பின்பற்றுபவர்கள்

5 ஆகஸ்ட், 2010

கொஞ்சம் தமிழக அரசியல் !

மெஜாரிட்டிக்கு எத்தனை சீட் வேண்டும் என, குழந்தையிடம் கேட்டால் கூட கூறிவிடும். தி.மு.க.,வுக்கு ஆதரவளிக்கும் 36 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட இல்லை. ஆனால், 15 எம்.பி.,க்களை வைத்து மத்தியில் ஐந்து மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர். இதில் யார் தியாகி என்றால், காங்., தான். - ஈவிகேஎஸ் இளங்கோவன்

மெஜாரிட்டி மைனாரிட்டி பற்றி வகுப்பெடுக்கிறார் இளங்கோவன், சென்ற முறை மத்திய அரசும் கூட இதே மைனாரிட்டி நிலையில் தான் இருந்தது,
இடையில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வுகளுக்கு பிறகு பாஜகவிற்கு குஜராத் தவிர பிற மாநிலங்களில் செல்வாக்கு குறைய, காங்கிரஸ் அறுதிப் பெரும்பாண்மை என்ற நிலையை அடைய திணறி கடைசியாக இன்றும் கூட கூட்டணி தயவில் தான் மத்திய அரசே நடைபெறுகிறது. இந்திராவிற்கு பிறகு காங்கிரசின் நிலைமை கூட மைனாரிட்டி தான். மொத்தம் உள்ள 543 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் இவர்களால் 360 தொகுதிகளை எட்டிப் பிடிக்க முடியவில்லை, சென்ற முறை காங் பெற்ற இடங்கள் 262 (அதாவது மொத்தத் தொகுதிகளில் பாதிக்கும் குறைவே) இது 2004 ஆம் ஆண்டு வாக்கு விகிதத்தில் 3.96 விழுக்காடுகளாம் சென்ற முறை அவர்கள் பெற்ற இடம் வெறும் 218 அவரகளை விட பாஜக 37 இடங்கள் குறைவு, உதிரி கட்சிகளின் துணையுடன் அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி ஆசை காட்டி மைனாரிட்டி ஆட்சியைத்தான் காங்கிரஸ் 2004ல் நடத்தியது, அதையே சற்று கூடுதலான எண்ணிக்கையில் தற்போதும் தொடர்கிறது, இருந்தாலும் காங்கிரஸ் மைனாரிட்டி அரசு தான்.

40 ஆண்டுகளாக நாங்கள் காத்திருக்கிறோம். இன்னும் எங்களால் காத்திருக்க முடியும். உங்களால் பதவி இல்லாமல் இருக்க முடியுமா? - இளங்கோவன்

தமிழகத்தின் திராவிடக் கட்சிகள் உடையாவிட்டால் கடந்த 40 ஆண்டுகளுக்குள் காங்கிரஸ் தமிழகத்தில் காணமலேயே போய் இருக்கும், எம்ஜிஆரை ஆதரிப்பதாக அவர் முதுகில் ஏறி கனிசமான இடங்களைப் பெற்றுக் கொண்டு தமக்கு செல்வாக்கு இருப்பாதாகக் காட்டிக் கொண்டு கிட்ட தட்ட பாமக பாணியிலான தேர்தல் காலக் கூட்டணிகளில் தான் காங்கிரஸ் தமிழ் நாட்டில் நிலைத்திருக்கிறது. திமுக, அதிமுக மாறி மாறி கூட்டணிக்குள் நுழைந்தே வந்திருக்கிறகு காங்கிரஸ், மாறி மாறி கூட்டணி அமைக்கிறார் என்பதற்காக மருத்துவர் இராமதாசை பச்சையாக (மாநில)தேர்தல் விபச்சாரி என்று குறிப்பிடுவோர் மறந்தும் கூட அதே நடைமுறையை பின்பற்றும் காங்கிரசை தேசிய தேர்தல் விபச்சாரி என குறைத்துச் சொல்வதில்லை. என்னைப் பொருத்த அளவில் கூட்டணி நடைமுறைகள், கொள்ளைகள் என்ற அளவில் எதிலுமே ஒத்துவராமல் வெறும் லாப நோக்கில் கூட்டணி அமைப்பதில் பாமகவிற்கும் காங்கிரசிற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. பாமகவை கூட்டணிக்குள் இழுத்துவராவிடில் அந்தக் கட்சி காணாமல் போகும், கிட்ட தட்ட அதே நிலைமை தான் தமிழக காங்கிரசிற்கும். 40 ஆண்டுகள் மட்டுமல்ல இன்னும் 400 ஆண்டுகள் போனாலும் காங்கிரசிற்கான தனிச் செல்வாக்கு வளர்வதற்கு தமிழகம் இடம் தராது, காரணம் மொழிக்கு முதன்மைத்துவம் கொடுக்க விரும்பாமல் தேசியம் என்ற பெயரில் மாநில மொழிகளை அழித்துவருவதும் மற்றும் மாநில நலன் என்பதில் காங்கிரசின் கொள்கைகள் தென் மாநில மக்களுக்கு ஆதரவான நிலையில் இல்லை. நரசிம்ம இராவ் தவிர்த்து தென் மாநிலங்களைச் சேர்ந்த ஒருவருக்கு பிரதமர் வாய்ப்புகள் கொடுக்கமால் தொடர்ந்து இந்திரா குடும்ப நலன் சார்ந்தே இயங்குவதால் தென் மாநிலங்கலில் காங்கிரஸ் வளர்வது கடினம், அதைத் தெரிந்து கொண்ட காங்கிரஸ் முடிந்த மட்டில் மாநில கட்சிகளை உடைத்து அவர்களில் ஒருவரின் முதுகில் ஏறி ஆட்சி நடத்தி வருவது தான் தென் மாநிலங்கள் அனைத்திலும் நடைபெறுகிறது, அதுவும் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளுமே சமமான பலத்தில் இருப்பதால் காங்கிரசால் ஆட்சி பிடிக்க முடியவில்லை. முடிந்த மட்டில் அவர்களுடன் தயவில் பாராளுமன்ற தொகுதிகளைக் கைப்பற்றுவதே அவர்களுக்கு லாபமான ஒன்று தான்.

இன்றும் நடைபெறும் இளங்கோவன் போன்றோர் மீனவ படுகொலைக்கு வாய்திறக்காமல் இருப்பது தொடர்ந்து கொண்டு இருக்கிறது, ஈழம் போன்றவற்றில் காங்கிரசின் நடைமுறைகள் வெறுப்பையே ஏற்படுத்தி இருக்கிறது என்பது அவர்களின் தனிப்பட்ட தேர்தல் தோல்வியின் பாடம். கருணாநிதியிடம் ஆட்சியில் பங்கு கேட்கும் இளங்கோவன் சென்ற முறை கூட்டணியில் இடம் பெற்ற போது ஜெவிடம் பங்கு கேட்டதாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்த அளவில் இரண்டு திராவிடக் கட்சிகளுமே காங்கிரசை கழட்டி விடுவது நல்லது. ஆனாலும் கிடைத்த வரையில் லாபம் என்பதான தமிழக அரசியல் சூழலில் அதுவும் நடைபெறாது என்பதால் இளங்கோவன் போன்றோர் தமிழ்நாட்டில் எந்த திராவிடக் கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் வாய்ச்சொல் பேசிக் கொண்டு தான் இருப்பார், அது அவர்களின் இருப்பை நிருபனம் செய்யச் பேசும் வெறும் சவடால் தான்.

ஒரு மைனாரிட்டி (மத்திய) அரசைச் சார்ந்தவர் மற்றொரு (மாநில)மைனாரிட்டி ஆட்சியை 'மைனாரிட்டி அரசு' என்று சுட்டுவது சரியான நகை முரண்.

16 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இடையில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வுகளுக்கு பாஜகவிற்கு குஜராத் தவிர பிற மாநிலங்களில் செல்வாக்கு குறைய,//

என்ன கொடுமை பாருங்க!

ரயில எரிச்ச எடத்துல நிறைய ஜெயிக்கிறாங்க!

எரிக்காத எடத்துல அதனாலயே தோக்குறாங்க!


ஆரோக்கியமாத் தெரியல!

:(((

Unknown சொன்னது…

ம‌த்திய‌ அர‌சு மைனாரிட்டி அர‌சு என்று சொல்ல‌க்கூடாது என்று எந்த‌ காங்கிர‌ஸ் த‌லைவ‌ரும் சொல்ல‌வில்லை. க‌லைஞ‌ர் தாராள‌மாக‌ ம‌த்திய‌ அர‌சை மைனாரிட்டி காங்கிர‌ஸ் அர‌சு என்று அழைக்க‌ட்டும். அனைத்து அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுமே தேர்த‌ல் விப‌ச்சாரிக‌ளே, சில‌ரை ம‌ட்டும் குறை சொல்வ‌தில் அர்த்த‌மில்லை.

Unknown சொன்னது…

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

vijayan சொன்னது…

காங்கிரஸ் கட்சியும் பிளவுபடாமல் இருந்தால் 1971 லியே ஆட்சிக்கு வந்திருக்கும்.திருடனுக்கு அம்மாவாசை கிடச்ச மாதிரி தி மு க விற்கு இந்திரா கிடைச்சார். திண்டுக்கல் இடை தேர்தலில் காமராஜ் காங்கிரஸ் க்கு அடுத்த இடத்தில் தான் கருணாநிதி இருந்தார்.

கோவி.கண்ணன் சொன்னது…

// vijayan said...

காங்கிரஸ் கட்சியும் பிளவுபடாமல் இருந்தால் 1971 லியே ஆட்சிக்கு வந்திருக்கும்.திருடனுக்கு அம்மாவாசை கிடச்ச மாதிரி தி மு க விற்கு இந்திரா கிடைச்சார். திண்டுக்கல் இடை தேர்தலில் காமராஜ் காங்கிரஸ் க்கு அடுத்த இடத்தில் தான் கருணாநிதி இருந்தார்.//

திருடன், அமாவாசை உங்க ஒப்பீடு பிடிச்சிருக்கு :)

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

கோவி சார் !

மத்தியில் காங்கிரஸ் மைனாரிட்டி அரசு தான் என்பதனால் மாநில தி மு க அரசு மைனாரிட்டி அரசாக இல்லாமல் போய் விட முடியாது தானே !

// 36 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட இல்லை. ஆனால், 15 எம்.பி.,க்களை வைத்து மத்தியில் ஐந்து மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர் //
இதற்க்கு நமது பதிவுலக தோழர் உடன்பிறப்பு கூட பதிலளிக்க சற்று தயங்குவார் .நீங்கள் அளித்துள்ளீர்கள்.நன்றி!

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இடையில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வுகளுக்கு பாஜகவிற்கு குஜராத் தவிர பிற மாநிலங்களில் செல்வாக்கு குறைய,//

என்ன கொடுமை பாருங்க!

ரயில எரிச்ச எடத்துல நிறைய ஜெயிக்கிறாங்க!

எரிக்காத எடத்துல அதனாலயே தோக்குறாங்க!


ஆரோக்கியமாத் தெரியல!

:(((//

பெரும்பான்மையினர் வெறிச் செயல் எப்போதும் அவர்கள் பக்கத்து நியாமாகவே நினைக்கப்படும், வெளியில் இருந்து பார்ப்பவர்கள் எது சரி என்று உணர்ந்து கொள்வர். குஜராத்தில் இந்துவெறியர்கள் பெரும்பான்மை.

கோவி.கண்ணன் சொன்னது…

// V said...

ம‌த்திய‌ அர‌சு மைனாரிட்டி அர‌சு என்று சொல்ல‌க்கூடாது என்று எந்த‌ காங்கிர‌ஸ் த‌லைவ‌ரும் சொல்ல‌வில்லை. க‌லைஞ‌ர் தாராள‌மாக‌ ம‌த்திய‌ அர‌சை மைனாரிட்டி காங்கிர‌ஸ் அர‌சு என்று அழைக்க‌ட்டும். அனைத்து அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுமே தேர்த‌ல் விப‌ச்சாரிக‌ளே, சில‌ரை ம‌ட்டும் குறை சொல்வ‌தில் அர்த்த‌மில்லை.//

கூட்டணியில் 'பங்கு' வகிக்கும் திமுக சொல்லுதோ இல்லையோ, பார்லியில் சுஷ்மாசுவராஜ் சோனியா காங்கிரஸ் ஆட்சியை மைனாரிட்டி அரசு என்று சொல்லலாம் என்றே கருதுகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//இதற்க்கு நமது பதிவுலக தோழர் உடன்பிறப்பு கூட பதிலளிக்க சற்று தயங்குவார் .நீங்கள் அளித்துள்ளீர்கள்.நன்றி!//

அவங்க காங்கிரசை விமர்சிக்க தயங்குவாங்க ஏனென்றால் அவங்களை விட்டு கோபம் கொண்டு காங்கிரஸ் பின்னால பிச்சிக்கிட்டு போய்விடும்.
:)

ISMAIL சொன்னது…

Ungalin karuthu koncham yosikka vendiya visayam.

Elangovan pona electionil Thotrathal ippadi pesukirar. Rajyasabha seat vanga muyandra pothum M.K. anumathikka villai.

TBR. JOSPEH சொன்னது…

என்ன கொடுமை பாருங்க!

ரயில எரிச்ச எடத்துல நிறைய ஜெயிக்கிறாங்க!

எரிக்காத எடத்துல அதனாலயே தோக்குறாங்க!//

அங்க இருக்கறவங்களுக்கு ரயில எரிச்சது பெரிய தப்பா தெரியல. இங்க இருக்கற நமக்கு அது ஒரு கொடுஞ்செயலா தோனுது. இதுவும் ஒரு இந்துத்வா மனப்பான்மைதான்.

TBR. JOSPEH சொன்னது…

Elangovan pona electionil Thotrathal ippadi pesukirar. Rajyasabha seat vanga muyandra pothum M.K. anumathikka villai.//

இதுவும் இளங்கோவின் தற்போதைய தாக்குதல்களுக்கு ஒரு காரணமாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அவர் ஒரு கோமாளி என்பது அனைவருக்கும் தெரியும், சோனியாவையும் சேர்த்து. ஆகவே அவருடைய பேச்சை யாரும் கண்டுக்கொள்ளப் போவதில்லை.

ராஜரத்தினம் சொன்னது…

//பெரும்பான்மையினர் வெறிச் செயல் எப்போதும் அவர்கள் பக்கத்து நியாமாகவே நினைக்கப்படும், வெளியில் இருந்து பார்ப்பவர்கள் எது சரி என்று உணர்ந்து கொள்வர். குஜராத்தில் இந்துவெறியர்கள் பெரும்பான்மை.//

இது என்னங்க பெரிய வம்பா போச்சு!
இந்தியாவிலும் அவர்கள்தான் பெரும்பான்மை. தன் மதம் அழியக்கூடது என்பவன் வெறியன் அல்ல. மற்றவன் மதம் அழியனும்னு நினைகிறவந்தான் வெறியன். அதை இந்துக்கள் புனித புத்தகங்கள் எதுவும் சொன்னதாக தெரியவில்லை. இருந்தால் ஆதாரம் தரவும். ஆனால் அன்னிய மதங்களின், நாத்திகர்களின், அடிநாதமே அதான். வெறியர்கள் நீங்கள்தான்.

தமிழ் குரல் சொன்னது…

தமிழ் நாட்டில் 2006 தேர்தலில் 49 இடங்களில் போட்டியிட்ட சோனியா-ராகுல் காங்கிரஸ் 35 இடங்களில் வெற்றி பெற்றது... அவர்கள் துப்பிருந்தால் தனியாகவே போட்டியிட்டு சில தொகுதிகளில் வெற்றி பெற்று திராவிட கட்சி ஆட்சியை ஆதரித்து பங்கு கேட்கட்டும்...

1988இல் ராசிவ் எனும் நவீன நீரோ மன்னன் தமிழ் நாட்டில் வந்து புரண்டு... புரண்டு ஓட்டு பொறுக்கி... மூப்பனார் தலைமையில் தனித்து 200 இடங்களில் போட்டியிட்ட போது... 1989 தேர்தலில் வெறும் 26 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றார்கள்... அதுவும் தனித்து நின்ற ஜெவை விட 2 இடங்கள் குறைவு...

அந்த நவீன நீரோ மன்னன் ராஜிவ் பிடுங்க முடியாத தமிழ் நாட்டு மயிரை அவன் மகன் எனும் உலக பொறுக்கி பிடுங்க போகிறான்... சொல்லி கொண்டுள்ளனர்...

அரசியலில் நேர்மையில்லை... தர்மம் இல்லை என மருத்துவர் ராமதாசுவையும்... இடது சாரிகளை நிற்க வைத்து சாட்டையால் அடிக்கும்... அதிபுத்திசாலிகளின் கண்கள்... கேடு கெட்ட... பாசிசமான... பார்ப்பனீயத்தை நேரடியாக... மிக தீவிரமான கொள்கையாக கொண்ட... பாஜகவையோ... அதே பார்ப்பன பாசிசத்தை மறைமுகமான.. கொள்கையாக கொண்ட.. காங்கிரஸ் கட்சியையோ... கண்டு கொள்ளாத குருடர்களாகி விடுவார்களே?

டெல்லியில் இருந்து... பார்ப்பன பாசிசவாதிகள்... ராஜிவ்... ராகுல் என எந்த பெயரில் வந்தாலும் தமிழனின் மயிரை பிடுங்க முடியாது... வேண்டுமானால்... அப்பன் ராஜிவ் குடித்ததை போலவே... மகன் ராகுலும்... ஜெவின் மூத்திரத்தை குடித்து விட்டு... பார்ப்பனீய மகிழ்ச்சியில் இருந்து கொள்ளலாம்...

கோவி.கண்ணன் சொன்னது…

//
டெல்லியில் இருந்து... பார்ப்பன பாசிசவாதிகள்... ராஜிவ்... ராகுல் என எந்த பெயரில் வந்தாலும் தமிழனின் மயிரை பிடுங்க முடியாது... வேண்டுமானால்... அப்பன் ராஜிவ் குடித்ததை போலவே... மகன் ராகுலும்... ஜெவின் மூத்திரத்தை குடித்து விட்டு... பார்ப்பனீய மகிழ்ச்சியில் இருந்து கொள்ளலாம்...//

உங்கள் கடைசி வரிகள் ஏற்புடையது அல்ல. ஈழத்தமிழர்களின் இன்னல் வாழ்வை நினைக்கையில் வரும் ஆற்றமை வெளிப்பாடுகள் என்பதாக எடுத்துக் கொள்கிறேன்

தமிழ் குரல் சொன்னது…

//
டெல்லியில் இருந்து... பார்ப்பன பாசிசவாதிகள்... ராஜிவ்... ராகுல் என எந்த பெயரில் வந்தாலும் தமிழனின் மயிரை பிடுங்க முடியாது... வேண்டுமானால்... அப்பன் ராஜிவ் குடித்ததை போலவே... மகன் ராகுலும்... ஜெவின் மூத்திரத்தை குடித்து விட்டு... பார்ப்பனீய மகிழ்ச்சியில் இருந்து கொள்ளலாம்...//

//*
உங்கள் கடைசி வரிகள் ஏற்புடையது அல்ல. ஈழத்தமிழர்களின் இன்னல் வாழ்வை நினைக்கையில் வரும் ஆற்றமை வெளிப்பாடுகள் என்பதாக எடுத்துக் கொள்கிறேன்
*//

ஈழ தமிழன் மட்டுமல்ல... தமிழ் நாடு தமிழனும்... அறிவிழந்து... மானமிழந்து... பார்ப்பனீய ஹிந்திய அதிகாரதிற்கு உட்பட்டு அடிமை ஏவல் நாயாக இருக்கிறான்... ஹிந்தியா எனும் பார்ப்பன அதிகார அமைப்பு இருக்கும் வரை... அது தமிழனை மிதித்து கொண்டே இருக்கும்...

என்ன... பெரியாரும்... அண்ணாவும்... சொல்லி கொடுத்த அறிவை கொண்டு... பார்ப்பனீயத்திற்கு அடங்காமல் இருக்கிறான்...

நீங்கள் சொல்லும் ஆற்றாமையின் பதிலை அடுத்த தேர்தல் கூட்டணியில் பாருங்களேன்... ஜெ... ராகுல் கூட்டணி ஏற்பட வாய்ப்பு மிக அதிகம்...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்