பின்பற்றுபவர்கள்

22 ஜூலை, 2007

மொக்கை பதிவை எப்படி சூடாக்குவது ?

நீங்கள் எழுதுவது மொக்கையா என்று மற்றவர்கள் தான் தீர்மானிப்பார்கள். எனவே மொக்கை குறித்த கவலையை தள்ளி வையுங்க. நாம் தலைப்பைப் பார்ப்போம்.

சிலர் மொக்கையாக எழுதியும் சூடான இடுகையில் எப்படி வருகிறது என்று பலருக்கும் மில்லியன் மொக்கை கேள்விகள் இருக்கும் அது எப்படி என்று பார்ப்போம்.

1. அதிவேக பிராட் பேண்ட் கனெக்சன் இருப்பது நல்லது...ஏனென்றால் சூடாகும் நேரம் குறையும்.
2. முதலில் ஒரு பதிவை எழுதி தமிழ்மணத்தில் சேர்க்கவும்.
3. அதன் பிறகு சாப்பாடு, மற்றும் தண்ணீர், புகை பழக்கம் இருந்தால் கோல்ட் ப்ளாக் பில்டர் அல்லது ஏதோ காஜா பீடி வசதிக்கு ஏற்றவாறு அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.
4. அடுத்து 5 மணி நேரம் மிக முக்கியமானது. இதை எவ்வளவு வேகமாக செய்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் சூடான இடுகை ஆகும்.
5. தமிழ்மணம் முகப்புக்கு சென்று உங்கள் இடுகையை சொடுக்குங்கள்... அடுத்து
6. உங்கள் இடுகை தனிப்பக்கத்தில் தெரியும் ....இங்கே கவனமாக இருக்கவேண்டும்...உங்கள் பக்கம் தெரிய ஆரம்பித்ததும் தமிழ்மணம் கருவி பட்டை தெரியும்...உடனே உங்கள் பக்கத்தை மூடிவிடுங்கள். உங்கள் ப்ளாக் முழுவதும் தெரிவதற்குள் மூடிவிட்டால் நேரவிரயம் குறையும்
சரி மூடிவிட்டு ?
7. திரும்பவும் தமிழ்மண முகப்பில் உள்ள உங்கள் இடுகையை சொடுக்குங்கள்...உங்கள் இடுகையின் கருவிபட்டை தெரிய ஆரம்பித்ததும் மூடுங்கள்
8. மேற்கண்ட 5 முதல் 7 வரை உள்ள குறிப்பின் படி மீண்டும் மீண்டும் செய்யுங்கள்...அதன் பிறகு 1 மணி நேரத்திற்குள்ளாகவே உங்கள் இடுகை சூடான இடுகையின் கீழ் பகுதியில் தெரிய ஆரம்பிக்கும். அதன் பிறகு டீ யோ காபியோ குடித்துவிட்டு திரும்ப திரும்ப தமிழ்மணத்திலிருந்து சொடுக்குங்கள். அப்பறம் என்ன ?
9. சூடான இடுகையில் எவ்வளவு உயரம் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கிறதோ அங்கேயே நிறுத்திவிடலாம்.
10. தமிழ்மணத்தில் இருந்து உங்கள் இடுகையை சொடுக்கினால் மட்டுமே சூடான இடுகைக்கு செல்லும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இப்பொழுது புரிகிறதா ? மொக்கையை எழுதிவிட்டோம் என்ற கவலையே தேவை இல்லை.

மனது வைத்தால் வெறும் தலைப்பை எழுதிவிட்டால் கூட சூடான இடுகைதான்.

6 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

அடப்பாவிங்களா இதான சூடு ஏற்றும் வழி ... இப்படித்தானா எல்லாம் சூடான பதிவு போடுறாங்க, பூரா பய புள்ளைங்களும் களவானி பசங்களாவே இருக்காங்களே... உருபடுமா நாடு? இத்தன நாளா இது தெரியாம போச்சே!

ILA (a) இளா சொன்னது…

மொக்கைப் பதிவை மொக்கயாக போடாமல் இப்படி அறிவு நுட்பத்துடன் பதிவிடுவது அமுக அணியினரை எதிர்ப்பதாகும்

ILA (a) இளா சொன்னது…

என்ன என் பதிவுக்கு எதிர் பாட்டா இந்த பதிவு.

Pot"tea" kadai சொன்னது…

உங்களுக்கு இன்னும் மொக்கை சர்டிபிகேட் வரலையா?

சரியான மொக்கச்சாமி பதிவு!!!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//மற்றும் தண்ணீர், புகை பழக்கம் இருந்தால் கோல்ட் ப்ளாக் பில்டர் அல்லது ஏதோ காஜா பீடி வசதிக்கு ஏற்றவாறு அருகில் வைத்துக் கொள்ளுங்கள்//

தண்ணீர் = ? :-)
காஜா பீடி = நியுயார்க்கில் தேடி விட்டுத் தகவல் தாரேன் GK! :-)))

//சூடான இடுகையில் எவ்வளவு உயரம் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கிறதோ அங்கேயே நிறுத்திவிடலாம்//

போதும் என்ற மனமே, சூடு செய்யும் மருந்து? :-)))

முரளிகண்ணன் சொன்னது…

தொழில் நுட்பம் ஹா ஹா ஹா

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்