பின்பற்றுபவர்கள்

3 மார்ச், 2011

மனதை நெருடிய படம் !

ஒருலட்சத்து 75 கோடி ஊழல் செய்கிற நாட்டில் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஏழ்மையை மட்டுமே சொத்தாகக் கொண்டுள்ளார்கள் என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் போது தெரியவருகிறது.



படம் நன்றி தினமலர்.

**********

பிறந்த குழந்தைகளை வாடகைக்கு விட்டு போக்குவரத்து விளக்கு அருகே நிற்கும் வாகனங்களில் காட்டி பிச்சை எடுப்பது ஒருவகை பிழைப்பு என்றால், மேற்கண்டது போல் ஒரு கூலித் தொழிலாளி மூட்டையாக சுமந்து கொண்டே வேலை செய்யும் பரிதாப நிலை மற்றொருவகைப் பிழைப்பு. உலகமயம், நகரமயம், நிலவிலை ஏற்றம் ஆகியவை இவர்களைப் போன்ற கூலித் தொழிலாளிகளின் கூட்டுக் குடும்பங்களைவிட சிதைத்துவிட்டது, கூலித்தொழிலாளிகள் பெரும்பாலும் குழந்தைகளை முதியவர்களிடம் விட்டுவிட்டு வேலைக்குவருவார்கள், முதியோர்களை முதியோர் இல்லங்களுக்கு துறத்தாத நிலை கூலித் தொழிலாளிகளிடம் இருந்தது, அதற்குக்காரணம் முதியவர்கள் மீதான கரிசனம் என்றாலும் முதியோர் இல்லங்களுக்குச் செலவழிக்கும் அளவுக்கு அவர்களுக்கு வருமானம் இல்லை என்பது மற்றொருகாரணம், தற்போது அவர்களும் கூட்டுக் குடும்பமாக (இப்ப கூட்டுக் குடும்பம் என்றாலே பெற்றோர்களை உடன்வைத்திருப்பது தான்) வாழமுடியாத நிலை, நகரங்களில் குடிசைப் பகுதிகள் அகற்றப்பட்டத்தாலும், பொறம்போக்கு நிலங்களில் அவர்களுக்கு குடியிருக்க அனுமதி இல்லாததாலும் நடைபாதைகளில் குடியிருக்கும் நிலைதான் அவர்களது நிலை. அப்படிப்பட்ட நிலையில் குழந்தைகளை எங்கே விட்டுவருவது ?

ஒன்றாம் வகுப்பில் இருந்து இலவசக் கல்வி வழங்கும் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப குழந்தைகளுக்கு ஐந்துவயதாக ஆகி இருக்க வேண்டும், அதற்கும் குறைந்த வயது குழந்தைகளை யார் பொறுப்பில் விட்டுச் செல்வது ? இவர்கள் வாழும் நிலையில் இவர்களுக்கு குழந்தைகள் ஒரு கேடா ? என்கிற பொதுப்புத்தியுடன் நம்மால் கேள்வி எழுப்ப முடியும். அவர்களிடம் நாடுகள் விட்டுவைத்திருப்பது குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமை மட்டுமே. மதிய உணவு போட்டார்கள், அதன் பெயரை மாற்றி சத்துணவு போட்டார்கள், பின் அதில் முட்டை போட்டார்கள். ஆனால் இவையெல்லாம் ஐந்துவயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தானே. அன்றாடம் காய்சிகளின் ஐந்துவயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு என்ன கிடைக்கிறது.

இதுபோன்ற காட்சிகள் திரைப்படங்களின் துவக்கக் காட்சியாகவும் பின்னர் அதிலிருந்து நாயகன் எப்படி வெற்றிபெருகிறான் என்பதான நடிகரின் தனிமனித புகழை திரைப்படங்களின் மூலம் வளர்க்க இந்த அன்றாடம் காட்சிகள் பயன்பட்டிருக்கின்றன (உ.ம் மிஸ்டர் பாரத்). இவர்களின் வாக்குக்கு இருக்கும் மதிப்பு தெரிந்தும் கூட இவர்களின் வாழ்வியல் நிலைத்தன்மைக்கு அரசியல்கட்சிகள் எதுவும் செய்துவிடவில்லை. சென்னையில் வீட்டுவேலைக்கு பெண்கள் கிடைப்பது அரிதாகவும் அதில் நம்பிக்கையாளராகக் கிடைப்பது அரிதாகவும் போனதற்குக்காரணமே, சென்னையில் குடிசைகள் குறைந்து போனதே.

வேலை வாய்ப்பு என்பதற்காக நகரங்களுக்கு இடம் பெயர்ந்த ஏழைமக்கள் பிளாட்பாரம் வாசி ஆகிப் போய் இருக்கிறார்கள். வேகமாக வளரும் சொத்து விலை ஏற்றம் கிராமங்களிலும் நெல்வயல்களை விற்பனை மனைகளாக்கி இருக்கின்றன என்பதால் இவர்களால் மீண்டும் கிராமங்களுக்கு இடம் பெயரமுடியாது. அங்காடித்தெருவில் ஒரு சில நிமிடங்கள் வந்து போன 'பிளாட்பார வாழ்கை' 'அடுக்கு மாடிக் கடைகளில் வேலை செய்யும் இளைஞர்களின் வாழ்கையைவிடக் கொடுமையானது.

இதையெல்லாம் எதுக்கு எழுதுகிறேன், இவர்களின் குழந்தைகள் எந்த ஒரு உந்துதலால் பள்ளிக்குச் செல்வார்கள் ? அப்படியே படித்தாலும் அவர்களால் மற்றமாணவர்களுடன் போட்டியிட்டு படிக்க முடியுமா ? இட ஒதுக்கீடு என்பது இடப் பங்கிடே என்பது புரிந்து கொள்ளமல் நடுநிலைவாதிகளாக ஆகும் பலர் இட ஒதுக்கீடு என்பது தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது, அவர்களால் வேலையை திறனுடன் செய்யமுடியவில்லை, அவர்களால் தான் நாட்டில் லஞ்சம் பெருகிவிட்டது என்றும் கூடவே சேர்ந்து வாசிக்கிறார்கள்.

நான் முன்பு பலமுறை எழுதியது தான் 'படிப்பே வேலையாக இருக்கும் ஒரு மாணவன் எடுக்கும் மதிப்பெண்ணும், வேலைக்கு இடையே படிக்கும் மாணவனின் மதிபெண்ணும் ஒன்றாக மதிப்பிட வேண்டும், ஒன்றாகப் போட்டியிடவேண்டும் என்கிறார்கள் பலர், அதற்கெல்லாம் மிஸ்டர் பாரத் படத்தின் நாயகன் போன்று அவதாராங்கள் ஏழைகளுக்கு குழந்தையாகப் பிறந்தால் வாய்ப்புண்டு.

வேலைக்குச் செல்லும் போது பாதுகாப்பாக குழந்தைகளை விட்டுச் செல்லும் குழந்தைப் பாதுகாப்பகம், மாணவர் பாதுகாப்பகம் என்பதில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் அளவிக்கு வசதி அற்ற ஆண் / பெண் என இருவரும் உழைக்கும் ஏழைகளுக்கு ஏதாவது செய்தாகவேண்டும்

ஏழைகளின் வாக்குகளை குறிவைத்து என்னன்வோ இலவசத் திட்டமென்றப் பெயரில் இலவச அடிமைகளை உற்பத்தி செய்வது தேர்தல் அறிக்கையாக கட்சிகள் வைத்திருக்கின்றன, அவற்றின் இடையே உருப்படியாக ஏழைக் குழந்தைகளின் மூன்றுவயதிலான வளர்ச்சிக்கும், அதன்பிறகான கல்விக்கும் வாய்ப்பு வழங்கும் கட்சி எதுவாக இருந்தாலும் நான் வாக்களிப்பேன்.

13 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

படத்தை பார்த்தவுடன் எதுவும் சொல்ல தோன்றவில்லை மனது கனக்கிறது

மாணவன் சொன்னது…

என்றும் மாறும் இந்த நிலை?? எத்தனையோ கோடிக்கணக்கில ஊழல் செய்யும் நம் நாட்டில் இந்த ஏழைகள் மேலும் ஏழ்மையாகத்தான் இருக்க வேண்டுமா?? இதுதான் அவர்கள் விதியா?? எத்தனையோ தாய்க்குலங்கள் தன் குழைந்தயையும் சுமந்துகொண்டு ஒரு வேளை சோற்றுக்காக அல்லல்படும் நிலைமை மாறாதா?? அவர்கள் வாழ்வும் ஒளிராதா?? இன்னும் எத்தனையோ கேள்விகள் மனதில் விடை தெரியா பதில்களுடன்.... இதையெல்லாம் பார்த்துவிட்டு என்ன செய்வது?? நாமும் மனிதர்கள் என்று சொல்லிகொண்டு இருக்கிறோம்.......வேறொன்றும் சொல்வதற்கில்லை...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சார்.. மேட்டர் நல்லாருக்கு.. எடிட்ல போய் குட்டி குட்டி பேராவா பிரிச்சு போடுங்க..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மனதை கனக்க வைத்த பதிவு

raja சொன்னது…

PROFOUND WRITING AND ELABORATION

priyamudanprabu சொன்னது…

(இப்ப கூட்டுக் குடும்பம் என்றாலே பெற்றோர்களை உடன்வைத்திருப்பது தான்)
///

MM

priyamudanprabu சொன்னது…

என்று மாறும் இந்த நிலை??

+1

Raghav சொன்னது…

அருமையான பதிவு

"நடுநிலைவாதிகளாக ஆகும் பலர் இட ஒதுக்கீடு என்பது தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது, அவர்களால் வேலையை திறனுடன் செய்யமுடியவில்லை, அவர்களால் தான் நாட்டில் லஞ்சம் பெருகிவிட்டது "
இதில் உண்மை இல்லாமல் இல்லை - இல்லையா?? "அவர்களால் தான்" என்பதை "இவரகளாலும்" என்று கொள்ளலாம்.

தீவிரமாக சிந்தித்து துரிதமாக செயலில் கொண்டுவரவேண்டிய மாற்றம் இது. சமுதாயம் ஒவ் ஒரு முறையும் மாற்றத்திற்கு பெரியார் ஒருவர் வருவார் என காத்திருக்க முடியாது

SurveySan சொன்னது…

hmm:(

SurveySan சொன்னது…

hmm :(

அன்புடன் அருணா சொன்னது…

நல்ல பதிவுகள் இப்படிக் கவனிப்பாரின்றிப் போய் விடுகிறது :(

ஜோதிஜி சொன்னது…

இது போன்ற படத்தை சற்று பெரிதாக போட்டு இருந்தால் தாக்கம் எளிதில் கிடைக்கும்.

உங்களுக்கு தினமலரில் கிடைத்தது. இங்கு தினந்தோறும் ஏராளமான உயிரோட்டமான காட்சிகளை கண்களுக்கு தென்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு சில நிகழ்வுகள் அடுத்த வேலையை தொடர முடியாத அளவிற்கு அன்று முழுவதும் தாக்கமாய் இருக்கிறது.

என்ன செய்ய முடியும் கண்ணன்?

மொத்த கட்டுரை உருவாக்கிய தாக்கத்தை விட இது போன்ற காட்சிகளை காணும் போது நம் வாழ்வில் எத்தனை எத்தனை தேவையில்லாத விசயங்களுக்கு ஆசைப்பட்டு அவஸ்த்தை பட்டுக் கொண்டு இருக்கிறோம் என்று முடிந்தவரையிலும் மாற்றிக் கொண்டே இருக்கின்றேன்.

Namy சொன்னது…

Under ICDS programme the gov take some inition for childwelfare like 'Anganvadi',

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்