பின்பற்றுபவர்கள்

23 ஜூலை, 2007

அரண்டவன் கண்ணுக்கு பதிவரெல்லாம் போலி.

திராவிட மற்றும் நடுநிலை பதிவர்களின் சிந்தனை கருத்துக்களுக்கு பதில் சொல்ல திரணற்ற ஒரு கும்பல் தமிழ்மணத்தின் மீது புழுதிவாரி இரைத்ததும், அதன் பிறகு தமிழ்மணத்துக்கு ஆதரவாக பல பதிவர்கள் தங்கள் பதிவின் பக்கத்தில் சாதி / மத வெறியர்களுக்கு கண்டனம் என்றும் பொறித்து வைத்தது கண்டனம் தெரிவித்ததையும் அனைவரும் அறிவர்.

அதன் பிறகு மேற்படி புழுதி புயல்கள் என்ன ஆனார்கள் என்று எவருக்கும் தெரியாது. அவர்களில் சில விஷமிகள் எனது நண்பர்கள் சிலருக்கு 'கோவி.கண்ணன் என்பவர் போலியா ?' என்பதை உறுதிப்படுத்தச் சொல்லி என்னுடைய தனிப்பட்ட தகவல்கள் கேட்டு இருக்கின்றனர்.

நானே கொடுக்கிறேன்.

நான் சொந்த பெயரிலேயே எழுதுகிறேன். எனது புகைப்படம் மட்டும் இணைக்கவில்லை. நானே சென்றும், மற்றும் என்னை சந்தித்த பதிவர்களின் எண்ணிக்கை 20 க்கும் மேற்பட்டவை.

நான் இதுவரை சந்தித்தவர்கள்,

1. விஎஸ்கே ஐயா (ஆத்திகம்)
2. வடுவூர் குமார்
3. குழலி (புருஷோத்தமன்)
4. துளசி கோபால்
5. நாமக்கல் சிபி
6. பொட்டிக்கடை சத்தியா
7. உடன்பிறப்பு (லக்கியின் நண்பர்)
8. ஜோ மில்டன்
9. சிங்கை நாதன்
10. சுப்பையா ஐயா
11. ஞான வெட்டியான் ஐயா
12. எல் எல் தாஸ்
13. பால பாரதி
14. பொன்ஸ்
15. புளியமரம் தங்கவேல்
16. லக்கி லுக்
17. இராஜ வனஜ்
18. திரு
19. விழிப்பு

மற்றும் சிலர்

இதைத்தவிர நான் தொலைபேசியில் உரையாடியது மட்டும் தினமும் சாட் செய்வது, தொடர்பு கொள்வது

1. சிவபாலன்
2. ஜிராகவன்
3. தருமி ஐயா
4. செந்தில் குமரன்
5. செந்தழல் ரவி
6. விடாது கருப்பு
7. மகேந்திரன்
8. என் எஸ் ஜெயகுமார்
9. சிறில் அலெக்ஸ்
10. இளா
11. முத்துகுமரன்
12. குமரன்
13. நாகை சிவா
14. வரவனை செந்தில்

மற்றும் பலர்.

*************


ஏனிப்படி சிலர் என்னை போலியாக நினைக்கவேண்டும் ?

எனது அண்மை கால இடுகைகளில் தமிழ் குறித்தும், ஆத்திக மூட நம்பிக்கை குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்களை எழுதி வருவதால். நான் எதோ ஒரு கூட்டத்தை எதிர்பதாகவோ, எங்கோ குத்துவதாகவும் எண்ணிக் கொண்டு என்னை போலி என்று சித்தரிக்க முயல்கின்றனர்.

என்னை போலி என்று நம்புபவருக்கு,
எனக்கோ போலிக்கோ எநத ஒரு தொடர்பும் இல்லை என்று என்னை அறிந்த நண்பர்களுக்கு நன்கு தெரியும். உங்களை திசைத்திருப்பவும் ஆதரவாக செயல்படவேண்டும் என்பதற்காக தவறான தகவல் தரும் உங்கள் நண்பரை சந்தேகியுங்கள்.

பூந்தியா ? இலட்டா ? - என்று ஞானவெட்டியான் அவர்கள் தமிழுக்கு ஆதரவான பதிவொன்றை இட்டு இருக்கிறார்.

வளவு இராமகி ஐயா - முழுக்க தமிழ் குறித்து எழுதுகிறார்

தருமி ஐயா திராவிட கருத்தாங்களை கொண்டிருக்கிறார் .... இவர்களையெல்லாம் எப்போது போலியாக பார்க்கப் போகிறீர்கள் ?

கண்ணையும், எண்ணங்களையும் தூய்மை படுத்திக் கொள்ள எதாவது 100 விழுக்காடு புண்ணிய தலம் ஒன்று இருப்பது தெரியவந்தால் போலி பித்து பிடித்த அந்த ந(ண் ?)பர்கள் தீர்த்த யாத்திரை சென்று எலுமிச்சை தேய்து குளித்துவிட்டு வரவும்.

போலித் தனங்களையே இணைய திண்ணையில் கட்டுரையாக கடைவிரித்ததில் அம்பலப்பட்டுக் கிடப்பவர்களுக்க்கு போலி குறித்த அச்சமா ? சிரிப்பு வருகிறது ஐயா :)))

- அடுத்து தம்மீது போலி முத்திரை குத்தப்பட்ட பதிவர் எவரேனும் இருந்தால் தனி இடுகை இடலாம்.

அன்புடன்,

கோவி.கண்ணன்

35 கருத்துகள்:

தருமி சொன்னது…

//புகைப்படம் மட்டும் இணைக்கவில்லை. //

நான் புகைப்படம் இணைத்தும் நான் ஒரு போலி என்று சொல்லவும் சிலர் இருந்தனர் / இருக்கின்றனர் !!

பதிவுலகத்தில் இதெல்லாம் சகஜமப்பா ..!

அய்யனார் சொன்னது…

அது எல்லாம் இருக்கட்டும்.
எங்க தலைக்கு வாழ்த்து சொன்னீங்களா?

தமிழ் சொன்னது…

பதிவுலகத்தில் இதெல்லாம் சகஜமப்பா ..!
கண்டனத்தையும் கண்ணியத்துடன் தெரிவித்தையே அருமை.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

என்னங்க பதிவு பக்கம் கொஞ்சம் நாளா வரலை என்ன இது திடீருன்னு? இந்த மாதிரி பேச்செல்லாம் கண்டுக்காதீங்க.

அபி அப்பா சொன்னது…

தருமி சார், நீங்க டிபிஆர் ஜோஸப் மாதிரி திரும்பி நின்னு போட்டோ போட்டா எப்படி சார் முகம் தெரியும்:-))

லக்கிலுக் சொன்னது…

//"அரண்டவன் கண்ணுக்கு பதிவரெல்லாம் போலி." //

கண்ணு தெரியாத கெழங்களுக்கு எல்லாமே போலியாக தான் தெரிகிறது. என்னத்தைச் சொல்ல?

Unknown சொன்னது…

நானும் போலிதான் என்னையும் ஆட்டத்தில சேத்துக்கோங்க

Unknown சொன்னது…

//"அரண்டவன் //

ஸ்பெல்லிங் மிஸ்டேக்? என்ன ஜிகே கொடுமை?

தருமி சொன்னது…

அபி அப்பா,

அந்தக் கதை உங்களுக்குத் தெரியாதா? மொதல்ல எல்லாம் ஒழுங்காதான் ஒரு போட்டோ போட்டிருந்தேன். ஆனா மூஞ்ச பாத்துட்டு நம்ம ஆளுங்க சொன்ன comments தாங்க முடியாம, இப்படி ஒரு படம் போட்டுட்டேங்க... என்ன செய்றது நம்ம "முகராசி"... :)

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

அதென்ன - //டிபிஆர் ஜோஸப் மாதிரி திரும்பி நின்னு போட்டோ போட்டா .../

டிபிஆர் ஒழுங்காதான போட்டோ போட்டிருக்கார்?

SP.VR. SUBBIAH சொன்னது…

அதெல்லாம் டென்சனாக வேண்டாம்!
டேக் இட் ஈஸி!

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
நான் புகைப்படம் இணைத்தும் நான் ஒரு போலி என்று சொல்லவும் சிலர் இருந்தனர் / இருக்கின்றனர் !!

பதிவுலகத்தில் இதெல்லாம் சகஜமப்பா ..!
//

தருமி ஐயா,

உங்களுக்கு 'மதம்' பிடிக்காததால் அவர்களுக்கு 'மதம்' பிடித்து இருக்கிறது போலும்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அய்யனார் ரசிகர் மன்றம் said...
அது எல்லாம் இருக்கட்டும்.
எங்க தலைக்கு வாழ்த்து சொன்னீங்களா?
//

உங்க தலைக்கு test பதிவிலேயே வாழ்த்து சொல்லி ஆயிற்று. நான் தான் முதல் ஆள் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//திகழ்மிளிர் said...
பதிவுலகத்தில் இதெல்லாம் சகஜமப்பா ..!
கண்டனத்தையும் கண்ணியத்துடன் தெரிவித்தையே அருமை.
//

இதிலாவது தெரிந்து கொள்ளடுமே அனுகுமுறை வேறுபடுவதை.

நன்றி திகழ்மிளிர் !

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...

கண்ணு தெரியாத கெழங்களுக்கு எல்லாமே போலியாக தான் தெரிகிறது. என்னத்தைச் சொல்ல? //

லக்கி,

நீங்க தான் 'ஓசி' கண்ணாடி வாங்கி கொடுத்து 'பார்வையை' சரிசெய்ய முயலுங்களேன். மகரநெடும்குலைகாதன் காப்பான் உங்களை.

கோவி.கண்ணன் சொன்னது…

// மகேந்திரன்.பெ said...
//"அரண்டவன் //

ஸ்பெல்லிங் மிஸ்டேக்? என்ன ஜிகே கொடுமை?
//

விடா 'கண்டன்கள்' செய்யும் கொடுமை சாரே.

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR.சுப்பையா said...
அதெல்லாம் டென்சனாக வேண்டாம்!
டேக் இட் ஈஸி!
//

டென்சன் இல்லை ஐயா,

அந்த சந்தேகப் பேய்க்கு வேப்பில்லை அடித்தேன். அவ்வளவே...அப்போ சாமி ஆடினால் தானே அடிக்க முடியும் ?
:))

கருப்பு சொன்னது…

நீலகுண்டனை வைத்து காமெடி கீமெடி ஒன்னும் செய்யலியே?

வடுவூர் குமார் சொன்னது…

கோவி.கண்ணன் போலி இல்லை.
ஆமாம் நான் சொல்லி கேட்பார்களா? என்ன!!

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
கோவி.கண்ணன் போலி இல்லை.
ஆமாம் நான் சொல்லி கேட்பார்களா? என்ன!!
//

குமார்,

லாஜிக் இடிக்குது,

நான் போலி இல்லை என்று உறுதியாக சொன்னால் உங்களுக்கு போலியை தெரிந்திருக்கும். மாட்டிக்கிட்டிங்களா ?
:))

ஜோ/Joe சொன்னது…

//பதிவுலகத்தில் இதெல்லாம் சகஜமப்பா ..! //

ரிப்பீட்டே!

நாமக்கல் சிபி சொன்னது…

//நானும் போலிதான் என்னையும் ஆட்டத்தில சேத்துக்கோங்க //

எல்லாரும் பார்த்துக்குங்க
நானும் போலிதான் !
நானும் போலிதான் !
நானும் போலிதான் !

நாமக்கல் சிபி சொன்னது…

//நானும் போலிதான் என்னையும் ஆட்டத்தில சேத்துக்கோங்க //

அப்படிப் பார்த்தா

எனக்கும் போலி ஃபிரண்டு!

Unknown சொன்னது…

இத்தனை பதிவு போடறீங்க.
எஸ்கே ஐயா தங்களை நேரில் சென்று சந்தித்ததை பதிவிட்டார்.
நீங்களும் பதிவிட்டிருந்தீர்கள். உங்கள் பதிவை ஒரு முறை திருப்பிப் பார்த்தாலே எல்லாம் விளங்கும். லூசுப்பயல்கள் - கண்டுக்காதீர்கள்!
ஒரு வேளை நிறைய பதிவு போடுவதால் ஒரு குரூப் என்று முடிவ செய்தார்களோ - என்ன எழவோ!

குமரன் (Kumaran) சொன்னது…

நீங்களா? போலியா? நல்ல நகைச்சுவை. :-)

தருமி ஐயாவும் போலியா? அப்படி போடுங்க. :-)

சிபி போலியா? அது கொஞ்சம் நம்புற மாதிரி இருக்கு. பெயர் சொல்லாம எழுதும் எல்லாருமே சிபி தான். இல்லையா சிபி? :-))))

நாமக்கல் சிபி சொன்னது…

//சிபி போலியா? அது கொஞ்சம் நம்புற மாதிரி இருக்கு. பெயர் சொல்லாம எழுதும் எல்லாருமே சிபி தான். இல்லையா சிபி? :-))))//

ஆதாரங்களை அள்ளிக்(எடுத்துக்)கொடுக்கும் குமரன் வாழ்க!

:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
//பதிவுலகத்தில் இதெல்லாம் சகஜமப்பா ..! //

ரிப்பீட்டே!
//

ஜோ,

தமிழ்மணமே போலியின் திரட்டி என்று சொல்லாதவரை இதெல்லாம் சகஜமா ?

:))

கோவி.கண்ணன் சொன்னது…

//விடாதுகருப்பு said...
நீலகுண்டனை வைத்து காமெடி கீமெடி ஒன்னும் செய்யலியே?
//

நீலகண்டன் தெரியும்...நீல குண்டன் யார் ?

அகப்பயணம் எழுதும் இந்துத்துவ அரவிந்தன் நீலகண்டன் கேள்விப்பட்டு இருக்கிறேன். திண்ணையில் அசத்தலாக படம் போட்டு போட்டு எழுதுவாரே அவரை சொல்லவில்லை தானே தாங்கள் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said...

எல்லாரும் பார்த்துக்குங்க
நானும் போலிதான் !
நானும் போலிதான் !
நானும் போலிதான் !
//

3 பேர் போலியாக இருக்கிங்களா ? யார் யாரு ?

VSK சொன்னது…

என் பத்தரை மாற்றுத் தங்கத்தைப் போலி எனச் சொன்னது யார்?

லூஸ்ல விடுங்க கோவியாரே!

சிறில் அலெக்ஸ் சொன்னது…

அட அவ்வளவு பேமசாயிட்டீங்களா நீங்க !!!

:))))

Santhosh சொன்னது…

கோவியாரே உங்களை பத்தி தான் பெரும்பான்மையானோருக்கு தெரியுமுல்ல இதுக்கு எல்லாம் பதிவு போடணுமா என்ன? freeah விடுங்க.

சிவபாலன் சொன்னது…

// அட அவ்வளவு பேமசாயிட்டீங்களா நீங்க !!! //

ரிப்பீட்டே!

கோவி.கண்ணன் சொன்னது…

//^^^^D^D^^^^ has left a new comment on your post "அரண்டவன் கண்ணுக்கு பதிவரெல்லாம் போலி.": உமது சேர்மானம் சரியில்லை. வேற எனன சொல்றது. போலி டோண்டு சர்டிபிகேட் எல்லாம் நம்பி நிற்க்கும் நீர் அய்யோ பாவம்..மணி ஒண்னாக போகுது போய் தூங்கு//

மூத்தபதிவர் என்று சொல்லிக் கொண்டு பலரிடம் மொத்துவாங்கும் நபர் அனுப்பிய பின்னூட்டம் இது... நெனப்புதான் பொழப்பை கெடுக்குதாம்...இது ஒழுங்காக இருந்தால் அவன் ஏன் பிச்சருக்கு வரப்போகிறான் ?

என் வேலையை நான் பார்க்கிறேன். அவரவருக்கு கழுவிக் கொள்ளத் தெரியும்.

நாமக்கல் சிபி சொன்னது…

//3 பேர் போலியாக இருக்கிங்களா ? யார் யாரு ?
//

கோவி கண்ணன்
மகேந்திரன்.பெ
நாமக்கல் சிபி

கோவி.கண்ணன் சொன்னது…

//சிறில் அலெக்ஸ் said...
அட அவ்வளவு பேமசாயிட்டீங்களா நீங்க !!!

:))))
//

சிறில்,

'அட அவ்வளவு பேசமாட்டீங்களே நீங்க' ... என்று சொன்னது போல் இருந்தது.

:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்