பின்பற்றுபவர்கள்

1 ஜூலை, 2007

தமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா ?

இந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான் தேர்தல் ஆணையம் செயல்பட்டுவருகிறது. மக்கள் ஆட்சி என்னும் மாளிகையின் உளுத்துப்போன தூண்களாக மா(ற்)றிவரும் ஜனநாயக தேர்த்தல் கூத்துக்களில் ஒன்றாக 6 வருடங்களுக்கு முன்பு அரங்கேறி இருக்கிறது ஒரு கேலி கூத்து.

அதாவது 2001ல் தமிழக சட்டமன்ற தேர்தலில் விதிகளுக்கு புறம்பாக ஜெயலலிதா 4 இடங்களில் போட்டி இட்டதாகவும், தான் 2 இடங்களுக்கு மேல் போட்டி இடவில்லை என்று ஒவ்வொரு தொகுதியிலும் கையெழுத்து இட்டு கட்சியின் முதன்மை பொறுப்புகளில் இருந்தவர்கள் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும் கோமாவில் இருந்து எழுந்த ஒரு சர்சையை திமுகவின் சீனியர் எம்பியும் தொழிற்சங்க தலைவருமான குப்புசாமி என்பவர் எழுப்பி நீதிமன்றத்தில் இதுபற்றிய வழக்கு ஒன்றை தொடுத்து இருக்கிறார்.

நீதிமன்றம் இவ்வழக்கை ஏற்றுக் கொண்டு தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு இருக்கிறது. இதில் என்ன இருக்கிறது ? சட்ட ரீதியாகத்தானே பிரச்சனையை அணுகுகிறார்கள் என்று தானே தெரிகிறது ! என்கிறீர்களா ? இதில் ஜெ தவறு செய்தாரா ? அப்படி செய்திருந்தால் தண்டனை பெறத்தகுந்தவரா ? என்ற சர்சைகளை இங்கே தூரம் வைக்கிறேன். இங்கு சொல்ல வருவது என்னவென்றால் செல்லறித்துப்போன அரசு துறையில் படிந்துள்ள நடைமுறை அவலங்களைத்தான் இந்த வழக்கு காட்டுகிறது.

தமிழ்நாட்டில் எந்த ஒரு நபரின் பெயரும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளின் வாக்களர்கள் பட்டியலில் பெயர் இருந்தால் மோப்ப நாயை வைத்து கவ்வி கண்டுபிடிப்போம் என்று மார்தட்டும் தேர்தல் ஆணையம். முதல்வராகவும், ஒரு கட்சி தலைவியும் 4 இடங்களில் மனுதாக்கல் செய்கிறார் என்ற விசயம் அதே நாளில் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவதற்கு வாய்பே இல்லையா ? புறாக்களின் மூலம் கடிதங்களும், தபால் அலுவலகம் மூலமும் தான் தமிழக தேர்தல் தலைமை ஆணையம் வேட்பு மனுதாக்கல் செய்யப் பட்டவர்களைப் பற்றிய தகவல்களை பெற்று வருகிறதா ? வாக்கெடுப்பை உலகிலேயே முதன் முறையாக கணனி மயப்படுத்தினோம், எலக்டானிக் வாக்கெடுப்பு என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் தேர்தல் ஆணையத்திற்கு, ஜெயலலிதாவின் பெயரை நான்கு சட்டமன்ற தொகுதிகளில் முன்மொழிந்தது பற்றி அதே நாளில் எதுவுமே தெரியமல் இருப்பதற்கான சாத்தியம் இல்லாதிருக்கும் ?

இந்தவழக்கில் முக்கிய சாட்சியாக தான் இரண்டு இடங்களுக்கு மேல் மனுதாக்கல் செய்யவில்லை என்ற படிவம் இருப்பதாக நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறார்கள். ஜெயலிதாவின் வேட்பு மனுவை மனுபரிசீலனை அன்றே பரிசீலித்து நான்கு இடங்களில் போட்டி இட்டு இருப்பதை காரணமாக சொல்லி தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்திருக்க முடியும். (நான்கு இடங்களிலுமே டான்சி வழக்கில் கிடைத்த தண்டனை மூலம் தள்ளுபடியானதும், இடைதேர்தல் மூலம் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானது வேறுவிசயம்)

அன்று தேர்தல் ஆணையம் அனுமதித்த ஒன்றை இன்று முறைகேடான ஒன்றாக சொல்லி திமுக அரசு கையில் எடுத்துக் கொண்டு, ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வருகிறது. இந்த வழக்கில் ஞாயமாகப் பார்த்தால் இந்த வழக்கு நடப்பதற்கு முக்கிய காரணியாக அமைந்த தேர்தல் ஆணையத்தின் பொறுப்பற்ற தன்மைக்காக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து, அன்றைய தேர்தல் தலைமை அதிகாரியாக (சாரங்கி ?) இருந்தவருக்கு தான் தண்டனைகள் பெற்றுதரவேண்டும்.

பொறுப்பற்ற அரசு அதிகாரிகளின் நேர்மையற்ற செயலால் இந்த வழக்கு ஜெயலலிதாவின் மீது உள்ள குற்றமாக மட்டுமே திசைத்திருப்பபட்டுள்ளது. ஜெயலலிதா அரசியல் நாகரீகம் தெரியதவர் என்ற பின்பாட்டை செய்தியாளர்கள் கூட்டத்தின் முன்பாக பாடிவரும் திமுக அரசு எதிர்கட்சி அரசியலை ஜனநாயக ரீதியில் அணுகாமல் குறுக்குவழியில் செல்வது நாகரீகமான அரசியல் அல்ல, பச்சை அரசியல் தனத்தை விட்டுவிட்டு, மக்கள் செல்வாக்கை பெற மக்கள் நலதிட்டங்களின் மீது நம்பிக்கை வைத்து செயல்படலாம்.


தேர்தல்மீதே நம்பிக்கை இல்லாதவர்கள் என்று சிலர் இருக்க, தேர்தல் ஆணையத்தின் மீதும் நம்பிக்கையற்ற சூழல் நடந்துவருவது வருத்தம் அளிக்கிறது.

13 கருத்துகள்:

Thamizhan சொன்னது…

இந்தியத் தேர்த ஆணையத் தலைமை உச்ச நீதிமன்ற நீதிபதிக்குச் சமமானது.இதற்கு வேறு ஆட்களே கிடைக்காத மாதிரி பச்சைப் பார்ப்பனர்கள் டி.என்.சேஷ்ன் போன்றோரையேப் போடுவதும்,அவர்கள் விருப்பபடிக் கூத்தடிப்பதும் கேலிக்குறியதாகி விட்டது!
பிராமினொகிரசியின் உச்ச கட்டமாக விளங்குகிறது.
இந்திய அரசியல் ஆணையத்தின் தலைமை ஆளுநர் குடும்ப சம்மேளன்மாக ராமேசுவரம் கோவிலுக்குச் சென்று வழி பட்டுச் சகல் மரியாதைகளுடனும் சென்றார்.
மானமும்,இந்திய அரசியல் சட்டத்தின் மீது மரியாதையும் இருந்தால் மரியாதையாகச் சொந்தச் செலவிலே சென்றேன் என்று அறிவித்து உள்ள பணத்தை அரசுக்குச் செலுத்த வேண்டும்,இல்லை அக்கிரஹாரத்தில் போய் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.

நாகை சிவா சொன்னது…

//"தமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா ?" //

அண்ணன், அவங்க என்னமோ இப்ப முழிச்சு இருக்குற மாதிரி இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா?

மதுரையில் பணம் விளையாடுகிறது, தேர்தல் தள்ளி வைத்தாலும் வைக்கப்படும் என்று ஒரு வார்த்தை சொன்னதுக்கு வந்த ரியாக்ஷ்ன்ல தேர்தல் ஆணையமே அதிர்ந்து போச்சுல....

அப்புறம் என்னத்த சொல்ல....

சிவபாலன் சொன்னது…

ம்ம்

என்னமோ நடக்கிறது மர்மமாக இருக்கிறது

நாகை சிவா சொன்னது…

என்ன பொறுத்த வரைக்கும் இந்தியாவில் 5 வருடத்துக்கு ஒரு முறை ஒரு மூன்று மாதங்களை தேர்ந்து எடுத்து தேர்தல் திருவிழா என்று சொல்லி இந்தியா முழுவது இந்த மூனு மாசத்துல தேர்தல் நடத்தி மீத இருக்குற 4 வருசம் 9 மாதம் நம்மள நிம்மதியா இருக்க விட்டா நல்லா இருக்கும்...

இடையில் சில காரணங்களால் காலியாகும் பதவிகளுக்கு கவர்னர் அல்லது வேறு ஆட்கள் கிழே கொண்டு வந்து விடலாம்....

3 மாதம் பத்தாது என்றால் 6 மாதம்...

ஆனால் இது எல்லாம் நடக்குமா?

கோவி.கண்ணன் சொன்னது…

// நாகை சிவா said...
மதுரையில் பணம் விளையாடுகிறது, தேர்தல் தள்ளி வைத்தாலும் வைக்கப்படும் என்று ஒரு வார்த்தை சொன்னதுக்கு வந்த ரியாக்ஷ்ன்ல தேர்தல் ஆணையமே அதிர்ந்து போச்சுல....

அப்புறம் என்னத்த சொல்ல....
//

தம்பி சிவா,

தேர்தல் அதிகாரிகள் பயப்படுகிறார்கள் என்கிறீர்கள். இங்கு என்னால் பணிபுரிய முடியாது என்று வெளிப்படையான காரணங்களை சொல்லிவிட்டு மாற்றல் கேட்டுக் கொண்டு செல்லலாமே ? மக்களும் விழித்துக் கொள்வார்களே !

அப்படி செய்யாமல் இருப்பதும் கோழைதனம் தானே ?

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் said...
ம்ம்

என்னமோ நடக்கிறது மர்மமாக இருக்கிறது
//

மர்மம் ஒன்றும் இல்லை சிபா,

எல்லாம் வெளுக்கிறது !
:)

நாகை சிவா சொன்னது…

//அப்படி செய்யாமல் இருப்பதும் கோழைதனம் தானே ? //

கோழைத்தனமா என்பது எல்லாம் எனக்கு தெரியல?

கண்ணன் அண்ணன், இது தேர்தல் ஆணையத்துல மட்டுமா நடக்குது, அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு வளைஞ்சு கொடுக்காம நேர்மையா இருந்துட்டா தான் எந்த பிரச்சனையும் இல்லையே... அதானே நம் நாட்டுல நடக்க மாட்டேங்குது... அந்த ஆட்சி நடக்கும் போது அவனுக்கு சேவை பண்ண வேண்டியது, இந்த ஆட்சி வந்தது இவனுக்கு சேவை பண்ண வேண்டியது.... அதனால் கிடைக்கும் ஆதாயத்தை வைத்து தானும், தன் குடும்பத்தையும் வளர்க்க வேண்டியது... ஒரு அதிகார மையமாக உருவாக வேண்டியது...

இப்படி எல்லாம் செய்து யாருக்கு ஊழியம்(மக்கள்) பாக்க வேண்டுமோ அவர்களுக்கு சங்கு ஊதுக்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

தமிழன்,

உங்கள் பின்னூட்டத்தை பிறகு வெளி இடுகிறேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்

ILA (a) இளா சொன்னது…

//ஜெயலலிதா அரசியல் நாகரீகம் தெரியதவர்//
:)

Pot"tea" kadai சொன்னது…

//"தமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா ?"//

அவுசுதிரேலிய டைம் பீஸ் வாங்கி அனுப்பவா?

மத்தபடி பாயிண்ட்ஸ்லாம் சர்தான்... அதிகாரிகளுக்கு பதவியைவிட உயிர்பயம் அதிகமுங்கோகோகோகோகோகோ..

அமுக
அவுசுதிரேலியா

லக்கிலுக் சொன்னது…

//அன்று தேர்தல் ஆணையம் அனுமதித்த ஒன்றை இன்று முறைகேடான ஒன்றாக சொல்லி திமுக அரசு கையில் எடுத்துக் கொண்டு, ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வருகிறது. //

உங்களது பதிவுகளில் இப்போதெல்லாம் தகவல் பிழைகள் அதிகமாகி வருகிறது :-)))))

ஜெயலலிதா மீது வழக்கு தொடருவது தமிழக அரசல்ல. திராவிட முன்னேற்றக் கழகத்தின் குப்புசாமி தான் கட்சி சார்பாக வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு 5 ஆண்டுகளாகவே நடைபெறுகிறது. வழக்கினை தொடர்ந்திருப்பது தமிழக அரசல்ல.

மாமியார் உடைத்தால் மண்குடம்
மருமகள் உடைத்தால் பொன்குடம்

கொஞ்ச நாட்களாக உங்களுக்கு திமுக மருமகள் ஆகிவிட்டது தெளிவாக தெரிகிறது :-)))))

தருமி சொன்னது…

அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு வளைஞ்சு கொடுக்காம நேர்மையா இருந்துட்டா தான் எந்த பிரச்சனையும் இல்லையே... அதானே நம் நாட்டுல நடக்க மாட்டேங்குது... //

ரிப்பீட்டே ... :(

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said... தமிழக அரசல்ல. திராவிட முன்னேற்றக் கழகத்தின் குப்புசாமி தான் கட்சி சார்பாக வழக்கு தொடர்ந்திருக்கிறார்//

லக்கி,

ரொம்ப தெளிவாக சொல்லி இருக்கிங்க, நானும் திமுக அரசு என்று தான் சொல்லி இருக்கேன், தமிழக அரசு என்று சொல்லவில்லை.

:)

திமுக அரசும், தமிழக அரசும் ஒன்றா இல்லையா ? கட்சி வேறு... அது நடத்தும் அரசு வேறு என்று தெரியாமல் தெளிவற்று எழுதிவிட்டேனோ ?

:)

லக்கி, கலைஞரை பிடிக்கும், அதற்காக திமுக அரசை விமர்சிக்கக் கூடாதென்ற கொள்கை வெறி எல்லாம் எனக்கு இல்லை.
:))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்