பின்பற்றுபவர்கள்

27 ஏப்ரல், 2007

ஆப்புக்கு வவாச... சிறப்பு பதிவு

ஆப்பத்துக்கு பாயா என்பது போல் ஆப்புக்கு வவாசங்கிற புதுமொழியோட ஒரு பாராட்டுப் பத்திரம் வாசிக்கப் போகிறேன்.

வறுத்து எடுக்கும் பதிவர்களும் பதிவுகளும் ஆரம்பத்தில் படிக்க சுவையார்வமாக இருக்கும்... நாளைடைவில் அதே போன்று பதிவுகளைப் படித்து படித்து விவாதங்கள் என்ற பெயரில் இனிமா குடித்த ஆயாசத்தில் இருக்கும் பதிவர்களை... பாயசம் குடிக்க வைத்து கலகலப்பாக்கும் ஒரு குழுவாக ... வம்பு வாதம் சற்றுமில்லாத (வவாச) பதிவுகளைப் அளிக்கும் பதிவுக் குழுக்களில் நம் வருத்தப்படாத வாலிபர்களின் பதிவுகள் முதன்மையானவை.

கு'பீர்' கு'பீர்' னு வயிறு கலங்க சிரிக்க வைக்கும் சிபி, ஸ்டெடியாக பின்னூட்ட கட்டிடத்தை வேகமாக எழுப்பும் கொத்தனார், ஊறுகாய்க்குக்கூட நக்கலில் சிக்கல் வைக்காத நாகை சிவா, எவ்வளவு 'அடித்தாலும்' நின்னு சமாளிக்கும் கைப்பு, பேதையில் மயங்காத ஜொள்ளுபாண்டி, 'காய்த்து' எடுக்கும் விவசாயி, 'தண்ணி' இல்லாக்காட்டில் தாக சாந்திக்கு வேண்டும் தேவ் என தள்ளாடமல் லொள்ளித் திரிபவர்களின் எகத்தாளமில்லாத நக்கல்கள், நையாண்டிகள்.. ஆப்புரேசன் (அளவோடு ஆப்பு வைப்பது) ... மட்டின்றி அவ்வபோது வந்து இளமையை புதுப்பித்து செல்லும் பதிவர்களின் பதிவுகளும் குறிப்பாக திரும்பிப் பார்க்கும் ஜோசப் ஐயா என நகைச்சுவையில் வகைகளை பரிமாறும் பதிவுகளை வவாசவில் படித்து வயிற்றுவலியயல் துடித்து இருக்கிறேன்.

இவிங்கெல்லாம் யாருன்னு கூகுளாண்டவரை வேண்டிக் கேட்டுக் கிட்டதில்... எனக்கு மட்டும் அந்த வரலாற்று ரகசியத்தைச் சொல்லி மறைந்தார்.
*********

ஒரு முறை 100 கைகளுடன் ஒரு கடவுள் ஒரு பெண்மணியின் கனவில் தோன்றினார்.

'பொன்மணி இந்த பதிவுலகில் சதாகாலமும் சாதிச் சண்டைகளும், மதச்சண்டையும் நடந்து வருகிறது இவற்றை தடுத்து நிறுத்தும் சக்தி எனக்கில்லை ... எனவே நீ பதிவுலகில் அவதரித்து ... யானை மீது அமர்ந்து சண்டைகளிலிருந்து பதிவர்களை மீட்டு எடுக்கும் பொறுப்பை உனக்கு கொடுக்கிறேன்' என்று கூறி மறைந்துவிட்டார்...'

அதன்படி வ.வா.சங்கம் தோன்றியதாக வரலாற்று குறிப்புகளை வைத்து ஆய்வாளர்கள் குறி சொல்லி இருக்கின்றனர். அகழ்வாராய்ச்சி மேலும் செய்து பார்க்கையில் இரும்பினால் ஆன ஆயுதம் கைப்பற்ற பெற்றதாகவும் அந்த ஆயுதமே உலகில் தோன்றிய முதல் இரும்பு ஆயுதமாக இருக்க முடியும் என்று தெரிகிறது. ஆம் நண்பர்களே 'ஆப்பு' ஆயுதம் ஹராப்பா காலத்திற்கு பிறகு தோன்றியதாக அறியப்படுகிறது. ஆப்பு என்ற சொல் இருந்தே தகப்பன்மார்கள் அடிக்கடி தாய்மார்களிடம் ஆப்பு வாங்குவதாலேயே ஆப்பா என்று அழைக்கப்பட்டதாகவும் அந்த ஆப்பா மறுவி தற்பொழுது அப்பா, அப்பு என்று அழைக்கப் படுகின்றதாம். இங்கு அபிஅப்பாவை நினைத்தால் நான் பொறுப்பல்ல :) அப்படிபட்ட பெருமைக் குறிய ஆப்புக்கு மேலும் பெருமை சேர்த்த வவாசவின் செயல்பாடுகள் மாபெரும் ஆப்பார்வமாக நினைக்க முடிகிறது.

********

நானும் தேடி தேடிப் பார்த்ததில் பெரும் குழப்பமே மிஞ்சுகிறது. பதிவுகளில் இருக்கிற ஆப்புகள் அதிகமா ? பின்னூட்ட ஆப்புகள் அதிகமாக என்று எண்ணி எண்ணிப் பார்த்து பெரும் குழப்பமே அடைந்திருக்கிறேன். பற்றாக்குறைக்கு அங்காங்கே காலில் இரத்தம் வழியும் அளவுக்கு வெட்டிப்பயல், சிவா, இராம் போன்றவர்களால் பிடுங்கப்பட்ட ஆனிகளும் பெரும் அளவுக்கு பதிவும், பின்னூட்டமாக இரைந்து கிடக்கிறது.

எல்லா ஆப்பும் ஆப்பல்ல; சொல்லாமல்
கொல்லாமல் வைப்பதே ஆப்பு !

அதாகப்பட்டது சொல்லி வைக்காமல் ஆப்பு வைக்க வேண்டும் எவர் மனதையும் கொல்லாமல் வைக்க வேண்டும் என்ற ஆப்பு அதிகாரம் 7 ஆவது குறளில் திருவாப்பார் எழுதியுள்ள நல்லொழுக்க நெறிபடி சங்கத்தை நடத்தி செல்கிறார்கள் இளம் சிங்கங்கங்கள்

நீங்களும் கொடுங்க, வாங்குங்க ஆப்புகள் இலவசம். ஓராண்டு நிறைவை ஒட்டி வாவச வில் மேடையேறி வெற்றிகரமாக ஆப்புவாங்கிக் கொண்ட
சங்கத்தின் சிங்கங்களும்,
போட்டு வாங்கிய சிறப்பு எழுத்தாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது இரண்டு பதிவுகளான கோவியாரின் நாடக சபா 1, மற்றும் 2 ஐ ஏற்றுக் கொண்டு என்னை பாராட்டி மகிழ்வித்தற்கு வவாச க்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேடை ஏறி வாலிபர்களாக மாறிய பெரிய சிங்கள், தல கைப்புள்ளை மற்றும் இளம் சிங்கக்குட்டிகளான இளா, இராம், வெட்டிப்பயல், மற்றும் அனைத்து சிங்கங்களுக்கும் பாராட்டுக்கள்.

பின்குறிப்பு : பதிவே எழுத தெரியாவதர்களுக்கு முப்பது நாட்களில் 300 மொக்கை பதிவுகள் போடுவது எப்படி ? 40 வது பதிப்பு - என்ற நாமக்கல்லாரின் எழுதி வடித்த இலவச கையேடுகளை (ஈபுக் வடிவத்தில்) பின்னூட்டம் போடுபவர்களுக்கு இலவசக் கொத்தனார் உபயத்தில் .... வழங்கப் போவதாக இளா என்னிடம் தெரிவித்தார்.
:)))))))

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

18 கருத்துகள்:

ILA (a) இளா சொன்னது…

முதல்ல நன்றி சொல்லிக்கிறேன். உங்க

//அதன்படி வ.வா.சங்கம் தோன்றியதாக வரலாற்று குறிப்புகளை //
வரலாற்றுக்குறிப்புகள் எல்லாம் தர மாதிரி யாருமே யோசனை பண்ணலை. நல்லா இருக்குங்க கோவியாரே.

//கு'பீர்' கு'பீர்' னு வயிறு கலங்க சிரிக்க வைக்கும் சிபி//
இப்போ அது ஓ"ரம்" கட்டி நாளாச்சாம்.

//ஸ்டெடியாக பின்னூட்ட கட்டிடத்தை வேகமாக எழுப்பும் கொத்தனார், //
இவரு எங்கே வந்தாரு? கொத்த"நூறு"ன்னு சொல்லுங்க? அத்தனை பின்னூட்டம்

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said... இப்போ அது ஓ"ரம்" கட்டி நாளாச்சாம்.//

இளா..அப்படியா சொல்றிங்க ? நான் நம்பல உங்க மன"பிராந்தியாக" இருக்கும்.

:)

ILA (a) இளா சொன்னது…

அட இது மனப்'பிராந்தி இருல்லீங்க', அந்த 'ஜின்'னா மேல சத்தியமாதான் சொல்றேன். சனிக்கிழமை ஆனா ராத்திரி எங்கேயோ போய்ட்டு "விஸ்க்"கி "விஸ்க்"கி நடந்து வரதுள்ளேயே தெரியும்.

VSK சொன்னது…

எஞ்"ஜின்" ஓட்டறாரு இப்பன்னு யாரோ சொன்னாங்களே!
:)

Subbiah Veerappan சொன்னது…

பாராட்டுப் பத்திரம் சுயமானதா?
இல்லை மண்டபத்தில் யாராவது.......?

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
அட இது மனப்'பிராந்தி இருல்லீங்க', அந்த 'ஜின்'னா மேல சத்தியமாதான் சொல்றேன். சனிக்கிழமை ஆனா ராத்திரி எங்கேயோ போய்ட்டு "விஸ்க்"கி "விஸ்க்"கி நடந்து வரதுள்ளேயே தெரியும்.
//

இளா,
'கள்'லுளி மன்னனோ ! அவர் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// VSK said...
எஞ்"ஜின்" ஓட்டறாரு இப்பன்னு யாரோ சொன்னாங்களே!
:)
//

எனக்கு விஸ்கே ங்கிற பெயர் கூட விஸ்.. விஸ் ன்னு 'கீ' கொடுக்கிற மாதிரி எதொ சொல்லவருகிறது ஐயா.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// SP.VR. சுப்பையா said...
பாராட்டுப் பத்திரம் சுயமானதா?
இல்லை மண்டபத்தில் யாராவது.......?
//

ஐயா,
ஆப்பு பதிவுகலெள்ளாம் மண்டபத்தில் எழுதிக் கேட்டால் நமக்கே வச்சுடுவாங்க.
:))

நாமக்கல் சிபி சொன்னது…

நான் யாரு? எந்த பார்ல இருக்கேன்!

- மயக்கம் தெளிந்து எழுந்த நாமக்கல் சிபி.

நாமக்கல் சிபி சொன்னது…

//எனக்கு விஸ்கே ங்கிற பெயர் கூட விஸ்.. விஸ் ன்னு 'கீ' கொடுக்கிற மாதிரி எதொ சொல்லவருகிறது ஐயா.
:) //

எனக்குழ்ம் அப்பழித்தான் தெழியுது கோவியாரே!

நாகை சிவா சொன்னது…

//ஊறுகாய்க்குக்கூட நக்கலில் சிக்கல் வைக்காத நாகை சிவா//

சிக்கலுக்கு அருகில் இருந்து வந்த கண்ணா, வார்த்தை விளையாட்டில் நீர் ஒரு சித்தர் என்பதை உணர்த்தும் வரியா இது?

நாகை சிவா சொன்னது…

//இளம் சிங்கக்குட்டிகளான இளா, இராம், வெட்டிப்பயல்,//

இளா அண்ணன் இது பத்தி நீங்க ஒன்னுமே சொல்லையே ஏன் அண்ணன்?

ஷைலஜா சொன்னது…

அடடா என்ன இது ரம் பீர் விஸ்கி ன்னுட்டு, பெண்'கள்' இந்தப்பக்கம் ஒரு சாரா(ர்)யம் மா, எட்டிப்பாக்கவே முடியாதுபோல?:)

Subbiah Veerappan சொன்னது…

//எனக்கு விஸ்கே ங்கிற பெயர் கூட விஸ்.. விஸ் ன்னு 'கீ' கொடுக்கிற மாதிரி எதொ சொல்லவருகிறது ஐயா.
:) //
எனக்குழ்ம் அப்பழித்தான் தெழியுது கோவியாரே!////

உங்களுக்கெல்லாம் கிரகக் கோளாறு (சனி பிடித்திருக்கலாம்) அதனால்தான் அப்படித் தோன்றுகிறது!

எனக்கு VSK என்றால் இப்படித்தான் தோன்றுகிறது!

V for - வேலன் ( முருகனருள் பதிவுகளால்)
S for - சிவன் ( கசடற பதிவுகளால்)
K for - காமாட்சி (காமாட்சி பாடல்கள் கொண்ட பதிவுகளால்)

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்களுக்கெல்லாம் கிரகக் கோளாறு (சனி பிடித்திருக்கலாம்) அதனால்தான் அப்படித் தோன்றுகிறது!//

சுப்பையா சார்,

அடுத்து ஜோதிட பதிவு போடாமலா இருக்கப் போறிங்க... கேள்வியோட வந்து வச்சிக்கிறேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஷைலஜா said...
அடடா என்ன இது ரம் பீர் விஸ்கி ன்னுட்டு, பெண்'கள்' இந்தப்பக்கம் ஒரு சாரா(ர்)யம் மா, எட்டிப்பாக்கவே முடியாதுபோல?:)
//

ஷைலஜா,

'ஓல்ட் மாங்க்' யாரும் இல்லிங்க..எல்லாம் வாலிபர்கள்...பயப்படாமல் எட்டிப் பாருங்க
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//எனக்குழ்ம் அப்பழித்தான் தெழியுது கோவியாரே! //

சிபி விடிந்துவிட்டது.. தெளிஞ்சு இருக்கும் என நினைக்கிறேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...

இளா அண்ணன் இது பத்தி நீங்க ஒன்னுமே சொல்லையே ஏன் அண்ணன்?
//

சிவா,

இளா புளகாங்கிதத்தில் 'மிதக்கிறார்' அப்பறமாக சொல்லுவார்
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்