பின்பற்றுபவர்கள்

15 ஜூன், 2009

பகை, நோய் !

பகைவன் மற்றும் எதிரி இரண்டு சொற்களுக்கும் போதிய இடைவெளியில் பொருள் வேறுபாடு உண்டு, பகைவன் என்பவன் முன்பு நண்பனாக இருந்தவன், எதோ ஒரு பிணக்கின் காரணமாக எதிரியாக மாறி விடுபவன், பகைவன் என்றால் அதுதான் சரியான பொருள் என்றே நினைக்கிறேன். அதாவது முன்னாள் நண்பர்களை பகைவர்கள் என்று சொல்லலாம், நண்பர்களுக்கு முன்னால் முன்னாள் போட்டால் இன்னாளில் முன்னாள் நண்பர் நண்பராக இல்லை என்று தானே பொருள், பகைவர் என்ற மிக உயரிய இடத்துக்கு உயர்த்தாமல் முன்னாள் நண்பர் என்று சொல்வதன் மூலம் இருவருக்கும் கொடுக்கல் வாங்களோ, கெடுத்தல் வீழ்த்துதல் கிடையாது, அதாவது தொடர் பேதும் கிடையாது என்று சொல்வதாகப் பொருள். ஆனால் எதிரிகள் அப்படி அல்ல, நமக்கு முன் பின் அறிமுகம் ஆகாதவர்கள் கூட நமக்கு எதிரிகள் ஆகும் வாய்ப்புகள் உண்டு, எடுத்துக் காட்டிற்கு நாம் செய்யும் தொழில் அதே தொழிலில் நமக்கு முன்பே இறங்கியவர், சமகாலத்தில் இறங்கியவர், பின்பு இறங்கியவர் போட்டித் தன்மை காரணமாக மறைமுகமாகவோ, நேரடியாகவோ நம்மை வீழ்த்த உத்திகள் வகுக்கலாம், அதனை கண்டுபிடித்த பிறகு முன்பின் அறிமுகம் இல்லாத அந்த நபர் நமக்கு எதிரியாக (அறிமுகம் இல்லாத மறைமுக எதிரியாக) இருப்பார்.

எதிரிகளை நட்பு ஆக்கிக் கொள்வது அவ்வளவு எளிதன்று, விட்டுக் கொடுத்தலும், சில இழப்புகளும் கூறுகள் என்றால் எதிரிகள் நண்பர்களாவது கூறுகள் (சாத்தியம்) ஆகும். ஆனால் பகைவர்களை நட்பாக்கிக் கொள்வது எளிது. முன்பு பழகியதன் நினைவுகள், ஏற்பட்ட காயங்களை ஆற்றும் வல்லமை கொண்டது. அதையும் தாண்டி பகை நட்பாகமல் இருந்தால் அங்கே உயர்வு மனப்பான்மை எனச் சொல்லப்படும் ஈகோவே காரணமாக இருக்கும். என்னுடன் 10 ஆம் வகுப்பு படித்த ஒரு நண்பனும் நானும் சண்டையிட்டு பேசிக் கொள்ளமல் தொடர ஆண்டுகள் கடந்தும் எதிரெதிரே பார்க்கும் போது பேசாமல் செல்வதையோ வழக்கமாக்கிக் கொண்டிருப்பதும் இன்றும் கூட தொடரத்தான் செய்கிறது. ஆனால் இருவருக்கும் பொதுவானவர்களிடம் இருவரைப் பற்றியும் கேட்டுக் கொள்வது எங்கள் இருவருக்கும் தெரியும். பேசாமல் இருப்பதற்கு மனத்தடை, ஈகோ என்பதை எல்லாம் தாண்டி இப்படியே இருப்பதும் கூட சிறப்பு என்று கருதுகிறோமா என்று கூடத் தெரியவில்லை. நான் எப்போதாவது ஊருக்குச் செல்வதும், அதிலும் எப்போதாவது தான் எதிரெதிரே சந்திக்கும் வாய்ப்பு, ஆனால் இதே நிலமை அந்த நண்பருக்கும் அவருடைய எதிர்வீட்டில் வசிக்கும் எனது மற்றொரு நண்பருக்கும் கூட உண்டு, இருவரும் பல ஆண்டுகளாக ஆகியும் பேசிக் கொள்வதே இல்லை. இத்தனைக்கும் நாங்கள் மூவரும் முதல் பெஞ்சில் ஒன்றாக நான் நடுவில் அமர்ந்திருந்தும் பேசிக் கொள்ளாமல் பத்தாம் வகுப்பு முழுவதும் முடித்தோம். பலசமயங்கள் நினைத்துப் பார்த்தால் விந்தையாகத்தான் இருக்கிறது.

தீர்க்க முடியாத சிக்கல்கள் பிண்ணி இருந்தால் பகையை நட்பாக்கிக் கொள்வது பெரும் சிக்கல், மற்றபடி பகையை நட்பாக்கிக் கொள்வது மிக எளிது தான். நம்முடைய ஈகோவை நாம் சிதறடித்தால் பகை நட்பாகிவிடும். குறிப்பாக நெருங்கிய உறவினர்களிடம் ஆண்டுகணக்காக முகத்தில் விழிக்காமல் இருப்பது, நெருங்கிய நண்பர்களிடம் ஏற்பட்ட பிணக்கை நினைவில் வைத்திருப்பது இவை எல்லாம் ஒரு தனிமனிதனுக்கு நட்டம் தான். தன்னுடைய மகிழ்ச்சியையும், வருத்தங்களையும் யார் யார் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ அவர்களை பகையாளியாகவே வைத்திருப்பது, நமக்குத்தான் நட்டம். மற்றபடி முகம் தெரியாதவர்கள், மீண்டும் சந்திக்க வாய்ப்பில்லாதவர்களிடம் ஏற்பட்ட பகை நாமாக நினைத்தாலும் வளரவே வளராது, தொடரவும் தொடராது. அதை அப்படியே விட்டுவிடலாம்.

ஒருவரின் நட்பு மற்றும் உறவுகளில் ஏற்பட்ட பகையும், ஒருவர் உடலில் ஏற்படும் நோயும் சரிசெய்யாமல் வளரவிட்டால் தனிமனிதனுக்கு பெரும் இழப்பு. (தலைப்பைத் தொட்டு எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன்)

தொடர்புடைய குறள்கள்:

குறள்: 871
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

(மு.வ விளக்கம் - பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.)

குறள் 874:
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

(மு.வ விளக்கம் - பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.)

குறள் 878:
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

(மு.வ விளக்கம் - செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.)

11 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

பகைமை எனும் நோயை பற்றி நல்லா விளக்கி உள்ளீர்கள் - நன்றி அண்ணா!

செருக்கு என்பது தான் ஈகோவா ...

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
பகைமை எனும் நோயை பற்றி நல்லா விளக்கி உள்ளீர்கள் - நன்றி அண்ணா!

செருக்கு என்பது தான் ஈகோவா ...
//

செருக்கு ஈகோ என்பதன் பொருளுக்கு நெருங்கிவரும். ஈகோ மனத் தடை. செருக்கு - தான் செய்வது சரியாக இருக்கும் என்று நினைப்பதாகப் பொருள்.

நட்புடன் ஜமால் சொன்னது…

செருக்கு ஈகோ என்பதன் பொருளுக்கு நெருங்கிவரும். ஈகோ மனத் தடை. செருக்கு - தான் செய்வது சரியாக இருக்கும் என்று நினைப்பதாகப் பொருள்.\\

நன்றி அண்ணே!

சி தயாளன் சொன்னது…

:-)

நிகழ்காலத்தில்... சொன்னது…

ஆக்கபூர்வமான பதிவு

வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...
:-)
//

வெறும் சிரிப்பானா ?
அவ்வ்வ்வ்வ்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
:-)
//

இதுல நான் எதும் சிரிப்புத் துணுக்கு எழுதவில்லையே, அப்பறம் எப்படி ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில்... said...
ஆக்கபூர்வமான பதிவு

வாழ்த்துக்கள்
//

நன்றி !

Vishnu - விஷ்ணு சொன்னது…

நல்ல பதிவு கண்ணன் சார். நம்ம அரசியல்வாதிகள் நமக்கு பகைவனா? இல்லை எதிரியா?

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//எதிரிகளை நட்பு ஆக்கிக் கொள்வது அவ்வளவு எளிதன்று/

உண்மை

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//நாம் செய்யும் தொழில் அதே தொழிலில் நமக்கு முன்பே இறங்கியவர், சமகாலத்தில் இறங்கியவர், பின்பு இறங்கியவர் போட்டித் தன்மை காரணமாக மறைமுகமாகவோ, நேரடியாகவோ நம்மை வீழ்த்த உத்திகள் வகுக்கலாம், அதனை கண்டுபிடித்த பிறகு முன்பின் அறிமுகம் இல்லாத அந்த நபர் நமக்கு எதிரியாக (அறிமுகம் இல்லாத மறைமுக எதிரியாக) இருப்பார்.//

:-)))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்