பின்பற்றுபவர்கள்

26 ஜூன், 2007

கலாம் முடிவு - ஒரு தேசிய நலன் !

கலாம் என்ற பெயரைக் கேட்டுக்கொண்டே இருக்'கலாம்' என்று இந்தியர் அனைவரும் மனம் மகிழும் ஒரு அற்புதமான பெயர். பொதுவாழ்க்கை ஒன்றை மட்டுமே அறிந்த ஆண் தெரசா அறிவு ஜீவி. வகித்தது அலங்கார பதவி என்றாலும் அவர் அதை வகித்ததில் அந்த பதவி கூட அழகாக இருந்தது.

'நல்லோர் ஒருவர் உளரே அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை' - நம் அரசியல் வாதிகள் அதையே சற்று மாற்றி நல்லவர் கலாம் ஒருவரே உள்ளாரே அவர் பெயரைச் முன்மொழிவோருக்கெல்லாம் ஓட்டு கிடைக்கலாம் என்று நினைத்தார்கள் போலும். ஐந்தாண்டு பதவியில் இருக்கும் போது இதுவரை எவருமே மீண்டும் கலாம் தான் அதிபராக வரவேண்டும் என்று சொன்னது போல் தெரியவில்லை. தன்னலமற்ற கலாம் கூட அவ்வாறுதான் நினைத்திருப்பார்.

இழந்த செல்வாக்கை எப்படி தூக்கி நிறுத்த முடியும் என்று கணக்கு போட்ட பாஜாகவும், மூடங்கிய தலைவர்கள் சேர்ந்து உருவாக்கிய மூன்றாவது அணிக்கும் அருள்பாலிக்கும் கடவுளாக கலாம் தெரிந்திருப்பார் போலும். தமிழர் நலன், தமிழருக்கு பெருமை, நல்லவர் நீடிக்கலாம் என்ற இனிப்புகளை தூவி தூவி கலாமை வரவேற்பது போல அறிக்கைகளை வெளியிட்டனர். இவையெல்லாம் உண்மையாக இருக்குமோ என்று கலாம் கூட நினைத்திருக்கலாம் ஏனென்றால் அவர் அரசியல்வாதிகளை மனிதர்களாக பார்த்திருப்பார் போலும்.

நல்ல உள்ளங்களுக்குத்தான் தெரியுமே, இதன் படி லட்சக்கணக்கான ஈமெயில்கள் அரசியல் வாதிகளின் ஓட்டுப் பொறுக்கும் பேராசையை அம்பலப்படுத்தி கலாமுக்கு செல்ல, சுதாரித்துக் கொண்டு நல்ல முடிவெடுத்துவிட்டார். அதிபர் கலாமின் தீர்கமான முடிவுக்கு வாழ்த்துக்கள். அவர் பதவியில் இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன அவர் இந்திய நலன் குறித்து தெரிவுக்கும் யோசனைகளை எந்த அரசியல் வாதியும்,புதிய அதிபரும் கூட நிராகரிக்க முடியாது. அவருடைய கவுரவம் இனி எந்த நிலையிலும் உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.

கருணாநிதி தமிழர் அதிபராக வருவதை தடுத்துவிட்டார் என கலாமின் பெயரைச் சொல்லி ஓட்டுப் பொறுக்கலாம் என்ற பேராசையில் செங்கல்லே விழுந்தவர்கள் அடக்க முடியாத கோபத்தை கருணாநிதி மீது காட்டுகிறார்கள். கருணாநிதியும் அரசியல் தெரிந்தவர்தானே. ஏன் மூத்த அரசியல் வாதியும் கூட.

பேராசைக்காரர்களின் பிணைய கைதியாக வீழ்ந்துவிடாமல் தேசிய நலன் காத்து தமிழன் சுதாரித்துக் கொண்டான்.

ஐயா கலாம் வாழ்க !

9 கருத்துகள்:

ஜே கே | J K சொன்னது…

நல்லவர்.

நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்.

அவருக்கு அரசியல் பண்ண தெரியாது.

விஞ்ஞானியா இருந்தா இன்னும் நிறைய செய்வார்

சிவபாலன் சொன்னது…

கலாம் மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் இந்த மூன்றாவது அணியிடம் சற்று தடுமாறிவிட்டார் என்றே தோன்றுகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

Test !

நந்தா சொன்னது…

//இவையெல்லாம் உண்மையாக இருக்குமோ என்று கலாம் கூட நினைத்திருக்கலாம் ஏனென்றால் அவர் அரசியல்வாதிகளை மனிதர்களாக பார்த்திருப்பார் போலும்.//

சிவபாலன் இது கூட காரணமாய் இருக்கலாம். அவர் தடுமாற்றத்திற்கு.

/அவர் பதவியில் இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன அவர் இந்திய நலன் குறித்து தெரிவுக்கும் யோசனைகளை எந்த அரசியல் வாதியும்,புதிய அதிபரும் கூட நிராகரிக்க முடியாது. அவருடைய கவுரவம் இனி எந்த நிலையிலும் உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.//

அப்படி நடந்தால் பரவாயில்லையே. பார்க்கலாம்.

Unknown சொன்னது…

விரல் விட்டு எண்ணப்பட வேண்டிய, பதவிக்கு பெருமை சேர்த்தவர்கள் பட்டியலில் இவரும் ஒருவர். அதுவும் தமிழர்.

ILA (a) இளா சொன்னது…

//பிணைய கைதியாக வீழ்ந்துவிடாமல் //

சரியா சொன்னீங்க

குமரன் (Kumaran) சொன்னது…

//அவர் பதவியில் இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன //

இதைத் தான் நானும் எண்ணிக் கொண்டிருந்தேன். அவர் குடியரசுத் தலைவராக மறுமுறை வராததால் என்ன இழப்பு? அவரைப் போன்றவர்கள் பதவியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவர்கள் செய்யும் நற்பணிகளையும் இளைஞர்களை ஊக்குவிக்கும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதையும் தொடர்ந்து செய்வார்கள்.

வாழ்க நீ எம்மான் என்று காந்தி மகானுக்கு அடுத்து வாழ்த்தப்படக் கூடியவர் கலாம்.

http://abtdreamindia2020.blogspot.com/2006/01/107.html

TBR. JOSPEH சொன்னது…

நீங்க சொன்னது சரியான கருத்து கண்ணன்.

ஆனால் ஒரு நொடிப் பொழுதில் தடுமாறி எல்லாரும் என்னை ஏற்றுக்கொண்டால் சரி என்று அறிக்கைவிடாமல் இருந்திருக்கலாம்..

என்றாலும் better sense prevailed என்பதுபோல் இறுதியில் சரியான முடிவை எடுத்ததற்கு நன்றி சொல்வதுதான் சரி..

Renuka சொன்னது…

ஆண் தெரசா அறிவு ஜீவி,
அற்புதம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்