பின்பற்றுபவர்கள்

17 ஆகஸ்ட், 2009

மாண்புமிகு மருத்துவ சமூகம் !

உலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால் அதை மறுப்பவர்கள் எவருமே இருக்க முடியாது. இனவேறுபாடு எதுவும் இல்லாமல் அல்லது மிகக் குறைவான ஒரு நாட்டில் ஒன்று போல் முக அமைப்பு கொண்ட மக்கள் தனித்தனியாக பிரித்து வைத்துக் கொண்டு அவர்களில் ஒரு பகுதியினரை பிறப்பை, தொழிலை வைத்து தாழ்வு படுத்தி,அடிமையாக்கி வைத்திருக்க கண்ணுக்குத் தெரியாத சாதி என்கிற மாயவலையை பிண்ணி அதில் சிக்க வைத்து வாழ்வியல் சதி(ரா) ஆட்டம் ஆடும் நிலை எந்த ஒரு நாட்டிலும் இல்லாத வழக்கம். அப்படி செய்பவர்களுக்கு முற்பட்ட, முற்போக்கு சமூகம் என்கிற உயர்ந்த பெயரையும். பாதிக்கப்பட்டவர்களை கிழான சமூகம், தீண்டத்தகாதவர்கள் என்றும் சொல்லி வந்திருப்பது 'தெய்வம் பிறந்ததாகக் வாய்கூசாமல்' சொல்லப்படும் 'பாரத திரு' நாட்டில் இன்றும் கூட நடை முறையில் தொடர்வதும், அதை தடுக்க முனையும் மனிதம் போற்றுவோருக்கு சா'தீயம்' பெரும் அறைகூவல் தான்.

***

சலூன் கடை என்றாலே சிறுவர்களாக இருந்த பொழுது அரைகுறை ஆடைகளுடன் பெண்களின் அங்கங்கள் நமக்கு அறிமுகமான இடம் என்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். சவரத்தொழிலாளிகள் என்பவர்கள் யார், ஏன் அவர்கள் அந்த தொழிலை செய்துவருகிறார்கள் ? அவர்களுக்கு அது குலத்தொழிலா ? என்கிற கேள்வியை நம்மில் கேட்டுக் கொண்டவர் குறைவே. எந்த ஒரு இனத்திலும் குலத்தொழிலாக இல்லாத பலத் தொழில்கள் இந்தியாவில் குலத்தொழில்களாகத் தொடர்வதில் சவரத் தொழிலும் ஒன்று. சவரத் தொழிலாளிகள் யார் ?

அம்பட்டர், பரியாரி, பார்பர், நாவிதர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கபடும் மருத்துவர் என்னும் ஆதிமருத்துவர் சமூகம் எப்படி ஏற்பட்டது என்று பார்த்தால், பண்டைய இந்தியாவில் முடிகளை மழித்துக் கொள்ளும் பழக்கம் பெளத்தர்களுக்கும், சமணர்களுக்குமே உரிய வழக்கம், அவர்கள் தவிர்த்து பார்பனர்கள் தலை உச்சியைத் தவிர்த்து தலையை மழித்துக் கொள்ளும் வழக்கம் உடையவர்களாக இருந்தனர். உடலில் பூணூல் அணியாத காலங்களில் பார்பனர்கள் தங்களின் தனி அடையாளத்திற்காக உச்சிக் குடுமி வைத்து சிரைத்துக் கொள்வது வழக்கம். பூணூல் போட்டுக் கொள்வது ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகே வந்திருக்க வேண்டும் என்று வரலாற்று, இலக்கிய ஆர்வளர்கள் சொல்லுகிறார்கள். பூணூல் பற்றி எதுவும் குறிப்பிடாத வள்ளுவரும், மழித்தலும் நீட்டலும் வேண்டாம்' என்று அறிவுறித்தியது பார்பனர்களின் வெளிப்பகட்டைக் கண்டிப்பதற்குத்தான் என்றும் உரையாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மருத்துவத்தை பண்டைய தமிழகத்தில் பெளத்தர்களும், சமணர்களும் செய்து வந்ததாகக் கூறுகிறார்கள், சித்தர்களில் பலர் சமண சித்தர்கள் என்றும் இந்து, சைவ சமய ஆதிக்கங்களினால் அவர்கள் பின்னாளில் இந்து சமயம் சார்ந்தவர்களாகக் காட்டப்படுவதெல்லாம் வெறும் கட்டுமானங்களே என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மருத்துவம் பார்க்கும் வழக்கம் இருந்தது, பெரும்பாலும் சமணர்களே மருத்துவக் கலையில் தேர்ந்தவர்களாகவும் அறுவை சிகிச்சை முதற்கொண்டு மருத்துவத்தில் அனைத்தையும் செய்யக் கூடியவர்களாகவே இருந்தனர். பெளத்த, சமணர், பார்பனர் தவிர்த்து மழித்துக் கொள்ளும் பழக்கம் வேறொருவருக்கு இருந்ததில்லை. சமணர்களின் ஆதிக்கம் வீழ்த்தப்பட்ட காலத்தில் சிறைபிடிக்கப்பட்ட சமணர்கள் அனைவரும் மருத்துவத் தொழிலுடன் சவரம் செய்வதையும் செய்யுமாறு பணிக்கப்பட்டனர். அது அப்படியே ஆண்டு 1900 வரை தொடர்ந்தது.

காயங்கள் ஏற்பட்ட பகுதியில் மருத்துவம் செய்ய அந்த இடங்களில் மயிரையும் மழிப்பது வழக்கம் என்பதால் அன்றைய மருத்துவர்கள் அனைவருமே சவரம் செய்வதையும் தெரிந்து வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பார்பனர் மற்றும் சைவ வேளாளர் (பிள்ளைமார்) சமூகத்தால் பக்தி இயக்கம் என்ற பெயரில் சமணர்கள் வீழ்த்தப்படுவதற்கு முன்பு பார்பனர்கள் தங்களுக்கு தாங்களே சிரைத்துக் கொள்வது தான் வழக்கம். வீழ்த்தப்பட்ட சமண சமூகத்தில் மருத்துவம் தெரிந்தவர்களை மருத்துவர்கள் என்கிற சாதிப் பிரிவாக ஆக்கி, மருத்துவம் தெரியாதவர்களை வண்ணார்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகமாக மாற்றி ஊருக்கு ஒதுக்குப் புறம் குடி இருக்க அனுமதிக்கப்பட்டதாகத்தான பண்டைய சாதியம் தோற்றம் வளர்ச்சி பற்றி ஆய்ந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவெங்கும், புத்த சமண மத வீழ்ச்சி என்பது ஆதிசங்கரருக்கு பிறகு ஏற்பட்டவையே, அவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்களாக தொடர்ந்ததும் ஆதிசங்கரருக்கு பிறகு நடந்த வரலாற்று நிகழ்வே.

இப்படியாக உருவான மருத்துவ சமூகம் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் உயர்சாதியினருக்கு சேவகம் செய்ய வேண்டி இருந்ததால், தீண்டாமை ஆதிக்கத்தின் பாதிப்புக்கு அவர்களும் ஆளானார்கள்.

மருத்துவர்களின் சமூகக் கடமைகளாக அவர்களுக்கு முற்பட்ட சமூகம் 'விதிக்கப்பட்டவை' எவை என்று பார்த்தால்,

* தேவையான போது தலை, முகச் சவரம் செய்துவிடுவது
* இல்லச் சடங்கின் போது ஹோமம் செய்ய வரும் பார்பனருக்கு உதவுதல்
* பூப்பு எய்தும் சடங்கு, சாவு ஆகியவற்றை பிறர்க்கு சொல்லிவிடுதல், பூப்பு எய்திய பெண்ணுக்கு மூலிகை சார் கலந்த குளிக்கும் நீரை ஆயத்தம் செய்து தருவது
* "மாப்பிள்ளை சவரம்" - திருமணத்தின் முதல் நாளின் போது மணமகனின் பிறப்பு உறுப்பு பகுதியில் முடி நீக்குதல், அப்போது அவனுக்கு எதேனும் ஆண்மை தொடர்பான நோய்கள் இருக்கிறதா என்று கண்டறிந்து சொல்லுதல்
* மணப்பெண்ணுக்கு சேலைக் கட்டிவிடுவது (மனுதர்மப்படி பால், பட்டுப் புடைவைக்கும் தீட்டு கிடையாதே !)
* ஆண் / பெண் இருபாலருக்கும் மாதம் ஒருமுறை மறைவிட மழித்தல்
* பெண்களுக்கு மகப்பேறுக்கு உதவுதல்
* சவத்துக்கு சவரம், சவத்தை குளிப்பாட்டி விடுவது, சவ ஊர்வலத்தில் சங்கு ஊதுதல், சவ அடக்கத்தில் உதவுதல்

இவைகளுக்கு "ஊர்ச் சோறும்", கூலியாக நெல் போன்ற தானியங்கள் வழங்கப்பட்டதாகவும், அவை இல்லாதவர்கள் பணம் கொடுப்பதும் வழக்கமாம். இந்த தொழிலில் ஈடுபடும் அந்த சமூகத்து ஆண்கள் மருத்துவர்கள் என்றும் பெண்கள் மருத்துவச்சிகள் என்றும் சொல்லப்பட்டனர். அவர்களில் பெண்கள் மருத்துவம் மிகுதியாக தெரிந்து வைத்திருந்ததால் 'பாட்டி வைத்தியம்' என்கிற சொல் கூட பெண்கள் சிறப்பாக மருத்துவம் பார்த்ததால் ஏற்பட்ட சொல் என்றே சொல்கிறார்கள்.

ஆங்கிலேயே மெக்கல்லே கல்வித் திட்டத்தினால் அலோபதி மருத்துவம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, குலத்தொழில் இறைவனால் விதிக்கப்பட்டது என்றும் பிறவற்றை செய்வது இறை விதிக்கு ஏற்புடையது அல்ல என்று கூறிவரும் பார்பனர்கள் மருத்துவத் தொழிலில் கிடைக்கும் பணம் புகழ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தற்போது ஏனைய பிற சமூகமும் ஆங்கில மருத்துவத் தொழிலுக்கு மாறிவிட்டார்கள். 12 நூற்றாண்டுக்கும் மேலாக மருத்துவம் பார்த்து வந்த ஆதி மருத்துவர்கள், அரசாங்க சட்டதிட்டம் காரணமாக மருத்துவத் தொழிலை தொடர முடியாமல் தங்களுக்கு தெரிந்த மற்றொரு தொழிலான சவரத்தொழிலை வேறு வழியின்றி தொடர்கின்றனர். அந்தத் தொழிலையும் கூட நகரச் சூழலில், அதற்கு ஒரு உ(ய)ரிய விலையை நிர்ணயம் செய்து 'ப்யூட்டி பார்லர்' என்ற பெயரில் முற்பட்ட சமூகம் வைத்து செய்து கொண்டு வருகின்றன.

நாம் நம் உடலைத் தொட அனுமதிப்பது மருத்துவர்களுக்கும், சவரத்தொழிலாளிக்கும் மட்டுமே. அந்த இருவேலையையும் ஒருவராக செய்துவந்த, தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட மருத்துவர் சமூகம் முடித்திருத்ததை மட்டுமே செய்துவருகிறது. அதிலும் கிராமங்களில் தலித் பிரிவினருக்கு சவரம் செய்பவர்கள் மேல்சாதிக்காரர்களுக்கு சவரம் செய்ய தடுக்கப்பட்டு இருக்கிறது


நூல் சான்று : ஆதி மருத்துவர் சவரத் தொழிலாளராக்கப்பட்ட வரலாறு (160 பக்கங்கள், விலை ரூ 90/-)

கிடைக்கும் இடம் : வல்லினம், எண் 9, Y-ப்ளாக், அரசு குடியிருப்பு, இலாசுப் பேட்டை, புதுச்சேரி - 605 008, தொலைபேசி : 0413 - 2257151

நூலில் சில பகுதிகள் உயர்சாதிக் கொடுமைகளாக சொல்லப்படுபவகளை வாசிக்கும் போதே வாசிக்குபவர்களுக்கு இரத்த கொதிப்பை ஏற்படுத்தக் கூடியவை, அதனால் அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் முழுவதையும் தற்காலச் சூழலில் எழுதுவது தேவையற்றதாக நினைத்து பதிவில் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன், முழுவதும் அறிந்து கொள்ள நினைக்கும் சமூக ஆர்வலர்கள் நூலை வாங்கிப் படிக்கலாம்.

75 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

நானும் சில முடி திருத்தும் இடங்களில் ‘மருத்துவர்’ என்ற போர்டு பார்த்து இருக்கின்றேன். ஆச்சர்ய பட்டதுண்டு.

தேவன் மாயம் சொன்னது…

உண்மைதான்!!
காலம் ஒரு சமூகத்தை எப்படி மாற்றியுள்ளது!! நல்ல ஆக்கம்!!

பித்தனின் வாக்கு சொன்னது…

எஙகு எல்லாம் பார்ப்பனர்களை திட்ட முடியுமொ அங்கு எல்லாம் அவர்களை திட்டுங்கள் ஏன் என்றால் அவர்கள் தான் ஆட்டோவில் வீட்டுக்கு ஆள் அனுப்ப மாட்டார்கள், மத்தபடி உங்கள் கட்டுரை ஏற்புடையது.

நான் எங்கள் வீட்டு நாவிதரை அண்ணா என்றுதான் அழைப்பது வழக்கம், அவர்கள் வீட்டில் அவர்கள் மறுத்து கூட உணவு உண்டும் இருக்கிறேன்.

அவர்களூம் நானும் தாய் பிள்ளய்களாய் பலகியும் வருகிறொம், சமிபத்தில் கூட என் அப்பாவின் இறுதி காரியங்களை ஒரு மகனைப் போல் செய்தார்.

நாங்களும் பார்ப்பான் தான், உலகை நமதாய் பார்ப்பவர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//PITTHAN said...

எஙகு எல்லாம் பார்ப்பனர்களை திட்ட முடியுமொ அங்கு எல்லாம் அவர்களை திட்டுங்கள் ஏன் என்றால் அவர்கள் தான் ஆட்டோவில் வீட்டுக்கு ஆள் அனுப்ப மாட்டார்கள், மத்தபடி உங்கள் கட்டுரை ஏற்புடையது.//

பார்பனர்களை திட்டியதாக உங்களுக்கு எந்த வரிகள் தெரிகின்றன ?

அப்பாவி முரு சொன்னது…

மறுக்கவோ, பதில் சொல்லவோ முடியாத வார்த்தைகள்.

எப்பிடியெலாம் கோடு போட்டு கூறு போட்டிருந்திருக்காய்ங்க...

* கடிக்கலாம் வாங்க * சொன்னது…

நல்ல கருத்துக்கள். படித்து, புரிந்து கொண்டதை பிறருக்கு எளிமையாக புரியும் படி எழுத சிலருக்குத்தான் வரும். கோவி.கண்ணா சுருக்கென்று எழுதுகிறாய். உன் பணி தொடரட்டும்.

பிரபாகர் சொன்னது…

தெரியாத பல விஷயங்கள் இந்த நூலில் இருக்கின்றன. அறிமுகப்படுத்திய பாங்கு மிக அருமை. நன்றி கண்ணன்.

பிரபாகர்.

யாசவி சொன்னது…

Useful and informative post

impressive

Vidhoosh சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Jawahar சொன்னது…

கண்ணன் சார்,

ரெண்டு விஷயம் : முதலாவது-உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏன் கெட்ட பெயர் என்று நீங்கள் எழுதியிருப்பதைப் படித்தேன். நானும் ஓரிரு நாடுகள் பார்த்திருப்பதால் சொல்கிறேன் : கறுப்பர் வெளுப்பர் பாலிடிக்ஸ் எல்லா நாட்டிலேயும் இருக்கு. மனிஷனை மனிஷன் வெறுக்கிறது எல்லா இடத்துலேயும் இருக்கு. காரணங்கள்தான் மாறுது. எத்தனை பிரிவுகளோ அத்தனை காரணங்கள்.

ரெண்டாவது : இது ரொம்ப புதுத் தகவல். நன்றி. முடி அலங்கார நண்பர்களின் வீட்டுப் பெண்களை மருத்துவச்சி என்று சொல்வார்கள். அவர்கள் எல்லா இனத்தவர்கள் வீட்டிலேயும் பிரசவம் பார்ப்பார்கள்!

http://kgjawarlal.wordpress.com

நிஜமா நல்லவன் சொன்னது…

நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி!

கோவி.கண்ணன் சொன்னது…

//Jawarlal


கண்ணன் சார்,

ரெண்டு விஷயம் : முதலாவது-உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏன் கெட்ட பெயர் என்று நீங்கள் எழுதியிருப்பதைப் படித்தேன். நானும் ஓரிரு நாடுகள் பார்த்திருப்பதால் சொல்கிறேன் : கறுப்பர் வெளுப்பர் பாலிடிக்ஸ் எல்லா நாட்டிலேயும் இருக்கு. மனிஷனை மனிஷன் வெறுக்கிறது எல்லா இடத்துலேயும் இருக்கு. காரணங்கள்தான் மாறுது. எத்தனை பிரிவுகளோ அத்தனை காரணங்கள்.//

அது இனப் பூசல், அது இல்லாத நாடுகளே கிடையாது. ஆனால் ஒரே இனமான மான பக்கத்து வீட்டுகாரனை சாதிய முறையால் அவனை தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லித் தூற்றுவதும், தொட்டால் குளிப்பதும் கொடுமை. எந்த ஒரு நாட்டிலும் அதே இனத்தில் இல்லாத கொடுமை.

//ரெண்டாவது : இது ரொம்ப புதுத் தகவல். நன்றி. முடி அலங்கார நண்பர்களின் வீட்டுப் பெண்களை மருத்துவச்சி என்று சொல்வார்கள். அவர்கள் எல்லா இனத்தவர்கள் வீட்டிலேயும் பிரசவம் பார்ப்பார்கள்!

http://kgjawarlal.wordpress.com//

மருத்துவச்சிகள் எல்லா சாதிக்காரர்களுக்கும் மகப்ப்று பார்ப்பார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// Vidhoosh said...

கண்ணன். உங்கள் கட்டுரை நன்றாக இருக்கிறது.//

நன்றி !

// ஆனால், பார்பனர்கள் என்று ஜாதியை குறிப்பிட்டுக் கூறுவதால் உங்களுக்கு என்ன அதிகம் கிடைத்து விடப் போகிறது?//

பார்பனர்களை சாதியைக் குறிப்பிட்டு எழுதுவதில் என்ன தவறு, அப்படி ஒன்று இருப்பதாகத் தானே கூறப்படுகிறது, நடைமுறையிலும் இருக்கிறது.

//திருக்குறள் உவமையைச் சொல்கிறேன்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின். (280)//

அந்தணர் என்பவர் அறவோர் - என்பதில் அந்தணர் என்ற சொல் பார்பனரைக் குறிப்பதாக சிலர் பெருமையாக எழுதுவதில் கூட பலர் உடன்பாடு கொள்வது கிடையாது. எனவே மேற்கண்ட உங்கள் விளக்கம் பொதுவான ஒன்று தான். அந்தக் குறளை திருக்குறளில் சேர்க்க திருவள்ளுவர் விரும்பியதில் நோக்கம் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. மழித்துக் கொள்பவர்களும் சடை முடியை நீட்டிக் கொள்பவர்களும் வெளி வேசக்காரர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதையை அந்தக் குறள் சொல்கிறது.

//இதில் எதற்கு பார்பனர்களை இழுக்கிறீர்கள்? உரையாசியர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள், எந்தப் புத்தகம் என்று பெயரிட்டுக் கூறமுடியுமா?//

எனக்குத் தெரிந்த அல்லது நான் அறிந்த தமிழ் உரையாசிரியர்களில், திராவிட மொழிகளை ஆய்ந்து பலக் கட்டுரை எழுதியவர்களில் தேவ நேயப் பாவாணருக்கே முதல் இடம். தேவ நேயப் பாவணர்தான் திருக்குறளில் அந்தக் குறள் பார்பனர்களின் பகட்டைச் சாடுவதாக எழுதி இருக்கிறார். எங்காவது நூலகத்தில் 'வடமொழி வரலாறு பகுதி 1 & 2 ' என்னும் பாவாணாரின் நூல் கிடைத்தாலோ அல்லது பாவாணாரின் திருக்குறள் விளக்கம் கிடைத்தாலோ நீங்கள் படித்துப் பார்க்கலாம்

//அப்படி யாருமே முடி சிரிக்காமல் தாடியும், தலையுமாக இருந்து விட்டால் நீங்கள் இரசிக்கும் படியாக, சமத்துவம் ஏற்பட்டு விடுமா?

--வித்யா//

சமத்துவம் வேண்டும் என்பது என் ஆசையாக இருக்கட்டும், அப்படிக் கிடைக்கக் கூடாது என்று நினைப்பது உங்கள் ஆசையா ?

Jawahar சொன்னது…

கண்ணன் சார்,

'இனம்','ஜாதி' வித்யாசத் திருத்தலுக்கு நன்றி. நீங்க சொல்றது ரொம்ப சரி. ஜாதி லெவல்லே நின்னுட்டாங்களான்னு பார்த்தா அதுவும் இல்லே... அதுக்குள்ளேயும் கிளைப் பிரிவுகள்.. அதுலே உயர்வு தாழ்வுகள்..

Where the world is not fragmented by tiny walls...

என்கிற தாகூரின் கீதாஞ்சலி ஞாபகம் வருகிறது.

என்கிற தாகூரின் கீதாஞ்சலி ஞாபகம் வருகிறது.

காலத்தால் மாறாதது எதுவுமே இல்லே. அட்லீஸ்ட் காதலால் இதெல்லாம் மாறுதான்னு பார்க்கலாம்!

ஆதலினால் காதல் செய்வீர்!

http://kgjawarlal.wordpress.com

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...

மறுக்கவோ, பதில் சொல்லவோ முடியாத வார்த்தைகள்.

எப்பிடியெலாம் கோடு போட்டு கூறு போட்டிருந்திருக்காய்ங்க...//

பின்னூட்டத்திற்கு நன்றி அப்பாவி முரு


// * கடிக்கலாம் வாங்க * said...

நல்ல கருத்துக்கள். படித்து, புரிந்து கொண்டதை பிறருக்கு எளிமையாக புரியும் படி எழுத சிலருக்குத்தான் வரும். கோவி.கண்ணா சுருக்கென்று எழுதுகிறாய். உன் பணி தொடரட்டும்.//

ஜெ.கண்ணன்.....தங்கள் பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி !

// பிரபாகர் said...

தெரியாத பல விஷயங்கள் இந்த நூலில் இருக்கின்றன. அறிமுகப்படுத்திய பாங்கு மிக அருமை. நன்றி கண்ணன்.
//
பிரபாகர், பாராட்டுக்கு நன்றி !

//யாசவி said...

Useful and informative post

impressive

12:48 PM, August 17, 2009//

யாசவி மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//கண்ணன் சார்,

'இனம்','ஜாதி' வித்யாசத் திருத்தலுக்கு நன்றி. நீங்க சொல்றது ரொம்ப சரி. ஜாதி லெவல்லே நின்னுட்டாங்களான்னு பார்த்தா அதுவும் இல்லே... அதுக்குள்ளேயும் கிளைப் பிரிவுகள்.. அதுலே உயர்வு தாழ்வுகள்..

Where the world is not fragmented by tiny walls...

என்கிற தாகூரின் கீதாஞ்சலி ஞாபகம் வருகிறது.

என்கிற தாகூரின் கீதாஞ்சலி ஞாபகம் வருகிறது.



http://kgjawarlal.wordpress.com//

ஜவர்லால் சார், பின்னூட்டக் கருத்துகளுக்கும், தாகூரின் வரிகளைக் குறிப்பிட்டமைக்கும் மிக்க நன்றி !

//காலத்தால் மாறாதது எதுவுமே இல்லே. அட்லீஸ்ட் காதலால் இதெல்லாம் மாறுதான்னு பார்க்கலாம்!

ஆதலினால் காதல் செய்வீர்!//

திருமணம் ஆகதவர்களுக்குத் தானே !
:)

Vidhoosh சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
இளவட்டம் சொன்னது…

சிறந்த பதிவு .....இன்றைய காலகட்டத்தில் நகர சூழலில் வாழும் மக்களில் பெரும்பான்மையோருக்கு தங்கள் சாதியம் பற்றிய பெருமை இருக்கின்றது என்று India today சர்வே செய்து கூறியது நினைவுக்கு வருகிறது.இன்றும் கிராமங்களில் அக்குள் சிரைத்தல் வழக்கத்தில் உள்ளது...எனது சிறு வயதில் மருத்துவர்கள் உயர் சாதி என்று சொல்லபடுபவர்களின் வீட்டில் தினமும் இரவு உணவு கேட்டு நின்ற கொடுமையை நான் கண்டுஇருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Vidhoosh said...

பொது கட்டுரையில் ஜாதியை குறிப்பிட்டு எழுதுவதே நாகரீகமற்றதாகக் கருதுகிறேன். மருத்துவ சமூகத்தினரைப் பற்றிக் பேசும் போது அதன் பெருமைகளைப் பற்றி பேசிவிட்டு போவதுதான் நேர்மையான கட்டுரைக்கு அழகு. அதை விட்டு, இன்னமும், ஜாதியை பற்றி பேசி sympathy தேடுவது அழகல்ல.//

வித்யா மேடம், நேயைக் குணப்படுத்த அது எவ்வாறு ஏற்பட்டது என்று அறிவதன் மூலம் தான் தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியும். கிரிமிகளை செயல் இழக்க முடியாவிட்டால் மருந்து கொடுத்தாலும் எப்போதுவேண்டுமானாலும் தாக்கும். சிம்பத்தி யாரும் தேடவுமில்லை. "பார்பனர்கள் டெல்லியில் கழிவரையைக் கழுவி வாழ்க்கை ஓட்டுகிறார்கள், கை ரிக்ஷா ஓட்டுகிறார்கள்" என்றெல்லாம் பேப்பர் கட்டிங்க் வைத்து சென்ற ஆண்டுகளில் பலர் பார்பனர்களின் நிலமை கீழாகிவிட்டதே என்று கண்ணீர் வடித்தார்கள் ? அதெல்லாம் சிம்பதியா இல்லையா என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும், ஒரு பார்பனருக்கு மதிப்பெண் இருந்தும் இட ஒதுக்கிட்டு முறையால் இடம் கிடைக்கவில்லையே என்று சொல்வது சிம்பதியா இல்லையா ?
சாதி வளர்க்கும் சங்கங்கங்கள் ஏன் அந்த சாதியில் இருக்கும் ஏழைகளுக்கு உதவக் கூடாது, பார்பன ஏழைகளுக்கு பார்பனர்கள் நடத்தும் கல்லூரிகளில் இலவச இடம் கொடுக்கலாமே ஏன் செய்வது இல்லை. ஏழைகள் மீது சாதி அபிமானிகளுக்கு என்றுமே அபிமானம் இருந்தது இல்லை. வெறும் சாதிப் பெருமைக்காகவும், தனக்கான புகழுக்காகவும் பலரும் சாதியை தாங்கிப் பிடிக்கிறார்கள்

//தாடி வைத்தவர்கள் எல்லோரும் பெரியாரா? சடை முடிவைத்தவர்கள் எல்லோரும் அந்தணர்களா? இன்றும் கூட தாடி வைத்து ஏமாற்றும் கூட்டங்களில் பலவித சமூகத்தினரும் இருக்கின்றனர். அதற்கு பஜனை செய்பவரும் அனைத்து சமூகத்தினரும் இருக்கின்றனர்.//

குழுமனப்பான்மை என்னும் பொதுச் செயலில் தனிப்பட்ட ஒருவரின் சிறந்த நல்ல குணங்கள் சேர்க்கப்படுவதில்லை மேடம். நீங்கள் மிக நல்லவராக இருந்தால் உங்களை நல்ல மனிதர்கள் என்று சொல்வது பொருத்தமானது, ஆனால் நீங்கள் நல்ல மனிதராக இருப்பதற்கு நீங்கள் பார்பனராக பிறந்தது தான் காரணம் என்று எவரும் சொன்னால் அது அறிவீனம் தானே ?


//சமத்துவம் என்பது நம்மில் தான் இருக்கிறது கண்ணன். நான் என் சக மனிதனை, என்று மனிதனாகப் பார்கிறேனோ அன்றுதான் சமத்துவம் கிடைக்கிறது. இதை விட்டு, அன்று என்னை பார்ப்பான் இழிவு படுத்தினான், இன்று எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவனை இகழ்வேன் என்று கூறுவது எந்த விதத்தில் ஞாயம்?//

ஒருவருக்கு, அம்மா, அப்பா, தன்னுடைய திறமை என்ற மூன்றும் அடையாளமாக இருக்கும் போது தனிப்பட்ட சாதிய அடையாளத்தால் ஒருவர் சாதிப்பது என்ன ? சாதிப் பெருமை பிறரைத் தாழ்த்தவே என்பது பலரின் எண்ணம், அது உண்மையும் கூட, சாதிப் பெயரை பெருமைக்காக வைத்திருப்பவர்கள், துறக்க நினைக்காதவர்கள் தூற்றப்படுவதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. வீட்டுக்குள் சாதி இருந்தால் ஒரு பயலும் அதைக் கேள்வி கேட்கமுடியாது. ஆனால் சாதி என்பதே வீட்டிற்குள் இருப்பதற்காக அல்ல என்பது தானே உண்மை. உங்களுக்கு உங்கள் சாதி உயர்ந்தாகத் இருந்தால் அது வீட்டுக்குள் இருந்தால் யாரும் அதைத் தவறு என்றே சொல்லமாட்டார்கள்

// இன்றைக்கு எவ்வளவு படித்திருந்தாலும், 99.7% மார்க் வாங்கியிருந்தாலும், வெறும் 40% மட்டுமே மார்க் வாங்கி கோட்டாவில் ஜாதிச் சான்றிதழ்களோடு இன்னொருவர் வந்திருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக எனக்கு மருத்துவ சீட்டு மறுக்கப்பட்டுள்ளது? நான் வேறு துறையில் வெற்றி பெற்றாலும், தகுதி இருந்தும், அறிவை மதிக்காமல், ஜாதியை முன்னிறுத்துவது யார்?//

படிக்க வாய்ப்பு இருப்பவர்களால் மதிப்பெண் எடுப்பது பெரிய விசயமே இல்லை, படிக்க வாய்ப்பே இல்லாதவர்கள் தட்டு தடுமாறி மேலே வருவது தான் கடினமானது. மதிப்பெண்கள் வெறும் படிப்பை மட்டுமே குறிப்பது அல்ல, படிக்க கிடைக்கும் நேரமும் குறித்தது தான். படிப்பதைத் தவிர வேலை இல்லாத நீங்கள் எடுக்கும் மதிப்பெண்ணும், மாலை வேலையில் டீக்கடையில் எச்சில் இலை எடுத்துப் போட்டால் தான் படிப்பை தொடர முடியும் என்று இருப்பவனின் மதிப்பெண்ணும் ஒன்றாக இருப்பது தான் சரியான போட்டி என்றே நினைக்கிறீர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

// இன்னுமா ஜாதியை வைத்து வியாபாரம் பண்ணுவது? அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால், உங்களைப் போன்ற நல்ல பதிவர்களுமா இப்படி அடுத்தவரைத் தூற்றி பெருமை பட்டுக்கொள்ள வேண்டும்?
அடுத்தவன் fail ஆக்கப் பட்டுவிட்டதால், border pass ஆனவன் first rank என்று பெருமைப்பட்டுக் கொள்வது போல, இன்னொருத்தரை தூற்றுவதாலோ அல்லது தாழ்த்துவதாலோ அடுத்தவர் உயர்ந்து விட முடியாது.
//

சாதியம் உயர்வு, நான் உயர்ந்த சாதியில் பிறந்தேன் என்று தற்பெருமையாக என்று நினைப்பவர்களின் மன நிலை மாற வேண்டும் என்பதைத் தவிர்த்து என் எழுத்தின் வழியாக எதையும் நான் எதிர்பார்ப்பது இல்லை

// கை ஓங்கி இருப்பவர்கள் அடுத்தவரை தாழ்த்தலாம் என்றால், காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். ஆனால், நம் சந்ததியினர் அறிவை மட்டுமே போற்றவேண்டும் என்று விழைகிறேன். நம் முன்னோர்கள் தவறு செய்தார் என்பதற்காக நாமும் அதையே தொடர்வது கலாச்சாரமா?

அதிக இளைஞர்கள் படிக்கும் பதிவுலகில் இனியும் ஜாதியை முன் வைத்து/குறிப்பிட்டு பேசாதீர்கள்.

மிகுந்த வருத்தத்துடன்,
வித்யா
//

இதைத்தான் சொல்கிறேன், எதற்கெடுத்தாலும் விதி, ஆண்டவனால் விதிக்கப்பட்டது என்று சொல்லும் பார்பனர்கள் தங்களின் இன்றைய நிலமையை மட்டும் ஏன் ஆண்டவனால் ஏற்படுத்தப்பட்ட விதி என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், எல்லாம் ஆண்டவன் செயல் என்று தானே சொல்லி, நால்வர்ண பகுப்பு பகவான் கிருஷ்ணனால் ஏற்படுத்தப்பட்டது என்று பார்பனர்கள் சொல்லுகிறார்கள். இப்போது நீங்களே தாழ்ந்தவன் உயர்வதும், உயர்ந்தவன் தாழ்வதும் காலத்தின் கையில் என்று சொல்லுகிறார்கள். உடன்படுகிறேன். ஆனால் இவை எதார்த்தம் என்று உணர்ந்து கொண்டுள்ள நீங்கள் இதில் வருத்தப்படுவது ஏன் ?

Vidhoosh சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கோவி.கண்ணன் சொன்னது…

//திருவள்ளுவர் யாரையும் தாக்கி எழுதி இருப்பார் என்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை...இக்குறள் அறத்துப்பால் துறவறவியலில் வருகிறது என்று நினைக்கிறேன். இதில் பார்பான் எங்கே வருகிறான்? I am really surprised why this particular religion and wisdom is very often linked?//

வித்யா, திருவள்ளுவர் கூறுவது அறிவுரை அந்த அளவில் தான் அவை புரிந்துக் கொள்ளப்படுகிறது. அப்படி இல்லை என்றால் அந்தணர் என்பவர் அறவோர் என்பது மட்டும் புகழ்சியான சொல்லாக எடுத்துக் கொள்வது சரியா ?

//sympathy தேடுவது அழகல்ல என்பதை எல்லோருக்கும் தான் கூறினேன்.

மதிப்பெண் இருந்தும் சீட் கிடைக்கவில்லை என்று sympathy உண்டாக்குவதால் அல்லது ஐயோ போச்சே என்று புலம்புவதாலோ, அந்த 40% மருத்துவனை தூற்றுவதாலோ, இன்றைக்கு என் நிலை மாறி, நான் மருத்துவச்சி ஆகப் போவதில்லை என்றே கூறுகிறேன்.//

:) அது தான் எதார்த்தம், உங்களுக்கு மருத்துவப் படிப்பு கிடைக்காவிட்டாலும் உங்களுக்கு ஆலோசனைச் சொல்லி வேறொரு பிரிவில் செல்வீர்கள், ஆனால் என்னுடைய சமூகத்தில் நான் மருத்துவனாக ஆவேனா ? எங்கள் ஊரின் முதல் மருத்துவனாக ஆவேனா என்ற கனவில் ஓரளவு படித்து வருபவர்களின் நிலை ? இட ஒதுக்கீட்டால் ஓரளவு சாத்தியமாகிறது. நானும் இன்னும் 200 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு அமுலில் இருக்க வேண்டும் என்று சொல்வதில்லை. ஒரு சமூகத்தில் ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் மேலே வந்து அவர்களுடைய சந்ததிகளும் படிக்க மூன்று தலைமுறைகளுக்கு அந்த வாய்ப்பு கிட்டினால் தான் முடியும். உங்களுக்கெல்லாம் படிப்பே வராது என்று சொல்லியே சில சமூகங்களை தாழ்த்தி வந்திருக்கிறோம். மரபியலில் நமக்கு படிப்பே வராது என்றே அவர்கள் சிந்தனை இருக்கும் வரை அது அவர்களை பாதித்து இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஒரு அப்பன் படித்துவிட்டால் மகனும் அறிவாளியாகவே தொடர்ந்து படிப்பான் என்பது நம் எண்ணம், ஆனால் அவர்களின் பரம்பரைத் தன்மை, மரபியல் மாற குறைந்தது மூன்று தலைமுறைக்கேனும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றே கூறுகிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//btw, அவன் இன்றும் medical pass செய்யவில்லை. இவன் ஜாதி, இவனுக்கு சீட் வேண்டுமானால் வாங்கி கொடுத்தது, ஆனால் பாஸ் பண்ண, பாவம் இவனுக்கும் உதவவில்லை என்பதில் வருத்தமிருந்தாலும், நான் என் வழியில் இன்றைய நிலையை அடைய, வெற்றி பெற, என் ஜாதி எங்குமே எனக்கு உதவவில்லை என்பதில் எனக்கு பெருமைதான்.//

தனது சாதியில் இருக்கும் ஏழைகளுக்கே உதவ முடியாவிட்டால் சாதி சங்கங்களால் என்ன பயன் ? அவனவன் படிப்பே அவனவனுக்கு உதவும், சாதிகள் வெறும் வீன்பெருமைக்கானது என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். மனித கருமுட்டை இந்த சாதி விந்து சேர்ந்தால் தான் கருத்தறிக்கும் என்று எதுவும் உடலியல் விதிகள் இருக்கிறதா என்ன ? உறுப்பு தானங்களுக்கும், இரத்த தானங்களும் சாதியால் முடிவு செய்யப்படுவதில்லை, இரத்த வகையால் தான் முடிவு செய்யப்படுகிறது, எந்த ஒரு சாதிக்கும் தனிப்பட்ட இரத்த வகை இருப்பது போல் தெரியவில்லை :)

//நல்லவனாகவோ, அறிவாளியாகவோ இருக்க ஜாதி முக்கியமில்லை என்று நிறைய பேர் நிரூபித்து, வாழ்ந்து காட்டியாகி விட்டது.

நான் உயர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ளும் அற்ப ஆசை எல்லோருக்கும் உண்டு. அதற்கு பார்ப்பான் என்று குறிப்பிட்ட பிறப்பு தேவையில்லை. ஒருவேளை, மற்றவர் அடுத்தவனை உயர்ந்தவன் என்று கருதினால், ஒன்று உண்மையாகவே அவன் உயர்ந்தவனாக இருக்கவேண்டும், அல்லது நினைப்பவனுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கவேண்டும்.//

இவ்வளவு தூரம் பொருமையாக எழுதும் நீங்கள் 'பார்பனர்' என்ற சொல்லாடலுக்கு வருத்தப்படுவதில் இருந்தே உங்கள் மனது சாதியத்தால் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை நான் சொல்லத் தேவை இல்லை. இந்தப் பதிவும் கூட இன்னும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைப் பற்றிய பதிவுதான், அதில் பார்பனர்களைப் பற்றி ஒரு சில வரிகளே உண்டு, அவர்கள் குப்புறத் தள்ளிவிடப்பட்டு விழுந்தே கிடக்கிறார்கள், அவர்களை விட்டுவிட்டு பந்தயத்தில் தவறி விழுந்தவர்களைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். கீழேயே கிடப்பவர்களை ஓட பயிற்சி கொடுக்காவிட்டாலும் எழுந்து நிற்க வைக்க முயற்சித்தால் ஒருவேளை அவர்களே நடக்க, பின் ஓடுவதற்கு முயற்சிப்பார்கள். ஆனால் உங்கள் கவலை ஓடியவர் விழுந்துவிட்டார்களே என்பதாக மட்டுமே இருக்கிறது :)

கோவி.கண்ணன் சொன்னது…

//இன்று சாதிப் பெருமை பேசுபவர்களை விட, சாதி இல்லை என்று பேசுபவர்கள்தான், அதிகம் சாதியைப் போற்றிக் (பற்றிக்) கொண்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன். நிஜமாகவே ஏதும் நடக்கிறதோ இல்லையோ, குறைந்த பட்சம், வியாபாரம் ஓடவேண்டும் என்ற ஆசையில்.//

கொலைகாரனும், மருத்துவனும் (அலோபதி மருத்துவன்) கையில் கத்தி வைத்திருக்கிறான், இருவரும் ஒன்றே என்கிறீர்களா ? :)

//அய்யகோ, இதுவா பார்பனர்களின் இன்றைய நிலை என்று வருத்தப் படவில்லை, உங்கள் வாதம் ஜாதி ஒழியவேண்டும் என்றா இல்லை பார்பனர்கள் ஒழிய வேண்டும் என்று புரியாத வருத்தம் தான். btw, அவர்கள் தன வேலையை பார்த்துக் கொண்டு போய் கொண்டே இருக்கிறார்கள்.//

"பார்பனர்கள்" ஒழிய வேண்டும் என்று யாருமே சொல்லவில்லை, அந்த அடைமொழிகள் அவர்களை பிறரிடமிருந்து அன்னியப்படுத்துகிறது, அவர்களாக முன் வந்து அந்த அடைமொழியை நீக்கிக் கொண்டால் தான் உண்டு. எனக்குத் தெரிந்து பார்பனக் குடும்பத்தில் பிறந்த சிலர் தாங்கள் பார்பனர் என்று சொல்லிக் கொள்வது கிடையாது, அதில் விருப்பம் அற்றவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்களை யாரும் பார்பனராக நினைப்பதையும் அவர்கள் விரும்பதில்லை.

//இப்போது படிக்க வாய்ப்பில்லை என்று கூறுவதை எல்லாம், நம்புகிறீர்களா? தினமும் ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் படித்தாலே போதும், வேண்டிய அறிவு பெற. கைத் தொழில் அல்லது பகுதி நேர வருமானம் (அதைச் செய்தால்தான் சாப்பாடே என்று இருந்தாலும் கூட) அதைப் பற்றிய வருத்தம் ஏன்? பெருமைக்குரியதுதானே?//

வாய்ப்புகள் கிடைக்கலாம், இருக்கிறது ஆனால் படிக்க வேண்டுமென்றால் வருமானத்துக்கு வழி தேடிவிட்டு தானே வர முடியும் ? இன்னும் கூட பலகிராமங்களில் நீயெல்லாம் படிச்சு என்ன செய்யப் போகிறாய் ? படிச்ச திமிறில் முறைக்கிறாயா என்று கேட்கும் வழக்கமெல்லாம் உண்டு, இன்னும் 2 மூன்று தலைமுறைகளாவது மாறினால் தான் அனைவருக்கும் படிப்பின் அருமை தெரியும்

//என்னோடு படித்த என் நண்பன், காலையில் நாலு மணி முதல் பால் பாக்கெட் போடுவது, பேப்பர் போடுவது, சைக்கிள் கடையில் வேலை செய்வது போன்ற வேலைகள் செய்து தானே படித்தான். நாங்கள் எல்லோரும் பணம் சேர்த்துக் கொடுத்தாலும் வாங்கவே மாட்டான். எங்கள் பள்ளியில் என்றும் அவன்தான் first rank. அரை மார்க்கில் முந்தி விடுவான். இன்று அவன் ஒரு IPS.//

மிகச் சிலர் படிப்பில் இருக்கும் ஆர்வம் காரணமாக முனைப்புடன் படிப்பார்கள் அது போன்றவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். அது ஒருவரின் பிறவியில் ஏற்படும் தனித் தன்மை, சில பிறவிக் கலைஞர்களுக்கு ஓவியம், கலைகள் இயல்பாக வரும், அதைப் பொதுப்படுத்தி உதாரணம் காட்ட முடியாது.

//வருத்தமெல்லாம் ஏற்கனவே சொன்னது போல், தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ஆவதில்தான். தடி கை மாறினால் அவனை இவன் அடிப்பது தொடருமோ என்ற வருத்தம்தான். இப்படியே ஒருவரை ஒருவர் தாக்குவதால், நல்லவரான நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் ஏதும் விளையப் போவத்தில்லை என்பதில்தான்.//

தடியை யார் வேண்டுமானாலும் எடுக்கட்டும் ஆனால் தடி எடுக்கும் உரிமை இவர்களுக்குத் தான் இருக்கிறது, இவர்களுத்தான் தகுதி இருக்கிறது என்கிற கட்டுமானத்தால் தான் பிரச்சனையே. மாற்றம் ஏற்படாமல் தான் இன்றைக்கு "கட் ஆப் மார்க் விகிதம்" அனைத்துப் பிரிவுகளிலும்(எஸ்ஸி/எஸ்டி, எம்பிசி, பிசி, ஓசி) மிகுதியாகி இருக்கிறதா ?

//எல்லோரும் உயரவேண்டும் (மனதால்) என்றே விரும்புகிறேன். நோய் என்று எதை கூறுகிறீர்கள்? மருந்து எது என்று புரியவில்லை?
நோய்க்கு மருந்திடுகிறேன் என்று புண்ணை புரையோடப் பண்ணிவிடாதீர்கள்.//

மருந்திடுவது நோயை நீக்கத்தான், மருந்தில் பலனில்லாத நோய்கள் தான் உறுப்புக்களையே அழித்துவிடும். சாதியமே நோய் என்று குறிப்பிட்டேன்

//பெரியக் கோட்டை சிறியதாக்க வேண்டும் என்றாய் அதை விட பெரிய கோடுதான் போடவேண்டும். அந்தக் கோட்டை அழிக்க கூடாது.//

பெரியக் கோடு சிறியக் கோடு எல்லா சமூகக் கேடுதான் P. கோடுகளை அழித்துவிட்டால் எந்த கேடும் இல்லை.

//தங்களைத் தாழ்ந்தவர் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள், தம் நிலை மாற அவர்கள் தாழ்வு மனப்பான்மையை விட்டுவிட்டு உயர வேண்டுமே தவிர, அடுத்தவரைத் தாழ்த்துவதால், உயர்ந்துவிட முடியுமா என்ன?

--வித்யா//

இப்போது யாரும் தங்களை தாழ்ந்தவர்கள் என்று நினைப்பது கிடையாது, சாதி சங்கங்கள் மலிந்ததற்கு அவரவர் சாதி உயர்ந்தது என்று நினைப்பதும் காரணம். சாதிச் சொல்லி தாழ்த்துவதை அரசாங்கமும் அனுமதிப்பதில்லை.

Radhakrishnan சொன்னது…

முடி திருத்தும் தொழிலாளிகள் 'மருத்துவர்' என ஏன் அழைக்கப்படுகிறார்கள் என்பதற்கான நல்லதொரு விளக்கமும் ஆராய்ச்சியும். 'மருந்து' என்பது 'மருத்து'விலிருந்து திரிந்து வந்ததாக இருக்குமோ?!

நல்லதொரு இடுகை.

பின்னூட்டங்களின் மூலமும் பல விசயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது.

''என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?''

அகல்விளக்கு சொன்னது…

//மருத்துவத்தை பண்டைய தமிழகத்தில் பெளத்தர்களும், சமணர்களும் செய்து வந்ததாகக் கூறுகிறார்கள், சித்தர்களில் பலர் சமண சித்தர்கள் என்றும் இந்து, சைவ சமய ஆதிக்கங்களினால் அவர்கள் பின்னாளில் இந்து சமயம் சார்ந்தவர்களாகக் காட்டப்படுவதெல்லாம் வெறும் கட்டுமானங்களே என்றும் குறிப்பிடுகிறார்கள்.//

உண்மைதான்...

வெட்டி வேலு சொன்னது…

கண்னண் சார், உங்களோட பதிவு நல்லா இருந்தது... ஆன உங்க பின்னூட்டம் :( நான் பிடிச்ச முயலுக்கு 3 காலுன்னு அடம் பிடிக்குறேங்க ... அவங்க வித்யா மேடம் பொதுவா பேசுறத கூட கை, கால், மூக்கு, வச்சு அப்படியே மாத்துறேங்களே... துங்குறவங்கள எழுப்பலாம்... துங்குற மாதிரி நடிக்குறவங்கள ???

மனசை தொட்டு சொல்லுங்க இப்ப எந்த சாதில ஜாதி சங்கம் இல்லாம இருக்கு... அவங்க அவங்க நிலமைக்கு ஏத்த மாதிரி அவங்க அவங்க சாதி பெருமையை பேசுறங்க ...

பார்பனர்கள் தப்பு பண்ணியிக்காங்க... ஆன அதையே காலம் காலமா சொல்லி ஏன் சாதி வெறியை கிளப்புறேங்க...

Vidhoosh சொன்னது…

well kannan. there is no point in discussing this further. you may please delete my comments. thanks.
-vidhya

Unknown சொன்னது…

சரி கண்ணா சார்....
நீங்கள் இதில் முக்குலத்தோர், முதலியார், செட்டியார்களை ஏன் விட்டு விட்டீர்கள்.....
ஊருக்கு இளிச்சவாய் பிள்ளையார்கோவில் ஆண்டி மாதிரி....பதிவுலக இளிச்சவாய் பார்ப்பனர்கள் போல....
வேலுநாயக்கர் மாதிரி...சாதிய ஒழிப்போம் சாதிய ஒழிப்போம் ன்னு சொல்லிட்டு..அப்படியே அடுத்த சாதிய (உங்களுக்கு திரிஞ்ச ஒரே சாதி பார்ப்பனர்கள் தான் போல )திட்டினா எங்கேருந்து சாதி ஒழியறது????

S.Gnanasekar சொன்னது…

சவரத் தொழிலாளிகள் யார் ?
அம்பட்டர், பரியாரி, பார்பர், நாவிதர், குடிமகன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கபடும் மருத்துவர்கள் கிராமத்தில் இன்னும் இருக்கிறார்ரகள் கிரமத்தில் முன்பு பெண் அல்லது பையன் (மாப்பிள்ளை) பார்க்க போனால் இவர்களை பற்றி தெரிந்து கொள்வதற்க்கு முதலில் பையன பற்றி தெரிய அம்பட்டண்ட்டயும், பெண் பற்றி தெரிய வண்ணாத்தியிடம் கேட்டால் தெரிந்து விடும் அவ்வளவும் அவர்களுக்குத் தெரியும்.
பார்பனர்களை சாதியைக் குறிப்பிட்டு
இவன்களை ஏன் உயர்த சாதி என்று குறிப்பிட்டு நாம் ஏன் நம்மளை தாழ்த்திகிடனும்......

ஆ.ஞானசேகரன் சொன்னது…

உண்மைகள்... இதற்கு இந்த சமுகம்தான் காரணம். குறிப்பிட்ட ஒரு சமுகத்தினரை சொல்வதிற்கில்லை.

Unknown சொன்னது…

குமுதத்தில் இரா.மணிகண்டன் சாதிகளை பற்றி எழுத துவங்கியவுடன் பதிவுலகில் கண்டனம் அதிகமாக இருந்தது...அதில் நீங்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தீர்கள் என்று நினைக்கிறேன்....
இன்று நீங்களே ஒரு சாதியை பற்றிய இடுகை இட்டு அதில் வழக்கமான உங்கள் வெறுப்பை (சாதீய வெறுப்பு அல்ல...பாப்பன வெறுப்பு) காட்டி இருகிறீர்கள்.... நல்லது...
இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் ஓவியரை மிஞ்சிவிடுவீர்கள் போல :)))))))))))))))))))))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//Vidhoosh said...

well kannan. there is no point in discussing this further. you may please delete my comments. thanks.
-vidhya//

நீங்கள் கேட்டவை எதுவும் அபத்தமாகத் தெரியவில்லை, உங்கள் புரிந்துணர்வில், நீங்கள் அறிந்ததை வைத்துத்தான் கேட்டீர்கள், எனக்கு தெர்ந்தவற்றை பதிலாக எழுதினேன். உங்களைப் போன்ற பலருக்கும் அதே கேள்விகள் எப்போது கேட்டுவருவதால் அவை பொதுவான கேள்விகள் தான்.

நான் வரம்பு மீறி எதுவும் பதில் சொல்லி இருக்கிறேன் என்று சொன்னால் அவற்றை நீக்குவதில் தயக்கம் இல்லை.

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Kamal said...

குமுதத்தில் இரா.மணிகண்டன் சாதிகளை பற்றி எழுத துவங்கியவுடன் பதிவுலகில் கண்டனம் அதிகமாக இருந்தது...அதில் நீங்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தீர்கள் என்று நினைக்கிறேன்....
இன்று நீங்களே ஒரு சாதியை பற்றிய இடுகை இட்டு அதில் வழக்கமான உங்கள் வெறுப்பை (சாதீய வெறுப்பு அல்ல...பாப்பன வெறுப்பு) காட்டி இருகிறீர்கள்.... நல்லது...
இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் ஓவியரை மிஞ்சிவிடுவீர்கள் போல :)))))))))))))))))))))))))))

8:50 PM, August 17, 2009//

ஒரு பார்பனர் தான் பார்பனர் என்று வெளியே சொல்வதும், ஒரு தலித் தனது சாதியை வெளியே சொல்வதாலும் அவர்களுக்கு கிடைக்கும் வரவேற்புகள் எத்தன்மையது என்று உங்களுக்கு தெரியாதது அல்ல. இன்னும் கூட பல ஐஏஎஸ் அதிகாரிகள் தலித்துகளாக இருந்தும் அதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டால் அவமானப்படுத்தப் படுவோமோ என்று நினைக்கும் நிலை உண்டு. ஆனால பார்பனருக்கு அந்த நிலை கிடையாது.

எனவே சாதிகளைப் பற்றிப் பேசும் போது எந்த சாதியைக் குறித்து பேசுகிறோம் என்பதைப் பற்றித்தான் அதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருக்கும்.

குருவிக்காரர்களைப் பற்றி எழுதும் போது, நானும் மனுசன் தானே என்னைப் பற்றி எழுதவில்லையா ? என்று இன்னொருவர் கேட்டால் அது அறிவு சார்ந்ததா ?

தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை என்பது அவர்களின் சாதிய அடையாளத்தினால் பெற முடியும் என்பது நம் சமூக அமைப்பில் இருக்கும் குறைபாடு. எதை வைத்து அவர்களை ஒதுக்குகிறோமோ அது தானே அவர்களின் அடையாளம் ஆகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//S.Gnanasekar Somasundaram said...

சவரத் தொழிலாளிகள் யார் ?
அம்பட்டர், பரியாரி, பார்பர், நாவிதர், குடிமகன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கபடும் மருத்துவர்கள் கிராமத்தில் இன்னும் இருக்கிறார்ரகள் கிரமத்தில் முன்பு பெண் அல்லது பையன் (மாப்பிள்ளை) பார்க்க போனால் இவர்களை பற்றி தெரிந்து கொள்வதற்க்கு முதலில் பையன பற்றி தெரிய அம்பட்டண்ட்டயும், பெண் பற்றி தெரிய வண்ணாத்தியிடம் கேட்டால் தெரிந்து விடும் அவ்வளவும் அவர்களுக்குத் தெரியும்.//

நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.


// பார்பனர்களை சாதியைக் குறிப்பிட்டு
இவர்களை ஏன் உயர்த சாதி என்று குறிப்பிட்டு நாம் ஏன் நம்மளை தாழ்த்திகிடனும்......//

வணக்கம் ஐயா,

உயர்ந்த சாதி என்று குறிப்பிடவில்லை, குறிப்பாக என் எழுத்துக்களில் நான் அவ்வாறு குறிப்பிடுவதும் இல்லை. (தன்னை) 'உயர்த்திக் கொண்டவர்கள்', (பிறரால்) 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்று கட்டமைப்பை மட்டும் தான் குறிப்பிடுவேன்.

பாரதி அப்போதே பாடிவிட்டார்

"பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே !"

கோவி.கண்ணன் சொன்னது…

// Kamal said...

சரி கண்ணா சார்....
நீங்கள் இதில் முக்குலத்தோர், முதலியார், செட்டியார்களை ஏன் விட்டு விட்டீர்கள்.....//

இணையத்தில் நான் செட்டி(யார்), நான் முக்குலத்தோன், நான் முதலி(யார்) என்று பெருமையாக பேசுபவர் எவரும் இல்லை. ஆனால் நான் பார்பான் என்பதில் பெருமை அடைகிறேன் என்று சொல்வோர் உண்டு. பிறப்பினால் என்ன பெருமை ?

//ஊருக்கு இளிச்சவாய் பிள்ளையார்கோவில் ஆண்டி மாதிரி....பதிவுலக இளிச்சவாய் பார்ப்பனர்கள் போல....
வேலுநாயக்கர் மாதிரி...சாதிய ஒழிப்போம் சாதிய ஒழிப்போம் ன்னு சொல்லிட்டு..அப்படியே அடுத்த சாதிய (உங்களுக்கு திரிஞ்ச ஒரே சாதி பார்ப்பனர்கள் தான் போல )திட்டினா எங்கேருந்து சாதி ஒழியறது????//

தவறான புரிந்துணர்வு, எனக்கு பார்பனர்களை திட்டவேண்டும் என்கிற எண்ணம் கிடையாது, நான் அவர்கள் மீது சொல்லப்படும் குறைகளைத்தான் சுட்டிக் காட்டுகிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பதிவு சி(ர)றப்பாக இருக்கிறது.

நடையும், ஓட்டமும் நன்று!

Vidhoosh சொன்னது…

//நான் வரம்பு மீறி எதுவும் பதில் சொல்லி இருக்கிறேன்//
ஜாதியை குறிப்பிட்டு தவறான உவமை கொடுத்ததே வரம்பு மீறல்தான். முடிந்தால் உங்கள் பதிவில் குறிப்பிட்ட ஜாதிப் பெயரை நீக்கவும்.

----

///பல ஐஏஎஸ் அதிகாரிகள் தலித்துகளாக இருந்தும் அதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டால் அவமானப்படுத்தப் படுவோமோ என்று நினைக்கும் நிலை///

குறை அவர்களது தாழ்வு மனப்பான்மை மற்றும் தம் படிப்பின் மகத்துவம் அறியாமை. இதற்கு பார்பனர்களை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? தங்களை உயர்ந்த ஜாதி என்று கூறிக் கொண்டு பூணூல் அணியும் மற்ற சாதியினரையும் உங்களுக்கு தைரியம் இருந்தால் குறிப்பிட்டிருக்கலாமே?

சரி, விடுங்கள். தன்னை தாழ்ந்த ஜாதி என்று குறிப்பிட்டுக் கொள்வதை நிறுத்துங்கள். குறையை தங்கள் மேல் வைத்துக் கொண்டு அடுத்தவரை திருத்த புறப்பட வேண்டாம்.

-வித்யா

கோவி.கண்ணன் சொன்னது…

// Vidhoosh said...

ஜாதியை குறிப்பிட்டு தவறான உவமை கொடுத்ததே வரம்பு மீறல்தான். முடிந்தால் உங்கள் பதிவில் குறிப்பிட்ட ஜாதிப் பெயரை நீக்கவும்.//

தனிமனிதர்களை இழிவு படுத்தி இருந்தால் குறிப்பிடுங்கள். பார்பனர்கள் தங்களை பிராமணர்கள், உயர்ந்த சாதியினர் என்று அழைத்துக் கொள்வதை உங்களால் தடுக்க முடியுமா ?

நீங்கள் பிராமணன் என்றால் நான் சூத்திரனா ?

----

//குறை அவர்களது தாழ்வு மனப்பான்மை மற்றும் தம் படிப்பின் மகத்துவம் அறியாமை. இதற்கு பார்பனர்களை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? தங்களை உயர்ந்த ஜாதி என்று கூறிக் கொண்டு பூணூல் அணியும் மற்ற சாதியினரையும் உங்களுக்கு தைரியம் இருந்தால் குறிப்பிட்டிருக்கலாமே?//

உயர்பதிவி வகித்தாலும் பலர் மிகக் கேவலாமாக முற்பட்ட சாதி அதிகாரிகளால் நடத்தப்படுகிறார்கள் என்பது உண்மை. சொல்லிக் கொள்ள வேண்டாம் என்று நினைப்பது அவர்களுடைய பாதுகாப்புக்காகவே அன்றி, தனது சாதி தாழ்ந்தது என அவர்கள் நினைப்பவர்களும் அல்ல. அவமானப்படுத்தப் படுவோம் என்பதற்கு மட்டுமே அவர்கள் சொல்லிக் கொள்வதில்லை. இதில் தாழ்வு மனப்பாண்மையும் கிடையாது வேறொன்றும் கிடையாது.

//சரி, விடுங்கள். தன்னை தாழ்ந்த ஜாதி என்று குறிப்பிட்டுக் கொள்வதை நிறுத்துங்கள். குறையை தங்கள் மேல் வைத்துக் கொண்டு அடுத்தவரை திருத்த புறப்பட வேண்டாம்.

-வித்யா//

நான் என்னைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லையே. என்மேல குறை இருக்கு எனக்கு மடிப்பிச்சை போடுங்க, பரிவு காட்டுங்க என்று என்னைப்பற்றி எதுவும் சொல்லி இருக்கேனா ? ஏன் உளறுகிறீர்கள் ?

Vidhoosh சொன்னது…

//நீங்கள் பிராமணன் என்றால் நான் சூத்திரனா ?//
யானைக்கு எற்றம் என்றால் குதிரைக்கு குற்றமா?

தன்னை என்று குறிப்பிட்டது எந்த ஒரு தனிமனிதரையும் அல்ல. தன்னைத் தானே தாழ்ந்த ஜாதி என்று சான்றிதழ் வேறு வாங்கி வைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு பரிந்து கொண்டு இப்படி சப்பை கட்டு காட்டுவதெல்லாம் நன்றாகவா இருக்கிறது??

//தங்களை உயர்ந்த ஜாதி என்று கூறிக் கொண்டு பூணூல் அணியும் மற்ற சாதியினரையும் உங்களுக்கு தைரியம் இருந்தால் குறிப்பிட்டிருக்கலாமே?//
இதற்கு ஏன் பதில் இல்லை?


-வித்யா

கோவி.கண்ணன் சொன்னது…

////தங்களை உயர்ந்த ஜாதி என்று கூறிக் கொண்டு பூணூல் அணியும் மற்ற சாதியினரையும் உங்களுக்கு தைரியம் இருந்தால் குறிப்பிட்டிருக்கலாமே?//
இதற்கு ஏன் பதில் இல்லை?


-வித்யா//

எனக்குத் தெரிந்து இணையத்தில் பார்பனர்கள் தவிர்த்து வேறு *ஒருத்தனும்* நானும் பூணூல் அணியும் உயர்ந்த சாதி என்று சொல்லுவதில்லை. பார்பனர்கள் தவிர்த்து யார் யார் அவ்வாறு தன்னை உயர்ந்த சாதிக்காரர்கள், பூணூல் அணிகிறோம் இணையத்தில் பெருமையாக எழுதுகிறார்கள் என்று குறிப்பிடுங்களேன் பலரும் தெரிந்து கொள்ளட்டும்

கோவி.கண்ணன் சொன்னது…

//தன்னை என்று குறிப்பிட்டது எந்த ஒரு தனிமனிதரையும் அல்ல. தன்னைத் தானே தாழ்ந்த ஜாதி என்று சான்றிதழ் வேறு வாங்கி வைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு பரிந்து கொண்டு இப்படி சப்பை கட்டு காட்டுவதெல்லாம் நன்றாகவா இருக்கிறது??//

அது தவறான குற்றச் சாட்டு, யாருமே அவ்வாறு செய்ய முடியாது, சாதி சான்றிதழ் வாங்கும் நடைமுறைகளை தெரிந்து கொண்டு வந்து பிறகு பேசுங்கள், உங்களுக்கு 10,000 ரூபாய் கொடுக்கிறேன், நீங்கள் தாழ்த்தப்பட்டவர் என்ற சாதி சான்றிதழ், அட உங்களுக்கு வேண்டாம், வேறு யாருக்கேனும் தாழ்த்தப்பட்ட சாதி சான்றிதழ் வாங்கித் தரமுடியுமா ?

தப்பான சான்றிதழ் வாங்குவது தெரிந்தால் எவ்வளவு தண்டனை என்றாவது தெரிந்து கொண்டு பேசுங்கள். ஊகமாக கிளப்பிவிடுவது எளிது, ஆதாரம் எங்கே ?

Radhakrishnan சொன்னது…

ஹா ஹா! இன்று இரவு எனது மகனுக்கு நான் என்ன சாதி என்று சொல்லித்தந்துவிட வேண்டியதுதான். அடிக்கடி என்னிடம் நாம் தமிழர்களா, இலங்கையில் இருப்பவர்கள் தமிழர்களா, நாம் இந்தியர்களா எனக் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறான். இதில் சாதி பற்றிய அறியாமையை அவனிடம் இருந்து போக்க வேண்டும். இதன் உள்ளர்த்தத்தைப் படித்துப் பாருங்கள், ஒரு தெளிவு கிடைக்கும்.

Vidhoosh சொன்னது…

ha..ha... you are deviating the subject now.
I was asking about the real certificates issued by Government... After all, one gets certified to avail the benefits through calling himself a minority. they want to avail all the benefits through the certificate, but they dont want to identify themselves as mentioned in their certificates...

And about the fake ones, you are in India.... ha ha...good joke...
-vidhya

கோவி.கண்ணன் சொன்னது…

// Vidhoosh said...

ha..ha... you are deviating the subject now.
I was asking about the real certificates issued by Government... After all, one gets certified to avail the benefits through calling himself a minority. they want to avail all the benefits through the certificate, but they dont want to identify themselves as mentioned in their certificates...

And about the fake ones, you are in India.... ha ha...good joke...
-vidhya

11:06 PM, August 17, 2009//

இதில் என்ன தவறு ? பார்பனர்கள் தாழ்ந்த சாதியாக இருந்தால் அவர்களும் போய் சர்டிபிகேட் வாங்கினால் தான் சலுகையை பெற முடியும்.

நாங்கள் உயர்ந்த சாதி என்று தனக்குத்தானே பெருமை பேசுவதைக் காட்டிலும், ஆதிக்க சாதியினரால் நாங்கள் தாழ்த்தப்பட்டு இந்த நிலையில் இருக்கிறோம் என்று சொல்வதில் இழுக்கு இல்லை.

அவர்கள் தாழ் உணர்விலோ எதோ உணர்விலோ இருக்கிறார்கள் உங்களுக்கு என்ன ? அவர்கள் அப்படித்தான் என்று சொல்ல வருகிறீர்களா ?

உங்களுக்கு பார்பானைப் பற்றி நான்கு வரியை நான் எழுதியதில் வரும் சீற்றம்,

அவர்கள் தங்களை தாழ்த்தப்பட்டவர்களாக அழைத்துக் கொள்வதால் மானம் ரோசம் சீற்றம் வரக்கூடாது என்கிறீர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//வெ.இராதாகிருஷ்ணன் said...

ஹா ஹா! இன்று இரவு எனது மகனுக்கு நான் என்ன சாதி என்று சொல்லித்தந்துவிட வேண்டியதுதான். அடிக்கடி என்னிடம் நாம் தமிழர்களா, இலங்கையில் இருப்பவர்கள் தமிழர்களா, நாம் இந்தியர்களா எனக் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறான். இதில் சாதி பற்றிய அறியாமையை அவனிடம் இருந்து போக்க வேண்டும். இதன் உள்ளர்த்தத்தைப் படித்துப் பாருங்கள், ஒரு தெளிவு கிடைக்கும்.

11:06 PM, August 17, 2009//

என் மகளுக்கு 9 வயதாகிறது, இந்திய கடவுச் சீட்டு தான் வைத்திருக்கிறோம். நான் என் மகளுக்கு சாதி சான்றிதழ் வாங்க முயற்சித்ததோ, அவளிடம் என்ன சாதி என்பதைப் பற்றிப் பேசியது கிடையாது. சாதி என்கிற சமூக சீழ் பற்றி அவள் அறிந்திருக்க வில்லை. தற்போதைக்கு அவளுக்கு அதையெல்லாம் சொல்லும் எண்ணமும் இல்லை

Vidhoosh சொன்னது…

//தனிமனிதர்களை இழிவு படுத்தி இருந்தால் குறிப்பிடுங்கள். பார்பனர்கள் //தங்களை பிராமணர்கள், உயர்ந்த சாதியினர் என்று அழைத்துக் கொள்வதை உங்களால் தடுக்க முடியுமா ?///

எப்போ minorities தம்மை minority என்றழைத்துக் கொள்வதை நிறுத்துகிறார்களோ அப்பொழுதே ஏற்ற தாழ்வுகள் மறைந்து விடும்.
முதலில், உங்கள் பதிவில் நீங்கள் பெயரிட்டு அளித்துள்ள ஜாதிப் பெயரை நீக்குங்களேன். அதுவே நடக்கும் என்று தோன்றவில்லை எனக்கு. நீங்கள்தான் இன்னும் பார்ப்பான் உயர்ந்தவன் என்று compare செய்து கொண்டு இருக்கிறீர்கள் ...
--வித்யா

Vidhoosh சொன்னது…

////அவர்கள் தாழ் உணர்விலோ எதோ உணர்விலோ இருக்கிறார்கள் உங்களுக்கு என்ன? அவர்கள் அப்படித்தான் என்று சொல்ல வருகிறீர்களா ?///

///உங்களுக்கு பார்பானைப் பற்றி நான்கு வரியை நான் எழுதியதில் வரும் சீற்றம், அவர்கள் தங்களை தாழ்த்தப்பட்டவர்களாக அழைத்துக் கொள்வதால் மானம் ரோசம் சீற்றம் வரக்கூடாது என்கிறீர்களா ?///

ஏற்கனவே கற்பழிக்கப் பட்ட ஒரு பெண்ணை, சபையில் வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்பது போல், இதோ இங்கிருக்கிறார் பார், உன் நண்பன் ஒரு பார்பான். அவன் தாத்தனுக்கும் தாத்தன் உங்க தாத்தனுக்கும் தாத்தனை இழிவு படுத்தினான். நீ ஏன் இவனோடு நட்பு கொண்டாடுகிறாய் என்று கேட்பது போல இருக்கிறது?

உங்கள் பதிவில் இருக்கும் ஜாதிப் பெயரை நீக்கி விடுங்களேன்.

-வித்யா

கோவி.கண்ணன் சொன்னது…

//Vidhoosh


//தனிமனிதர்களை இழிவு படுத்தி இருந்தால் குறிப்பிடுங்கள். பார்பனர்கள் //தங்களை பிராமணர்கள், உயர்ந்த சாதியினர் என்று அழைத்துக் கொள்வதை உங்களால் தடுக்க முடியுமா ?///

எப்போ minorities தம்மை minority என்றழைத்துக் கொள்வதை நிறுத்துகிறார்களோ அப்பொழுதே ஏற்ற தாழ்வுகள் மறைந்து விடும்.
முதலில், உங்கள் பதிவில் நீங்கள் பெயரிட்டு அளித்துள்ள ஜாதிப் பெயரை நீக்குங்களேன். அதுவே நடக்கும் என்று தோன்றவில்லை எனக்கு. நீங்கள்தான் இன்னும் பார்ப்பான் உயர்ந்தவன் என்று compare செய்து கொண்டு இருக்கிறீர்கள் ...
--வித்யா//

இங்கே பதிவில் நான் எழுதி இருப்பது என் சொந்தக் கருத்து கிடையாது, நான் நூலின் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறேன், அதை வாங்கிப் படித்துவிட்டு அவர்களுக்கு மறுப்புக் கடிதம் எழுதிவிட்டு அதனை இங்கேயும் பின்னூட்டங்கள் போடுங்கள் அதை வெளி இடுகிறேன். அந்த அளவுக்குதான் உங்கள் கருத்துக்கு மதிப்பு அளிக்க முடியும். நான் எதை எழுதலாம் என்பதை நீங்கள் தீர்மாணிக்க முடியாது.

கஜினி முகமது எத்தனை முறை படையெடுத்தான் என்ற கேள்வியை எத்தனை வகுப்புகளில் படித்தீர்கள் ? அந்தப் பாடம் ஒரே ஒரு முறை நடுநிலை பள்ளியில் வரலாற்றில் வரும். ஆனால் அதன் விடையை அனைவரும் அறிந்து இருக்கிறோமே ஏன் ? நாட்டுப் பற்றா ? இல்லை இஸ்லாமியர்கள் மீது நமக்கு ஊட்டப்பட்ட வெறுப்பு. அவற்றையெல்லாம் கண்டிக்க ஒருவருக்கும் துப்புக் கிடையாது, ஆயிரம் ஆண்டுகளாக மண்ணின் மைந்தர்களை தாழ்த்தப்பட்டவனாக அறிவித்து உழைக்காமல் உண்டு வாழ்ந்த பார்பனர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறேன் என்றதும் பொங்குவது ஏன் ?

போய் வேலையைப் பாருங்க மேடம், போய் புள்ளக் குட்டியை படிக்க வையுங்க, பார்பான் தான் எப்படியாகிலும் முன்னேறுவான் என்று சொல்கிறீர்களே ? பிறகு எதற்கு ரொம்ப பொங்கி உங்கள் சக்தியை விரயம் செய்கிறீர்கள்.

Vidhoosh சொன்னது…

ரொம்ப சந்தோசம். ஆனால் கடைசி வரை ஜாதியை நீங்கள் நீக்கவே இல்லை பார்த்தீர்களா?
நன்றி. வணக்கம்.
வித்யா

Radhakrishnan சொன்னது…

//என் மகளுக்கு 9 வயதாகிறது, இந்திய கடவுச் சீட்டு தான் வைத்திருக்கிறோம். நான் என் மகளுக்கு சாதி சான்றிதழ் வாங்க முயற்சித்ததோ, அவளிடம் என்ன சாதி என்பதைப் பற்றிப் பேசியது கிடையாது. சாதி என்கிற சமூக சீழ் பற்றி அவள் அறிந்திருக்க வில்லை. தற்போதைக்கு அவளுக்கு அதையெல்லாம் சொல்லும் எண்ணமும் இல்லை//

மிக்க நன்றி கோவியாரே. நகைச்சுவைக்காக எழுதினேன், நிச்சயம் அந்த தவறை நான் செய்ய மாட்டேன்.

வெளிநாடு சென்றாலும் இன்ன சாதி என நமக்குள் பாரபட்சம் இருப்பதை மாற்ற இயலாது. ஏனோ நமக்கு இப்படி ஒரு அடையாளம்!

உலகநாடுகளில் மதம் தரும் அடையாளம் பெரிது, உள்ளூரில் சாதி தரும் அடையாளம் பெரிது. இருவரது எண்ணங்களும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

மிக்க நன்றி.

Jawahar சொன்னது…

நாம எல்லாரும் ப்ளாக்கர் என்கிற ஒரே ஜாதி. நமக்குள் உயர்வு தாழ்வு இல்லைன்னு நிரூபிச்சி, ஜாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு ஒரு முன்னோடியா இருந்து காட்டுவோமே..

இதனாலே நமக்குக் கிடைக்கிற சந்தோஷத்தைப் பாத்துட்டு இன்னும் பெரிய அளவிலே எல்லாரும் கடை பிடிச்சிக் காட்டட்டுமே?

சரிதானா கண்ணன் சார்?
சரிதானா வித்யாஜீ?

எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றறியோம் பராபரமே...

வெட்டி வேலு சொன்னது…

கண்னண்,

///பல ஐஏஎஸ் அதிகாரிகள் தலித்துகளாக இருந்தும் அதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டால் அவமானப்படுத்தப் படுவோமோ என்று நினைக்கும் நிலை///

உண்மை. சத்தியமான வார்த்தை.

ஆன தேவர், நாடார், நாயக்கர், .... இவங்க எல்லாம் அப்படியா இருக்காங்க ?

பிறகு ஏன் பார்பனர்களை மட்டும் பழித்து கூற வேண்டும்... நியாயமா பேசுறதா நீங்கள் நினைத்தால் தலித் மக்களை தவிர்த்து எல்லாரையும் பற்றி பேசுங்க....

சும்மா சமாளிக்காதேங்க ... வலைபூல பார்பனர்கள் மட்டும் தான் அப்படி போடுறங்கன்னு...

வலைபூ மட்டும் பாக்கமா, நிஜ வாழ்க்கைய பாத்து சொல்லுங்க...

எனக்கு என்னமோ நீங்க கொஞ்சம் செயற்கையா பேசுற மாதிரி இருக்கு...
எதிர்த்து பேசனும்ன்னு பேசுன மாதிரி....

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

ஆணித் தரமான உண்மைகளை போட்டு உடைப்பது இந்த பதிவு

கோவி.கண்ணன் சொன்னது…

//வெட்டி வேலு said...

கண்னண்,



உண்மை. சத்தியமான வார்த்தை.

ஆன தேவர், நாடார், நாயக்கர், .... இவங்க எல்லாம் அப்படியா இருக்காங்க ?

பிறகு ஏன் பார்பனர்களை மட்டும் பழித்து கூற வேண்டும்... நியாயமா பேசுறதா நீங்கள் நினைத்தால் தலித் மக்களை தவிர்த்து எல்லாரையும் பற்றி பேசுங்க....

சும்மா சமாளிக்காதேங்க ... வலைபூல பார்பனர்கள் மட்டும் தான் அப்படி போடுறங்கன்னு...

வலைபூ மட்டும் பாக்கமா, நிஜ வாழ்க்கைய பாத்து சொல்லுங்க...

எனக்கு என்னமோ நீங்க கொஞ்சம் செயற்கையா பேசுற மாதிரி இருக்கு...
எதிர்த்து பேசனும்ன்னு பேசுன மாதிரி....
//

எல்லோரைப் பற்றியும் எழுதிக் கொண்டு தான் வருகிறார்கள். நானும் எழுதி இருக்கிறேன்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\என் மகளுக்கு 9 வயதாகிறது, இந்திய கடவுச் சீட்டு தான் வைத்திருக்கிறோம். நான் என் மகளுக்கு சாதி சான்றிதழ் வாங்க முயற்சித்ததோ, அவளிடம் என்ன சாதி என்பதைப் பற்றிப் பேசியது கிடையாது. சாதி என்கிற சமூக சீழ் பற்றி அவள் அறிந்திருக்க வில்லை. தற்போதைக்கு அவளுக்கு அதையெல்லாம் சொல்லும் எண்ணமும் இல்லை\\

மிகுந்த மகிழ்ச்சி, நடைமுறையில் சாத்தியமான ஒருமுறை இதுவே, இதை தாங்கள் செயல்படுத்துவதில் மகிழ்கிறேன்.

தற்போதுக்கு மட்டுமல்ல, எப்போதைக்குமே நீங்களாக சொல்லாதீர்கள் !!

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

சலூன் கடைகள் திராட இயக்கத்தின் தொட்டில்கள். திராவிட இயக்கப்பிரச்சாரம் அதிகமாக நடந்த இடம் சலூன்கள்தான். பெரியாரை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் சலூன்களின் பங்கு மகத்தானது.

//சிறுவர்களாக இருந்த பொழுது அரைகுறை ஆடைகளுடன் பெண்களின் அங்கங்கள் நமக்கு அறிமுகமான இடம் என்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். //

நான் அங்கு பார்த்தது பெரியாரையும்,அண்ணாவையையும்,தலைவர் கலைஞரையும்தான். நீங்க சீன் போஸ்டர் பாத்திருக்கீங்க.அதுசரி..அவரவர் தேவை அவரவருக்கு :))

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

கோவி கண்ணன் சவால் விட்டது:
/அது தவறான குற்றச் சாட்டு, யாருமே அவ்வாறு செய்ய முடியாது, சாதி சான்றிதழ் வாங்கும் நடைமுறைகளை தெரிந்து கொண்டு வந்து பிறகு பேசுங்கள், உங்களுக்கு 10,000 ரூபாய் கொடுக்கிறேன், நீங்கள் தாழ்த்தப்பட்டவர் என்ற சாதி சான்றிதழ், அட உங்களுக்கு வேண்டாம், வேறு யாருக்கேனும் தாழ்த்தப்பட்ட சாதி சான்றிதழ் வாங்கித் தரமுடியுமா ?

தப்பான சான்றிதழ் வாங்குவது தெரிந்தால் எவ்வளவு தண்டனை என்றாவது தெரிந்து கொண்டு பேசுங்கள். ஊகமாக கிளப்பிவிடுவது எளிது, ஆதாரம் எங்கே ?/

ஆதாரம் வேணுமா? இங்கே எல் ஐ சி, வங்கிகளில் உள்ள எஸ் சி/எஸ் டி ஊழியர் சங்கங்களிடமே வந்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்! எப்படி ரெட்டி எல்லாம் கொண்டா ரெட்டி யாகவும், நாயுடு நாயக்கன் எல்லாம் காட்டு நாயக்கனாகவும் பொய் சர்டிபிகேட் வாங்கி இன்னமும் பணியில் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று! அதுவும் போதாதென்றால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்த மாதிரி பொய் சர்டிபிகேட் கொடுத்து உள்ளே நுழைந்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன கிடப்பில் போட்ட கேஸ் எத்தனை என்று கேட்டுப் பாருங்கள்!

ஒட்டு வாங்குவதற்காக, காங்கிரஸ், பி ஜெ பி இரண்டு கட்சிகளுமே ஒரு குறிப்பிட்ட சமூகத்தை எஸ் சி பிரிவில் சேர்ப்பதாக வாக்குறுதி கொடுத்ததும், வசுந்தரா ராஜே ஆட்சி தோற்றதற்குக் கூட முக்கியமான காரணமாக, இருந்தது உங்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.

உங்களுக்குத் தெரிந்தது மட்டுமே உள்ளது மற்றது இல்லவே இல்லை என்று சாதிக்கும் உங்களிடமும் கூட,வந்து மாட்டுகிறவர்களைப் பார்த்தால்....!

அம்மா விதூஷ்! எதோ பகோடா பண்ணினோமா, பேப்பரில் பார்சல் கட்டினோமான்னு இருந்திருந்தா,
/போய் வேலையைப் பாருங்க மேடம், போய் புள்ளக் குட்டியை படிக்க வையுங்க, பார்பான் தான் எப்படியாகிலும் முன்னேறுவான் என்று சொல்கிறீர்களே ? பிறகு எதற்கு ரொம்ப பொங்கி உங்கள் சக்தியை விரயம் செய்கிறீர்கள்?/
இப்படி உபதேசமெல்லாம் கிடைத்திருக்குமா!!

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்களுக்குத் தெரிந்தது மட்டுமே உள்ளது மற்றது இல்லவே இல்லை என்று சாதிக்கும் உங்களிடமும் கூட,வந்து மாட்டுகிறவர்களைப் பார்த்தால்....!//

ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்களே,

நான் ஊகமாக எதையும் சொல்லவில்லை. இங்கு பதிவில் எழுதி இருப்பது ஒரு சமூகம் எப்படி இழி நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பது குறித்தே, அதில் பார்பனர்களைப் பற்றி நான்கு இடத்தில் சொல்லி இருக்கிறேன். இழிநிலைக்குத் தள்ளப்பட்டவர்களின் நிலையைப் பற்றி எந்த ஒரு வருத்தம் அடையாத வித்யா, நான் பார்பனர்களைக் குறிப்பிட்டு இருப்பது பற்றி வருத்தம் தெரிவித்திருப்பது எனக்கு ஒன்றும் பரிதாபமாகவோ அல்லது அதிர்ச்சி அளிக்கவில்லை.

போலி சான்றிதழ் பற்றி இங்கே விரிவாக எழுதி இருக்கிறார்கள். பொறுமை இருந்தால் படித்துப் பாருங்கள்

உங்களுக்கு இங்கே தகவல் இருக்கு !

Vidhoosh சொன்னது…

அன்பின் கிருஷ்ணமூர்த்தி,
//இப்படி உபதேசமெல்லாம் கிடைத்திருக்குமா!!//
:))

//போய் வேலையைப் பாருங்க மேடம், //
இது உபதேசம் அல்ல. இது பதில் சொல்ல இயலாமையினால் வந்த வார்த்தைகள் என்று எனக்கு புரிவதால், மேற்கொண்டு நன்றி மட்டும் கூறி விடைபெற்றேன்.
//அந்த அளவுக்குதான் உங்கள் கருத்துக்கு மதிப்பு அளிக்க முடியும். நான் எதை எழுதலாம் என்பதை நீங்கள் தீர்மாணிக்க முடியாது.// என்றும் கூறி இருக்கிறார் அவர்.
////பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு
(கோவியானந்தாவின் பொன்மொழிகள்) ///
அவரது பொன் மொழிகளுக்கே விரோதமாக இருப்பது இக்கட்டுரை. என்ன செய்வது, அவர் கடையிலும் வியாபாரம் ஓட வேண்டாமா. வேறு ஏதும் கிடைக்கும் வரை, பார்பனர்களை விமர்சித்து பிழைப்பை ஓட்டுபவர்கள் ஒட்டட்டும்.

================================

மேலும், கோவி.கண்ணனுக்கு, உங்கள் கருத்துக்கள் மேல்தான் என் விமர்சனங்கள் வந்திருக்கின்றன, உங்கள் மேல் அல்ல என்பதையும் கூறிக் கொண்டு, இதற்கு இப்போது முற்றுபுள்ளி.

இப்போதும் விடை பெறுகிறேன் நிரந்தரமாக. :)


--வித்யா
==================================

கோவி.கண்ணன் சொன்னது…

//அம்மா விதூஷ்! எதோ பகோடா பண்ணினோமா, பேப்பரில் பார்சல் கட்டினோமான்னு இருந்திருந்தா,
/போய் வேலையைப் பாருங்க மேடம், போய் புள்ளக் குட்டியை படிக்க வையுங்க, பார்பான் தான் எப்படியாகிலும் முன்னேறுவான் என்று சொல்கிறீர்களே ? பிறகு எதற்கு ரொம்ப பொங்கி உங்கள் சக்தியை விரயம் செய்கிறீர்கள்?/
இப்படி உபதேசமெல்லாம் கிடைத்திருக்குமா!!//

முதலைக் கண்ணீரும், முதலையின் சோகமும் ஒரு முதலையாக இருந்தால் தான் புரியும் எனக்கெல்லாம் புரியாது, எதோ தெரியாமல் சொல்லிவிட்டேன் மன்னித்துவிடுங்கள் கிருஷ்ணமூர்த்தி ஐயா.

கோவி.கண்ணன் சொன்னது…

//எம்.எம்.அப்துல்லா said...

சலூன் கடைகள் திராட இயக்கத்தின் தொட்டில்கள். திராவிட இயக்கப்பிரச்சாரம் அதிகமாக நடந்த இடம் சலூன்கள்தான். பெரியாரை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் சலூன்களின் பங்கு மகத்தானது.

//சிறுவர்களாக இருந்த பொழுது அரைகுறை ஆடைகளுடன் பெண்களின் அங்கங்கள் நமக்கு அறிமுகமான இடம் என்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். //

நான் அங்கு பார்த்தது பெரியாரையும்,அண்ணாவையையும்,தலைவர் கலைஞரையும்தான். நீங்க சீன் போஸ்டர் பாத்திருக்கீங்க.அதுசரி..அவரவர் தேவை அவரவருக்கு :))

1:59 PM, August 18, 2009//

அப்துல்லா, அந்தத் தகவல்களும் அந்நூலில் இருந்தன, வேறொரு நாள் எழுதுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// Vidhoosh said...

ரொம்ப சந்தோசம். ஆனால் கடைசி வரை ஜாதியை நீங்கள் நீக்கவே இல்லை பார்த்தீர்களா?
நன்றி. வணக்கம்.
வித்யா

11:28 PM, August 17, 2009//

என்கிட்ட ஜாதி இல்லை, ஜாதியை நீங்கள் நீக்கிக் கொள்ளுங்கள் மேடம்.

கோவி.கண்ணன் சொன்னது…

///நிகழ்காலத்தில்... said...

மிகுந்த மகிழ்ச்சி, நடைமுறையில் சாத்தியமான ஒருமுறை இதுவே, இதை தாங்கள் செயல்படுத்துவதில் மகிழ்கிறேன்.

தற்போதுக்கு மட்டுமல்ல, எப்போதைக்குமே நீங்களாக சொல்லாதீர்கள் !!

10:43 AM, August 18, 2009//

சொல்வதற்கான தேவை, கட்டாயம் எதுவும் கிடையாது. உயர்நிலை படிக்கும் போது பள்ளிகளில் தமிழ் மாணவர்களுடம் பேசும் போது சாதிப்பற்றி கேட்பாளோ என்னவோ, தெரியல.

கோவி.கண்ணன் சொன்னது…

// Jawarlal said...

நாம எல்லாரும் ப்ளாக்கர் என்கிற ஒரே ஜாதி. நமக்குள் உயர்வு தாழ்வு இல்லைன்னு நிரூபிச்சி, ஜாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு ஒரு முன்னோடியா இருந்து காட்டுவோமே..

இதனாலே நமக்குக் கிடைக்கிற சந்தோஷத்தைப் பாத்துட்டு இன்னும் பெரிய அளவிலே எல்லாரும் கடை பிடிச்சிக் காட்டட்டுமே?

சரிதானா கண்ணன் சார்?
சரிதானா வித்யாஜீ?

எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றறியோம் பராபரமே...

11:44 PM, August 17, 2009//

நன்றிங்க சார்

கோவி.கண்ணன் சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆணித் தரமான உண்மைகளை போட்டு உடைப்பது இந்த பதிவு

1:30 AM, August 18, 2009//

நண்பரே நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...

உண்மைகள்... இதற்கு இந்த சமுகம்தான் காரணம். குறிப்பிட்ட ஒரு சமுகத்தினரை சொல்வதிற்கில்லை.

8:31 PM, August 17, 2009//

தெளிந்த குளத்தில் ஒருவர் கல் எரிவதைப் பார்த்து, பலரும் அதுபோல் நாமும் எரிவோம் என்று கல் எரிந்தால் ஒருவரை மட்டுமே குறைச் சொல்ல முடியாதுங்கிறிங்க !
:) சரியா !

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பதிவு சி(ர)றப்பாக இருக்கிறது.

நடையும், ஓட்டமும் நன்று!//

நோயுற்றவர்களுக்கு சிரப்பு, மற்றவர்களுக்கு சிறப்பு !
:) மிக்க நன்றி !

அணில் சொன்னது…

முடி திருத்துவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் உள்ள தொடர்பை அறிய முடிந்தது. அறியத் தந்தமைக்காக நன்றி.

சமண மதத்தை சார்ந்த சித்தர்களும் வேறு பிம்பங்களில் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நானும் நம்புகிறேன். சில பாடல்களைப் படிக்கும்போது அவ்வாறு தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.

siva சொன்னது…

மிகச் சிறந்த பதிவு மருத்துவர்கள் சவர தொழிலாளர்கள் பற்றிய தங்கள் கணிப்பு பல விஷயங்கள தெளிவுபடுத்தியுள்ளீர்கள்

Unknown சொன்னது…

வணக்கம் கோவிகண்ணன் ஐயா. நான் மருத்துவ குலத்தைச் சேர்ந்தவன். எனக்கு வெகு காலமாக இருந்து வந்த சந்தேகத்தை உங்கள் பதிவு தெளிவுபடுத்தியிருக்கிறது. நான் இன்னும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அந்த புத்தகத்தை பெற எனக்கு உதவுங்கள். நான் நீங்கள் கொடுத்த எண்ணை தொடர்பு கொண்டேன். அழைப்பு செல்லவில்லை. எனக்கு அப்புத்தகம் கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

the game சொன்னது…

First intha kulathathai sarnthavargal mulumauyaga unarnthu matra pirivinar munbu thalaithooki nadakkavendum

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் சொன்னது…

சிறப்பான பதிவு .நன்றி ஐயா

Unknown சொன்னது…

மிகவும் சிறந்த பதிவு
நன்றி ஐயா

தமிழ் அறம் சொன்னது…

டேய் தாழ்த்தப்பட்ட எச்சை தே..... மகனே, நீயெல்லாம் வரலாறு பேசுகிறாய், ஒரு உயர்ந்த சமூகத்தை எவ்வளவு கீழ்த்தரமாக எழுத வேண்டுமோ அப்படி எழுதி இருக்கிறாய், நீ தாழ்த்தப்பட்ட சமுகம் என்பதால் அவர்களையும் உன் சமூகத்தோடு இணைத்து எழுதி இருக்கிறாய், இந்த புத்தகத்தை எழுதியவன் ஒரு தெலுங்கு SC

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்