பின்பற்றுபவர்கள்

3 ஆகஸ்ட், 2010

திரு சங்கரபாண்டி மற்றும் திரு நைஜீரியா இராகவன்

சென்ற கிழமை வியாழன் பணித் தொடர்பில் சிங்கை வந்திருந்த தமிழ்மணம் நிர்வாகிகளுள் ஒருவரும், பதிவரும், அன்பு அண்ணனுமான திரு சங்கரபாண்டியை மாலை மங்கிய பின் சிங்கைப் பதிவர்கள் குழுவினர் சந்தித்தோம். முறைப்படியான அறிவிப்புகள் இன்மை மற்றும் வேலை நாள் என்பதால் சிலரால் கலந்து கொள்ள இயலாத சூழலிலும் 12 பதிவர்களாக சங்கரபாண்டியை சந்தித்தோம்.

40 வயதிற்குற்பட்ட பதிவர்கள் முதன் முதலில் இவரைப் பார்க்கும் போது அண்ணன் என்று அழைக்கத் தோன்றும் அளவுக்கு நெருக்கும் உணர்த்தும் முகம். வெகு இயல்பாக அனைவரையும் விசாரித்துப் பழகினார். 'தமிழ்மணம் சேவையை வாசகர்கள் புனிதமாகக் கருதி நிர்வாகிகளை எட்டி நின்று பார்க்க வேண்டும் என்பது போன்ற தமிழ்மண அறிவிப்புகள்' குறித்து முகவை இராம் கேட்டதும், திரும்ப திரும்ப ஒரே மாதிரியான ஆதாரமில்லாத (தமிழ் மணம் ஐபி தகவல்களை வெளியிட்டதாக கிளப்பிவிட்ட) குற்றச்சாட்டுகளைக் கூறும் போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அதுபோன்று எழுதிவிட நேரிட்டது, சேவை என்று வந்துவிட்டால் பிறகு பாராட்டும் தூற்றலும் ஒன்று தான் என்கிற மனநிலைக்கு வந்திருக்க வேண்டும், மாற்றிக் கொள்கிறோம் என்பதாக இசைந்தார்.

வேலை - உணவு - உறக்கம் - இல்லம் இந்த சூழலுடன் சமூகச் சேவை என்பதாக தமிழ் சமூகத்திற்கு தன்னுடைய பங்களிப்பை அளிப்பவர்கள் பலர் அதில் அண்ணன் சங்கரபாண்டியும் குறிப்பிடத்தக்கவர். பெட்னாவிழாவிற்கு தெருக்கூத்து குழுவை அமெரிக்கா அழைத்துச் சென்றதில் ஏற்பட்ட தடைகள் அதனை வெற்றிகரமாகக் கடந்து நிகழ்ச்சியை நடத்திக் காட்டியதை சங்கர பாண்டியண்ணன் விவரிக்கும் போது அனைவருக்கும் விழிகள் விரிந்தன. அன்று இரவு அருகே இருந்த அஞ்சப்பர் உணவகத்துக்குச் சென்று உணவருந்திவிட்டு இரவு 10:30 மணி வரை பேசிக் கொண்டிருந்தோம், மறுநாள் வேலை நாள் என்பதால் நெடிய உரையாடல்களுக்கு வாய்ப்பில்லாமல் போயிற்று. தமிழ் மணத்தில் புதிய பகுதி ஒன்றிற்கான வேண்டுகோள் வைத்தோம். செய்யவதற்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லி இருக்கிறார். திரு சங்கரபாண்டி அண்ணனை சந்தித்து எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

*****

சென்ற கிழமை சனி பொன் மாலை வேளையில் சிங்கைக்கு இல்லத்தினருடன் வந்திருந்த அடுத்த அண்ணன் திரு நைஜிரியா இராகவன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இங்கும் சற்றேறக் குறைய 12 பதிவர்கள் அண்ணனை எதிர்கொண்டார்கள். 'டேய்...... ஒக்காள ஓழி' என்று நெருங்கிய நண்பர்களை உரிமையுடன் கடிமொழியில் அழைத்தே பாசம் காட்டுபவர் அண்ணன் இராகவன். அன்று பகல் முழுவதும் பறவைகள் பூங்காவில் ஜோசப் பால்ராஜ். மற்றும் வெற்றி கதிரவன் ஆகியோருடன் சென்று வந்திருந்தார் இராகவன். அன்று மதியம் சிங்கை நாதன் வீட்டில் உணவாம். நல்ல அலைச்சலில் வந்திருந்தாலும் உற்சாகமாகப் பேசினார் அண்ணன். நைஜிரிய அனுபவங்களைக் கூறினார். 'உங்க ஊரில் மட்டும் ஜனாதிபதி, பிரமதரெல்லாம் வாரிசுகளுக்கு மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை சிக்கலில் வைத்துவிட்டு செத்துப் போய்விடுகிறார்கள் என்று மின் அஞ்சல் வருகிறதே?' என்று யாரோ நகைச்சுவைக்காக மடக்க, அது எங்க ஊரில் இல்லை யூகே அல்லது சோமாலியா போன்ற நாடுகளில் தான் அவ்வாறு வருகிறது என்றார். நைஜிரியாவில் பாதுகாப்பான நகர்களும் இருக்கின்றனவாம், அனைத்து வசதிகளும் கொடுத்து நல்ல ஊதியம் கொடுக்கிறார்கள் என்றார்.

அன்றைய சந்திப்பு பதிவர் ஜோ என்கிற ஜோஸ் பெனிடிக்டும் (லாடு லபக்கு தாஸ் என்ற பெயரில் பதிவு வைத்திருப்பவர்) வந்திருந்தார். ஏனைய பதிவர்களுடன் இரண்டு மணி நேரம் கலகப்பாகப் போனது. மறுநாள் அண்ணன் இராகவன் தங்கிருந்த விடுதிக்கு சென்று சந்தித்து இல்லத்தினருடன் உணவருந்திவிட்டு வந்தேன். வம்பு தும்புகளில் கை வைக்காமல் எழுதும் பதிவர்களின் அண்ணன் நைஜிரியா இராகவனும் ஒருவர். ஒரு இடத்திற்குச் செல்லும் போது நமக்கு அங்கு வேண்டியவர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணும் பதிவர்கள் குறைவு தான். பலர் சிங்கை வந்தாலும் யாரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டு பிறகு சென்றேன் என்று பதிவு எழுதும் போது கொஞ்சம் மனதுக்கு வருத்தமாக இருக்கும், அடடா இவர்களையெல்லாம் பார்க்க எண்ணி இருந்தோமே...ன்னு தோணும். சிங்கைக்குச் சுற்றுலாவிற்கு வந்ததே சிங்கையில் நெருங்கிய பதிவர்கள் இருக்கிறார்கள் அவர்களையும் பார்த்து செல்லலாம் என்கிற எண்ணத்தில் தான் அண்ணன் இராகவன் சிங்கைக்கு வந்திருக்கிறார். அவரது எண்ணத்தை ஓரளவு முழுமை செய்தோம் என்று நினைக்கிறேன்.

******
சிங்கைப் பதிவர்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்து வந்த இந்த இரண்டு அன்பு உள்ளங்களைச் சந்தித்தது எங்கள் அனைவருக்குமே மிக்க மகிழ்ச்சியாக அமைந்தது.

46 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

மகிழ்ச்சியான தருணங்கள்!

பதிவு செய்ததற்கு நன்றி கோவியாரே!

ஏன் ஒரு விசயத்த விட்டுட்டிய...!? :)))

தேவன் மாயம் சொன்னது…

நான்தான் பர்ஸ்ட்!!

இராகவன் நைஜிரியா சொன்னது…

சிங்கை பதிவர்களின் அன்பில் மனம் குளிர்ந்தது நண்பரே...

ஒரு குடும்பமாக பழகுவது மனதுக்கு மிக்க சந்தோஷமாக இருந்தது.

ஜோ/Joe சொன்னது…

அண்ணன் சங்கரபாண்டியை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி . ராகவன் அவர்களை சந்திக்க வர முடியாமல் போய் விட்டது வருத்தம்.

ஜோதிஜி சொன்னது…

நேற்று தான் ரவியுடன் உங்களைப்பற்றியும் சங்கர பாண்டி குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டுருந்தேன். அதற்குள் புகைப்பட வாய்ப்பு.

தலையைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

வம்பு தும்பு இல்லாமல்...........

வேறென்ன வேண்டும்.

பேசிவிட்டு சென்றதும் நீண்ட நேரம் மனதிற்குள் பல தாக்கத்தை உருவாக்கி இருந்தார்.

ஜோதிஜி சொன்னது…

வேலை - உணவு - உறக்கம் - இல்லம் இந்த சூழலுடன் சமூகச் சேவை என்பதாக தமிழ் சமூகத்திற்கு தன்னுடைய பங்களிப்பை அளிப்பவர்கள் பலர் அதில் அண்ணன் சங்கரபாண்டியும் குறிப்பிடத்தக்கவர்

பொருத்தமான பாராட்டுரை.

ராம்ஜி_யாஹூ சொன்னது…

thanks for sharing, thanks for all bloggers

Radhakrishnan சொன்னது…

அன்பு வெல்லட்டும். நன்றி கோவியாரே.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிஜி said...

நேற்று தான் ரவியுடன் உங்களைப்பற்றியும் சங்கர பாண்டி குறித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டுருந்தேன். அதற்குள் புகைப்பட வாய்ப்பு.//

ரவி யார் ? வடகரை அண்ணாச்சியா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஏன் ஒரு விசயத்த விட்டுட்டிய...!? :)))//

சென்சார் மேட்டரெல்லாம் புள்ளேவோ படிக்கிற பதிவுல போடப்படாது :)

கோவி.கண்ணன் சொன்னது…

// தேவன் மாயம் said...

நான்தான் பர்ஸ்ட்!!//

ஜஸ்ட் மிஸ்ட் !!!
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// இராகவன் நைஜிரியா said...

சிங்கை பதிவர்களின் அன்பில் மனம் குளிர்ந்தது நண்பரே...

ஒரு குடும்பமாக பழகுவது மனதுக்கு மிக்க சந்தோஷமாக இருந்தது.//

இணைய இணைப்புக் கிடைக்கலை என்று சொன்னீர்கள் ? கூலிக்கு ஆள் வச்சி பின்னூட்டம் போடுறியளா அண்ணே.....

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger ஜோ/Joe said...

அண்ணன் சங்கரபாண்டியை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி . ராகவன் அவர்களை சந்திக்க வர முடியாமல் போய் விட்டது வருத்தம்.//

உங்களுக்கு பதில் உங்க புங்கோல் பக்கத்து மாவட்டத்துக்காரர் வந்திருந்தார்

கோவி.கண்ணன் சொன்னது…

//ராம்ஜி_யாஹூ said...

thanks for sharing, thanks for all bloggers//

நன்றி அண்ணாச்சி !

கோவி.கண்ணன் சொன்னது…

//V.Radhakrishnan said...

அன்பு வெல்லட்டும். நன்றி கோவியாரே.//

நன்றி தலைவரே

iniyavan சொன்னது…

'டேய்...... ஒக்காள ஓழி'

கோவி சார்,

இந்த வரியை எடுத்துடுங்க. படிக்க ஒரு மாதிரி இருக்கு.

அபி அப்பா சொன்னது…

சூப்பர்! இருவருக்கும் திடீரென அறிவித்தே பத்துக்கும் மேல பதிவர் கூட்டமா? சபாஷ்!

ஆனா கோவியாரே இராகவன் அண்ணாவை நான் நேர்ல பார்த்தா ஒரே கடி கடிச்சு கொதறிடுவேன்னு சொல்லி வையுங்க. கும்பகோணம் வரை வந்துட்டு ஒரு போன் கூட பண்ணலை. நான் அவரு கிட்ட பேசமாட்டேன். நீங்களே சொல்லிடுங்க!

பெயரில்லா சொன்னது…

சந்தோஷமாக இருக்கு படித்ததும் உங்களை பார்த்ததும் இதில் பாரதி அண்ணா இருவரை தான் எனக்கு தெரியும்...anyhow happy to see u frnds..happy frndship day

Ravichandran Somu சொன்னது…

நல்ல பகிர்வு கோவியாரே!

நண்பர் சங்கரபாண்டியை நான்கு வருடங்கள் கழித்து சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!

அண்ணன் ராகவன் அவர்களை சந்திக்க வர முடியாமல் போனதில் வருத்தம்:(

//ரவி யார் ? வடகரை அண்ணாச்சியா?//

நான்தான் அந்த ரவி:)

ஜோதிஜி சொன்னது…

நீங்களே கண்டு பிடியுங்களேன்.

ஒரு சின்ன க்ளூ.

40 வயதுக்கு மேல உள்ள கண்ணன் என்னைப் போன்றவர்கள் எல்லோரும் சேர்ந்து இப்போது மணற் கேணி பொறுப்பை சிறுசுகளிடம் ஒப்படைத்து உள்ளோம் என்றார்.

வெட்டிக்காட்டில் இருந்து பாஸ்டன் போய் இப்போது சிங்கையில் உங்களுடன் இருப்பவர்.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோதிஜி said...

நீங்களே கண்டு பிடியுங்களேன்.

ஒரு சின்ன க்ளூ.

40 வயதுக்கு மேல உள்ள கண்ணன் என்னைப் போன்றவர்கள் எல்லோரும் சேர்ந்து இப்போது மணற் கேணி பொறுப்பை சிறுசுகளிடம் ஒப்படைத்து உள்ளோம் என்றார்.

வெட்டிக்காட்டில் இருந்து பாஸ்டன் போய் இப்போது சிங்கையில் உங்களுடன் இருப்பவர்.//

நீங்க ரொம்ப லேட்......டு அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். பைத வே கோவிக்கு 40 வயது இல்லை :) ப்ரொபைல் நிழல்படம் அண்மையில் தருமி வந்த போது எடுத்தது தான்.

a சொன்னது…

நல்ல பகிர்வு கோவி சார்...

ம.தி.சுதா சொன்னது…

இவற்றை பார்க்க பொறாமையாக இருக்கிறது. இத்தனை அறிவாழிகளையும் ஒன்றாக சந்திக்கும் என் ஆசை ஓர் நாள் நிறைவேறும்.

Karthick Chidambaram சொன்னது…

மகிழ்ச்சியான நிமிடங்கள் உங்கள் அனைவருக்கும். அருமை கோவி அண்ணா.

கோவி.கண்ணன் சொன்னது…

//என். உலகநாதன் said...

'டேய்...... ஒக்காள ஓழி'

கோவி சார்,

இந்த வரியை எடுத்துடுங்க. படிக்க ஒரு மாதிரி இருக்கு.//

சொன்னவரே படிச்சுப் பார்த்துட்டு பின்னூட்டம் போட்டு இருக்கிறார். எழுதும் போது எனக்கும் கொச்சையாகத் தோனவில்லை, சொற்கள் எதுவாக இருந்தாலும் எதற்காகச் சொல்கிறோம் என்பதில் தான் அதன் பொருள் இருப்பதாக நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அபி அப்பா said...

சூப்பர்! இருவருக்கும் திடீரென அறிவித்தே பத்துக்கும் மேல பதிவர் கூட்டமா? சபாஷ்!

ஆனா கோவியாரே இராகவன் அண்ணாவை நான் நேர்ல பார்த்தா ஒரே கடி கடிச்சு கொதறிடுவேன்னு சொல்லி வையுங்க. கும்பகோணம் வரை வந்துட்டு ஒரு போன் கூட பண்ணலை. நான் அவரு கிட்ட பேசமாட்டேன். நீங்களே சொல்லிடுங்க!//

அதென்னமோ உங்களைப் பார்த்தா தலைதெறிக்க ஓடனும் என்பதால் ஓடி பயிற்சி செய்யாதவர்கள் உங்களை பார்க்கத் தயங்குறாங்கன்னு நினைக்கிறேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழரசி said...

சந்தோஷமாக இருக்கு படித்ததும் உங்களை பார்த்ததும் இதில் பாரதி அண்ணா இருவரை தான் எனக்கு தெரியும்...anyhow happy to see u frnds..happy frndship day//

பாராட்டுக்கு மிக்க நன்றி தமிழரசி

கோவி.கண்ணன் சொன்னது…

//ரவிச்சந்திரன் said...

நல்ல பகிர்வு கோவியாரே!

நண்பர் சங்கரபாண்டியை நான்கு வருடங்கள் கழித்து சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!//

உங்கள் இருவரது பகிர்வுகளை நாங்களும் அறிந்து கொண்டோம்



//ரவி யார் ? வடகரை அண்ணாச்சியா?//

நான்தான் அந்த ரவி:)//

தெரியாமல் போச்சே....... :)

கோவி.கண்ணன் சொன்னது…

// ராம்ஜி_யாஹூ said...

thanks for sharing, thanks for all bloggers//

வலைப்பதிவர்கள் எல்லோருடைய பதிவுக்கும் பின்னூட்டம் போட்டு ஊக்கமளிக்கிறீர்கள். மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// Karthick Chidambaram said...

மகிழ்ச்சியான நிமிடங்கள் உங்கள் அனைவருக்கும். அருமை கோவி அண்ணா.//

அண்மையில் தொடர்ச்சியாக எனது இடுகைகள் அனைத்திற்கும் பின்னூட்டமிடும் தம்பி கார்திக், பாரட்ட சொற்கள் இல்லை. நன்றி நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// ம.தி.சுதா said...

இவற்றை பார்க்க பொறாமையாக இருக்கிறது. இத்தனை அறிவாழிகளையும் ஒன்றாக சந்திக்கும் என் ஆசை ஓர் நாள் நிறைவேறும்.//

கண்டிப்பாக சந்திப்போம். நானும் எதிர்பாராமல் பலரை அவர்களது இடத்திற்கே சென்று சந்தித்து இருக்கிறேன். எதுவும் நடக்கும்

ஜெகதீசன் சொன்னது…

இருவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி!
:)

அபி அப்பா சொன்னது…

\\அதென்னமோ உங்களைப் பார்த்தா தலைதெறிக்க ஓடனும் என்பதால் ஓடி பயிற்சி செய்யாதவர்கள் உங்களை பார்க்கத் தயங்குறாங்கன்னு நினைக்கிறேன்.
:)\\

ரொம்ப சந்தோஷம்.

ஜோதிஜி சொன்னது…

பைத வே கோவிக்கு 40 வயது இல்லை :

ஆமா உண்மை தெரிஞ்சாகனும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அபி அப்பா said...

\\அதென்னமோ உங்களைப் பார்த்தா தலைதெறிக்க ஓடனும் என்பதால் ஓடி பயிற்சி செய்யாதவர்கள் உங்களை பார்க்கத் தயங்குறாங்கன்னு நினைக்கிறேன்.
:)\\

ரொம்ப சந்தோஷம்.//

சும்மா கலாய்ச்சேன்....ரென்சன் ஆகாதிங்க அபி அப்பா.........

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிஜி said...

பைத வே கோவிக்கு 40 வயது இல்லை :

ஆமா உண்மை தெரிஞ்சாகனும்.//

இல்லேன்னா அதுக்குக் குறைவாகவோ மிகுதியாகவோ இருக்கலாமுனு பொருள்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜெகதீசன் said...

இருவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி!
:)//

மெத்த மகிழ்ச்சி

ஜோதிஜி சொன்னது…

இல்லேன்னா அதுக்குக் குறைவாகவோ மிகுதியாகவோ இருக்கலாமுனு பொருள்.


கீளீன் போல்ட்டுடுடுடுடுடுடுடுடுடுடுடு

Ravichandran Somu சொன்னது…

ஜோதிஜி,

//இல்லேன்னா அதுக்குக் குறைவாகவோ மிகுதியாகவோ இருக்கலாமுனு பொருள்.
:)//

கோவியார் எனக்கு அண்ணன்:))))

சிநேகிதன் அக்பர் சொன்னது…

சந்திப்பு சிறப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

ஆஹா... ரொம்ப அருமையான சந்திப்பு.. மகிழ்ச்சியான தருணங்களை அழகாக பகிர்ந்துள்ளீர்கள் கோவி அண்ணே..

அனைவரையும் கேட்டதாக சொல்லவும்.. வாழ்த்துகள்.

ராவணன் சொன்னது…

பல நூற்றாண்டுகள் சிங்கையில் இருந்தாலும் எனது பார்வைக்கு வரவில்லை.நன்றாக இருக்கட்டும்.
நிழலில் நிழலாக இருப்பவனுக்கு ஒன்றும் தெரியாது?

ரேஸ்கோர்ஸ் ரோடு அஞ்சப்பர்தான்...!

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//சிங்கைப் பதிவர்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்து வந்த இந்த இரண்டு அன்பு உள்ளங்களைச் சந்தித்தது எங்கள் அனைவருக்குமே மிக்க மகிழ்ச்சியாக அமைந்தது//

உண்மைதான்...

PB Raj சொன்னது…

ஹலோ
நானும் தான் கொஞ்சம் எழுதுகிறேன்

என்னையும் கொஞ்சம் கவனிக்க

PB Raj சொன்னது…

நானும் இங்கதான் இருக்கேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ராயல் ராஜ் said...

ஹலோ
நானும் தான் கொஞ்சம் எழுதுகிறேன்

என்னையும் கொஞ்சம் கவனிக்க//

வாங்கப் பழகுவோம் !
:)

josephdotpaulrajatgmaildotcom க்கு ஜோசப்புக்கு மின் அஞ்சல் போடுங்க

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்