இந்த இதழ் ஜூவியில் திமுகவின் பாராளுமன்ற வேட்பாளர் பெயரில் பிரபல வலைப்பதிவரும், திமுக செயற்குழு உறுப்பினருமான புதுகை அப்துல்லாவின் பெயரும் படமும் இடம் பெற்றுள்ளது. ஜூவி ஓரளவு நம்பிக்கையான செய்திகளைத் தருவதால் கிட்டதட்ட தகவல் 90 விழுக்காடு திமுக தரப்பைப் விசாரித்துவிட்டு எழுதியதாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன், தம்பி புதுகை அப்துல்லாவும் 'தலைவர்' அத்தகைய வாய்பை தனக்கு அளித்தால் மகிழ்ச்சி என்று கூகுள் ப்ளஸிலும், முகநூலிலும் கூறியுள்ளார்.
எனக்கு தனிப்பட்ட முறையில் திமுக மீது எந்தவித ஆர்வமோ, அனுதாபமோ கிடையாது, இருந்தாலும் நடுநிலையாளர்கள் ஒரு கட்சியில் இருக்கும் பொழுது நல்லதை எடுத்துச் சொல்லி நடைமுறைப்படுத்த முயற்சி செய்வார்கள் என்ற வகையில் தம்பி அப்துல்லாவுக்கு எனதும் மற்றும் எண்ணற்ற கட்சி சாராத வலைப்பதிவர்களின் ஆதரவு எப்போதும் உண்டு.
நடைபெறுப் போகும் நாராளுமன்ற தேர்தலில் கட்சிகளின் கூட்டணிகள் குறித்து இறுதி விவரம் தெரியாத நிலையில், அப்துல்லாவிற்கு 'வெற்றிக்கான' வாழ்த்து என்று வெறும் வாயல் வாழ்த்துவதைவிட, இப்படியான 'வேட்பாளர்' அதுவும் திருச்சி போன்ற பெரிய தொகுதியில் நிற்கும் ஒரு வாய்ப்பு அவரை பலருக்கும் ஏன் தமிழ் நாட்டிற்கே பல்வேறு ஊடகங்களின் வழியாக அறிமுகம் செய்யக் கிடைக்கும் நல்வாய்பாக அமையும் என்பதாலும், எதிர்காலத்தில் நல்லதொரு அரசியல்வாதியாக உருவாகி தமிழ்நாட்டிற்கும், பிறந்த ஊருக்கும் நல்லது செய்து பெருமை சேர்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு, ஏனென்றால் பல தொகுதிகளில் எந்த கட்சி நிற்கிறது என்பதைவிட யார் வேட்பாளர் என்று பார்த்தும், தனியாக நிற்பவர்களையும் (சுயேட்சை) வெற்றிபெற வைக்கிறார்கள் மக்கள். நான் அறிந்தவரையில் தம்பி புதுகை அப்புதுல்லா நேர்மையான, அன்பானவர், பண்பாளர் குறிப்பாக மதச்சார்பற்றவர் என்ற முறையில் அவரைப் போன்றவர்கள் அரசியலுக்குள் வருவது மிகவும் தேவையான ஒன்றே.
தம்பி அப்துல்லா எல்லா தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்று, தமிழகம் தழுவிய செல்வாக்கு பெற்று மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
7 கருத்துகள்:
மிக நன்றான தவல் சொன்னீர்கள் கோவி சார்.
எனக்கும் திமுக என்ற கட்சி மேல் எந்த வித அனுதாபும் இல்லை என்றாலும் நண்பர் அப்துல்லாவின் மேல் நம்பிக்கை இருக்கிறது.
//நேர்மையான, அன்பானவர், பண்பாளர் குறிப்பாக மதச்சார்பற்றவர் என்ற முறையில் அவரைப் போன்றவர்கள் அரசியலுக்குள் வருவது மிகவும் தேவையான ஒன்றே. //
அப்படியே வரிக்கு வரி, வழி மொழிகிறேன்
//நேர்மையான, அன்பானவர், பண்பாளர் //
ஒவ்வொரு பரப்புரை கூட்டத்திலும், அலைகற்றை உழல் என்பது பொய், கனிமொழி தங்க தங்க மானவங்க, தலைவர் அப்பாவி ன்னு சொல்லித்தான் ஒட்டு கேக்கணும். இதுல நேர்மைய எங்க கண்டு பிடிக்கிறது.
நேர்மையானவர்கள் சுயேச்சையாய் நின்றால் ஜெயிப்பார்கள் மக்கள் யாரைத்தோற்க்கடிக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ அந்த கட்சியில் நின்றால் எப்படி ஜெயிக்கமுடியும்.
நல்ல கட்சி எந்த கட்சி சொல்லுங்க எல்லா கட்சியும் டுபாக்கூர் தான், ஆன போதும் ஓரிரு நல்லவர்கள் கட்சிக்குள் அனைத்துக் கட்சிக்குள் போனால் தான் திருத்தம் வரும் வாய்ப்பாவது வரும். கட்சிக்கு வாக்களிக்காமல் வேட்பாளரின் தராதரும் கண்டு வாக்களிப்பதே ஆரோக்கியமான ஜனநாயகம். அவ்வகையில் அன்பர் புதுகை அப்துல்லாவுக்கு வாக்களித்தால் சுபமே. சக வலைப்பதிவராய் எமக்கு பெருமையும் கூட. :)
இனிய நண்பரும் கலைஆர்வம் கொண்ட இளைஞருமான புதுகை அப்துல்லா வேட்பாளரானால் மகிழ்ச்சிதான். அவரது வெற்றிக்கு உழைக்கத் தயாராக புதுக்கோட்டையிலும் திருச்சியிலும் பெரும் நண்பர்கள் கூட்டமே இருக்கிறதே! வாழ்த்துகள் நண்பா!
மிக்க மகிழ்ச்சி... புதுகை அப்துல்லா அவர்கள் வேட்பாளராக வர வேண்டும்... இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள்...
இணைய தளங்களில் dmkக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவராச்சே ,அவரை எப்படி நடுநிலையான பதிவர் ,பிரபல பதிவர் எனச் சொல்லமுடியும் ?பதிவரானாலும் அவர் கட்சிக்காரர் தானே ?
த.ம 2
கருத்துரையிடுக