பின்பற்றுபவர்கள்

5 மார்ச், 2013

யார் அந்த அதிகாரி ?


நான் செய்தி நிறுவனங்கள் எதையும் முழுதாக நம்புவதில்லை, செய்தி ஊடகங்கள் அனைத்துமே அரசு சார்பு அல்லது எதிர்ப்பு ஊடகங்கள் தான், தாங்கள் கட்டுப்பாடற்றவர்கள் என்று செய்தியாளர்கள் கூறிக் கொண்டாலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அல்லது தனக்கு வேண்டிய எதிர்கட்சிக்கு ஆதரவாக, அல்லது தாம் சார்ந்த அமைப்புகளுக்கும், தங்கள் கொள்கைக்கு எதிராகவும் செய்திகளை திரித்து வெளி இடுவது அல்லது தேவையற்ற தகவல்களை திணிப்பது இவை தான் செய்தி இதழ்களின் தலையாயப் பணி,  செய்திகளை முந்தித்தருவது என்றெல்லாம் போட்டித் தன்மை சமாளிப்பு என்ற பெயரில் மக்கள் மூளையை கிறங்கச் செய்வதில் செய்தியாளர்களுக்கு நிகர் அவர்களே தான், ஒருவரை உயர்த்திப் பிடிப்பதும், சாதனைகளை கண்டுகொள்ளாமல் விட்டு புறக்கணித்து முன்பு தூக்கியவர்களை கீழே போடுவதும் அவர்களின் சர்குலேசனுக்கு ஏற்ற கலை.

செய்தியாளர்கள் பொதுச் சேவையாளர்கள் இல்லை, அவை நிறுவனங்கள் தான், எல்லா தொழில்களிலும் லாபம் ஈட்டும் நோக்கமே முதன்மையானது என்பது போல் தான் செய்தி நிறுவனங்களும், இவர்களின் செய்திகளின் தரம், அதில் நேர்மை இவற்றின் விழுகாட்டு வேறுபாடுகள் தான் ஒரு செய்தி நிறுவனம் மக்கள் இடையே புகழடைந்து விற்பனையில் கூடுகிறதா இல்லையா என்பதையெல்லாம் முடிவு செய்யும், தகவல் என்ற அடிப்படையில் எதையும் நாம் அவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டாலும் அவர்கள் அதில் விதைத்துள்ள அல்ல மறைத்துள்ள அரசியலையும் சேர்த்தே நுகர்கின்றோம் என்பதே உண்மை. எனவே செய்தி இதழ்களின் எந்த நிகழ்வு பற்றிய தகவல்களுக்கு நாம் உணர்ச்சி வசப்படலாம் என்பதையெல்லாம் அவரவர் தெளிந்து முடிவு செய்வதே நன்மை இல்லாவிட்டாலும் இரத்த அழுத்தம் கூடாமல் இருக்கும், செய்தியாளர்களால் புரட்சி நடந்திருக்கிறது, ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது, ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது என்பதெல்லாம் கூட உண்மை தான், ஆனாலும் அவற்றைக் காரணமாக வைத்து அவர்கள் என்னேரமும் மக்கள் நலன் குறித்து சிந்திக்கிறார்கள், அதுபற்றி எழுதுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை

கிழே உள்ள இரண்டு செய்திகளை கவனமாக படிக்கவும், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை

************

சென்ற மாதம் ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பில் வெளி வந்த செய்திகளில் ஒன்று.....

ஹைதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி ஜார்க்கண்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் மன்சர் இமாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது விவரங்களை அளிக்க இமாம் மறுத்துவிட்டார்.

ஏற்கனவே அகமதாபாத் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்பிருப்பதாகக் கண்டறியப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்சர் இமாம் தேடப்பட்டு வந்துள்ளார். இவருக்கு ஹைதராபாத் குண்டு வெடிப்பிலும் தொடர்பிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Read more at: http://dinamani.com/latest_news/article1487767.ece

இன்று ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பில் வெளி வந்த செய்திகளில் ஒன்று.....

டெல்லி: ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விவரங்களை பாகிஸ்தான் உளவாளிக்கு கொடுத்த தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) அதிகாரி விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். 

இந்திய ராணுவத்தில் மேஜர் நிலையில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் தேசிய பாதுகாப்புப் படைக்கு மாற்றப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஒருநபர் அவரை தொலைபேசியில் அழைத்திருக்கிறார். ஆனால் அவருக்குப் பதிலாக வேறு ஒரு அதிகாரி பேசியிருக்கிறார். அந்த உளவாளியும் குறிப்பிட்ட அதிகாரியிடம்தான் பேசுகிறோம் என்று நினைத்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பில் இருந்த அதிகாரி, ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு இடத்தை நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல் மற்ற புலனாய்வு அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டு உஷார் படுத்தப்பட்டனர். 

இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு படை தலைவர் அர்விந்த் ரஞ்சன், அந்த அதிகாரியை தொலைபேசியில் அழைத்த நபர் யார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். 

மேலும் ஒரு அதிகாரி... 

இதனிடையே ராஜஸ்தானில் கைதான ஐஎஸ்ஐ உளவாளியுடன் தொடர்புடைய மற்றொரு அதிகாரியிடம் டெல்லி போலீசாரும் புலனாய்வு அமைப்பினரும் விசாரணை நடத்தினர். கடந்த மாதம் பொக்ரானில் நடைபெற்ற விமானப் படைப் பயிற்சியின்போது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்ததாகவும் சில முக்கியத் தகவல்களை அந்த அமைப்புக்கு அளித்ததாகவும் சுமர் கான் என்பவர் சிக்கினார். அவருடைய தொலைபேசி அழைப்புப் பட்டியலில் உள்துறை அமைச்சகத்தில் வெளிநாட்டவர் விவகாரங்கள் துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அதிகாரியிடம் புலனாய்வு அமைப்பினரும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் பலருக்கு முறையற்ற வழியில் விசா நீட்டிப்பு செய்து தந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/05/india-hyderabad-blasts-nsg-official-facing-probe-170958.html

********

இரண்டு தகவல்களும் வெவ்வேறு ஊடகங்களில் வந்த தகவல் தான், முதல் செய்தியில் குற்றவாளி என்று கருதப்படுபவரின் பெயரை வெளி இட்டுள்ளனர், குற்றவாளியின் பெயரை  (மன்சர் இமாம்) வைத்து என்ன மதத்தை சேர்ந்தவர் என்று கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமானதல்ல, ஆனால் இரண்டாம் செய்தியில் இந்திய தேச துரோகம் என்ற அளவுக்கு குற்றம் செய்தவனை ஒரு அதிகாரி, அந்த அதிகாரி என்றெல்லாம் மொட்டையாகவே செய்தி போட்டு இருக்கின்றனர், மேஜர் நிலையில் பணியாற்றிய 'அந்த அதிகாரிக்கு' பெயர் இல்லையா ? பெயரை வெளி இடாமல் இருக்க பாதுகாப்பு காரணம் என்றால் அதை ஏன் செய்தியாளர்களுக்கு தகவலாக தரவேண்டும், உள்ளுக்குள்ளேயே அமுக்கி இருக்கலாமே, எல்லாவற்றையும் நோண்டுவோம், நொங்கெடுப்போம் என்று அறைகூவும் செய்தியாளர்கள் அந்த தேச துரோக குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரை தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லையா ? ஒருவேளை 'அந்த அதிகாரி' பெயரை வைத்து இந்து என்று கண்டிபிடித்து காரித்துப்பினால் பிறகு இஸ்லாமியர்களை மட்டுமே குறிவைத்து செய்திகள் போட முடியாது என்கிற நட்ட நடுசெண்டர் நிலையோ ?

குற்றங்களும் குற்றவாளிகளும் தாங்கள் சார்ந்துள்ள மதங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கண்டுகொள்ளாமல் செயல்பட்டாலும், குறிப்பிட்ட மதத்தினரை மட்டுமே வெளிச்சம் போட்டு மற்றதை மறைப்பது நல்லதில்லை. ஒருதலைப்பட்சமான தகவல்கள் தேவையற்ற வெறுப்புகளையும், அச்சத்தையும் வளரவைக்கும். குற்றங்கள் நிருபனம் செய்யப்பட்டு தண்டனைகள் அறிவிக்கப்படாதவரை எவருடைய பெயரையும் புகைப்படத்தையும் இன்னார் தான் குற்றவாளியாக கைது செய்யப்படுகிறார் என்று காட்டுவதை தவிர்கலாம். பிழைப்புவாதிகளான செய்தியாளர்கள் செய்வார்கள் என்று நம்பிக்கை இல்லை.

14 கருத்துகள்:

VOICE OF INDIAN சொன்னது…

எது ஒன்றைச் செய்தால் பலன் மக்களுக்கு நேரிடையாக கிடைக்குமோ அந்த ஒன்றை விடுத்து அனைத்தையும் செய்வது அரசியல் வாதிகளுக்கு மட்டும் அன்றி பல சமூக அமைப்புகளுக்கும் தோன்றுவது ஏன்?
எங்களுக்கு புரியவில்லை

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ ,
தேவையான் நல்ல பதிவு.

செய்திகளின் படி பாகிஸ்தானில் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்புக்கு பதிலாக ஒரு அதிகாரி, ஹைதராபாத் குண்டு வெடிப்பு விசாரணை பற்றிய தகவல் பகிர்ந்து இருக்கிறார்.ஏன் அப்ப்டி செய்தார் என விசாரித்து வருகிறார்கள்.

அப்படி அவர் தகவல் பகிர்ந்தது சட்டப்படி குற்றம். அவரின் பெயரை ஊடகங்கள் வெளியிடவில்லை.

தி இந்து,டைம்ஸ்,என்.டி.டி.வி செய்திகளின் சாரம் இங்கே!!

http://www.thehindu.com/news/national/pak-caller-tricks-nsg-officer-gets-hyderabad-blasts-info/article4478910.ece

A telephone call originating from Pakistan to an officer of the elite National Security Guards (NSG) seeking information about Hyderabad blasts has led security agencies to make a fresh push for blocking of Internet telephony.

The call to a ""Major-rank NSG officer"", who is on deputation from Army, was termed as “not alarming” but the incident has raised questions about adherence of ‘Do’s and Dont’s’ being issued from time to time by central security agencies.

http://timesofindia.indiatimes.com/india/Hyderabad-blasts-NSG-official-facing-probe-for-sharing-info-with-Pak-spy/articleshow/18805451.cms?

""An officer"" with country's premier counter-terror force National Security Guard (NSG) is facing an inquiry for sharing details of February 21 Hyderabad blasts investigations with an unidentified person. It is being suspected the person could be a Pakistani spy, although NSG has denied it.
*
http://www.ndtv.com/article/india/after-hyderabad-blasts-a-problematic-phone-call-for-national-security-guard-nsg-338414

A phone call was received at the NSG headquarters in Delhi just after the Hyderabad blasts on February 21. The caller allegedly identified himself as an officer of the Army's Military Intelligence (MI) unit, and asked if an NSG team had left for Hyderabad.

"The officer" who answered the call confirmed that was the case.

It now turns out that there is no Military Intelligence officer with the name used by the caller.

ஒரு நாட்டின் உளவுத் துறை எதிரி நாட்டின் இரகசியங்கள் பெற எதனையும் செய்யும் என்பதும் இதில் பணம், மது,மாது,மதம் என எதையும் பயன்படுத்தும்.
தீவிரவாத செயல்கள் வெளிநாட்டு ஆதரவு இன்றி நடப்பதன் வாய்ப்பு மிக மிக குறைவு.

குண்டு வெடிப்பு,வன்முறை மட்டுமே தீவிரவாதம் அல்ல. குழப்பம்,இன,மத வாதம் பரப்பும் கருத்துகளும்,பரப்புரைகளும் தீவிரவாதமே!!!

இந்தியாவில் எந்த விடயமும் தெளிவாக வெளிவராது!!! ஆகவே இதுவும்.......

நன்றி!!!

Unknown சொன்னது…

இது கோவி கண்ணன் தளம் தானா..?? அல்லது வேறு யாராவது மார்க்க பந்துக்கள் உள்ளே புகுந்து பதிவிட்டு விட்டனரா..? :-))

தங்களின் சிந்தனைக்கு நன்றி !!!

? சொன்னது…

நல்ல சிந்தனை.

எந்த செய்தி ஊடகமும் அந்த அதிகாரியின் பெயரை வெளியிடததன் காரணம் உண்மையிலேயே NSG அந்த அதிகாரியின் பெயரை வெளியிடவில்லை. சில ஊடகங்களில் வந்திருப்பது போல அந்த அதிகாரி எந்த துரோகமும் செய்யவில்லை. அவர் மீது எந்த விசாரணையும் இல்லை. உண்மையில் தட்ஸ்தமிழ் செய்தியே மொழி பெயர்ப்பு தவறாக தோன்றுகிறது.

பாகிஸ்தானிலிருந்து ஒருவர் VOIP மூலம் இந்திய NSG அதிகாரியை தொடர்பு கொண்டு, தான் இந்திய ஆர்மியின் உளவுத்துறை அதிகாரி என கூறி குண்டு வெடிப்பு குறித்தான விபரம் கேட்டு இருக்கிறார். அந்த போன் பாக்'கிலிருந்து வந்தது என உளவுத்துறை பின்னர் கண்டுபிடித்துவிட்டது.இந்திய அதிகாரி மீது தவறு இல்லை என நானும் நம்ப காரணம் பாகிஸ்தான்காரர் NSG தலைமையகத்தின் EPBX ஸிஸ்டத்துக்கு போன் செய்து உள்ளார். இந்த மாதிரி சென்ஸிடிவ் அலுவலகங்களுக்கு வரும் போன்களை மானிட்டர் செய்வார்கள் என்பதுகூட இந்திய அதிகாரிக்கு தெரியாதா என்ன? அவரும் உடந்தை எனில் ரகசிய செல்போனை அல்லவா உபயோகப்படத்தி இருப்பார்கள்?

இதில் இந்திய அதிகாரிமீது சந்தேகம் இல்லாததன் காரணமாகத்தான் அவரது பெயரை வெளியிடவில்லை. இது குறித்து விபரமாக

http://www.thehindu.com/news/national/was-the-nsg-spooked-by-isi/article4478910.ece

ஊடகங்கள் இஷ்டத்துக்கு செய்திகளை திரித்து வெளியிடுவதாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

வவ்வால் சொன்னது…

கோவி,

இந்திய அதிகாரிப்பற்றிய செய்தி ரொம்ப அமெச்சூர் தனமாக இருக்கு,சாதாரணமான ஏதேனும் "பேச்சுவார்த்தைக்கே" அலுவலக எண்ணில் இந்திய அதிகாரிகளிடம் பேச முடியாது :-))

உண்மையில் நேர்மையான ஆதிகாரி ,அவர் விசாரிக்க கூடாது என ஃபிக்ஸ் செய்து கூட மாட்டி விட்டிருக்கலாம்.

லஞ்சம் வாங்கியதாக கைதான வழக்குகளில் சில சொல்லப்படாத விஷயங்களும் இருக்கு, அதாவது சில விஷயங்களை லஞ்சம் வாங்கிக்கொண்டு செய்தால் பிரச்சினை வரும் என செய்ய மாட்டார்கள்,அப்பொழுது ,லஞ்சம் வாங்குபவர்,கொடுத்தாலும் வாங்க மாட்டேன்னு செய்ய மாட்டேன் என்கிறார்களே என இன்னொரு செட்டப் பில் மாட்டி விடுகிறார்கள்.

எனவே ஒவ்வொரு மாட்டிவிடும் சம்பவத்திலும் கண்டிப்பாக உள்குத்து இருக்கும்.

வவ்வால் சொன்னது…

நாகூர் மீரான்,

நன்றி என சொல்லி இருப்பது ,இந்திய அதிகாரிக்கு தொடர்பு என வந்த செய்திக்கா, அல்லது ,பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐக்கு தொடர்பு இருக்கு என சொல்லப்படுவதற்கா?

அவசரப்பட்டு நன்றி சொல்லி ,பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ தான் பின்னால் இருக்குனு ஏற்றுக்கொன்டுவிட்டாரே :-))

Unknown சொன்னது…

வவ்வால் ,

நான் நன்றி சொன்னது " சிந்தனைக்கு " என்று தெளிவாக சொல்லி இருக்கிறேனே ! அது மன்சார் இமாமாக இருந்தால் என்ன அல்லது அந்த அதிகாரியாக இருந்தால் என்ன இரண்டுமே தற்போதைய சூழலில் " சந்தேகிக்கப்படுகிறது " (suspect) என்ற அடிப்படையிலேயே வரும்..இன்னும் யாரும் தீர்ப்பு எழுதிவிட வில்லை..அப்படி இருக்கும் போது ஒருவரின் பெயரை மட்டும் வெளியிட்டு ஏன் மற்றொருவரின் பெயரை மறைக்கின்றனர்..மறைத்தால் இரண்டையும் மறைக்கலாம் , வெளியிட்டால் இரண்டையும் வெளியிடலாம்...இந்த பதிவும் அந்த நோக்கத்தைதான் சொல்லி இருப்பதாக தோன்றியதால் "சிந்தனைக்கு" நன்றி என்றேன் ..!!

இதற்க்கு பின் யார் இருந்தால் என்ன..? இந்த " ஜனநாயக" நாட்டில் யார் தண்டிக்கப்படுவார்கள் என்று உங்களுக்கு தெரியாதா..? :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகூர் மீரான் சொன்னது…
இது கோவி கண்ணன் தளம் தானா..?? அல்லது வேறு யாராவது மார்க்க பந்துக்கள் உள்ளே புகுந்து பதிவிட்டு விட்டனரா..? :-))

தங்களின் சிந்தனைக்கு நன்றி !!!//

என்னுடைய மத அடிப்படைவாத விமர்சனங்கள் வேறு. இவை வேறு. எந்த மதத்திலும் மதவெறியர்கள் உண்டு, வெறுமனே பின்பற்றுபவர்களும் உண்டு, பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தனிமனித நம்பிக்கைகள் குறித்து நான் விமர்சனம் செய்வதில்லை.

என்னுடைய வஹாபிய விமர்சனங்களைப் படித்துவிட்டு என்னை இஸ்லாமியர்களை விமர்சிப்பவர் என்று தவறாக புரிந்து கொள்வோர்கள் இந்தப் பதிவை முரணாகத்தான் பார்பார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//இதில் இந்திய அதிகாரிமீது சந்தேகம் இல்லாததன் காரணமாகத்தான் அவரது பெயரை வெளியிடவில்லை. இது குறித்து விபரமாக//

'அந்த அதிகாரி' மீது சந்தேகம் இல்லை என்றால் முறையாக விசாரணை செய்திவிட்டு அப்படியே விட்டு இருக்கலாமே, பின்பு ஏன் செய்தியாளர்களுக்கு தகவலை தரவேண்டும் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி,

இந்திய அதிகாரிப்பற்றிய செய்தி ரொம்ப அமெச்சூர் தனமாக இருக்கு,சாதாரணமான ஏதேனும் "பேச்சுவார்த்தைக்கே" அலுவலக எண்ணில் இந்திய அதிகாரிகளிடம் பேச முடியாது :-))
//
வவ்ஸ்,

செய்தியாளர்களும் படிப்பவர்களும் அமெச்சூர்கள் என்று முடிவு செய்து அமெச்சூர் தனமான செய்தியைக் கொடுத்திருப்பார்களோ !

:))))))))))

விசாரணை செய்த அதிகாரி பெயர் இருக்கிறது பாருங்கள், உண்மையில் இராணுவம் தொடர்பிலான குற்றவாளிகள் பெயர் இரகசியம் என்றால் அதை வெளி இடுபவர் பெயரும் காக்கப்பட வேண்டும் அல்லவா ? இல்லை என்றால் வெளி இடுபவருக்கும் ஆபத்து ஏற்படலாம் தானே ?

பெயரில்லா சொன்னது…

நல்லதொரு பதிவு.. பொதுமைப்படுத்தல், மறைத்தல், கூட்டல்,கழித்தல் என பொது ஊடகங்கள் முதல் மக்கள் ஊடகங்கள் வரை பக்கச்சார்ப்பானவையே, எச்செய்தியையும் பல ஊடகம் ஊடாக வாசித்து தனிப்பட்ட முடிவுகளுக்கு வருவதே ஆரோக்கிய சிந்தனை, ஆனால் பலருக்கும் அது இல்லை, நடுசெண்டர் வாதிகளின் இரட்டை வேடங்கள் பொதுநலன் கருதி எனக் கூறி நியாயப்படுத்துதல் இந்தியாவில் தொடர்ந்த வண்ணமே உள்ளன என்பதையே இதுவும் காட்டுகின்றது.

மருதநாயகம் சொன்னது…

இந்த வழக்கம் நம்மூர் பத்திரிக்கைகளால் தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் உத்தி தான், முதல் முறையாக முஸ்லிம் பத்திரிக்கை அல்லாத ஒரு இடத்தில் இதை வாசிப்பது தான் புதிய விஷயமாக தெரிகிறது

? சொன்னது…

'அந்த அதிகாரி' மீது சந்தேகம் இல்லை என்றால் முறையாக விசாரணை செய்திவிட்டு அப்படியே விட்டு இருக்கலாமே, பின்பு ஏன் செய்தியாளர்களுக்கு தகவலை தரவேண்டும் ?//

இந்த செய்தி மட்டுமல்ல. அதிகாரிகள் வெளியிடும் பல செய்திகள் முட்டாள்தனமாகவே இருக்குது. குண்டு வெடிப்புகளில் தீவிரவாதிகள் என்ன தவறு செய்தார்கள்,அதிலிருந்து என்ன க்ளு கிடைத்தது என விவரமாக நிருபர்களிடம் சொல்லுகிறார்கள். ஒருவேளை அடுத்த தடவை வைக்கும் போது பார்த்து தப்பில்லாம செய்யுங்க என்கிறார்களோ தெரியல!

அஜீம்பாஷா சொன்னது…

ஒரு மலையாளம் சான்னளில் சந்தரிஸ்வரன் என்றார்கள் வேறொரு சான்னலில் சந்திரசேகரன் என்றார்கள் எது சரியென்று தெரியவில்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்