பின்பற்றுபவர்கள்

3 ஏப்ரல், 2007

வம்பை வாடைக்கு விடுவது எப்படி ?

மொக்கை பதிவு போடுவது பற்றி செந்தழலாரும், நாமக்கல்லாரும் பி.எச்.டி பாடம் நடத்த நான் பாட்டுக்கு சும்மா இருந்தால் என்னவாம் ?

முதலில் பிரச்சனைக்கு உரிய பதிவுகளாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அங்கு அனானிக்கு வழி இருக்கான்னு பாருங்க. இருந்தது என்றால் ப்ளாக்கர் அல்லாத கணக்குக்கும் ( அதர் ஆப்சன்) வழி இருக்கும், உங்களுக்கு பிடிக்காத பதிவரின் பெயரில் அவரு போடுவது போல ஒரு அதர் ஆப்சன் பின்னூட்டம் போடுங்க. அவ்வளவுதான்.

அவருக்கும் பதிவு எழுதிய அவருக்கும் ஆகவில்லையென்றால் காழ்புணர்வுகள் மறுமொழியில் எகிறும். யாருக்கு யாரைப் பிடிக்கவில்லை என்பது பின்னூட்டம் வெட்ட வெட்ட ... வெட்ட வெளிச்சமாகிவிடும். சில அவசர குடுக்கைகள் பின்னூட்டம் சம்பந்தப்பட்ட நபர்தான் போட்டு இருக்கிறாரா என்று ஆராயமலே போட்டு தாக்க ஆரம்பிச்சிடுவாங்க.

இப்படி செய்தால் நீங்களே கருப்பு, நீங்க தான் சிவப்பு, நீங்கதான் 'பாலா' என பல அவதாரம் எடுக்கலாம். சண்டை மூட்டிவிட்ட மாதிரியும் இருக்கும்.அரிப்புக்கு சொறிஞ்சிகிட்ட மாதிரி இருக்கும். வாயைக் கொடுத்து வம்பில் மாட்டுவதை விட வம்பை வாடகைக்கு விடுவது சாலச் சிறந்தது. நாம சொந்த காழ்பை (வம்பை) தீர்த்துக் கொள்ள ... இந்த கிறுக்கு வழியில் கிடைக்கும் குறுகுறுப்புதான் இதில் வாடகை.


பிகு : அனானி, அதர் ஆப்சன் வைத்திருக்கும் பதிவர்களின் எச்சரிக்கைக்காக எழுதப்பட்டது !
:)

16 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

ஐய்யா! முதல் ஆளா வந்துட்டேன்!

பெயரில்லா சொன்னது…

test !

நாமக்கல் சிபி சொன்னது…

"வம்பை வாடகைக்கு விடுவது"

தலைப்பு சூப்பருங்கோவ்!

பெயரில்லா சொன்னது…

நானும் ஒரு டெஸ்ட்!

சிவபாலன் சொன்னது…

GK,

இதெல்லாம் நியாமா?

Ha Ha Ha..

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துவிட்டீர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//
நாமக்கல் சிபி said...
ஐய்யா! முதல் ஆளா வந்துட்டேன்!
//

எதுக்கு வாடகை வசூல் பண்ணுவதற்கா ?
:)

நாமக்கல் சிபி சொன்னது…

//எதுக்கு வாடகை வசூல் பண்ணுவதற்கா ?
//

ஹிஹி!

பெயரில்லா சொன்னது…

அதர் ஆப்ஷன் எடுத்திட்டீங்களா, தழலின் பதிவை பார்க்கவும்.

பெயரில்லா சொன்னது…

//ஐய்யா! முதல் ஆளா வந்துட்டேன்!//

உண்ட கட்டி வாங்கின பழக்கம் இன்னுமா போகலை ?

நாமக்கல் சிபி சொன்னது…

//உண்ட கட்டி வாங்கின பழக்கம் இன்னுமா போகலை ?
//

கோவிக்காதவரே!

உண்ட கட்டின்னாலும் சரி! சிதறு தேங்காய்னாலும் சரி! நான்தான் முதல் ஆளா இருபேன்!

:))

கோவி.கண்ணன் சொன்னது…

சிபியாரே,

பக்கத்தில் நின்னவங்களுக்கு தானே தெரியும் னு ஒரு எதிர் கேள்வி கேட்காமல் ஒத்து ஊதுறினங்க !
:)

நாமக்கல் சிபி சொன்னது…

//பக்கத்தில் நின்னவங்களுக்கு தானே தெரியும் னு ஒரு எதிர் கேள்வி கேட்காமல் ஒத்து ஊதுறினங்க !
:)
//

அக்காங்க்!

வேற யாருக்குத் தெரியப் போகுதுன்னு ஒரு தெகிரியம்தான்!

:))

நாமக்கல் சிபி சொன்னது…

//பக்கத்தில் நின்னவங்களுக்கு தானே தெரியும்//

ஆஹா! இப்ப புரியுது!

:))

நான் சீரியஸாவே எடுத்துக்கலை! சீரியஸா எடுத்திருந்தா அப்படித்தான் கேட்டிருப்பேன்.

அப்பக் கூட காமெடிதான்!

கோவிக்காத கண்ணன் பேரு ரொம்ப நல்லா இருக்குதுங்க!

:))

பெயரில்லா சொன்னது…

குருவே சரணம்

G.Ragavan சொன்னது…

ஒத்துக்கிறோம் ஒத்துக்கிறோம். எந்தச் சந்தேகமும் இல்லை. :-)

நாமக்கல் சிபி சொன்னது…

//குருவே சரணம்//

!!!!!!!!!!????????????? இது என்ன?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்