பின்பற்றுபவர்கள்

26 ஏப்ரல், 2007

ஆத்திகர்கள் எல்லாம் சாதுக்களா ?

கடவுள் நம்பிக்கை இருப்பதால் மனிதர்கள் தப்பு செய்வது குறையும் என்று பொதுவாக சொல்லி வைக்கிறார்கள். மாசி பதிவில் ஒரு அனானி குறிப்பிட்டு இருந்தார். அதாவது //-- ஆர் எஸ் எஸ் காரர்கள் பாவ-புண்ணியத்திற்கு பயப்படுவதால் நீங்க இந்தமாதிரி ஜெல்லியடிக்க முடிகிறது// ( அதாவது மாற்று மததினர் எல்லோரும் நாத்திகர்கள் ? இதைப்பற்றி சொல்லப் போவதில்லை)

பாவ புண்ணியத்துக்கு பயப்படுகிறவர்கள் என்பதால் தப்பு செய்வது இல்லையாம். நாம் அன்றாடம் படிக்கும் செய்திகளில் திருட்டு, கொலை கொள்ளை ஆகியவைகளில் ஈடுபடுபவர்கள் எவருக்கும் கடவுள் நம்பிக்கைகள் இல்லையா ? மக்களை ஏமாற்றி கையும் களவுமாக பிடிபடும், அல்லது பிடியில் நழுவிக் கொண்டிருக்கும் போலி சாமியார்களெல்லாம் கடவுள் நம்பிக்கை அற்றவர்களா ?

நான் கடவுள் நம்பிக்கை சரியா ? தவறா என்று எதும் சொல்ல வரவில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் சாதுக்கள் போலவும், பாவ புண்ணியத்திற்கு பயப்பாடுபவர்கள் போலவும் சொல்வதை ஏற்கமுடியவில்லை. திருப்பதி கோவில் உண்டியலில் நாள் தோறும் நிறையும் முக்கால் பங்கு செல்வங்களெல்லாம் பாவ மூட்டையில் இருந்து எடுத்துப் போடப்பட்டது தான். ஆபரகாமிய மதங்களில் மனப் பூர்வமாக பாவமன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று வேதப்புத்தகத்தில் எழுதியிருப்பதாக சொல்கிறார்கள். பாவம் செய்தது உணர்ந்து மன்னிப்பு கேட்டு திருந்துவதை விட மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை திமிரில் செய்யப்படும் பாவங்களே அதிகம்.

இப்பொழுதெல்லாம் திரைப்பட வில்லன் கூட கழுத்தில் கொட்டையும், நெற்றியில் பட்டை குங்கும பொட்டு சகிதமாகத்தான் வருகிறார்கள். கோவில் சிலையை கடத்துபவன், கோவில் சொத்தை டிரஸ்டி என்ற பெயரில் அபகரிப்பவன், கோவில் நகைகளை கொள்ளை அடிப்பவன் போன்ற எல்லோரும் கடவுள் நம்பிக்கை இருப்பவர்களாகத் தான் இருக்கிறார்கள். இதில் கையும் களவுமாக சிக்கிக் கொண்டவர்களில் எவரும் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அதனால் தான் திருவடுவது பாவம் இல்லை என்று நினைப்பதால் அப்படி செய்துவிட்டேன் என்று சொல்லும் ஒருவர் கூட இருந்ததே இல்லை. ஆனாலும் பொதுவாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பாவ புண்ணியத்துக்கு பயந்தவங்களாகவே சொல்லிக் கொண்டு எல்லோர் காதிலும் பூ சுற்றியே வருகின்றனர் நம்பிக்கையாளர்கள்.

காஞ்சியில் நடந்த கொலையில் தொடர்பு உடையவர்கள் என்று பத்திரிக்கை மற்றும் காவல் துறையால் அடையாளப்படுத்தப்பட்டவர்களில் முதல் குற்றவாளி முதல் கடைசி ஆள் வரை எவரும் நாத்திகர் இல்லையே. அதே போல் கடத்தல் தொழில்களில் பிடிப்பட்டதாக அறிவிக்கப்படுபவர்களில் எவரும் நாத்திகர்கள் இல்லை. நாத்திகர்கள் நம்பிக்கை இல்லை என்ற ஒரே காரணத்தினால் கேடு செய்யலாம் என்று நினைப்பர் எவரும் இல்லை.

கடவுளை கண்டுபிடித்தவுடனே கடவுளை எப்படி(யும்) ஏமாற்ற முடியும் என்று கண்டுபிடித்தனர் ஆத்திகர்கள், பாவ மன்னிப்பு, பரிகாரம் என்ற பெயரில் பாவத்துக்கு மன்னிப்புக் கேட்பதைவிட, மன்னிப்புக் கேட்டுக் கொள்ளல்லாம் என்று செய்யும் பாவங்களே மிகுதியானது. கடவுள் நம்பிக்கை இருப்பதால் பாவ புண்ணியத்துக்கு பயப்படுகிறார்கள் என்று சொல்கிறார்களே. அது நாத்திகர்களை பழித்து அவர்கள் செய்யும் பாவம். நிவர்த்தி கிடையாது. :) அந்த கருத்தினால் ஆத்திகம் மேன்மை அடைவதாக தெரியவில்லை. ஆத்திகமோ, நாத்திகமோ அயோக்கிய தனங்களுக்கு தனிமனித செயல்கள் தான் காரணம் அன்றி அவன் ஆத்திகனாக இருப்பதால் யோக்கியன் என்றும் இவன் நாத்திகன் என்பதால் அயோக்கியன் என்பதும் குப்பை வாதம்.

46 கருத்துகள்:

குழலி / Kuzhali சொன்னது…

//பாவ மன்னிப்பு, பரிகாரம் என்ற பெயரில் பாவத்துக்கு மன்னிப்புக் கேட்பதைவிட, மன்னிப்புக் கேட்டுக் கொள்ளல்லாம் என்று செய்யும் பாவங்களே மிகுதியானது. கடவுள் நம்பிக்கை இருப்பதால் பாவ புண்ணியத்துக்கு பயப்படுகிறார்கள் என்று சொல்கிறார்களே. அது நாத்திகர்களை பழித்து அவர்கள் செய்யும் பாவம். நிவர்த்தி கிடையாது. :) அந்த கருத்தினால் ஆத்திகம் மேன்மை அடைவதாக தெரியவில்லை. ஆத்திகமோ, நாத்திகமோ அயோக்கிய தனங்களுக்கு தனிமனித செயல்கள் தான் காரணம் அன்றி அவன் ஆத்திகனாக இருப்பதால் யோக்கியன் என்றும் இவன் நாத்திகன் என்பதால் அயோக்கியன் என்பதும் குப்பை வாதம்.
//
மிகச்சரியாக சொல்லியிருக்கின்றீர்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

///கடவுள் நம்பிக்கை இருப்பதால் மனிதர்கள் தப்பு செய்வது குறையும் என்று பொதுவாக சொல்லி வைக்கிறார்கள்///

மக்களை ஏமாற்றும் எண்ணம் கொண்டவர்கள் மக்களை ஏமாற்ற இந்த வாதத்தைத் தான் முன் வைக்கிறார்கள்.

நடைமுறையில் கடவுள் நம்பிக்கை என்பதே தப்பு செய்து விட்டு எதிலும் மாட்டாமல் தப்பிப்பதற்கு தான் உதவுகின்றது.

survival to the fittest என்பதற்கு பாதகம் விளையும் சமயம் தான் நிறைய தவறுகள் நடக்கின்றன.

சில தவறுகள் survival instict பாதகம் இல்லா விட்டாலும் நடக்கின்றன. அவைகளில் முக்கால்வாசி கடவுள் பேரால் தான் நடக்கிறது. ஏனென்றால் மக்களை ஏமாற்ற இதனை விட சுலபமான வழி கிடைக்காது.

பெயரில்லா சொன்னது…

உண்மையான ஆத்திகன் பாவம் செய்ய் அஞ்சுவான். ஆத்திகம் பேசிக்கொண்டு பாவம் செய்பவனை விட உங்களைப் போன்ற பல நாத்திகர்களை நம்பலாம்.

Hariharan # 03985177737685368452 சொன்னது…

//பாவ மன்னிப்பு, பரிகாரம் என்ற பெயரில் பாவத்துக்கு மன்னிப்புக் கேட்பதைவிட, மன்னிப்புக் கேட்டுக் கொள்ளல்லாம் என்று செய்யும் பாவங்களே மிகுதியானது. கடவுள் நம்பிக்கை இருப்பதால் பாவ புண்ணியத்துக்கு பயப்படுகிறார்கள் என்று சொல்கிறார்களே. அது நாத்திகர்களை பழித்து அவர்கள் செய்யும் பாவம். நிவர்த்தி கிடையாது. :) அந்த கருத்தினால் ஆத்திகம் மேன்மை அடைவதாக தெரியவில்லை.//

முதலில் இந்தப் பரிகார உபாயங்கள் மட்டுமே ஆத்திகம் என்று யார் சொன்னது?

கங்கையில் குளித்தால் பாவம் போகும் எனும் பரிகாரம் ஆத்திகம் என்பதை விட நெறி பிறழ்ந்த வாழ்வு வாழும் ஒருவனுக்கு புதிய நேரான வாழ்க்கை வாழ உதவும் உளவியலைப் பிரதானமாகக் கொண்டது.

அதுவரை தான் செய்த நெறியற்ற செயல்கள் காரணமாகத் தினமும் தன்னை வாட்டி வதைக்கும் மன வேதனையினின்று விடுபட்டு இன்னொரு புதிய நெறியான இன்னிங்க்ஸூக்கு உளவியலாகத் தெம்பூட்டும் விஷயம் பரிகாரம் எனும் நடைமுறை.

பரிகாரம் இருக்கு கொலை, கொள்ளை செய்து கொள் எனும் போக்குக்கு இப்படி எந்தப்புரிதல் எண்ணம் இல்லாத நபரின் குறைக்கு ஆத்திகம் என்ன செய்யும்??

கள்ளக்கடத்தல் பொருட்களை மட்டுமே 999% விற்கும் பர்மா / சைனா பஜார் ஆட்கள் ஐந்து முறை தொழுதுவிட்டுத்தான் தொழிலையே செய்வது!

துளசி கோபால் சொன்னது…

அதென்ன இப்படிக் கேட்டுட்டீங்க?

நாத்திகர்களில் எத்தனையோ நல்லவர்களும் இருக்காங்க. ஆத்திகர்களில் எத்தனையோ
கெட்டவங்களும் இருக்காங்க.

'அன்பே சிவம்'லே நாசர் எப்படி? 'தென்னாடுடைய சிவனே போற்றி'

பொன்ஸ்~~Poorna சொன்னது…

கோவி,
எனக்குத் தெரிந்த ஒரு ஆர்.எஸ்.எஸ் நண்பர்(கல்லூரி நண்பர்) சமீபத்தில் சொன்ன சாதுவான யோசனை இது: "ஒரு குடும்பம் நன்றாக இருக்கவேண்டுமானால், அந்த வீட்டின் ஒரு உறுப்பினரைக் காவு கொடுப்பது தவறில்லை..."

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிகாரம் இருக்கு கொலை, கொள்ளை செய்து கொள் எனும் போக்குக்கு இப்படி எந்தப்புரிதல் எண்ணம் இல்லாத நபரின் குறைக்கு ஆத்திகம் என்ன செய்யும்??
//

ஹரி,

நல்ல கருத்து...இதையே தீவிரவாதத்தையும் சில மதங்களையும் தொடர்புபடுத்துபவர்களுக்கும் சேர்த்து சொல்வீர்களா ? :)

பெயரில்லா சொன்னது…

"ஆத்திகர்கள் எல்லாம் சாதுக்களா ?":

கோவி,

நாந்தான் அங்கு அந்த கமெண்ட் போட்டவன். நான் மெஜாரிட்டி இந்துக்களின் மனநிலையையும் ஆர் எஸ் எஸின் அடிப்படை நிலையையும் வைத்துச் சொன்னேன்.

நீங்க சொல்வது ஒரு நாத்திக வாதம், இதை வாதாட நான் விரும்பவில்லை.

திருப்பதிக்கு பாப பணம் மட்டுமல்ல, எங்கள் போன்ற இறை நம்பிக்கை உள்ளவர்கள் மாத சம்பளத்தில் இறைவனுக்கென்று எடுத்துவைத்து அளிப்பதும் உள்ளது.

நீங்க ஒரு நாத்திகராக இருப்பதால் இதுபற்றி உங்களுக்கு பேச அருகதையும் இல்லை. இனி பதில் தரும் எண்ணமும் எனக்கில்லை.

உங்கள் பதிவெண் உயர வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//"ஆத்திகர்கள் எல்லாம் சாதுக்களா ?":

கோவி,

நாந்தான் அங்கு அந்த கமெண்ட் போட்டவன். நான் மெஜாரிட்டி இந்துக்களின் மனநிலையையும் ஆர் எஸ் எஸின் அடிப்படை நிலையையும் வைத்துச் சொன்னேன்.

நீங்க சொல்வது ஒரு நாத்திக வாதம், இதை வாதாட நான் விரும்பவில்லை.

திருப்பதிக்கு பாப பணம் மட்டுமல்ல, எங்கள் போன்ற இறை நம்பிக்கை உள்ளவர்கள் மாத சம்பளத்தில் இறைவனுக்கென்று எடுத்துவைத்து அளிப்பதும் உள்ளது.

நீங்க ஒரு நாத்திகராக இருப்பதால் இதுபற்றி உங்களுக்கு பேச அருகதையும் இல்லை. இனி பதில் தரும் எண்ணமும் எனக்கில்லை.
//

அனானி அண்ணா, வணக்கம் !
இது பற்றி பேச என்ன அருகதை இருக்கா ? தன்னை யோக்கியன் என்று சொல்லும் போது எதிரில் உள்ளவனை அயோக்கியன் என சொல்லும் பொருள் தானே வரும். உங்கள் கூற்றுப்படி ஆர் எஸ் எஸ் தவிர மற்றவர்களை பாவம் செய்ய துணிபவர்கள் என்று சொல்லும் அருகதையை உங்களுக்கு குத்தகைக்கு விட்டவர் எவரோ ? திருப்பதியில் முக்கால் வாசி தானே பாவப் பணம் என்றேன் முழுதும் என்று சொல்லவில்ல நண்பரே :)

கோவி.கண்ணன் சொன்னது…

//குழலி said...
மிகச்சரியாக சொல்லியிருக்கின்றீர் //

நன்றி !
:)

Unknown சொன்னது…

ஆத்திகர் எல்லோரும் சாதுக்கள் இல்லை என்பது உண்மை. நாத்திகர்கள் அனைவரும் தவறு செய்யாதவர்களா என்ன? எல்லா மனிதர்களுமே தவறு செய்பவர்கள்தான். இதில் ஆத்திகர் நாத்திகர் என்றென்ன?

ஆத்திகர்களும் எல்லா உணர்ச்சிகளும் உள்ள மனிதர்களே. தவறு செய்து விட்ட மனிதன் அந்த தவறிலிருந்து திருந்தி வாழத்தான் பாவ மன்னிப்புக்கள். பாவ மன்னிப்புக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தவறு செய்வதை (மற்ற மதங்கள் பற்றி தெரியாது) இஸ்லாம் கண்டிக்கிறது.

ஆத்திகர்களுக்கு தவறு எது என்பதற்கு சில வரையறுக்கப்பட்ட எல்லைக்கோடுகள் உண்டு. நாத்திகர்களுக்கு மாறுகின்ற சட்டங்கள்தான் எல்லை.
திருச்சியில் போதை ஊற்றிக் கொண்டால் தவறாகும். அதுவே பாண்டிச்சேரியில் சரியாகும்.
தமிழக நாத்திகர்களுக்கு விபச்சாரம் தவறாகத் தெரியும். அதுவே பம்பாயில் உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட இடங்களில் சென்று செய்தால் தவறில்லை என்றாகி விடும்.
அல்லது தனி மனித மனங்களுக்கேற்ப தவறுகளின் (கடுமை அல்லது சாதாரணம் என்ற) தன்மைகள் ஏறும் அல்லது இறங்கும். அவ்வளவே.

பெயரில்லா சொன்னது…

/// "ஒரு குடும்பம் நன்றாக இருக்கவேண்டுமானால், அந்த வீட்டின் ஒரு உறுப்பினரைக் காவு கொடுப்பது தவறில்லை..." ////

The principle is that, if a soul can save a family then it is better to sacrifice a single soul instead of endangering the whole family. Similar scales are there for a family vs. village, village vs nation etc.

This is an ancient saying and gets repeated and demonstrated in Mahabharatha and other places explcitly. This is practiced today also, mostly in war combat situations.

I regret that Pons has twisted this saying to make a point that RSS sevaks are cruel in their approach.

This is very disappointing.

பெயரில்லா சொன்னது…

நம்பிக்கைக்கும், நடிப்புக்கும் இருக்கும் பேதத்தை
சிந்திக்காததாலேயெ இந்தப் பதிவை போட்டிருக்கிறீர்கள்.

நம்பிக்கையுள்ளவர்கள் எதையும் அடுத்தவர்கள் பாராட்டுக்காக
செய்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

நடிப்போர் இயல்பைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
நடிகர்களுடன் ஒப்பிட்டு நல்லவர்களைக் கொச்சைப் படுத்தாதீர்கள்.
பாவமூட்டையை பெரிது படுத்தாதீர்கள்.

பரிகாரம் என்பது அறியாமல் செய்த தவறுகளுக்குத்தான்.
அடாவடித்தனமான தப்புக்களுக்கில்லை.

Unknown சொன்னது…

ஒரு டிஸ்கிளைமர்: நான் சொன்னது பொதுவான ஆத்திகத்தை (கடவுள் நம்பிக்கையை). RSSன் குருட்டு ஆத்திகத்தை அல்ல.

பெயரில்லா சொன்னது…

திருப்பதி உண்டியல்ல விழற காசுல எல்ல்லாமே நல்ல காசா ?

பெயரில்லா சொன்னது…

///ஆத்திகமோ, நாத்திகமோ அயோக்கிய தனங்களுக்கு தனிமனித செயல்கள் தான் காரணம் அன்றி அவன் ஆத்திகனாக இருப்பதால் யோக்கியன் என்றும் இவன் நாத்திகன் என்பதால் அயோக்கியன் என்பதும் குப்பை வாதம். ///

பட்டைய கிளப்பிட்டீங்க !!!

Subbiah Veerappan சொன்னது…

///எல்லா மனிதர்களுமே தவறு செய்பவர்கள்தான். இதில் ஆத்திகர் நாத்திகர் என்றென்ன? ///

பின்னூட்டத்தில் நண்பர் சொல்லியிருப்பதுதான் உண்மை!

பாதிமனதில் தெய்வம் இருந்து பர்ர்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா

என்று கவியரசர் சொன்னதுதான் மனிதனின் நிலைமை

இதையே (நாத்திகம் பேசுபவர்களுக்கு) இப்படி வைத்துக் கொள்ளலாம்

பாதி மனதை மனசாட்சி பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருக உணர்வு ஆட்கொண்டதடா

இதில் எந்த உணர்வு மேம்படுகிறதோ அந்த உணர்வுப்படி மனிதன் செயல்படுகிறான் - நல்லவன் கெட்டவன் ஆகிறான்

இதில் ஆத்திகம் நாத்திகம் என்று ஒரு பேதமும் இல்லை

உங்கள் மொழியில் சொன்னால் ஒரு புண்ணாக்கும் இல்லை!

பெயரில்லா சொன்னது…

//உங்கள் மொழியில் சொன்னால் ஒரு புண்ணாக்கும் இல்லை! //


ithu matter


senshe

உங்கள் நண்பன்(சரா) சொன்னது…

//ஆத்திகமோ, நாத்திகமோ அயோக்கிய தனங்களுக்கு தனிமனித செயல்கள் தான் காரணம் அன்றி அவன் ஆத்திகனாக இருப்பதால் யோக்கியன் என்றும் இவன் நாத்திகன் என்பதால் அயோக்கியன் என்பதும் குப்பை வாதம்.//

நிச்சயமாக குப்பைதான்! நான் சொன்னது இதுபோன்ற வாதங்களை, பதிவை அல்ல:)) தேவையான நல்ல பதிவு!

//ஒரு குடும்பம் நன்றாக இருக்கவேண்டுமானால், அந்த வீட்டின் ஒரு உறுப்பினரைக் காவு கொடுப்பது தவறில்லை..."
//

ஆத்தாடீ! நெசமாத்தான் சொல்லுதீகளா அக்கா? மெய்யலுமே இப்படியெல்லாம் கூட யோசிப்பாய்ங்களா? நட்புத் தொடர்பை துண்டிச்சிட்டிங்களா இல்லையா?

இலவசக்கொத்தனார் சொன்னது…

இந்த பதிவில் சொல்லப் பட்டு இருக்கும் கருத்தோ அதன் எதிர் கருத்தோ பற்றி நான் பேச வரவில்லை.

ஆனால் இது ??

//தன்னை யோக்கியன் என்று சொல்லும் போது எதிரில் உள்ளவனை அயோக்கியன் என சொல்லும் பொருள் தானே வரும்.//

நான் நல்லவன்!!

:))

கோவி.கண்ணன் சொன்னது…

//
இலவசக்கொத்தனார் said...
இந்த பதிவில் சொல்லப் பட்டு இருக்கும் கருத்தோ அதன் எதிர் கருத்தோ பற்றி நான் பேச வரவில்லை.

ஆனால் இது ??

//தன்னை யோக்கியன் என்று சொல்லும் போது எதிரில் உள்ளவனை அயோக்கியன் என சொல்லும் பொருள் தானே வரும்.//

நான் நல்லவன்!!

:))

//
கொத்ஸ் ... சொ.ஒ.சொ பதிவில் ஒரு இடுகை எழுத ஒரு சொல் எடுத்துக் கொடுத்திட்டிங்க நன்றி !

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தில் குமரன் said...
மக்களை ஏமாற்றும் எண்ணம் கொண்டவர்கள் மக்களை ஏமாற்ற இந்த வாதத்தைத் தான் முன் வைக்கிறார்கள்.

நடைமுறையில் கடவுள் நம்பிக்கை என்பதே தப்பு செய்து விட்டு எதிலும் மாட்டாமல் தப்பிப்பதற்கு தான் உதவுகின்றது.

survival to the fittest என்பதற்கு பாதகம் விளையும் சமயம் தான் நிறைய தவறுகள் நடக்கின்றன.

சில தவறுகள் survival instict பாதகம் இல்லா விட்டாலும் நடக்கின்றன. அவைகளில் முக்கால்வாசி கடவுள் பேரால் தான் நடக்கிறது. ஏனென்றால் மக்களை ஏமாற்ற இதனை விட சுலபமான வழி கிடைக்காது.
//

செந்தில் குமரன் நேரடியாக நல்ல கருத்துக்களை பகிர்ந்தற்கும் பாராட்டுக்கள்.

G.Ragavan சொன்னது…

உண்மையான ஆத்திகனும் சாது. உண்மையான நாத்திகனும் சாது. ஆனா ரெண்டுமே இல்லை. இருக்குறதுல உண்மையோட அளவு கூடக்கூட சாதுத்தனமும் கூடுது. அவ்வளவுதாங்க விஷயம்.

பெயரில்லா சொன்னது…

இவன் RSS என்பதால் அயோக்கியன் என்பதும் குப்பை வாதம்.

Hope every one comes to the point
"" RSS or Jihadi என்பதால் அயோக்கியன் ""

Hope this is what the comment logic going on....

Mr Ungal Nanban....

Jihadi and RSS are having same logic?????

Endrum (real) anbudan
Sundaran
I am a reader from Fort Louderdale, FLorida USA. Not a Blogger Yet.

பெயரில்லா சொன்னது…

//ஆத்திகமோ, நாத்திகமோ அயோக்கிய தனங்களுக்கு தனிமனித செயல்கள் தான் காரணம் அன்றி அவன் ஆத்திகனாக இருப்பதால் யோக்கியன் என்றும் இவன் நாத்திகன் என்பதால் அயோக்கியன் என்பதும் குப்பை வாதம். //

miga sari. Athey pol oru thani manithan seyyum thavaruku avan jathi/madathai saduvathu sariya?

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
அதென்ன இப்படிக் கேட்டுட்டீங்க?

நாத்திகர்களில் எத்தனையோ நல்லவர்களும் இருக்காங்க. ஆத்திகர்களில் எத்தனையோ
கெட்டவங்களும் இருக்காங்க.

'அன்பே சிவம்'லே நாசர் எப்படி? 'தென்னாடுடைய சிவனே போற்றி'
//

துளசி அம்மா,

ஆத்திகர்கள் பாவம் செய்ய அஞ்சுபவர்கள் போல சிலர் சொல்வதால் தான் இந்த பதிவே, கடவுள் நம்பிக்கை இல்லாததால் தறுதாலையாக இருந்தேன் கடவுள் நம்பிக்கை வந்ததும் இப்பொழுது கையெடுத்துக் கும்பிடும் அளவுக்கு நடந்து கொள்கிறேன் என்று எவரும் சொல்வதில்லை.

அன்பே சிவம், சிவமே அன்பு நல்ல கருத்து...பிடித்த வாக்கியம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Anonymous said...
உண்மையான ஆத்திகன் பாவம் செய்ய் அஞ்சுவான். ஆத்திகம் பேசிக்கொண்டு பாவம் செய்பவனை விட உங்களைப் போன்ற பல நாத்திகர்களை நம்பலாம்.
//

அனானி ஐயா,

நான் நாத்திகன் ஆத்திகன் என்று எல்லை வகுத்துக் கொள்வதில்லை. நல்லக் கருத்துக்கள் எவர் சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். பக்திப் பாடல்களும் பிடிக்கும், பெரியார் கருத்துக்களும் பிடிக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பொன்ஸ்~~Poorna said...
கோவி,
எனக்குத் தெரிந்த ஒரு ஆர்.எஸ்.எஸ் நண்பர்(கல்லூரி நண்பர்) சமீபத்தில் சொன்ன சாதுவான யோசனை இது: "ஒரு குடும்பம் நன்றாக இருக்கவேண்டுமானால், அந்த வீட்டின் ஒரு உறுப்பினரைக் காவு கொடுப்பது தவறில்லை..."
//

இது நாட்டின் இராணுவத்திற்கு பொருத்தமான வரி.


உங்க நண்பரைக் கேளுங்க.

அவர் வீட்டுக் ஒருவரை ஆர் எஸ் எஸ்சில் சேரச் சொல்கிறார் என நினைக்கிறேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...தமிழக நாத்திகர்களுக்கு விபச்சாரம் தவறாகத் தெரியும். அதுவே பம்பாயில் உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட இடங்களில் சென்று செய்தால் தவறில்லை என்றாகி விடும்.
அல்லது தனி மனித மனங்களுக்கேற்ப தவறுகளின் (கடுமை அல்லது சாதாரணம் என்ற) தன்மைகள் ஏறும் அல்லது இறங்கும். அவ்வளவே.
//

சுல்தான் ஐயா, நாத்திகர்களுக்கும் விபச்சாரத்திற்கும் என்ன சம்பந்தம் ?
உதாரணம் சறுக்குதே :)

தமிழ்நாட்டுக் காரங்களுக்கு என்று இருக்க வேண்டுமோ?

//ஆத்திகர்களுக்கு தவறு எது என்பதற்கு சில வரையறுக்கப்பட்ட எல்லைக்கோடுகள் உண்டு. //

விரும்பி ஆத்திகர் ஆகுபவரை விட விரும்பி நாத்திகர் ஆகுபவரே மிகுதி. நினைவு தெரிந்தவுடனே எல்லோரும் ஆத்திகர்களாகத் தான் இருக்கிறார்கள், பின்பு தான் மாறுகிறார்கள். ஆத்திக செயல்பாடுகளில் குறை இல்லாவிட்டால் நாத்திகன் எங்கிருந்து வரப் போகிறான்.

உங்களின் மற்ற கருத்துக்களில் உடன்படுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Anonymous said...
நம்பிக்கைக்கும், நடிப்புக்கும் இருக்கும் பேதத்தை
சிந்திக்காததாலேயெ இந்தப் பதிவை போட்டிருக்கிறீர்கள்.

நம்பிக்கையுள்ளவர்கள் எதையும் அடுத்தவர்கள் பாராட்டுக்காக
செய்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

நடிப்போர் இயல்பைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
நடிகர்களுடன் ஒப்பிட்டு நல்லவர்களைக் கொச்சைப் படுத்தாதீர்கள்.
பாவமூட்டையை பெரிது படுத்தாதீர்கள்.

பரிகாரம் என்பது அறியாமல் செய்த தவறுகளுக்குத்தான்.
அடாவடித்தனமான தப்புக்களுக்கில்லை.
//

நீங்க சரியாக ஆத்திகத்தை புரிந்து கொண்டு இருக்கிறீர்கள்...இதே புரிதால் எல்லோருக்கும் இருக்கும் என்ற அளவு கோலில் எனது கட்டுரையைப் பார்த்தால் பிழையாகத் தான் தெரியும், குரு என்று சொல்லிக் கொள்பவர்களே கூலிப்படையை நாடும் போது.. ஹூம்... சொல்வது எல்லோருக்கும் எளிது ... இங்கு சொல்ல வருவதே ஒருவன் பக்திமானாக இருப்பதால் தான் அவன் தவறு செய்வதில்லை அல்லது நினைத்துப்பார்பதில்லை என்ற பொய்யுரையைப் பற்றிச் சொன்னேன்.

1000ல் ஒருவர் நல்லவராக இருக்கிறார் என்று 999 பேருக்கு நல்லவர் பட்டம் கொடுக்க முடியுமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
ஒரு டிஸ்கிளைமர்: நான் சொன்னது பொதுவான ஆத்திகத்தை (கடவுள் நம்பிக்கையை). RSSன் குருட்டு ஆத்திகத்தை அல்ல.
//\

ஆர் எஸ் எஸ் இந்து மதத்தின் ஆத்திகப் பிரிவு அல்ல ஆதிக்க பிரிவு.
:)

எல்லா ஆர் எஸ் எஸ் காரர்களும் இந்துக்களாக இருக்கலாம்... ஆனால் இந்துக்களெல்லாம் ஆர் எஸ் எஸ் காரர்கள் இல்லை.
:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஐஸ்ப்ரூட் said...
திருப்பதி உண்டியல்ல விழற காசுல எல்ல்லாமே நல்ல காசா ?
//

ம் எல்லாகாசும் அசல் ரிசர்வங்கி அடித்த காசுகள் தான் செல்லுபடி ஆகும்.
:))

பெயரில்லா சொன்னது…

//இங்கு சொல்ல வருவதே ஒருவன் பக்திமானாக இருப்பதால் தான் அவன் தவறு செய்வதில்லை அல்லது நினைத்துப்பார்பதில்லை என்ற பொய்யுரையைப் பற்றிச் சொன்னேன்.//

பல நல்லுரைகளும், நல்லெண்ணங்களுமே ஒருவனை பக்திமான் ஆக்குகிறது. அப்படிபட்டவன் எதற்காக தவறுகள் செய்வான். அப்படியே அவன் தவறான
பாதையை பார்க்கும் போதே, அவன் நம்பும் சக்தியே அவனை தடுத்தாட்கொண்டு
விடும்.
உண்மையான பக்திமான் மனமறிந்து ஒருபோதும் தவறு செய்ய மாட்டான்.


//குரு என்று சொல்லிக் கொள்பவர்களே கூலிப்படையை நாடும் போது.//

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே
மெய்.
அடுத்தவர்கள் சொல்வதெல்லாம் மெய் என்று நம்புகிறேம். ஆசான்
சொல்வதை அப்பால் தள்ளுகிறேம்.

நல்லார் ஒருவருக்காக பெய்யும் மழையில் தானே நாமும் நர்த்தனமாடுகிறேம்.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

anony தல,
//I regret that Pons has twisted this saying to make a point that RSS sevaks are cruel in their approach.//
Please dont regret, There is no twisting. He told me only in that manner. The context was something like "Its fine for a family to lose its father, if that is going to create a fear in other people". I cant explain more about this as it was personal, and my friend is a regular reader ;). I dont want to hurt his feelings even once, though it may bring some enlightenment within him about human beings and their feelings.

G.Ragavan சொன்னது…

// விரும்பி ஆத்திகர் ஆகுபவரை விட விரும்பி நாத்திகர் ஆகுபவரே மிகுதி. நினைவு தெரிந்தவுடனே எல்லோரும் ஆத்திகர்களாகத் தான் இருக்கிறார்கள், பின்பு தான் மாறுகிறார்கள். ஆத்திக செயல்பாடுகளில் குறை இல்லாவிட்டால் நாத்திகன் எங்கிருந்து வரப் போகிறான். //

கோவி, இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கு நினைவு தெரிந்து பள்ளி கல்லூரிகளில் கடவுள் நம்பிக்கையில் ஊறித் திளைத்த நினைவே இல்லை. அனால் போகப் போக.....எல்லாம் மாறியது. இறைநம்பிக்கை ஊறியது. இங்கிருந்து அங்கு தாவியவர்களும் உண்டு. அங்கிருந்து இங்கு தாவியவார்களும் உண்டு. ஆண்டவனையே வீட்டுக்கு அழைத்து வந்த செம்மல் என்ற உளறல்களுக்கும் ஆண்டவன் கீழ உக்காந்திருக்க இந்தம்மா சேர்ல உக்காந்திருந்தாங்க..போன்ற உளறல்கள் நமது ஊரில் எக்கச்சக்கம். ரெண்டு பக்கத்துலயும் பெரும்பாலும் அரைகுறைகள்தான். அதுதான் உண்மை.

குழலி / Kuzhali சொன்னது…

////குரு என்று சொல்லிக் கொள்பவர்களே கூலிப்படையை நாடும் போது.//

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே
மெய்.
அடுத்தவர்கள் சொல்வதெல்லாம் மெய் என்று நம்புகிறேம். ஆசான்
சொல்வதை அப்பால் தள்ளுகிறேம்.
//
அய்யா அனானி அப்போ நீங்க வீரப்பனை ஒன்றுமறியா அப்பாவி அப்படிங்கறிங்க.... ஜெயேந்திரனுக்கு மட்டும் தான் இந்த கண்ணால் காண்பது காதால் கேட்பது தீரவிசாரிப்பது எல்லாமா அல்லது எல்லோருக்கும் உண்டா?

Unknown சொன்னது…

//நாத்திகர்களுக்கும் விபச்சாரத்திற்கும் என்ன சம்பந்தம் ?
உதாரணம் சறுக்குதே :)
தமிழ்நாட்டுக் காரங்களுக்கு என்று இருக்க வேண்டுமோ?//

ஒரு விடயம் தவறு என்பதற்கு ஆத்திகர்களுக்கு சில வரையறைகள் உண்டு. ஆனால் அதே தவறான விடயம், நாத்திகர்களுக்கு, அந்நாட்டில் அல்லது அம்மாநிலத்தில் நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு தகுந்தாற்போல் அல்லது அந்த தனி மனிதரின் எண்ண ஓட்டத்தின், இயல்பின் அடிப்படைக்கு தகுந்தாற்போல் மாறு படும் (ஒரு சிலர், தம் மனம் தவறென்று சொல்வதைக் கூட, சில நியாயங்களை வலிந்து கற்பித்து சரியென்று நியாயப்படுத்தி விட முடியும்) என்று சொல்ல வந்தேன். மற்றபடி நான் ஆத்திகத்துக்கும் விபச்சாரத்திற்கும் எந்த இணைப்பையும் உண்டாக்க நினைக்கவில்லை GK.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
//நாத்திகர்களுக்கும் விபச்சாரத்திற்கும் என்ன சம்பந்தம் ?
உதாரணம் சறுக்குதே :)
தமிழ்நாட்டுக் காரங்களுக்கு என்று இருக்க வேண்டுமோ?//

ஒரு விடயம் தவறு என்பதற்கு ஆத்திகர்களுக்கு சில வரையறைகள் உண்டு. ஆனால் அதே தவறான விடயம், நாத்திகர்களுக்கு, அந்நாட்டில் அல்லது அம்மாநிலத்தில் நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு தகுந்தாற்போல் அல்லது அந்த தனி மனிதரின் எண்ண ஓட்டத்தின், இயல்பின் அடிப்படைக்கு தகுந்தாற்போல் மாறு படும் (ஒரு சிலர், தம் மனம் தவறென்று சொல்வதைக் கூட, சில நியாயங்களை வலிந்து கற்பித்து சரியென்று நியாயப்படுத்தி விட முடியும்) என்று சொல்ல வந்தேன். மற்றபடி நான் ஆத்திகத்துக்கும் விபச்சாரத்திற்கும் எந்த இணைப்பையும் உண்டாக்க நினைக்கவில்லை GK.

//

சுல்தான்,

இங்கும் நீங்கள் சொல்லவந்தது சரியாக சொல்லவில்லையோ எனப்படுகிறது. நான் சொல்ல வருவது இதுதான். தனிமனித ஒழுக்கமே ஒரு மனிதனை ஒழுக்க சீலனாக காட்டுகிறது. இதில் கடவுள் நம்பிக்கை (கட்டுப்பாடு ?) முடிச்சுப் போடுவது ஏற்புடையது அல்ல. விபச்சாரம் தவறு என்பது ஒழுங்கினம் குறித்து மனித வாழ்வியல் அடிப்படையில் சொல்லப்படும் பரவலான மதநம்பிக்கை கடந்த பொதுக்கருத்து. இதில் தவறு செய்பவர் எவராக இருந்தாலும் அவர் ஆத்திகராகவோ, நாத்திகராகவோ பார்த்து மனிதமனிதங்கள் அவர்களை பிரித்துப் பார்க்காது. நாத்திகருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று சொல்ல முடியாது சமூக ஒழுங்கின கட்டுப்பாடு என்பது எல்லோருக்கும் இருப்பதே. ஆனால் சமூக ஒழுங்கினங்களை இறை நம்பிக்கையாளர் என்ற வகையில் பாவ புண்ணியத்துக்கு பயந்து அல்லது தண்டனைக்கு பயந்து கொண்டு கட்டிக் காக்கிறார்கள் என்று சிலர் சொல்வதை ஏற்க முடியவில்லை. குறிப்பாக சமூக ஒழுங்கினத்தைக் குறித்த அக்கரையில் ஆத்திகம் நாத்திக மனங்களின் நிலைப்பாடுகள் கொண்டுவருதே தவறு என்று சொல்ல வந்தேன். ஒழுங்கீனம் கட்டிக் காப்பதில் இறை நம்பிக்கை துணைபுரிவதாக எவரும் சொன்னால் அவர்களுக்கு சான்றாக சொன்னதே மேலே பதிவில் சொன்ன சில விடயங்கள். நாத்திகராக இருப்பவர் ஒழுங்கீனமாக இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று சொல்வது போல் சிலரின் கருத்துக்களாக இருப்பதால்... அப்படியல்ல...இங்கு நம்பிக்கைகளை தள்ளி வைத்துவிட்டு நாம் பார்க்க வேண்டியது நாம் வாழும் சமூகத்தில் பொதுவாக ஒழுங்கீனம் குறித்து இரு பிரிவினரின் அக்கரையே. அதை நாத்திகரும் இறைநம்பிக்கை (கட்டுப்பாடு ?) இல்லாதவர் என்பதால் அதை மீறுவோம் என்றும் நினைப்பதில்லை.

உங்கள் கருத்துக்கான மறுப்பதற்கு அல்ல இது.. இது ஒரு மாற்றுக் கருத்து... உங்கள் பார்வையில் சொல்லப்பட்ட விதம் சரியாக தோன்றினாலும் .. இன்னும் கொஞ்சம் நான் செல்ல விரும்பியதையும் சொன்னேன்.

சிவபாலன் சொன்னது…

// "ஆத்திகர்கள் எல்லாம் சாதுக்களா ?"//

இல்லை


கோவில்களுக்கு சென்று பாருங்க.. அவர்கள் சாதுக்களா இல்லை சங்கடங்களா என.. காசு கொடுத்தால் VIP..

இல்லை அந்த உயிரற்ற சிலையைக் காண 80 மணி நேரம் நிற்க வேண்டும்.

வாழ்க ஆத்திகர்களின் ஆதிக்கம்..

மனிதனாவோம்..

பெயரில்லா சொன்னது…

வலையுலக ஆன்மீக அன்பர்கள் பாதி பேர் வரவில்லையே?

உறுத்துகிறதோ?????

தருமி சொன்னது…

நாம் எல்லோருமே - நாத்திகராயினும், ஆத்திகராயினும் - அடிப்படையில் ஒன்றுதானே - மனிதர்கள் என்ற வ்கையில்.

குமரன் (Kumaran) சொன்னது…

//வலையுலக ஆன்மீக அன்பர்கள் பாதி பேர் வரவில்லையே?

உறுத்துகிறதோ????? //

அனானி நண்பரே. வந்து விட்டேன் போதுமா? என் கருத்து என்ன என்பதை என் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் சொல்லியிருக்கிறேன். அவற்றை மீண்டும் இங்கே சொல்ல வேண்டுமென்றால் எனக்கு நேரம் இல்லை. உங்களுக்கு நேரம் இருந்தால் என் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் என் கருத்தைத் தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.

உறுத்தும் அளவிற்கு இங்கே என்ன பேசிவிட்டீர்கள்? ஒரு பக்க சார்பான கருத்துகள். அவ்வளவு தான். இல்லாத ஒரு விடயத்தை இருப்பதாகச் சொல்லி தங்களின் கருத்துகளை எங்கள் மேல் ஏற்றிச் சொன்னால் நாங்கள் வந்து பதில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா? எங்களுக்கு வேறு வேலை இல்லையா என்ன?

இராகவன் தன் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். வலையுலக ஆன்மிக அன்பர்களின் கருத்துகளும் அது தான். அதற்கு பெயர் சொல்ல விரும்பாத நீங்களோ இல்லை இந்த இடுகையை இட்ட அன்பரோ பதில் சொன்னதாகவோ இல்லை ஆமோதித்ததாகவோ தெரியவில்லையே. அதில் எங்களுக்கு உறுத்துகிறதோ என்று கொக்கி போட மட்டும் தெரிகிறது. :-)

எங்களுக்கு இல்லாத கருத்துகளை நாங்கள் சொல்வதாக எண்ணிக் கொண்டு நீங்களே இடுகைகளை இட்டுக் கொண்டால் அதில் என்னைப் போன்றவர்கள் வந்து பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

நான் என் வேலையைப் பார்க்கச் செல்கிறேன். நன்றி நண்பரே.

கோவி.கண்ணன் சொன்னது…

// குமரன் (Kumaran) said...

அனானி நண்பரே. வந்து விட்டேன் போதுமா? என் கருத்து என்ன என்பதை என் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் சொல்லியிருக்கிறேன். அவற்றை மீண்டும் இங்கே சொல்ல வேண்டுமென்றால் எனக்கு நேரம் இல்லை. உங்களுக்கு நேரம் இருந்தால் என் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் என் கருத்தைத் தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.
//

குமரன்,

முதலில் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்...எனது பதிவுகளில் ஒரு மாதத்திற்கு முன்புவரை அனானி பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை. சில பதிவர்கள் தங்களால் அலுவலக நேரத்தில் ப்ளாக்கரில் கையொப்பமிட்டு பின்னூட்டமிடமுடியவில்லை என்று சொன்னதால் அனானிகள் பின்னூட்ட வசதியை திறந்து வைத்தேன். தனிமனித தாக்குதல்கள் இல்லாது வரும் பின்னூட்டங்களை அனுமதிக்கலாம் என்ற என் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. மாற்றுக் கருத்துடன் வரும் அனானி பின்னூட்டங்களையெல்லாம் நான் வெளி இடுகிறேன் என்பதற்காக அவை என் 'சார்பில்' கேட்பவை என்ற பொருளில் கொள்ளத் தேவை இல்லை. இது ஒரு தன்னிலை விளக்கம் மட்டுமே.
//
உறுத்தும் அளவிற்கு இங்கே என்ன பேசிவிட்டீர்கள்? ஒரு பக்க சார்பான கருத்துகள். அவ்வளவு தான். இல்லாத ஒரு விடயத்தை இருப்பதாகச் சொல்லி தங்களின் கருத்துகளை எங்கள் மேல் ஏற்றிச் சொன்னால் நாங்கள் வந்து பதில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா? எங்களுக்கு வேறு வேலை இல்லையா என்ன?

இராகவன் தன் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். வலையுலக ஆன்மிக அன்பர்களின் கருத்துகளும் அது தான். அதற்கு பெயர் சொல்ல விரும்பாத நீங்களோ இல்லை இந்த இடுகையை இட்ட அன்பரோ பதில் சொன்னதாகவோ இல்லை ஆமோதித்ததாகவோ தெரியவில்லையே. அதில் எங்களுக்கு உறுத்துகிறதோ என்று கொக்கி போட மட்டும் தெரிகிறது. :-) //
இராகவன் சில விடயங்களைச் சேர்த்துச் சொல்லி இருக்கிறார். மற்றபடி நானே பதிவில் சொல்லி இருக்கிறேன் ஆத்திகமோ, நாத்திகமோ அயோக்கிய தனங்களுக்கு தனிமனித செயல்கள் தான் காரணம் !

திரு ராகவன் சொன்னபதில் இறை நம்பிக்கை குறித்த பின்னூட்டம்...நானே அதுபற்றி பதிவில் பேசப்போவதில்லை என்பதற்காக 'நான் கடவுள் நம்பிக்கை சரியா ? தவறா என்று எதும் சொல்ல வரவில்லை. ' என்று சொல்லி இருக்கிறேன். இறை நம்பிக்கையை சாடுவது இந்த நோக்கம் இல்லை. பாவ-புண்ணியத்துக்கும் இறை நம்பிக்கைக்கும் என்ன தொடர்பு ? வெறும் பாவ-புண்ணியம் என்ற சொல் மதம்-நம்பிக்கை தொடர்புடையவையே அல்ல... அதற்கு பின்னால் இருப்பவை கெட்டவன் - நல்லவன் என்று சொல்ல வருபவையே. நீங்களாக இல்லாத கொக்கியைப் போட்டதாக சொன்னால் என் பதில் அப்படி எதுவும் இல்லை என்பதே.
:)

//

எங்களுக்கு இல்லாத கருத்துகளை நாங்கள் சொல்வதாக எண்ணிக் கொண்டு நீங்களே இடுகைகளை இட்டுக் கொண்டால் அதில் என்னைப் போன்றவர்கள் வந்து பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

நான் என் வேலையைப் பார்க்கச் செல்கிறேன். நன்றி நண்பரே.
//

நீங்களே 'இடுகை' என்று சொல்லை இங்கே தெரிந்தே எழுதினீர்களா ? அனானிக்கு ஆன பதில் என்றால் அவர் இட்டது பின்னூட்டம் எனவே... பின்னூட்டம் என்று தானே இருக்க வேண்டும் ?

வெட்டிப்பயல் சொன்னது…

ஆத்திகர்கள் எல்லாம் சாதுக்களா? - கிடையாது...

ஆத்திகர்கள் எல்லாம் நல்லவர்களா? - கிடையாது.

சரி,
இதுக்கு பதில் சொல்லுங்க

ஆத்திகர்கள் எல்லாம் முரடர்களா?

ஆத்திகர்கள் எல்லாம் கெட்டவர்களா?

நாத்திகர்கள் எல்லாம் சாதுக்களா?

நாத்திகர்கள் எல்லாம் நல்லவர்களா?

நாத்திகர்கள் எல்லாம் முரடர்களா?

நாத்திகர்கள் எல்லாம் கெட்டவர்களா?

எல்லாத்துக்கும் பதில் சொன்னா விடை தானா தெரியும் :-)

(எல்லாம்னு சொன்னா எந்த முடிவுக்கும் வர முடியாது :-) )

Unknown சொன்னது…

//இங்கும் நீங்கள் சொல்லவந்தது சரியாக சொல்லவில்லையோ எனப்படுகிறது//
ஒரு வகையில் ஆமாம். 'நாத்திகத்துக்கும் விபச்சாரத்திற்கும் நான் எந்த இணைப்பையும் உண்டாக்க நினைக்கவில்லை' என எழுத நினைத்து 'ஆத்திகத்துக்கும் விபச்சாரத்திற்கும்' என எழுதி விட்டேன்.

அடுத்து
//இதில் கடவுள் நம்பிக்கை (கட்டுப்பாடு ?) முடிச்சுப் போடுவது ஏற்புடையது அல்ல.//
எந்த கட்டுப்பாடுமற்ற தனிமனித ஒழுக்கங்கள் ஏற்றத்தாழ்வு உடையது. அவர்களில் நல்ல மனிதர்களில் கூட ஒருவருக்கு தவறாகத் தெரிவது மற்றவருக்கு சரியாகத் தெரியும்.
//விபச்சாரம் தவறு என்பது ஒழுங்கினம் குறித்து மனித வாழ்வியல் அடிப்படையில் சொல்லப்படும் பரவலான மதநம்பிக்கை கடந்த பொதுக்கருத்து.//
இந்த வாதத்தில் குறையிருக்கிறது ஜிகே.
மற்றவர்களுக்குத் துன்பம் ஏற்படுத்தாத வகையில் வாழ வேண்டும். இயன்றவரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே பொதுவாக நல்லவர்களுக்கான இலக்கணமாகக் கொள்ளப்படுகிறது.

தவறாக ஒரு பெண்ணை அடைய முயல்வதே தவறு. அதற்கென்று அனுமதிக்கப்பட்ட இடங்களில், குறிப்பிட்ட பெண்ணிண் விருப்பத்தின் படி, அனுமதியின்படி, தேவையுடையவர்கள், தகுந்த பாதுகாப்புச் சாதனங்களுடன், விபச்சாரம் செய்வதில் யாருக்கும் எந்த இழப்புமில்லை என்று கொள்ளப்படுவதில் ஆத்திக வாதத்தின்படி மறுப்பு சொல்ல என்ன அளவுகோல் இருக்கிறது?.
இந்த வகை விபச்சாரம் செய்வதிலிருந்தும் தடுக்க ஆத்திக சிந்தனைப்படி தேவை என்ன வந்தது.

நல்லவர்கள் அவர்களைத் திருத்த முயலலாம் எனச் சொல்லப்படுமானால், அங்கு கிடைக்கும் பணமும் பகட்டான வாழ்க்கையையும் விரும்பி அங்கு பணி புரிபவர்களைத் தடுக்க நினைப்பது ஆத்திக சிந்தனைப்படி தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாக ஆகும்.

//சமூக ஒழுங்கினங்களை இறை நம்பிக்கையாளர் என்ற வகையில் பாவ புண்ணியத்துக்கு பயந்து அல்லது தண்டனைக்கு பயந்து கொண்டு கட்டிக் காக்கிறார்கள் என்று சிலர் சொல்வதை ஏற்க முடியவில்லை//
இறை நம்பிக்கையாளர்கள் இறைத்தண்டனைக்கு பயந்து அவ்விடங்களைப் பயன்படுத்த அரசின் அனுமதியிருந்தும் பயன்படுத்துவதில்லை. தமிழ் நாத்திகர்களில் பெரும்பாலோரும் இப்படித்தான் என்று சொன்னாலும் தனி மனித ஒழுக்கங்களின் வரையறைகள் அவர்களில் ஆளாளுக்கு மாறுபடும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதேனும் உண்டா?.

ஆளாளுக்கு மாறுபடும் தனி மனித ஒழுக்க வரையறைகள் சிறந்ததா? அச்சமூக மனிதர்களுக்கென்று பொதுமைப்படுத்தப்பட்ட, எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஒழுக்க வரையறைகள் சிறந்ததா? என்பதை அவரவர்களே முடிவெடுக்கலாம்.

இன்னும் நிறைய எழுத தோன்றுகிறது. ஆனால் ஆணி பிடுங்கல், மற்றும் குடும்பத்தாரின் துபை வரவு போன்றவை எழுதுவதில் தொய்வை அதிகப்படுத்துகின்றன. நன்றி ஜிகே அவர்களே!.

கோவி.கண்ணன் சொன்னது…

சுல்தான் ஐயா,

பகுதி 2 கூட போட்டாச்சு, அதையும் படித்துவிட்டு கருத்து சொல்லுங்க !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்