பின்பற்றுபவர்கள்

17 ஆகஸ்ட், 2010

விரைவாக வளரும் மதங்கள் ஒரு பார்வை !

மனிதர்களில் இனம் என்பது உடல் அமைப்பு மற்றும் நிறங்களினால் தவிர்க்க முடியாத ஒன்று. இன ஆளுமைகளை தக்கவைத்துக் கொள்ள எடுக்கப்பட்ட முதன்மையான உத்திகளில் ஒன்று மதம் மற்றொன்றுன்று இனம் சார்ந்த பொருளாதாரம். பொருளாதாரத்தில் மேம்பட்டு தன் இனத்தை முன்னிறுத்துவர்கள் யூதர்களைத் தவிர்த்து தற்போதும் எவருமே இல்லை. மற்ற இனங்கள் தங்கள் ஆளுமைக்கு பக்க பலமாக மதங்களை ஏற்படுத்தி வளர்த்துக் கொண்டன. இன வளர்ச்சி என்பது மக்கள் தொகையைவிட அது கைப் பற்றும் நாடுகளைப் பொருத்ததே என்பது என் எண்ணம். அவ்வாறு இனம் பரவும் பொழுது அங்குள்ள பகுதிகளை ஆளுமைக்குக் கொண்டுவர அது சார்ந்த மதங்களை அப்பகுதியில் பரப்புவது இன ஆளுமை சார்ந்த நிலைத்தன்மையை ஏற்படுத்தும் என்பதே இனம் சார்ந்த மதங்களின் நம்பிக்கை. மதங்கள் இனங்களைக் கடந்தது என்று மதப் பற்றாளர்கள் கூறிக் கொண்டாலும் எந்த ஒரு மதத்தின் ஆளுமையும் அதை ஆக்கியோர்களின் பிடியில் மட்டுமே இருக்கும் என்பது நடைமுறை கண்கூடு. மதம் என்பதே அதை உருவாக்கிய இனங்களில் பாதுக்காப்பு கவசம் என்றும் சொல்லலாம். மற்றபடி மதத்தில் கூறப்படும் கதைகள், கோட்பாடுகள், வேதங்கள் ஆகியவை அதை பின்பற்றோவோருக்கான இனிப்பு முலாம்கள் மட்டும் தான்.

இன்றைக்கு பெரிய மதங்கள் எனப்படுவை இந்திய மதங்களான இந்து மற்றும் பவுத்தம் மற்றும் வளைகுடா பகுதியில் வளர்ந்த கிறித்துவம் மற்றும் இஸ்லாம். கத்தோலிக்க ரோமன் தலைமையகத்தின் தலைமை ஆளுகைக்குக் கட்டுப்படாதவர்கள் தனியாக பிரிந்ததே பிராட்டஸ்டாண்ட் எனப்படும் கிறித்துவ மதம், இவர்கள் வெளியே தாங்கள் தான் உண்மையான கிறித்துவர்கள் என்பார்கள். அதே போன்று இன அடிப்படையில் இஸ்லாம் சியா சன்னிப் பிரிவாக பிரிந்துகிடக்கிறது. பவுத்த மதத்தில் தலைமைகள் என்று எதுவும் இல்லாவிட்டாலும் பரவிய ஆசிய நாடுகளில் தனித்தனியாக செல்வாக்குடன் அந்தப்பகுதி பழக்கவழக்கங்களை மதக் கொள்ளையாகி வைத்திருக்கிறது. இந்து மதம் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. கிழக்கு ஆசியாவில் பிலிப்பைன்ஸ் தவிர்த்து பெரிய அளவிலான செல்வாக்குகளை கத்தோலிக்க கிறித்துவ மதம் பெறவில்லை என்றாலும் கனிசமாக பிராட்டஸ்டாண்ட் கிறித்துவகளும், கத்தோலிக்க கிறித்துவர்களும் உள்ளனர்.

இந்தோனேசியா, மலேசியா, புருனோ ஆகியவை இஸ்லாமியர்கள் மிகுந்த நாடு என்றாலும் கிட்டதட்ட அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஒரே இனம் சார்ந்தவர்கள், அரசர்கள் அல்லது மக்கள் தலைவனை பின்பற்றி அவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக மாறி இருக்கக் கூடும். ஆப்பிரிக்காவில் ஆங்கிலேய, போர்த்துகீசிய ஆளுகையில் இருந்த கீழ் பகுதி நாடுகளில் கிறித்துவமும், மேற்பகுதி நாடுகள் வளைகுடாவை ஒட்டி இருப்பதால் இஸ்லாமும் பரவி இருப்பது இயல்பானது. தென் அமெரிக்காவில் இடம் பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்கள் என்பதால் அங்கு கிறித்துவம் பரவி இருந்ததும் இயல்பானது. மற்றபடி அமெரிக்க நாடுகளில் இருக்கும் கருப்பர்களில் இஸ்லாம் பரவிய விதம், வெள்ளையர்களின் கருபர் மீதான வெறுப்பினால் கருப்பர்கள் இஸ்லாமுக்கு மாறினார்கள் என்பதற்கு குத்துச்சண்டை வீரர் முகமதலி உள்ளிட்டோர் சாட்சி. ஒரு கருப்பர் பாதிரியாராக இருக்கும் சர்சுகளில் வழிபட வெள்ளையர் விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட கருப்பர்களை வெள்ளையர்கள் என்றுமே மதித்ததில்லை என்பது அன்மைய ஒபாமா வரவுக்கு முன்புவரையிலான வரலாறு. கருப்பர்களை கிறித்துவத்திற்குள் தக்கவைத்துக் கொள்ள ஒபாமாவை வெள்ளையர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பது செப் 11 க்கு பிறகான நிலைமை. மற்றபடி வெள்ளையர்கள் சகிப்புத்தன்மையில் வளர்ந்துவிட்டார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏனென்றால் கருப்பர் ஒரு போப் ஆக முடியுமா என்பது பெரியதொரு விவாதமாக எங்குமே வெள்ளையார்களால் முன்னெடுக்கப் படவில்லை.


இன்றைய சூழலில் உலக மக்கள் தொகையில் கிட்டதட்ட 20 விழுக்காடு என்ற அளவில் மதம்சாராதவர்கள் மற்றும் சிறுமதங்கள் சேரதா தனி அமைப்பு மற்றும் ஒவ்வொரு பெரிய மதங்களின் மக்கள் தொகை இருக்கின்றன. இதில் வேகமாக வளரும் மதங்கள் என்று எதைச் சொல்லுவது ? மதங்கள் வளருவதற்கான சூழல் தற்போதைக்கு எதுவுமே இல்லை. எந்த ஒரு காலத்திலும் மக்கள் விரும்பி பெரிய கூட்டமாக ஒரு மதத்தில் சேர்ந்தது இல்லை. முதலில் மன்னன் மனம் மாறி மதம் மாறுவான், பிறகு மக்கள் அனைவரும் இனி அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்று அறிவித்துவிடுவான். இது தான் உலகில் மதங்கள் வளர்ந்த வரலாறு. மற்றபடி இந்தப் பகுதி மக்கள் அனைவரும் ஒரே நாளில் குறிப்பிட்ட வேதப் புத்தகங்களை கரைத்துக் குடித்து மனம் மாறி மதம் மாறினார்கள் என்ற வரலாறு எதுவும் கிடையாது, சிறு சிறு பகுதிகளில் அந்தப் பகுதி தலைவர்களை பின்பற்றி மதம் மாறினார்கள், இந்தியாவில் கிறித்துவமும் இஸ்லாமும் இப்படித்தான் பரவியது. பிற நாடுகளில் மக்கள் தலைவனை பின்பற்றி மாறினார்கள்.

இன்றைய சூழலில் தலைவர்களை பின்பற்றி மதம் மாறுவது என்பது நடைபெற வாய்ப்பில்லை, ஏனென்றால் மதங்கள் என்பது தனிமனித விருப்பம் என்பதை தலைவர்கள் ஓரளவு உணர்ந்தே இருக்கிறார்கள், தான் விரும்பும் மதம் சார்ந்த கொள்கைகளை மாற்றிக் கொண்டு மதம் மாறி தன்னை பின்பற்றுவோரையும் மாற்றும் திறன் மதங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். அப்படியும் மதமாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது, நலிவடைந்தோரை, நசுக்கப்படுவர்களை அணுகி அத்தகைய மாற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும் அப்படி மாறியவர்கள் பொருளாதார ரீதியிலும் மத ரீதியிலும் நல்ல நிலையை அடையும் நம்பிக்கையை எந்த ஒரு மதமும் தரவில்லை. இன்றைய சூழலில் மதங்களை விட்டும், மத நம்பிக்கைகளை விட்டும் வெளியேறுபவர்களின் எண்ணிக்கையே மிகுதி. முன்பெல்லாம் நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்றால் எதாவது ஒரு மதத்தைச் சொல்லுவார்கள். தற்பொழுது எனக்கு மதங்களின் மீது பற்று இல்லை, நம்பிக்கை இல்லை என்று சொல்லுவோர் எண்ணிக்கையும் நானறிந்த வகையில் கனிசமாகவே இருக்கிறது.

இவற்றையும் மீறி மதங்கள் வளர்வதாக எண்ணிக்கை அடிப்படையில் காட்டுவது குறிப்பிட்ட மதங்களில் பிறப்பு விழுக்காடு மிகுந்து இருந்தால் (higher birth rates ) மட்டுமே என்பதாக விக்கிபீடியா கூறுகிறது. பிறப்பு விகிதப்படி அனைத்து மதங்களுமே தாங்கள் வளர்வதாகக் கூறிக் கொள்கிறதாம், ஆனால் இஸ்லாம் தவிர்த்து பிறப்புகள் பற்றிய அளவுகோள் எந்த மத்திலும் கட்டுப்பாடாக இல்லை, அப்படியும் எனக்கு தெரிந்து இந்திய அளவில் இந்தகாலத்தில் இருகுழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளும் இஸ்லாமியர்கள் எண்ணிக்கையும் மிகக் குறைவே.

7 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

இந்தியாவில் கிறித்துவமும் இஸ்லாமும் இப்படித்தான் பரவியது
////

WHT ABOUT HINDU ????

கோவி.கண்ணன் சொன்னது…

//WHT ABOUT HINDU ????//

வெள்ளையர்கள் இந்தியாவில் இந்துமதத்தினர் என்று கணக்கெடுக்கும் போது ,யார் யார் கிறித்துவ - இஸ்லாமியர் இல்லையோ அவர்களெல்லாம் இந்துக்கள் என்றார்கள், இந்துக்கள் - இதில் பவுத்தர், சமணர், சீக்கியரும் அடக்கம் (சமாதி)

priyamudanprabu சொன்னது…

இதில் பவுத்தர், சமணர், சீக்கியரும் அடக்கம் (சமாதி)
//
I LIKE THAT

ITS OK

BEFORE THAT WHO AM I(YOU) ?

'பரிவை' சே.குமார் சொன்னது…

அன்பு நண்பரே...

உங்கள் வலைப்பூ பற்றிய பகிர்வை வலைச்சரத்தில் இன்றைய எனது தித்திக்கும் தமிழ் என்ற கட்டுரையில் கொடுத்துள்ளேன். அந்த பகிர்வை படிக்க...

http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_17.html

கண்ணன் சார் நீங்கள் படித்து பின்னூட்டம் இட்டுவிட்டீர்கள். இருந்தாலும் மரியாதை நிமித்தமான தகவல் இது.

நன்றி.

சிங்கக்குட்டி சொன்னது…

விசா, காதல் வசதிகள் என்று பிற சலுகைகள் மூலம் ஒருவர் மீது திணிக்க படுவது மதமாகாது, அது அந்த மனிதரின் பரிதாப நிலையை மட்டுமே குறிக்கும்.

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

பல தளங்களில் பார்வையை செலுத்தச் செய்யும் விரிவான சிறு பதிவு ....
அப்புறம்...
குழந்தை எப்படி சார் இருக்கிறார் ...
அன்பின் வாழ்த்துக்கள் உங்களனைவருக்கும் ....

'பசி'பரமசிவம் சொன்னது…

மதங்கள் வளர்ந்த விதம் பற்றிய தங்களின் ஆய்வு [சுயமானது] ஆழமானது.

மதம் மாறியவர்கள் பெற்ற பயன் ஏதுமில்லை என்று தாங்கள் குறிப்பிடுவது, மதம் மாற நினைப்பவர்களுக்கான ஓர் எச்சரிக்கை!

இன்றைய மக்களின் மன நிலையைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

மக்கள் நலனை மனதில் கொண்டு, நன்கு சிந்தித்து இப்பதிவை வழங்கியிருக்கிறீர்கள்.
நெஞ்சார்ந்த பாராட்டுகள் கண்ணன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்