க்காலத்தில் பாவம் செய்தாலும் கணக்கை நேர் செய்துவிடலாம்.
வவ்வாலை இஷ்ட தெய்வமாக கொண்டால் ,செல்போன் சிக்னல் நன்றாக கிடைக்கும் , டிராபிக் சிக்னல் பச்சையாக எரியும், புது செருப்பு உங்கள் காலைக்கடிக்காது,இரவிலும் கண் தெரியும், மூட்டு வலி, மூலம், அல்சர், வாயுக்கோளாறுகள் தீறும். இதெல்லாம் கதையல்ல நிஜம் வவ்வால் மதம் தழுவியவர்கள் அனுபப்பூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.
மேலும் இந்த பின்னூட்டத்தினை 10 பேருக்கு காபி&பேஸ்ட் செய்து போட்டால் வவ்வாலின் அனுக்கிரகம் உடனே கிடைக்கும், செய்யத்தவறினால் உங்கள் பதிவின் ஹிட்ஸ் குறையும், தமிழ்மண மகுடம் கிடைக்காது :-))
ஜமாலக்கடி கிரிகிரி!(உங்களுக்கு வவ்வால் அனுக்கிரகம் கிடைக்கட்டும்)
குவார்ட்டர் அடித்தால் மீண்டும் சந்திப்போம்!
நம்ம பூனை வழிக்காரர்களிடம் சொல்லி 30 -35 ஓட்டுப் போட்டு உங்களுக்குத் தமிழ்மண மகுடம் வர வைக்கலாமாவென நாங்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக யோசித்துக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு எப்படி வசதி ...?
பூனைக் கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும்- பெருவெடிப்பு- அறிவியல்- விஞ்ஞானம் என்று அந்த காலத்திலே சொன்ன பூனையார் எனது உள்ளத்தை கொள்ளை கொண்டுவிட்டார்.அவரை நாம் பின்பற்றுவதன்மூலம் எல்லா மக்களிடமும் சகோதரத்துவம் அன்பு பாசம் சாந்தி சமாதானம் எல்லாம் பெருகியோடும் என்பதில் சந்தேகமில்லை.
பூனை நம்பிக்கையாளாகளுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்!
நாம் உடனடியாக பூனையவர்களின் கொள்கைகள இதர மதத்தவர்களிடம் விளக்கி அவர்களை பூனையாரிடம் அழைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நாட்டில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் பெருக்கெடுத்தோடுமல்லவா.
பூனையார் நாடினால் மிகுதி...
// உங்களை (அவர்களை) நான் எச்சரிக்கிறேன் (காட்டுப் பூனைக்கு வணக்கம் சொல்லுபவர்களை), உங்களில் யார் இரவு வணக்கத்தை (இடைவிடாது) இரவு நேரங்களில் (எனக்கு மட்டும்) சொல்லுகிறீர்களோ, (அவர்களுக்கு) பிரமீடு தேசத்து அடுத்த வாழ்க்கையில் இரவு பகலாக ஊர் சுற்றிக் காட்டுவேன், மற்றவர்களின் பகலும் இருட்டாக்கப்படும்(பூ.த.மொ 211)//
:) :) ஹா ஹா
//எகிப்து நாடுடைய இறைவா போற்றி !//
:) :) ஹி ஹி
//பூனையார் நாடினால் மேலும் (மேலும்) தொடரும்.//
அருமையிலும் அருமை :)
கருத்துரையிடுக