பின்பற்றுபவர்கள்

16 ஏப்ரல், 2007

ஷங்கர் - ரஜினி கூட்டணியின் தில்லு முல்லு !

சந்திரசாமியின் தயவால் வெங்காய மூட்டைகள் பதுக்கப்பட்டு வெங்காயவிலை வெள்ளிக் கிரகம் வரை உயர்ந்தது என்றும் அதுவே காரணமாக அமைந்து வடமாநிலங்களில் அன்றைய வாஜ்பாய் அரசு செல்வாக்கு இழந்து ஆட்சி கவிழ்ந்ததாக சொல்கிறார்கள்.

மக்கள் விரும்பும் அல்லது பயன்படுத்தும் பொருள்களின் விலையை ஏற்ற வேண்டுமென்றால் உடனடியாக ஏற்ற முடியாது அப்படி செய்தால் பல்வேறு தரப்பு மக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். ஆனால் அந்த பொருள்களை பதுக்கி வைத்துவிட்டு கொஞ்ச கொஞ்சமாக விலை ஏற்றினால் ஒரு மாதத்திற்குள்ளேயே அந்த பொருள்களின் விலை கிடுகிடுகென உயர்ந்துவிடும். அதாவது அந்த பொருளுக்கு ஒரு டிமாண்ட் ஏற்படுத்த வேண்டும்.

நடிகர் ரஜினி விசயத்தில் இப்படித்தான் நடக்கிறது. வருடத்துக்கு 3 படம் நடித்தால் அவருக்கு ஊதியமாக அல்லது 3 அல்லது 4 கோடி படத்துக்கு கிடைக்கும். அதே சமயத்தில் எல்லா படங்களும் வெற்றி அடைகிறதா என்று சொல்ல முடியாது. ஆனால் 2 வருடத்துக்கு ஒரு படம் என்னும் போது ரஜினி படத்திற்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. தயாரிப்பாளர்களும் 10 கோடி 20 கோடி என கொட்டிக் கொடுக்க காத்திருக்கின்றனர். 2 ஆண்டுக்கு ஒரு படம் என்பது ரஜினியைப் பொறு்த்து 2 பங்கு லாபமே தவிர நட்டம் இல்லை.

நடிப்புக் கடவுளின்(?) திட்டம் அதுதான். மற்றபடி சங்கர் படம் என்பதால் பிரமாண்டத்துக்கு பஞ்சம் இருக்காது. அர்ஜுனை ஒரு நாள் முதல்வராக்கி தமிழகத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் 3 மணி நேரத்தில் தீர்த்து வைத்த ஷங்கர். கையில் ரஜினி இருக்கும் போது இந்தியா என்ன ஈராக் பிரச்சனையை தீர்ப்பதற்கு கூட படத்தில் தீர்வு இருக்கும்.

இந்த படத்துக்கு பிரச்சனை வரக்கூடாது. படம் தோல்வி என்றால் வாங்கிய விநியோகஸ்தர்கள் தான் கையை சுட்டுக் கொள்வார்கள். இல்லாவிடில் தோல்விக்கான காரணம் பிரச்சனையால் தான் என்று பாபா ஆருடம் சொல்லிவிடக்கூடாது. எதிர்பார்புகளை ஏற்படுத்திவிட்டதால் திருட்டு விசிடியில் படத்தை பார்த்துவிடலாம் என்று மக்கள் நினைப்பார்கள். படத்திற்கான பட்ஜெட்டை பார்க்கும் போது 100 நாள் ஹவுஸ் புல் காட்சியாக ஓட்டினால் தான் விநியோகஸ்தர்களுக்கு கையைக் கடிக்காமல் இருக்கும் என்று சொல்கிறார்க்கள். முன்பு ரஜினி படம் என்றால் முன்று வேலை சோற்றின் காசைக் கொடுத்து படம் பார்த்த ரசிகன், சிவாஜி ஸ்பெசல் மசாலா என்பதால் 3 நாள் சோற்றுக்கான காசைக் கொடுக்க வேண்டி இருக்கும். நமக்கு அதுவா முக்கியம் நடிப்புக்கடவுள் மூன்று வருடம் கழித்து ஒரு படம் கொடுக்கிறாரே, பார்க்க நாம் என்ன தவம் செய்திருக்க வேண்டும் ?

மேலும் சில சுட்டிகள் :

ரஜினியை ஏன் தமிழர்கள் விரும்புகிறார்கள் ?

சிவாஜி படம் தாமதம் ஆவதற்கு காரணம் என்ன ? (நகைச்சுவை)

பிகு : தலைப்பில் 'தில்லு முல்லு' - ரஜினி நடித்த நல்ல நகைச்சுவை திரைப்படம் அது போல சிவாஜியும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். :)

10 கருத்துகள்:

மருதநாயகம் சொன்னது…

//
முன்பு ரஜினி படம் என்றால் முன்று வேலை சோற்றின் காசைக் கொடுத்து படம் பார்த்த ரசிகன், சிவாஜி ஸ்பெசல் மசாலா என்பதால் 3 நாள் சோற்றுக்கான காசைக் கொடுக்க வேண்டி இருக்கும்
//

சில மேதாவிகள் தீபாவளி, பொங்கல் மாதிரி இரண்டு வருடங்களுக்கு வரும் பண்டிகை என்று கொண்டாடுகிறார்களே. இவர்கள் கொண்டாடுகிறார்களோ இல்லையோ ரஜினி நிச்சயம் கொண்டாடுவார்

Amar சொன்னது…

வருசத்திக்கு முனு படம் நடிச்சா...வருசம் முனு படம் உட்டு வசூல் செஞ்சு இவன் டமிலனின் பிழைப்பை கெடுக்கிறான்னு பதிவு போடுவீங்களே....பாவம் அந்த மனுசன் என்ன தான் பன்னுவாரு.


இப்படியெல்லாம் எழுத ரும்போட்டு யோசிப்பிங்களோ ?? :)

கருப்பு சொன்னது…

சார்,

ரஜினி படம் ஓடுதோ இல்லையோ இங்கே ரஜினி பைத்தியம் சில இன்னும் உளறிக் கொண்டுதான் இருக்கின்றன.

ரஜினியோ கமலோ யார் வேனா நடிக்கட்டும். திறமை இருந்தால் மக்கள் மதிக்கப் போறாங்க. இல்லைன்னா தூக்கி வீசப் போறாங்க. அம்புட்டுதேங்.

வெட்டிப்பயல் சொன்னது…

கோவி கண்ணன்,
என்ன யோசிச்சி எழுதனீங்கனு தெரியல...

வெங்காயம் இல்லைனா சமைக்க முடியாதுனு விலை ஏறுச்சு... சிவாஜி படம் பாக்கலனா என்ன செத்தா போயிடுவாங்க???

அந்நியனும் அப்படி தான் ரிலிஸ் தள்ளிக்கிட்டே போச்சு, வே.வி 6 மாசம் மேல லேட் ஆச்சு...

சங்கர் நிறைய Post production work பண்ணுவார்...


வேணும்னா எந்த நடிகரையாவது மூணு வருசத்துக்கு ஒரு படம் நடிச்சி ரஜின் அளவுக்கு சம்பாதிக்க சொல்லுங்க பார்ப்போம். எல்லாம் ஃபீல்ட் விட்டு காலியாகிடுவோமோனு பயப்படுவாங்க...

பாபா நல்லா இல்லைனு எவனும் பாக்கல இல்லை. படம் ஃபிளாப் தானே... நல்லா இல்லைனா MGR படமே ஓடாது.

நாமக்கல் சிபி சொன்னது…

//ரஜினியோ கமலோ யார் வேனா நடிக்கட்டும். திறமை இருந்தால் மக்கள் மதிக்கப் போறாங்க. இல்லைன்னா தூக்கி வீசப் போறாங்க. அம்புட்டுதேங்.//

வி.க சொல்வது 100% கரெக்டுங்கோவ்

ஜோ/Joe சொன்னது…

கோவியாரே,
இது உள்குத்து பதிவா?

சென்ஷி சொன்னது…

//அர்ஜுனை ஒரு நாள் முதல்வராக்கி தமிழகத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் 3 மணி நேரத்தில் தீர்த்து வைத்த ஷங்கர். கையில் ரஜினி இருக்கும் போது இந்தியா என்ன ஈராக் பிரச்சனையை தீர்ப்பதற்கு கூட படத்தில் தீர்வு இருக்கும்.//

:))

சென்ஷி

கோவி.கண்ணன் சொன்னது…

//வேணும்னா எந்த நடிகரையாவது மூணு வருசத்துக்கு ஒரு படம் நடிச்சி ரஜின் அளவுக்கு சம்பாதிக்க சொல்லுங்க பார்ப்போம். எல்லாம் ஃபீல்ட் விட்டு காலியாகிடுவோமோனு பயப்படுவாங்க...

பாபா நல்லா இல்லைனு எவனும் பாக்கல இல்லை. படம் ஃபிளாப் தானே... நல்லா இல்லைனா MGR படமே ஓடாது.

1:45 PM, April 16, 2007
//

வெட்டி சார் (பயல் னு போட சங்கடமாக இருக்கு) :)

படத்தில் கதை இருந்தால் தான் ஒடும் என்பது பாபா தந்த பாடம். ஆனால் இன்னும் முகத்துக்காக த்தான் ஓடுதுன்னு கடவுளாக்கிப் பாக்கிறவங்க தான் இதுக்கு பதில் சொல்லனும். விஜய் ஜெயம் ரவி மாதிரி பிற மாநிலங்களில் வெற்றிப்படக் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தான் சந்திரமுகியை ஹிட் ஆக்க முடிஞ்சுது.

இருந்தாலும் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தவே பெரிய இடைவெளின்னு நான் நினைக்கிறேன். இது சந்திரமுகிக்கும் பாபாவுக்கும் உள்ள முந்தைய இடைவெளிப்போலத்தான் இதுல ஷங்கரை தொடர்பு படுத்தவில்லை நான். ஷங்கர் படத்தைப் பற்றி படம் வந்ததும் ஆராய்வோம்.

:)

பெயரில்லா சொன்னது…

கண்டிப்பா சின்ன சின்ன விஷயங்கள், ரஜினியோட ஸ்டைல்ஸ் எல்லாம் சேர்ந்து படத்தை தூக்கிரும்...

பா.பா. ஓடாத்துக்கு காரணம் ரஜினி சரியா மேக்கப் போடலை...:)

ILA (a) இளா சொன்னது…

//'தில்லு முல்லு' - ரஜினி நடித்த நல்ல நகைச்சுவை திரைப்படம் அது போல சிவாஜியும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்//
நானும்தான்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்