பின்பற்றுபவர்கள்

28 ஜனவரி, 2013

எனக்கு வந்த கோவத்திற்கு.....


வழக்கமாக தைப்பூசம் என்றால் குட்டி இந்தியா பக்கம் எட்டிப் பார்ப்பதுண்டு, பொதுவாகவே காவடி குட்டி இந்தியா பெருமாள் கோவிலில் இருந்து...இந்த இடத்தில் ஒரு இடைச் சொருகல், தமிழகத்தில் தான் சைவத்திற்கும் அசைவத்திற்கும் ஆகாது, அதாவது சிவன் தொடர்புடைய கோவில் நிகழ்வுகள் அல்லது பட்டையடிக்கும் கோவில் நிகழ்வுகளுக்கும் வைணவ கோவில்களுக்கும் யாதொரு தொடர்பும் இருக்காது, ஒரு ஐயங்காரை சிவன் கோவிலுக்கு கூப்பிட்டுப் பாருங்கள், பெருமாளை சேவிக்கிறவா சைவாள் கோவிலுக்கெல்லாம் வரமாட்டா, அபச்சாரம்' என்பார்கள். சிங்கப்பூரிலும் பெருமாள் கோவிலுலும் நாமம் போட்ட ஐயங்கார்ஸ் தான் இருக்கிறார்கள் என்றாலும் தைப்பூசத்திற்கு தெண்டபாணி முருகன் கோவிலுக்கு காவடிகள் பெருமாள் கோவிலில் இருந்து தான் துவங்கும், இங்கே உள்ளவர்கள் பெருந்தன்மையாக நடந்து கொள்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை, மாறாக காவடிச் சீட்டு, பால்குடம் என்று புறப்படும் ஒவ்வொன்றுக்கும் கட்டணச் சீட்டு விற்பார்கள், வருமானம் தான், தவிர சின்ன ஊரில் சைவம் - அசைவம் பிரச்சனை செய்தால் ஒரு பய கோவிலுக்குள் எட்டிப்பார்க்க மாட்டான்.

எங்கே விட்டேன் ? குட்டி இந்தியா பெருமாள் கோவிலில் இருந்து 5 கி.,மி தொலைவில் உள்ள தெண்டபாணி முருகன் கோவிலுக்கு இடைபட்ட இடத்தில் இறங்கி அதனை பார்வையிட்டபடி காவடி செல்லும் திசைக்கு எதிர்பக்கமாக நடந்து குட்டி இந்தியாவரை நடந்து வந்து பார்த்துவிட்டு திரும்புவேன், நாகையில் இருக்கும் வரை ஆண்டுக்கு இருமுறை இது போன்ற காவடி நிகழ்வுகளைப் பார்த்து அதில் கலந்து கொண்டு வந்ததால் சிங்கப்பூரில் அத்தகைய நிகழ்வுக்கு சென்று வருவது ஞாபகங்களை மீட்டுத் தரும், மற்றபடி சிங்கப்பூர் தைபூச நிகழ்வுகளில் என்னை ஈர்க்கும் படி பெரிதாக இல்லை, இங்கே காவடிக்கு மேளம் அடிப்பது உள்ளிட்ட கொண்டாடம் சார்ந்த நிகழ்வுகளுக்கு தடை, தவிர காவடிகள் அனைத்தும் கிட்டதட்ட ஒரே மாதிரி தான் இருக்கும், ஒரே வேறுபாடு, சீனர்களில் ஒரு சிலர் கூட காவடி எடுத்துவருவார்கள், 



இந்த ஆண்டு பாஞ்சாபி குடும்பம் ஒன்று காவடி எடுத்து வந்தது. நான் வழக்கமான இடத்தில் இறங்கி செல்லாமல் இன்றைக்கு முன்கூட்டிய திட்டம் எதுவும் இடாமல் ஞாயிற்றுக் கிழமை வழக்காமாக கறிகாய் வாங்கச் செல்லும் மாலை ஏழு மணிக்கு நேராக லிட்டில் இந்தியாவில் பெருமாள் கோவில் அருகே இறங்கினேன், முத்ல் நாள் நள்ளிரவு துவங்கும் காவடிகள் மறுநாள் இரவு 9 - 10 மணி வரை கூட சென்று கொண்டு இருக்கும், எடுத்துப் போன அலங்கார காவடிகளை திரும்ப எடுத்து வந்து மற்றவர்களும் எடுத்துச் செல்வார்கள், சிங்கப்பூர் இந்து இந்தியர்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டு ஊழியர்களாக தமிழ்நாட்டில் இருந்து வேலைக்கு வந்தவர்களில் சிலரும், இங்கு நிரந்தரவாசியாக இருப்பவர்களும் வேண்டுதல் தொடர்சியாக இங்கேயே காவடி எடுப்பார்கள், அன்று ஒரு நாள் மட்டும் குட்டி இந்தியாவில் கண்டுகொள்ளப்படாத குப்பை மயமாக இருக்கும், 

பெருமாள் கோவில் அருகே இறங்கிப் பார்த்தால் கட்டுகடங்காத கூட்டமும் காவடி ஊர்வலத்தின் ஆரவாரமும், வாய்குள் முனுகுவது போல் கொட்டு அடித்துக் கொண்டு ஆடல் பாடல் என வெகு அமர்களமாக காவடிகள் சென்று கொண்டிருந்தது, சிறிது நேரம் பார்வையிட்டுவிட்டு வந்த வேலையை முடிக்க கறிகாய்களை வாங்கிவிட்டு காவடி செல்லும் திசையை குறுக்காக அடைந்து குட்டி இந்தியா பகுதிக்குள் சென்று விட்டேன், சாலையை முற்றிலும் முடக்காமல் ஒருபக்கம் தடுப்பு அமைத்து காவடிகளுக்கு வழிவிட்டு ஆங்காங்கே தற்காலிக காவலர்களை நிற்க வைத்து பார்வையாளர்களும், பொருள் வாங்க வந்தவர்களும், ஞாயிற்றுக் கிழமை சந்திப்புகளுக்காக குட்டி இந்தியாவில் கூடியவர்களும் சாலையைக் கடக்க ஏற்பாடு செய்திருந்தனர், அப்படியே சாலையைக் கடந்துவிடலாம் என்று ஒரு அதற்கான ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தேன், காவடிகள் சென்று கொண்டு இருந்தன, 

ஒவ்வொரு காவடியுடனும் எடுப்பவர்களின் உறவினர் நண்பர்கள் என ஒரு 20 பேராவது உடன் செல்வார்கள்  அவர்களில் சிலர் ஆடியும் பாடியும்,  விசிலடித்தும் செல்வார்கள், பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு காவடியுடன் வந்த காவடி எடுப்பவரின் உறவுக்காரரான நடுத்தரவயது பெண், தற்காலிக பாதுகாவலுக்கு இருக்கும் ஒரு பணியாளரிடம் (அவர் இந்தியாவில் இருந்து வந்தவர் என்று பார்ததும் தெரிவதால்) நீ போக்குவரத்தை ஒழுங்கு செய்யாமல் காவடி எடுப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தால் நான் 'கொம்ப்ளய்ண்ட்' பண்ணிடுவேன் என்று மிரட்டல் தொணியில் இரண்டு முறை சொன்னார்,  நீல சீருடை அணிந்த சிங்கப்பூர் காவலர்களிடம் இதுபோல் இந்தம்மா பேசுமா ? எளக்காரம் தானே என்று எரிச்சலாக நினைத்தேன்,  அந்த பெண்ணும் அந்த காவடியும் நகர்ந்த உடன் அந்த  போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியாளர் என்னைப் பார்த்து சிரித்தார் , நானும் சிரித்தேன், அருகில் இருந்த மற்றொருவர் 'எல்லாம் நம்ம நேரம்' என்றார். சிரித்தேன், ஆனால் இன்னொருவன் இன்னொன்னு சொன்னான் பாருங்க......

'அவ மூஞ்சியப் பார்த்தால் பறச்சி மாதிரி தெரியுது......எப்படி பேசிட்டுப் போறா.......'  அதைக் காதில் கேட்டவுடன் எனக்கு 'சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று கோவம் தலைக்கேறியது, அப்படிக் கேட்டவர் பார்க்க வேலை அனுமதிச் சீட்டில் கட்டிட வேலை அல்லது குறைந்த ஊதிய பணிக்கு வந்தவர் போல் தான் இருந்தார்.

'மற்றதெல்லாம் ஓகே......இங்க வந்து எதுக்கு சாதியைப் பேசுறிங்க, மனுசங்க எல்லோருக்கும் கையு காலு எல்லாம் ஒண்ணு தான், அவங்க சாதிகாரன் வேறயாராவது இதை காதில் கேட்டு உங்களை செருப்பால் அடித்தால் வாங்கிக் கொள்ள தயாரா ?' என்று திரும்பி முறைத்து சற்று கோபமாகவே கேட்டேன், கேட்ட நபர் உடனேயே அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டான், அங்கே நின்ற மற்றவர்களிடம் 'பொழைக்க வந்த இடத்தில் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டியது தானே, இங்க வந்து ஏன் மற்றவர்களை தாழ்த்திப் பேசனும் ?' நீங்கச் சொல்றது சரிதான் என்றனர், அதற்குள் சாலையைக் கடக்க வழிகிடைக்க நானும் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

தமிழகத்தில் பறையர்கள் பன்றி சாப்பிடுகிறார்கள் என்று தான் அவர்கள் மீது தீண்டாமையுடன் தாழ்த்தியும் வைத்திருந்தினர் . சாப்பிடுவது விலங்குகள் என்ற வகையில் ஒருத்தன் பன்றியை சாப்பிட்டால் என்ன ? மாட்டை சாப்பிட்டால் என்ன ? ஆடுகோழியை சாப்பிட்டால் என்ன ? கேடுகெட்ட சாதிவெறிப்பிடித்த நாய்கள் இன்றும் சாதியைப் பற்றி பேசினாலும் அதை தாழ்த்தும் பொருளுடன் பேச என்ன தேவை ? சீனன் கழுவதுகிடையாது, பேப்பரில் துடைத்து தான் கொள்கிறான், வேலைக்கு என்று வந்து பன்றியை விரும்பி உண்ணும் சீனனுக்கு சலாம் போட்டு, அவனுக்கு பயந்தபடியே வேலை பார்க்கும் நம்மவர்கள் சீனன் என்றால் கழுவி விடக் கூடத் தயாராக இருக்கும் பொழுது ஒரு சமுகம் எதனால் தள்ளி வைக்க்கப்பட்டது ? என்ற எந்த ஒரு அறியாமையும் இன்றி 'பறையன், பறைச்சி' என்று முகத்தைப் பார்த்து எடைபோட்டு பேசும் அளவுக்கு சாதிவெறியில் மூளை மழுங்கடிக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் ?

உயர் கல்வி, நான்கு பேருக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பு, சமூகத்திற்கு ஆற்றிய தொண்டு என்று தன்னைப் பற்றி எந்த ஒரு உயர்ந்த நிலையையும் இல்லாத ஒரு நபர் கூட ஒருவரை தாழ்த்த அல்லது ஒருவரை கேவலப்படுத்த சாதியென்னும் ஆயுதத்தை எடுத்து வீசுகிறாகளே ? நாம் பிறந்த நாட்டைப் பற்றி நாம் என்ன தான் பெருமை பேசினாலும் அவை வீண் பெருமை தான் என்றாகிறது.

சிங்கப்பூர் இந்தியர்களால் எள்ளலாகச் சொல்லப்படும் "ஊர்காரன்" மட்டுமல்ல, தமிழகத்தில் பிச்சைக்காரன் கூட உயர்ந்த பதவியில் உள்ள பறையர் சமூகத்தைச் சார்ந்த ஒருவரை 'போடாப் பறப்பயலே' என்று தூற்றி கூணிக் குறுக வைக்க முடியும்...........இந்த நிலை நாடுகளை தாண்டியும் நம்மவர் இடையே உள்ளது,. தமிழன் முன்னேறாமலும் உலகினருக்கு சான்றாக இல்லாததற்குக் காரணம் அவனவனிடம் உள்ள எல்லைகளற்ற, காலத்தால் அழியாத சாதிப்பற்றும், சாதிவெறியுமே யாகும்.

20 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

கோவி,

நல்ல கருத்தாக்கம்,வாய்க்கொழுப்புனு சொல்வது இதைத்தான்.வெளிநாட்டில் அடிவாங்கினா மட்டும் தமிழன்னு சொல்லி அனுதபம் தேடுவார்கள்.

ஈழப்பிரச்சினையில் தமிழர்களுக்கு பின்னடைவு ஏற்பட இந்த ஜாதி,மத பிரிவும் ஒரு காரணம்.

iTTiAM சொன்னது…

திரு. கோவி. கண்ணன் அவர்களே,
கேவலமான, வெட்கக்கேடான நிகழ்வு.
தமிழனால் தமிழனாக யாரோடும் ஒட்டி உறவாட முடியாது. தன்னைப் பிரித்துப் பார்க்கவோ அல்லது தன்னிலிருந்து அடுத்தவரை பிரித்துப் பார்க்கவோ ஏதோ ஒரு காரணம் தமிழனுக்கு தேவை. அதில் இதுவும் ஒரு கேடு கெட்ட காரணம் அவ்வளவே.

ஒரு வகையில் இந்த இரண்டு பேரும் புரையோடிப்போன எண்ணத்திற்கு உணர்மானிகள். எண்ணியதை மறைக்கத்தெரியாமல் வெளியே கொட்டிவிட்டார்கள் என்று கூறலாம். வேறு பல அறிவாளிகள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பொய்யர்கள்.

குலசேகரன் சொன்னது…

சைவம்-வைணவம் இன்று மாறிவிட்டன. பெருமாள் கோயிலில் பிள்ளையாரைப் பார்க்கலாம். கள்ளழகர் கோயிலில் உள்பிரகாரத்துக்குப் பக்கம் பிள்ளையாரை வைத்திருக்கிறார்கள். திருமோஹூர் காளமேகப்பெருமாள் கோயில் வாசலிலேயே சிவலிங்கப்படங்கள் விற்பனையாகின்றன. கள்ளழகர் கோயிலில் உள்ளேயே படக்கடையில் சைவபத்திரிக்கைகளும் சைவக்கடவுளர் படங்களும் விற்கிறார்கள்.

உங்கள் நண்பர் டோண்டு இராகவன் தன்னை வடகலை ஐயங்கார் எனச்சொல்லிக்கொண்டு தன் குலதெய்வமென்று ஏதோவொரு மாரியம்மனைச் சொல்கிறார்.

இந்துத்வாவினர் மெஜாரிட்டி இந்த சைவர்களாதலால், அவர்கள் இரு பிரிவியையும் ஒன்றாக்கி ஒரு மாபெரும் இந்து சக்தியாக உருவாக்குவதில் ஈடுபட்டிருப்பதற்கு இன்று நல்ல பலன் கிடைத்து வருகிறது. அதன்படி வைணவக்கோயில்களில் சைவத்தெய்வங்கள் சன்னதிகள் பெருகிவருகின்றன. இன்னும் ஐம்பதாண்டுகளில் இராமானுஜரின் வைணவம் அழிந்துவிடும்.

மற்றபடி பறைச்சி என்று சொன்னதைப்பற்றி:

போனவாரம் நீயா நானா நிகழ்ச்சியில் பலர் தாங்கள் எந்த ஜாதியிடனும் சம்பந்தம் வைத்துக்கொள்வோம். ஆனால் தலித்துக்குப் பெண்ணைக்கொடுக்க மாட்டோமென்றனர். இவர்கள் அனைவரும் படித்தவர்கள். தொலைக்காட்சியில் மொதத தமிழகமே கேட்கும்படி பார்க்கும்படி கூச்சமில்லாமல் சொல்கிறார்கள். எல்லாரும் தேவர்கள், வன்னியர்கள் அல்ல. பலதரப்பட்ட ஜாதியினர்.

நீங்கள் பார்த்த நபர் தன் தாய் நாட்டுக் கலாச்சாரத்தை தன்னையறியாமல் பிரதிபலிக்கிறார். அவரைத் திட்டுவது அம்பை நோவதைப்போல.

முன்னைவிட தமிழகம் தலித்துகளுக்கெதிராகப் போய்க்கொண்டிருக்கிறது.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் நண்பர் கொவி,

சாதி வெறி பலரின் மனதில் ஆட்சி செய்கிறது. சில சமயம் இப்படி வெளிப்படும்.
ஒரு சாதிக்காரன் இன்னொரு சாதிக்காரனை விட எப்படி உயர்ந்தவன் என நினைக்கிறார்கள் எனப் புரியவில்லை.

இப்பவே இப்படி என்றால் அப்போ!!

நன்றி!!

SathyaPriyan சொன்னது…

பறப்பய, சக்கிலியப்பய போன்ற சொல்லாடல்களை எளிதாக கேட்கக்கூடிய நிலையில் வளர்ந்தவன் நான். மேலே உள்ள பின்னூட்டத்தில் குலசேகரன் அவர்கள் கூறியது போல அந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் சாதி வெறி நன்கு புலப்பட்டது.

தலித்துகளை தவிர மற்ற அனைத்து சாதியினரும் வசதியாக இட ஒதுக்கீடை அனுபவித்துக் கொண்டே தலித்களுக்கு எதிராக தத்தம் வெறியினை ஆக்டிவாகவோ பாசிவாகவோ காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். தலித்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீட்டு என்ற நிலை வர வேண்டும். அதுவும் குறைந்த பட்ச 30 சதவிகித ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். தலித் குழந்தைகள் தனியார் கல்வி கூடங்களில் படித்தாலும் அரசு அந்த கல்வி செலவை ஏற்க வேண்டும்.

suvanappiriyan சொன்னது…

இதுக்கு நான் ஏதாவது சொல்லப் போக சார்வாகன் 'தை...தை' என்று கோபத்தில் குதிக்க நமக்கு வேண்டாம்பா வம்பு.

Jeevanantham Paramasamy சொன்னது…

திரு. கோவி அவர்களே,

நீங்கள் கோபப்பட்டு அந்த இடத்திலே அவனை இகழ்ந்தது தான் சரி. இது மாதிரி மூளை வளர்ச்சியில்லாததுகள் நிறைய உலவுகின்றன.

நன்றி

priyamudanprabu சொன்னது…

சாதி அடையாளத்தை காட்டும்படியான பனியன்கள் அணிந்து ஒரு குழு சென்றது..அவர்களும் ஊரில் இருந்து வந்தவர்கள்தான்... இவனுக எங்க போனாலும் திருந்த மாட்டாய்க...

dondu(#11168674346665545885) சொன்னது…

//உங்கள் நண்பர் டோண்டு இராகவன் தன்னை வடகலை ஐயங்கார் எனச்சொல்லிக்கொண்டு தன் குலதெய்வமென்று ஏதோவொரு மாரியம்மனைச் சொல்கிறார்.//
குலதெய்வம் பற்றி அவ்வாறு நான் சொன்னதாக ஞாபகம் இல்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

விழித்துக்கொள் சொன்னது…

பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
தூய தமிழ் நாட்காட்டி வாங்க
அணுகும் முகவரி :
சின்னப்ப தமிழர்
தமிழம்மா பதிப்பகம் ,
59, முதல் தெரு விநாயகபுரம்,
அரும்பாக்கம் , சென்னை- 600106 .
அலைபேசி - 99411 41894.

ssk சொன்னது…

ஊரை விட்டு வந்தும் சாதியை விடாத தமிழ் நாட்டு மக்களை விட சாதி பிரிவில்லாத சிங்கப்பூர் , மலேசியா மக்கள் எவ்வளவோ மேல். கோவில்களிலே உயர் சாதி சாமி , தாழ்ந்த சாதி சாமி உள்ள போது எப்படி இந்த சாதி அழியும்? எந்த விதத்திலும் உயர்வு பெறாமல் இன்னொருவனை இழிவு செய்ய உதவும் இந்த சாதி எப்போது ஒழியும் .
சாதி இருக்கிறது என்பானும் உள்ளானேடா என்று பாரதி தாசன் பாடி இன்று வரை ஒழியாமல் உள்ளது. ரஜினி, அஜித். விஜய் ,சூர்யா போன்ற நடிகர்கள் இந்த அவலத்தை தடுக்க முனைய வேண்டும். செய்தால் வாழ்விற்கு ஒரு அர்த்தம் இருக்கு

இனியா சொன்னது…

நன்றி கோவி இந்தப் பதிவிற்கும், உங்கள் நியாயமான கோபத்திற்கும்.

Being a victim of caste based abuses and humiliations, I could really feel how it would hurt!

கோவி.கண்ணன் சொன்னது…

//குலதெய்வம் பற்றி அவ்வாறு நான சொன்னதாக ஞாபகம் இல்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

டோண்டு சார், நலமா ?

சொல்லி இருக்க வாய்ப்பற்ற ஒன்றைப் பற்றி மறுக்க, நான் அவ்வாறு சொல்லவில்லை என்றே சொல்லலாம்,செய்யாத ஒன்றை ஞாபக்கத்திற்குள் தேட முடியாது.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்வால் கூறியது...
கோவி,

நல்ல கருத்தாக்கம்,வாய்க்கொழுப்புனு சொல்வது இதைத்தால்//

எனக்கென்ன ஆதங்கம் என்றால் சூ.கழுவாத சீனனுக்கு கூசாமல் கூசா தூக்குறானுங்க சொந்த இனத்தை இப்படி தூற்ற எப்படி மனம் வருதே.....

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப் பிரியன் கூறியது...
இதுக்கு நான் ஏதாவது சொல்லப் போக சார்வாகன் 'தை...தை' என்று கோபத்தில் குதிக்க நமக்கு வேண்டாம்பா வம்பு.//

புறக்கணிக்க்கப்படும் வலி மறக்க மார்க்க போதை அருந்துங்கள் என்பீர்கள், ஏற்கனவே தலித் இமாம் அலி பற்றிய கேள்விகளுக்கும் தலித் இஸ்லாமிய சமூகம் பற்றிய கேள்விகளுக்கும் உங்களிடம் மலுப்பல்கள் தவிர கைவசம் அதற்கேற்ற ஹதீஸ் இல்லாத பொழுது உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை

suvanappiriyan சொன்னது…

திரு கோவி கண்ணன்!

//சார்வாகன், என் இடுகைக்கு வந்து கைபரபரத்து ஒருவரி எழுதிய சுவனர், அதுக்கு மேல் வாயைப் பிளந்தால் புண்ணாகிவிடும் என்று எஸ்கேப ஆகிவிட்டார், சுவனிரிடம் தலித் இமாம் அலி, ஹைதர் அலி தமிழ் நாட்டில் ஏன் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள் எனறு கேளுங்க, விக்ரமாதித்தான் வேதாளம் மாதிரி மவுனம் களைய காத்திருக்காமல் ஓடிவிடுவார். தலித் இஸ்லாமியர்கள் பற்றியும் அகமதியாக்களின் பிணம் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள், அண்ணன் ஹதிச புரட்டிப்பார்த்து ஓய்ந்துவிட்டார்.//

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலமைக்குக் கீழ்ப்படிவீர்!

ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

மேலே வரும் இரண்டு ஹதீகளுமே தீண்டாமைக்கு எதிராக பேசினாலும் மேலதிக விபரமாக பிபிசி தமிழோசையில் சில மாதங்களுக்கு முன்பு வந்த பேட்டியை பதிவாக போட்டேன். அதை பார்த்து தெளிவு பெறுங்கள்.

'மதம் மாறியதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?'

'நீங்க சொல்லித்தான் நாங்க மதம் மாறின ஞாபகமே வருது. அந்த அளவு இஸ்லாத்தில் தற்போது ஐக்கியமாகி உள்ளோம். எனது பிள்ளைகள் இந்த கேள்விக்கே இடமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து விட்டனர். நாயக்கர் சாதி, ஆசாரி போன்ற சாதியினர் கூட எங்களை மாமன், மச்சான் என்று உரிமையோடு தற்போது கூப்பிடுகிறார்கள். மதம் மாறுவதற்கு முன்பு இந்த நிலை இல்லை.'.

'மதம் மாறியதாலே சமூக அந்தஸ்து உங்களுக்கு கிடைச்சிடுச்சா?'

'நிறையவே நாங்கள் மாற்றங்களை உணருகிறோம். முன்பெல்லாம் 8 வயசு 10 வயசு பசங்களெல்லாம் 'டேய் சுப்பையா! டேய் மாடா! இங்க வாடா' என்று தான் ஏளனமாக கூப்பிட்டனர். இன்று அந்த நிலை முற்றாக மாறி எங்களை மரியாதையாக நடத்துகின்றனர்.'

'வெளியூர்களில் உங்களின் நிலைமை தற்போது என்ன?'

'எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது இருக்கிறோம். உள்ளூரில்தான் சிலருக்கு நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியதாக தெரியும். வெளியூர்களில் எங்களின் பெயரை கேட்டவுடனேயே தானாக சமூக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம். யாரும் எங்களை ஏளனமாக பார்ப்பதில்லை. பிரச்னையும் கொடுப்பதில்லை. முருகேஷனை 'முருகேஷா இங்க வாடா' என்று கூப்பிடுபவர்கள் மதம் மாறிய அன்வர் அலியை 'வாங்க அன்வர் அலி' என்று கூப்பிடுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?'

நாம் பல இடங்களில் பார்த்த வகையில் இஸ்லாத்துக்கு மாறியதால் இந்த மக்களின் வாழ்வில் சமூக அந்தஸ்து கூடியிருப்பதாகவே தெரிகிறது.

பிபிசி யிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள

http://downloads.bbc.co.uk/podcasts/worldservice/tnmuslims/tnmuslims_20121106-1746a.mp3
http://suvanappiriyan.blogspot.com/2012/12/blog-post_29.html

suvanappiriyan சொன்னது…

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த ஒரு சம்பவம், நபித்தோழர்களில் ஒருவரான பிலால் (ரழி) அவர்கள் ஒரு நீக்ரோ இனத்து அடிமையாக மக்காவில் பல்லாண்டுகள் வாழ்ந்தவராவார். அவர் இஸ்லாமைத் தழுவிய பிறகு ஒரு நாள் அபூதர் (ரழி) என்ற நபித் தோழர் அவரை கருப்பியின் மகனே! என்று ஏசிவிடுகிறார். இந்த வார்த்தைகளால் வேதனை அடைந்த பிலால் (ரழி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டார். பெருமானார் (ஸல்) அவர்கள் அபூதர் (ரழி) அவர்களை அழைத்து உங்களிடம் அறியாமைக் காலத்து பழக்கம் இருக்கிறது என்று கடுமையாக கடிந்து கொண்டார்கள். (புகாரி:30)

பிலால் (ரழி) அவர்களின் தாயார் கருப்பான தோற்றத்தைக் கொண்டிருந்திருந்தாலும் கருப்பியின் மகனே என்று அழைத்தது அவர்களுக்கு வேதனை அளித்துவிட்டபடியால், அதற்காக நபி (ஸல்) அவர்களும் தன்னை கடிந்து கொண்டபடியால் தன் தவறை உணர்ந்த அபூதர் (ரழி) அவர்கள் பிலால் (ரழி) அவர்களிடம் சென்று தன்னை மன்னிக்க வேண்டும் என்று மன்றாடினார்கள். இதற்குப் பகரமாக பிலால் தன்னுடைய காலை தன் கலுத்தில் மிதித்தாலும் அதற்கு பகரமாக தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்கள் அபூதர் (ரழி) அவர்கள். இப்படி அவர்களுக்கிடையில் தவறுகள் தெரியாமல் நடந்திருந்தும் அச்சமூகத்தில் நபியவர்கள் எடுத்துவைத்த சுமூகமான அறிவுரைகள் தான் இறைவனே வியந்து பாராட்டக்கூடிய ஒரு சமூதாயத்தை உருவாக்க முடிந்தது.

'மிகவும் தாழ்ந்தோர் உம்மைப் பின்பற்றியுள்ள நிலையில் உம்மை நம்புவோமா?' என்று அவர்கள் கூறினர்.'அவர்கள் செய்து கொண்டிருப்பது (பற்றிய முடிவு என்ன என்பது) எனக்குத் தெரியாது' என்று அவர் கூறினார். அவர்களை விசாரிப்பது எனது இறைவனின் பொறுப்பாகும். விளங்க மாட்டீர்களா?'நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாக இல்லை' 'நான் தெளிவாக எச்சரிப்பவன் தவிர வேறில்லை' (என்றும் கூறினார்.) 'நூஹே! நீர் விலகிக் கொள்ளவில்லையானால் கல்லால் எறிந்து கொல்லப்படுவீர்!' என்று அவர்கள் கூறினர். 'என் இறைவா! என் சமுதாயத்தினர் என்னைப் பொய்யரெனக் கருதுகின்றனர்' என்று அவர் கூறினார். 'எனக்கும், அவர்களுக்கும் இடையே தெளிவான தீர்ப்புக் கூறுவாயாக! என்னையும், என்னுடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவாயாக!' (என்றும் கூறினார்).
திருக்குர்ஆன் 26 111 118

மேற்காணும் இறைவசனத்தின் மூலம் நாம் அறிந்து கொள்வது நூஹ்(அலை) அவர்களின் சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்டவர்கள் நூஹ்(அலை) அவர்களிடம் வந்து உம்மிடம் உள்ள தாழ்ந்தவர்களை விரட்டிவிட்டால் நாங்கள் உன்கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்கிறார்கள் (நபி(ஸல்) அவர்களிடம் மக்கா குரைஷிகள் சொன்னது போல்) அதற்க்குத்தான் நூஹ்(அலை) அவர்கள் நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாக இல்லை என்பதுடன் என்னையும் என்னுடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவாயாக என்று பிரார்த்தித்தும் உள்ளார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

சுவனர், ஏற்கனவே உங்களை நார்நாராக கிழித்தாகிவிட்டது, செலக்டிவ் அம்னீசியா , ஓட்டை ரெக்காரர்ட் போல திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் படிக்கிற எங்களுக்கு போர் அடிக்கிறது.

இனங்களை தாமே உருவாக்கியதாக உங்க அல்லா குரானில் கூவுகிறார், அப்படிப்பார்த்தாலல்் பல்வேறு இனத்தினரும் அவர்கள் தம் வேறுபாடுகளும் அதற்குகாரண கருத்தாவகாவும் அல்லாவே இருக்கிறார். அரேபியில் இன வேறுபாடு என்று சொல்லப்படுவதைத்தான் இந்தியாவில் சாதிவேறுபாடாகக் காணப்படுகிறது,

ஒண்ணு சவ்வாதுன்னும் மற்றது பீ என்றும் சொல்வது என்ன ஞாயம். போய் வேற எதாவது ஆ(ரா)ய்ச்சி நடத்துங்க, எனக்கு போர் அடிக்கிறது.

அடிமை என்ற சொல்லுக்கும் தற்காலத்திற்கும் என்ன தொடர்பு ?, குரான் எந்த காலத்திற்கககும் ஏற்றது என்றும் சொல்லும் உங்களைப் போன்றோர்களை மறுக்கும் காலத்திற்கு ஒவ்வாத அடிமை குறித்த வசனங்கள் ஏராளமாக குரானில் உண்டு. ஒருவேளை ரிஷானவின் கொலை கூட உங்களுக்கு ஒரு அடிமையின் கொலையாக தெரிந்து தற்காலத்திற்கும் ஏற்றது குரான் என்ற எண்ணத்தை ஏற்படுத்துமோ ?

கொல்லர்த் தெரு ஊசி அதுவும் துருப்பிடித்த ஊசி விற்க வேற இடமே கிடைக்க வில்லையா ?

Robin சொன்னது…

// அச்சமூகத்தில் நபியவர்கள் எடுத்துவைத்த சுமூகமான அறிவுரைகள் தான் இறைவனே வியந்து பாராட்டக்கூடிய ஒரு சமூதாயத்தை உருவாக்க முடிந்தது.// அப்படிப்பட்ட சமுதாயம்தான் பணிப்பெண்ணுக்கு ஆணி அடித்து அனுப்புகிறது, காமத்திற்காக ஏழை சிறுமிகளை விலைக்கு வாங்குகிறது, ஒரு சிறுமியின் தலையை வெட்டி அதையும் ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கிறது. உலகமே வியந்து பார்க்கும் காட்டுமிராண்டி கூட்டம் இப்படித்தான் நடந்து கொள்ளும்.

suvanappiriyan சொன்னது…

//கொல்லர்த் தெரு ஊசி அதுவும் துருப்பிடித்த ஊசி விற்க வேற இடமே கிடைக்க வில்லையா ? //

யாம் பெற்ற இன்பம் கோவி கண்ணனும் பெறட்டுமே என்ற நப்பாசைதான். :-)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்