பின்பற்றுபவர்கள்

22 ஜூன், 2009

ஆமுக - சில எண்ணங்கள் !

'ஆரிய முன்னேற்றக் கழகம்' வடமொழிப் பெயர் கிடைக்கவில்லையா ? அதெல்லாம் நிறைய இருக்கு. ஆர்ய சமாஜ், ஆர்ய பவன், ஆர்யாஸ், பார்பனர்கள் தங்கள் கட்சிக்கு ஆரிய 'முன்னேற்ற கழகம்' என்று தமிழ் பெயர் வைத்திருப்பதை வரவேற்கலாம். ஆனால் இது தேவையா என்பதை பார்பனர்கள் தெளிவாக முடிவெடுத்தார்களா தெரியவில்லை, எல்லோருக்கும் தெரிந்தே 'இந்து'வை முன்னிறுத்தி இருக்கும் பிஜேபி உட்பட்ட பெரிய தேசிய கட்சிகள் அனைத்திலும் முதன்மைப் பொறுப்பில் இருப்பவர்களில் பெரும்பாண்மையினர் அவர்களே, பிறகு ஏன் தனி அடையாளத்துடன் ஒரு கட்சி ? எனக்கு தெரிந்து தலித் கிறித்துவ அமைப்பு போல் ஆரிய கிறித்துவர் என்ற அமைப்பெல்லாம் கிடையாது.

திரவிடம் என்பதே வெளைக்காரனின் சூழ்ச்சி, இந்தியாவில் அப்படியெல்லாம் கிடையாது, வடக்கு தெற்கை பிரிக்க இந்திய ஒற்றுமையைக் குழைக்க வெள்ளைக்கார பாதிரிமார்கள் கண்டு பிடித்தது தான் ஆரிய - திராவிட சித்தாந்தம் என்றெல்லாம் பார்பனர்கள் அடிக்கடிச் சொல்லுவார்கள். ஆனால் மறந்தும் கூட நாங்கள் 'ஆரியர்கள்' இல்லை, என்று சொல்வதில்லை, அதற்கு சாட்சியாக 'ஆரிய' அடைமொழி தாங்கிய நிறுவனப் பெயர்கள் இருக்கிறது. இப்போது கட்சியும் தோன்றப் போவதாக செய்திகள் வருகின்றது.

பார்பனர்களின் பலமே பின்னால் இருந்து செயல்படுவது தான், தற்போது வெளிப்படையாக சொல்லும் 'ஆரிய முன்னேற்றக் கழகம்' அவர்கள் மீது வெளிப்படையான வெறுப்பை வளர்க்கும், பார்பனர்களிலும் ஒரு சிலர் தவிர்த்து எந்த ஒரு சாதியும் இணையத்தில் குலப்பெருமை பேசுவதில்லை. 'திராவிடம்' என்றாலே முணுகும் பார்பனர்கள், 'ஆரிய' அடையாளத்தைத் துறக்காததும் விரும்பியே பரப்புவதும் ஏன் ?

சாதியை முன்னிறுத்தி கட்சி தொடங்கிய மருத்துவர் இராமதாஸ் கட்சி வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் சாதிக் கட்சி முத்திரையை நீக்கிக் கொள்ளவேண்டும் என்று நினைத்து 'பசுமை தாயகம்', 'பொங்கு தமிழ் மன்றம்' என்றெல்லாம் தலை நுழைத்து, திருமாவுடன் கைகோர்த்து பாமகவை பொதுப்படுத்த முடியுமா என்று முயற்சித்துக் கொண்டு இருக்கிறார். அவ்வளவாக அந்த திட்டங்கள் வெற்றிபெறவில்லை என்பது சென்ற தேர்தல் முடிவுகளின் மூலம் கண்கூடு. பார்பனர்கள் அல்லது எந்த சாதியும் கட்சி தொடங்கினால் அவற்றின் வளர்ச்சி குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்காது என்பதற்கு பாமகவே சாட்சியாக இருக்கிறது.

பார்பனர்கள் கட்சித் தொடங்கப் போவதை முன்கூட்டியே உளவுத்துறை மூலம் அறிந்த கருணாநிதி, இதைத் தான் 'மீண்டும் தொடங்கும் ஆரிய - திராவிடப் போர்' என்றாரோ.
:)

சாதிக்கட்சிகளால் அந்த சாதிக்கட்சி தலைவர்களையும் அவர்களது அடுப்பொடிகளையும் தவிர்த்து அந்த சாதி மக்கள் பெரிதாக பயனடைவது இல்லை. பார்பனர்களை ஒன்றாக கட்டி இணைப்பது பூணூல் அதையும் தாண்டி கட்சி அடையாளம் அவர்களுக்கு எதைப் பெற்றுத் தரும் என்று தெரியவில்லை.

இந்த கூத்தில் 'பார்பனர்கள் பிராமணர்களின் அடையாளத்தை பேனவில்லை' என்று குறை கூறும் பார்பனர் அல்லாதோர்களையும் 'எங்கே இருக்கிறான் பிராமணன் ?' என்று அடையாளம் தேடும் சாக்கில் பார்பனக் குலப் பெருமை இதுதான் என்று பொதுப்படுத்திக் காட்டி பழம் பெருமை மீட்க முடியுமா என்று நினைப்போரையும் என்ன சொல்ல ? வருண மரம் பட்டுவிடக் கூடாது என்று விரும்புகிறார்கள் என்பது தவிர்த்து. ஒன்றும் சொல்வதற்கில்லை.

இந்தியாவின் தெரிந்த 3000 ஆண்டு வரலாற்றில் எந்த ஒரு சாதியிலும் அந்த சாதியிலேயே பிறந்த வாரிசுகள் என்று எவரும் இருப்பதாகக் தெரியவில்லை. தோலின் நிறத்தை வைத்து சாதி அடையாளமும் சொல்லிவிட முடியாது, எல்லா சாதிகளிலுமே வெள்ளைத் தோலும், கருப்புத் தோல் உள்ளவர்கள் உண்டு. அந்த காலத்தில் யார் யாருடன் கூடிப் பெற்றுக் கொண்டார்கள் என்று எவருக்கும் தெரியாது, பிறகு எப்படி தன்னை சாதி அடையாளப்படுத்திக் கொள்ள முயன்று, அதையும் பெருமை பேசுகிறார்கள் என்பது வியப்பாகவே இருக்கிறது. எந்த ஒரு சாதி ஆணுக்கும் ஆண்குறி ஒன்றுதான். சாதி என்பது உண்மை, சமூகத் தேவை, கடவுள் அமைத்தது என்று நம்பினால், தலித் ஆணின் அல்லது பார்பன ஆணின் விந்தை ஏற்று கருத்தரிக்க முடியாதது இந்த சாதியின் கரு முட்டை என்று யாராவது சொன்னால் அந்த சாதி உயர்ந்த சாதி என்று நான் ஒப்புக் கொள்கிறேன்.

எல்லா சாதிக்காரர்களுமே சங்கம் வைத்திருக்கிறார்கள், ஆனால் அந்தந்த சாதியில் இருக்கும் ஏழைகளின் நிலை அப்படியே தான் இருக்கிறது. இதில் பார்பன ஏழைகளும் ஒன்றுதான், பறைய ஏழைகளும் ஒன்றுதான். 'சாதி' ஏழைகளுக்காக போராடுகிறேன் என்பதெல்லாம் சாதித் தலைமை, தலைவர் என்கிற வர்க்கவழி புகழ்பெற நடைபெறும் ஒருவகையான தனிமனித உத்தி மட்டுமே. அவரவர் உழைப்பில் தானே அவரவர் வயிறு நிறைகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் தவிர்த்து பிறர் தமது சாதிய அடையாளம் பேசுவதற்கான தேவை பெரிய அளவில் தற்பொழுது இல்லை. அப்படி இருந்தால் அந்தந்த சாதிகளை வளர்க்கும் பணக்காரர்கள் அந்தந்த சாதி ஏழைகளுக்கு பொருளியலில் உதவலாமே.

பின்குறிப்பு : நான் இங்கே பார்பனர் என்று குறிப்பிடுவது, தன்னை அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளும் பார்பனர் குறித்து தான், மற்றபடி அப்படி இல்லாதோர் பூணூல் அணிந்திருக்கிற ஒரே காரணத்தால் ஏனைய பார்பனர்களையும் பொதுப்படுத்திப் பேசுவதாக விசனப்பட்டால், அப்படி விசனப்படுபவர்களும் அதே குட்டையில் தான் இருக்கிறார்கள் என்பதை நான் சொல்லி உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை. எங்கோ எப்போதோ எவரோ எழுதியது தான் நினைவுக்கு வருகிறது 'திருடனைப் பற்றி குறை கூறினால் திருந்திய முன்னாள் திருடர்களுக்கும் கோவம் வருவது லாஜிக்காக உதைக்கும். அடையாளப் படுத்துவது என்பது வேறு அடையாளப்படுத்திக் கொள்வது என்பது வேறு. அடையாளப்படுத்துவது ஒருவரை பிடித்து குழியில் தள்ளிவிடுவது, அடையாளப்படுத்திக் கொள்வது தனக்குத் தானே குழியில் தள்ளிக் கொள்வது.

பிறப்பின் வழி பெருமை என்றால் அது நல்ல பெற்றோர்களுக்கு குழந்தையாக பிறந்து வளர்ந்து தனக்கும் அவர்களுக்கு பெருமை சேர்ப்பது பிறப்பின் வழியான பெருமை, அதையும் தன் இழிவுக்கு, தற்பெருமைக்குப் பயன்படுத்திக் கொண்டால் அந்த பெற்றோர்களுக்கும் இழுக்குதான். தத்தமது செயல்பாட்டில் ஒருவரின் தனிமனித செயல் குறித்தான பிறரின் பாராட்டுதலால் ஏற்படும் பெருமை உண்மையானது. மற்றபடி சாதியால் ஒருவனுக்கு பெருமை இருப்பதாக நான் கருதவில்லை.

11 கருத்துகள்:

ஷாகுல் சொன்னது…

நியாயமா அதிமுக தான் கவலை படனும். ஏற்கனவே விஜயகாந்த் ஒரு பக்கம் பிரிக்குறாரு. இப்போ ஆமுக வேறயா? கஷ்டகாலம் தான்.

மணிகண்டன் சொன்னது…

***
ஆனால் இது தேவையா என்பதை பார்பனர்கள் தெளிவாக முடிவெடுத்தார்களா தெரியவில்லை
***

எஸ் வீ சேகர் கட்சியா ? அவர் பார்ப்பனர் அனைவரின் ஆதரவும் பெற்றவரா ? அவர் அவங்க கிட்ட எல்லாம் பர்மிஷன் கேட்டுட்டு கட்சி ஆரம்பிச்சி இருக்காரா ?
தமிழ்நாட்டில் பத்து லட்சம் பார்ப்பனர்கள் இருப்பாரார்களா ? அவர்களில் ஐந்து சதவீத வாக்குகள் ஆவது இந்த கட்சிக்கு விழுமா ? வன்னியர்களின் வாக்குகள் பா ம க வுக்கு விழுவது போல். கவுண்டர்களின் வாக்குகள் அவர்களின் ஜாதி கட்சிக்கு விழுவது போல. பாப்பனர்களின் ஜாதி சங்கம் இந்தமுறை மதுரையில் அழகிரிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்களாம். பணம் எங்கு வருமோ அதற்கு தான் support கொடுப்பார்கள்.

அப்பாவி முரு சொன்னது…

//இந்தியாவின் தெரிந்த 3000 ஆண்டு வரலாற்றில் எந்த ஒரு சாதியிலும் அந்த சாதியிலேயே பிறந்த வாரிசுகள் என்று எவரும் இருப்பதாகக் தெரியவில்லை.//

தமிழ்நாட்டில் பழைய மன்னர் வரலாறுகளில் கூட இந்த கலப்பு திருமணங்கள் நிறையவே உண்டு. மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வழியாக கலப்பு திருமணங்கள் நிறைய நடந்தன.

கடந்த 300 வருடங்களில் தான் இந்த கூத்தெல்லாம். ஆங்கிலேயனும். அவனின் அடிவருடி பாப்பனார்களும் திரித்த திரிபுதான் இவை.

லக்கிலுக் சொன்னது…

பின்குறிப்பெல்லாம் தேவையே இல்லை :-)

நீங்க ‘நல்லவரு’ இமேஜுக்காக பி.கு. எழுதுவதாக எடுத்துக் கொள்ளப்படும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
பின்குறிப்பெல்லாம் தேவையே இல்லை :-)

நீங்க ‘நல்லவரு’ இமேஜுக்காக பி.கு. எழுதுவதாக எடுத்துக் கொள்ளப்படும்.
//

:)

லக்கி வடகலை அய்யங்கார்வாள்,

நாங்களும் பார்பனர்தான், நாங்களெல்லாம் அப்படியான்னு நீங்கள் கேட்டுவிடக் கூடாதில்லையா ?

அப்பாவி முரு சொன்னது…

//அப்படி இருந்தால் அந்தந்த சாதிகளை வளர்க்கும் பணக்காரர்கள் அந்தந்த சாதி ஏழைகளுக்கு பொருளியலில் உதவலாமே//

பொருளியலில் உதவுவது போல், தனது ஜாதியில் இருக்கும் ஏழைவீட்டில் பெண் குடுப்பதோ அல்லது பெண் எடுக்கலாமே. ஆனால் செய்ய மாட்டார்கள்.

நாமக்கல் சிபி சொன்னது…

//பொருளியலில் உதவுவது போல், தனது ஜாதியில் இருக்கும் ஏழைவீட்டில் பெண் குடுப்பதோ அல்லது பெண் எடுக்கலாமே. ஆனால் செய்ய மாட்டார்கள்//

அதானே!
நியாமான பேச்சு1

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

இன்னும் எத்தனை பிரிவுகள் வரப்போகுதோ ....

தெரியலியே....

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

எஸ்.வி.சேகரை பார்ப்பனர்களின் அத்தாரிட்டியாக எடுத்துக் கொண்டு...இப்பதிவு போடப்பட்டிருப்பதாக எண்னுகிறேன்.அவர் கட்சி ஆரம்பிக்கட்டும்..எத்தனை பேர் சேருகிறார்கள் என தெரிந்துவிடுமே!
அதுவரை அவருக்கு வீண்விளம்பரம் தர வேண்டாம்..

priyamudanprabu சொன்னது…

////
எந்த ஒரு சாதி ஆணுக்கும் ஆண்குறி ஒன்றுதான். சாதி என்பது உண்மை, சமூகத் தேவை, கடவுள் அமைத்தது என்று நம்பினால், தலித் ஆணின் அல்லது பார்பன ஆணின் விந்தை ஏற்று கருத்தரிக்க முடியாதது இந்த சாதியின் கரு முட்டை என்று யாராவது சொன்னால் அந்த சாதி உயர்ந்த சாதி என்று நான் ஒப்புக் கொள்கிறேன்.
//


சூப்பருங்க

priyamudanprabu சொன்னது…

///
எல்லா சாதிக்காரர்களுமே சங்கம் வைத்திருக்கிறார்கள், ஆனால் அந்தந்த சாதியில் இருக்கும் ஏழைகளின் நிலை அப்படியே தான் இருக்கிறது. இதில் பார்பன ஏழைகளும் ஒன்றுதான், பறைய ஏழைகளும் ஒன்றுதான். 'சாதி' ஏழைகளுக்காக போராடுகிறேன் என்பதெல்லாம் சாதித் தலைமை, தலைவர் என்கிற வர்க்கவழி புகழ்பெற நடைபெறும் ஒருவகையான தனிமனித உத்தி மட்டுமே. அவரவர் உழைப்பில் தானே அவரவர் வயிறு நிறைகிறது.
////


புரியவேண்டியவங்களுக்கு புரியனுமே..................

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்